Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 15|வாழ்வைத் தொலைத்த வாக்பதி |Brihaspathi’s sad state|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 15 of the Audio Book : https://soundcloud.com/apnswami/vtm-15-vaazhvai-tholaitha-vaakpathi

https://soundcloud.com/apnswami/vtm-15-vaazhvai-tholaitha-vaakpathi

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-part-15-brihaspathis-sad-state

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 15வாழ்வைத் தொலைத்த வாக்பதி

     தேவகுருவான ப்ருகஸ்பதியே வாக்பதியாகிறார்.  ஆனால் அவருடைய வாழ்க்கையையும் தொலைத்து விட்டார் ஆம்… நம்மில் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் நல்லதொரு வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம்.  சிலசமயம் மிருகங்களை விட கீழ்த்தரமான செயல்களைச் செய்கிறோம். உலகில் எத்தனையோ விதமான பாபங்கள் உண்டு.  அதைச் செய்பவனுக்கு பெரும் நரகங்கள் உண்டு.  பாவங்கள் செய்து, பின்னர் மனம் திருந்தி, அதற்காக வருந்தி, பயந்தானாகில், பரிகாரங்கள் செய்து அந்த கொடிய பலன்களிலிருந்து தப்பிக்கலாம்.  ஆனால் சரணம் என வந்த ஒருவனை, காப்பாற்றத் தகுதியிருந்தும் கைவிட்டவனுக்கு ஏற்படும் பாவத்திற்கு பரிகாரமே இல்லை.

     “அஞ்சி வந்தவனை அஞ்சேல் என அபயக்கரம் நீட்டாதவனிடம் கெஞ்சி நின்றேனே இப்படி ஒருவன் பெரும்பாவம் செய்ய நானன்றோ காரணமாகினேன்!!  இந்த மனிதனிடம் அடைக்கலம் புகுராமல் அரசனின் ஆட்களிடம் நேராகவே சிக்கியிருந்தால், இந்த ப்ராம்மணனுக்கு என்னைக் காப்பாற்றாத பாவம் நேர்ந்திருக்காதே!” என உரத்த குரலில் ஓலமிட்டுக் கொண்டே அந்த நாய் உயிர் நீத்தது.

     அதன் கடைசி பேச்சைக் கேட்ட தேவகுரு திடுக்கிட்டார்.  படிப்படியாகத் தன்னிலையை உணர்ந்தவர் தவியாகத் தவித்தார்.   ஐயோ ஐயகோ!  நான் ஏன் இப்படிச் செய்தேன்?!  என்னே எனது மதியீனம்!!  வேதம் படித்து என்ன பயன் சாஸ்திரங்களில் கரைகண்டு என்ன பயன் ஒரு நாய்க்கு ஏற்பட்ட நல்ல மனோபாவம் எனக்கு உண்டாகவில்லையே!!  கைவிட்ட எனக்கு பாபம் ஏற்படுமோ என பயந்து உபதேசித்த அந்த நாயின் பெருமை எங்கே? கருணையின்றி அதன் மரணத்திற்குக் காரணமான நான் எங்கே?  எப்படியாவது இப்பிறவியைக் கழித்து மீண்டும் தேவகுருவாகப் பதவி பெற நினைத்த எனது பாவத்தின் பலன் கூடிக் கொண்டேயிருக்கிறதே இனி எனக்கென்ன பரிகாரம் உண்டு சரணடைந்தவனைக் கைவிட்ட என்னை யார் காப்பாற்றுவார்கள்?… நான் யாரிடம் அடைக்கலம் அடைவது?”

     ஒன்றும் புரியாமல் உன்மத்தரைப் போன்று உள்ளம் வெதும்பினார். தன்னிலையில்லாமல் தள்ளாடினார்.  தேகம் தளர்ந்து நிலைகொள்ளாமல் தவித்தார் வாக்பதியின் வாழ்க்கை இனி என்ன ஆகும்?

     மனித வாழ்க்கை என்பது மிகவும் அத்புதமானது.  குறுகிய காலத்தில் நிறைவான கார்யங்களைச் செய்து மேலான மோட்சம் அடைய இப்பிறவி பெரும் துணை புரிகிறது.  எத்தனையோ பிறவிகள் கழிந்து நம்மை நாம் புரிந்து கொள்ளும் நற்பிறவியை புண்யத்தின் பலத்தால் பெற்றிருக்கிறோம். இருப்பினும் அதனைப் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது உண்டாகும் காமம், க்ரோதம், பேராசை, வெறுப்பு என பல வகைகளில் இல்வாழ்க்கை வீணாகிறது. திடீரென உண்டாகும் கோபத்தினால் அறிவிழந்து செய்யும் செயல்கள் விபரீத விளைவுகளை உண்டாக்கும் என்பதை எவரும் உணருவதில்லை!!  ஒருவேளை அதையுணர்ந்து திருந்துவதற்குள், காலம் கடந்துவிடுகிறது.  பாபத்தின் பலன் அதிகமாகின்றது.

    தேவகுருவின் வாழ்க்கை சுழற்சி நமக்கொரு பாடமாயுள்ளது.  தன்னை இவர் உணர்வதற்குள் நாயின் உயிர் பிரிந்தது இனி இதற்குரிய ப்ராயச்சித்தத்தைத் தேடி கங்கைக்குப் புறப்பட்டார் எத்தனையோ பெரும்பாவங்களைச் செய்தவர்களும் கங்கையின் சம்பந்தத்தால் விடுதலையாகின்றனரே!

     ப்ருகஸ்பதி கங்கைக் கரையினில் உண்ணாது, உறங்காது கடுமையான தவமிருந்தார்.  ஏற்கனவே இளைத்த தேகம் இன்னமும் வாடியது.  உக்ரமான தவத்தால் உலகமே நடுங்கியது.  ஆனாலும் அவரின் பாவத்தைத் தொலைக்க இது போதுமானதாகவில்லை கங்கைக்கு நீராட வரும் தபோதனர்களையும், மகரிஷிகளையும் சந்தித்து தர்ம சந்தேகம் கேட்டார்.   சரணடைந்தவனைக் கைவிட்டவனுக்குப் பரிகாரம் ஏதுமில்லை. அஃது கொடிய பாபம்தான் என அனைவரும் கைவிரித்து விட்டனர்.

     சிறிதே அவர் செய்திருந்த நற்காரியத்தின் விளைவாக ஒருநாள் பரதவாஜ மாமுனிவரை சந்தித்தார்.  தன் குலத்தில் பிறந்தவனுக்கு ஏற்பட்ட துயரம் பரத்வாஜ மகரிஷியின் மனதைக் கரைத்தது.  முக்காலமும் உணர்ந்த மாமுனிவராகையால், ப்ருகஸ்பதி நிலை கண்டு வருந்தியவர் கவலைப் படாதே!  உனக்குரிய ப்ராயச்சித்தம் நிச்சயம் உண்டு எனச் சொன்னதுதான் தாமதம், தேனமுதமான அச்சொல்லை தனக்குள்ளே வாங்கிக் கொண்டார். உடனேயே பரத்வாஜரை தெண்டனிட்டார்.  கனிவுடன் அவரைக் கண்ட பரத்வாஜர் வாக்பதியே! இனியும் தாமதிக்காதீர்.  நீர் விரைந்து சத்யவ்ரத க்ஷேத்ரத்திற்குச் செல்வீராக அங்குள்ள அனந்தசரஸில் நீராடி வரதனை ஆராதித்தால் உமது பபங்கள் அனைத்தும் தீயினில் தூசாகும்“.

     “சத்யகேது எனும் அரசன் இந்த சத்யவ்ரத க்ஷேத்ரத்தில்  பன்னெடுங்காலம் தவம் செய்து நற்கதியடைந்தான்.  பாவங்களைப் போக்கும் பாவனமான பூமியிது.  வரதனின் நித்ய சாந்நித்யம் இதற்குண்டு.  ப்ருகஸ்பதியே விரைந்து நீரும் சத்யவ்ரதம் சென்று அனந்தசரஸில் நீராடி அபீஷ்டவரதனை அராதியும் என்றவுடன் ப்ருகஸ்பதி சத்யவ்ரதம் நோக்கி விரைந்தார்.

     பிரமன் ப்ரதிஷ்டை செய்த பிறகு பல்லாண்டுகள் கழித்து ப்ருகஸ்பதி இங்கு வந்தார் க்ருதயுகம் முடிந்து த்ரேதா யுகத்தின் சமயமாதலால் கஜேந்திரன் பகவானை ஆராதித்து வந்தார்.  எம்பெருமானின் திருக்கோயிலைச் சுற்றியும் அடர்ந்த காடுகள் பெருகி விட்டன.  காட்டு விலங்குகள் நடமாடும் கானகத்தின் சூழல் அனைவர்க்கும் உள்ளத்தில் ஒரு அச்ச உணர்வையுண்டாக்கும்.  அங்குள்ள ஹஸ்திகிரி எனும் மலையைச் சுற்றிலும் சூரிய ஒளியும் உள்புகாத அளவிற்குக் கொடிகளும் மரங்களும் சூழ்ந்திருந்தன.  அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு குகை. பெரும் கற்களால் மூடப்பட்டிருந்தது.  வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அங்கு ஒரு குகை இருப்பதே புலப்படாது.  உள்ளிருப்பவர்கள் வெளியே நடப்பதை நன்கு கவனிக்கும்படி கற்களிடையே சிறு சிறு துவாரங்கள் இருந்தன.

     மஹாசாந்தர் எனும் மகரிஷியாக தவம் செய்தவர், இந்த்ரனின் குறுக்கீட்டினால் யானையானார்.  அவரே யானை உருவத்துடன் கோதாவரி நதிக்கரையில் திரிந்தபோது, ம்ருகண்டு எனும் முனிவரின் அருள் பெற்றார். ம்ருகண்டு முனிவர் கூறியபடி, அந்த கஜம் இப்போது இங்கு வரதனை ஆராதித்துக் கொண்டிருக்கிறது.  அதற்கு முன்பாக இங்குள்ள புலஸ்திய மகரிஷியினிடமும் நியமனம் பெற்றான்.  கொடிய மிருகங்களாலும் இயற்கை சீற்றங்களாலும் தனது தவத்திற்கு இடையூறு ஏற்படுகிறதே என அங்குள்ள குகைக்குள் புலஸ்த்யர் தங்கியிருந்தார்.

     அது சிங்கப்பிரான் உறையும் குகை.  மலை ஆளரியாக, ஹரித்ரா தேவியுடன் ஸ்ரீந்ருஸிம்ஹன் சாந்நித்யம் செய்யும் குகைக்குள்தான் புலஸ்த்யரும் தவம் செய்து கொண்டிருந்தார்.

     கஜேந்திரனாகிய யானை, புலஸ்த்யர், மற்றும் தேவகுருவாகிய ப்ருகஸ்பதி என பல மகாத்மாக்கள் அந்த சமயம் யானைமலை, வேகவதி, அனந்தசரஸ் கரைகளிலும் காஞ்சியின் காடுகளிலும் வசித்து வந்தனர். இந்த நிலையில்தான் தேவகுருவுக்கு தேவாதிராஜன் தரிசனம் உண்டானது. ஆனால் அந்தோ பரிதாபம்!!!  கண்முன்னே காட்சியளித்த தெய்வத்தைக் கருத முடியாமல் அவரின் பாவம் தடுத்தது.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

 

 

                               Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 15 – Brihaspathi’s sad state

     Due to repeated mistakes and the hard hand of fate, Brihaspthi suffered immensely. Isn’t his life similar to ours too? Many times, we also act rashly without thinking through a situation and this lands us in big trouble. In fact, it follows us to hell too where we get severe punishment for our sins.. But when we realize our mistakes and repent for it, we tend to do some parikaram (remedial acts), so the severity of our sins reduce and we can get away with minor punishments. But there is no parikaram for those who refuse saranagathi to a poor and helpless creature.

    “Why did I go to him for help? Had I gone straight to the soldiers, I could have saved the man from incurring such a sin. Alas, why did I not think of it earlier?”, lamented the dog as it gave up its life.

    Hearing these last words of the dog, Brihaspathi came back to his senses and realized what happened. he felt miserable for his act. “Why did I do this? What was I thinking? This dog had better sense than me and it was concerned for me. But I failed to protect it and because of it, my sin count is increasing by the day. Can I ever regain my status as Deva guru again? what is the remedy for my sin? To whom can I do saranagathi to relieve me from this sin?”, cried Brihaspathi pouring his heart out.

    Brihaspathi staggered and sat down with a hand on his head. His frustration knew no bounds. What will happen to him now?

    Life as a human being is an exalted one as you can achieve a lot of things within the shortest possible time, especially the most sought-after state of Moksham. This birth as a human being comes after many births and the virtues collected through them all. Unfortunately, most of us don’t realize it and we fall prey to emotions such as anger, hatred, and jealousy. As a result, the sins from such acts accrue and negate the virtues we have accumulated, thereby pushing us back into samsaram again and again. 

    The life incidents of Brihaspathi should be an eye-opener for all of us. Before he could get a grasp of the situation, the dog had died. As a parikaram for this sin, he decided to have a holy dip in ganges. After all, this river has the power to remove all our sins!

