Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

Please note that this article is available in both tamil (Written by Sri APN Swami) and in English (translated by his sishyas)

சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ஏழாவது அதிகாரம் முமுக்ஷூத்வாதிகாரம்.  மோக்ஷத்தை விரும்புபவன் எப்படி இருக்கவேண்டும் என்று உபதேசிக்கிறார் தேசிகன்.  தற்போது நாட்டின் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு “கூட்டம் தவிர்” அதாவது மக்கள் கூடுவதைத் தவிருங்கள் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.

சிலவிடங்களில் ஐவர் (ஐந்துபேர்) மட்டுமே கூடலாம் என்னும் விதிவிலக்கும் உண்டு.  தங்களுக்கு கூட்டம் சேருவதை விரும்பாதவர் எவரும் உண்டா?  ஆனால் கூட்டம் சேர்க்காதே.  கூட்டத்தில் சேராதே என்கிறார் தேசிகன்.  அதாவது ஸத்ஸங்கம் தவிர்த்து, அஸத்ஸங்கம் வேண்டாம் என்று பொருள்.

மோக்ஷமடைய விரும்புபவன், தனித்திருப்பான், பரமாத்மா விஷயத்தில் விழித்திருப்பான், தனது தேகமெனும் வீட்டிற்குள்ளேயுள்ள ஆத்மாவின் ஆத்மாவான பரமாத்மாவை அனுபவிப்பான்.

“விலகியிரு, விழித்திரு, வீட்டிலிரு”  எனும் தத்வம் இங்கு நன்கு புலனாகிறதே.  மேலும் ஐவருடன் கூடுவதும் அவனது ஆன்ம பலத்தை வளர்க்கும்.  அதாவது “அர்தபஞ்சகம்” எனும் தத்வத்தை அறிந்திடவேண்டும்.

“பரப்ரம்மத்தின் ஸ்வரூபம், ஜீவன் ஸ்வரூபம், (ப்ரம்மத்தையும், தன்னையும் பற்றிய தெளிவு) அந்த பகவானை அடையும் வழி, அதனால் உண்டாகும் நன்மை.  இது வரையில் இயந்திர கதியில் இயங்கிய நமக்கு அவன் சிந்தனை ஏற்படாத தடங்கல் என்ன?”  எனும் இவையே ஐந்து விஷயங்கள்.

இந்த ஐவருடன் (ஐந்து விஷய சிந்தனையுடன்) “சங்கஜித்” – கூட்டத்தைத் தவிருபவன், ஸம்ஸாரமென்னும் கொடிய வியாதியின் பிடியிலிருந்து சுலபமாக தன்னை விடுவித்துக்கொள்வான்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

26/03/2020

English

Sangajith – One Who Wins Over a Crowd

The seventh Chapter of SRIMAD RAHASYA TRIYA SAARAM is MUMUKSHU ADHIKARAM.

Swami Desikan gives a code of conduct for a person who is aspiring to reach MOKSHAM. With the entire country (INDIA) being under an extra-ordinary (LOCKDOWN) situation, the Government has requested and instructed people to avoid crowding – that is to assemble in a group.

In certain exceptional cases ,a maximum of 5 people can assemble. Is there anyone who will not like a crowd to assemble? Swami Desikan is very clear in saying that- do not join or create a crowd. He means that it is good to have SATSANGAM. Do not have a group of gossip mongers.

A person who wants to attain MOKSHAM would always like to stay alone. He is involved in thinking and dwelling in the qualities of PARAMATHMA. He is always awake to this reality. He engrosses himself in the ATHMA that is housed in his body, and the PARAMATHMA who is lives in his ATHMA as an ANTHARYAMI – the ever-pervading.

STAY ALONE, AWAKE and AT HOME” is the theme that is very clearly visible and emphasized. The Crowd of FIVE (ARTHPANCHAKAM) people is very important for his inner (ATHMA) growth.

We are lost in this fast paced life of ours, and these are the reasons that did not allow us to think about the benefits of ARTHAPANCHAKAM.

