Sri #APNSwami #Writes #Trending | The Kashmir Files – Part 1 | காஷ்மீர் குடியேற்றமும் காளிதாசனும் | Kashmir Immigration & Kalidasan

ஸ்ரீ:
காஷ்மீர் Files | The Kashmir Files
Sri #APNSwami #Writes #Trending

<<Scroll down to read the English Translation of the article>>

காஷ்மீர் குடியேற்றமும் காளிதாசனும் | Kashmir Immigration & Kalidasan

Traditional Trending – என்று நாட்டில் நிகழும் நிகழ்வுகளை, ஸ்ரீ APN சுவாமி அவ்வப்போது ஸம்ப்ரதாய விஷயங்களுடன் சுவைபட விளக்குவார். இது நிகழ் காலத்தில் பரபரபாயுள்ள விஷயத்தை நாம் நமது ஸம்ப்ரதாயக் கோணத்தில் எப்படி அணுவது? என்பதை அழகாகக் விளக்கும். குறிப்பாக Trending Treat என்று இளைஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் இதனைக் கொண்டாடுகின்றனர். Video,Audio ம்ற்றும் article என்று இது வரை நூற்றுக்கும் மேலான Traditional Trending விஷயங்கள் நமது சிந்தனைக்கும், ரசனைக்கும் விருந்தளிக்கின்றன.

மார்ச் 11 2022 வெள்ளியன்று வெளியான The Kashmir Files திரைப்படத்தை முன்னிட்டு இக்கட்டுரை Traditional Trending ஆக மலர்கிறது.
-SARAN SEVAK
12/3/22
💐💐💐💐💐💐💐💐💐

ஸ்ரீராமபிரான் ராவணன் வதம் செய்து விஜயராகவனாக, வெற்றி வீரனாக அயோத்திக்குப் புறப்படுகிறார். புஷ்பகவிமானம் ஆகாயத்தில் பறக்கிறது. ராமனின் அருகே ஜன்னலோரம் சீதையும் அமர்ந்திருந்து, இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்கிறாள். அழகிய மேகக்கூட்டங்கள் நடுவில், ஆகாய வெளியில், ஆருயிர் காதலன் அருகில் இருக்க, அனைத்து துன்பங்களும் தீர்ந்து ஆனந்தம் பொங்க சீதை மகிழ்ச்சியுடன் பயணம் செய்கிறாள்.

கடலின் மீது தான் கட்டிய பாலம், சமுத்ரராஜனுக்கு அபயம் அளித்த இடம், விபீஷணனுக்கு அடைக்கலம் அளித்தது என பல நிகழ்விடங்களையும் ராமன் ஆனந்தமாக காண்பித்துக் கொண்டிருக்கிறான்.

பல இடங்களைக் கடந்து பறக்கிறது விமானம். அப்பொழுது ஜனஸ்தானம் (பண்டிதர்களான ஸாத்வீகர்கள் வசிக்கும் இடம்) எனும் குடியிருப்பினை சீதைக்குக் காண்பிக்கிறான். இந்த இடம் இதற்கு முன்பு இருந்த நிலையும், இப்பொழுதுள்ள நிலைமையையும் காளிதாஸ மஹாகவி நன்கு வர்ணிக்கிறார்.

அதாவது இதற்கு முன்பு, இந்த அமைதியான இடத்தில் அரக்கர்கள் புகுந்து அட்டகாசம் செய்தனர். சாத்வீகர்களான பண்டிதர்கள் (மகரிஷிகள்) புகலிடம் தேடி வேறெங்கோ குடி பெயர்ந்தனர். வேதவொலி ஒலித்தும், ஓமப்புகைகள் சூழ்ந்து இருந்த ஆச்ரமங்களில் அரக்கர்களின் கூத்தும், கும்மாளமும், குடியும், மாமிசமும் தாண்டவமாடியது.

ஆனால் தர்மம் வெல்லும் அல்லவா! நரேந்த்ரனாகிய ராமபிரான் தர்மத்தை நிலைநிறுத்த அவதரித்தவன் அன்றோ. அரக்கர் கூட்டத்தை வேரோடு அழித்தான். மகரிஷிகளுக்கு (பண்டிட்களுக்கு) அபயம் அளித்தான்.

