Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |நானும் மன்னனே (Section 144) | I’m Also a King (Sec 144)

Please note that this article is available in Tamil (written by Sri APN Swami) and in English (translation done by his sishyas)

 

          நானும் மன்னனே [Section 144]

“ எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்னும் இந்த வார்த்தை மிகவும் ப்ரபலமானது.  இதன் உள்ளர்த்தம் புரியாமலேயே இன்றைய இளைய தலைமுறையினர் தடுமாறுவதுதான் வேதனையளிக்கிறது. பாரதீயர்களான நமக்கு நமது தேசத்தில் எல்லாவித சுதந்திரமும் உண்டு. எழுத்து, கருத்து, நடவடிக்கை என அனைத்திலும் சுதந்திரம் உண்டு. இந்நாட்டுக்குடிமகன் என்பதிலும் நமக்கு எண்ணிறந்த கர்வமும் உண்டு. ஆனாலும் நாம் தேசத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவர்கள்தானே. “நான் இந்நாட்டு மன்னன்” என்று வரம்புமீறின கார்யங்களைச் செய்துவிட்டு கொக்கரிக்க முடியுமா? மன்னவனேயானலும் சட்டத்தின்படியன்றோ நடக்க வேண்டும்.

நல்ல கார்யங்களைச் செய்துவரும் போது அதுவும் அக்கார்யம் சட்டத்தின் வழியே நடைபெறும்போது எவருக்கும் அதில் ஆட்சேபனை எழுவதில்லை. ஆனால் சுய புரிந்து கொள்ளல் இல்லாமல் சட்டத்தையும் மதிக்காமல் ஏறுமாறாக நடக்கும் போது கடுமையான தண்டனைகள் உண்டு.

உதாரணமாக தற்போதுள்ள 144 தடையுத்தரவைக் காணலாம். நமது தேசத்தின் எந்தமூலைக்கும், ஊருக்கும் சென்றுவர நமக்கு சுதந்திரம் உண்டு. நேற்றுவரை அப்படித்தான் சென்றுவந்துக் கொண்டிருந்தோம். யாரும் நம்மைத்தடுக்கவில்லை.  ஏன் இங்கு வந்தாய்? என்று கேட்கவுமில்லை.  ஆனால் ஏதோவொரு காரணத்தினால் இன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. “வீட்டை விட்டு வெளியேறுவது பாதுகாப்பாற்றது” எனும் காரணத்தால் ராஜாங்கத்தார் நடமாட்டத்தை தடைபடுத்தியுள்ளனர்.

 “நானும் மன்னன்தானே! எனக்கு சுதந்திரம் உண்டு” என்று ஏறுமாறாகப் பேசிக்கொண்டு வந்தால் “தேசத்ரோகச் செயலாகக்கருதப்பட்டு தண்டனை உண்டு” என்று அரசாங்ககம் அறிவித்துள்ளது.

இதிலிருந்து தெரிவது என்ன? என்றால் நமது சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.  எதுவும் வரையறைக்கு உட்பட்டது என்பதையும் தெளிவாக உணர்ந்து செயல்படவேண்டும்.

அமுதூட்டும் அன்னை போன்று நம்மீது கருணை கொண்டுள்ள வேதம் இக்கருத்தை விளக்குவதைக் கேளுங்கள்.

நாம் இப்போது இருக்கும் நிலைக்கு “பத்த ஜீவன்” என்பது பெயர்.  அதாவது சுதந்திரமாகச் செயல்பட முடியாதவர்களாக (144) இருக்கிறோம்.  ஒரு ஆசார்ய சம்பந்தம் பெற்று, பகவானின் திருவடிகளில் ஆத்மாவை சமர்ப்பித்தல் (அதாவது அழியும் உடலுக்குள் இருக்கும் அழியாத ஆத்மாவாகிய நம்மை காக்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டோம்) செய்தபிறகு ஏதோவொரு காலத்தில் இறக்கிறோம்.