    Due to the few good things he had done over the course of his life, he happened to meet Sage Bharadwaja who felt sad seeing the state of an individual born in his clan. Since this sage had the divine powers to see the past, present, and future, he knew Brihaspathi’s past and wanted to help him. 

    “Don’t worry my son. There will be a remedy for your sin”, said the sage. Hearing these words, Brihaspathi felt elated for the first time and pressed the sage to show a way to absolve his sins. Immediately, Bharadwajar said, “Don’t wait anymore. Rush to Sathyavratam now. Take a dip in the holy Anantasaras and pray to Varadan and your sins will vanish into thin air.”

    “A king called Sathyakethu did penance in Sathyavratam for 12 years and attained moksham. This is the significance of this place. Such a holy place is now blessed by the presence of Varadan and this means, your sins are sure to get absolved here.” Hearing this, Brihaspathi rushed towards Sathyavratam.

    Brihaspathi came to Kanchi many years after Brahma consecrated Varadan. If you remember, Varadan emerged from the yagam in Krita ygam and Brihaspathi came here towards the end of Treta yugam. During the early part of Treta yugam, Gajendra worshipped Varadan. By this time, Perumal’s temple was surrounded by dense forests and wild animals roamed here. This presence of wild animals created a sense of fear among people and hardly anyone came here to worship Him. In fact, the area around Hasthagiri was so dense that even sunlight could not penetrate through it. there was a big cave at the foothills of hasthagiri that was closed by large boulders in such a way that those inside could see what was happening outside, but not vice-versa. 

    In the meantime, a sage called Mahasandhar was involved in deep penance. Indran wanted to stop his penance and played a game, due to which Mahasandhar became an elephant called Gajendran. When this elephant went to the banks of Narmada, it met the great sage called Mrikandu who advised the elephant to go to Hasthagiri to complete its penance.

    Like Gajendran, sage Pulasthiyar also came to Hasthagiri to do penance. To avoid any disturbance from wild animals and nature’s vagaries, he started his penance inside a cave where Nrisimhan resided with Harithra Devi. 

    So, the elephant called Gajendran, Pulasthiyar and Brihaspathi came to Hasthagiri to do penance. They crossed Vegavathi, took a dip in Ananthasaras, and lived through the thick jungles of Kanchi.  This is when Brihaspathi got an opportunity to see Devadirajan. but alas, his sins prevented him from making the most of this opportunity!

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 14|நாயை கைவிட்ட நீசன்|The fool who drove a dog| Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 14 of the Audio Book : https://soundcloud.com/apnswami/vtm-14-naayai-kaivitta-neesan

https://soundcloud.com/apnswami/vtm-14-naayai-kaivitta-neesan

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-part-14-the-fool-who-drove-a-dog

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 14 நாயை கைவிட்ட நீசன்

    தொடர்ந்த துயரங்கள் தீராமல் அவரை துன்புறுத்தின.  கருணையுள்ளம் கொண்ட ஒரு பெண்மணி இவருக்கு இடமளித்தாள்.  அவ்வப்பொழுது தன்னால் இயன்ற உணவளித்தாள்.  இருந்தும் தரித்ரம் தீரவில்லை.  தளர்ந்து போனவராய் தனக்கு என்று விமோசனம்?” எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த தேசத்து அரசன் தனது சிறுபிள்ளையுடனும், பரிவாரங்களுடனும் அந்த கிராமத்திற்கு வந்தான்.

     ஊருக்குச் சற்று ஒதுக்குப்புறமாக ப்ருகஸ்பதியின் இல்லம் அமைந்திருந்தது. ஓட்டைக் குடிசை.  வீட்டிலோ ஒரு சாமானும் இல்லை.  மழை, வெயில் என இயற்கையின் தீவிரத்தைத் தடுக்கும் வலிமை அந்த குடிசைக்கு இல்லை. ஊரிலுள்ளவர்களோ, வழிப்போக்கர்களோ மட்டுமின்றி சாதாரண பிராணிகள் கூட, உள்ளே நுழைய விரும்பாத ஓட்டைக் குடிசை அது.

     அங்கே சற்றுத் தொலைவில் தெருநாய் ஒன்று சமீபத்தில் குட்டிகளை ஈன்றிருந்தது.  அமைதியாகத் தனது குட்டிகளுக்கு அது பாலூட்டிக் கொண்டிருந்தது.  பரிவாரங்களுடன் பவனி வந்த அரசனின் கூட்டத்திலிருந்து சற்றே விலகி, அரசனின் குமரன்,  நாய் படுத்திருக்கும் இடத்திற்கு வந்தான். பெரும் ஆரவாரத்தில் ஆழ்ந்திருந்த மக்களோ மன்னனோ, குழந்தையை கவனிக்கவில்லை.  அறியாத பருவமாகையால், தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே அரசிளம் குமரன், தாயிடம் பால் பருகிய ஒரு குட்டியை பலவந்தமாகப் பறித்தான்.  தாய் நாய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அருகிலிருந்த பாழும் கிணற்றில் அதை வீசிக் கொன்றான்.

     “பாலகன்….. செய்யும் செயலின் வீர்யம் அறியாதவன்…. விளையட்டுத்தனமாகச் செய்து விட்டான் என இதற்குரிய சமாதானங்கள் ஆயிரம் சொன்னாலும் கண்முன்னே தனது குட்டியை இழந்த தாயின் தவிப்பு எப்படி இருந்திருக்கும்?  நாய்தான் என்றாலும் அதுவும் ஒரு குழந்தைக்குத் தாய்தானே!!!   வெகுண்டெழுந்த கோபத்தால் “வள்ளென்று” அரச குமாரனை விழுந்து பிடுங்கியது பயந்த பாலகன் மருண்டு ஓடினான்.  விடாமல் துரத்திய நாய் தனது வெறி தீர குமாரனைக் கடித்தது.

    நாயின் குரைப்பொலியும் பாலகனின் அழுகை ஒலியும் கேட்ட காவலர்கள் அரச குமரனை தெருநாய் கடிப்பதைக் கண்டனர்.  கூர்மையான ஈட்டி, வில், கோடரியுடன் அந்நாயைக் கொல்லப் பாய்ந்தனர்.

     “ஒரு குட்டியை இழந்தோம் மற்றொன்றைக் காக்க வேண்டும்..” எனும் எண்ணத்துடன் தனது மற்றுமொரு குட்டிதனை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது அந்த தெருநாய். காவலர்கள் விடாது அதைத் துரத்தினர்.  எங்குமே அங்கு ஒளிந்து கொள்ளும் இடமில்லை.  எங்கு சென்றாலும் சேவகர்கள் கொலை வெறியுடன் பின் தொடர்ந்தனர்.  இறுதியில் ப்ருகஸ்பதி வசித்த வீட்டினுள் நாய் நுழைந்தது.  எவரும் அறியாத வண்ணம் அங்கு மண் சுவற்றின் ஒரு மூலையில் பதுங்கியது.

    தேடிவந்த சேவகர்கள் களைத்துப் போனார்கள்.  அவர்கள் எங்கு தேடியும் நாயைக் காணவில்லை.  ப்ருகஸ்பதி வசிப்பிடம் ஒரு நாய் நுழைவதற்குக் கூடத் தகுதியில்லாததாகையால், அதற்குள்ளே நுழைய அவர்களும் விரும்பவில்லை. எவருமே இவ்விடம் தேடி வரமாட்டார்கள் எனும் எண்ணத்தில்தானே நாயானது அவரின் இல்லத்தினுள் சென்று பதுங்கியது!  அந்த ஓட்டைக் குடிசையின் வாயில்புறத்திலேயே சற்று தொலைவில் நின்ற கவலர்கள், புதர்களிலும் குப்பை மேடுகளிலும் தேடிக் கொண்டிருந்தனர்.

    வாசலில் நடப்பது எதையும் அறியாதவராக, தனது வீட்டின் பின்பிறத்திலிருந்து உள்ளே நுழைந்த ப்ருகஸ்பதி அங்கே ஒரு நாயக் கண்டதும் நெருப்பை மிதித்தது போன்று குதித்தார். (அன்பர்களே! வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது. அப்படி வளர்க்கும்படி நேரிட்டாலும் அவற்றினை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. வீட்டிற்குள் நாய் நுழைவது பெரும் பாவமாகும்.  இவையெல்லாம் சாஸ்திரம் சொல்வது.  அதன்பின்னர் அவரவர் இஷ்டம்.  இதற்குமேலும் விளக்கம் கேட்டாலும் இதுவே பதில்).

    எதற்குமே தகுதியற்ற அவ்வீட்டில் இதுவரை நாய் கூட நுழைந்ததில்லை. தற்போது அதைக் கண்டு ப்ருகஸ்பதி சினந்தார்.

     “ஐயா! ப்ராஹ்மணனே! அரச வீரர்கள் என்னைக் கொ ல்லத் துடிக்கின்றனர். சற்று பொறுத்துக் கொள்ளும்.  உயிர் பயம் நீங்கியதும் நான் விரைந்து இவ்விடத்தை விட்டுச் சென்று விடுவேன்”  தீனமான குரலில் தன்னைக் காக்கும்படி ப்ருகஸ்பதியை சரணடைந்தது அந்த நாய் கொல்வதற்குரிய பாபம் செய்திருந்தாலும் சரணாகதி – அடைக்கலம் என வந்தவனை காப்பாற்றியேயாக வேண்டும்.  தருமநெறி தெரிந்தவர்கள் சரணாகதர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.

    நாடி வந்தவனை காப்பாற்றுவதற்கு எந்த சாஸ்திர விசாரமும் தேவையில்லை.  சாத்திரங்களில் கரை கண்டவர் ஆத்திரத்தில் அறிவிழந்தார்.

    நீசன் என்றாலும் காப்பது கடமை எனும் தர்மத்தை மறந்தவராக, அந்த நாயை வெளியில் விரட்டினர் ஐயா! தஞ்சம்…. தஞ்சம்….. சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என காலில் விழுந்து மன்றாடியும் அவரது மனம் கரையவில்லை ச்சீ… நாயே! என் இல்லத்தின் தூய்மையை கெடுக்கிறாயே!” என உள்ளத்தில் தூய்மையின்றி விரட்டினார்.  கதறக்கதற தாயையும், குட்டியையும் வெளியில் துரத்தினார்.  உயிருக்கு பயந்து மன்றாடிய நாயை வெளியே துரத்தினவுடன் அங்கிருந்த காவலர்கள் அதனைக் கண்டனர்.

    “இனியும் தனக்கு உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என உணர்ந்த அந்த நாயும் ஓலமிட்டது ஐயோ! இந்த ப்ராம்மணன் பெரும் தவறு செய்துவிட்டானே! சரணம் என வந்தவனை கைவிட்டானே!  அடைக்கலமாக வந்தவனை அரவணைத்துக் காப்பது உலகில் பெரிய தர்மமாயிற்றே!  அபயம் அளிக்காமல் என்னை அடித்து விரட்டிய இவனுக்குப் பெரும் பாபமன்றோ உண்டாகப் போகிறது!!!”  என உரத்த குரலில் கதறியது. அதற்குள்ளாக ராஜசேவகர்கள் நாயையும், அதன் குட்டிகளையும் கொன்று விட்டனர்.

    [சரணாகதி என்பது அனைவர்க்கும் பொதுவானது.  எத்தகைய பாவம் செய்தவனையும் ரட்சிப்பவன் பகவான்.  பகவத் ராமானுஜரும், சுவாமி வேதாந்த தேசிகரும் அடைக்கலம் எனும் தத்வத்தின் அரும்பெருமைகளையெல்லாம் தமது நூல்களில் உபதேசம் செய்துள்ளனர். படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், ப்ராம்மணன், க்ஷத்ரியன் என்று ஜாதி, குலம், பணம், வயசு பார்க்காமல் நம்மை காப்பாற்றுபவன் எம்பெருமான் பெரும் பாவியான காகாசுரனும் தன்னிடம் அடைக்கலம் என வந்ததால் காபாற்றினான்.  எனவே இந்தப் பிறவியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஒரு நல்ல ஆசாரியன் மூலமாக ஆத்மாவை அருள்வரதனிடம் அடைக்கலமாக சேர்த்துவிட வேண்டும். அதேபோன்று நம்மால் முடிந்தவரை நம்மிடம் வருபவர்களுக்கு அபயம் அளிக்க வேணும் இயலாதவர்களை ஒருபோதும் கைவிடுதல் கூடாது.  அந்த பாவத்தைச் செய்ததால்தான் ப்ருகஸ்பதி சாபவிமோசனம் அடையாமல் மேன்மேலும் துன்பமடைந்தார்].

    இனி கதையைத் தொடரலாம்.   விதியின் வலிமையால் மதியை இழந்தார் தேவகுரு.  தயை எனும் கருணையின்றி ஒரு குடும்பம் பலியானதற்குக் காரணமானார்.  தனது தவறை யோசிப்பதற்குள் காலம் கடந்து விட்டது.  இனி அவரின் நிலை என்ன? 

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                               Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 14 – The fool who drove a dog

     Misery became an integral part of Brihaspathi’s life. Seeing his poor health, a kind lady offered a place for him and even gave him food everyday.  Though Brihaspathi was waiting for his misery to end, it did not happen as quickly as he wanted.  This was when the king of that region came along with his son and retinue to the village where Brihaspathi was living.