ONE who stays and dwells (in the Crowd of 5 people) – “SANGAJIT” – one who avoids Crowds can easily get away from this WORLD (SAMSARAM)

– Translation by Sri APN Swami Sishyas

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

Please note that this article has the Tamil version written by Sri APN Swami and its English translation by his shishyas.

உள்ளே வெளியே

ஒரே ஒருநாள் வீட்டிற்குள் அடங்கிக்கிடப்பதற்குள் அலுப்பு தட்ட ஆரம்பித்துவிட்டது. குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இருபத்திநான்கு மணிநேரமும் ஒரே அறையில் முடங்கிக்கிடப்பது மிக, மிகக்கடினம்.  சோதனையான இந்த கால கட்டத்திலிருந்து எம்பெருமான் நம் அனைவரையும் வெகுவிரைவில் விடுவித்திட ப்ரார்த்தனை செய்வோம். உலக மக்கள் அனைவருமே இடரின்றி தங்கள் அலுவல்களில் ஈடுபட ப்ரார்த்திப்போம்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வெளியே போக நமது உடலும், உள்ளமும் துடியாகத்துடிக்கிறது. ஸ்வாமி தேசிகன் வழியில் இதற்கொரு பரிகாரம் காணலாம். இது மனத்திற்கான மருந்து.

ஸங்கல்ப ஸூர்யோதயத்தின் ஆறாம் அங்கம் அற்புதமான பாரத வர்ஷ வர்ணனை. அரசிகருக்கு இதன் அர்த்தங்கள் ஒருபோதும் ருசிக்காது. ஆனால் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்திடுவர். விவேகன் (அதாவது ஆராய்ந்து பார்த்து அறிந்திடும் திறன் பெற்றவன்.) காம, க்ரோதத்திலேயும், பிறர் தூஷணைகளிலும் காலத்தை கழிக்காதவன் என்பவன் ஒரு அரசன். அவன் மனோரதத்தில் ஏறி ஸத் தர்க்கன் எனும் ஸாரதி வழி நடத்த பாரத தேசத்தில் தபோவனத்தை தேடி பயணம் மேற்கொள்கிறான்.

அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டுபவனல்ல இந்த தேரோட்டி. மேலும் எவராவது ஒரு கருத்தை சொன்னால் உடனே வெகுண்டு அவரை வசைபாடுவதையும் வழக்கத்தில் உடையவன் அல்லன். சொன்ன விஷயத்தின் தன்மைகளை நன்கு ஆராய்ந்து, அதில் ஒளிந்துள்ள சாஸ்த்ரார்த்தங்களை நுட்பமாக பாகுபடுத்தி அரசனுக்கு ஹிதோபதேசம் செய்பவன் . எனவேதான் குதர்க்கம்; அதாவது எதற்கெடுத்தாலும் கோணல் புத்தியாகப் பார்க்காமல், ஸத் தர்க்கம் – அதாவது ந்யாயமான ஆராய்ச்சியில் ஈடுபடுபவன் என்று பெயர் பெற்றான்.

இந்த ரசத்தை மேலும் உணர வேண்டுபவர்கள் ஸங்கல்ப ஸூர்யோதயத்தை குறைந்தது பத்து தடவையாவது படித்தால்தான் தன்னிலை தெரியும். இப்படி ஸத்தர்க்கனும் விவேகனும் சேர்ந்தால் தான் ஜீவன் நற்கதி  அடைய முடியும்.

இந்த அகண்டமான பாரதம் முழுதும் பலவிடங்களில் அவர்கள் திரிகின்றனர். ஆம், தவம் செய்வதற்கு (மனஅமைதிக்காக) நல்லதொரு இடத்தைத் தேடி அவர்கள் திரிகின்றனர். மனோரதத்தின் வேகத்தில் விவேகனும், ஸத்தர்க்கனும் அந்தந்த இடத்தின் தன்மைகளை ஆராய்கின்றனர். (இதன் ஆழ்பொருளை நன்கு சிந்தித்த பின்னர் மேலே படியுங்கள்) “பத்தி முதலாமவற்றில் பதி எனக்கு கூடாமல் “ என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