ஜனஸ்தானத்தில் அமைதி திரும்பியது. ராமராஜ்யத்தை விட்டு தன்னாட்சியதிகாரம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட அந்த இடம் ராமராஜ்யத்தின் ஆளுமைக்கு உட்பட்டதேயாகும் என பகிரங்கமாக உலகம் உணர்ந்தது. நரேந்திரனின் இந்த அதிரடியால் விபீஷணன் முதலிய நல்ல அரக்கர் தவிர்ந்து, பொல்லா அரக்கன் அனைவரும் அழிந்தனர்.

மனம் நிம்மதியடைந்த மஹரிஷிகள் மீண்டும் தங்களின் ஆச்ரமத்திற்குத் திரும்பினர். பல ஆண்டுகளுக்குப் பின்பு தங்களது குடியிருப்புகளை செப்பனிட ஆரம்பித்தனர். ஆம். அரக்கர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த அந்த குடியிருப்புகள் மீண்டும் பண்டிதர்கள் வசமாயின. பழைய பொலிவினை அடைந்தன. தர்மம் தழைத்தது. வேதமும், விழாவும் சிறந்தது.

இப்படி மகரிஷிகள்(பண்டிதர்கள்) திரும்பவும் குடியேறும் அக்காட்சியை ராமபிரான் சீதைக்குக் காட்டியதை காளிதாஸ மஹாகவி நமக்கு ஒரு திரைக்காட்சியாக விவரிக்கிறார்.

அமீ ஜநஸ்தாநம் அபோட விக்நம்
மத்வா ஸமாரப்த நவோடஜாநி |
அத்யாஸதே சீர ப்ருதோ யதாஸ்வம்
சிரோஜ்ஜிதாநி ஆச்ரம மண்டலாநி || ( ரகுவம்சம் – 13-22)

அன்புடன்
APN சுவாமி
12-March-2022
💐💐💐💐💐💐💐💐💐

Kashmir Immigration & Kalidas

Note :

Traditional Trending – Sri APN Swami writes Srivaishnava Tradition based articles on the current Trending topic. Seeing our tradition in everything is Sri APN Swami’s unique style and this is shown in his 100+ Traditional Trending Videos, Audios and articles.
This is an article based on the movie title The Kashmir Files released on March, 11 2022.
-SARAN Sevak

💐💐💐💐💐💐💐💐💐

Sri Rama was named as Vijayaraghavan after defeating Ravanan and started HIS journey towards Ayodha.  As the Pusphaka vimanam started to soar towards the skies, Sita was sitting on the window seat next to Ram enjoying the nature. With nature’s beauty for her eyes and her inner beauty’s strength sitting next to her, her joy had no leaps and bounds.

HE showed to her how they built the bridge over the sea, providing saranagathi to Samudra Rajan, providing refuge to Vibhishena and other places that HE walked across in search of her. As the vimanam was flying over various places, HE shows her the Janasthanam (where the Pundits used to reside). The place has been described very poetically by Mahakavi Kalidas in terms of before and after the asuras.

The place used to symbolise peace and serenity before the asuras took over and ransacked the whole place making it impossible for the janasthanam to live. This had forced the Pandits who were living in Janasthanam to seek refugee in distant far lands in fear of their lives. This place was filled with the sound of vedas, holy smoke arising from homams alas now it is a party place for the asuras with dance, alcohol and meats flying everywhere.

However, Dharma (righteousness) always triumphs at the end. Rama who is the Narendra (Lord amongst humans ) took his avatar in this earth to uphold the dharma, isn’t it? He decimated the asuras and protected the Maharishis (Pandits).

Janasthanam returned to its original state of tranquillity. It announced vehemently to the world that it was a grave error to consider itself as a separate leader and ignoring its leadership under Rama. It united back to Rama’s leadership. Narendra spared the good asuras like Vibhishana and rest all the asuras with evil intentions were destroyed forever by this action.

Maharishis were very pleased by this great work and started to return to their original homeland. It was a dream come true for them to return to their land and they mended their original household that got destroyed during these years by the asuras. The land was filled with the sound of vedas and festivities once again.

The return of Maharishis (Pandits) back to their own land as mentioned by Rama to Sita was narrated by Mahakavi Kalidas.

अमी जनस्थानमपोढविघ्नम्

मत्वा समारब्धनवोटजानि ।

अध्यासते चीरभृतो यथास्वम्

चिरोज्झितान्याश्रममण्डलानि ॥                               रघुवंश (13 – 22)

amI nanasthAnam apoDha vighnam

matvA samArabdha nava uTajani  ।

adhyAste chIrabrutho yathAsvam

chirojjitAni Ashrama mandalAni   ॥                Raghuvamsa (13 – 22)

Note: English Translation by Sri APN Swami’s Shishyan Sri Krishna Varahan.

