ஜிதக்ரோதன் | Sri APN Swami’s Shishya Writes

Note: Sri APN Swami has been delivering Sankalpa Suryodayam Upanyasams every thu & fri at 3.30PM on FreeConferenceCall meeting id SriAPNSwami. The upanyasam is also available in his YouTube Channel for Members. JOIN as a member of Sri APN Swami’s YouTube Channel and enjoy *Member only videos.* and catch up on the missed episodes of Sankalpa Suryodayam. Sankalpa Suryodayam Playlist – https://www.youtube.com/playlist?list=PLqY3vCkKAmZbvFBJ63S9kbRKpXeBi0ENk

ஒருவர் காமத்தை வென்றிட முடியும் ஆனால் க்ரோத்தை வெல்ல முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. ஏன் என்று பார்க்கலாம்.

மிக விவேகத்துடன் புலனடக்கம் பெற்ற மகான்கூட தனக்கு எற்படும் ஒரு சிறிய அவமதிப்பை தாங்கமுடியாமல், பொறுமையை இழந்து பிறறை தூஷணம் செய்வது நாம் அனைவரும் அறிந்ததே.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் அருளிய ஸங்கல்ப ஸூர்யோதயம் நாடகத்தில் 4 ஆவது அங்கத்தில், காமனை கூட வென்றவன் கோப வசப்படுவதை அழகாக விளக்குகிறார்.

ஓருவன் அனைத்து இந்திரியங்களை தன் கட்டுப்பாட்டுடன் வைத்து இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட அவமானம், குற்றச்சாட்டைப் பொறுத்துக்கொள்ளாமல், கோபம் கொள்வான். காமம், க்ரோதம் (அ) கோபம் என இரண்டும் பிணைந்திடுப்பவை. அதில் காமனை வென்றவன் கோபப்பட்டால் மறுபடியும் காமவசம் ஆகிவிடுவான் என்பது கருத்து.

காமத்தால் ஒருவன் பாபச்செயல் செய்தால் அதிலிருந்து அவன் மீள முடியும். கோபத்தால் ஒருவன் பாகவதாபசாரம் செய்ய வாய்ப்பு இருப்பத்னால், அந்த பாபத்திலிருந்து மீள இயலாது. அது அவனுடைய வாழ்க்கையின் சீர்மைக்குத் தடையாகும். ஆனால் கோபத்தை எப்படி அடக்குவது?

இராமாயணத்தில் மஹரிஷி வால்மீகி; பகவான் நாரதரிடம் கோபத்தை வென்றவனைப் பற்றி கூறுங்கள். “ஜிதக்ரோத: க:” என்கிறார். அதற்கு நாரதர் “இராமன்” என்று பதில் சொல்கிறார். இருப்பினும் பின்பொரு சமயம் இராமன் கோபவசப்பட்டு இராவணனைக் கொன்றான் என்கிறார். இது முன்பின்  முரணாக உள்ளதே?  என்றால் தேவையானபோது கோபம் வேண்டும். அதையே தேவையற்ற போது அடக்கத் தெரியவும் வேண்டும்.

மஹாபாரத்தில் கண்ணன் பாண்டவர் தூதுவனாக சென்றபோது, தனக்கு எற்பட்ட அவமானத்தை பொருட்படுத்தாமல், சிரித்தமுகமாக தொடர்ந்து பல அவமானங்களை சகித்துக்கொண்டு தூது சென்றான். பின்னர் பெரும் வெற்றியும் பெற்றான்.

ப்ருகு முனிவர்; கோபவசத்தால் பெருமாள் திருமார்பில் உதைத்தார். நாராயணனோ அதை பொருட்படுத்தாமல் மிகவும் சாந்தமாக ப்ருகு முனிவரின் தேவைகளை கேட்டு அவரை ஆராதித்தான்.

இதை ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் அபராதபரிஹாராதிகாரத்தில் விளக்குகிறார்.