பதி” என்றால் இடம் (திருப்பதி) என்பது பொருள். தவம் செய்வதற்கு உரிய இடம் கிடைக்கவில்லையாம். ஏனென்றால் எல்லா இடங்களிலும் அசுத்தம் (pollution) ஏதாவதொருவகையில் பரவியுள்ளது. (இங்கு வர்ணிக்கும் திவ்யக்ஷேத்ரங்களை நூலில் காண்க). எனவே மன ஊக்கத்துடன் தவம் செய்து மன அமைதி பெற காசி, காஞ்சி, அயோத்தி என எதுவும் லாயக்கில்லை. என்ன செய்வது? நல்ல மலை, ஆழமான  நதி, அழகிய பூங்கா, அமைந்த இடம் ஒன்றுமே இல்லையா? எனும் ஏக்கம் விவேக மஹாராஜனுக்கு (வீண் விதண்டாவாதங்களில் காலம் கழிக்காமல் ஸத்விஷயங்களில் நோக்குடைய ) உண்டாகிறது.

ஸத்தர்க்கனால் (ஸாரதியால்) நன்கு சுற்றி காண்பிக்கப்பட்டு இறுதியில் ஓர் அற்புதமான இடத்தை தேர்வு செய்கிறான். இந்த இடம் குருக்ஷேத்ரம், நைமிஷம், புஷ்கரம் காட்டிலும் மிகவும் சிறந்தது.

அழகான தபோவனம். உயரமான மலை உண்டு வற்றாத ஜீவநதி அங்கு ஓடுகிறது. யாராலும் இதற்கு இடையூறு செய்யமுடியாது என்கிறான் விவேகன். (அதாவது தெளிந்த சிந்தைனையுடையவன்). அது சரி அந்த இடம் எங்குள்ளது? என்னும் ஆவல் உண்டாகிறதே ….

புனிதமான ஆசாரங்களே தபோவனம். ( கை, கால், அலம்பச்சொல்லியும், ஒருவர்க்கொருவர் தொட்டுக்கொள்ளாமல் இருப்பதுமே – இல்லத்தில் இருப்பதே தபோவனம்இல்லம் என்பதை தேகம் என்றும் அறியலாம். நல்ல விஷயங்களைத் தொடர்ந்து எண்ணுவதே பெரிய மலை. மலைபோன்ற வீண் எண்ணங்கள் சுமையாகாமல், நல் எண்ணங்களாகுகை. திருமாலின் திருவடியை அடையமுயலும் வேட்கையே வற்றாத ஜீவநதி கங்கை. அதில் ஆழ்ந்திருப்பதே தீர்த்தாபிஷேகம். பிறரை பரிகாசம் செய்தும், கர்வப்பட்டும், நாமறியாத அர்த்தங்களை பெரியோர்கள் அறிந்திருப்பது கண்டு பொறாமை கொண்டும் வேண்டாத விசாரங்களை செய்யாமல், வேதாந்த விசாரம் செய்வதே தவமாகும்.

அதாவது வெளியே போய் எதையும் தேட வேண்டாதே, நமக்குள்ளே நல்லதை (எம்பெருமானை) நினைப்பதே மேலாகும். இது அவனிடத்தில் ஏகாந்தமாக உள்ளதால் மற்றவர்களால்  இதை கலக்க (pollute)முடியாது.  “காம க்ரோதங்கள் அற்றவனுக்கு இல்லறம் கூட தபோவனம் தான்” என்ற கொள்கையையும் இங்கு நினைப்பது.

இதையெல்லாம் விடுத்து வெளியேயுள்ள அழுக்குகளை தங்களுக்குள்ளே நுழையவிட்டு காமக் க்ரோதங்களாகிய தொற்று நோய் (ஆசாரமின்றி,மனோஜயமின்றி) அவிவேகிகளாக அனர்த்தமடைவரைக் குறித்து நாம் வருந்துவதால்  என்ன பயன்?

“விலகியிருப்போம் விழித்திருப்போம் வீட்டிலிருப்போம்,
 தேசத்தின் பேரிடர் நீங்கவும்,  தேகத்தின் பேரிடர் நீங்கவும், 
ப்ரார்த்திப்போம்.”