Sri #APNSwami #Writes #Trending |சட்டத் திருத்த மசோதா

“சட்டத் திருத்த மசோதா”- இன்று (21/01/19) ஶ்ரீஏபிஎன் சுவாமி அவர்கள் தாக்கல் செய்கிறார்.

                      சட்டத் திருத்த மசோதா

     அரசியல் சட்டங்கள் கொண்டுவருவதும், பின்னர் மறுபடியும் அதில் திருத்தம் செய்வதும், அதற்குரிய நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதையும் சகஜமாக இக்காலத்தில் காண்கிறோம்.   ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றாற்போன்று, அரசியலமைப்பு சட்டங்கள் மாறுதலுக்கு உட்படுகின்றன.  இத்தகைய மாறுதல்கள் தவிர்க்கவே முடியாதவை எனும் கருத்து, எங்கும் பரவலாக உள்ளது.

     கணவன்-மனைவி உறவு, முறையற்ற உறவு, விவாகரத்து, இது முதலானவற்றில்,  நெறிமுறைப்படுத்துவதில் பெரும் தடங்கல்கள், தடுமாற்றங்கள் உண்டாகின்றன.   பெருமான்மையான சபை உறுப்பினர்களின் ஆதரவு அல்லது எதிர்ப்புகளினால், நிலையான தீர்மானம் செய்ய முடியாமல் ஆட்சியில் உள்ளவர்கள் தடுமாறுகின்றனர்.   ஆனால். நமது முன்னோர்கள், இவ்விஷயத்தில் தெளிந்த மனத்துடன், மதிநுட்பத்துடன் சட்டமியற்றி ஆட்சிபுரிந்து வந்துள்ளனர்.   பின்புள்ளோர் தடுமாற்றமில்லாமல் அவ்வழி நடக்க வழிகோலுகின்றனர்.

மாமன்னன் துஷ்யந்தனின் கதையினில் ஒரு நிகழ்வைக் காணலாம்.

      அவனது ராஜ்யத்தில் ஒரு பணக்காரன் இறந்துவிட்டான்.   அவனுக்கோ, வாரிசு இல்லை.   “இனி இந்தப் பெரும் சொத்து யாருக்கு உரிமையானது?” எனும் கேள்வி உண்டானது.   அப்போது துஷ்யந்த மஹாராஜா ஒரு சட்டமியற்றினார்.

     “என் ராஜ்யத்தில், யார் யார் உறவுகள் இல்லாமல் உள்ளனரோ!, அவர்களுக்கு மன்னனாகிய நானே உறவினன் – அதாவது வாரிசு இல்லாதவர்களின் சொத்து, அரசாங்கத்திற்குச் சொந்தமானது.   அவர்கள் சொத்தை அரசுடைமையாக்குவது என்பதே இதன் பொருள்.

     இவ்விதம் வாரிசு இல்லாதவர்களின், அசையும், அசையா சொத்துக்கள், பணம் முதலியவை நாட்டுடைமையாக்கப்படும்போது, மக்கள் இருவகையில் பயனடைகின்றனர்.   ஒன்று அந்த பொருட்களின் உபயோகம், மற்றொன்று வரிச்சுமை நீங்குவது.

     சரி!   அதை விடுவோம்.   விஷயத்திற்கு வருவோம்.   துஷ்யந்தன் போட்ட சட்டத்திலும் சில ஓட்டைகள் உண்டு.   இத்தீர்மானம் நிறைவேறினால், சட்டத்திலுள்ள ஓட்டைகளை சிலர் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வர். பின்னர் மறுபடியும் இதில் திருத்தம் கொண்டுவருவது, சில சமயம் இயலாததாகிவிடும்.   அதனால் துஷ்யந்த மஹாராஜா சட்டம் இயற்றும்போதே,  மதிநுட்பத்துடன், பின்னாளில் எவ்வித இடைஞ்சலும் ஏற்படாவண்ணம் சட்டம் இயற்றினான்.

     ஆம்!   உறவுகள் இல்லாதவர்களுக்கு, மன்னன், “நானே உறவு” என்றான் அல்லவா!   அதிலொரு அருமையான குறிப்பு (Point) வைத்திருந்தான்.  அதாவது, மக்களே!   எந்த உறவாக நானிருந்தால், எனக்கும், மற்றவர்களுக்கும் பாவம் நேரிடாதோ!   அந்த உறவாக நானிருப்பேன் என்கிறான்.

இந்த சட்டம் குறித்த துஷ்யந்தனின் விளக்கவுரையை சபையில் கேட்கலாம்.

