Sri APNSwami’s Shishya Writes | காஞ்சி வரதனின் – வைகாசி பிரம்மோத்ஸவம்

 ஸ்ரீ:

வரதனின் வைகாசி பிரம்மோத்ஸம்

    ஸ்ரீ APN சுவாமியின் உபன்யாசம் மற்றும் அவரின் வரலாற்று  நாவல் “யமுனைதுறைவர்  திருமுற்றம்” புத்தகத்திலுள்ள வரதனின் பிரம்மோத்ஸவ விவரம்.  

தொகுப்பு : திருமதி ஸ்ரீரஞ்சனி ஜகந்நாதன் 

**************************************************************************************************************

            பிரமனால்  ஆராதிக்கப் பட்ட நம் அத்திகிரி திருமால் வரதனின் வைகாசி பிரம்மோத்ஸம்  காண கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். வைகுண்டம் போலே ஸத்யவ்ரத க்ஷேத்திரத்தில் நித்யஸ்ரீ நித்யமங்களமாக வாசம் செய்ய வேண்டும் என்று பிரமன் வரதனை கேட்டுக்கொண்டான்.  பிரமன் ஆராதித்த  இடம் என்பதால் காஞ்சி என்று வழங்கப்படுகிறது.

ஆதியுகத்தயன் கண்டிட நின்ற அருள்வரதர்

காதலுயர்ந்த களிற்றைத் திரேதையிற் காத்தளித்து

வாதுயர் தேவகுருவுக்கிரங்கித் துவாபரத்தில்

சோதியனந்தன் கலியில் தொழுதெழ நின்றனரே

என்று வரதனை யார் எந்த யுகத்தில் எவ்வாறு ஆராதித்தனர் என்பதை சுவாமி தேசிகன் பாடியுள்ளார்.

             வரதனின் பிரம்மோத்ஸம் வைகாசி ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஆரம்பித்து, திருவோணத்தில் தீர்த்தவாரி, பின்னர் மறுநாள் த்வஜாவரோஹணத்துடன் பூர்த்தியடைகிறது. இந்த பதிவில் நாம் வரதனின் பிரம்மோத்ஸவத்தை அனுபவிக்கலாம்.

            வரதன் திருக்கோவிலில் பாஞ்சராத்ர ஆகமத்தின் படி பிரம்மோத்ஸம்  ஆரம்பிக்கும் முன்னர் செல்வர் உற்சவம், அங்குரார்ப்பணம், சேனை முதலியார் உற்சவம் என அனைத்தும் நடைபெறுகிறது.

சுவாமி தேசிகன் வரதனின் பிரம்மோத்ஸம் பற்றி ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸத்தில் பாடியுள்ளார். 

கடை வெள்ளி உற்சவம்

            பிரம்மோத்ஸம் ஆரம்பிக்கும் முன் வெள்ளிக்கிழமையன்று பெருந்தேவி தாயார் கடை வெள்ளி உற்சவம் கண்டருளுகிறார். தன் நாயகனின் பிரம்மோத்ஸம் ஆரம்பிக்கும் நேரத்தில், பக்தர்களுக்கு முதலில் பிராட்டியின் அனுகிரஹம் கிடைக்கிறது.

            கடை வெள்ளியன்று காலை பெருந்தேவி தாயார், கண்ணாடி அறையில் திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

            மாலை கண்ணாடி அறையிலிருந்து, வசந்த மண்டபம், ஆழ்வார் ப்ரதக்ஷிணம் என்று  தாயார் புறப்பாடு கண்டருளுவார். கடைவெள்ளியன்று தாயார் விசேஷ திருக்கோலத்தில் திருவடி ஸேவையாகும் படி பக்தர்களுக்கு அனுகிரஹிக்கிறாள்.

செல்வர் உற்சவம்

            செல்வர் உற்சவத்தன்று செல்வர் புஷ்ப பல்லக்கில்  உள் புறப்பாடு கண்டருளுகிறார்.

அங்குரார்ப்பணம்

            திருக்கோவிலின் தென்-மேற்கு மூலையில் உள்ள புற்றிலிருந்து மண் எடுத்துவரப்பட்டு பிரம்மோத்ஸம் நல்ல படியாக நடக்க அடித்தளமிடும் உற்சவமாக இது கொண்டாடப்படுகிறது.  உற்சவம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக, அங்குரார்ப்பணம் என்னும் நவதானியங்களை முளைவிடும் உற்சவம் நடைபெறுகிறது.

சேனை முதலியார் உற்சவம்

               அங்குரார்ப்பணம் நடந்தன்று மாலை சேனை முதலியார் என்னும் விச்வக்சேனர் சிறிய புண்யகோடி விமானத்தில், நகர சோதனை செய்யும் வகையில், வரதனின் ராஜ வீதிகளை சோதனை செய்கிறார். இதனை முள் பொறுக்கும் உத்சவம் என்று வேடிக்கையாக கூறுவர். 

முதல் நாள் காலை – த்வஜாரோஹணம், பேரிதாடனம்

            வரதனின் பிரம்மோத்ஸம் முதல் நாள் ஹஸ்த நட்சத்திரத்தில் பின்மாலை வேளையில், வேத ஸ்வரூபனான கருடனின் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

            பின்னர் பெருமாளின் முன்னர் பேரி (முரசு) என்னும் வாத்யம் முழக்கி, முப்பத்து முக்கோடி தேவர்களை பேரிதாடனத்துடன் அழைப்பர்.

பரிச்சின்னமான இரு நாலெழுத்தின் பல் வண்மையெலாம்

விரிச்சு நலம்பெற ஓதவல்லோர்க்கிந்த மேதினிக்கே

மரிச்சின்ன மீளப் பிறவாமல் வாழ்விக்கு மால் வரதர்

திருச்சின்னவோசை இனிமையுண்டோ மற்றைத் தேவருக்கே.

என்று வரதனுக்கேயுரிய திருச்சின்ன ஓசை என்னும் திருஅஷ்டாக்ஷர ஒலி,  அனைவரையும் அழைக்கிறது. தேவர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், பல தேசங்களிலிருந்து ஆஸ்திகர்கள் என அனைவரும் வரதன் உற்சவத்தை காண அனைவரையும் அழைத்து வரவேற்கும் உற்சவம்.

முதல் நாள் காலை – தங்க சப்பரம்

            முதல் நாள் காலை த்வஜாரோஹணம், பேரிதாடனத்திற்கு பின்னர் வரதன் தங்க சப்பரத்தில் புறப்பாடு கண்டருளுகிறான்.

            விஷ்ணு காஞ்சி என்னும் சின்ன காஞ்சியிலிருந்து, சிவ காஞ்சி என்னும் பெரிய காஞ்சி வரை காலையும், மாலையும் வரதன் புறப்பாடு கண்டருளுகிறான்.  ஆம், வரதன் இரண்டு வேளையும் ஏறத்தாழ பன்னிரெண்டு மைல் புறப்பாடு கண்டருளுகிறான்.

முதல் நாள் மாலை –  ஸிம்ஹ வாகனம்

            முதல் நாள் மாலை ஸிம்ஹ வாகனத்தில் வரதன் புறப்பாடு கண்டருளுகிறான். “முடிச் சோதியாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ?”  என்று நம்மாழ்வார் பாடியுள்ளார்.  “பெருமானே! உன்னுடைய திருவபிஷேகம் என்னும் கிரீடத்தின்   காந்தி விசேஷம் எங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.  திருவபிஷேகத்தினால் திருமுகமடலத்தில் ஸோபை அதிகமா, இல்லை திருமுகமண்டலத்தினால் திருவபிஷேகத்திற்கு ஸோபை அதிகமா?” என்று பக்தர்கள் மலைத்து நிற்கும் அழகு வரதனின் ஸிம்ஹ வாகன அழகு.

            கூரத்தாழ்வான் பெருமாளின் கிரீடத்தை ஸேவித்து இவனே ஸர்வலோகத்திற்கும் நாயகன், முப்பத்து மூவர் அமர்ரர்களுக்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி தேவாதிராஜன்  என்று தெரிகிறது என்று கொண்டாடுகிறார்.

            வரதனுக்கு இரட்டை குடையானது ஸிம்ஹ வாஹந ஸமயத்தில் ஸமர்பிக்கப்படுகிறது.

இரண்டாம் நாள் காலை – இரண்டாம் காப்பு

            முதல் நாள் ஸிம்ஹ வாஹனத்திற்கு பின், கண்ணாடி அறையான அபிஷேக மண்டபத்திலிருந்து புறப்பட்டு  தாயார் சந்நிதி, மடைப்பள்ளி ப்ரதக்ஷிணம், மடைப்பள்ளி, உக்கிராணம்(பண்டகசாலை) என்று திருமலைக்கு புறப்பாடு கண்டருளி, மீண்டும் ஒரு காப்பு – “இரண்டாம் காப்பு” என்னும் ரக்ஷாபந்தனம் கண்டருளுகிறான். 

            மூலவர் ஸந்நிதியில் பெருமாளுக்கு விசேஷ திருவாரதனம் விமர்சையாக நடக்கும். பின்னர் பெருமாளுக்கு மற்றொரு காப்பு கட்டிய பின் (இரண்டாம் காப்பு) உத்ஸவர் அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க மலையிலிருந்து புறப்படுவார்.  சில வருடங்கள் வரதன் காஞ்சியை விடுத்து வெளி இடங்களில் இருக்க நேரியது. வரதன் காஞ்சிக்கு திரும்ப வந்ததை குறிப்பதே இரண்டாம் காப்பு உற்சவமாகும்.

இரண்டாம் நாள் காலை – ஹம்ஸ வாகனம்

            இரண்டாம் நாள் அதிகாலை இரண்டாம், காப்பிற்கு பின்னர் ஹம்ஸ வாகனத்தில் புறப்பாடு கண்டருளுகிறான். ஒரு காலத்தில் அன்னமாக அவதரித்து, பிரமன் முதலியோருக்கு அருமறை ஈந்தவன் ஹம்ஸ வாகன புறப்பாடு கண்டருளுகிறான்.

இரண்டாம் நாள் மாலை – சூரிய ப்ரபை வாகனம்

            “பகலோன் பகல் விளக்காக பரஞ்சுடர் தோன்றியதே” என்பது போல்  கோடி சூரிய ஸமப்ரபன்/ கோடி சூரியனின் பேரொளியைக் கொண்ட வரதன் புறப்பாடு அமைகிறது.  பகல் நேரத்தில் விளக்கின் ஒளி மங்கி காட்சியளிப்பது போலே, வரதனின் முன்பு சூரியனின் ஒளி மங்கி காட்சியளிக்கிறது என்று வரதனின் ஆவிர்பாவத்தை தேசிகன் வர்ணிக்கிறார்.  இதனை விளக்கும் வண்ணம், ஸாயங்காலம் மஞ்சள் வெயிலில் சூரிய ப்ரபையில் வரதனின் புறப்பாடு அமைகிறது.

இரண்டாம் நாள் இரவு – நம்மாழ்வார் சாற்றுமுறை

            நம்மாழ்வார் அவதாரம் வைகாசி விகாசம். இரண்டாம் நாளன்று நம்மாழ்வார் சாற்றுமுறை நடைபெறுகிறது. நம்மாழ்வார்  அமர்ந்த திருக்கோலத்தில், தன்னுடைய திருக்கைகளை தன் இதயத்தை நோக்கி உபதேசம் செய்வது போல் வைத்துக்கொண்டு, மதுரகவிகள் மற்றும்  நாதமுனிகளுடன் ஸேவை ஸாதிப்பார்.  வரதன் நம்மாழ்வார்  சந்நிதிக்கு எழுந்தருளி வைகாசி விசாக மஹோத்ஸவம் நடைபெறுகிறது.

மூன்றாம் நாள் காலை – கருட வாகனம்

            வேத ஸ்வரூபமான கருடன், வரதனின் துயரறு சுடரடிகளை தன்னுடைய திருக்கைகளில் ஏந்திக்கொண்டு கோபுர வாசலில் வெளி வரும் போது பக்தர்கள் “வரதா! வரதா!” என்று எம்பெருமானை ஸேவிக்கிறார்கள். வரதனின் கருட ஸேவை British காலத்திலேயே ஜில்லாவிற்கு விடுமுறை அளித்து கொண்டாடப்பட்ட வைபவமாகும்.

            சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை இங்கு பார்க்கலாம்.  சோழசிங்கபுரம் தொட்டாச்சார்யார் என்னும் பக்தர் அக்காரக்கனி யோக நரசிம்மருக்கு கைங்கர்யம் செய்து வந்தவர். அவர் சோழ சிம்ம புரத்திலிருந்து வருடம் தவறாமல் நடந்து சென்று காஞ்சி கருட சேவையை தரிசித்து வந்தவர்.  ஆனால் அந்த வருடம் அவரால் செல்ல முடியவில்லை. ஆனால் அவர் மனம் முழுவதும் அந்த வரதன் தான் நிறைந்திருந்தார். கருட சேவை ஸேவிக்க முடியவில்லையே என்று கண்ணீர் மல்க ஏங்கிக் கொண்டிருந்தார்  தொட்டாச்சார்யார் என்னும்  அந்த பரம பக்தர்.  

            காஞ்சியில், காலை நான்கு மணி வெளியே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பகவான் கருட வாகனத்தில் புறப்பட்டதற்கு அறிகுறியாக மேள சத்தமும், திவ்ய ப்ரபந்த ஒலியும், வேத ஒலியும் காதில் இன்ப நாதமாக வந்து விழுந்தன. எங்கும் வரதா! கோவிந்தா! கண்ணா! பெருமாளே! என்ற சத்தம் அலை கடல் சத்தம் போல ஒலித்தது. வாண வேடிக்கைகள் இரவை பகலாக்கின. அந்த வெளிச்சத்திலேயே வாகன மண்டபத்தில் இருந்து கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள், நம்மாழ்வார் ஸந்நிதி, தேசிகன் ஸந்நிதி, இராமானுஜர் ஸந்நிதிக்கு எழுந்தருளுகிறார்.  பின்னர் வரதர் கோபுர வாசலுக்கு வந்தாகி விட்டது. மெதுவாக கோபுர வாசல் கதவுகள் திறந்தன, எங்கும்  அஞ்சலி கூப்பி கச்சி வரதா! அத்தி வரதா! சத்ய வரதா! என்று மெய் புளகாங்கிதம் அடைந்து கண்ணில் நீர் சோரப் பக்தர் குழாம் நின்றிருந்த போது தான் அந்த அதிசயம் நிகழ்கிறது.

            “திடீரென்று வரதன்  மாயமாய் மறைந்து விட்டார்”!

            எங்கே வரதன்? எங்கே என்று காஞ்சி பக்தர்கள் மயங்கி நின்ற வேளையில்… அங்கே சோளிங்கரில் தொட்டாச்சாரியாருக்கு   தக்கான் குளத்தில்  வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் காட்சிதந்தார். என் அன்பனே, நீ வர முடியாவிட்டால் என்ன, நானே வந்து விட்டேன் உனக்காக என்று பறவை ஏறும் பரம்புருடன் தன்னுடைய பக்தனுக்கு சேவை சாதித்தான். தொட்டாச்சாரியார் தண்டனிட்டு பெருமாளை வணங்கி, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பெருமாளே, எமக்காக நீர் இவ்விடம் வந்தீரே உமது கருணையே கருணை நீர் உண்மையில் பக்த வத்சலன் தான், பேரருளாளர் தான் என்றும் பலவாறு துதி செய்து போற்றினார்.

            அடுத்த கணம் ….

            காஞ்சியில் முன் போல் வரதர் ஒய்யாரமாக நின்றார். தனது அன்பரின் தூய பக்திக்காகத் தாம் சோளிங்கர் சென்று சேவை சாதித்ததை காஞ்சியில் உள்ளோருக்கு உணர்த்தினார் பெருமாள். பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்தில் தெண்டனிட்டு வீழ்ந்து வணங்கினார் தேவராஜரின் கருணையை எண்ணி.

            பெருமாள் யோக நரசிம்மராயும், அனுமன் யோக அனுமனாகவும் இரு மலைகளில் அருள் பாலிக்கும் சோளசிம்மபுரம் என்றழைக்கப்படும் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நித்ய கருட சேவையில் பெருமாளை ஸேவிக்கலாம்

            இவ்வாறு வரதன் தொட்டாசாரியாருக்குச் சேவை சாதித்தது சுமார் 400  வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது.  இன்றும் கருட சேவையன்று கோபுர வாசலில் பெருமாளை குடை சாற்றி மறைத்து, பெருமாளுக்கு ஆரத்தி எடுத்து கண் எச்சில் எடுக்கும் இச்சேவை  “தொட்டாச்சாரியார் சேவை”  என்று அழைக்கப்படுகின்றது.   இது பெரியோர் கூறும் ஐதிக்யமாகும்.

            கருட ஸேவை அன்று, வரதன் தூப்புல் தேசிகன் சந்நிதானம் முன்னர் எழுந்தருளி, ஒரு குடை இரக்கப்பட்டு, தேசிகனுக்கு அருளப்பாடுடன் மரியாதைகள் செய்யப்பட்டு பிறகு முரங்கை வீதி வழியாக கங்கைகொண்டான் மண்டபம் செல்கிறான். 

            வைகாசி பௌர்ணமி அன்று கங்கா தேவி அனைத்து நதிகளுடன்  வரதனை ஸர்வ தீர்த்தத்தின் குளக்கரையில் ஆராதிக்கப்படுவதாக உள்ளது. ஆகையால் கங்கையின் ஆராதனையை ஏற்றுக்கொண்ட பெருமாள் கங்கை கொண்டான் மண்டபம் எழுந்தருளுகிறான்.

            கருட ஸேவை அன்று பெருமாள் கல்லடைத்த தொப்பாரம்(cap) என்னும் கிரீடத்தை சாற்றிக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறான்..           

மூன்றாம் நாள் மாலை  – ஹனுமந்த வாகனம்

            காலை பெரிய திருவடியில் சேவை சாதித்த பெருமாள், மாலை சிறிய திருவடியாம் ஹனுமானின் மேல் ஸேவை சாதிக்கிறான். சுவாமி தேசிகன் வரதனை “அத்திறவரக்கன் முடி பத்தும் ஒரு கொத்து என உதிர்த்த திறலோன்” என்று ராமனாக கொண்டாடுகிறார்.  ராவணனின் பத்து தலையை பனங்காய் போல் ஒரு கொத்தாக விழ வைத்தவர் தேவாதிராஜன் வரதன்.  ஸர்வ ப்ராணிகளிடம் கருணை கொண்ட தயா நிதியாக விளங்குகிறான் என்று கூரத்தாழ்வான் கொண்டாடுகிறார்.

நான்காம் நாள் காலை – சேஷ வாகனம்

            நான்காம் நாள் காலை வரதனுக்கு பரமபதநாதன் திருக்கோலம். உபய நாச்சிமாருடன், ஆதி சேஷனில் அமர்ந்த திருக்கோலம். ஒரு  திருவடியை மடித்து ஊன்றி,அதன் மீது ஒரு திருக்கையை அழுத்தி அமர்ந்த திருக்கோலத்தில் தானே பரதெய்வம் என்று உணர்த்தும் படி அனாயாசமாக அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றான். 

நான்காம் நாள் காலை – வரதன் பத்தி உலாத்தல்

            சேஷ வாகனம் முடிந்த பின்னர், வாகன மண்டபத்தில் திருக்கோலம் களையப்பட்டு, திருமேனியில் அதிகமான திருவாபரணம் சாற்றப்படாமல், மெலிதான வஸ்திரத்தில் “பெடையிரண்டையொரனமடைந்து பிரிந்திடா வகை பேசலாம் ..” என்பதில் தேசிகன் பாடியது போல், இரண்டு பெண் ஹம்சத்தின் நடுவில் ஒரு ராஜா ஹம்ஸ போலவும், இரு சிறு அருவிகளுக்கு நடுவில் ஒரு பெரு அருவி இருப்பது போலே வரதன் விளங்குகிறான். இந்த அற்புதமான திருக்கோலத்தில் உபய நாச்சிமாருடன், திருக்கரங்கள் பற்றி  வரதனின் பத்தி உலாத்தல் நடைபெறுகிறது.   இந்த சமயத்தில்,  பெருமாளின் திருமேனிக்கு குளிர்ச்சியை தரும் வகையில்  குங்குமபூ விழுது காப்பு  சாற்றப்படுகிறது. வரதன் கொட்டகையில் பத்தி உலாத்தல் செய்வதை பக்தர்கள் ஸேவித்து பேரானந்தம் அடைகின்றனர். உபய  நாச்சிமாருடன் அவன் இருக்கும் இந்த சமயத்தில், பக்தர்கள் தாங்கள் செய்த அபராதங்களுக்கு வரதனிடம் மன்னிப்பு கேட்டு, அஞ்சலியுடன் வணங்குகின்றனர்.