“ஹே பக்தனே! உன்னை நிந்திக்கும் பாகவதரிடம் கோபம் கொள்ளாதே. என்னை உதைத்த ப்ருகுவை நான் பொறுதது போன்று நீயும் அதை பொறுத்துக்கொள்” எங்கிறான் பகவான்.

மற்றுமொறு ஐதிஹ்யத்தையும் காணலாம். ஸ்வாமி கூரத்தாழ்வானின் சீடர் பிள்ளை பிள்ளை ஆழ்வான் மிகவும் க்ரோதக்கார். ஒரு சமயம் க்ரஹண புண்ய காலத்தில் தானம் செய்வது உத்தமம் என்றதால், கூரத்தாழ்வான் தனது சீடரிடம் அவரது கோபத்தை தானமாக யாசித்தார். அதாவது “இனி எப்போதும், யாரிடமும் கோபப்படமாட்டேன்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டார்.

ஆசார்யர் நியமன்ம்படி, பிள்ளை பிள்ளை ஆழ்வான் தனது கோபத்தை தானமாக கொடுத்து, “இனி கோபம் கொள்ளுவதில்லை” என்று கூறினார். அனைவரும் மிக வியந்தனர். குருவுக்கு வாக்கு அளித்தபடி பிள்ளை பிள்ளை ஆழ்வான் மிக சாந்தமாக மாறிவிட்டார்.

ஒரு நாள், பிள்ளை பிள்ளை ஆழ்வான் காலக்ஷேபத்திருக்கு வரவில்லை. கவலை அடைந்த கூரத்தாழ்வான், பிள்ளை பிள்ளை ஆழ்வானை தேடி வந்தார். பிள்ளை பிள்ளை ஆழ்வானோ மிகவும் துயரத்துடன், கண்ணீர்மல்க தனது குருவிடம் அவரை க்ஷமிக்கும்படி விண்ணப்பித்தார். காரணம் கேட்டபொழுது, அவர் தனது கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை ஏசிவிட்டார். குருவின் வார்த்தையை மீறியதால் என்ன செய்வது எனத்தெரியாமல் காலக்ஷேபத்திருக்கு வருவதை நிறுத்திவிட்டார்.

தனது சீடரின் தெளிவை கண்டு ப்ரியத்தில், கூரத்தாழ்வான் அவரை ஆறுதல்படுத்தி, பிள்ளை பிள்ளை ஆழ்வானை மீண்டும் காலக்ஷேபத்தை தொடரும்படி நியமித்தார்.

ஆகவே எவன் ஒருவன் கோபத்தை ஜயித்து செயல்புரிகிறானோ, அவனே ஜிதக்ரோதன். இதற்கு கோபத்தை அடியோட விடவேண்டும் என்று பொருளில்லை ஆனால் இராமனைபோலே தேவையான சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும். தேவையற்றபோது அடக்கவேண்டும். பாகவதர் திறத்தில் (அ) பாகவதர்களிடத்தில் அடியோடு கோபப்படக்கூடாது.

இந்த விஷயம் 9 நவம்பர் 2023 அன்று ஸ்ரீ  APN ஸ்வாமி ஸங்கல்ப ஸூர்யோதயம் உபந்யாஸத்தில் அடியேன் அனுபவித்தது.

அடியேன்

முகுந்தகிரி ஸ்ரீ APN ஸ்வாமி காலக்ஷேப சிஷ்யன் & சரன் சேவக்

கிருஷ்ண வராஹன்

Geneva, Switzerland, 11-11-2023

One thought on “ஜிதக்ரோதன் | Sri APN Swami’s Shishya Writes

  1. Venkatesh Sarangan November 17, 2023 / 8:40 pm

    This Jitha Krodham seems like, we can do, but to achieve this, it is an Himalayan task. We should try this out even if we fail, we will improve slowly over a period of time

    Like

Leave a comment