     Brihaspathi was living in a dilapidated hut, in an isolated area, just outside the village. This hut had leaks in its roof and it could not protect him from the brunt of the sun or rains. There was no item inside the house and it was nothing but a dirty and dilapidated hut.  No one ever wanted to stop or step inside that place.

    Close to his hut, a street dog had recently given birth to a few puppies.  The king’s retinue came through that place and the young prince strayed a bit away from the army. Seeing the dog, the prince stopped and stared at it. No one noticed that the prince was missing and the retinue marched on along with the king.  This young prince forcefully took a puppy that was drinking milk from its mother and threw it into a well, right in front of the mother.

     This enraged the mother dog. Though we can argue that the young prince did it out of ignorance and without understanding the gravity of the situation that by no means lessens the pain of the mother dog.  To take revenge for the death of its child, the mother dog chased the prince and bit him at many places.

     Seeing the situation, the soldiers gathered their weapons and came to attack the dog. Understanding that its life is in danger, the gathered took the other puppy in its mouth and ran away.  But the soldiers came in hot pursuit.  The dog could not find any place to hide, so it entered Brihaspathi’s house and hid itself in a corner.

     The soldiers searched everywhere but could not find the dog. Since Brihaspathi’s house was not even fit for a dog, they did not bother to check there.  Brihaspathi did not know any of this.  He came from the back side of his house and seeing a dog, he screamed. (NOTE: One should not raise dogs in the house. If there is a necessity to raise one, you have to ensure that it never enters the house because it is a great sin to have a dog inside your house.  This is what our sastras say and it is up to individuals to accept it).

     The dog said, “O Brahmin! The royal soldiers are looking for me and want to kill me. please bear for a few minutes.  I will leave as soon as they go away.  ” Hearing the dog’s feeble voice,  Brihaspathi stopped and looked at it.  Moreover, the dog did saranagathi to him and asked him to help.  Every person who follows the sastras should protect the person who has done saranagthi to them.  There are no rules for Saranagathi and for protecting those who do it to you. This is the rule and there are no exceptions to it.

     But Brihaspathi did not follow it and he tried to send the dog away.  The dog pleaded, “Sir, please! Just a few minutes.  Please save me and my child.  ” All this fell on deaf ears and he said, “Wretched dog! How dare you spoil the sanctity of my house?”  He drove the dog out with a cold heart notwithstanding its pleadings.  Hearing the sound, the soldiers spotted the dog.  Realizing that there is no more possibility for survival, the dog cried and said that the Brahmin had deserted someone who had come to him for refuge.  It said, “I did saranagathi and he refused to protect me and this is going to entail a huge sin for him.”   As soon as the dog said this, the soldiers came and killed the dog and its child.

     Saranagathi is applicable to everyone.  Perumal protects all those who come to Him for refuge, even if they have committed countless sins.  Swami Ramanuja and Swami Vedanta Desikan have explained Saranagathi in-depth in many of their works. It is applicable for everyone, regardless of economic status, clan, age and any other factor. Our puranas show that Perumal has saved even the most notorious of sinners like Kakasuran when he did saranagathi. Perumal will protect us too and will take us away from the problems of Samsaram.   All that we have to do is approach an Acharyan and through him, do saranagthi to Perumal.   This is the goal of our life and we should not waste this golden opportunity.   Also, we have to protect all those who come to us for refuge. Since Brihaspathi refused this simple act, his suffering increased.

     Brihaspathi lost his mind and gave a wrong decision at first and then, he sent away a dog that came to him for refuge and this eventually led to the killing of the entire dog’s family.

     After all this, what is his state?

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 13|பதவியிழந்த ப்ருகஸ்பதி|The Brihaspathi who lost his position|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 13 of the Audio Book : https://soundcloud.com/apnswami/vtm-13-padhaviyizhandha-brigaspathi

https://soundcloud.com/apnswami/vtm-13-padhaviyizhandha-brigaspathi

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-part-13-brihaspathi-who-lost-his-position

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி – 13 பதவியிழந்த ப்ருகஸ்பதி

     தேவர்களின் குருவானவன் ப்ருகஸ்பதி.  அறிவிலும், ஆற்றலிலும் சிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்கு அடுத்த நிலையில் இருப்பவர்.  எத்தனையோ சங்கடங்கள் ஏற்பட்ட போதெல்லாம் தனது மதிநுட்பத்தால் தேவர்களைக் காத்தவர்.  அவருடைய வாழ்விலும் பெரும் சோதனையொன்று உண்டானது. வரதன் அவரைக் காத்த கதையினைக் காணலாம். 

     ஆதியுகமான க்ருத யுகத்தில் பிரமன் வரதனை ப்ரதிஷ்டை செய்தான்.   க் என்றால் பிரமனுக்குப் பெயர்.  அவன் பகவானை அர்ச்சித்து வழிப்பட்டதால் இந்த இடம் காஞ்சி என்னலாயிற்று.  பின்னர் த்ரேதா யுகத்தில், மஹாசாந்தர் எனும் மகரிஷி யானையாகத் திரிந்து வரதன் அருளால் நற்கதியடைந்தார். இப்போது ப்ருகஸ்பதியின் கதையும் த்ரேதா யுகத்திலும், த்வாபர யுகத்திலுமாகி இரண்டு யுகங்களில் நடைபெறுகிறது.

     ஒரு சமயம் தேவலோகத்தில் பெரிய விவாதம் உண்டானது.  தேவேந்திரன் தலைமையில் அனைத்து தேவர்களும் குழுமியுள்ளனர் தேவரிஷிகளும், ப்ரம்ம ரிஷிகளும் திரளாகக் கூடியுள்ளனர்.  சபையில் ஒரு முக்யமான விஷயத்தைக் குறித்த விவாதம் நடைபெறுகிறது.

     இல்லற தர்மத்தில் ஈடுபட்டுள்ள வைதிகன் ஒருவன், சந்த்யாவந்தனம், தேவபூஜை, ஔபாஸனம், அக்னிஹோத்ரம், வைச்வதேவம் முதலிய சத்கர்மங்களை செவ்வனே செய்து வருகிறான் (குறிப்பு – இவையெல்லாம் நாம் தவறாது செய்ய வேண்டிய காரியங்கள். கலியின் கொடுமையினால் இதனைச் செய்பவர்கள் அருகி விட்டனர்.  அதுதவிர, மேற்சொன்னவைகளின் பொருள்கூட நமக்கு விளங்காது.  அதனால் பெரியோர்களிடம் சென்று பணிந்து கேட்டுத் தெளிக).

     இனி மேலே தொடரலாம்.   அவ்விதம் தவறாமல் தனது இல்லற தர்மத்தைச் செய்து வருபவன் திவ்யதேசங்களுக்குச் சென்று பெருமாளை சேவிப்பது இல்லை.  ஆனால் தவறாமல் தனது இல்லத்திலுள்ள பெருமாளை பூஜித்து வருகிறான்.

    மற்றொருத்தன் இத்தகைய கார்யங்களைச் செய்வது இல்லை.  வருடந்தோறும் தனது முன்னோர்களுக்கு ச்ராத்தம் செய்கிறான்.  அதைத் தவறுவதில்லை ஊர் ஊராக திவ்யதேசங்களில் சென்று பெருமாளை சேவிக்கிறான்.  தன் குடும்பத்தில் பற்றுதலில்லை.  முக்யமான கர்மாக்களைச் செய்யாமல் மந்த்ர ஜபம் செய்கிறான்.

    இப்போது இவ்விருவர்க்குள்ளே யார் செய்வது சரி?  என்பதே விவாதம்.

    மிகவும் சூட்சுமமான கேள்வியிது…  இல்லறத்திலேயே இருந்து கொண்டு, செய்ய வேண்டிய கர்மாக்களை விடாமல் செய்து கொண்டிருப்பவனா? அல்லது வருடந்தோறும் செய்ய வேண்டிய முன்னோர் கடனாகிய திவசத்தை மட்டும் செய்து கொண்டு, ஏனைய கர்மாக்களைச் செய்யாமல், திவ்யதேச யாத்திரைகள் செய்பவனா?  இருவரில் யார் செய்வது சரியானது?

     சாஸ்திரங்களில் ஆழ்ந்த புலமையும், ஆராய்ந்து பார்க்கும் திறனும், கூர்மையான மதிநுட்பமும் வாய்க்கப் பெற்ற ஒருவரால்தான் இக்கேள்விக்கு விடையளிக்க இயலும்.  ஆகையால்தான் தேவசபையில் இது விவாதிக்கப்பட்டது.  தேவரிஷிகளோ, ப்ரஹ்மரிஷிகளோ இதற்கு பதிலுரைக்க தங்களுக்குத் தகுதியில்லை எனத் தீர்மானித்தனர் முன் சொன்னபடி எல்லாவிதத்திலும் சிறந்தவரான தேவகுருவான ப்ருகஸ்பதியே பதிலுரைக்க வல்லவர் என ஒரே குரலில் மொழிந்தனர்.

     அதுசரி… ப்ருகஸ்பதியின் தீர்ப்பு மட்டும் சரியானதுதானென்று எப்படி அறிவது எனும்போது, ஒரு சபதமும் செய்தனர்.  அதாவது இந்த விவாதத்தின் தீர்ப்பு தவறானது என்றால் தீர்ப்பு வழங்குபவர் தனது தெய்வத்தன்மையை இழப்பார் என்று.

     இங்கு சற்று யோசித்துப் பாருங்கள்.   தற்காலத்தில் நீதி, நேர்மை, ந்யாயம் என அனைத்தும் பாப புண்ய பயமில்லாமல் பணத்தின் வழி செல்வதைப் பார்க்கிறோமே!  ஆனால், புராண காலங்களில் மக்கள் தர்மத்தை மீறி நடக்க பயந்தனர்.

    இனி தீர்ப்பு வழங்க வேண்டிய தருணம்.  மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தேவகுரு நிலை தடுமாறினார்.  எல்லம் விதியின் செயல்.  மகான்களே மனம் மயங்கும்போது நம்மைப் போன்ற சாமான்ய மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.  சாஸ்திர விஷயங்களைப் பேசும்போது மனம் போனபடி பேசக்கூடாது.  ப்ருகஸ்பதி தனது மேதாவிலாசத்தில் மமதை கொண்டார். விதியினால் மதி இழந்தார். இல்லறத்தில் இருந்து கொண்டு நற்கார்யங்களை செவ்வனே செய்பவனைவிட திவ்யதேசங்களுக்கு யாத்திரை செய்பவனே சிறந்தவர் எனத்  தீர்ப்பளித்தார். 

     அமைதியான தேவசபை தேவகுருவின் தீர்ப்பினால் தடுமாறியது.  இதைச் சற்றும் எதிர்பாராத மகரிஷிகள் மிகுந்த வருத்தமுற்றனர் பெரியோரின் வார்த்தைகள் பொய்யாகலாமா!  வழிகாட்டியாக வாழ்பவர்கள் நெறி தவறலாமா?  தேவகுருவும் தடுமாறிவிட்டாரே!  என திகைத்தனர்.   இது தர்மத்தின் தீர்ப்பல்ல.   மிகவும் தவறான தீர்ப்பு.   ஏற்கனவே தீர்மானித்ததின்படி தேவகுரு தெய்வத்தன்மை இழந்தார்.

     மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய தருணத்தில் ஏற்படும் கவனக் குறைவு பெரும் விபரீதத்தை விளைவிக்கும்.   இல்லற தர்மங்களை துறந்துவிட்டு தீர்த்த யாத்திரை செய்வது கூடாது இல்லற தர்மத்தின்  வழி ஒழுகியும் அதற்கேற்ப காலம் வாய்க்கும்போது தீர்த்த யாத்திரை செய்வதும்தான் சிறந்த மனிதற்குரிய செயல்பாடு.   அதனை மறுத்தும், மறைத்தும் ப்ருகஸ்பதி தீர்ப்பு கூறியது பெரும் தீங்கானது.

     (மிகவும் கவனமாகப் படியுங்கள். ஏனெனில் தீர்த்த யாத்திரை செய்வதையும், கோயில்களுக்குச் செல்வதையும் ஆட்சேபிக்கவில்லை.  அவரவர்க்குரிய வர்ணாச்ரம தர்மத்தின் வழி நடத்தல் எல்லாவற்றயும்விட இன்றியமையாததாகும்.  அதைவிட்டுவிட்டு கோயிலுக்குச் செல்வதும், தீர்த்த யாத்திரை செய்வதும் சாஸ்திர விரோதம் என்பதே இதன் உட்கருத்து).

     அதனால்தான் ப்ருகஸ்பதியின் தீர்ப்பு தவறானது.  அதன்படி அவர் தனது பதவியை இழந்து தேவலோகத்திலிருந்து நழுவி பூமியில் ஒரு சாதாரண மனிதனாகப் பறந்தார்.  பரத்வாஜரின் குலத்தில் மந்த்ரஜித் எனும் ப்ராம்மணனுக்குப் பிள்ளையானார்.

