Sri #APNSwami #Writes #Tweets | திருப்பாவை துளிகள் |Tweets on Thiruppavai

This is a compilation of all the tweets that were posted on Twitter during the month of Margazhi in Vilambi year ( Dec 2018 – Jan 2019).

16/12/2018
1. ஏரார்ந்த கண்ணி யசோதை…
கண்ணனைப் பெற்று அவனது இளவயது குறும்புகளை ரசிக்க முடியாத தேவகீ ஏமாந்த கண்ணியானாள்.
கண்ணனின் குறும்புகள் கண்டுவியந்த யசோதை ஏரார்ந்த கண்ணியானாள்.

17/12/2018
2. உய்யுமாறு…
இந்த விரதத்தால் நாங்கள் உய்யுமாறும், இந்த வையகம் உய்யுமாறும், எங்களை அடைந்ததால் அக்கண்ணன் உய்யுமாறும் உகந்திடுவோம்.

18/12/2018
3. நீங்காத செல்வம்…
காசு, பணம், வீடு, வாகனம், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் நீங்கும் செல்வம்
கண்ணன் ஒருவனே எங்களைவிட்டு நீங்காத செல்வம்.

19/12/2018
4. சார்ங்கம் உதைத்த சரமழை……
சத்ருக்கள் உதிர்த்த சரமழை உலகை நாசமாக்கியது.
சார்ங்கம் உதைத்த சரமழை உலகை வாழ்வித்தது.

20/12/18
5. மாயனை….
கறுத்த நிறமுடைய யமுனை கண்ணன் குளித்ததால் தூயபெரு நீர் யமுனையானது.

21/12/18
6. புள்ளும்…
வேதமனைத்திற்கும் வித்தான திருப்பாவையில் துயிலமர்ந்த வித்தினைப் பாடுகிறாள்.

22/12/18
7. கீசு கீசு…
கேசவனைப்பாட தேசமுடையாளை நேசமுடன் அழைக்கிறாள்.

23/12/18
8. கீழ்வானம்…
கண்ணன் பிறந்த ஆயர்பாடி கீழ்வானமாய் வெளுத்தது.
மேல்வானமான பரமபதம் கறுத்தது.

24/12/18
9. கற்று…
க்ருஷ்ணபக்தி தவிர்த்து ஏனைய அவதாரங்களில் பக்தியில்லாத குற்றமற்ற கோவலர்.

24/12/18.
10. நோற்று…
சுவர்கம் புக நோன்பு நோற்றவள் தேற்றமாக வந்து திறக்கிறாள்.

26/12/18
11. கனைத்திளம்…
பால்சோறு உண்பவர் இன்று பால் சேற்றில் நிற்கிறார்.

27/12/18
12. புள்ளின்…
புள்ளின், கிள்ளின், பிள்ளை, வெள்ளி, புள்ளும், குள்ள, பள்ளி, கள்ளம் – இதுவே ஆண்டாள் உள்ளம்.

28/12/18
13. உங்கள்…
வெண்பவல் தவத்தவர் – வன் பற்று அற்றவர்.

29/12/18
14. உங்கள்…
வெண்பல் தவத்தவர் – வன் பற்று அற்றவர்.

30/12/18
15. எல்லே…
இளங்கிளியின் பாடல் இதயத்தை வருடும்.

31/12/18
16. நாயகன்…
அசுரர் உள்புகா வண்ணம் தடுக்கும் நிலைக்கதவு.
பக்தர்களுக்கு பரிவுடன் உள்வாங்கித் திறக்கும் நேசமிக்க கதவு.

01/01/19
17. அம்பரம்…
அம்பரமாகிய எம்பெருமானிடம் நாம் பரத்தை சமர்ப்பித்தால் நீங்காத செல்வம் நிலைத்திடும்.

02/01/19
18. உந்து…
நந்தன் மருமகளே உந்தன் மணாளனை எந்தமக்குத்தந்தருள்.

03/01/19
19. குத்து…
மைத்தடங்கண்ணியின் மைவண்ண நறுங்குஞ்சியில் மனம் மயங்குகிறான் மாதவன்.

04/01/19
20. முப்பத்து…
கலியின் துயர் கெட
கலியே துயிலெழாய் என்கிறாள்.

05/01/19
21. ஏற்ற…
ஆற்றாது வந்து போற்றுகிறோம்
மாற்றாது அருள் புரிவாய்.

06/01/19
22. அங்கண்…
பாபத்தினால் சாபத்தில் இழிந்த நாங்கள் உன் பார்வையினால் அருள் பெற்றோமே.

07/01/19
23. மாரி…
சிங்கத்தின் சீற்றம் சிறுநரிகளின் ஓட்டம். மாறினது மனோபாவம். மரித்தது நம்துக்கம்.

08/01/19
24. அன்று…
அழகுத்தமிழில் அருமையாக அர்ச்சனை செய்கிறாள் ஆண்டாள்;
வேதமனைத்துக்கும் வித்தான திருப்பாவையில் போற்றி, போற்றி என்று.

09/01/12
25. ஒருத்தி மகன்…
ஒருத்திக்குப் பிறந்து, ஒருத்தியிடம் வளர்ந்தவனிடம், வருத்தம் தீர்த்து திருத்தக்க செல்வம் வேண்டுகிறாள்.

10/01/19
26. மாலே…
All in – வையமேழம் உண்டவனே.
இலையாய் – ஒப்பாரும் மிக்காரும் இலையாயவனே! என்கிறாள்.

