Sri #APNSwami #Writes #Slokam| இந்து எழுச்சி பாடல்

இந்து நண்பனே உனக்கு மனதில் உறுதி இல்லையா!

எண்ணியெண்ணி பாரடா இன்னும் எதற்கு பயமடா

காலம், காலமாக நaம்மை கலக்கி வந்த கூட்டத்தை

கலங்கடிக்க வாய்புமுண்டு கனிந்தகாலம் இதுவென்று

போர்களத்தின் வாளின் வலிமை கொண்ட உனது விரல்களால்

தோற்கடிப்போம் தீமை தன்னை தோளை தட்டி எழுந்துவா!

இந்து தர்மம் என்றும் எங்கும் வெல்கவென்று முழங்கிடு

உன்தன் மதத்தின் மேன்மைக்கண்டு உள்ளம் உருகி செயல்படு

தீயசக்தி சிதறியோட தேசபக்தி கொண்ட நீ

விரலின் வலிமை காட்டிடு வீணர்களை விரட்டிடு

– APN Swami

7th April 2019

hindu.jpg

Sri #APNSwami #Writes #Trending | சரித்திரம் படைக்கும் சனாதன தர்மம் | நவீன கும்பகர்ணர்கள்

                       சரித்திரம் படைக்கும் சனாதன தர்மம்

     பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் “சனாதன தர்மத்தின் ரட்சணத்திற்காகவே தான் அவதரிக்கிறேன்” என்பதைத் தெளிவாக உரைக்கிறான்.   அந்த தர்மத்திற்கு வாட்டம் என்பது ஒருபோதும் ஏற்படாது.   அதை அழிக்க வேண்டும் என புறப்படுகிறவர்கள் தாங்களாகவே அழிந்து போவார்கள்.   இது விஷயத்தில் ஓராயிரம் உதாரணங்களை நம்மால் காண்பிக்க முடியும்.

     ராவணன் தம்பி கும்பகர்ணன் மிகவும் கொடியவன்.   சாத்விகர்களான தேவர்கள் இருக்கக் கூடாது எனத் தீர்மானித்து ப்ரம்மாவிடம் வரம் கேட்டான். அந்தோ! பரிதாபம்!! தேவர்கள் அழிய வேண்டும் எனக் கேட்பதற்குப் பதிலாக, தனக்கு நிரந்தர தூக்கத்தை வரமாகப் பெற்றான்!!  அது அவனுக்கு துக்கமானது.

     ஆம்! “நிர்தேவ: – தேவர்கள் அழிய வேண்டும் – என கூற விழைந்தவன், தடுமாற்றத்தால் “நித்ரேவ: என்றான்.

    இக்காலத்திலும் சில நவீன கும்பகர்ணர்கள் நாஸ்தீகர்களாய் , எழுதி கொடுத்துள்ளதை கூட படிக்க முடியாத திறன் அற்றவராக தடுமாறுவதை பார்க்கிறோம்.  இவையெல்லாம் எம்பெருமானின் லீலாவினோதமன்றோ!! இதுவே நம் சனாதன தர்மத்தின் மாபெரும் வெற்றியென்று சொல்லவும் வேண்டுமோ!

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri APN Swami.