     அதாவது ஒருவருக்குப் பிள்ளை இல்லையென்றால், அவரின் புத்திர ஸ்தானத்தில் மன்னன் இருக்கலாம்.   மற்றொருத்தருக்கு சகோதரன் அல்லது தந்தை இல்லையெனில் அந்த நிலையில் மன்னன் இருக்கலாம்.   ஆனால் ஒரு பெண்ணுக்குக் கணவன் இல்லையென்றால் – அதாவது அவள் கணவனால் கைவிடப்பட்டோ!  அல்லது கைம்பெண்ணாகவோ இருந்தால், அதே உறவாக மன்னன் இருப்பதாகச் சொன்னால், அது இருவருக்கும் (பெண்ணுக்கும், அரசனுக்கும்) பெரும் பாவமன்றோ!

     அத்தகைய பாபம் நேரிடாமல், அப்பெண்ணின் மகனாக, சகோதரனாக, தந்தையாக இருந்து காப்பாற்றுவது, அரசனுக்குப் பெருமைதானே!  இதைத்தான் துஷ்யந்தன் அரசாணைக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டான்.

     அதாவது, முறையற்ற உறவு முதலானவற்றால் ஏற்படும் பாபத்தை இவ்வுலகம் அறியவேண்டும், தனது ஆட்சியில் மக்களும் பாபங்கள் செய்யாதவர்களாகவும், பாபம் செய்ய பயப்படுபவர்களாகவும் இருக்க வேண்டுமென நினைத்து அதைச் செயல்படுத்திய மாமன்னன்.

    திருத்தமே தேவையில்லாத தீர்மானமான இதை, மஹாகவி காளிதாசன் வர்ணிக்கிறார்:

                யேந யேந வியுஜ்யந்தே ப்ரஜா: ஸ்நிக்தேந பந்துநா |

                ஸ ஸ பாபாத்ருதே தாஸாம் துஷ்யந்த இதி குஷ்யதாம் ||

     ஸ்ரீக்ருஷ்ணனின் கீதாசாஸ்த்ரத்திற்கு அத்புதமான வ்யாக்யானம் அமைத்த வேதாந்த தேசிகர், இதே பாணியில், பதினெட்டு அத்யாயங்களின் செழும்பொருளை, ஒரேயொரு ச்லோகத்தினால் அழகாக விளக்குகிறார்.

             ஸுதுஷ்கரேண சோசேத் ய: யேந யேந இஷ்ட ஹேதுநா |

             ஸ ஸ தஸ்யாஹம் ஏவேதி சரம ச்லோக ஸங்க்ரஹ ||

     “இவ்வுலகிலுள்ள மக்கள், நிலையற்ற பல பலன்களை வேண்டி அலைகின்றனர்.   அவைகளைப் பெற முடியாமல் மேன்மேலும் இன்னலுறுகின்றனர்.   குறிப்பாக, யாரிடம் சென்று கேட்பது? எப்படிக் கேட்பது என்பதும் தெரியாமல், திகைக்கின்றனர்.   இம்மை மற்றும் மறுமை எனும் அனைத்து பலன்களையும் அளிப்பவன் நானே!  எனவே, என்னைச் சரணடைபவன், அனைத்துத் துன்பங்கள் துயரங்களிலிருந்தும் விடுபடுகிறான். பதினெட்டு அத்யாயமுள்ள கீதையின் திரண்டபொருள் இதுவே என விளக்குகிறார்.

     அதாவது கண்ணனைச் சரணடைவதே நமது அனைத்துத் துக்கங்களினின்றும் விடுதலையளிக்கும் என்பதினை உணர்ந்து அவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டு மேலான சுகம் எய்தலாம்.

     இத்தகைய மேலான சட்டம் நம்மைத் திருத்துவதற்காகவே கண்ணனால் நிறைவேற்றப்பட்டிருக்கும்போது, இன்னமுமா நாம் திருந்தாமல் இருப்பது?

    மன்னன் துஷ்யந்தன் பாவம் ஏற்படாமல், படு ஜாக்கிரதையாக சட்டம் இயற்றினான். மாமாயன் கண்ணன், பாவங்களைப் போக்குகிறேன் எனும் சட்டத்தை ஏற்படுத்தினான்.  இவ்விரண்டுமே திருத்தங்கள் தேவைப்படாதது. ஆனால் நமது உள்ளத்தைத் திருத்தக் கூடியது.

அன்புடன்

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri #APNSwami.