இனி நமக்கு தடையுத்தரவு கிடையாது.  கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கிவிட்டது;  என்றவுடன் சிறகடித்துப் பறக்க நினைக்கிறோமே! அது போன்று வைகுண்டத்தில் எவ்வித நிர்பந்தமின்றி ஜீவன் திரியலாம்.  அப்போது ஜீவனை “ஸ்வராட் – அரசன்” என்கிறது வேதம்.  நான்தான் மன்னன், நான்தான் மன்னன் என ஜீவனும் கர்வப்படுகிறான்.  உண்மைதான்.  அவனது சுதந்திரத்திற்கு குறுக்கிடும், கால அளவும் கிடையவே கிடையாது. ஆனால் அதற்கு வரையறை ஒன்றுண்டு.  அதாவது பகவானின் திருவுள்ளத்தை அறிந்து, அவனுக்கு தான் தாஸன் (கட்டுப்பட்டவன்) என்பதையுணர்ந்து தனது சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்.

இந்த நெறிப்படி திகழும் ஜீவனுக்கு “நானே மன்னன்” என்னும் மனோபாவத்தில் துளியும் குறைவு உண்டாவதில்லை.  இதன் விரிவுரையை வேதம் வல்லார்களைக் கொண்டு விரித்துணர்க. நாமும் முக்தஜீவனாக வைகுண்டபதியில் மன்னனாக முடிசூடும் பாக்கியத்தை உணர்ந்து அறிந்து களித்திட அவனுடையவராக வேண்டும்.

அதே சமயம் தற்போதுள்ள பத்த (144 – தடையுத்தரவுள்ள பிறவியில்) நிலையை நன்கறிந்துக் கொண்டு, விதண்டாவாதம் செய்யாமல் அடங்கியிருக்க வேண்டும்.  இவ்விதம் சட்டத்தின் வழி நடக்கும் நமக்கு பரிபூரண பகவத் அனுபவமாகிற ஆனந்தம் என்றும் அழியாததாகக் கிடைக்கும் என்பதன்றோ வேத வாக்கு.

[ குறிப்பு – இங்கு எடுத்தாளப்பட்டுள்ள வேதவாக்யங்களை சாந்தோக்ய உபநிஷத்தில் காண்க]

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

03/04/2020

 

English

I’m Also a King (Section 144)

“Everyone is this nation’s king” is a popular Tamil saying, but today’s generation acts without understanding its true meaning and this is very heartbreaking!

As citizens of India, we have all kinds of freedom to write, give an opinion, and to act in a certain way. At the same time, we’re also proud of being the citizens of this great nation. Still, we’re bound by the laws of this nation, right? Can we do anything just because we’re the “kings of this nation?” Even kings have to follow the laws of the land.

When you do a good act that is according to the prevailing laws, nobody has a problem with it. That said, when we act selfishly without thinking and if those acts are against the laws, a punishment is imminent. 

Let’s take the example of the prevailing section 144. We have the right to travel anywhere and to any part of the country and that’s what we had been doing until a few days ago. Nobody stopped us or questioned our movements. But there is a restriction now because our government feels that “it is not safe for us to step out of the house”

Further, the government has said that those who argue that they won’t follow the restrictions because they’re the king of this nation, will be given the right punishment. 

From this, what we understand is that we have to use our freedom in the right way. Also, we have to understand that everything should be within acceptable limits and have to act accordingly.

Now, listen to how the Vedas, that have compassion towards us like our mother, explains this concept to us. 

Our current state is called “Baddha Jeevan” That is, we’re unable to act independently (144). When we get an association with an acharyan and offer our atma at His lotus feet (that is, we request Him to protect our indestructible atma that is present inside the destructible body), we are in a different phase of our life. 

After that, we have no restrictions as the government has removed it all for us. Similarly, we can move freely in SriVaikuntam and the Vedas call Jivatmas like that as “Svarat – King” and the Jeevan also feels proud that he is also a king. And it’s true too, as there are no impediments to his movement and he is not bound by time. However, there is one restriction. Every Jeevan has to understand the supremacy of Emperuman and the servitude that the Jeevan has with Him and all actions should be based on this servitude. 

By doing this, there is no reduction in the thought that the Jeevan is the “King.” This concept of vedas has been explained by many learned men. To truly enjoy this freedom of Muktha Jeevan and to get the privilege of being the king, we have to become His property.

For now, we have to understand the current state of our Baddhatma (section 144) and follow the restrictions that come with it without unnecessary arguments. Vedas clearly state that those who follow the laws are sure to get the bliss of His association. 

[Note: Refer Sandokya Upanishad for the concepts mentioned in this article].