அஸ்து ஸ்ரீஸ்தன கஸ்தூரீ-வாஸனா-வாஸிதோரஸே

ஸ்ரீஹஸ்தி கிரநாதாய தேவராஜாய மங்களம்

               பிராட்டியின் குங்கும பூச்சுக்களை கொண்ட திருமார்புடன் வரதன் விளங்குகிறான் என்று மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களத்தில் பாடியுள்ளார்.

நான்காம் நாள் மாலை – சந்திரப் ப்ரபை வாகனம் & நெல் அளவு

            நான்காம் நாள் மாலை,  குளிர்ந்த கிரணங்களை, அம்ருத கிரணங்களை வாரி வர்ஷிக்கும் வகையில் வரதன்  இரண்டு உபய நாச்சிமாருடன்  சந்திர ப்ரபையில் புறப்பாடு கண்டருளுகிறான்.  அடியார்கள் துயர் களையும் வண்ணம், குளிர்ந்த கிரணங்கள் கொண்ட சந்திர பிரபையில் வரதன் சேவை சாதிக்கிறான்.

            வால்மீகி ராமனை “சந்திர காந்தம் கொண்ட ராமன்” என்று வர்ணிக்கிறார். சூரியனை சில நேரம் தான் பார்க்க முடியும். ஆனால் சந்திரனை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது போல சந்திர ப்ரபையில் புறப்பாடு கண்டருளும் வரதனையும் நாம் ஸேவித்துக்கொண்டே இருக்கலாம்.   வரதன் ஒவ்வொரு நாள் உற்சவம் கண்டருள அவன் திருமேனி காந்தியும், வைலக்ஷண்யமும் பெருகுகிறது என்று சுவாமி தேசிகன் கொண்டாடுகிறார்.

            குளிர்ந்த சந்திர வாகனம் முடிந்த பின்னர், நெல் அளவை நடைபெறுகிறது. இல்லங்களில், அலுவலங்களில் auditing கணக்கு வழக்கு பார்ப்பது போல், உற்சவ வரவு செலவு கணக்கை வரதன் பார்க்கின்றான்.

ஐந்தாம் நாள் காலை – பல்லகில் நாச்சியார் திருக்கோலம்

            தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்தில் மோஹன சுந்தரன் வரதனின் ஒய்யார புறப்பாடு. 

            “நெடுந்தெருவே சென்றவர்கள் நான் இருந்த முடுக்குத்தெரு வந்தனரே!” என்பது போல அவரவர்கள் இருக்கும் இடம் சென்று வரதன் அனுகிரஹம் செய்கிறான்.

            ஆடவர்களே தங்களை பெண்களாக நினைக்கும் அளவிற்கும் வடிவழகு கொண்ட வரதன், ஐந்தாம் தினம் காலையில், இவன் தான் பெண்ணோ! ஆண் இல்லையோ! என்னும் அளவிற்கு வரதனின் பேரழகு.

            சீதை ராமனிடம் “ஆணுருவில் இருந்த ஒரு பெண்ணுக்கு தான் என்னை மனம் முடித்து வைத்தார் போல் இருக்கிறது.” என்று ராமனின் கோபத்தை வளர்பவளாக கூறினாள்.  ஆனால் இங்கு நம் தாபத்தை நீக்க தாயுருவில் வரதன்.

            நேற்று வரை கம்பீர புருஷனான வரதன், அடக்கம் ஒடுக்கத்துடன், பெண்மைக்குரிய லட்சணத்துடன், பெருந்தேவி தாயாரின் திருவாபரணங்களை அணிந்துக்கொண்டு, நாச்சியார் திருக்கோலம் காண்கின்றான்.  ராகுடி, ஜடை பின்னல், மணப்பெண் கால்களை மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தில், தங்க பல்லாக்கில் நாச்சியாராக வரதன் காட்சி தருகிறான்.

            பின்னர் தூப்புல் எழுந்தருளி, சுவாமி தேசிகனுக்கு மரியாதை முடிந்த பின்னர், தீபப்ரகாசன் சந்நிதி, யதோதகாரி சந்நிதி, பவழவண்ணர் சந்நிதி, அஷ்டபுஜ பெருமாள் சந்நிதி பின்னர் கங்கை கொண்டான் மண்டபம் சென்று வரதன் திரும்புகால் ஆகின்றான்.

            இதனை மோஹினி அலங்காரம் என்றும் சிலர் கூறுவார். திருப்பாற்கடலை கடைந்த பொது அம்ருதம் வந்தது. அப்பொழுது கண்ணன் மோஹினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அம்ருதத்தை அளித்தான்.  பெண்ணாகி அமுதூட்டும் பெருமாள் என்று மோஹினி அவதாரம்.

ஐந்தாம் நாள் மாலை – யாளி வாகனம்

            ஐந்தாம் நாள் மாலை திருச்சின்னம் ஒலிக்க, சண்டோல் அடிக்க, மேள தாளங்கள் முழங்க யாளி வாகனத்தில் புறப்படுகிறார் நம் அத்திகிரி திருமால்.

ஆறாம் நாள் காலை வேணுகோபாலன் திருக்கோலம்

            ஆறாம் நாள் காலை வரதனுக்கு வேணுகோபாலன் திருக்கோலம்.  இந்த திருக்கோலத்தின் அழகில் மயங்கியே சுவாமி தேசிகன், யாதவ குல  கண்ணனை பற்றி  யாதவாப்யுதயம் என்னும் மஹாகாவியத்தை இயற்றினார். இந்த சேவையில் மனம் மயங்காதவர் ஒருவரும் இருக்க முடியாது. அவன் குழல் ஊதும் அழகு நம் உள்ளங்களை கொள்ளை கொள்கிறது.

            அன்று யசோதை கண்ணனுக்கு குழல் கற்றைகளை வாரி, முடித்து, மயிர் பீலி சாற்றி, பூ சூட்டி மகிழ்ந்தாள். இன்று அழகிய சௌரி கொண்டையை சற்றே அள்ளியெடுத்து தூக்கி முடிந்து, அதில் சந்திர, சூரிய நெற்றிச் சுட்டி மற்றும் மயில்தோகையுடன் ராக்குடி சூட்டி,  பச்சைப் பவழமல்லி மாலையையும் சூடியிருக்கும் வரதனின் அழகை காண, கண் கோடி வேண்டும்.

            இரு கைகளிலும் புல்லாங்குழல் ஏந்தி, அதில் கோர்க்கப்பட்டிருந்த சங்கிலியில் நண்டு மாணிக்கம் ஒன்று அசைந்தாட, புல்லாங்குழலின் துளைகளில் பதிந்திருந்த கைவிரல்கள் பத்திலும், விதவிதமான மோதிரங்கள் பளபளக்க, இருபுறமும் உபய நாச்சியார் திகழ, இரண்டுகால்களை குறுக்கு நிலைபாட்டில் வைத்து வரதன் நிற்கும் அழகே அழகு!

            இந்த அழகை வேதாந்த தேசிகன்  “குழலூதும் இக்கண்ணன் திருக்கோலம், உயிர்பிரியும் தருவாயில் என் உள்ளத்தே உறைய வேண்டும்” என்று பாடியுள்ளார் போலும்.  கம்பன் “இந்திர நீலம் முத்து இருண்ட குஞ்சியும் ” என்று பாடியுள்ளார்.

            அவன் பின்புறமுள்ள பசு, வேத மணம் கமழும் வரதனின் திருவடிகளை தன் நாவினால் வருட, முன்புறம் உள்ள கன்றின் தங்கப் பதுமை அவன்தன் திருமுகத்தையே பார்ப்பது போல் அதியத்புத ஸேவை. கிருஷ்ணாவதாரத்தில்  வேதமும், உபதேசமும் கைங்கர்யம் செய்ய பசுக்களாகவும், கன்றுகளாகவும் வந்து பிறந்தனவோ என்பது போல் இருந்தது. இதனையே சுவாமி தேசிகன் யாதவாப்யுதயத்தில் பாடியுள்ளார்.

            அன்று கோகுலத்தில் கண்ணன் வாயினால் ஊதும் குழல் ஓசையை கேட்டு மாடுகள் தங்கள் மேச்சலை மறந்து, செவிகள் அசைக்காமல், வால் அசைக்காமல் சித்திரத்தில் உள்ள மாடுகள் போல் நின்று அந்த இசையை ரசித்தன.  இன்று பக்தர்கள் வரதனை கண்டு மெய் மறந்தனர். அதிகாலையிலேயே கண்ணனுக்கு (வரதனுக்கு) சூர்ணாபிஷேகம் எனும் மஞ்சள்காப்பு உற்சவம் நடக்கும். பெரியோர்கள் கூட அந்த மஞ்சள் சூரணத்தை தங்களின் மேனியில் பூசிக் கொண்டு மற்றவர்கள் மீதும் தூவுவர். “வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்” என்ற பெரியாழ்வாரின் பாசுரங்கள் எங்கள் வரதன் விஷயமானவைதான் என்பது போல் இருக்கும் இந்த ஸேவை.

            அனைத்து உற்சவங்களுக்கு தனி சிறப்பு உண்டு. ஆனால் கரி கிரி மேல் கண்ணாக நிற்கும் வரதனின் வேணுகோபால திருக்கோலத்து பத்தி உலாத்தலுக்கு  தனி அழகு.  காஞ்சி ஆயர்பாடியோ என்னும் அளவிற்கு, சாஸ்திர ஞானம் மறந்து, வேதாந்த விஷயங்களை விடுத்து, பெரியோர்களும் வரதனின் அழகில் மயங்கி தங்களை பறி கொடுத்து, “கண்ணன் கழலினை நண்ணும் மனம் உடையீர் எண்ணம் திரு நாமம் திண்ணம் நாரணமே” என்று  முன்னழகையும், பின்னழகையும் ரசித்து நிற்பர்.

ஆறாம் நாள் மாலை யானை வாகனம்

            அன்று யானைக்கு அருள்பாலித்த எம்பெருமான் இன்று யானை வாகனத்தில், கஜேந்திர வரதனாக ஏகாம்பரர் கோவில் வாசலில் ஏசல் காண்கிறான்.  ஏகாம்பரேச்வரர் கோவிலில் வாசலில் ஏசல் என்னும் ஒய்யாளி ஸேவை  நடைபெறுவதைக் காணத்தான் மக்கள் கூட்டமாக கூடுவர்.

            பொதுவாக யானை வாகனம் நின்ற நிலையிலேயோ, அல்லது முன்னிரு கால்களையும், பின்னிரு கால்களையும் மடித்த நிலையிலேயோ அமர்ந்திருக்கும். ஆனால் காஞ்சியில் யானை வாகனத்திற்குக் கால்கள் இல்லை. பெருமாள் கஜேந்த்ர வரதனன்றோ!  ஒவ்வொரு யுகத்தில், ஒவ்வொருத்தர் இந்த பெருமாளை ஆராதித்தனர். முதலில் க்ருதயுகத்தில் பிரமன் ஆராதனை செய்தார். பின்னர் த்ரேதாயகத்தில், கஜேந்த்ரனான யானை பெருமாளை ஆராதித்தது. முதலை, யானை காலை பிடித்த கதை அனைவரும் அறிந்ததே! யானை ஆதிமூலமே என்றழைத்தது. அச்சமயம் ஏனைய தேவர்கள், பிரமன் சிவன் என்று எல்லோரும் நாங்கள் மூல புருஷர்கள் இல்லை என்று கைவிரித்தனர்.அந்த சமயம்தான், மூலமென ஓலமிட வல்லார் வந்தார் என்று வெகுவேகமாக வரதன் ஓடிவந்து யானையைக் காத்தான். ஓடிவந்த வரதன், அதே வேகத்தில் முதலைக்கும் சாப விமோசனமளித்து, யானையையும் காப்பாற்றினான். அதனால், யார் மேலான தெய்வம் என்பதை உலகம் உணர்ந்தது.

            இது பர தத்வ நிர்ணயம்! முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று, யானையின் நடுக்கத்தை தீர்த்து, கஜேந்த்ர வரதனாக விளங்குகிறான்.எனவே நானே பர தத்வம் என்று காட்டுவதற்காக, ஏகாம்பரேச்வரர் கோயில் முன்பு,  ஏசல் எனும் உற்சவம் நடைபெறுகிறது. விளையாட்டில் ஜயித்த பிள்ளைகள் தோற்றவருக்கு பழிப்பு காண்பிக்குமே அது போன்றது இது. ப்ரம்மதேவர் என்றைய தினம் இந்த ப்ரம்மோற்சவம் ஆரம்பித்தாரோ அது முதற்கொண்டு இவ்வுத்ஸவம் நடைபெற்று வருகின்றது.

            பெருமாள் வழக்கம் போல் முதலில் கங்கை கொண்டான் மண்டபத்தில் இறங்காமல், நேராக ஏகாம்பரேச்வரர் சன்னிதி வீதிக்குச் சென்று, பெரும் ஜனத்திரள் திரண்டியுள்ள அந்த இடத்தில் ஏசல் கண்டருள்வார். தங்கள் இல்லங்களின் மாடிகளிலிருந்தும், ஆர்ப்பரித்துக் கொண்டு பெருமாள் வாகனத்தில் ஆரோகணித்து வருவதை மக்கள் கண்டு களிப்பர்.  ஏசல் முடிந்து கட தீபம் ஏற்றப்பட்டு பெருமாளுக்கு த்ருஷ்டி கழிக்கப்படும்.

ஏழாம் நாள் காலை திருத்தேர்

            பெரிய மணி ஒலிக்க, மாடவீதிகளின் நாற்புறங்களிலும் அதன் எதிரொலியாய் மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். வரதனின் திருத்தேர் உற்சவம் அவ்வளவு சிறப்பானது. பின்மாலையில் பெருமாள் தேருக்கு எழுந்தருளும் அழகே அழகு! சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள திருத்தேருக்கு, பெருமாள் வேகமாக எழுந்தருளும் அவ்வழகைக் காண கண்கள் கோடி வேண்டும்.

            காஞ்சியில் ஒரு வழக்கம் உண்டு. எந்த முகூர்த்தத்தில் பெருமாளுக்கு த்வஜாரோகணமோ (கொடியேற்றல்) அதே முகூர்த்தத்தில் தேரில் எழுந்தருள வேண்டும். அதனால், அத்புதமான வேகத்துடன் புறப்பாடாகும்.  கேடயத்தில் எழுந்தருளுவதால், பெருமாள் நேராக அபிஷேக மண்டபத்திலிருந்து புறப்பாடு. தொண்டரடிப்பொடியில் பெரும் மக்கள் வெள்ளம் கூடுவர் த்வஜஸ்தம்பத்தின் இருமருங்கிலும் அடியார்கள் குழாம்.  திருப்பணிப்பிள்ளை திரை நீக்க அத்புதமான ஜோதி வடிவத்தில் பெருமாள் சேவை சாதிப்பார்.

            பச்சை வைரத்தால் ஆன பல அட்டிகைகளையும், மாலைகளையும் சாற்றிக் கொண்டு சிக்குதாடு எனப்படும் சிகப்புக் கொண்டையுடன் வரதன் சேவை. ஒரே சீராக ஸ்ரீபாதம்தாங்கிகள் எழுந்தருளப்பண்ண, உடல், திருச்சின்னம் பரிமாறிய அடுத்த நொடியில், தேசிகர் சன்னிதி வாசலில்,  தேசிகனுக்கு மரியாதையானவுடன் திவ்யப்ரபந்த கோஷ்டி தொடங்கியதுதான் தாமதம். வேகம், வேகம், வேகம் என்று அப்படியொரு வேகத்துடன் வரதன் புறப்பாடு. கணீர்கணீரென்று வெள்ளி மணி ஒலிக்க, இரண்டு பெரிய குடைகள் மாற்றி குஞ்சலங்கள் ஆட, வெகு விரைவாக தேரடிக்கு எழுந்தருளி, அனுமார் மரியாதையுடன் திருத்தேரின் மேலே ஏறுவார். 

            இரண்டு வெண்கொற்றக்குடை குதித்து குலுங்க வரதன் உபய நாச்சிமாருடன் தேருக்கு எழுந்தருளும் காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும். பராசர பட்டர் இதை தான் “பெருமானே! உன் வேகத்திற்கு நமஸ்காரம்.” என்றார் போலும். பின் தொடரும் அடியவர்கள் குழாம், ஓடி, மூச்சிரைத்துப், பெருமாள் தேர்த்தட்டின் மேலேறியவுடன் ஒருவழியாகத் தங்களை ஆச்வாசம் செய்து கொள்வர்.

            மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி, தேரை வடம் பிடித்து இழுப்பர். ஆடி, ஆடி சிலைகள் அசைய மணிகள் கணகணப்ப, தேர் வீதிகளில் வலம் வந்தது.  “தென்னரங்கர் இன்று திருத்தேரில் ஏறினார், நின்று வடம் பிடிக்க வாருங்கள், வைகுந்த நாட்டில் இடம் பிடிக்க விடுமென்றால்” – என்பார் திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்.

            வரதனின் தேரோட்டம் மக்கள் உள்ளத்தில் விவரிக்க இயலா உணர்ச்சியை விளைவித்தது.   “அப்பனே வரதா! இன்று சாயங்காலத்திற்குள் நிலை சேர்ந்துவிடப்பா.. எந்தத்  தடங்கலும் இல்லாமல் உனது தேரோட்டம் நடக்கட்டும்” என்று வேண்டிக்கொள்வர்.  ஒருசிலசமயம் இப்பெரும் தேர், நிலைக்கு வருவதற்கு, ஒரு வாரம் கூட ஆகிவிடும். ஆதலால் பெருமாளை வேண்டிக் கொள்வர் பக்தர் குழாம்.

            “டோலாய மானம் கோவிந்தம், மஞ்சஸ்தம்  மதுசூதனம், ரதஸ்தம் கேசவம் த்ருஷ்டவா புனர் ஜன்மம் ந வித்யதே” – டொலையில் கோவிந்தனையும், சயன திருக்கோலத்தில் மதுசூதனனையும், திருத்தேரில் கேசவனையும் ஸேவித்தோமேயானால் மீண்டும் பிறவி என்பதே கிடையாது.  

எட்டாம் திருநாள் திருப்பாதம் ஜாடித் திருமஞ்சனம்

            எட்டாம் நாள் காலை புறப்பாடு இல்லை. எட்டாம் திருநாள் மதியம் திருப்பாதம் ஜாடித் திருமஞ்சனம்.  ஆகையால் மதியம் எல்லோரும் அபிஷேக மண்டபத்தில் திரளுவர்.

            உபய நாச்சிமாருடன் பெருமாளுக்கு அதிவிலக்ஷணமான திருமஞ்சனம் நடக்கும். திருமஞ்சனம் முடிந்து, அலங்காரங்கள் முடிந்தவுடன் திரை திறக்கப்படும். பெரிய கற்பூரத் தட்டில் அர்ச்சகர் ஆலத்தி வழிக்க, அந்த அழகைச் சேவித்த அனைவருமே மேனி சிலிர்ப்பர். மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ, மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட, கோடாலி முடிச்சு என்னும் சௌரி கொண்டை சாற்றிக்கொண்டு, சங்கு சக்ர நெத்தி சுட்டி, ராக்குடி சூட்டிக்கொண்டு, விலக்ஷணமான காதில் துலங்கும் சங்கு சக்ர கடுக்கனுடன், நெற்றியில் ஊர்த்வ புன்றத்துடன், பட்டு பீதாம்பரங்களையும், திருவாபரணங்களையும் சாற்றிக்கொண்டு  வரதன் சேவை ஸாதிப்பான். ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்தில், வரதனின்  தெய்வீக அழகு நம் கண்களுக்கு  புலனாகும்  வண்ணம், அதியற்புதமான  ஸேவை.