11/01/19
27. கூடாரை…
கூடாரை வெல்பவன்,
கூடியவர்க்கு தோற்பவன்.

12/01/19
28. கறவைகள்…
ஹரியே யாதவனாய் பிறந்தும்,
நாங்கள் அவனை அறியாதவர்கள் என்கிறாள்.

13/01/19
29. சிற்றம்…
நம்முள் மாற்றங்கள் நிகழ, நம் காமங்களை மாற்ற வேண்டுகிறாள்.

14/01/19
30. வங்கம்…
எங்கும் திருவருள் பெற்று இன்புற செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமால் அருள் புரிகிறான்.

For more such interesting tweets, follow @apnswamy on Twitter.

Sri #APNSwami #Writes #Trending | APN ஸ்வாமியின் பஞ்ச🖐(punch👊)கம் ஸ்லோகம்

To Listen watch video – https://www.youtube.com/watch?v=qNKJOLMMDjk

Whatsapp Twitter ததா Facebook
Android iPad ததாSபரேl
மநோ வைகல்ய ஸித்யர்தம்
பாந்திலோகே மநீஷிணாம் || 1
அதாவது பட்ட மக்களே, இந்த whatsapp, twitter, facebook, android மற்றும் IPad இன்ன பிற பிற வஸ்த்துக்கள் அனைத்தும் மக்களுடைய மனதை சிதைக்கின்றன. உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் இந்த மாயத்தில் அமிழ்ந்து எல்லாவற்றையும் மறைக்கிறார்கள்.
Liking Sharing ததா taging
Comments Memes இதி விஸ்த்ருதம் |
காலத் யாகாய திஷ்டந்தி
லோகா: ஜாக்ரத ஜாக்ரத || 2
ஏ மக்களே! எப்பொழுதும் விழிப்புடன் இருங்கள். எப்பொழுதும் கவனமாக இருங்கள். ஏனென்றால், நீங்கள் ஒரு பதிவு செய்தீர்களானால், அதற்கு like எவ்வளவு வருகிறது? அதை எவ்வளவு பேர் Share செய்கிறார்கள்? அதை எத்தனைப் பேர் tag செய்கிறார்கள்? அதற்கு comments என்ன வந்திருக்கிறது? அதை தவிர, அதற்கு யாராவது Memes போடுகிறார்களா? இப்படியாக, காலத்தை நாம் கழித்துக்கொண்டு இருக்கிறோம். அடுத்தடுத்து அதனை பார்த்துக் கொண்டே நம்முடைய காலத்தை நாம் கழிக்கிறோம்.
வார்த்தா லாபம் முகாலோகம்
தத்வத் ஹஸ்தாக்ஷரம் மஹத்|
விஸ்ம்ருதா மந்த பாக்யாவை
emoti கலு பாஷணே || 3
ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக் கொள்வது, பேசிக்கொள்வது, முகத்தைப் பார்த்து பேசுவது, அழகாக கையில் எழுதுவது இவை அனைத்தையும் மந்த பாக்யம். பாக்யம் ஹீனர்களான நாம் மறந்துவிட்டோம். நமக்கு பேசுவது, எழுதுவது, நடப்பது, சொல்வது என அனைத்திற்கும் emoti language மட்டுமே உபயோகத்தில் உள்ளது. ஆஹோ! கஷ்டம்.
யேந forward க்ருதம் தேந
நகதாபி ஸது பட் யதே |
Readmore த்ருஷ்ட்வா ததாஸர்வே
ஆயாஸம் ப்ராப்நு வந்தி ஹி|| 4
நமக்கு ஒவ்வொரு செய்தியை forward செய்யும் அந்த மஹனீயர் ஒரு பொழுதும் அதைப் படிப்பதே இல்லை. தாங்கள் படிக்காமலேயே மற்றவர்களுக்கு செய்திகளை forward செய்கிறார்கள். அதிலும் மிகப் பெரிய செய்திகளில் Readmore, Readmore, Readmore என்று வரும்பொழுது ஐயோ! ஒரு ஆயாஸம் உண்டாகிறதே.. ஏற்கெனவே படிப்பதில் பிடித்தம் இல்லாத நமக்கு, இதை எப்படி படிக்கத் தோன்றும்?
Blood donation operation
accident ஏவ மாதிஹி|
புராண வார்த்தா forward ஜ்நா:
கலிகோலா ஹலே ஸ்திதா: || 5
அவசரம், மிக அவசரம் எல்லோருக்கும் பகிரவும். உடனடியாக இதற்கு பதில் சொல்லவும் என்பதாக, blood donation க்கு operation தேவைப் படுகிறது. இங்கு, அங்கு accident நடந்துவிட்டன. இதுபோல எத்தனையோ குழந்தைகள் தொலைந்தன. அந்த குழந்தைகளுக்கு கல்யாணம் கூட முடிந்திருக்கும். இப்படியாக புராண வார்த்தா forward ஜ்நா : புளித்துப்போன பழையதாகி போன 10 வருடங்களுக்கு முந்தைய செய்திகளை எல்லாம் forward செய்யும் பெரியோர்கள் இன்னுமும் இருக்கிறார்களே. அவர்கள் கலிபுருஷனுடைய அட்டகாசத்தை வலுக்கிறார்கள். ஆம், கலியின் கோலாகலத்தை அவர்கள் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.