     இப்போது த்ரேதா யுகத்தின் நடுப்பகுதி.  மந்த்ரஜித்தின் பிள்ளையாகப் பிறந்தவர்,  பிறந்த போதே தன் தாயை இழந்தார்.  தகப்பனாரோ ஏழை.  இந்தப் பிள்ளையை வளர்க்க மிகுந்த சிரமப்பட்டார் ஒருபுறம் ஏழ்மை.  மற்றொருபுறம் பிள்ளைக்கு தீராத நோய்நொடிகள்.  தன் மகன்மீது கொண்ட பற்றுதலினால் பெரும் துயரமுற்று, அதே மனவேதனையுடன் மரித்தார்.   ப்ருகஸ்பதி அனாதையானார் இருப்பினும் முன் பிறவியில் தேவகுருவாக இருந்ததும், தனக்கேற்பட்ட இத்தகைய இழிநிலைக்கான காரணத்தையும் நன்கறிந்திருந்தார்.   எனவே மிகவும் கவனமாக தனது இந்த பிறவியை கழித்துவிட்டுப் பின்னர் மீண்டும் இழந்த பதவியைப் பெற வேண்டும் எனும் காரணத்தால் மௌனம் காத்தார்.

    பெரும்பாலும் தனது நேரத்தைத் தனிமையிலேயே செலவழித்தார்.  சரியான அன்ன ஆகாரமின்றியும், அரோக்யமிழந்தும் பெரும் கஷ்டத்துடனேயே வாழ்க்கையை கழித்து வந்தார் மறுபடியும் விதி அவரிடம் விளையாட்டைத் தொடங்கியது.  ப்ருகஸ்பதியின் பாபம் அளவை மீறியது.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 13- The Brihaspathi who lost his position

     Brihaspathi, known for his intelligence and wise actions, is the guru of Devas. He holds the second position after Saraswathi, in knowledge and he has used his intelligence to save the Devas from many tricky situations.

     Once, he had to face a lot of difficulty and let us see how Varadan helped him out of it.

     In Krita yugam, Brahma consecrated the Varadan who emerged from his yagam. “Ka” is Brahma’s name and since he prayed to Perumal here, this place came to be known as Kanchi. In Treta yugam, a rishi called Mahasaandhar roamed this area in the form of elephant and got moksham due to Varadan’s blessing.  This story of Brihaspathi spans across both the Treta and Dwapara yugams.

    Once, there was a great debate in Devalokam.  Since the topic of debate was an important one, all the Devas under Indra, Devarishis and Brahmarishis had gathered there. 

    This was the topic of debate. There was a grishasthan who has been doing all his everyday rituals like Sandhyavandhanam, Devapujai, Oupasanam, Agnihotram and Vaishvadevam. (NOTE: We have to do these rituals everyday without fail.  Due to Kali’s prowess, the number of people following these rituals have greatly reduced.  In fact, most of us may not even know the reason for these rituals.  If you fall in this category, do reach out to elders and learn these rituals and their significance from them).

     This Grihasthan had never visited any Divya Desam and was content praying to the Perumal in his home. 

     On the other hand, another man never followed any of these rituals.  But he used to do the yearly devasam for his ancestors without fail and visited many Divya Desams and prayed to Perumal there.  He used to do mantra japam without doing any of the daily rituals.  His family life was good without any paucity.

    As you would have guessed by now, the debate is to determine which one of the two is right.

     This important question is relevant even today.  Is it good to be at home and follow all the daily rituals as prescribed by our sastras or is it good to do just the yearly devasam and visit different Divya Desam Perumal?  Who amongst these two is better? Since this is a difficult question that can only be answered by someone who has an in-depth knowledge of our sastras and an uncanny ability to distinguish between right and wrong, this topic was debated in Devalokam. so, the responsibility to answer this question fell on the shoulders of Brihaspathi.

    Also, there was a bit of apprehension among those present there.  How do we know if Brihaspathi is giving us the right answer?, they thought. At that time, they decided to make a vow that whoever gives the wrong answer to this question will lose their divine power.

     Let’s stop here for a second and compare it with the current -day situation. Most decisions today are done without regard to justice, fairness and integrity, and with money as the only goal.  There is no fear or sins now.  But in those days, people were scared to stray away from the path of Dharma.  This is definitely something to ponder about.

     Moving on to the decision, Brihaspathi was a bit confused despite his knowledge. But he refused to acknowledge it because he was arrogant about the knowledge he possessed.  After all, he is the guru of Devas, he thought. With such arrogance, he said that the person who is visiting Divya Desams and praying to Perumal is better than the person who is at home and doing all rituals. 

    Hearing this decision, there was a moment of silence in the debate hall.  The Maharishis, who did not expect this decision, felt saddened. how can the words of our elders be negated like this, they wondered.  How come the Deva guru gave such a verdict?  Why did he get confused suddenly?  They felt this was an unjust decision. As these thoughts pondered in their minds, the Devaguru lost his divine powers.

    This is the hand of fate. When the greatest of gurus like Brihaspathi can feel confused, what about normal people like us?  This is why we should think before saying anything, especially if it is related to sastras and Dharma.  It also goes to show that lack of focus during crucial times can be detrimental to one’s life. 

    Our sastras clearly say that every man’s highest duty is to do the daily rituals, even if it means that he is confined to his house.  If and when he gets a chance, he can visit Divya Desams, but that can never take precedence over daily rituals.  But Brihaspathi gave the wrong verdict and this proved bad for him.

    (Read this once again. Visiting temples and Divya Desams without doing the prescribed daily rituals does not augur good for an individual.  Every person has a mandatory set of rituals according to Varnashrama Dharmam and this must be followed without fail. There is nothing wrong in going to temples, but only after you do the actions prescribed by the sastras.  Not doing/following these rituals amounts to violation of your duties.)

     This is why Brihaspathi’s decision is wrong and as a result, he lost his divine powers. During the middle part of Treta yugam, he was born as a man on earth to a Brahman called Mantrajit who belonged to the lineage of Bharadwajar.   He lost his mother after birth and his father was poor as well. The father found it hard to raise this child because of poverty on one side and the constant diseases that was afflicting the child on the other.  Unable to bear this stress, the father died shortly after. 

    The child became an orphan and roamed around aimlessly. But since he was Brihaspathi in his previous birth, he knew who he was and why he had to go through so much misery.  He patiently bided his time on earth and waited to finish this janma, so he can gain his position as Brihaspathi again.  For this reason, he remained mute and said nothing to anyone.

    He spent most of his time alone and his health suffered greatly because of a lack of food and also due to the many diseases that plagued him.  But still played games with him.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 12|உத்தரவேதியுள் உதித்த உத்தமன்|Vasudevan emerged from Vapa Homam| Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 12 of the Audio Book : https://soundcloud.com/apnswami/vtm-12-uthara-vediyul-uditha-uthaman

https://soundcloud.com/apnswami/vtm-12-uthara-vediyul-uditha-uthaman

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-part-12-vasudevan-emerged-from-vapa-homam

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 12 – 

உத்தரவேதியுள் உதித்த உத்தமன் – வபா ஹோமத்தில் வந்த வாசுதேவன்

     நல்ல சித்திரை மாதம் வளர்பிறை.   வசந்தருதுவின் கோலாகலமான காலம் எல்லோருக்கும் ஆனந்தமளிப்பதாக இருந்தது.  முப்பத்து முக்கோடி தேவர்களும் குழுமியுள்ள காஞ்சியின் பெருமைதனை எத்தனை முறை சொன்னாலும் வர்ணித்துவிட முடியாது.  அனைவரின் மனதிலும் இனம்புரியாத ஆனந்தம் குடிகொண்டிருந்தது.  வசந்தருதுவின் வாசத்தைச் சுமந்த காற்றினால் யாக குண்டத்தில் அக்னி அழகாக வலதுபுறம் சுழன்று ஜ்வலித்தான் திசைகள் தெளிந்திருந்தன.  அழகிய யாகக்குதிரை அலங்கரிக்கப்பட்டு யூபஸ்தம்பத்தில் கட்டப்பட்டிருந்தது.  சதுர்தசியின் ஞாயிற்றுக் கிழமை.  மங்களமான ஹஸ்தம் எனும் நக்ஷத்ர விசேஷம் அன்றைய தினம்.   அந்த இனிய காலைப்பொழுதில் ப்ரம்மா மிகமுக்யமான வபாஹோமம் எனும் சடங்கினைச் செய்தார்.   யாகக் குதிரையினின்றும் உண்டான மேன்மையான வபை எனும் திரவியம் வேள்வித்தீயில் சமர்ப்பிக்கப்பட்டவுடன், எங்கும் திவ்யமான வாசனை படர்ந்தது.

     இதுநாள் வரையிலும் அனுபவித்திராத அந்த வாசனையை நுகர்ந்ததும் மனதினுள் மேன்மேலும் இன்பம் கிளர்ந்தது.  அப்போது ஆகாயத்தில் தேவதுந்துபிகள் முழங்கின தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.  வேதகோஷம் விண்ணைப் பிளந்தது ஜயவிஜயீபவ!!!  ஜயவிஜயீபவ!!!!!” எனும் ஜயகோஷம் திசைகளில் எதிரொலித்தது.  காஹளம், வலம்புரி முதலியவற்றின் ஓங்கார நாதத்தால் உலகமனைத்தும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது.

     அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று யாக குண்டத்தின் நடுவிலிருந்து ஒரு தெய்வீக விமானம் தோன்றியது.  அதன் நடுவே கோடிசூர்யனைப் போன்ற ப்ரகாசத்துடன், சுடர்விடும் பெரிய கிரீடத்துடன், சந்திரன் போன்ற வதனத்துடன், இரண்டு காதுகளில் ஒளிவீசும் மகரகுண்டலங்களுடன், திருமகள், மண்மகளான இருபிராட்டிகளும் திருமேனியில் அணைந்து நிற்க, இரு பெண் அன்னங்களின் நடுவே ராஜஹம்ஸம் போன்றும், ஒரு மாபெரும் நீர்வீழ்ச்சியின் இருபுறமும் சிறிய அருவிகள் பெருகும் மலையின் அழகு போன்றும், கம்பீரமான ஆண்யானையொன்று தன் இருபுறமும் இரண்டு பெண் யானைகளுடன் பவனி வருவது போன்றும், பேரருளாளன் தோன்றினான்.

    இமையோர்களான தேவர்களின் கண்களைக் கூட கூச வியக்கும் ஒளிச்சோதியாய் மலர்ந்த முடிச்சோதியும், முகச்சோதியுமாக இமையோர் தலைவன் உத்தரவேதியுள் உதித்தான்.

    யாகத்தின் நடுவே இங்குமங்கும் நடையாடிக் கொண்டிருந்த சூரியன் திடீரென்று காணாமல் போனான்.  அக்னிதேவனும் அங்கில்லை எங்கு சென்றர்கள் இரண்டு தேவர்களும் எனத் தேடிய போதுதான் தெரிந்தது அவர்கள் எங்கும் போகவில்லை. அங்கேயேதான் நின்றனர்!!” என்று… வரதனின் சோதியுருவில் அவர்களின் தேசு அழிந்தது.  கோடி சூரியர்கள் உதித்தாற் போன்று வரதன் தோன்றியபோது ஒளிபொருந்திய சூரியன், பகலில் பற்ற வைத்த தீபம் போன்று பயனற்றவனானான்.  பகலவனாம் சூரியன் பகல்விளக்காகினான் என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம்!!!!

     ஆனந்தக் கூத்தாடினான் அயன். ஆஹா.. ஆஹா… என்று அவனின் நான்கு தலைகளும் தனியாக நர்த்தனம் ஆடியது ஒரு விசித்ரமாகத்தானிருந்தது. புண்யகோடி விமானத்தின் நடுவில் புராண புருஷனாம் வரதனைக் கண்டவுடன் விழுந்து வணங்கினான்.  எழுந்து தொழுதான் ஆடிப்பாடி அரற்றினான். முன்னும், பின்னும் முறைமாறி சேவித்தான்.  இடம் வலதாக மாறி மாறி பிரதட்சிணம் செய்தான்.

    அருகே ஓடிவந்து பெருமாளை சேவித்தான் உடனே அப்படியே பின்னால் நகர்ந்து சென்று ஆஹா.. என்றான். திருவடியை சேவித்து முடிப்பதற்குள் திருக்கைகளைத் தேடினான்.  அதற்குள் திருமுகமண்டலத்தில் திளைத்தவன் மறுபடியும் திருவடியில் விழுந்து மகிழ்ந்தான்.

     “வரதா! வரதா! என்று வாய் புலற்றினான்.  மேனி சிலிர்த்தான்.   குரல் தழுதழுத்தான்.  கட்டுப் படுத்தாமல் கண்ணீர் உகுத்தான்..   காலம் காலமாக, தான் செய்த தவம் பலித்ததே என மகிழ்ந்து குதித்தான்.   கண்கள் காண்டறிய காண்தகு தோளண்ணலைத் தனது எண் கண்களாலும் அள்ளிப் பருகினான். எத்தனையோ வேதவாக்யங்கள் கொட்டிக் கிடந்தாலும் எதுவும் நினைவுக்கு வராமல் நிலை தடுமாறினான்.

     “திருமகளும் மண்மகளும் திகழ்ந்து நிற்க அருமையான அருமறையாம் வேதத்தின் பொருளாய் விளங்குபவனே!  விண்ணோர் ஈசனே! அனந்தசயனனே!  அனைத்துக்கும் அதிபதியே,  அருளாளனே! ஆனந்தசொரூபனே!  கருமணியே! கோமளமே!  கரிகிரிமேல் நின்றனைத்தும் காக்கும் கண்ணனே!  என் கடுவினைகளைக் காணாது ஒழிந்தேனே!” என உள்ளம் உருகி, உதடுகள் புலற்ற, வரதனின் துயரறு சுடரடியில் தூய மனத்துடன் தொழதெழுதான் தாமரையோன்.