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

26/03/2020

English

Inside-Outside

Even a few days of staying at home feels frustrating right? It feels so difficult to have all the family members stuck inside the same house 24/7. During these difficult times, let us pray to Perumal to free us soon. We pray for people to go about their work without hindrances soon.

As our bodies and minds yearn to step out, let us follow Swami Desikan’s remedy that can soothe and calm our minds.

The sixth chapter of Sankalpa Suryodhayam beautifully describes Bharatha Varsham that can make for an enjoyable read. In this chapter, there was a king who was a Vivekan (someone who has the capacity to analyze everything to distinguish between good and bad). He refrained from greed, lust, and criticism of others and because of the good qualities that sat in his mind and acted as the charioteer, he decided to go in search of tapovans in Bharatham.

This charioteer is someone who neither pours out words in a hurry nor follows anyone who says anything without thinking for it himself! Rather, he is someone who understands what was said, analyzes it, brings out the Sastram-based meanings, and then explains it to the king. This is why the king was known for Sath tharkam (one who analyzes anything rationally and fairly) and not kudharkam (criticizing everything that is said).

Those who want to enjoy it more should read Sankalpa Suryodhayam at least ten times to understand it. A jivatma can reach a good state only when a Sath tharkan and a vivekan join together. 

Both of them wander around the large Bharatham to find a place where they can peacefully meditate. Both sath tharkan and Vivekan analyze each place’s characteristics (think about the hidden meaning of this sentence before reading further). Swami Desikan explains this as Paththi mudhalaam vatril pathi enakku koodamal.”

“Pathi” means a place (Tirupathi). Looks like they didn’t find the right place to meditate as there seemed to be pollution in every place. (Take a look at the divya desams mentioned in the book). Disappointed that none of the holy places like Kasi, Kanchi, and Ayodhya were ideal for meditation, they didn’t know what to do now? They wondered if there was ever a place with a tall mountain, deep river, beautiful garden, and a serene environment. Viveka maharaja (one who wants to focus on good things without wasting time on unwanted arguments) yearns for such a place.

After roaming everywhere and after seeing all the places shown by Sath tharkan, the charioteer, he decides on a place that was more exalted than Kurukshetram, Naimisaranyanm, and Pushkaram. 

This was a beautiful forest with a tall mountain and a perennial river. Vivekan says that no one (that is those with the right sense) can find fault with this place. 

Ok, but where is that place? Curiosity builds up….

The place where Acharams (rituals ordained by our sastrams) are followed is the holiest place. That is, a place where hands and legs are washed regularly and a place where people don’t touch each other often. In other words, we can say that the tapovanam is our home. (Here, our body can also be seen as a home). 

Constant thoughts on good and exalted things is the tall mountain while the uninterrupted yearning to reach His lotus feet is the perennial river. Being immersed in this water is the best theertham abhishekam (water anointment). The thavam (penance) is when we discuss aspects related to our vedantham without wasting time on unwanted arguments, criticism of others, ego, anger, and jealousy on those elders who know the things that we don’t.

In other words, instead of going out in search of other things, looking for the Perumal who is inside us, is the best action. Since the relationship between you and Him is pure, it can never be polluted by external things. Keep in mind that “Home is the best tapovan for those who are devoid of anger and lust.” 

Instead of enjoying this tapovan, why is there a yearning to go out and suffer from contagious diseases ( lack of cleanliness and good thoughts) due to pollutants like lust and greed? What is the use of feeling sorry for such people who don’t have this understanding?

Stay home. Be safe. Let’s pray for these difficult times to end

 

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

This article has both the Tamil version written by Sri APN Swami and its English translation done by his students.