Kanchi Varadan With Ubhaya Nachimar during Thotti Thirumanjanam

            பெருமாளை இரண்டு கைகளிலும் உயரத்தூக்கிக் கொண்டு, கைத்தல சேவையில் பட்டர்கள் எழுந்தருளப் பண்ணுவர். அபிஷேக மண்டபத்தின் நடுவே ஒரு மிகப்பெரும் வெள்ளி ஜாடியில், பூரணமாகத் தெளிந்த தண்ணீர் நிரப்பி, விளாமிச்சைவேர், ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து வைத்திருப்பர்.

            சத்ர, சாமர், வாத்யங்களுடன் திருப்பணிப்பிள்ளை கட்டியம் கூற, மெதுவாகப் பெருமாளைக் கைத்தலத்தில் எழுந்தருளப் பண்ணி அவரின் இரண்டு பாதங்களை மட்டும் ஜாடியில் தீர்த்தத்தில் தோய்ப்பர். இதற்குத்தான் திருப்பாதம்ஜாடித் திருமஞ்சனம் என்பது பெயர்.

            கைத்தலத்தில் பெருமாளை உயர்த்திக் காண்பிக்க பக்தர் கூட்டம் “ஹோ!” என்று ஆர்ப்பரித்து வரதனின் அழகை ஸேவிப்பர்.

             “அனிமேஷ……”  என்று பிராட்டி இருவரும் வரதனின் அழகில் மயங்கி கடைக்கண்களில் வரதனை குளிரக் கடாக்ஷிக்கின்றனர்.

பூணித் தொழுவினில் புக்குப் புழுதி யளைந்த பொன்மேனி

காணப் பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்

நாணெத் தனையு மிலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்

மாணிக்க மேஎன் மணியே மஞ்சன மாடநீ வாராய்.

என்று பெரியாழ்வார் கிருஷ்ணனை நீராட்டத்திற்கு அழைக்கும் பாசுரம் நினைவுக்கு வரும்.

            “காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன்” என்று அன்று யசோதை கண்ணனை நீராடியது நினைவுக்கு வரும்.

எட்டாம் திருநாள் மாலை குதிரை வாகன புறப்பாடு

            எட்டாம் திருநாள்  மாலை குதிரை வாகனத்தில் வரதன் புறப்பாடு. உடன் திருமங்கையாழ்வாரும் எழுந்தருளுவார். 

            குறு நில மன்னன் திருமங்கையாழ்வார் தான் கப்பம் கட்டும் பணத்தை பாகவத ததீயாராதானத்திற்கு செலவழித்தார். அதனால் மன்னன் அவரை சிறையிலிட்டார். அன்று இரவு பெருமாள் திருமங்கையாழ்வாரின் கனவில் தோன்றி வேகவதி ஆற்றங்கரையில் பொற்புதையல் இருப்பதை கூறினார்.  மறுநாள் அரசனுடன் அங்கு வந்த

            திருமங்கையாழ்வாருக்கு வேகவதி ஆற்றங்கரையில் பொற்புதையல் அளித்தாராம் நிதியை பொழிந்த மழை முகிலான வரதன். அதனாலதான் இங்கு கலியன், தன்கையில் ஒரு முத்து வைத்திருப்பதைக் காணலாம்.

            வேடுபறி உற்சவத்திற்காக உடன் வந்தார் கலியன். செங்கழுநீர் ஓடைக்கரையில் பெருமாளை மறித்த திருமங்கையாழ்வார், பின்னர் பாகவனாலே திருஅஷ்டாக்ஷர மந்திர உபதேசம் பெரும் வேடுபறி உற்சவம்  நடக்கும்.  வாடினேன்வாடி என்று தொடங்கும் பெரிய திருமொழி ஸேவிப்பர். அதன்பின்னர் பெருமாளின் அநுக்ரகத்தைப் பெற்றுக் கொண்ட கலியன், திருக்கோயில் திரும்புவார்.

            அன்றும் பெருமாளுக்கு ஏகாம்பரேஸ்வரர் கோவில் வாசலில் ஏசல் நடைபெற்றது. குதிரை வாகனத்தில் ஒய்யாரமாக, ஒரு போர் வீரனைப் போன்று பெருமாளுக்கு சாற்றுப்படி அலங்காரம் செய்திருப்பர். கம்பீரமான ஆக்ருதி. இடதுகையால் லகானைப் பற்றியபடி, வலது கையால் சவுக்கை ஏந்தியிருப்பர்.

            தலையில் ராஜகொண்டை என்று வெண்பட்டாலான தலைப்பாகை அணிந்திருப்பர். ராஜகம்பீரமான தோற்றத்துடன் இரண்டு வெண்குடைகளும் குறுக்காக பிடித்துக்கொண்ட படி,  அக்குடைகளுடனே பதினாறுகால் மண்டபத்தினுள் பெருமாள் ஏசல் (முன்னும் பின்னுமாக எழுந்தருளுவது) கண்டருளுவார்.

            பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளினவுடன் திருவந்திக்காப்பு நடைபெறும்.

ஒன்பதாம் நாள் காலை ஆள்மேல் பல்லக்கு. போர்வை களையும் வைபவம், ப்ரணயகலகம், பத்தி உலாத்தல்

            நவம் என்றால் புதியது என்று அர்த்தம். சுவாமி தேசிகன் ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தில் “உன்னுடைய புதிய தயா பரிவாஹங்களுக்கு கடாக்ஷங்களுக்கு  நான் பாத்திரமாக வேண்டும்.” என்று பாடியுள்ளார். அது போல வரதனின் புதிய திருவாபரணம், புதிய உற்சவம், புதிய புதிய வாகனங்கள் என புதிய புதிய பக்த வெள்ளம் அனுபவிக்கிறார்கள். அஸ்த்தத்தின் பத்தாம் நாள் திருவோணம். திருவோண நட்சத்திரத்தின் அதிதேவதை பெருமாள். திருவோண நட்சத்திரத்தில் வரதன் தீர்த்தவாரி கண்டருளுகிறான்.

            ஒன்பதாம் நாள் காலை ஆள்மேல் பல்லக்குபோர்வை களையும் வைபவம். வரதன் உபய நாச்சிமார் இல்லாமல், ஒய்யாரமாக ராஜ வீதியில் ஆள் மேல் பல்லக்கில் கங்கைகொண்டான் மண்டபம் எழுந்தருளுவார். பல போர்வைகள் போர்த்திக்கொண்டு யாருக்கும் முக்கியமாக உபய நாச்சிமார்களுக்கு தெரியாமல் வரதன் புறப்பாடு.  பல்லக்கு முன்னும் பின்னும் ஓடிவர, ஒவ்வொரு போர்வையாகக் களையப்பட்டு திவ்யமான பட்டு பீதாம்பர அலங்காரங்களுடன் பெருமாள் ஜொலிப்பார்.

            பெருமாள் எதையோ துலைத்து விட்டு தேடச் செல்கிறார். ஆனால், நாச்சிமார்கள் தங்களை விட்டு பெருமாள் யாரை பார்க்க சென்றார் என்று கோபம் கொள்கின்றனராம்.

            திரும்புகால் ஆனவுடன் தொண்டரடிப்பொடியில் உபய நாச்சிமாருடன் மட்டையடி உற்சவம் நடைபெரும். “பெருமாள் ஏகாந்தமாகத் தனியாகச் சென்று விட்டாராம். அவர் அப்படிச் சென்றது எதனால்?” என்று சந்தேகத்தின் பேரில் மறுபடியும் உள்நுழைய விடாமல் நாச்சிமார் தொண்டரடிபொடி கதவைச்சாற்றி ப்ரணயகலகம் / மட்டையடி  எனும் வேடிக்கை நிகழ்கிறது.

            பின்னர் பட்டர் சுவாமிகள் பெருமாள், பிராட்டி இருவர் திறத்திலும் சமாதானம் பேசினபின்பு, ப்ரணயகலகம் தீரும். மிகவும் ஏகாந்தமாக ஒருபுறம் உபய நாச்சிமார் ஒருதோளுக்கினியானிலும், மறுபுறம் பெருமாள் ஒரு தோளுக்கினியானிலும் பத்தி உலாத்தல் கண்டருளி, பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவார்கள்.

ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி திருநாள்

            பெருமாள் நூற்றுக்கால் மண்டபத்தில் உயர்ந்த மேடை மீது எழுந்தருளினவுடன் மிகவும் ஆர்பாட்டத்துடன், அனந்த கொத்து பரிஜனங்களுடன் மலைமேலிருந்து சிறிய பல்லக்கில், வேத திவ்ய ப்ரபந்த கோஷங்களுடனும்  ப்ரணதார்த்திஹர வரதர் எனும் சிறிய வெள்ளி மூர்த்தி அங்கு எழுந்தருளுவார். அவருக்குத் திருமஞ்சனம் நடைபெற்றவுடன், அனந்தசரஸ் புஷ்கரணியில் / திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கானோர் ஒரே சமயம் பெருமாளுடன் குளத்தில் தங்கள் பாபம் நீங்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து, மூழ்கி  புனித நீராடுவர். தீர்த்தவாரி முடிந்து  ப்ரணதார்த்திஹர வரதன் மலைக்கு எழுந்தருளுவார்.  இவ்வாறு திருவோணத்தில் வரதனின் தீர்த்தவாரி திருநாள் நடைபெறுகிறது.

ஒன்பதாம் நாள் மாலை புண்யகோடி விமானம்

            ஒன்பதாம் நாள் மாலை புண்யகோடி விமானம். வரதன் அவதாரத் திருக்கோலம். ப்ரம்மதேவர் செய்த யாகத்தின் பயனாக புண்யகோடி விமானத்தில் பெருமாள் இருபுறம் உபயநாச்சிமாருடன் ஆவிர்பவித்தானாம். அந்த ஸேவையை இன்று கலியுகத்தோர் கண் குளிர காணும் வண்ணம் புண்யகோடி விமானத்தில் வரதன் புறப்பாடு கண்டருளுகிறான். 

“அயமேதவேதியின் மேல் புகலோங்கு பொன்மலையன்ன ஓர் புண்ணியகோடியுடன் பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர்தோன்றியதே.” என்று தேசிகன் பாடியுள்ளார்.

            மேலும் திருவோணம் என்பதால், தூப்புல் சுவாமி தேசிகன் மங்களகிரியிலிருந்து எழுந்தருளி, மாட வீதி ப்ரதக்ஷிணம் கண்டருளி தூப்புல் சென்று சேருகிறார்.  தூப்புலில் புண்யகோடி விமானத்தில் வரதன் எழுந்தருளி, சுவாமி தேசிகனால் தரிசன தாம்பூலம் சமர்ப்பிக்க பட்டு பின்னர் வரதன் தேசிகனுக்கு அனுகிரஹம் செய்கிறார். இரவு நாழிகையானதும் புறப்பட்டு, பின்னர் ஆங்காங்கு மண்டகப்படி முடிந்து, விடிவதற்கு ஒரு நாழிகை முன்னர்தான் திரும்புகால் நடைபெறும். இந்த நேரத்தில் வரதனுடன் அணு யாத்திரை செய்வது நம் புண்ணிய பலன்களை பண் மடங்கு வ்ருத்தி செய்கிறது.  நிசப்தமான அந்த வேளையில் உடல், திருச்சின்ன ஸப்தம் காதில் ஒலிக்க, வேத-திவ்ய ப்ரபந்தம் ஒழிக்க,  பக்த குழாங்களுடன் வரதனின் அற்புத புறப்பாடு நடைபெறுகிறது.

            இவ்வண்ணம் ஒன்பதாம் நாள் உற்சவத்துடன் வரதன் பெரிய காஞ்சிக்கு எழுந்தருளும் உற்சவங்கள் பூர்த்தியடைகின்றன. 

பத்தாம் நாள் – மதியம் புஷ்பயாகம் & துவாதச ஆராதனம்

            மதியம் பன்னிரெண்டு மணிக்கு வரதனுக்கு  புஷ்பயாகம், துவாதச ஆராதனம் ( பன்னிரெண்டு திருவாராதனம்)  என அனைத்தும் விசேஷமாக நடைபெறும். அத்யாபக ஸ்வாமிகள் நம்மாழ்வார் திருவாய்மொழியையும் வேதத்தையும்  ஸேவித்து வரதனை ஸ்தோத்திரம் செய்து மகிழ்வர். பன்னிரெண்டு திருவாராதனம் முடிந்தபின் ஆஸ்தானத்தில் வரதன் எழுந்தருளுவான்.

பத்தாம் நாள் இரவு வெட்டிவேர் சப்பரம்

            பத்தாம் நாள் – இரவு வெட்டிவேர் சப்பரத்தில் மாடவீதி ப்ரதக்ஷிணம் கண்டருளுகிறான் வரதன். உற்சவ நாட்களில் வரதன் ஏறத்தாழ பன்னிரெண்டு மைல் காலையும் மாலையும்  புறப்பாடு கண்டருளியதால் அவனுக்கு குளிர்ச்சியை தரும் வகையில் வெட்டிவேர் சப்பரத்தில் மாடவீதி புறப்பாடு நடக்கிறது.

பத்தாம் நாள் இரவு – கொடியிறக்கம், ஸப்தாவரணம்

            வெட்டிவேர் சப்பரத்திற்கு பின்னர் கொடி மரத்திலிருந்து கருடக் கொடியிறக்கம் அதாவது த்வஜாவரோஹணம் நடக்கிறது. 

            பின்னர் ப்ரஹ்மோத்சவ காலத்தில் வந்திருந்த அனைத்து தேவர்களுக்கும் வாகன மண்டபத்தில் விடை சாதிக்கும் (send off) உற்சவம் நடைபெறும்.   

            திருமேனியில் அதிகமான திருமேனி சாற்றிக்கொள்ளாமல், விழுதி காப்பு எனப்படும் பச்சை கற்பூரம், குங்குமப்பூ திருமார்பில் சாற்றிக்கொண்டு வெகு வேகமாக,  ஸப்தாவரணம் (ஏழு சுற்றுகள்) எனும் கணக்கில், ப்ரதக்ஷிணம் செய்து, மலைக்குள் வரதன் எழுந்தருளுகிறான்.  ரக்ஷாபந்தனம் செய்து கொண்ட அர்ச்சகருக்கு  மரியாதைகள் செய்யப்படும்.

            வரதன் எப்பொழுது வெளியில் புறப்பாடு கண்டருளினாலும் சுவாமி தேசிகன் ஸந்நிதியில் தேசிகனுக்கு மரியாதை நடைபெறும்.

            உற்சவம் முடிந்து மலைக்கு வரதன் திரும்ப எழுந்தருளும் போது, எப்பொழுதும் ஆண்டாள் ஸந்நிதியில் மாலை மாற்றிக்கொண்ட பின்னரே எழுந்தருளுவான்.  ஆண்டாள் ஸன்னிதி சற்று உயரமாக இருக்க, ஆண்டாளின் திருவடிக்கு நேராக வரதனின் திருமுடி இருப்பது போன்ற பாவனையில்  பக்தர்கள் ஸேவிப்பர்.  ஆண்டாள் சூடிக்களைந்த மாலையை தான் பெற்று, தன்னை தன்யனாக நினைத்துக் கொண்டு பரமாத்மா வரதன் மலைக்கு எழுந்தருளுகிறான்.  வாக்குகளில் வேதம், திருமார்பில் மஹாலக்ஷ்மி, வைஜயந்தி மாலை, நாபி கமலத்தில் பிரமன் என இத்தனை மங்களம் பெற்றிருந்தாலும், ஆண்டாள் சூடிக்களைந்த பரிமளம் மிகந்த மாலையையே வரதன் விரும்புகிறான்.

            மலையில் திருவெண்நாழி ப்ரதக்ஷிணம்/ வையமாளிகை ப்ரதக்ஷிணம் இரண்டு முறை ப்ரதக்ஷிணமாகி உள்ளே எழுந்தருள, பூர்ண கும்பத்துடன் வையம் கண்ட வைகாசி திருநாள் பூர்த்தியடைகிறது.

விடையாற்றி உற்சவம்

               பிரம்மோத்ஸம் முடிந்த அடுத்த மூன்று நாட்களும் விடையாற்றி எனப்படும் ஓய்வுத் திருநாள் உற்சவம் கொண்டாடப்படுகிறது.  விடையாற்றி உற்சவத்தில் வரதன் உபய நாச்சிமாருடன் நூறு கால் மண்டபத்தில் உற்சவ களைப்பு தீர திருமஞ்சனம் கண்டருளுவான். விடையாற்றி முதல் நாள் மாலை  பெருமாள் திருவடி கோயிலான அனுமார் சன்னிதி வரையில் எழுந்தருளுவார். மூன்றாம் நாள் புஷ்ப பல்லக்கு என்று விடையாற்றி உத்சவம் கொண்டாடப்படுகிறது.

             இவ்வாறு ஆதியுகத்து அயன் வணங்கிய அருளாளன், இன்றும் கலி யுகத்தில் வைகாசி மாதத்தில், பேரருளை வர்ஷிக்கும் பேரருளாளனாக, பிரம்மோத்ஸம் கண்டருளுகிறான். இந்த ஸேவைகளை ஸேவித்து, பக்தியுடன் வரதனின் திருவடிகளில் சரணடைவோமாக.

Sri #APNSwami #Writes #Trending | வரதனின் விருப்பம் – 02

வரதனின் விருப்பம் – 02

(By Sri APNSwami)

     அனந்தசரஸின் அழகிய தோற்றம் நிலவொளியில் நன்கு தெரிந்தது.  இரண்டொரு நாட்களுக்கு முன்னர்தான் பௌர்ணமி தினமாதலால் சந்திரனின் ஒளி இன்னமும் குறையவில்லை.  குளத்தில் ஆங்காங்கு சிறிதுசிறிதாகத் தேங்கியுள்ள தண்ணீரில், நிலவின் பிம்பத்தைக் காணும்போதும், சிறு காற்றின் அசைவில் அத்தண்ணீர் அசையும்போது நிலவின் பிம்பம் அசைவதையும் கண்டால், அக்குளத்தினுள் சந்திரன் எதையோ தேடுவது போன்றிருந்தது.

     இன்று சந்திரனும் என்னைப் போன்றுதான் இளைத்து வருகிறானோ?  சுக்லபட்சத்தில் சுடர்விட்டு ப்ரகாசித்தவன், இப்போது தேய்பிறையில் ஏனோ தேம்புகிறான்!

      நைவாய எம்மேபோல் நாள்மதியே!  நீஇந்நாள்

     மைவானிருளகற்றாய் மாழாந்து தேம்புதியால்

      ஐவாயரவணைமேல் ஆழிப்பெருமானார்

     மெய்வாசகம்கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே!   

                                                                                              திருவாய்மொழி 2.1.6)

என்ற ஆழ்வாரின் பாசுரத்திற்கு ஆசார்யர்கள் உபதேசித்த அர்த்தம் மனதிலே கனிந்தது.

     முழுமதி இளைத்துள்ளது கண்டு ஆழ்வார் வினவுகிறார்.  வரதனைப் பிரிந்த ஏக்கத்தில் தலைமகளாக (பராங்குச நாயகியாக) ஆழ்வாரின் பிரிவுத்துயர் பாசுரம் இது.

    “என்னைப் போன்றே சந்திரனே! நீயும் இளைத்துள்ளாயே!”  என வினவுகிறார்  நிற்கின்றதெல்லாம் நெடுமால் என எல்லாவற்றிலும் எம்பெருமானைக் காணும் ஆழ்வார், இப்போது சந்திரனும் பெருமாளின் பிரிவினால் வாடுகிறதோ!  என்று எண்ணுகிறார்.