    “கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியன கண்டோம் என தேவர்கள் அனைவரும் ஆனந்தக் கூத்தாடினார்.  ஒரு வேள்வியில் இரு பலன்கள் கிடைத்ததே என அகமகிழ்ந்தனர்.  முதலில் வேகவதியின் வெள்ளத்தைத் தடுக்க திருவணையாக அவதரித்த போது ஆதிசேஷன் மீது அனந்தசயனனாக சேவித்தோம் அவ்வணையின் துணைகொண்டு கடக்க முடியாத சம்சார சமுத்ரத்தைக் கடந்தால் இதோ இங்கு அத்திமலையின் மீது யாகத்தின் பயனாக தேவாதிராஜனின் திவ்யதரிசனம் பெறுகிறோம்.  எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இந்த பாக்கியம் கிடைக்குமா?  என கொண்டாடினர்.

     கஸ்தூரி திலகமிட்ட திருநெற்றியும், கருணை பொழியும் திருக்கண்களும், கூர்மையான மூக்கும், வபையின் வாசனை வீசும் அழகிய அதரபல்லவங்களும், அழகிய திருக்கையில் ஏந்தியுள்ள சக்கரம், சங்கு, கதையுடன் அபயஹஸ்தமும் அப்பப்பா!!!… அந்த சோதி வெள்ளத்தினுள் பிரமன் முழுவதுமாக மூழ்கிவிட்டான்.

    “நான்முகனே! நீ வேண்டும் வரம் கேள்..” – கம்பீரமான அந்த மதுர த்வனி வரதனின் திருமுக மண்டலத்தினின்றும் உண்டானது.

     அக்குரலின் இனிமையில் தன்னை மறந்தான் தாமரையோன். மீண்டு தன்னிலைக்கு வருவதற்கு அவனுக்கு சில நாழிககள் ஆயின பிரமனே! உனது விருப்பம் என்ன?’ என மீண்டும் அருள்வரதன் தன் வாய்திறந்து பேசினான்.

    “ஐயனே! நித்யசூரிகள் அனுதினமும் சேவிக்கும் தேவரீரின் திருமேனி இன்று எனக்கும் புலனாயிற்றே!  இத்திவ்யசேவை தவிர எனக்கு வேறேதும் விருப்பம் உண்டோ வாரணவெற்பின் மழைமுகிலே!  அத்திகிரியின் பாரிஜாதமே! பெருந்தேவியின் நாதனே! பேரருளாளனே!  இதோ இங்கே இப்போது சேவை சாதிக்கும் இதே திருக்கோலத்துடன், வரம் தரும் மாமணிவண்ணனாக என்றுமே இங்கேயே அர்ச்சாமூர்த்தியாக சேவை சாதித்தருள வேண்டும். தேவ, மனுஷ்ய, சித்த, கந்தர்வ, கின்னர, கிம்புருஷ, சாரணர் என அனைவரும் தேவரீரை சேவித்து ஆத்ம லாபம் அடைய வேண்டும்.”

    “அப்படியே!” என அருளினான் அருள்வரதன்.  அயன் செய்த அயமேதம் எனும் யாகத்தில் ஆவிர்பவித்த வரதனுக்குப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தனர் தேவர்கள்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                                 Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 12 – Vasudevan emerged from Vapa Homam

     The Tamil month of Chithirai (mid-Apr to mid-May) and the Vasantha rithu (season) is a happy and festive period for everyone.  During this period all the 33 crore devas were assembled at Kanchi waiting for Lord to emerge, further affirming the greatness of this Sathyavrata Kshetram.  Due to this Vasantha rithu, the air was filled with the fragrance of blooming flowers and probably this made the Agni Devan also to flame brighter! Everyone was waiting in anticipation as all preparations were in place including the decorated yagam horse that was tied to the Stumbams. 

     That day was an important one. It was a Sunday with Chaturthi thithi and Hastham star.  In the morning, Brahma started with the Vapa Homam.  As he offered the item called Vapa made from the yagam horse, the smell that emanated from the homam was divine.  This was a unique smell and the nostrils of every individual present there were working hard to imbibe it to the mind. At that time, divine instruments were played in the sky and devas started showering flowers.  The words “Vijayeebhava! Vijayeebhava!” reverberated in all directions. The sound of pranavam from Valampuri and Kahalam immersed the world in bliss.

     Amidst all these sounds and festivities, a divine vimanam emerged from the center of the yagam with the radiance of the brightest sun.  With a shining bright crown on His head, in the color of the moon, with makara kundalam on either ear, with Thirumagal and Manmagal close to His chest, He looked like a royal swan standing with two swans on either side.  The sight resembled a huge waterfall with two smaller waterfalls on either side or even better a strong male elephant sauntering majestically with two female elephants on either side.  With such radiance, majesty, and beauty, Perarulaalan emerged from the homam.

    Even the Imaiyorgal (devas) could not look at Him because of His sheer radiance and this is how He emerged from the homam to prove once again that He is Imaiyor Thalaivan (Leader of the Devas).

    Sun, who was moving in and around the yagam, disappeared suddenly and so did Agni Devan.  Where did they go suddenly?  Well, nowhere! “Their radiance became dull when compared to the radiance of Varadan and hence they became inconspicuous.” Isn’t this natural?  Perumal with the radiance of a thousand suns clearly eclipsed the acquired radiance of both the sun and fire and they looked like a mere light as opposed to a blazing sun.

     Brahma’s happiness knew no bounds. “Ahaa…Ahaa…” were all the words that came out of his mouth and all his four heads danced in joy.  Though it looked strange for the onlookers, Brahma just could not hold himself anymore and this unbounded happiness was evident everywhere.  He prostrated to Varadan many times, danced around Him, enjoyed his sight from all sides, and circumbulated Him countless times.  Brahma came running towards Perumal and prayed to Him from close quarters. The next moment he ran back to see the beauty of Perumal from afar.  He looked at every part of Perumal and prayed to his heart’s content. Such was Brahma’s joy!

    Tears were streaming down Brahma’s eyes as he kept shouting “Varada! Varada!” His body shivered and his voice quivered because he was finally getting the result of thousands of years of penance.  Brahma could not get enough of Perumal and as he stood there taking in all His beauty, he was completely lost and mesmerized and could not recollect one Veda mantram to praise Him. 

    After composing himself, Brahma said, O meaning of Vedas and the One standing majestically with Thirumagal and Manmagal on either side! O Lord of the skies! O reclining One! O owner of everything in this world! O bestower of all boons! O embodiment of happiness! O dark-hued One! O lotus-eyed beauty! O protector of everything and everyone! I got your darshan to my heart’s fill and with this all my past sins are gone!” He cried with joy and happiness and placed all his burden at the lotus feet of Perumal. 

    “We saw You! We saw You! Our hearts are filled with nothing but happiness now” said the Devas.  They were overjoyed that they got two benefits from the same yagam.  Earlier, they had a darshan of Him reclining on the Adiseshan when He acted as a dam to stop the raging Vegavathi.  When they used the dam to cross the most difficult samsaram, they now have the privilege of seeing Devadirajan on Athigiri hill.  They felt lucky and privileged and harped on both because this sight is something that they have been waiting for through many janmas (lives). 

    With a kasthuri tilak on His forehead, eyes full of compassion, a sharp nose, three hands each holding a shanku, chakram, gadhai and the fourth one as a Abhaya Hastham, and a small of Vapa emanating from His body…..!  The description can go on and on, but in all everyone there were mesmerized by His beauty and radiance. 

    A thundering voice spoke to Brahma, “O four-headed one. Ask for your wish and it will be granted.” 

     It took a few minutes for Brahma to shake himself out of this trance. Again, Perumal said, “Brahma, what is your wish?”

    “My lord! The Nithyasuris are the ones who see You at all times.  Today, we had the privilege of seeing You in this form.  I have no other wish O paarijatham of Athigiri.  Lord of Perundevi!  O rain cloud of summer!  My only wish is that You should stay here in this Archai form as the bestower of all wishes.  Please continue to bless Devas, Kinnaras, Siddhas, people, and anyone else who come here to pray to You and show them the path of moksham (liberation).” 

     “Your wish is accepted,” said Perumal and everyone who stood there praised His glory.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 11|அக்நியில் மறைந்த அவிர்பாகம்|The disappearance of offerings|Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 11 of the Audio Book :  https://soundcloud.com/apnswami/vtm-11-agniyil-maraindha-avirbaagam

 

 

 

https://soundcloud.com/apnswami/vtm-11-agniyil-maraindha-avirbaagam

 

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-part-11-the-disappearance-of-offerings

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி – 11 அக்நியில் மறைந்த அவிர்பாகம்

     பன்னிரெண்டு நாட்கள் யாகம் நடந்தது பதின்மூன்றாம் நாள் இருபத்தியோரு யூபஸ்தம்பங்கள் நாட்டப்பட்டன.  அதன் வரிசை க்ரமங்கள் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளன.  வில்வ மரத்தின் தூண்கள் ஆறு; கருங்காலியில் மற்றும் ஆறு;  அதுபோன்றே பலாசம் எனும் புரசை மரத்தினால் ஆறு தூண்கள்;  நெருவுள்ளியில் ஒன்றும், தேவதாரு எனும் கோங்கு மரத்தினால் இரண்டும், மொத்தம் இருபத்தியொன்று. இம்மரத்தூண்களை நடுவதற்குரிய மந்த்ரங்களையும், திசைகளையும் சாஸ்த்ரத்தின்படி வேத விற்பன்னர்கள் தெரிவித்தனர் அழகிய வஸ்த்ர, தூப தீபங்களாலே அத்தூண்களுக்கு ப்ரதிஷ்டையும், பூஜைகளும் நடந்தன.

     அக்நிஷ்டோமம் முதலான யாகங்களும் தொடங்கப்பட்டன.   யாகத்தின் யஜமானராக, தீட்சிதரான பிரமன் தனது மனைவியருடன் சேர்ந்து பகவானை ஆராதித்துக் கொண்டிருக்கிறான்.  எங்கும் மங்களமான மனோநிலை மகிழ்ச்சியைத் தருகிறது இந்த்ராய ஸ்வாஹா…. அக்நயே ஸ்வாஹா…. வருணாய ஸ்வாஹா…..” என யாக மந்திரங்களை உயர்ந்த குரலில் உச்சரித்து, அந்தந்த தேவதைகளின் பெயரைச் சொல்லி யாகத்தீயில் அவிர்பாகத்தை அளிக்கிறான் பிரமன்.

     அதிகமான ஆவல் உந்தித்தள்ள, தேவர்கள் தயாராக உள்ளார்கள்.  ஒவ்வொரு தேவனின் நாமத்தைச் சொல்லி புனிதமான அவியுணவை அக்னியில் சேர்க்கும் போதும், தேவர்கள் தங்களுக்குள்ளே ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொண்டு புன்னகைக்கின்றனர்.  ஆம்!!! யாகம் என்பதே தேவர்களின் ஆராதனைதானே! மந்திரங்களைச் சொல்லி தேவர்களுக்கு அளிக்கும் அவியுணவை அக்னிதேவன் பெற்று அந்தந்த தேவர்களுக்கு எடுத்துச் சென்று அளிக்கிறான்.

     யாகத்தில் தேவர்களின் திருநாமத்தை உரத்த குரலில் சொல்ல வேண்டும். பெயரில்லாமல் அவிர்பாகத்தை அக்னியில் இடக்கூடாது.  ஏனென்றால் முகவரி இல்லாத கடிதத்தை எவரிடம் சென்று சேர்ப்பது?  எனும் கேள்வி உண்டாகிறது அல்லவா அக்னிதேவனுக்கு அவியுணவை கொண்டு சேர்ப்பவன் என்று பெயர்.  அனைத்து தேவர்களும் அக்னியின் மூலமாகவே தங்களுக்குரிய யாக பாகத்தைப் பெறுகின்றனர்.  எனவே பெயர் சொல்லி அளிப்பது முக்கியம்.

    நான்முகனும், நான்மறையின் விதிப்படிதான் வேள்வியை நடத்துகிறான். ப்ரஹ்ம ஜ்ஞானிகளான வசிஷ்டர் முதலிய பல மகரிஷிகள் இங்கு திரண்டுள்ளனர்.  ஆனாலும் தேவர்களிடையே சலசலப்பு கிளர்ந்தது. நீ அடைந்தாயா!  உனக்குக் கிடைத்ததா? இல்லையே!  இதென்ன விந்தை? ஏதாவது கபட நாடகமா?” என்று அவரவர்கள் பேசிக் கொண்டனர்.  தேவர் திரளில் திடீரென என்ன கலக்கம்?

     ப்ரஜாபதி பார்க்கிறார் என்றவுடன் தங்களுக்குள் பேசிக்கொள்வதை விடுத்து அவரையே அனைவரும் பார்த்தனர்.   இந்த திடீர் அமைதியின் காரணம்தான் என்ன?  இனியும் கேட்காமலிருப்பது அறிவீனம்! என நினைத்தவர்கள் பிரமனிடம் முறையிட்டனர்.