தனிமையில் இனிமை காணலாம் | Benefits of Self-Quarantine
COVID – 19 ( Corona logical – Chronological )

 உலகை அச்சுறுத்தும் கொடிய வைரசாக கொரோனா அறியப்படுகிறது. பொருளாதாரம், மக்களின் பழக்க வழக்கம், அறிவியல் முன்னேற்றம் என்று ஒட்டுமொத்தமாக வாழ்வியலை நாசம் செய்யும் பயங்கர அரக்கனாக கொரோனா தாக்குதல். இதனை எவ்விதம் தடுப்பது அல்லது எவ்வளவு காலம் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்பதை அறியமுடியாமல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலைப்பாடு நிலவுகிறது. அணு ஆயுதங்களையும், ஆட்கொல்லி மருந்துகளையும் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அலறித் துடிக்கும் படியாக இதன் தீவிரம் தாண்டவமாடுகிறது.

மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னது போக, தற்போது கிராமம், நகரம், மாநிலம், ஒட்டுமொத்த நாடு என்று தனிமைப் படுத்தப்படுகிறது. “நாடுகளையும் நகரங்களையும் விட்டு வெளியேற வேண்டாம்” என்றவர்கள், இன்று “வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருங்கள்” என்கின்றனர்.

நோயின் அறிகுறியோ! அல்லது நோய் தொற்று உள்ளவர்களின் சம்பந்தப்பட்டவர்களோ! உடனடியாகக் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது மக்கள் கூடும் இடங்களில் அவர்கள் சேரக்கூடாது, உணவு, உடை, வாழ்க்கை என அனைத்தும் தனியாக இருக்க வேண்டும். அவ்வப்போது நோய் தாக்குதல் குறித்த சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீளும் வழி என்றால், இனி கர்மாவின் பாதிப்பில் இருந்து மீளும் வழி என்ன என்பதைப் பார்க்கலாம்.

தேகத்தின் ஆரோக்கியத்திற்கான வழிகளை தான் மருத்துவர்கள் உபதேசிக்கின்றனர். ஆனாலும் தேகம் எப்படியும் அழியத்தான் போகிறது. என்ன செய்தும் அதை நிரந்தரமாக காக்க முடியாது. ஆனால் ஆத்மா அழியாதது. அதை பாதுகாப்பது நமது இன்றியமையாத கடமை.

இதுவரை இந்து தர்மத்தையும், இந்துக்களை மட்டுமே குறி வைத்து கேலி பேசி வரும் கட்டிபிடி கொள்கையாளர்களும், இந்த கட்டுரையை கவனமாகப் படிக்கவேண்டும். இந்த விஷயம் பகவத் கீதையின் பதிமூன்றாவது அத்தியாயத்தில் வருகிறது.

பதிமூன்றாவது அத்யாயம் தேகம், அதன் தலைவனாகிய ஆத்மா என் இருவரின் நிலை குறித்து விவரிக்கிறது. அதாவது வீடு, அதன் யஜமானன் – அதாவது வீட்டுக்காரன் எனும் இருவரின் நிலைப்பாடு இங்கு வர்ணிக்கப்படுகிறது.

எப்படி செங்கல், மணல், ஜல்லி, சிமென்ட் கலவைகளால் வீடு உருவாக்கப்படுகிறதோ அப்படியே நீர், நிலம், காற்று முதலிய ஐந்து திரவியங்களின் சேர்க்கையால் தேகம் உண்டாகிறது.

புயல், மழை, வெயில், பூகம்பம் முதலியவற்றால் உறுதியான வீட்டிற்கு ஆபத்து உண்டாவது போன்று புண்ய, பாப கர்மாக்களால் தேகத்துக்கு நோய், நொடி ஆபத்துக்கள் உண்டாகின்றன. அப்போது ஆத்மஜ்ஞானி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். இங்கு ஏழாம் ச்லோகம் முதல் ஒன்பதாம் ச்லோகம் வரையிலும் ஆத்மஜ்ஞானியின் சுயபரிசோதனை சொல்லப்படுகிறது.