     “அமுதைப்பொழியும் நிலவே!  நீ இப்போது இந்த இருளை ஏன் அகற்றவில்லை  உன் ஒளி ஏன் மங்கியது?  உன் மேனியின் வாட்டத்தின் காரணம்தான் என்ன?  ஓ…  நீயும் என்னைப்போன்று எம்பெருமானின் வார்த்தையில் நம்பிக்கை வைத்துப் பின்னர் அவனால் ஏமாற்றத்திற்குள்ளானாயோ?”  “மாசுச:” “கவலைப்படாதே” என்று அபயமுத்திரை அளித்தவன் ஏமாற்றினானே.

     “ஓ அவன் பழகுமவர்களின் இயல்பினைப் பெற்றிருப்பவன் தானே என்ற ஆழ்வார்,  அப்படி யாருடன் பெருமாள் பழகினான்?  அவர்களைப் போன்று இவனும் எப்படி பொய்யனானான்?”  விதியின் பிழையால் ஒளியிழந்த மதியின் நிலை கண்டு மேலும் விவரிக்கிறார் ஆழ்வார்.

     “நம் வரதன் கொடுமையான இக்கலியுகத்தில் “அனந்தன்” எனும் ஆதிசேஷனால் ஆராதிக்கப்படுகிறானல்லவா!  மேலும் அனந்தசயனனாக ஆதிசேஷன் மீது (அனந்தசரஸில்) பள்ளி கொள்கிறானன்றோ!  அனந்தன்  எனும் பாம்புக்கு இரண்டு நாக்குகள் உண்டோ? அதாவது, பொய் பேசுபவரை இரட்டை நாக்குடையவர் என்பர் பெரியோர்  அனந்தனான ஆதிசேஷனுடன் பழகுபவனான வரதனும் பொய் பேசி உன்னை ஏமாற்றினானோ  வெண்ணிலவே!”  என்கிறார். 

    “மேலும், வரதனின் ஆயுதங்கள் அழகு.  அவற்றினுள் அழகோ அழகு சுதர்ஸந சக்ரம்.  எதுவொன்று மேன்மேலும் பார்க்கத் தூண்டுமோ,  அதுதானே சுதர்ஸனம்”.  அந்த திவ்ய சக்ரத்தின் கதையைக் கேளுங்கள்.

     “கௌரவ, பாண்டவ யுத்தத்தில் அபிமன்யுவை அந்யாயமாகக் கொன்றான் ஜெயத்ரதன்.  இன்று சூரிய அஸ்தமனத்திற்குள் அவனைக் கொல்கிறேன் என சபதம் செய்தான் அர்ஜுனன்.  அர்ஜுனனின் சபதம் காக்க சுதர்ஸந சக்ரம் சூரிய ஒளியை மறைத்து,  பகலின் நடுவே இரவு வந்தது போன்றதொரு மாயத் (பொய்த்) தோற்றத்தை விளைவித்தது.  இருள் சூழ்ந்தது என எண்ணி குதூகலித்த ஜயத்ரதன் வெளியே வர, சுதர்ஸன சக்ரம் விலகி, சூரியன் ஒளிவிட, அர்ஜுனன் அவரைக் கொன்றான்.”

     இப்படி பகல் நடுவே இரவழைக்க வல்லான் சுதர்ஸனன் செய்ததும் வஞ்சனை தானே.  இருநாக்கு பாம்புடனும், வஞ்சனை செய்யும் சக்கரத்துடன் பழகும் வரதன், ஏமாற்றாமலிருப்பானா!”

     ஆழ்வார் ப்ராகாரத்தின் நடுவே கம்பீரமாகத் தோன்றும் நம்மாழ்வாரின் சன்னிதியும், அதன் மேலே முகிழ்த மதியும் கண்டபோது, நமக்குள்ளும் ஆழ்வாரின் இந்த பாசுரமும், அர்த்தமும் தோன்றியது.

     அப்படியானால் வரதன் வஞ்சனை செய்பவந்தானா!  நாயகி நிலையில் ஆழ்வார் பாடியது நம்மைப் பொறுத்த வரையில் இன்று நிஜமாகத் தோன்றுகிறதே!  என் விதியை என் என்பது?

     எப்போதும் உடன் இருப்பதாகச் சொன்னவன், இன்று விட்டுச் சென்றுவிடுவானோ?  அப்படியெனில் கவலைப்படாதே என்பதின் பொருள் ப்ரமையா?

     தொண்டரடிப் பொடியில் பூத்துக் குலுங்கும் மகிழ மரத்தின் சுகந்த பரிமள வாசனையை சுமந்து வரும் காற்று, நெஞ்சத்தை நிறைத்தது.  சோகத்தால் கனத்திருந்த நம் இதயத்தில் நுழைந்து, நுரையீரலில் புகுந்த அந்த வாசனை, சற்றே ஆறுதலளித்தது.  இதுபோன்ற அமைதியான சூழலில், ஆழ்வார் பாசுரங்களையும், ச்லோகங்களையும் அர்த்தத்துடன் அசைபோடுவது ஆனந்தமளிக்கும்.  ஆனால் இப்போதோ, உள்ளத்தில் ஓசையில்லை… உதடுகள் ஒட்ட மறுக்கின்றன.  ஒளியில்லாத பார்வையுடன், எதையும் கவனிக்கும் மனநிலையின்றி, ஒலியில்லாத வார்த்தைகள் இதழின் ஏக்கத்தைத் தெரிவித்தன.

    இதயம் கனத்திருந்தால் இதழால் இயம்ப முடியுமா? உலர்ந்த உதடுகள் ஒலியின்றி உச்சரித்தன. வ…. ர….. தா….    வ….ர…..தா….” என்று…

     பாக்கியத்தின் பக்குவத்தில் எழுந்த ஓசையெனில் விண்ணதிர வரதா என ஒலித்திருக்கும் சோகத்தின் சாயலில் சுவாரஸ்யமின்றி சுருண்டன அந்த வார்த்தைகள்.   ஆம்… இன்னும் சற்று நேரத்தில் எம் அத்திவரதன் அனந்தசரஸினுள் அமிழப் போகிறான்!!  சம்சார சாகரத்தில் அமிழ்ந்த எம்மைக் காக்கப் பிறந்தவன், பாற்கடலுள் பையத்துயிலும் பரமன், அனந்தன் மீது பள்ளிகொள்ளும் ஆதிப்பிரான், அனந்த கல்யாணகுணங்களுடையவன்,  அனந்தசரஸினுள் மீண்டும் செல்லப் போகிறான்!!

     பிரியமானவனைப் பிரிய மனமின்றி பிரியாவிடை கொடுக்கத் தெரியாமல் தவியாகத் தவிக்கும் போது, உதடுகள் உலர்ந்துதானே போகும்… தனிமையில் உள்ளத்துள் அழுவதை இந்த ஊருக்குப் புரிய வைத்திட முடியுமா?

     ஆயாசத்தின் ஆதிக்கத்தால், நெஞ்சத்தின் பாரத்தை சுமக்க முடியாமல் நூற்றுக்கால் மண்டபத்தின் குளக்கரைப் படிகளில் அமர்ந்தேன்.  கனத்த இதயம் கண்களைத் தானாக மூடியது வ….ர….தா… என ஒருமுறை வாயால் சொன்னாலும் மூச்சுக்காற்றின் வெம்மை உள்ளத்தின் வெறுமையைக் காட்டியது.

     கலக்கத்தில் கண்கள் மூடினவேயன்றி களைப்பில் மூடவில்லையன்றோ! அதனால் உறக்கம் எப்படி வரும்?  சில நொடிகள் சென்றிருக்கும்.  சிலீரென்று ஒரு ஸ்பரிசம்!!!!   இதுவரையிலும் உணர்ந்திராதது!!  ஆயிரம் வெண்மதியின் அனைத்து குளிர்ச்சியும் ஓரிடத்தில் ஸ்பரிசித்தால் எப்படி இருக்குமோ அதுபோன்று…

     மேனி சிலிர்த்த அந்த ஸ்பரிசம் தொடர்ந்திடாதா? என ஏங்க வைத்தது.

     ‘தனிமையில் தவிக்கும் நம்மைத் தொடுபவர் யார்?’ என தலையைத் திருப்பினால்….

      திசைகள் அனைத்தும் எழும்பிட ஒரு திகைப்பு உண்டானது.  இது திகைப்பா! அல்லது தித்திப்பா என் எதிரே நிற்பவன் …. நிற்பவன்…. தடுமாறித்தான் போனது உள்ளம்..

     “என் எதிரே நிற்பவன் தேவாதிராஜனா!!!. அத்திவரதனா!!! மும்மறையின் முதல்வனா!!! மூலமென ஓலமிட நின்றவனா!!!”

     திருவபிஷேகமும், திருக்குழைக்காதுகளில் கர்ணபத்ரமும், பங்கயக்கண்களும், பவளச் செவ்வாயும், திருக்கையின் திவ்ய ஆயுதங்களும், காண்தகு தோளும், திருமார்பு நாச்சியாரும், அனந்தநாபியும், அரைச்சிவந்த ஆடையும், ஆதிவேதத்தின் அனுபவம் கமழும் பாதகமலங்களும் சோதிவெள்ளமென சுடரிடும் ஆபரணங்களுடன் அருள்வரதன் என் முன்னே நின்ற பெருமையை எவ்வண்ணம் பேசுவேன்? எவரிடம் விளக்குவேன்?

     என்னைத் தொட்ட கைகள் இமையோர் தலைவனதா?  கருடனையும், அனுமனையும் அணைத்த கைகளா?  பெருந்தேவியுடன் பிணைந்த கைகளா? ஹஸ்திகிரிநாதனின் ஹஸ்தமா(கையா) அடியேனை ஸ்பரிசித்தது!!!!!

     என் உள்ளத்தை உணர்ந்தான் உரக மெல்லணையான்…. ஓதநீர் வண்ணன் மெலிதாக நகைத்தான். மந்தகாசப் புன்னகையின் மாறாத பொருள் கவலைப்படாதே“..

    “வ…. ர….. தா..” திகைத்தவன், திடுக்கிட்டு நான் எழுவதற்குள், தோளைத் தொட்டு அழுத்தி அமர வைத்தான் துழாய்முடியான்.

    அவனும் அருகே அமர்ந்ததை யாரிடம் சொன்னால் நம்புவர்?!!!!!!

     பிரமனின் யாகத்தில் வபை எனும் திரவியம் சேர்த்த போது அவதரித்தான் வரதன்.  அதனால் அவனது அதரத்தில் இன்றும் வபையின் பரிமளம் வீசுகிறது. வபையின் வாசனை, பெருந்தேவியின் தழுவலில் அவளின் திருமார்பக சந்தனத்தைத், தான் ஏற்றதால் வந்த பரிமளம், தனக்கு நிகர் எவருமில்லை என தன்னொப்பாரைத் தவிர்த்திடும் துளசிமாலையின் திவ்யசுகந்தம் என வேதக்கலவையின் பொருளானவன் இன்று வாசனைக் கலவியில் வந்தமர்ந்தான்.

     இமைக்க மறந்து இமையோர் தலைவனைக் கண்டேன்! எழுதவறியாத எம்பெருமானைக் கண்டேன்.  ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தைக் கண்டேன்.  ஆர்ப்பரிக்கும் உணர்ச்சிகள் உந்தித்தள்ள நிலைதடுமாறின என்னை, மென்மையாக ஆச்வாசம் செய்தான் ஆனைமலை நாயகன்.

     “முப்பது நாட்களுக்கு முன்பு நமது உரையாடலை நாடறியச் செய்தாயே! இன்று உனக்கு என்ன ஆயிற்று?  ஏன் இந்த வாட்டம்?”

     அனைத்துலகும் காக்கும் அருளாளன், அனைத்துக்கும் அதிபதியானவன், அடியேனை ஆறுதல்படுத்தக் கேட்கிறான் இது உண்மையா? அல்லது பிரமையா?

     “வரதா….. வரதா…. என் ப்ரபோ! தேவாதிராஜா! மாயம் செய்யேல் என்னை. உன்னைப் பெற்று அடியேன் எப்படி இழப்பேன் என்று தேம்பினேன்.

     “என்னது என்னைப் பிரிகிறாயா?  யார் சொன்னது? உன்னையும், என்னையும் பிரிக்க யாரால் முடியும்?” சற்றே குரலில் கடுமையுடன் வரதன்.

    “இல்லை வரதா! இன்னும் சற்று நேரத்தில் நீ குளத்தில் எழுந்தருளி விடுவாயே! அப்புறம் உனைக்காணும் பாக்கியம் எனக்குண்டா?” அந்த ஏக்கம் எனக்கில்லையா?” என்றேன்.

    நிவந்த நீண்முடியன் சற்றே குனிந்து எனது முகத்தை நிமிர்த்தி என் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

     அம்புஜலோசனின் பார்வையின் கூர்மை தாளாமல் தலையை கவிழ்த்துக் கொண்டேன்.

     “இந்த உலகம்தான் பைத்தியக்காரத்தனமாக உளறுகிறது என்றால், உனக்கென்ன ஆயிற்று?” வரதன் குரலில் கடுமை…

    புரியாமல் பார்த்தேன்.

     “உன்னுள் மறைந்திருக்கும் நான், இக்குளத்தினுள் மறைந்தால், வாடுவாயோ?”

    “இதோ…. தூர்வாரி, பழுதுகளை நீக்கி பராமரித்து, தெளிந்த தீர்த்தத்துடன் உள்ள இக்குளத்தில் இருப்பது போன்றுதானே உன் மனதிலும் மூழ்கிட ஆசைகொண்டேன்…

     “கோபம், பொறாமை, ஆசை, கள்ளம், கபடம் என்று மனதில்தான் எத்தனை வகையான சேறுகள்!!  அதையெல்லாம் தூர்வாரி துடைத்தெறிந்து என்னை அனுபவிக்கத் தெரியாத நீ,  குளத்தினுள் நான் செல்ல கவலைப்படுகிறாயா? முட்டாள்….” என்று சீறினான் வரதன்.

     வ….ர….தா…. என நான் பேசத் தொடங்குமுன், நில்.. குறுக்கே பேசாதே! நாற்பது நாட்களுக்கு மேலாக மலையில் சென்று மூலவரையும், உற்சவரையும் சேவிக்க முடியவில்லையே! என்று ஏங்கியவன்தானே நீ!!…” – வரதன்.

     “ ஆமாம்..” – அடியேன்.

     அங்குள்ளவனும் நான்தானே! என்னை வெளியே வைத்தாலும், உள்ளே வைத்தாலும் உற்சவரின் உற்சவங்களால்தானே காஞ்சிக்கும் எனக்கும் பெருமை….” – வரதன்.

     தலையாட்டினேன் ஆமாம் என்று.

     “இப்போது எந்த உற்சவமாவது பழைய பொலிவுடன் பெருமையுடன் கம்பீரமாக நடந்ததா? சொல்… என்றான்.

     “ஆனால் வரதா! அத்திவரதரை தரிசிக்கத்தான் நாள்தோறும் பக்தர்கள் அலையலையாகப் படையெடுக்கின்றனரே!”

     “நான் அதையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.   இந்த மண் பக்தி மணம் கமழும் மண் என்பது மறுபடியும் நிரூபணம் ஆகியுள்ளது.  ஆனாலும் இந்த மக்களின் செயல்பாடு சற்று வருத்தமளிக்கிறது – வரதன்.

     வரதனே பேசட்டும் என மௌனம் காத்தேன். 

     “இப்போது ஓடோடி வருபவர்கள் இதே பக்தியினை இனியும் வெளிப்படுத்துவார்களா அத்திவரதர் ஊடகங்களுக்குச் செய்தியாகிவிட்டார். அத்திவரதர் உள்ளே போகலாமா?  கூடாதா?” என்றும் பட்டிமன்ற பொருளாகிவிட்டார்?  ஆதியுகத்து அயன் கண்ட அற்புத உற்சவங்களைத் தடுப்பதற்கு அவதரித்தவராகி விட்டார்“.

     எம்பெருமானின் இந்தப் பேச்சின் வேகத்தில் திடுக்கிட்ட சில பறவைகள்,  ராஜகோபுரத்தின் பொந்திலிருந்து படபடத்துப் பறந்தன.

     “இப்படியெல்லாம் ஊரார் என்னைப் பேசும்படி செய்துவிட்டனர் சிலர்.   நான் பத்திரமாக உள்ளே எழுந்தருள வேண்டும் என நீயும்தானே விரும்பினாய்?” வரதனின் கேள்வி.

     “நிச்சயமாக வரதா! அதுவும் உனது திருவுள்ளம்தானே! உனது தரிசனம் பக்தி வளர்த்தது நிதர்சனம்.  ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்களை சிலர் செயல்படுத்த முனைந்தனர்.  அவ்விதம் நிகழ்வது பல பெரிய குழப்பங்களை உண்டாக்கும்.  ஆதலால் நன்கு தீர்மானித்து எல்லோரும் விரும்பும்படியான ஒரு நல்ல தீர்வை எடுக்க வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.  ஆ……னா….ல்….

    “ஆனால் என்ன?”… வரதன்.

     “எனது கருத்தில் முக்யமானதை விட்டுவிட்டு, அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் பேசவாரம்பித்து விட்டனர்.  இது வருத்தத்தினால் விளைந்த கருத்து என்பதை உணராமலேயே தங்களின் சுய காழ்ப்புணர்ச்சியை விமர்சனமெனும் பெயரில் வெளியிட்டனர்.”

    “இங்குள்ள மக்களும் இங்கு வரும் பக்தர்களும் படும்பாட்டைக் காணும்போது, எவருக்குமே இது புரியுமே!!  அதற்காக உன்னைப் பிரிய நாங்கள் இசைந்தோம் என்பது பொருளாகிவிடுமா நடைமுறையின் சில அசாத்யங்களை இவ்வுலகம் உணரவில்லையே!  ஏறத்தாழ ஒரு நாஸ்திகனின் நிலையில் அடியேனை விமர்சிக்கின்றனரே!” அழுகையுடன் அடியேன்….

    ஹா…… ஹ…… ஹா….. எனச் சிரித்தான் அருளாளன்.

    “இதற்குத்தான் வருத்தப்படுகிறாயா என் குமரா?!!” என்றான்.

     விழிகளின் ஈரத்திரைகளின் ஊடே புரியாமல் அவன் முகத்தைப் பார்த்தேன். புன்னகை மாறாமல் பேசினான் புண்யகோடீச்வரன்.

    “நல்லதொரு ஆசார்யன் மூலமாக நம் சம்ப்ரதாய அர்த்தங்களை அறிந்தவன் தானே நீ?” வரதனின் கேள்வி.

   “என்ன சொல்ல வருகிறான் எம்பிரான்?” எனப் புரியாமல் ..மா..ம் என மெதுவாகத் தலையசைத்தேன்.

   “கீதையில் நான் சொன்னதை உனது ஆசார்யார் விளக்கியிருப்பாரே!” நினைவுபடுத்திகிறேன் கேள்.

    “ அர்ஜுனா! இன்னமும் இந்த உலகம் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. மனிதபாவனையுடனே என்னைப் பார்ப்பதால் எனக்குரிய மதிப்பளிப்பதுமில்லை என்று சொன்னேனே…. என்னையும், எனது உபதேசங்களையும் புரிந்து கொள்ளாத இவ்வுலகம்,  உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாம்!!  இன்னமும் நான் நாலாயிரம் அவதாரம் எடுத்தாலும் இவர்கள் இப்படித்தான்….”

     சத்யவ்ரதன் சத்யமான உலகியல்பைப் பேசினான். 

     “ஆம் ப்ரபோ! எனது சுவாமி தேசிகனும் உன் விஷயமான ஸ்தோத்ரத்தில்,  நிலையில்லா மனமுடைய மாந்தர், நிலையான உன்னை, உன் உண்மையை உணரவில்லையே!” என ஏங்குகிறாரே!” – அடியேன்.

     “ம்ம்.. சரிதான். இதையெல்லாம் அறிந்துமா உனக்கு வருத்தம்! ராமனையும், கண்ணனையும் ஏன் ராமானுஜனையும் தேசிகனையுமே குறைகூறும் இவ்வுலகம், உன்னை மட்டும் ஏற்கும் என்று எதிர்பார்க்கிறாயா?”

     பதில் சொல்லத் தெரியாமல் மௌனமாகத் தலைகுனிந்தேன்.