     “பிதாமகரே! இஃதென்ன பித்தலாட்டம்?” சற்றே கோபத்துடன் அவர்கள் கேட்டதும் பிதாமகனாம் பிரமன் புரியாமல் பார்த்தான்ப்ரத்யக்ஷத்தில் நடப்பது ஒன்று; பரோக்ஷத்தில் நடப்பது வேறு என்றனர் மீண்டும். 

     “அமரர்களே! அமைதியாக இருங்கள். என்ன நடந்தது என்பதை விவரமாகத் தெரிவியுங்கள் – பிரமன்.

     “நாங்கள் காணும் வகையில், ப்ரத்யக்ஷமாக (நேரிடையாக) யாக திரவியமான அவியுணவை அக்னியில் அளிக்கிறீர்கள் – தேவர்கள்.

    “ஆம்! அதிலென்ன…..” பிரமன்.

     “ஆனால், பரோக்ஷத்தில் (மறைமுகமாக), அவைகள் மாயமாகின்றன. எங்களின் பங்கு எங்களுக்குக் கிடைக்கவில்லை விரிஞ்சனே!  இஃதென்ன வஞ்சனையா அல்லது அசுரரின் மாயையா!  இல்லையெனில் அக்னிதேவனின் அகங்காரமா!!”

     கோபத்தில் உதடுகள் துடிக்க, உடல் நடுங்க தேவர்களின் அந்தப் பேச்சு தாமரையோனுக்கு நகைப்பளித்தது.

     “தேவர்களாகவிருந்தும் தெய்வத்தின் தெய்வமான எம்பெருமானை இன்னமும் புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்களே!” என அவர்கள்பால் இரக்கமும் உண்டானது.

     எதிர்பார்த்தது கிடைக்காமல் ஏமாற்றம் ஏற்பட்டால், எவராலும் அதைத் தாங்க முடியாதல்லவா! பிதாமகன் வேள்வியில், தங்களின் பாகம் கிடைக்காததினால் அன்றோ இவர்கள் அதிகம் பொங்குகின்றனர் சரி, இனி அவர்களுக்கு உண்மையை புரிய வைத்திடலாம்.  உள்ளத்தில் தீர்மானித்தவனாக உயர்ந்த பொருள் பொதிந்த வார்த்தையைப் பேசினான். 

     அது வேதத்தின் சித்தாந்தம். வேழமலையின் ரகசியம்.

     “தேவர்களே! இந்த யாகத்தின் நோக்கம் அறிவீர்களா?!  அனைத்து நற்கருமங்களாலும் ஆரதிக்கப்படுபவன் ஸ்ரீமந்நாராயணன் தானே! யஜ்ஞ புருஷன், யஜ்ஞ மயமாக இருப்பவன், யஜ்ஞத்தின் பலனளிப்பவன் அவன்தானே! அத்தகைய பெருமாளை ஆராதனை செய்யும் இந்த யாகத்தில் நமது கார்யம்தான் என்ன?”

     பிரமனின் கேள்விக்கு தேவர்கள் மௌனம் காத்தனர்.   உங்களில் ஒருவன்தானே நானும்…. தேவர்களான உங்களுக்குப் போன்றே, அவிர்பாகத்தில் எனக்கும் பங்கு உண்டல்லவா!  அவ்வாறெனில் எனக்குரிய பங்கும் எங்கே எனக் கேட்கலாகுமா?”

    பிரமன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல் தேவர்கள் திகைத்தனர்.

     “இங்கு இந்த உத்தரவேதியினுள் அக்னி குண்டத்திற்குள் சமர்ப்பணை செய்யும் ஆகுதிகளையெல்லாம், நமது அந்தராத்மாவான (நம்முள் உறைபவனான) மகாலட்சுமியின் மணாளனுக்கன்றோ சமர்ப்பணை செய்கிறேன்!!  நான் என்றும், என்னுடையது என்றும், எண்ணம் கழிந்து, சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம் என்று பகவானுக்கு அர்ப்பணை செய்வதுதான் சிறந்த பூஜை“.

     “தேவர்களே! நமக்கு இந்த சக்தியெல்லாம் எவருடைய அநுக்ரகத்தினால் உண்டானது?!!  சிந்தியுங்கள்…. நம் ஆத்மாவினுள் அமர்ந்துறையும் பரமாத்மாவை த்யானம் செய்திடுங்கள் உடலினுள் மறைந்து கிடக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்த ஆத்மாவிற்குள்ளும் மறைந்துறையும் மறைபொருளான வரதனை அறியுங்கள்“.

     “உடம்பில் அணியும் உடைகள் போன்றன்றோ நாம் பரமாத்மாவின் தேகத்தில் இருப்பது!!… உடைகள் எடுப்பாகத் தோன்றுவதன் காரணம், அதனை உடுத்தியுள்ளவன்தானே!  எனவே வரதனின் அராதனத்தில் அவிர்பாகத்திற்காக நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். எம்பெருமானின் ஆவிர்பாவத்திற்காகக் காத்திருங்கள் என உரைத்தான்.

     நான்முகனின் நல்லுபதேசத்தால் தேவர்கள் மனம் தெளிந்தனர்.  பெருமாளை சேவிக்க வந்த தங்களுக்குத் தனிப் பெருமை எதுவுமில்லையென உணர்ந்தனர். யாகத்தின் பலன் எதுவென்று நன்கறிந்த அவர்கள், வைத்தகண் வாங்காமல் அக்னி குண்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஆம்! அவர்கள் இமையோர் அல்லவா! இமையோர் தலைவனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                                 Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 11-  The disappearance of offerings

     The yagam went on for 12 days and on the 13th day, 21 sthambams were erected as per the procedure laid down in the Vedas.  Out of these, six were of Vilvam (Bael) tree, six were of karungali (Cutch) tree, six were of Palash/Purisai (Flame of the forest) tree, one of Neruvilli and two of Devatharu or Kongu tree.   There are specific mantras to plant these trees and they have to be planted in specific directions.  All of these were followed diligently.  These sthambams were decorated with bright cloth and poojas were also performed. It was indeed a fascinating sight for the onlookers who were gathered there.

     Agnishtomam and other connected  yagams were started by Brahma along with his wives and started praying  Perumal for His blessings. There was happiness everywhere and the air reverberated with words such as “Indraya swaha….Agnaye swaha…..Varunaaya swaha…”  Brahma called the name of each deva and gave their respective offering in the yagam.

     The Devas were waiting in anticipation for their offering.   Every time Brahma called a Deva’s name and made an offering, all the Devas beamed with happened and looked at each other  because yagams are glorifications for the Devas. They were all waiting for Agni Deva to come and give their respective offering because He is the conduit who delivers these offerings to the respective Devas.

     In yagam,  one should say the name of every Deva in a loud  voice and no offering should ever be made without a name. Why?  How can you deliver a letter with no address on it?  Likewise, Agni Devan needs a name to deliver the offering and this is why he is calledAviyunai Kondu Serpavan (one who delivers offerings).”

     Brahma did all the rituals as per the Vedas and all the rishis headed by Sage  Vasishtar ensured that all the processes were followed perfectly.  But still there seemed to be some confusion among Devas. “Did you get it?  I didn’t either.  How strange! Is this any drama?”  these questions were being thrown around by the Devas and they seemed to be perturbed. 

    What’s the reason for this sudden turn of events?

     The moment Brahma looked at Devas, they all stopped talking and stared at him. There was sudden silence everywhere. The Devas could not wait any longer, approached Brahma and enquired in angry tone, “Holy sir, what is going on?”

     Not knowing the cause of their anger, Brahma stared back at them.  Again, they said. “There seems to be a gap between what we see and what is really happening here!”

     “Please sit down and tell me what happened,” said Brahma calmly.

     “We can see you giving our offering in the yagam.” – Devas

     “Exactly. That’s what I am doing” – Brahma

    “Then, how is it that they are disappearing?  We have not received any of the offerings yet. Is this some kind of a ploy to humiliate us? Or is it the work of Asuras?  Maybe even the wrath of Agni Devan? ” – Devas

     Hearing these words and seeing their visible anger, Brahma became flabbergasted. At the same time, he also felt sad that they were yet to understand  Emperuman despite being in such an exalted position.

     But from the Devas perspective, they were disappointed.  Isn’t it natural to feel disappointed when you don’t get what you’ve been eagerly waiting for?  They were looking forward to their offerings in Brahma’s yagam and they felt angry and disappointed when they didn’t get it. 

     Brahma said in a commanding voice.

      These words are the philosophy of the Vedas and the secret of Vezhamalai  (Vezha=Elephant).

     “O Devas! Do you know the purpose of this yagam?Sriman Narayanan is the only One who is worshipped with all the best things and thoughts.  He is the yagna purushan and the One who can give the benefits of any yagam.  What is your role in such a yagam?”

     Hearing these words, the Devas fell silent. Brahma went on. “I’m also one of you, right?  This means, I should also get my share.  Can I ask the same question now?  Where is my offering in this yagam?”

      The Devas could not understand what Brahma was saying and looked at him again.

     “All the offerings made in this yagam are for the Mahalakshmi’s esteemed husband and the One who is sitting inside each of our hearts.  In that case, where is the question of mine and yours? The best prayer is to say ‘Sarvam ShriKrishnaarpanam (Everything belongs to Him).'”

     “Devas, how do you think we got this power?  think about it. Meditate on the One who is sitting in your atma.  Even the body does not know the presence of Atma, but He is sitting inside it. Seek this Varadan and understand Him.”

     “We are all on His body, just like the dresses we wear.  The dresses look nice because of the person wearing it.  Likewise, we also look nice and have powers because of His grace and presence.  So, forget about your offering and await  for His appearance.”

     The confusions afflicting the Devas were removed and they began to get a good measure of clarity in their thoughts.  They realized that they have come to pray to Him and so they have no separate powers. After understanding all this, they kept looking at the yagakundam without taking their eyes off and waited for His emergence from it.

     Yes, they are the leaders and they were waiting for their Supreme Commander.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 10|திருவணையும் திருவருளும்|The Dam that Blessed Every one| Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 10 of the Audio Book : https://soundcloud.com/apnswami/vtm-10-thiru-anaiyum-thiruvarulum

 

 

https://soundcloud.com/apnswami/vtm-10-thiru-anaiyum-thiruvarulum

 

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-part-10-the-dam-that-blessed-everyone

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி – 10 திருவணையும் திருவருளும்

     அலைகளாகிய கைகளை விரித்துக் கொண்டு ஆகாயத்தையும், பூமியையும் மறைத்துக்கொண்டு வந்தவள் தன்னைத் தடுப்பது எது எனத் தெரியாமல் சற்றே தடுமாறினாள்.  தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பார்த்தபோது கிரீடமும், தோள்வளையும், சங்கு, சக்ரமும், அபய ஹஸ்தமும் பீதாம்பரமும் பொலிந்திருந்த திருவுருவம் கண்டு திகைப்படைந்தாள்.   தன்னையும் தடுப்பவர் உண்டோ!  என நினைத்தவளுக்கு அந்நினைவு தவறெனப் புரிந்தது.

     இது தெய்வத்தின் தெய்வம்!  வாக்தேவியின் வார்த்தைகளுக்கும் எட்டாத வைபவம் படைத்தது தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான்முகனைப் படைத்த தேவன்.   திருவணையாக வந்தவன் திருவிளையாடல் புரிகின்றான். தாமரையோனின் தவத்தைக் கெடுக்க வந்த தவற்றிலிருந்து தன்னைத் தடுக்க வந்திருக்கிறான்.

    வேகவதியாக வந்தவள் குணவதியாக நாணினாள் எம்பெருமானே தன்னைத் தடுக்க எழுந்தருளினானே!  என்னே தனது மதியீனம்!  தவத்தைக் கெடுக்குமளவிற்கு தரம்கெட்டுப் போனேனே!!  கோபத்தை என் துணையாக்கி குதூகலம் அடைந்தேனே இதோ இந்த போகத் திருவுருவு (பாமபணையில் பள்ளி கொண்டவன்) எனது மோகத்தை அழித்திட அவதாரம் செய்துள்ளானே!  என மயங்கினாள் நீரலைகளினால் கொந்தளித்தவள் இப்போது நினைவலைகளால் தள்ளப்படுகிறாள்.

     அணை உடைந்து வெள்ளம் வடிந்தால் தண்ணீர் தேங்கிய சுவடுகூட இல்லாமல் வற்றிவிடுமே!  இப்போது அணையில் தேங்கிய ஆரணதேவி வற்றிய துளிபோன்று வாடியே நிற்கிறாள்.  ஆபத்பாந்தவன், அணையாக வந்த அருளாளனை சேவிக்க அனைவரும் அங்கு குழுமிவிட்டனர்.  சேது என்றால் அணை.  அது இரண்டு விதமாகும்.  ஒன்று தடுப்பணை.  மற்றொன்று அக்கரையை அடைவிக்கும் பாலம் ஒன்றே இரண்டையும் செய்யலாம். பரமபதத்திற்கும், ப்ரக்ருதி எனும் நம் கர்மபதத்திற்கும் இடைப்பாலமாக இருப்பவனன்றோ எம்பெருமான்.  இக்கரையினின்றும் நம்மை அக்கரையாக அக்கரைக்கு (பரம்பதத்திற்கு) அழைத்துச் செல்பவனும் அவன் தானே!!