-translation by Sri APN Swami Sishyas

Links to Articles in this Series

12.நானும் மன்னனே (Section 144) | I’m Also a King

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |நானும் மன்னனே (Section 144) | I’m Also a King (Sec 144)

11. யாரைத் தான் குற்றம் சொல்வது? | Whom to Blame

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |யாரைத் தான் குற்றம் சொல்வது? | Whom to Blame?

10.உடலால் தனித்திரு ; உள்ளத்தால் இணைந்திரு | Separated by Body, United by mind

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |உடலால் தனித்திரு ; உள்ளத்தால் இணைந்திரு | Separated by Body, United by Mind

9.Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

8. கட்டையான கடவுள் | The Lord who Became a Log

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா? | Can Negativity be Postive?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் – கூட்டத்தை வென்றவன் | Sangahjith – One who wins Over a crowd

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?

               வாக்கு இயந்திரத்தை முடக்க முடியுமா?

     எங்கு பார்த்தாலும் பரபரப்பு!!.. ஒரேமாதிரியான பேச்சுக்கள்…. பெரும் சலசலப்பு…. என்னதான் நடக்கிறது? என்பது தெரியாமலேயே மக்கள் பலவிதமாகப் பேச ஆரம்பித்தனர்.   விஷயத்தின் பொருள் நிர்மல சீதாராமன்.

     நாரத முனிவருக்கும், வால்மீகிக்கும் சந்திப்பு நிகழ்ந்தது.   வால்மீகி தனது மனதிலுள்ள கேள்விகளை நாரதரிடம் கேட்டார்.   அதாவது, ஒன்று, இரண்டு, மூன்று என்று குணங்களை வரிசைப்படுத்தி, இவைகள் தவிர ஏனைய சிறந்த குணங்களும் உடையவன் யார்? எனக் கேள்வி கேட்டார்.

     அதற்கு நாரதர் ஐயையோ?   இப்போதுள்ள சூழ்நிலையில், இவற்றில் ஒன்று இருப்பவனைக் காண்பதே அதிகம். அதில் அனைத்து பண்புகளும் உள்ளவனை எங்கு தேடுவது?   சரி…. நானோ த்ரிலோக ஸஞ்சாரி… என்னால் இயன்றவரை பதில் கூறுகிறேன் என்றார்.

     பின்னர்,  வேத வேதாந்தத்தின் விழுமிய பொருளான ராமனின் கல்யாண குணங்களை எடுத்துரைத்தார். அதாவது, பலமுறை ஆராய்ந்து பார்த்தும், குணங்கள், மக்களின் ஆதரவு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுதல் என பல வழிகளில் ஆராய்ந்து, பெரும்பான்மை பலத்துடன் ராமனையே தேர்ந்தெடுத்தார்.   சுருக்கமாக, ராமபிரான் கதையை வால்மீகி மகரிஷிக்கு எடுத்துரைத்தார்.

     அத்புதமான ராமபிரானின் சரித்திரத்தைக் கேட்டதும், வால்மீகி முனிவர் மெய்சிலிர்த்தார்.   தனது பிறவியின் பயனை உணர்ந்தார்.   ராமபிரானின் திருக்கல்யாண குணங்களில் திளைத்து,  தன்னை மறந்து தொழுதார். அதன்பின்னர், நாவில் குடிகொண்ட ஸரஸ்வதியாலும், பிரமனின் அருளாலும் ராமாயணத்தை எழுதத் தொடங்கினார்.

     சீதா ராமனின் கல்யாணம் முடிந்து, அயோத்தியில் அவர்கள் வசித்த காலத்தை அத்புதமாக வர்ணித்தார்.   பின்னர் அயோத்யா காண்டத்தில் ராம பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

     மாமன்னன் தசரதன் தனது மைந்தனுக்கு முடிசூட நினைத்தான்.   ஏற்கனவே நாட்டில் அரசியல் குழப்பங்கள் சரியில்லை.   இதென்ன குடியாட்சியா?   அல்லது முடியாட்சியா என மக்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கி விட்டனர்.   தசரதன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதே சரியில்லையென்று ஒருசில எதிர்ப்பாளர்களும் வழக்கு தொடுத்துள்ளனர்.   இந்நிலையில் தனது மகன் ராமபிரானுக்கு முடிசூடுவது இயலுமா? என தசரதன் தவியாகத் தவித்தான்.