     “ஸர்வஜ்ஞனாகிய (எல்லாம் அறிந்தவனாகிய) என்னாலேயே இவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  சாமான்யன் உன்னால் முடியுமா?”

    “அது சரி, நான் இன்னமும் எவ்வளவு நாட்கள் தரிசனம் தந்தால் எல்லோரும் விரும்புவார்கள்?” என்றான் வரதன்.

    “ஒருசிலர் நூற்றியெட்டு என்கின்றனர் வேறு சிலர் நிரந்தரமாகவே நீ வெளியே சேவையாக வேண்டுமென்கின்றனர்.  உன் திருவுள்ளம் என்ன வரதா?” – அடியேன்.

     மறுபடியும் ஹா…. ஹ….. ஹா…… என்றவன், என்னை என்றுமே அனுபவிக்க வேண்டுமெனும் ஆவலில் அவர்கள் பேசுகின்றனர்.  அதிலொன்றும் தவறில்லை. ஆனால் எனது இந்த அர்ச்சா மூர்த்தியும் அவதாரம்தானே?!” – வரதன்.

     “அதிலென்ன சந்தேகம் வரதா! ஆகமங்கள் உனக்கு ஐந்து நிலைகளை அவதாரங்களாக அறிவிக்கின்றன.” – அடியேன். 

    “அப்படியானால் ராம க்ருஷ்ண அவதாரங்களைப் போன்று, ஒரு காரண கார்யத்தில் அவ்வப்போது அவதரிக்கும்(தோன்றும்) நான், அது முடிந்தவுடன் அந்த அவதாரத்தை முடித்துக் கொள்கிறேனல்லவா!” – வரதன்.

    நான் மௌனமாகவே இருந்தேன்.

     “நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்திலிருந்து வெளியே வந்து அருள்பாலிப்பது ஒரு அவதாரம் போன்றுதானே! அது முடிந்தவுடன் மறுபடியும் மறைகிறேன்.  இதை உலகம் புரிந்து கொள்ளாமல் போகலாம். உனக்குமா புரியவில்லை?” – வரதன்.

    “ராமனும், கண்ணனும் தங்களது அவதாரத்தை முடித்துக் கொண்டு சென்றபோது, இவ்வுலகம் பட்டபாட்டை புராணங்களில் அறிகிறோமே வரதா!!! அதுபோன்றுதான் உன்னைப் பிரிய மனமின்றி தவிக்கிறோம் – எனது ஏக்கம்.

    மீண்டும் ஹா….. ஹா…..

    “ஊருக்கெல்லாம் உபந்யாசம் செய்யும் திறமை பெற்றவன் நீ – எனக்கும் நன்கு உபதேசிக்கிறாய்!” – வரதன்.

    “ஐயோ! ப்ரபோ! ப்ரபோ! அபசாரம்…..” பதறினேன்.

   “ஏனடா பதறுகிறாய்? நான் பழக்கி வைத்ததை, ஒரு கிளி போன்று என்னிடம் பேசுகிறாயே! நான் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் இது உனது ஆசார்யன் சொன்னதுதானே!.”

   “அடியேன்… தேசிகனல்லால் தெய்வமில்லை..”

    “ம்ம்…. ம்….” என வரதன் விழிகளைச் சுழற்றி உதடுகளைக் குவித்தது அதியத்புதமாக இருந்தது.

    அந்த அழகில் மயங்கி அப்படியே நின்றேன்.

    “ஏன் பேசவில்லை பிள்ளாய் உன் மொழி கேட்கத்தானே நான் வந்தேன்… வரதன். 

    “என்னுடை இன்னமுதே! வானவர்தம் ஈசனே! மெய்நின்று கேட்டருள். அடியேனின் விண்ணப்பம் ராமாவதாரத்தில், உன்னைப் பிரிய மனமின்றி நதிகளும், குளங்களும், மரங்களும், பறவைகளும், மீன்களும்கூட கதறியழுதன என்றில்லையா!”

     “கண்ணனாக மாயம் செய்த உன்னைக் காணாமல் உயிர் தரியேன் என உத்தவர் ஓலமிட்டு அழவில்லையா?  நாங்கள் தபோவலிமையற்றவர்தாம்…. ஆனால் உனது பிரிவு எங்களுக்கு இனிக்குமா இத்தனை நாட்களும் உன் பெருமை பேசிவிட்டு இனி வெறுமையாக எப்படி இருப்பது?”

    “நன்று நன்று..” என ஆனந்தமாகத் தலையசைத்தான் ஆனையின் துயர் தீர்த்தவன்.

     “ராமாவதாரம் போன்று என்னுடன் எல்லோரும் வருவதற்குத் தயாராகவுள்ளனரா? அல்லது க்ருஷ்ணாவதாரத்தில் கோபிகளைப் போன்று என் நினைவிலேயே இருப்பவர் எத்தனை பேர்?” வரதன் வினவினான்.

    “உண்மைதான்… அந்த அளவிற்குப் பக்குவப்பட்ட பிறவிகள் இல்லை நாங்கள்.  ஆனாலும் உனது பிரிவு பேரிழப்புதானே” – அடியேன்.

    “பிரிகிறேன், பிரிகிறேன் என்கிறாயே! நான் எங்கு செல்கிறேன் இதே குளத்தினுள்தானே!. மேலும் எனது ஏனைய நிலைகள் மூலவர், உற்சவர் என்றுமே உங்களுடன்கூடியது தானே… ராம, க்ருஷ்ண அவதாரம் போன்று ஒட்டுமொத்தமாக விடுத்துச் செல்லாமல், என்றுமே என்னை அனுபவிக்க அளித்த அர்ச்சையின் மேன்மைதனை எப்பொழுது புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?”

    “அத்திவரதனாகிய நான், உனது அந்தர்யாமி. உன் உள்ளத்துள் உறைபவன்தானே… ஏதோ காரண காரியத்தால் இக்குளத்தினுள் அமிழ்ந்துள்ளேன் இது தேவரகசியம்!!!! தேவாதிதேவன் எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!! உள்ளே செல்லும் எனக்கு வெளியே வரத் தெரியாதா? நான் எந்த அரசாணைக்குக் காத்திருக்க வேண்டும்?

     “தர்மத்தை நிலைநிறுத்த எனது அவதாரம். அதைத்தான் எவ்வளவு பேர்கள் புரிந்து கொண்டு அதன்படி நடக்கின்றனர்?  இந்த நாற்பது நாட்கள் என்னைக் கொண்டாடுமவர்கள், தொன்றுதொட்ட பழக்கங்களான உற்சவங்கள் செவ்வனே நடைபெறவில்லை என்று உணர்ந்தனரா!”

    வரதனின் வார்த்தைகள் நடுவே குறுக்கிடுவது கூடாது என்று அமைதி காத்தேன்.

    சற்றே வேகம் தணிந்தவனாக என்னைப் பார்த்து கனிவான குரலில் மீண்டும் பேசினான்.

    “அதுசரி! என்னை நினைத்திருக்கும் நீ நித்யோத்சவரை மறந்து விட்டாயா? அவர்தானே என்றுமே உங்களுடன் கலந்திருப்பவர்!!”.

    திடீர் தாக்குதலாக வரதனின் கேள்வியில் நிலைகுலைந்து போனேன்.

    “என்ன! என் பெருமானை மறப்பதா அவனை சேவிக்க முடியவில்லையே எனும் ஏக்கத்தில்தானே ஓர் அறிக்கை சமர்ப்பித்தேன்.   ஆனால் அதன் கருத்தை ஆஸ்திகர்கள்கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே!  இன்னமும் என்னை திட்டித் தீர்த்து வருகின்றனர் என் இயலாமையைக் கொட்டினேன்.

    ஆறுதலாகக் கரம் பிடித்து ஆச்வாசம் செய்தான் அரவிந்தலோசனன்.

    “நீ பெரியோர்கள் தாள் பணிந்து சம்ப்ரதாய பொருள் அறிந்தவன்தானே! இவர்கள் உன்பால் கொண்ட விரோதம் உனது பாபங்களைப் போக்குமென்பதை நீ அறியாயோ?”

    வாஞ்சையுடன் வரதன் விரல் பிணைத்தான் அந்தத் தீண்டுமின்பத்தில் திளைத்த அடியேன் திக்குமுக்காடிப் போனேன்.

   “வரதா! ஒரு பாசுரம் பாடட்டுமா?” என்றேன்.

    ஹா.. ஹா… எனச் சிரித்தவன், நான் வருவதற்கு முன்பு நம்மாழ்வார் பாசுரத்தைக் கொண்டு சந்திரனைக் கண்டாயே! அது போன்று மறுபடியும் பாசுரமா?” வினவினான் வரதன்.

   வெட்கத்தில் தலை கவிழ்ந்தேன்.   என் உள்ளத்துள் உறையும் இவனை அறியாது ரகசியமாக என் எண்ணங்களை வளர்த்தேனே!  இஃதென்ன முட்டாள்தனம்!”.

    என் மௌனம் கலைத்து ஆதிப்பிரான் பேசினான்.  “நானன்றி உன்னை உரிமையுடன் யார் சீண்டுவார்?  சரி.. சரி.. அந்த பாசுரத்தைச் சொல். உன் உபந்யாசத்தை நான் ரசிப்பேன் வரதன்.

         “விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை

           நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை”

                                                                                        (திருவாய்மொழி 175)

என்று முடிப்பதற்குள் முந்திக் கொண்ட வரதன்,  இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றான்.

    “வரதா! பூர்வர்கள் காட்டிய விரிவுரை ஒருபுறம்…. இங்கு இப்போது எனது அனுபவம் மறுபுறம் என்றேன்.

    “அதைத்தான் சற்று விளக்கமாகக் கூறேன்..” என்றான் ஆழியான்.

     “என் விளக்கைஅதாவது, வரதா, எனக்கு ஜ்ஞானம் தந்து ஆட்கொண்ட விளக்கு நம் வரதன். கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கும் கண்ணன்..“.

    “ம்… சரி… வரதன்.

    “என் விளக்கை விடுவேனோ! – என் வரதனை மறப்பேனா?”.

    “என் ஆவியை விடுவேனோ? – என் ஆவி பெருந்தேவி… இந்த ஆத்மாவுக்கு உயிரளித்து என்னைக் காக்கும் அன்னை.. அவளை விடுவேனா.. மறப்பேனா?..” அடியேன்.

    “அடடே… ம்… அப்புறம் மேலே சொல்…. வரதன்.

   நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதனை விடுவேனோ?” என அத்திவரதனைக் கைகாட்டினேன்… 

    “பேஷ்…. பேஷ்… என்றான். 

    “வரதா…. 

இவர்கள் நடுவே வந்து என்னை உய்யக் கொண்டாய்… 

என் வாழ்வின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்… 

குளத்தின் நடுவே வந்து உய்யக் கொண்டாய்… 

நாற்பது நாட்கள் நடுவே வந்து உய்யக் கொண்டாய்…

மேலே சொல்ல முடியாமல் தழுதழுத்த என் தலை கோதின தேவராஜன், உன் மனது எனக்குத் தெரியும் பிள்ளாய்..” என இதயம் வருடுகிற வார்த்தைகளை ஒலித்தான்.

     “வரதா! தரிசனம் காக்கவே இன்று தரிசனம் தந்தாய் நீ… ஆனால் தரிசு நிலமான இம்மனசில் உன் அனுபவம் இன்னமும் நிறையவில்லையே என ஏங்குகிறேன் என்று தேம்பினேன்.

   “அதை அனுபவிக்க ஆழ்வார்களே ஆசைப்பட்டனர்.  நீ எம்மாத்திரம் எனப் புன்னகைத்தான்…

   “பிள்ளாய்… உரையாடல்கள் போதும். உள்ளத்தில் வருத்தத்தை விடு.. உயர்வான உற்சவங்களும், உற்சாகமான உபயவேத கோஷ்டியும் காத்திருக்கிறது.  இனியென்ன கலக்கம்?” வரதன் விழி துடைத்தான்.

   உண்மைதான்.  மயர்வற (சந்தேகமற) என் மனத்தே மன்னினான் அத்திவரதன் அயர்வில் அமரர் ஆதிக் கொழுந்தாகச் சுடர்விட்டவனை, பாதாதிகேசம் தொழுதேன்.  எனது துயரங்கள் பறந்தோடின.

    நான் ஏன் கலங்க வேண்டும்? எனக்கென்ன குறை!! ஆள்கின்றான் ஆழியான்… ஆரால் குறை நமக்கு?… இதோ இக்குளமும் உண்டு.  இக்குளத்தில் நித்யகர்மானுஷ்டானம் செய்யும் பரமைகாந்திகளின் குலமும் உண்டு என்றுமே வரதன் எமக்கெதிரே சேவையாகிறான் என் பாட்டனாராம் ப்ரம்மதேவன் சேர்த்த அழியாத பெருஞ்செல்வம், அத்திமலையில் நிரந்தரமாகக் குவிந்துள்ளதே…. அள்ள அள்ளக் குறையாத செல்வமன்றோ!

    துயரறு சுடரடி தொழுதேன்.. வரதா…. வரதா…. என்றேன்.. இப்போது அவனது திருக்கையில் “மாசுச: – கவலைப்படாதே” எனும் எழுத்துக்கள் தெளிவாக மின்னியது.. திவ்யமான தேஜோமயமாகத் திருக்குளத்தினுள் இறங்கினான் அத்திகிரியான்.  சரயூவில் இறங்கிய ராமனைத் தழுவிய சரயூ போன்றும், கண்ணனின் காலடி வைப்பில் களித்த யமுனை போன்றும், அனந்தசரசின் புன்ணியதீர்த்தம் வரதனின் திருமேனியைத் தீண்டி மகிழ்ந்தது.  அனந்தனாம் நாகராஜன் அழகிய படுக்கையாகக் காத்திருந்தான்.  வரதனின் முழுதிருவுருவமும் நீருக்குள் மறைந்தது.  குளத்தின் தண்ணீர் போன்று என் நெஞ்சமும் தெளிந்தது.

    ஆம்… வரதன் அனந்தசரஸினுள் புகவில்லை.  இந்த அனந்தன் எனும் அடியேனின் உள்ளக் குளத்தினுள் அமிழ்ந்தான் – திருமாமகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட பேரருளாளனார்.  இருபத்திநான்கு படிகளிலும் நீர் நிறைந்தது.  இருபத்திநான்கு அதிர்வேட்டுக்கள் முழங்கின!!!

    விழிகளின் ஓரம் திரண்ட துளிகளைத் துடைத்துக் கொண்டேன்.  இது சோகத்தின் வடிவமல்ல… ஆனந்தத்தின் அலைகள்.  ஆகையால் இந்தக் கண்ணீரை வரதனும் விரும்புவான். 

    ராமனைப் பிரிகிறோமோ என்று குளத்து மீன்கள் வெந்தன அயோத்தியில்! வரதனைத்  தாங்கள் மீண்டும் பெற்றோமே என்று அனந்தசரஸ் மீன்கள் துள்ளிக் குதித்தன!! மீன்களாம் நித்யசூரிகளுக்கு இங்கேயும் வரதானுபவம்!! 

    பொழுது புலரும் பின்மாலைப் பொழுதாகியது.  இப்பொழுது பார்த்தபோது வானத்து சந்திரன் சுடர்விட்டுத்தான் விளங்கினான்.  எனது கலக்கம் நீங்கியது போன்று அவனது களங்கமும் நீங்கியது. கதிரவன் தனது கிரணங்களை புண்யகோடி விமானத்தின் மீது படரவைத்தான். 

    ஏறத்தாழ ஒரு மண்டலம் தவிர்ந்து வைதிகர்கள் தங்கள் நித்யகர்மானுஷ்டானத்திற்கு திருக்குளத்தில் நீராட வந்தனர்.  அடியேன் மெதுவாக திருக்குளத்தை வலம் வந்தேன்.  தூரத்தே உடல், திருச்சின்னம் சப்தம் கச்சியின் மதிள்களில் எதிரொலித்தது. 

    ஆஹா, இதைக் கேட்டு எவ்வளவு நாட்களாகி விட்டன. அமைதியான காலையில் ராமானுஜரின் சாலைக்கிணறு தீர்த்தம் வரதனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.  அதற்காகத்தான் திருச்சின்னம் ஊதுகின்றனர். 

     சோதியனந்தனாக, கலியில் ஸ்ரீராமானுஜர் அன்றோ வரதனுக்கு திருவாராதனம் செய்கிறார்!  இனி தீர்த்தாமாடி மலைக்குச் சென்று, பெருமாளையும் பெருந்தேவியையும் சேவிக்கவேண்டும். 

     காஞ்சியின் வீதிகளில், பெண்கள் கோலமிடத் தொடங்விட்டனர். வேதபாராயணம் மாடவீதி ப்ரதக்ஷிணம் செய்கின்றனர்.  ஆனிரைகளும் அழகாகச் சாலைகளில் படர்கின்றன.  இனி வாசலில் எழுந்தருளப்போகும் வரதனை வரவேற்கக் காத்திருப்போம்!!

அன்புடன்,

ஏபிஎன்.

Athi Varadan Special – Varadan’s wish by Sri APN Swami, Art by Sri Keshav

Sri APNSwami’s Shishya Writes | மறை உரைக்கும் மரம் | Marai Uraikkum Maram

மறை உரைக்கும் மரம்

உலகமே அத்திவரதரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் இந்த உன்னத தருணத்தில், எப்பெருமானை மரமாக மறைபுருஷன்(வேத புருஷன்) பல இடங்களில் கொண்டாடியிருக்கிறான்.

Sri APNSwami காலக்ஷேபத்தில் அத்தி வரதர் வைபவத்துடன் தினந்தோறும்,  தாரு(மர) வடிவில் பல திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள பெருமாளின்  பெருமைகளை அருளிச்செய்துள்ளார்.

பெருமாள் எவ்விதம் மரமாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறான் என்றும், எம்பெருமானுக்கும் மரத்திற்கும் இருக்கும் ஒற்றுமையின் தொகுப்பினையும் நாம் அனுபவிக்கலாம்.

தொகுத்த Sri APNSwamiயின் காலக்ஷேப சிஷ்யர்கள்:

  • செல்வி பத்மினி க்ருஷ்ணன்
  • ஸ்ரீமதி வைதேஹி ஸ்ரீநிவாசன்
  • ஸ்ரீமதி ஸ்ரீரஞ்ஜனி ஜகன்னாதன்

Link to48 days of Snippets Shared in Sri APN Swami’s Theedhila Nallor Thiral WhatsApp Group – Marai Uraikkum Maram

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 24|வகுளாபரணன் விருப்பம்|The wish of Vakulaabaranan|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 24 வகுளாபரணன் விருப்பம்

    திருமங்கையாழ்வாரின் தெய்வீகத்தையுணர்ந்த சோழ அரசன், இனியும் அவரைப் பணிய வைத்துத், தான் அதிகாரம் செலுத்துவது தகாது என உணர்ந்தான்.  பாகவதோத்தமராகிய பரகாலனின் பாடல்கள் பக்தி ரசம் ததும்பி இந்த பூமியை வாழ்வித்திட வேண்டுமென விரும்பினான்.

    “கலியனே! இனி இடையூரின்றி தங்களின் கைங்கர்யம் தொடரட்டும் என அவரைப் பணிந்து போற்றினான்.

    பந்தங்கள் விலகியும், அரசுரிமையிலிருந்து விடுவித்துக் கொண்டும், ஆலிநாடன் இப்போது வாலி மாவலமாம் பூமியில் திவ்யதேசங்களில் வலம் வந்தார் அருளாளன் திருவடிகளில் சிறிது காலம் இளைப்பாற விரும்பினார். நம்மாழ்வார் பாடிய வரதனின் துயரறு சுடரடி தொழுதெழுதார்.

    சிறிது காலம் சென்றதும் உள்ளத்தினுள் எழுந்த உந்துதலினால் ஆழ்வாரின் திவ்யமங்கள விக்ரகத்தை காஞ்சியில் எழுந்தருளப் பண்ண எண்ணினார். அதற்குரிய ஏற்பாடுகளை விரைந்து தொடங்கினார்.  பத்மாஸனத்தில் அமர்ந்து கொண்டு, இடது திருக்கையினை மடி மீது வைத்தும், வலது கரத்தில் உபதேச முத்ரையுடன், நம்மாழ்வாரின் விக்ரகத்தை வார்ப்பெடுக்க ஸ்தபதிகள் ஆவன செய்தனர்.  சுபமான முகூர்த்தத்தில் ஆழ்வாரின் வார்ப்பு திருமேனி உருவானது.