     குழுமித் தொழுது தேவர் கூட்டம் பிரமன், சொன்னவண்ணம் செய்தவனான இந்த சேதுவை வணங்கினர் அணையில் தேங்கிய தண்ணீரில் குளித்தால் அனைத்து பாபங்களும் ஒழியும்.   இங்கு மட்டும் ஒரு விசித்ரம்.   உலகின் ஒப்புயர்வற்ற அணையினை சேவித்தவர்களே பாபம் நீங்கினர் பார்த்த மாத்திரத்தில் பாபம் நீக்கும் இந்த அணையின் பெருமையை அருமறைகளும் விளக்க முடியாது.

    அரவணையாம் ஆதிசேஷனில் விளங்கும் அணையான இவனது கருணைக்கடலில் மூழ்கியவர்கள் மோக்ஷம் பெறுவது திண்ணம்.  விசித்ரமான பாபங்கள் செய்யும் ஜீவங்களின் நரக பலங்களை சித்திரகுப்தன் குறித்து வைத்திருப்பான்.  மரணமடைந்ததும் அவரவர்களின் தீவினைகளுக்குத் தக்கபடி கொடிய நரக தண்டனைகள் உண்டு இந்த கருணைக் கடலான அணையை சேவித்தவர்களின் பாபக் கணக்குகள் பெருவெள்ளத்தால் அடித்துக் கொண்டு போயின.

      முதன் முதலில் தவம் செய்யத் தொடங்கிய பிரமன் அந்தத் தவம் சித்தியடையாமல் தவித்தானல்லவா!   அப்போது அவனது கரணங்கள் (புலங்கள்) அடங்க மறந்தன.   வரவு, செலவு கணக்குகளை வரிசையாக எழுதி வைத்த கணக்கன் (Accountant)  அப்புத்தகத்தைத் தொலைத்தால் என்ன ஆகும்? அவனது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுமன்றோ!  அதுபோன்று தவியாகத் தவித்தான் அன்று.

     இன்று பாவிகளின் பாவக்கணக்கு புத்தகம் தானாகத் தொலைந்து போனது.  பெருகிய வெள்ளத்தில் அது அடித்துக் கொண்டு போனது போலும்!!! சித்திரகுப்தனைக் கண்டு பயப்படத் தேவையில்லை.  எல்லாம் திருவணையின் கருணை.

   தலைகுனிந்து தயங்கி வந்த வித்யாதேவியைக் கண்டான் விதியின் (பிரமனின்) நாதன்(தகப்பன்).   பெண்ணே! உனது கோபத்தில் ந்யாயமிருப்பதாக நீ நினைத்தாலும், அதைக் காரணம் காட்டி தவத்தைக் கெடுக்க நினைத்தது தருமம் தவறிய காரியம்.  கணவனின் அன்பைப் பெற மனைவி பண்புடன் நடந்திட வேண்டும்.   அதிகாரமும், ஆக்ரோஷமும் அகங்காரமும் பெண்ணினத்தின் பெருமைக்கு இழுக்கு“.   புனிதன், பூவை வண்ணன் இந்த உலகிற்கே புரியும்படி பல வார்த்தைகளை எடுத்துரைத்தான். கலைமகளே, கலங்கினது போதும் கமலத்தில் தோன்றிய பிரமனுடன் கலந்து இம்மாபெரும்யாகத்தை விசேஷமாக நடத்திடு எனதருள் உங்களுக்கு என்றும் உண்டு என்றவன் அங்கேயே மறைந்தான்.

     தன்னருகே வந்த தர்மபத்னியை தாமரையோன் பார்த்தான்.  சரஸ்வதி! உனது சினம் தீர்ந்ததா என மெதுவாக அவன் கேட்டது அவளது நாணத்தை மேலும் அதிகரித்தது.   தெரியாமல் செய்த தவறு மன்னியுங்கள் என்றாள். அவளது மெலிந்த தேகம் மெதுவாக நடுங்குவதைக் கண்டான் பிரமன்.

     “பெண்ணே! நான் யார் உன்னை மன்னிக்க! எம்பிரானின் திருவிளையாடலில் நல்லதொரு செய்தி இவ்வுலகிற்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்வம் கோண்டு தவம் புரிந்தேன் அது தடையுற்றது.  பின்னர் மனம் தெளிந்தேன் – இங்கு வந்தேன் உன் கர்வத்தினால் நீ எனது யாகத்தை அழிக்க முயன்றாய் எம் ஈசன் திருவணையானான் இன்று அவனை சேவித்தோம். இப்போது இருவருமே பாக்யசாலிகள் என்றான்.

     கணவன், மனைவியின் இடையே சில குழப்பங்கள் வரலாம்.  ஆனால் அதையே பெரிதுபடுத்தி உறவுகள் விரிசலாகக் கூடாது எனும் உண்மையை உணர்த்தவே உபநிடதப் பொருளான உத்தமன் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளான் போலும்.

    சரஸ்வதியும், சாவித்ரியும் சகஜமான மனநிலையில் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.   இனி இடையூறு ஏதுமில்லை.  எல்லாம் தயாராக உள்ளது. அச்வமேதம் எனும் யாகத்தின் அரும்பெருமைகளைக் காண உலகமே காஞ்சியின் பக்கம் தனது கண்பார்வையை செலுத்தி வருகிறது.  அரணிமதனம் எனும் அக்னி மூட்டும் சடங்கு ஆரம்பமாகிறது.  வசிஷ்டர் முதலிய மகரிஷிகள் தங்களுக்குள்ளே வகுத்துக் கொண்ட காரியத்தை செவ்வனே செய்து வருகின்றனர்.

    ருத்ரன், இந்த்ரன் முதலிய திக்பாலகர்கள் திரளாகக் குழுமியிருந்து பயனடையக் காத்திருக்கின்றனர் வேதமந்திரங்கள் எங்கும் ஒலித்து வைதிகச் சடங்குகள் முறையாக நடக்கின்றன.  அந்தந்த தேவதைகளின் அழைப்பு மந்திரத்தைச் சொல்லி ஹவிஸ் எனும் ஆகுதியை அயன் அக்னியில் சேர்க்கிறார்.  தேவர்களின் ஆகுதியை அவர்களுக்கு எடுத்துச் சென்று அளிப்பவன் அக்நிதேவன்.  ஆனால் யாகத்தீயினில் விழுந்து ஆகுதிகள் அத்தேவதைகளுக்குக் கிடைக்காமல் மாயமாய் மறைந்தன. 

     மறுபடியும் அசுரர்கள் எவரேனும் மறைந்து சதி செய்கின்றனரா?  இதென்ன மாயம்?

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                                 Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 10 – The Dam that Blessed Every one

    Saraswathi who came with all her fury and blinded the sky and land pounded the Dam without knowing who it was.  She saw a form with a dazzling crown, Chakram, Sangu (Conch) and Abhaya Hastham, and in that moment, she understood it all and realized her mistake.

    This is the Lord of all Gods and One beyond all words!  He is the One created Brahma with an intent to create the entire and today, He came as a Dam to protect this yagam. 

     Seeing Him, Saraswathi gave up her anger and became calm.  She regretted her anger and her thoughts to destroy the yagam which was being done under His divine command.  At the same time, she also felt overwhelmed because Perumal had taken an avataram to bring sense into her head and to lead her on the right path of Dharma.  As she hung her head in shame with such thoughts in her mind, all those present there rushed to see Perumal and to obtain His blessings. 

    The word “sethu” means barrier and it can have two uses at the same time.  The first is to stop the flow of water while the second is to act as a bridge to help people cross from one side of the river to another.  Perumal is the bridge that connects SriVaikuntam with Samsaram and here too, He was ready to help people cross over to reach the place of everlasting bliss (SriVaikuntam).

    Everyone present there prayed to Perumal and thanked Him for saving all of them from Saraswathi’s fury.  Also, they got relieved from all their sins as soon as they saw Him and prayed to Him.  It is often said that one’s sins gets eliminated when they take a bath in a holy river, but in this case, all sins got eliminated just by looking at the Dam! 

     Jeevatmas do many sins and Chitraguptan keeps account of all of it.  When a person dies, he or she gets punishments in different hells according to the sins they commit.  But in Hasthagiri, everyone is happy because all their sins have been washed away by Perumal’s ocean of mercy.

    When Brahma failed to get the fruits of his penance earlier, he felt pained. It was as if an account had lost the book of income and expenses.  But today, the book that contains the sins of people got lost by itself and people no longer have to feel scared about Chitraguptan!

    After all this, Saraswathi went to the yagam.  Seeing her, Brahma said, “My wife! Though there is a good reason for your anger, trying to destroy the yagam is unacceptable and you have strayed away from the path of Dharma.  A wife has to abide by the wishes of her husband and has to draw him towards her with love and affection. Trying to use anger, ego and force to achieve the same results can be disastrous.”   As Brahma said these words to impart good sense to the entire world, Perumal said, “Saraswathi, enough of your confusions. Join the yagam with Brahma and My blessings will always be there with all of you.”   Saying this, Perumal disappeared.

    When Saraswathi came near Brahma, he gently asked her, “Saraswathi, has your anger dissipated?”  Blushing and feeling even more ashamed of herself, she said, “Please forgive me.”   As she said these words, her body shook with shame and Brahma noticed it too and said,  “Who am I to forgive you. All this is part of his Thiruvilaiadal (divine play) and He wanted to send a message to the world through you.  I was arrogant and was unable to complete my penance.  I eventually came here.  Today, you also came here with anger and now that is annihilated too. Both of us are blessed now.”

    This drama was enacted by Perumal to show the world that small differences between a husband and wife cannot lead to permanent partings between the two.  Saraswathi and Savithri exchanged pleasantries and with no more differences or interruptions, the yagam was all set to start. With the eyes of the entire world on this yagam, it began with a ritual called Aranimathanam, where the fire will be lit in the yagakundam.  The sages under Vasishtar began their work, according to the way they had split it earlier. 

    Rudran, Sivan and other Gods were waiting to get the benefits of the yagam. And Vedas were reverberating everywhere to give these desired benefits. During the yagam, Brahma called many devas and offered them “Havis.”  Agni devan is the person who delivers all these offerings to the respective devas. But then, the Havis disappeared magically and none of the Devas got their due offerings. 

Is it the work of Asuras again? What is the trouble again?

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 09|வேகவதியின் வேகத்தடை |The barrier that stopped Vegavathi’s speed| Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 09 of the Audio Book :

 

https://soundcloud.com/apnswami/vtm-09-vegavathiyin-vegathadai

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-part-9-the-barrier-that-stopped-vegavathis-speed

 

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி – 9 வேகவதியின் வேகத்தடை 

     எங்கும் வேதவொலியும் விழாவொலியும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ஆடல், பாடல்,  கேளிக்கைகள், அழைப்புகள், என பல இன்புறும் விளையாட்டுகளில் மக்கள் தங்களை மறந்து திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.   அயனாகிய பிரம்மா அயமேதம் எனும் யாகத்தைச் செய்கிறான் என அகமகிழ்ந்து, அனைவரும் களிப்பெய்திக் கொண்டிருக்கின்றனர்.

     அன்னகூடங்களில் ஆங்காங்கு வந்தவர்களுக்கு உணவு பரிமாறுகின்றனர். ம்ம்…. சாப்பிடுங்கள்…. இது போதாது….. இன்னமும் பல பக்ஷணங்கள் உள்ளன…. மேலும் சாப்பிடுங்கள்…..” என்று ஆதரவான குரல்கள் ஒலிக்கின்றன. எங்கும் ஒரு அமைதியான கோலாகலம் நிறைந்துள்ளது.  இது வரதன் வருவதற்கு முன்னோடி…. சாந்தியை விரும்புபவர்கள் தானே சாதுக்கள்!!  இந்த ஆனந்தத்திற்கு ஆபத்து வந்தது.  எவரின் கண் பட்டதோ தெரியவில்லை காஞ்சிக்கு!!  நாணத்துடன் வரவேண்டிய நாமங்கை, ஆணவத்துடன் வந்தாள்!!!

      மாபெரும் நதியாக பெருக்கெடுத்து அந்த மாநகரை முழுதும் மூழ்கடித்து விட முயன்றாள்.  ஆறுகள் பெருகுவது மக்களின் வாழ்வாதாரம் சிறக்கத்தானே….. மகான்களின் மனோபாவமே பரோபகாரம் அதாவது உலகிற்கு உதவுவது. சரஸ்வதி நதியாக சந்மார்கத்திற்கு வழிகாட்ட வேண்டியவள், சண்ட வேகமாக (தாங்கொணாத வேகத்துடன்) சாதுக்களை பயமுறுத்திக் கொண்டு சீறிப்பாய ஆரம்பித்தாள். 

     தெளிந்திருந்த திசைகள் இருளில் மூழ்கின.  அன்னப்பறவையை வாகனமாக உடையவள், அன்னம் போன்ற மென்னடையாள், இன்று ஆக்ரோஷமாக பாய்வது கண்டு மக்கள் பயந்தனர்.   ஐயோ!!” என வாய் திறந்து கத்தவும் இயலாமல் வாயடைத்து நின்றனர் வாக்தேவியே வரம்பு மீறி நடக்கும் போது, இவர்களின் வாய் திறந்து வார்த்தைகள் வராமல் தடுமாறுவதில், என்ன ஆச்சரியம் இருக்க முடியும்!! 