    “சரி… மக்களைக் கொண்டு வாக்களிக்க வைக்கலாம்.   மக்கள் ராமபிரானை விரும்பினால் அவர்களே பெருவாரியான வாக்களிப்பில் ராமனைத் தேர்ந்தெடுக்கட்டும் என நினைத்து, தசரதன் சபையைக் கூட்டினான்.

     இந்நேர்முக வாக்கெடுப்பில் எவ்வித குளறுபடியும் நேரிடாது என நினைத்து (Exit poll) கருத்துக்கணிப்பு நடத்தினான். பூமியே அதிரும்படி அயோத்தி மக்கள் “ராமபிரானுக்கு ஜே” என்றனர்.   கருத்துக்கணிப்பு மகத்தான வெற்றி. ஒவ்வொருத்தரும் ராமனின் குணங்களைத் தொடர்ச்சியாகப் புகழ்ந்தனர். மன்னன் மட்டற்ற மகிழ்வெய்தினான்.

   ஆனாலும் ஒரு குறையுண்டு.   ஒட்டுமொத்தமாகக் கருத்துக்கணிப்புகள் வெற்றி பெறுவதில்லையே! அரசன் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தனது மகனுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு வெளியிட்டான் என்று ஊ(ட)கங்கள் வம்பளக்கலாம்!

    வசிஷ்டர் இங்கு ஒரு தந்திரம் செய்தார் “ராமன் விஷ்ணுவைப் போன்றவன்” எனும் குறியீட்டை (Hashtag) பரவச் செய்தார்.  அதாவது, வேதங்கள் விஷ்ணுவின் குணத்தைப் புகழ்கின்றன; அவனே ராமன் என்றால், விஷ்ணுவின் பெருமையை மறுக்க இயலாதாப்போன்றே, ராமனின் பெருமைக்கு வேறு சான்று தேவையில்லையே!!”

     எனவே, வேதம் எனும் இயந்திரத்தின் துணைகொண்டு – அதாவது, வேதத்தில் உள்ள வாக்யங்கள் யாருடைய பெருமை பேசுகின்றனவோ! – அவனே பரம்பொருள்;   தற்போது ராமபிரானாக அவதரித்துள்ளான்;   அவனே நமது தலைவன் என்பதை நிலைநிறுத்த வசிஷ்டர் முயன்றார்.

   பேத, அபேத வாக்யங்களில் முன்பின் முறைகேடுகள் நடக்கலாம். இதனால் வேதத்தை,  நம்பிக்கையான ஓட்டு இயந்திரமாகக் கருத முடியாது என்ற வீணர்களின் வாதத்தை முறியடித்து, சாத்விகர்கள் அனைவரும் வேதத்தின் வழியில் ராமனையே கொண்டாடினர்.

    இதற்குத் துணையாக வால்மீகியின் கேள்விகளும், ஆரண்யத்தில் மஹரிஷிகளின் ஸ்தோத்ரங்களும், தாரை, வாலி, விராதன், கபந்தன், மண்டோதரி, ராவணன் முதலானோர் வாக்கியங்களும் நிலை நின்றன.

     பரமாத்மாவின் பெருமை கூறும் வேதத்தை எவராலும் தடுக்க (Hack செய்ய) முடியாது என்பதை அனைவரும் நன்கு உணர்ந்தனர் வேதத்தின் தேர்ந்தெடுப்பில் எந்த குளறுபடிகளும் நடக்க வாய்ப்பேயில்லையன்றோ! அமலன், நிமலன், நின்மலன் என்றெல்லாம் வேதத்தால் கொண்டாடப்படும் நிர்மல சீதாராமன் புகழ் என்றுமே ஜகத்தில் நிலைத்துள்ளதே!

    எனவே வேதவாக்யங்களின் வாக்கெண்ணிக்கையின் அடிப்படையில் நிர்மல சீதாராமன் அயோத்திக்கு மட்டுமல்ல, அகில உலகிற்கும் அவனே காரணன் என்பதை உணரலாம். ஏனெனில் வேதத்தில் குளறுபடி நடக்கவும், குறை கூறவும் வாய்ப்புகளே இல்லையன்றோ!

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri APN Swami