    பக்திப் பரவசத்துடன் ஆழ்வாரை சேவிக்க நினைத்த பரகாலனுக்குப் பேரதிர்ச்சி!!

   “ஐயோ! என்ன இது?”

    ஆழ்வாரின் விக்ரகத்தில் உபதேச முத்திரை மாறியுள்ளது ஆம்!  உபதேசம் செய்யும் கோலத்தில் இருந்த அவரின் வலது கை, உட்புறம் மடிந்து, தனது நெஞ்சத்தின் மீது படிந்திருந்தது.

   “உபதேசம் செய்யும் ஆழ்வாரின் கரம், தனது உள்ளத்தை நோக்கியுள்ளதே! நமக்கு உபதேசம் செய்யும் ஆழ்வார், தனது நெஞ்சத்தைக் காண்பிக்கிறாரே!”. கலியனுக்கு ஒன்றும் புரியவில்லை.

   “ஏதாவது அபசாரம் நேர்ந்ததா?  சில்ப சாஸ்த்ரங்களோ ஆகம விதிகளோ மீறப்பட்டனவா?”

   “ஆழ்வாரே! திருவடிகளில் தஞ்சமடைகிறேன். உமது நெஞ்சத்தின் கருத்தினை ஆளிட வேண்டும் எனத் தொழுதார் கலியன்.

    “என்னவாயிற்றோ தெரியவில்லை.. ஆழ்வாரின் திருவுள்ளமும் புரியவில்லை… என நினைத்தவராக அன்று முழுதும் உபவாசம் இருந்தார் மங்கைமன்னன்.  இரவுப்பொழுது முழுதும் ஆழ்வாரின் த்யானம்தான். வகுளாபரணா! சடகோபா! காரிமாறா!” என வாய் ஓயாமல் ஆழ்வாரின் திருநாமஜபம் செய்து கொண்டிருந்தார்.

    எப்போது உறங்கினார் என்பது தெரியாது.  உறக்கத்தில் உண்டானது ஒரு தெய்வீக உணர்வு வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபன், மானவேல் கலியனின் கனவில் தோன்றினார்.

    “மாண்பில் சிறந்த மங்கையர்கோனே! மனக்கலக்கம் எதற்கு?” மகிழ்மாறன் மந்தகாசப் புன்னகையுடன் வினவினான்.

   “பைந்தமிழ் பாசுரங்களைப் பாடிய எம் பரம! வேதம் தமிழ்செய்த வகுளாபரணா! இஃதென்ன விபரீதம்?  தேவரீர் திருமேனியை, நினைத்தபடி என்னால் வடிக்க முடியவில்லையே!” – கலியன்.

    “அருள்மாரி கலியனே! நீர் நினைத்தபடியா?  அல்லது நான் நினைத்தபடியா!” – ஆழ்வாரின் கேள்வி புரியாமல் திகைத்தார் திருமங்கைமன்னன்.

    “நீர் நினைத்தது உமக்கு உபதேசிக்கும்படியான கோலம்.  ஆனால் நாம் விரும்பியது…. துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே… என்ன இப்போது புரிகிறதா?” – மாறனின் மோகனப் புன்னகையில் தன்னை மறந்த கலியன், மெதுவாகத் தலையசைத்தார்.

   “பிறகென்ன! எம் விருப்பத்தின்படி இந்த விக்ரகத்தின் ப்ரதிஷ்டை நடைபெறட்டுமே!” என்ற காரிமாறன் கனவிலிருந்து மறைந்தார்.

   “ஆழ்வாரின் நான்கு ப்ரபந்தகளுக்கு நல்லதொரு வ்யாக்யானமாக நாம் ஆறு ப்ரபந்தங்களைப் பாடினோமே! ஆனால் ஆழ்வாரின் திருவுள்ளம் அறியாமல் போனோமே!” என திகைத்தார் திருமங்கைமன்னன்.

   ஆம்! திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, திருவந்தாதி எனும் நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்கள் ருக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களாகும். அதற்கு,  பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், சிறியதிருமடல், பெரியதிருமடல், திருவெழுக்கூற்றிருக்கை எனும் திருமங்கையாழ்வாரின் ஆறு ப்ரபந்தங்களும் வ்யாக்யானம் என்பர் பெரியோர்.

உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்

மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்

துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே!  

                                                       – திருவாய்மொழி (1-1-1), நம்மாழ்வார்

என்று தொடங்குகிறது திருவாய்மொழி.  அதன் கடைசி வரிகள் துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!” என ஆழ்வார் தனது நெஞ்சத்தை நோக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. த ற்போது கலியனின் கனவில் ஆழ்வார் தோன்றி, தனக்கு விருப்பமானதைத் தெரிவித்தார். அதன்படி பார்த்தால் நம்மாழ்வார் திருவாய்மொழியின் முதல் நூறு பாடல்களை வரதன் விஷயமாகவே அருளியது தெள்ளென விளங்குகிறது.

    வரதனின் திருவடியன்றி வேறு புகலறியாத ஆழ்வார், தனது நெஞ்சத்தில் கைவைத்து, தனது உள்ளக் கருத்தை உலகோர் அறிய வேண்டுமென்று ஆசைப்பட்டார்.

   அதனால்தான் கலியன் வடித்த ஆழ்வாரின் சிற்பம், கைமாறிய கோலத்தில் காட்சி தந்தது.

    இவ்வுண்மையை நன்கு தெளிவாகப் புரிந்து கொண்ட ஆலிநாடன், உடனடியாக ஆழ்வாரின் தெய்வீகத் திருவுருவை நம்மாழ்வார் விரும்பிய நிலையிலேயே ப்ரதிஷ்டை செய்தார்.  அந்தத் திருவுருவமே இன்றும் நாம் சேவிக்கும் மகிழ்மாறனின் எழிலுருவம்.

ஆசார்யர்களும்‌  அருளாளனும்‌

    நாதமுனிகளுக்குப்‌ பின்பு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய ஆசார்யரான ஆளவந்தார், ‌ தனக்குப்‌ பின்னர்‌ இந்த ஸத்ஸம்ப்ரதாயத்தைக்‌ காப்பாற்ற ராமாநுசனைத்‌ தந்தருள வேண்டும்‌ என்று வரதனிடம்‌ சரணாகதி செய்தார்‌. ஸ்வாமி ஸ்ரீராமாநுசரின்‌ ஆசிரியரான யாதவப்ரகாசர்‌ மூலமாக வந்த பல ஆபத்துக்களிலிருந்தும்‌ வரதன்‌ காப்பாற்றியதை, குரு பரம்பரைகள்‌ விரிவாக விளக்குகின்றன.  ராமாநுசரிடம்‌ வரதனுக்குத்‌ தாயின்‌ பரிவுண்டு என்பதை நாம்‌ பல சந்தர்ப்பங்களில்‌ காணலாம்.  ஸ்வாமி ஸ்ரீதேசிகன்‌ யதிராஜ ஸப்ததியிலும்‌ இச்சரித்ரங்களைக்‌, கல்லும்‌ கரையும்‌ வண்ணம் சாதித்துள்ளதை ரஸிகர்கள்‌ கட்டாயம்‌ அநுபவிக்க வேண்டும்‌.

கச்சதனில்‌ கண்கொடுக்கும்‌ பெருமாள்‌

    மஹாபாபியான சோழராஜாவினால்‌ கண்ணிழந்த கூரத்தாழ்வான்‌, தன்னாசார்யர்‌ ஸ்ரீபாஷ்யகாரர்‌ நியமனத்தால்‌ வரதனை வேண்டி திவ்யமான கண்பார்வை பெற்றார்‌ என்பது வரலாறு கச்சிதனில்‌ கண்கொடுக்கும்‌ பெருமாள்‌ என்று ஸ்ரீஸ்வாமியும்‌ இதனை சாதிக்கின்றார்.  திருக்கச்சிநம்பிகள்‌ மூலம்‌ ஆறுவார்த்தைகள்‌ அருளி ஸ்ரீவஷ்ணவ ஸித்தாந்தத்தை நன்கு நிலைநிறுத்தியவன்‌ வரதன்‌.

உய்யும்‌ ஆறு

  1. ஸ்ரீமானான நாமே பரதத்வம்‌.
  2. இத்தரிசனம்‌ (ஸம்ப்ரதாயம்‌) ஜீவ, பரமாத்ம பேதமே.
  3. ப்ரபத்தியே என்னையடையும்‌ உபாயம்‌. 
  4. அந்திம ஸ்ம்ருதி அவச்யமில்லை.
  5. தேஹாவசானத்தில்‌ (இச்சரீரத்தின்‌ முடிவில்) மோக்ஷம்‌.
  6. பெரியநம்பிகளை ஆச்ரயிப்பது.

இதனை ஸ்ரீமணவாளமாமுனிகள்,‌ தானருளிய ஸ்தோத்ரத்தில்‌ குறிப்பிடுகிறார் : 

ஸ்ரீகாஞ்சீ பூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபி பாஷிணே |

அதீத அர்ச்சா வ்யவஸ்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம்‌ || 

என்றுஸ்வாமி ஸ்ரீராமாநுசருக்குப்‌ பின்பு நடாதூரம்மாள்‌, சுதர்ஸன சூரி, அப்புள்ளார்‌ என்று பல மகான்கள்‌ வரதன்‌ திருவடியில்‌ அவரதரித்துள்ளார்கள்‌. அதில்‌ நம்‌ ஸ்ரீஸ்வாமி தேசிகன்,  வளர்த்ததனால்‌ பயன்பற்றேன்‌ வருகவென்று“,  வரதனால்‌ அபிமானிக்கப் பெற்ற கிளியாக,  வாரணவெற்பின் ‌மழைமுகில்போல்‌ நின்ற மாயவனையன்றி தேவுமற்றொன்றறியாதவராய்த்‌ திகழ்ந்தார்.. ஸ்வாமி ஸ்ரீதேசிகன்‌ திவ்யசூக்திகளின்றி நாம்‌ வரதனை அநுபவித்தால்‌ அது அவன்தன்‌ திருவுள்ளத்திற்கு உகப்பானதாகவிருக்காது. அனேக திவ்யப்ரபந்தங்களாலும்,  ஸ்தோத்ரங்களாலும்‌ தேசிகன், தேவாதிதேவனை உள்ளம்‌ உருகி அநுபவிக்கின்றார்.  எந்தத்‌ திவ்யதேசத்திற்குச்‌ சென்றாலும்‌ வரதன்‌ நினைவின்றி ஸ்வாமிக்கு வேறில்லை.  ஏன்…..  அத்திவ்யதேசங்களில்‌ ஸ்ரீஸ்வாமிக்கு விருப்பமில்லையென்றே கூறலாம்‌. இதனை அத்புதமானதாரு பாசுரத்தால்‌ வர்ணிப்பதைப்‌ பார்க்கலாம்…..

பத்திமுதலாமவற்றில்‌ பதியெனக்குக்‌ கூடாமல்‌

எத்திசையுமுழன்றோடி இளைத்துவிழும்‌ காகம்போல்‌

முத்திதரும்‌ நகரேழில்‌ முக்கியமாம்‌ கச்சிதன்னில்‌

அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம்‌ நான்‌ புகுந்தேனே.

                                                 – அடைக்கலப்பத்து (1), ஸ்ரீஸ்வாமி தேசிகன்

பகவத்‌ ராமாநுஜர்‌ ஸ்ரீரங்கத்தில்‌ நம்பெருமாள்‌ ஸன்னிதியில்‌ சரணாகதி செய்தாலும்‌, அங்கும்,‌ அர்த்திகல்பக, ஆபத்ஸக, ப்ரணதார்த்திஹர என்றே அநுஸந்தித்தார்‌.  அவரின்‌ மறு அவதாரமான நம்‌ ஸ்வாமி, வரதன்‌ திருவடியில்‌ நேரிடையாக சரணாகதி செய்து, இதுவே மோக்ஷமெனும்‌ பெரும் பயன்‌ பெறும் வழியென்று காட்டினார்.  இதையடியொற்றியே

வாழி சரணாகதியெனும்‌ சார்வுடன்‌ மற்றொன்றை

அரணாகக்‌ கொள்ளாதார்‌ அன்பு 

என்கிறார்‌ ஸ்வாமி.

    எத்தனையோ திவ்யதேசங்கள்‌ ஸஞ்சாரம்‌ செய்திருந்தும், தேவப்பெருமாள்‌ திருவவதரித்த வரலாற்றை மட்டும், புராணத்தை அடியொற்றி ஒரு தனி ப்ரபந்தமாக ஸ்ரீதேசிகன்‌ அருளியிருப்பதிலிருந்தே, அவருக்கு வரதனிடமுள்ள பேரன்பு புலனாகின்றது.  வரதனின்‌ திருமேனி வர்ணனம், திருவாபரணங்கள் அழகு, காஞ்சியின்‌ பெருமை, வையம்‌ போற்றும்‌ வைகாசி உற்சவத்தில்‌ வரதன்‌ வாகனப் புறப்பாடு என்று தேசிக ஸ்ரீசூக்திகள்,‌ தேவாதிராஜனின்‌ திவ்யாம்ருதத்தை நமக்கு வாரி வழங்குகின்றன.

    இன்னும்‌ எத்தனையோ அற்புதங்களை வரதன்‌ நிகழ்த்தியுள்ளான். இன்றைக்கும்‌ இக்கலியில், தன்‌ பக்தர்களுக்கு அபீஷ்டங்களை வாரி வழங்குபவனாக, ஸ்ரீஸ்வாமி சாதித்தபடி,  வாரண வெற்பின்‌ மழை முகிலாகக், கேட்டதைக்‌ காட்டிலும்‌ அதிகமாகத்‌ தருகிறான்.

மாம்‌ மதீயம் ச நிகிலம்‌ சேதனா சேதனாத்மகம்‌ |

ஸ்வ கைங்கர்யோபகரணம்‌ வரத ஸ்வீகுரு ஸ்வயம்‌ ||

                                                                   – ந்யாச தசகம் (7), ஸ்ரீ வேதாந்த தேசிகர்

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

******************************** முற்றும்***********************************

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 24 – The wish of Vakulaabaranan

    Seeing the greatness of Thirumangai Azhwar, the king realized that he made a mistake and should not try to rule over him anymore. He also wished that the Bhakti-filled divine songs of Kaliyan should grace the earth and make it a better place for people to live. 

    “O Kailyan! May your service continue henceforth without any interruption, “ said the king and bowed before him. 

    Without the shackles of relationships and kingdom, Kailyan moved freely around Bharatham and visited every divyadesam where he sang the praise of the presiding deity of that place. He wished to take some rest at the lotus feet of Varadan and followed the verse of Nammazhwar – “Thuyar aru sudaradi thozhuthu ezhu en manane.”

    Soon, Kaliyan wished to consecrate the idol of Nammazhwar in Kanchi and he began preparing for the same. He instructed sculptors to cast the Nammazhwar idol in a padmasana pose with his left-hand on his thighs and right-hand displaying the upadesa mudra. When the idol was ready, Parakalan (Kaliyan) went to pray to Nammazhwar and he was shocked to see that the upadesa mudra was in the wrong hands! Instead of the right-hand, the upadesa mudra was in the left-hand while the right-hand was folded and kept near his heart. 

   Kaliyan was confused because the hand that does upadesam is pointing to the heart. Why is Azhwar pointing his hand to his heart, wondered Kaliyan.  ‘Did something wrong happen? Was any sastram related to sculpture or agamas violated?; thought Kaliyan. 

    Feeling  bad and confused, Mangai Mannan fasted the entire day and was meditating on Azhwar all through the day and night. He kept chanting Azhwar’s names, “Vakulaabarana! Sadagopa! Kaarimara!”

    Saying these names, Azhwar had dozed off without his knowledge and in his dreams, he experienced a unique feeling as Sadagopan, the author of Tamil vedas, came in Kaliyan’s dreams. 

   “O MangayarkOne! why are you confused?” asked Nammazhwar with a smile. 

   “O Vakulaabarana!  The One who sang a thousand verses!  The writer of Dravida Vedam! I’m confused because I’m unable to sculpt your body correctly.” – Kaliyan.

   “O Kaliyan! What is correct?  The image of myself according to what’s in your mind or mine?”  Unable to understand this question, Kaliyan stood bewildered.

   Sadagopan went on. “You wanted an idol where I give upadesam to you. But I wanted an idol that depicts the verse – ‘Thuyar aru sudaradi thozhuthu ezhu en manane’. Do you understand now?”  Kaliyan gentle nodded his head and the whole episode dawned on him now. 

   “Let this consecration happen according to my wish then!” said Nammazhwar and disappeared from Kaliyan’s dream.

   Kaliyan felt bad because he did not understand what was in Nammazhwar’s mind despite singing six prabandhams for Nammazhwar’s four works. Yes1 Nammazhwar wrote four works – Thiruviruttam, Thiruvaasiriyam, Thiruvaaymozhi, and Thiruvandaadhi that are the tamil versions of Rig, Yajur, Sama, and Atharvana vedas respectively. Kaliyan wrote six works explaining the same and they are Periya thirumozhi, Thirukurunthaandagam, Thirunedunthaandagam, Siriya Thirumadal, Periya Thirumadal, and Thiruvezhukkutrirukkai. 

The first verse of Thiruvaaymozhi goes like this,

   “Uyarvara uyar nalam udaiyavan evan avan

    Mayarvara madhi nalamarulinan evan avan

   Ayarvaru amarargal adhipadhi evan avan

    Thuyar aru sudaradi thozhuthu ezhu en manane

  •                                                                      Thiruvaaymozhi (1-1-1)

    The last lines of this verse seem like Azhwar is pointing to his own heart and saying to it. When you put together this line, as well as, the words told by Nammazhwar to Kaliyan in his dream, it is clear that Nammazhwar’s first 100 pasurams are about Varadan. 

   Azhwar knew that there is no other refuge except Varadan’s feet and this is why he kept his right-hand in his heart to tell the world what he meant in the first 100 pasurams. This is also why Kaliyan’s idol had upadesa mudra in the left-hand.

    After understanding this, Kaliyan had no more confusion and he immediately consecrated the idol according to Nammazhwar’s wish. This is the same idol that continues to bless us in Kanchi even today.

Acharyas and Arulaalan

    Alavandhar, who followed in the footsteps of his grandfather Nathamunigal, surrender at the feet of Varadan and asked Him to appoint Ramanuja as the next acharya of this great Sathsampradayam. 

    Our guru paramparai clearly describes the way Varadan protected Ramanuja from the many troubles that came through his guru, Yadavaprakashar.  From many incidents, we can also infer that Varadan had a motherly affection for Ramanujar.   Swami Vedanta Desikan describes all these incident in his work called Yathiraja Saptathi. All of you should read this work to truly experience the way swami vedanta Desikan has described these incidents.

The Lord who Grants Eyes

    Koorathazhwan lost his eyesight due to the atrocities of the then Chola king. Later, under the instructions of his acharya Ramanuja, he got a divine sight of his acharya, Perumal and Thayar.  This is why Varadan is known to grant eyesight for all those who worship Him.

Exalted six Principles

    Varadan explained the six principles of Vishishtadvaitam to Ramanuja and thorugh him to the world.  These words were said by Varadan to Thirukachchinambigal who in turn, passed it on to Ramanujar. The six principles are:

  • Sriman Narayana is the Para thathvam
  • This sampradayam differentiates between Jeevatma and Paramatma.
  • Prapatti is the only way to reach Me
  • There is no need to think of Me in your last breath (Anthima smrithi)
  • Moksham is guaranteed at the end of this birth
  • Take Periya Nambi as your Acharya.

These words have been explained by Manavala Maamunigal in this stotram.