அதாவது ப்ளட், யூரின், மோஷன் என நோய் அறிகுறி அறிய பல டெஸ்ட்கள் எடுப்பது போன்று ஆத்ம குணத்தை அறிய சில பரிசோதனைகளுக்கு உட்படவேண்டும்.
1. கர்வம் கொள்வது
2. வீண் ஜம்பம்
3. ஜீவஹிம்சை
4. மற்றவைகளை துன்புறுத்துவது
5. கபடமாகயிருத்தல்
6. பெரியோரைப் பணியாதது
7. தேகம், மனம் சுத்தமின்மை
8. நாஸ்திக்யம் பேசுதல்
9. மனதை அலை பாயவிடுதல்
10. சிற்றின்பங்களில் ஆசை
11. பேராசை
12. உடலைப் பேணுவதில் விருப்பம்
13. பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணியின் பயங்கரம் அறியாமை
14. உற்றார், உறவினரிடம் அதிகபற்றுதல்
15. அலைபாயும் மனது.
இவை முதலியன பாஸிடிவ் (அதாவது) நம்மை அழிக்கும் நோய் தொற்றுக்காண காரணிகள் (அதாவது) அறிகுறிகள். இவை அனைத்து நெகடிவ் (அறிகுறி இல்லாமை) நோயற்ற சௌக்யத்தைத் தர வல்லவை.

இங்கு ஒரு கேள்வி! இவையனைத்தும் நெகடிவ் என வந்தால் ஆரோக்யமானவன் என்று தானே பொருள். அதன் பின் என்ன பயம்? என்றால் உண்மைதான். ஆனால் நோயுள்ளவனிடமிருந்து விரைவாக வியாதிகள் பரவுவது போன்று ஆத்மகுணம் பெற்றவனையும் பீடிக்கும் தொற்று நோய் இந்த துர்குணங்கள். ஆதாவது இதில் ஒன்று தொற்றிக் கொண்டாலும் பாஸிடிவ் (அதாவது) நோய்தாக்குதலின் அறிகுறி உண்டு.

இதனால் ஆரோக்யமானவன் கூட (அதாவது ஆத்மஜ்ஞானம் பூரணமாகப் பெற்றவன்) தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஸர்வேஸ்வரனான எம்பெருமானிடம் பக்தி பூண்டவனாக ஜனத்திரனில் வெறுப்படைந்து, ஜனங்கள் இல்லாத அமைதியான தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். தான் ஆரோக்யமானவனாக இருந்தாலும்கூட தனக்கு தொற்றுநோய் வாராமல் இருக்க ஆத்மஜ்ஞானியின் தனிமை வாசம் அவசியமாகிறது. ஜடவரதர், ரைக்வர் முதலிய ஆத்மஜ்ஞானிகள் ஏகாந்தமான (தனிமையான) வாசத்தைத்தான் விரும்பினர்.

அன்பர்களே பகவத்கீதை என்பது எக்கால கட்டத்திற்கும் பொருந்தும் சநாதனதர்ம உபதேச நூல். இதிலுள்ள சூட்சுமங்களை குருமுகமாகக் கற்றால் வாழ்க்கையில் மேன்மை பெறலாம். கபடர்கள், நாஸ்திகர்கள், நயவஞ்சகர்கள் இவர்களுடன் நாம் சேருவதால் நமது ஆத்மகுணத்திற்கு ஆபத்து உண்டாகிறது என்பதை அறியவேண்டும். அவர்களுடன் பேசுவதைக் கூட (விவாதத்திற்காக) தவிருங்கள் எங்கிறார் சுவாமி வேதாந்த தேசிகர். எனவே இத்தகையவர்களிடமிருந்து தள்ளியிருத்தலை தொடர்ந்தால் கர்மா (கொரோனா)விலிருந்து முழுவதுமாக நம்மை தற்காத்துக் கொளல்முடியும். உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்துக்கும் தூய்மை அவசியமன்றோ! இந்தத் தனிமை நமது ஆத்மாவின் இனிமையைத் தரட்டும்.

இது Corono logical இல்லை Chronological – based on the advice by our Acharya Paramparai. அதாவது நம் முன்னோரின் பழக்கங்களை மறுபடியும் பின்பற்றுவோம்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

17/03/2020

English

Benefits of Self-quarantine and Social Distancing

Corona virus has brought the world to its knees and has impacted every facet of our daily life including our economy. At this point, we don’t know how severe it would be or how to stop its impact and has in fact, become a big challenge for researchers to find a vaccine for it.
As it spreads its arms far and wide, it is not just individuals any more, but also villages, towns and even countries that are isolating themselves from the rest of the world. To this end, people are now being asked to stay confined to their homes and not just refrain travel to other cities and countries.