   ShriKanchi poornamishrEna preethya sarvaapi bhaashinE |

   Atheetha archaya vyavasthaya hasthyathreeshaya mangalam ||

After Ramanujar, many great Acharyas such as Nadadur Ammal, Sudarasana suri and Appullar were born at the feet of Varadan.  Out of them, Swami Vedanta Desikan shone as an exemplary parrot who knew none other than Varadan.  This is why we can never experience Varadan without reading and understanding the works of Swami desikan because in all his works, Swami Desikan portrays Varadan and his divine qualities in the most lucide and realistic way possible. 

    Though Swami Desikan traveled to many places, his thoughts were only about Varadan. Why? We can even say that it’s because Swami Desikan had no interest to go elsewhere other than Kanchi, but was forced to, due to circumstances. This mindset of Desikan is best explained in this pasuram from Adaikala pathu.

    Pathi mudhalaam mavathil , pathi yenakku koodamal,

    Yethisayum uzhandru odi ilaithu vizhum kakam pol,

    Muthi tharum nagar ezhil mukkiyamaam kachi thannil,

    Athigiri arul aalarkku , adaikaalam naan pugundhene.

  •                                                                                        Adaikala pathu (1)

    Though Ramanujar did Saranagathi to namperumal in Srirangam, he said Arthikalpaka, Aapathsaka, and Pranathaarthihara. Swami Desikan, who is an incarnation of Ramanuja, did saranagathi directly at the feet of Varadan and showed to the world that this is the path for moksham. This is evident in this sloka by Swami Desikan.

   Vaazhi saranagathi ennum saar vudan matrondrai aranaaga kollathaar anbu.

   Though Swami Desikan traveled to many divya desams, he has written many granthas exclusively on Varadan and this goes to show the special love and affection he had for Varadan. He describes the beauty of Varadan’s body, the opulence of His jewels, the beauty of Kanchi, the splendor of Vaikasi Visakam festival and more through this many works.

   This is not the complete list of miracles done by Varadan. There are so much more. 

   Even today, in this Kaliyugam, Varadan continues to bestow unlimited boons to His devotees.  As Swami Desikan rightly said, He is the cool shade that can protect us from blistering heat and can give us all that we want and more.

    Maam matheeyam cha nikilam chEtana chEtanaathmakam |

    Sva kainkaryOpakaranam varada sveeguru svayam ||

  •                                                Nyasa Dasakam (7) written by Swami Vedanta Desikan

******************************** THE END***********************************

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book|வரம் தரும் மரம்|Varam Tharum Maram – 23|கனவில் வந்த கருணாகரன் (நதியில் கிடைத்த நிதி)|The Compassionate One who came in Kaliyan’s dreams|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 23கனவில் வந்த கருணாகரன் (நதியில் கிடைத்த நிதி)

     பல நாட்களாகப் பட்டினி இருந்த களைப்புடன் மெதுவாகக் கண்களை மூடினார் ஆலிநாடன்.  இமையோர் தலைவனை உள்ளத்தில் த்யானம் செய்துகொண்டே அவரின் இமைகள் மெதுவாக மூடின.

    பரம்பொருளை எளிதில் அறிய முடியாது என்கிறது வேதம்.  இதனை நாமறிய ஒரு அழகிய உதாரணத்தையும் உரைக்கிறது.

    புதையலை விரும்பாத மனிதன் உலகினில் உண்டா?  பெரும்புதையலுக்கு ஆசைப்பட்டு எல்லோரும் பூமியில் புதையுண்டு போகின்றனர்.  பல ஆண்டுகளாக நாம் வசிக்கும் வீட்டிலேயே புதையல் மறைந்திருக்கிறது என்றால் எவராவது நம்பிக்கையுடன் ஏற்பார்களா?

    “ஐயா! எத்தனையோ ஆண்டுகளாக இங்கு வாழ்கிறேன்.  எனக்குத் தெரியாமல் இங்கு தங்கப் புதையல் எப்படி இருக்க முடியும்?” எனக் கேட்பர்.

    “மந்திர வித்தை தெரிந்தவன்; அதற்கு மறுமாற்றம் தருவான் இதோ! என்னிடம் உள்ள மந்திர மையினை கண்களில் பூசிக்கொள்! இப்போது உற்றுப்பார்… உள்ளுக்குள் மறைந்துள்ள புதையல் கண்ணில் தெரிகிறதா! இல்லையா? என்பான்.

   மண்ணுக்குள் புதையல் மறைந்துள்ளது போன்று நம் உள்ளத்துள் மறைந்துறைகிறான் வரதன்.  அவனையறியாமல் நாம் பிறக்கிறோம், இறக்கிறோம் எட்டெழுத்து எனும் மகாமந்திரம் கொண்டு கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் உள்ளத்தே உறையும் திருமாலை உணரலாம்.

    மந்திர மையினால் புதையலை அறிவது போன்று எட்டெழுத்து மந்திர மகிமையால் வரதனை அடையலாம்.  கண்களை மூடிக்கொண்ட கலியன், கார்மேனி அருளாளனின் திருமேனியைத் தனது உட்கண்ணால் சேவித்துக் கொண்டிருந்தார்.

    அமைதியான அவரின் த்யானத்திற்கு இடையூறு செய்ய விரும்பாத துறிஞ்சல்கள் (வௌவால்கள்) தம் இறகுகளைக் கூட அசைக்காமல் மௌனம் காத்தன. 

    பிணியவிழ் தாமரை மொட்டலர்த்துவது போன்று அவரின் இதயத்தாமரை மெதுவாக இதழ் விரித்தது.  தாமரையினுள் உறங்கும் கருவண்டு போன்று கரியமாணிகத்தைத் தன் இதயத்துள் கண்டார்.

    “வையமெலாம் மறைவிளங்க வாள், வேல் ஏந்திய மன்னவனே! ஏனிந்த மனக்கலக்கம்?” எனும் குரல் கம்பீரமாக ஒலித்தது.

   அடங்காத தன் கரணங்களை (புலன்களை) அடக்க முயன்று பிரமன் தவித்த போது, ஓர் அற்புத ஆகாசவாணி உரைத்ததே அஃதே போன்ற குரல் இன்று நெஞ்சத்துள்ளும் நியமித்தது!!

    “தொண்டை நாட்டின் பெருநதியான வேகவதியின் கரையினில் நிதி நிறைந்துள்ளது. நீர் அங்கு வாரும்!!” என ஒலித்த குரல் அடங்கியது.  மங்கை மன்னனின் இதயத்தாமரையும் இதழ் மூடியது.

   திடுக்கிட்டுக் கண் விழித்தார் திருமங்கையாழ்வர் தயாநிதியே! தேவதேவா!” எனத் தொழுதார்.

    “யாரங்கே!…..” அவரின் அதிகாரக் குரலில் பாழடைந்த மாளிகை பலமாகக் குலுங்கியது.

    மௌனத்தில் ஆழ்ந்திருந்த துறிஞ்சல்கள் துடிதுடித்துப் பறந்தன.

    வாசலில் காத்திருந்த சேவகர்கள் விரைந்து வந்தனர் கட்டுண்டு கிடந்தவர் கட்டளையிடுகின்றாரே!” எனத் திகைத்தனர்.

    “சேவகர்களே! விரைவாக என்னை காஞ்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் மன்னன் கேட்ட கப்பத்தினை அங்கு செலுத்துகிறேன்… ம்…. ஆகட்டும்… என அவரின் கட்டளை தொனியைக் கேட்ட காவலர்கள், கிடுகிடுத்துப் போனார்கள்.

    உடனடியாக மன்னனிடம் செய்தி தெரிவிக்கப்பட்டது.  ஆச்சர்யத்துடன், நடப்பதைக் காணும் ஆவலுடன் அவனும் உடன்வர சம்மதித்தான். வழியெங்கும் நிற்காமல் விரைந்து காஞ்சியை அடைந்தனர். 

    வரதனை திருவடி தொழுது ஆழ்வார், ஸ்ரீநிதி, ஸ்ரீநிதி என உள்குழைந்தார். நிதியைப் பொழியும் முகிலாக நீயிருக்க, நீசர்தம் வாசல் அடைவேனோ!” என உரத்த குரலில் உணர்ச்சியுடன் உரைத்த போது, அருகே நின்றிருந்த சோழ மன்னன் தலைகுனிந்தான்.

    அடுத்து வேகவதியின் கரைக்கு விரைந்தார் கலியன்.

    ஆர்ப்பரித்துப் பெருகும் சரஸ்வதி, அன்று அலைகளால் அமைதியாகத் திரண்டாள்.

    அருள்மாரியாம் கலியனின் காலடிபட்ட பாக்கியத்தை உணர்ந்து, அவளின் ப்ரவாகம் பொறுமையானது போலும்!!

    அழகான அன்னங்கள் ஆங்காங்கு நீந்திக் கொண்டிருந்தன.  நதியின் நடுவிலிருந்த மணல் திட்டுக்களில் நாரைக்குஞ்சுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

     நாணற்புதர்களின் வெண்பூக்கள் வேகவதியின் நுரையுடன் கலந்து மேலும் வெண்மையாகத் தண்ணீரில் மிதந்தன.

    கரைக்கு வந்த கலியன், வேகவதியின் வெள்ளத்தினை உற்றுப் பர்த்தார்.  அவர் கண்களின் கூர்மை இருகரைகளையும் தொட்டது.  அங்குலம் அங்குலமாகத் தனது விழிகளை அகல விரித்து உருட்டியவர், குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நிலைத்து நிறுத்தினார்.

    நதிக்கரையில் நிதி இருக்கும் இடத்தை கருணாநிதியான வரதன் கனவில் குறிப்பிட்டிருந்தானே!, அந்த இடத்தை நெருங்கியவர், அரசே! இங்கு தோண்டச் செய்யுங்கள்!!” என்றார்.

    அடையார்சீயமாம் ஆழ்வாரின் கட்டளைக்கு அரசனும் கீழ்படிந்தான்.

    தோண்டத்தோண்ட புதையல் வெளிவந்தது!!!! 

    தங்கம், வைரம், வைடூரியம் என அரசன் கப்பமாக எதிர்பார்த்ததைவிட, நதியின் வெள்ளத்தைக் காட்டிலும் மேலான நிதி தென்பட்டது.

    “அரசே! தங்களுக்குத் தேவையானதை அளித்து விட்டேன்.  இனிமேலாவது பாகவத கைங்கர்யத்துக்கு எனக்கு அனுமதி அளியுங்கள் என உரைத்த கலியன், அரசனின் உத்தரவுக்குக் காத்திராமல் அங்கிருந்து விலகினார்.

    “மங்கையர்கோனே! இவையனைத்தும் எனக்கா! செலுத்த வேண்டிய தொகையைவிட அதிகம் உள்ளதே!” என்றான் சோழன்.

   ஆம் மன்னா! என் நிதி ஸ்ரீநிதியாம் வரதன். இ னி இடையூரின்றி அவன் கைங்கர்யம் எனது வாழ்க்கையின் வைபவம் என்ற மங்கை மன்னன் அத்திகிரி நோக்கி நடந்தான்.

   ஆழ்வார் சென்ற திசை நோக்கி கைதொழுவது தவிர சோழனால் வேறென்ன செய்திட முடியும்?

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 23 – The Compassionate One who came in Kaliyan’s dreams

    Aalinadan closed his eyes due to fatigue and hunger.  He keep meditating on Imayor Thalaivan as he closed his eyes. 

    Vedas clearly say that it is not easy to understand Perumal.  At the same time, it also shows an easy way to reach Him. 

    Is there any man who doesn’t like treasure?  But this treasure is what pushed man deeper down an abyss. Will you believe if someone says that there is hidden treasure right beneath your house? What will you say?  undoubtedly, you will argue that you’ve been living here for a long time and there is no possibility for such a treasure to exist without your knowledge. maybe if the other person is an expert in magic, he can give you a convincing explanation. 

    Just like how treasure is buried deep inside the earth, varadan is buried deep inside our hearts.  Without understanding this, we are caught in the cycle of birth and death. If we chant the powerful eight-lettered mahamantram and close our eyes, we can see Him in our hearts.  In this sense, the eight-lettered mantram is the magic that will that will take us towards Varadan.  Like that, Kaliyan closed his eyes and meditated on the dark-hued form of Perumal.

    The birds understood his meditation and they maintained silence to ensure that even the flapping of their wings doesn’t disturb him in any way.  Just like how a lotus blossoms on seeing the sun, the lotus in Kaliyan’s heart also opened slowly.  Like a bee hovering inside the lotus, Kaliyan saw Perumal in his heart’s lotus.  He heard a thundering voice that asked Kaliyan the reason for his confusion.

    Remember the divine voice that ordered Brahma when he suffered due to his inability to control his sense?  Like that, this voice too thundered inside Kaliyan’s heart and gave him instructions.

    “The banks of Vegavathi river are filled with treasure. Come there immediately!” after saying this, the voice stopped and the lotus in Kaliyan”s heart closed. Immediately, Kaliyan opened his eyes and prayed to Perumal. 

   “Who is it?” thundered Kaliyan and his booming voice resonated through the empty temple.  Hearing these words, the birds fluttered and flew away in fear.  The soldiers who were waiting in the front, rushed in.  They were astonished to see that the man who was in chains was commandeering them now.

    “Soldiers, take me to Kanchi immediately.  I will pay my taxes there. Come on, do it soon,“ said Thirumangai Azhwar. 

    The soldiers worked furiously to remove his shackles and the news was immediately conveyed to the king.  Surprised by the turn of events, the king also wanted to come along.  They traveled to Kanchi without stopping anywhere on the way. 

    Azhwar prayed at Perumal’s feet and said in a loud voice, “Shrinidhi, Shrinidhi…when you’re there to shower wealth, why will go to the doors of lowly men!” Hearing this, the Chola king hung his head in shame.

    Soon, they reached the shores of vegavathi river. the usually fierce Saraswathi looked calm that day.  It seemed as if she calmed down due to her association with Thirumangai Azhwar’s feet.

    Beautiful swans were swimming around the banks while the young ones of cranes were taking shelter in the small sand islands in the middle of the river.  Wax flower fell along the banks and added whiteness and fragrance to the water. 

    When Kaliyan reached Vegavathi, he looked sharply at the waves and his eyes darted from one end of the shore to the other.  His eyes scanned every bit of water and it stopped at a particular point.  Varadan had explained the exact location of the treasure in his dream, so when Kaliyan found that stop, he turned to the king said, “O king, please ask your soldiers to dig here.”

    The king blindly followed Kaliyan’s orders and treasure became visible as the soldiers started digging.  Gold, diamonds, and precious gems oozed out of that place and it was way more than what the king wanted. In fact, the treasure was more than the waves itself! 

    “King! I have given you what is due. please allow me to continue my Bhagavatha Kainkaryam.”  Without waiting for the king’s response, Kaliyan left the place.

    “O MangayarkOn! Is this all for me?  There is way more than what you owe, “said the king. 

    “Yes, O King! My wealth is Srinidhi Varadan. From this point on, my only goal in life is to serve Him.”

    The king could not do or say anything and he simply prostrated in the direction in which Azhwar left.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 22|திருமங்கையாழ்வார்|Thirumangai Azhwar|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 22திருமங்கையாழ்வார்

    அதுவொரு பாழடைந்த கோவில். பலநாட்களாக இங்கு வழிபாடு நடைபெறவில்லையென்பது பார்க்கும் போதே தெரிகிறது.  ஆலயத்தின் மதிள்கள் சரிந்தும், கோபுரங்கள் சிதைந்தும், மேல்தளங்களில் பெரும் ஆலமரங்கள் வேர்விட்டும், பார்ப்பதற்கே ஒரு அச்சத்தை விளைவித்துக் கொண்டிருந்தது. மண்டபங்களின் உள்ளே வௌவால்கள் படபடத்துக் கொண்டிருந்தன.  வெளிச்சம் என்பது துளியும் கிடையாது.  சூரியதேவனின் கதிர்கள் இக்கோவிலை புறக்கணித்தனவோ! என எண்ணம் உண்டாகும்படியாகக் கும்மிருட்டு படர்ந்திருந்தது.  

    தரைப்பகுதி முழுதும் புழுதி படர்ந்து கொடிய பாம்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன.  மண்டபத்தின் உள்ளே ஒரு தூணில் ஆஜானுபாகுவான மனிதன் ஒருவன் பிணைக்கப்பட்டிருந்தான். அன்ன, ஆகாரம் இல்லாமல் பல நாட்களாகப் பட்டினி கிடக்கிறான் என்பது பார்க்கும் போதே புரிந்தது.  உடம்பில் அங்காங்கு காயங்களில் குருதி வழிந்து காய்ந்திருந்தது.  அதன்மீது ஈக்களும், புழுக்களும் மொய்த்தன.  மிகவும் சோர்ந்திருந்தாலும்  அடிபட்டிருந்தாலும் கூட, அம்மனிதனிடம் என்றும் குறையாத காம்பீர்யம் குடிகொண்டிருந்தது.  தூணில் பிணைக்கப்பட்டிருந்தாலும் கூட அவனருகே நெருங்குவதற்கு எதிரிகளுக்கு அச்சம் உண்டாகும்.

    உறுதியான உடல்வாகும், உச்சி முதல் உள்ளங்கால் வரை செழிப்பும், இந்த பயங்கரமான சூழ்நிலையில் கூட அச்சமடையாத அலட்சியமும் பார்ப்பவர்களுக்கு வியப்பினையளிக்கலாம்.  ஆனால் இதெல்லாம் தனக்கு சாதாரணம் எனும் எண்ணத்துடனே அவன் இருந்தது நன்கு தெரிந்தது.

    பெரும் போர்களில் பங்கு கொண்டு பல ஆயுதங்களை அனாயாசமாகக் கையாளும் திறமை பெற்ற அவனின் கைகளில் விலங்கிடப்பட்டுள்ளது இரக்கத்தை வரவழைக்கிறது.  அந்த அயர்ச்சியிலும் அம்மனிதனின் உதடுகள் மெதுவாக எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன.  உற்று கவனித்தால் உதடுகளின் ஒலி புரிகிறது.  வரதா! வரதா!”என அரற்றிக் கொண்டிருந்தான்.

    சிறிது நேரத்தில் காலடி ஓசைகள் கேட்க ஆரம்பித்தன.  ராஜாங்க சேவகர்கள் அம்மனிதனின் அருகில் நெருங்கினார்கள்.  “ஆலிநாடரே! ஆலிநாடரே!” என மெதுவாக அழைத்தனர்.  அதற்குள் அவர்களின் தலைவன் போன்றவன் உரத்த குரலில் பேசினான். 

    “சேவர்களே! ஏன் இந்த விபரீதம்?! ஆலிநாடனை பிணைத்து வைத்திருக்கிறீர்கள்!! முதலில் அவரை விடுவியுங்கள்..” என்றான்.   

     சேவகர்கள் விரைந்து கட்டவிழ்த்தனர்.  அம்மனிதனை நெருங்கிய தலைவன், பரகாலரே!  ஆலிநாடரே!”  என ஆதரவுடன் அழைத்தான்.  திருவாலி, திருநகரி என்னும் குறுநிலத்தின் மன்னனாகிய பரகாலன் எனும் அம்மனிதன், மெதுவாகக் கண்களை திறந்தார்.  எதிரிலிருப்பவர்களைக் கண்டதும் அவரது உதடுகளில் மெலிதான புன்னகை அரும்பியது.

    சேவகர்களின் தலைவனாகத் தோன்றியவன்,  தனது மேல்வஸ்திரத்தினால் பரகாலனின் மேனியை துடைத்து விட்டான்.  மிகவும் களைத்திருந்த அவரை மெதுவாக எழுப்பி அங்குள்ள தூணில் சற்று வசதியாக சாய்த்து அமர வைத்தான்.  பரகாலனிடமிருந்து நெடியதொரு சுவாசம் கிளர்ந்தது.

    “இதோ உணவருந்துங்கள் என கொண்டு வந்த உணவினை அளிக்க முற்பட்டான் ஒரு சேவகன்.  

    தனது இடது கையினால் மெதுவாக அவ்வுணவை மறுத்த கலியன், ஸ்ரீவைஷ்ணவர்கள் அல்லாதார் தருவதை ஏற்பதில்லைஎன்றார்.  

    “கலியனே! தங்களின்  இந்நிலை எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது.  எத்தனை போர்களில் அநாயாசமாக வெற்றி கொண்டு எதிரிகளுக்கு யமனைப் போன்று பயமளித்தவர் தாங்கள்!!  இன்று இப்படி பிணைக்கைதியாக உள்ளீர்களே!  எங்களை மன்னித்துவிடுங்கள்.. மங்கை மன்னரே!  நமது மாமன்னரின் கட்டளைப்படி தங்களை இங்கு சிறை வைத்துள்ளோம்.  தாங்களும் மன்னருக்குச் செலுத்தவேண்டிய திறையை (கப்பத்தை/வரியை) செலுத்திவிடக் கூடாதா?”

    ஆதங்கத்துடன் அவர் கேட்டதைக் கண்டு சற்றே நகைத்த ஆலிநாடன்;  அமைச்சரே…  தங்களின் அன்பிற்கு நன்றி.  மன்னருக்கு நான் என்றும் மதிப்பளிப்பவன்.  ஆனால் எனது மனைவியின் விருப்பத்தின்படி திருமால் தாசர்களுக்கு ததீயாராதனம் செய்ததால் திறை செலுத்த இயலவில்லை.  ஆனால் எப்படியும் எம்பெருமான் அருளால் மன்னர்க்கு உரிய கப்பம் செலுத்திவிடுவேன் உள்ளத்தில் உறுதி குன்றாமல் ஆலிநாடன் உரைத்ததைக் கண்ட அமைச்சர் வியந்தார்.

    “மங்கை மன்னனே! உமக்காக நான் மன்னரிடம் இரண்டொரு நாள் கால அவகாசம் கோரியுள்ளேன்.  ஆனால், அதற்குள்ளாகத் தங்களால் எப்படி பெரும் தொகையை சம்பாதிக்க இயலும்?  இவ்வளவு பிடிவாதத்துடன் இருக்கிறீரே?  ஆகாரம் உட்கொண்டும் நான்கு நாட்களாகிவிட்டது.  இனியும் என்ன வழி?”.

   “என்மீது பேரன்பு கொண்டு தாங்கள் சொல்வதற்கு நன்றி.   ஆனால் நான் சிறைப்பட்ட நாள் முதல், பாகவதர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததீயாராதனம் செய்ய முடியவில்லையே எனும் ஏக்கம்தான் உடலையும் மனத்தையும் ஒருசேர வருத்துகிறது அமைச்சரே… இந்த தேகத்தின்பால் கொண்ட அபிமானத்தை, என்றோ தொலைத்து விட்டேன்.  அஞ்சாநெஞ்சன் ஆலிநாடன் எனும் பெயரைவிட அடியார்க்கடியன் ஆலிநாடன் எனும் பெயரைத்தான் விரும்புகிறேன்.  அரசரிடம் எனது வணக்கத்தைத் தெரிவியுங்கள்.   இன்னும் இரண்டொரு நாட்களில் நிச்சயம் வரதன் வழிகாட்டுவான்.  என்னை இங்கு தனிமைச் சிறையில் வைத்திருந்தாலும் அரசரின் கப்பத்தைச் செலுத்தாமல் தப்பிப் போகமாட்டேன்“.  

    இனியும் பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போன்று மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டார் கலியன்.

    தன் கண்களாலேயே காவலர்களுக்கு சைகை காண்பித்த அமைச்சர், சத்தமின்றி அவர்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.

    கண்களை மூடியபடியே “வரதா!” என சாய்ந்த கலியன் தன்னையறியாமல் உறங்கினார்.  அவரது உறக்கத்தின் தொடக்கம் வரதன் வைபவத்தின் விளக்கம்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 22 – Thirumangai Azhwar

    That was an old temple and clearly, no one had come here for many years. The walls had curved in, the gopuram had chipped off in many places, and the roots of trees were growing on some parts of the temple. The temple was dark and it almost felt like even the sun had abandoned this temple. Bats were living inside the temple and it gave an eerie feeling overall to onlookers. 

    The floors were covered with dust and many kinds of poisonous snakes slithered over it. A man was tied to one of the pillars and it was clear that he had not eaten any food for days. He had cuts all over his body and there were traces of dried blood on them. Flies and worms were feasting on those wounds. Despite all this, there was a certain sense of confidence and majesty in that man. Though he was tied to the pillar, he still looked fierce and enemies hesitated to go near him.

    People who looked at him noticed his healthy body and his opulence from head to toe, and this created a sense of fear in them.  Also, he was composed and gave a feeling that all this was a part of everyday life!

    A closer look at this man showed that he had been to many battles and won many wars. Now, his hands were tied with scuffs and this brought a bit of pity towards him. Even during all this, his mouth gently opened and murmured the words, “Varada! Varada!”

    Soon, footsteps were heard and the king’s soldiers came near him. They gently called him, “Aalinadar!Aalinadar!” By then, the head of the soldiers came and he called out loudly, “Soldiers! What’s going on here? Why have you tied Aalinadar like this? Remove his bindings right away.”

   Hearing these words, the soldiers immediately removed all the bindings. The leader went and gently spoke to him. “Parakala! Aalinadar!”  Hearing these words, the man gently opened his eyes.  Seeing the sights around him, he smiled slightly.  The leader of the soldiers took a piece of cloth that he was wearing and gently wiped down the man’s body with it. Next, he lifted the man and made him sit on one of the pillars. One of the soldiers offered some food to him.

   The man pushed away the food with his left hand and said that he eats only the food prepared by Srivaishnavas. 

   “Kaliyan! Seeing you in this state worries me! You have won so many battles and have sent fear in the hearts of many men. But today, you are like a prisoner here. Please forgive us. We are forced to imprison you here according to the words of our king. Can you not the tax money that is due to the king, so you can be free?”

   Seeing the pang of sorrow and frustration, Kaliyan smiled and said, “o minister, thank you for your kindness. I always respect the king, but to fulfill my wife’s wish, I spent all my money to feed the many pilgrims who come to pray to Perumal. This is why I’m unable to pay the taxes.” The minister was astonished at the confidence in Kaliyan’s words. 

    “O mangai manna! I can ask for an additional few days from the king, but how can you earn and repay so much money in such a short time? Why are you so adamant? It is four days since you had any food. How long can you go on like this?”, asked the minister.

    “Thank you for your concern. But from the day of imprisonment, my only worry is that I’m unable to find SriVaishnavas, the Bhagavathas of Sriman Narayana. This is what is making my body and mind weak. I have no attachment to this body and I don’t care what happens to it. I wish to be called ‘Adiyaarku adiyan Aalinaadan’ instead of ‘Anjanenjan Aalinadan.’ please convey my respects to the king and I am confident that Varadan will show the right way in a couple of days. I will never escape without paying the king his tax dues.”

    After saying this, kaliyan closed his eyes again as if there is nothing more to say or hear. The minister signalled the soldiers to leave and he also left silently after that. As soon as everyone left, kailyan kept saying “Varada!” and without his knowledge, he fell asleep. The scenes that came in his mind are the continuation of Varadan’s Vaibhavam.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 21|ஆசார்யனே அனைத்துமாவான்‌|Acharyan is everything|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 21 – ஆசார்யனே அனைத்துமாவான்‌

     அதற்கு ப்ரம்மா தேவதைகளிடம்‌ கூறினார்‌,  நீங்கள்‌ உங்கள்‌ ஆசார்யரான தேவகுரு ப்ருஹஸ்பதியிடம்‌ அபசாரம்‌ செய்துள்ளீர்கள்‌.  குலகுருவை அவமதித்தவன்‌ எவனும்‌ நல்ல நிலையை அடையமாட்டான்‌.  உங்களின்‌ அலக்ஷ்யத்தால்‌ தேவகுரு ப்ருஹஸ்பதி தற்போது பூமியில்‌ பிறந்துள்ளார்‌. அவரையணுகி மீண்டும்‌ பதவியலமர்த்திப்‌ பூஜித்தால்‌ நல்ல நிலையடைவீர்கள்‌ என்றார். 

     இங்கு ப்ருஹஸ்பதி சாபமடைந்த வரலாற்றை கஜேந்த்ராழ்வான்‌ கதைக்கு முன்பாகக்‌ கூறிவிட்டு பின்னர்‌ இங்கு மீண்டும்‌ தொடங்கப்‌ பெறுகின்றது. 

     தேவர்களுக்கு வழிமுறையை உபதேசித்த ப்ரம்மதேவர்,‌ தானும் ‌பூலோகத்திற்கு வந்து சித்ரா பௌர்ணமியில்‌ வரதனை ஆராதித்து அவன் அனுக்ரஹத்தால்‌ ப்ருஹஸ்பதியின்‌ சாபத்தையும்‌ போக்கினார் இவ்விதம்‌ சாபம்‌ நீங்கிய ப்ருஹஸ்பதி,  வரதனின்‌ உத்தரவால்,‌ துவாபர யுகம்‌ முழுதும்‌ எம்பெருமானை இத்தலத்தில் ஆராதித்தார் குறிப்பாக வருடந்தோறும்‌ இன்றளவும் புரட்டாசி மாதம்‌ ச்ரவண நக்ஷத்ரத்தில்‌ ஸத்யவ்ரத க்ஷேத்ரத்தில்‌ இரவு முழுவதும்‌ ப்ருஹஸ்பதி வரதனை ஆராதிப்பதாகப்‌ புராணம்‌ கூறுகின்றது.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 21 – Acharyan is everything

     Brahma responded to Devas request and said, “You have wronged your guru Brihaspathi. A person who misbehaves with their family/clan guru will never prosper. Due to your acts, he is now born on earth. To gain back all that you have lost, go and pray to him.”

    This is a continuation of the story of Brihaspathi that was described before Gajendrazhwan story. 

    After showing the right way to Devas, brahma also came to earth on Chitra Pournami (full moon day of the Tamil month of Chitra which falls between mid-April to mid-May), prayed to varadan, and relieved Brihaspathi from his curse.  But Brihaspathi wanted to serve Perumal and with His permission, continued to pray to Varadan in Kanchipuram throughout Dwaparayugam. Specifically, our Puranas state that Brihaspathi prays all night to Varadan on Shravan star in the month of Purattasi (mid-Sept to mid-Oct) every year.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 20| துவாபரத்தில்‌ காத்த தூயவன்|The protector of Dwaparayugam|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 20 –  துவாபரத்தில்‌ காத்த தூயவன்

     த்ரேதா யுகம்‌ முடிந்து துவாபர யுகத்தில்‌ தேவலோகத்தில்‌ தேவர்களுக்கும்‌, அசுரர்களுக்கும்‌ போர் ஏற்பட்டது.  இதில்‌ தேவர்களுக்குப்‌ பெருந்தோல்‌வி. அவர்களின்‌ தலைநகரான அமராவதியையும்‌ அசுரர்கள்‌ கைப்பற்றினர். இதனால்‌ வருத்தமுற்ற தேவர்கள்,‌ படைப்புக்‌ கடவுளான ப்ரம்மதேவரிடம்‌ சென்று ப்ரார்த்தித்தனர்‌.  தாங்கள்‌ ஜயிக்கும்‌ வழியையும்‌ வேண்டினர்‌. 

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 20 – The protector of Dwaparayugam

     After Treta Yugam, a war broke out between Devas and Asuras in Devalokam.  At the end of this war, Devas lost badly and their capital Amaravathi was captured by the Asuras. Badly dejected, the Devas went to their creator Brahma and asked him to show a way to gain back their capital and pride.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 19| வேகத்திற்கு வந்தனம்‌|Ode to speed|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 19 – வேகத்திற்கு வந்தனம்‌

     ஒரு சமயம்‌ சாளக்ராம க்ஷேத்ரத்தில்‌, சக்ரதீர்த்தத்தில், எதிர்பாராதவிதமாக ஸ்நாநம்‌ செய்து தன்‌ பூர்வஜன்ம நினைவு வரப்‌ பெற்றார்‌.  பின்னர்‌ கோதாவரி நதிக்கரையில்‌ ம்ருகண்டூ முனிவரின்‌ அநுக்ரஹம்,‌ யானையான மஹாசாந்தருக்குக்‌ கிடைத்தது.

    ம்ருகண்டூ முனிவர்‌ காஞ்சீ க்ஷேத்ரத்தின்‌ பெருமையையும்‌, அனந்தசரஸ்‌,   வேகவதி நதியில்‌ நீராடி வரதனை ஆராதிக்கும்‌ வழியையும்‌ உபதேிசித்தார்‌. அதன்படி, தற்போது யானை சரீரத்துடன்‌ விளங்கும்‌ மஹாசந்தர், ‌காஞ்சியில்‌ வரதனை ஆராதித்தார்‌.  ஒருநாள்,‌ த்ரிகூட சிகரத்திலுள்ள தாமரைப்‌ பொய்கையில்‌ பகவதர்ச்சனைக்காகப்‌ புஷ்பங்கள்‌ பறிக்க இறங்கிய  பொழுது, பலம்‌ மிகுந்த முதலையால்‌ பிடிக்கப்பட்டார்‌.  தன்னைக்‌ காப்பாற்றாத தன்‌ உறவினர்கள்‌ எவரும்‌ நிலையானவர்கள்‌ அன்று என்றுணர்ந்து துக்கமடைந்தார். அந்தப்‌ புஷ்கரிணியிலேயே ஒரு தாமரை மலரில்‌ வரதனை த்யானித்து ஆராதித்தார் பலவாறு ஸ்தோத்ரங்கள்‌ செய்தார்.

    ஆச்ரித வத்ஸலனன்றோ வரதன்‌!!  ஆனையின்‌ துயரம்‌ தீர அரை குலையத்‌ தலைகுலைய ஓடிவந்து சக்ராயுதத்தை ப்ரயோகித்து முதலையைக்‌ கொன்று யானையைக்‌ காப்பாற்றினார்‌.  இதனை ஸ்வாமி ஸ்ரீதேசிகன்‌ வரதராஜ பஞ்சாஸத்திலும்‌, அஷ்டபுஜாஷ்டகத்திலும்‌ வர்ணிக்கும் அழகு நம்‌ வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

    மேலும்,‌ இன்றும்,‌ தேவப்‌பருமாள்‌ ப்ரம்மோத்ஸவம்‌ ஆறாம்‌ திருநாள்‌ மாலை புறப்பாட்டில்,‌ யானைமீது ஆரோகணித்து எழுந்தருளும்‌ அழகு அவச்யம்‌ சேவிக்க வேண்டியது.  அதில்‌ யானை வாகனத்திற்குக்‌ கால்கள்‌ இல்லாமலிருப்பது ஓர்‌ சிறப்பம்சம்‌(முதலையால்‌ இழுக்கப்பட்டுத்‌ தண்ணீரில்‌ கால்கள்‌ மூழ்கியுள்ளதைக்‌ காண்பிப்பதாக).  பரதத்வ நிர்ணயமாக ஏகாம்பரேச்வரர்‌ திருக்கோயில்‌ வாசலில்‌ ஏசலும்‌ நடைபெறுகிறது.

     இதையடியொற்றியே ஏனைய விஷ்ணுவாலயங்களிலும்‌ இவ்வழக்கம்‌ இன்றளவும்‌ பின்பற்றப்பட்டு வருகின்றது. 

    இந்த கஜேந்த்ர மோக்ஷ கதைகள் பல இடங்களில் பல விதங்களில் கேட்டிருப்பதினாலே இங்கு இதனை விவரித்து எழுதவில்லை. 

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 19  Ode to speed

    As he kept wandering through forests, he reached Salagram.  There, Mahasandhar (elephant) took a dip in chakratheertham and immediately, gained his past memory. Mahasandhar repented and wandered further.  Finally, he reached the banks of River Godavari and there, he got the blessings of Sage Mrikandu who told him about the greatness of kanchi. Further, he asked the elephant to immediately go and have a dip in Anantasaras tank and Vegavathi river, and pray to Varadan after that.

    Mahasandhar, now in the form of an elephant, followed the sage’s words. He went to Kanchi and prayed to Varadan there. Once, he saw many beautiful lotus flowers in a lake in Trikuta Hill. mahasandhar wanted to pluck a few flowers for Perumal, so he stepped into the lake.  As soon as he entered, a powerful crocodile caught his legs in its jaws. Mahasandhar felt helpless as he knew that none of his relatives were strong enough to save him from the crocodile’s clutches.  But he never gave up hope.  He thought of a lotus flower as Perumal and meditated on it and sang many stotras in praise of Perumal.

     Will Varadan allow His devotees to be in pain?  So, he swiftly came to the lake and killed the crocodile with His chakram.  Swami Desikan describes this swiftness of Perumal and his ever-helping quality in both Varadaraja Panchasat and Ashtabhujashtakam.  One has to read these works to experience Perumal’s speed and beauty as words alone are not enough to describe them.

    Even today, on the sixth day of Brahmostsavam,  Thevaperumal strides magnificently on an elephant to symbolize this event.  This captivating sight of Perumal is something you must experience at least once in your life. Interestingly, the elephant on which Perumal strides will not have legs to denote that its legs are submerged in water and is being pulled by the crocodile. 

    To prove that He is the parathathvam, a small ritual called Aesal happens in front of the Ekambareswarar temple.  Other Vishnu temples also follow this practice and it happens even today. 

    Since most of us have heard this Gajendra moksham story from many books and other sources, it is not being described in detail here.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 18|மனம்‌ மயங்கிய மஹாயோகி| The Mesmerized Sage|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 18 –  மனம்‌ மயங்கிய மஹாயோகி

     ஆனால்‌ இந்த்ரன்‌ தன்‌ முயற்சியைக்‌ கைவிடவில்லை.  ஒருவரைக்‌ கெடுப்பதில்‌தான்‌ அவனுக்கு எவ்வளவு ஊற்றம்!  நாம் எவ்வளவுதான்‌ நம்‌ புலன்களைக்‌ கட்டுப்படுத்தினாலும்,‌ வாய்ப்புக்‌ கிடைக்கும்‌ சமயங்களில்‌ அவைகள்‌ நம்மைக்‌ கெடுத்துவிடும்.  இதனை நம்‌ ஸ்ரீஸ்வாமி தேசிகன்‌ நன்கு விளக்குகிறார்‌.  கண்டு, ஸெளபரி முதலிய மகரிஷிகளும்‌ மனம்‌ மயங்கிய  வரலாற்றை அடிக்கடி நமக்கு எடுத்துரைக்கிறார்‌.  அம்மாதிரியே இங்கு நடந்தது.  தபோதனரைக்‌ கலக்க இந்த்ரன்‌ வேறொரு வழிமுறையைக்‌ கையாண்டான்‌.

     தன்னையொரு யானையாக மாற்றிக்கொண்டு அனேகம்‌ பெண் யானைகளுடன்‌ பலவிதமான கேளிக்கை விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு அவர்‌ எதிரே நடமாடினான்.  உண்மையில்‌ நாடகமாடினான்‌ என்றே சொல்ல வேண்டும் யானையின்‌ காம விளையாட்டுகளில்‌ மஹாசாந்த மகரிஷியும்‌ மனம் மயங்கினர்.  தானும்‌ யானையாக மாறி இவ்வின்பங்களை அனுபவிக்க வேண்டுமென நினைத்தார்‌. அவ்விதம்‌ நினைத்த உடனேயே தவம்‌ குலைய, இந்த்ரனின்‌ சூழ்ச்சியால்‌ யானையானார்‌.  தன்‌ தபோ மகிமையை மறந்தார்‌.  காட்டு விலங்காகத் திரிந்தார்‌.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                       

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 18 The Mesmerized Sage

    Indran never gave up in his efforts to distract Mahasandhar.  This goes to show the pleasure he gained from spoiling other’s efforts!

    In general, we may try to control our senses with a lot of difficulty, but they will always try to take over at the first opportunity.  This aspect is explained by Swami Desikan many times and in many places through the stories of great sages like Kandu and Sowpari. Like that, Mahasandhar also fell for Indran’s tactics.

    Indran turned himself into an elephant, surrounded himself with other female elephants, and frolicked around with them in front of the sage.  Mahasandhar got mesmerized by the lustful acts of these elephants and wanted to become one such elephant, so he could also enjoy these feelings.  Immediately, his penance ended and he became an elephant.  Mahasandhar forgot all about the power of his penance and roamed around in the forests like a wild animal.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5