There is a clear order that people who show the symptoms or those who have been infected by it have to self-quarantine themselves and should practice social distancing. In other words, they should not visit places where people gather and have to keep their food, dress, and even life separate from others! The government is also emphasizing people to get themselves tested often for this deadly virus. Now stop for a second and think. If you have to take so much effort to protect yourself against a virus, imagine how much effort you have to take to insinuate yourself against your karmas. 

And that’s exactly what we’ll see now.

Doctors give advice only to keep your body in good health, but regardless of all efforts, this body is going to deteriorate one day. We can never protect it forever. On the other hand, atma (soul) is indestructible and it is our innate duty to protect it.

What is going to follow now is something that everyone should read, even those who despise or ridicule Hinduism and its followers.

In the 13th chapter of Bhagavad Gita, Lord Krishna explains the nature of the body and its master “Atma”. In other words, the state of the house and its owner (houseowner) is explained in depth here.

Just like how a house is built with bricks, sand, stones, cement, and concrete mix, like that our body is built with the mixture of five elements, namely, air, water, fire, earth, and space. A house can get damaged due to storm, rain, sun, and earthquake. Similarly, our body can get damaged due to diseases and pain that emanate from our papam (sins) and punyam (virtues). At that time, an atma jnani (one who understands his atma) has to protect himself. In fact, slokas 7 to 9 explain the self-introspection that an atma jnani should do.

Just like how we take urine, blood, and motion tests to understand the diseases plaguing our body, like that we have to take certain tests to understand the qualities of our atma. We have to check if we have any of these below symptoms.

  1. Arrogance
  2. Lack of understanding of how we’re wasting this birth
  3. Killing other creatures
  4. Causing suffering to other creatures
  5. Cunningness
  6. Disrespecting elders
  7. Not keeping our mind and body clean
  8. Believing and talking atheism
  9. No control over the mind
  10. Craving for materialistic pleasures
  11. Greed
  12. Focusing on maintaining the beauty of your body
  13. Lack of understanding of the pangs of hunger, old age, birth, and death
  14. Too much attachment to kith and kin
  15. Ever-wandering mind

These are the symptoms (positive test) for the disease that will plague our atma soon. When you eliminate these aspects (test negative for them), there is no possibility for any disease.

Now this can bring up an interesting question. In general, when a test is negative, it means you’re in good health. Likewise, if these above-mentioned aspects are negative, it means your atma is also in good health. So, what is the fear really?

Just like how a deadly disease like COVID-19 can easily spread from one person to another, like that these qualities can also quickly spread from those who already have it! Even if one of these symptoms are passed to you, the test will turn positive and the symptoms will start showing up.
All this means, a healthy person who understands the qualities of atma should also isolate himself from others who show symptoms of soul deterioration! The best way is to surrender at the Lotus feet of Emperuman and isolate oneself from large crowds of people (social distancing). Even if a person is healthy, that person has to do a self-quarantine to ensure that contagious diseases (above qualities) don’t impact his atma in any way. This is why atma jnanis like jada bharathar and raikwar prefered solitude.

Friends, Bhagavad Gita is a book that expounds the tenets of our Sanathana Dharmam and is applicable for all people at all times. When you learn its hidden meanings through a Guru, you’re sure to benefit immensely.

For now, it is important to understand that our Atma gets into a dangerous mode when we have association with atheists and cheats. This is why Swami Desikan asks us to stay away from them at all costs and not talk to them even in a debate.

So, when we stay away from such people, we can completely quarantine ourselves against our karma (coronavirus). It is important to protect not just our body, but also our atma, right? Let this isolation cleanse our atma as well.

This is not Corona logical, but is chronological. That is, let us follow our ancestors and their way of life and attain that elusive peace.

– English Translation by Sri APN Swami’s Shishyas.

-Translation by Sri APN Swami Sishyas