    பேரலைகளை பரப்பிக் கொண்டு, பெருவெள்ளமாக காஞ்சியை நோக்கிப் பாய்ந்தாள்  பிரமனின் மனைவி.  திசைகள் குழம்பின; பூமியும் நடுங்கியது; படைத்தவன், திடீரென்று  ப்ரளயத்தை உண்டாக்கினானோ!!!’ என அனைவரும் பயந்தனர்.  பெரும் மலைகளையும் மரங்களையும் அடியுடன் பெயர்த்துக்கொண்டு ஆறாகப் பாய்ந்தவளைத் தடுக்க முடியாது தவித்தனர். 

     இவளின் வெள்ளத்தால், வானவெளி மூடியதால், சூரிய சந்திரர் இருக்கும் திசைகள் கூடத்  தெரியவில்லை.  நட்சத்திரங்கள் இடம் மாறின.  ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்த நகரம் அல்லோலகல்லோலப்பட்டது.  காப்பாற்றுங்கள்….. காப்பாற்றுங்கள்…… என எங்கும் பயத்தின் ஓலம் எதிரொலித்தது. பிரளயத்தைவிட பெருவெள்ளமாகப் பெருகினாள் பிரமனின் மனைவி. மடைதிறந்த வெள்ளமென பேசும் வாக்கினை அருளுபவள், இன்று தன் நிலைமறந்து,  பயங்கரமாகப் ப்ரவகித்தாள்.   அந்த வெள்ளைத்தை அணை போட்டுத் தடுப்பவர் எவருமிலர். 

    தேவர்களும் மகரிஷிகளும் பிரமனைத் தஞ்சமடைந்தனர்.   விரிஞ்சனே! வேகவதியின் வெள்ளப்பெருக்கு காஞ்சியை கலங்கடிக்கிறது.  நாமங்கை நிலை மறந்தாள் உம்மைத் தவிர இதைத் தடுத்திட எவரால் முடியும்?  விரைந்து எழுந்து வாரும்!!!” என கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். 

     யாகத்தை செய்பவன் யஜமானன்.  பகவதாராதனையாக யாகம் நடைபெறும் சமயம், அவன் சங்கல்பம் எனும் தீட்சை செய்து கொள்ள வேண்டும் காம க்ரோதங்களை விலக்கி, புலன்களை அடக்கி, வேதமந்திரங்கள் சொல்வதைத் தவிர்ந்து, ஏனைய சமயங்களில் மௌனமாக இருக்க வேண்டும்.  குறிப்பாக மனோபலம் இழந்து பிறரை வசைபாடுவதோ, கடிந்து கொள்வதோ,  எரிச்சலாகப் பேசுவதோ கூடாது!!!  சகல ஜகத்திற்கும் காரணமாகிய பகவானை ஆராதிக்கும் பாக்கியம் பெற்றோமே எனும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். 

    பிரம்மா தற்போது யஜமானன் யாகதீட்சை செய்து கொண்டு யாகத்தைத் தொடங்குகிறான் இச்சமயம்தான், சரஸ்வதி தனது கோபத்தால் கட்டுக்கடங்காமல் பெருகுகிறாள்.  அவளின் நோக்கம் யாகத்தைக் கெடுப்பது. தான் இல்லாமல் பிரமன் செய்யும் யாகம் அழிய வேண்டும் –  தனது பேரலைகளால், அத்திகிரி மலைதன்னையே மூழ்கடிக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் விரைந்து வந்து கொண்டிருக்கிறாள் இந்த சமயம், யாகசாலையை விடுத்துத்,  தான் செல்வது தகாது; கோபதாபமான வார்த்தைகளால், அவளிடம் பேசுவதும் கூடாது;   முக்கியமாக, சரஸ்வதியைப் போன்று தனது வசமிழந்து, கோபத்தில் அவருக்கு சாபமளித்தால்,  தொடக்கத்திலேயே தனது தவம் பாழாகிவிடுமே என பயந்தார் பிதாமகர். 

     திக்கற்றவர்க்கு தெய்வம்தானே துணை!!  திசைமுகனாகிய நான்முகன் செய்வதறியாமல் திகைத்துத் தேவதேவனை சரணடைந்தான். 

     “பிரபோ! தேவராஜா!  இதுஃதென்ன சோதனை!!  ஒருமுறை புலன்களை வெல்ல முடியாமல் அடியேன் பட்ட வருத்தம் அறியாதவனா நீ உன் வார்த்தை கொண்டுதானே இந்த அயமேதம் தொடங்கினேன்!  இடையூற்றை நீதானே விலக்க வேண்டும்!  என் இறைவனே!  இமையோர் தலைவனே! ஆபத்திலிருந்து அடியேனை காத்தருள்வாய் யாகத்தின் பூர்த்தியினை அனுக்கிரகம் செய்திடுவாய் என்று வேண்டினான். 

     இதுவோ சத்யவ்ரத க்ஷேத்ரம்.  பாவிகளும் இங்கு வந்தால் நற்பலன்களையே பெறுவர்.  புனிதமான யாகத்தின் இடையூற்றை போக்கிடத்தானே பிரமனும் வேண்டுகிறான்!  அடியார்கள் சொல்வதைக் கேட்பதே அனந்தனாம் ஆதிநாயகனின் பெருமை!! இவன் சொன்னதைக் கேட்கும் சீர்மையன். சுடர்மிகு சுருதியுள் உறைபவன்.  கலங்கிய கலைவாணி, புனலாகப் பொங்கிய வேகவதியாய் வரும் வழியில், எல்லா கலக்கத்தையும் களைந்திட, காக்கும் இயல்வினன் கண்ணன் ஒரு அணையாய் அவதரித்தான்!! 

    சம்சார சாகரத்தில் மூழ்கியவர் கரையேற, சேதுவாக(திருவணையாக) இன்று வேகாசேது ஆனான் தன்னைத் தடுப்பவர் எவருமில்லை எனும் இறுமாப்புடன் தாவித்தாவி வெள்ளமிட்டவள், தடுப்பணை ஒன்றைக் கண்டு, தடுமாறினாள்.  கரை உடைத்து காட்டாறாகப்  பாய்ந்தவள், தன்னைத் தடுப்பது எது எனத் தெரியாமலேயே அதில் மோதினாள். 

     சபை நடுவே வீணர்களின் பேச்சு, பண்டிதனைக் கண்டதும் தடுமாறுவது போன்று, தடுப்பணையில் மோதியவள் தள்ளாடினாள்.  ஆக்ரோஷமான அலைகள் ஆர்பரித்தும், அணையின் அணு அளவைக்கூட அசைக்க முடியவில்லை கோபத்தில் தன்வசமிழந்திருந்தவள், மேலும் மூர்கத்துடன் அணையை அடித்துச் செல்ல ஆவேசம் காட்டினாள். 

     ஆசாரியன் அருளின்றி தானே படித்தவன், தத்வார்த்தங்களை விளக்கிச் சொல்ல முடியாமல் தவியாய்த் தவிக்குமது போன்று, வாக்தேவி வலுவிழந்தாள் அணைமோதிய அவ்வலைகள், கலைமகளின் கர்வத்தை வற்றடித்தன தன்னைத் தடுத்தது யார் என தலைதூக்கிப் பார்த்தவள், ஒரு நொடியில் தலைகுனிந்து நின்றாள்!! 

நாமங்கையும் நாணினாள்.  நாரணனே அதன் காரணன்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                                 Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

Part 9 – The barrier that stopped Vegavathi’s speed

     When Saraswathi came to Kanchi, all that she saw was pomp and festivity everywhere. While Vedas were being heard on one side, people were singing, dancing and rejoicing in the other.  And all this is because Brahma himself doing the Ashwamedha yagam and people were delighted that it will give them profound benefits.

     Food has been important part of all our festivities and how can this grandest of yagam be without it.   Hence sumptuous food was being served across many halls.  The people serving the food were generous and wanted to ensure that all the guests were served the best of delicacies. 

    There was happiness and peace all around and this was about to be threatened by Saraswathi’s fury.  The very person who was supposed to come with all humility to join the yagam, now came seething with anger to inundate the entire city and destroy it.  In general, rivers have their origin to help people, to improve the growth of civilization, and to benefit the sadhus.  But today she came as Vegavathi to destroy and eliminate those whom she was supposed to help!

    As she came rushing, people started panicking.  They only know her as a gentle lady sitting on a swan, but today they saw a completely different Saraswathi.  They were so taken aback by Saraswathi’s fury that they could not even open their mouth and scream. They simply stood rooted to the ground as their minds froze in shock.

    Her fury blinded even the sun, moon, and stars as people could not identify the direction in which these celestial beings existed in the sky.  The entire place was about to get deluged.  One could hear cries of panic everywhere as people began to understand the gravity of the situation.  Saraswathi who was known to bless people to have a free flow of words, now flowed freely and furiously around Kanchi with an intent to destroy everything that Brahma had built for the yagam.

    It looked as if no one could stop her.  Devas and Rishis went to Brahma for protection. They prayed to Brahma to protect them and this city from Saraswathi’s fury. 

    The person who is doing the yagam is seen as the owner and he has to do sankalpam at the time of beginning the yagam, which is in many ways, another form of Thiruvaradhanam (prayer) to Perumal.  As per the sastras, the doer of a yagam has to control his senses, annihilate his ego, and chant the Veda mantras.  Other than these, he cannot open his mouth to say anything or get up to do anything.  He has to feel blessed for such an opportunity to pray to Perumal and do the things that would make Him happy. 

    Saraswathi also knows all these sastrams and this is why she made her appearance just when Brahma was about to get deekshai and start the yagam.  After all, her intent was to stop the yagam that Brahma decided to do without her presence.

    Brahma didn’t want to get up, get angry or curse her because that would defeat the very purpose of this yagam.  So, Brahma felt helpless and what can a helpless person do except pray to Perumal for protection! And that’s exactly what he did too.

     “O Lord! Devaraja! What is this new twist? I’ve already struggled because of my inability to control my senses and now this? I started this yagam only under Your command, so it is up to You to remove these obstacles. Please save all of us and protect this yagam.”

    This place is Sathyavratam, a place where even sinners are absolved of their sins and Brahma was praying to Perumal to remove the obstacles that would impede the yagam. Can Perumal stand as a mute spectator to these events? After all, He is the One who gets immense happiness when His devotees pray to Him and always rushes to help all His followers who are in trouble. In this situation too, He came to help and stood as a dam to stop the fury of Vegavathi.

    By stopping Vegavathi,  He became Vegasethu with an aim to help all those who are drowning in the ocean called Samsaram.  Seeing this speed break, Saraswathi fumbled but didn’t give up. Without knowing who the speed breaker was because of her anger, she went and crashed on Him.  Despite putting all her anger and energy, she could not move even one inch further to destroy the yagam.  Without giving up, she continued to pound on the Dam.

    But eventually she weakened just like how a learned man becomes weak and unable to make the most of his knowledge without the blessings of an acharya.  This repeated pounding of her fury on Perumal and His association slowly removed her anger and ego.  Also, when she looked up to see the Dam, she realized who it was and hung her head in shame.

    This is how Narayanan controlled Saraswathi’s fury and brought her to the yagam. 

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 08|உரையணங்கின் உரோஷம்| Uncontrolled anger| Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 08 of the Audio Book :  https://soundcloud.com/apnswami/vtm-08-uraianangin-rosham

 

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி – 8 உரையணங்கின் உரோஷம்

     சரஸ்வதியிடம் சென்ற அசுரர்கள், தங்களின் சுய உருவத்தை மறைத்தனர். கோபத்தில் வசமிழந்துள்ள வாக்தேவியை வசப்படுத்த, வைதிக வேஷம் போட்டனர் ந்யாயவான்களாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள நினைப்பவர், வைதிக வேஷத்தையே விரும்புவர் என்பது புராணத்தில் ப்ரசித்தமல்லவா!

     சந்யாசி வேஷத்தில் வந்த ராவணன், சீதையை அபகரித்தான்.  அதுபோன்று அசுரர்கள் இன்று சாத்விகர்களான மகரிஷிகளைப் போன்று வேடம் புனைந்து, வாக்தேவியை அணுகினர்.  மாய மானாக மாரீசன் வந்தான்; மற்றைய மான்களைப் போன்று அவனால் புல்லைத் தின்ன முடியவில்லை. மாமிசத்தையே உண்பவனுக்கு மான்களைப் போன்ற புத்தி எப்படி வரும்? இங்கும் அசுரர்கள் வேஷம் போட்டுக் கொண்டு, அதை முறையாகப் பின்பற்றத் திணறித்தான் போனார்கள்.

      வந்தவர்கள் வைதிகர்களா? வேஷதாரிகளா?….. பிரித்துப் பார்க்கும் மனநிலையில் வாக்தேவி அன்றில்லை. கலைகளில் சிறந்தவர்கள் எதையும் ஆய்ந்து பார்த்தே முடிவு செய்வர்.  கல்வியின் பெருமை அது. கற்றவர்க்கும், மற்றவர்க்கும் எளிதில் வித்யாசம் உணரலாம்.  உணர்ச்சிவசப்படுவதை தங்களின் பெருமையாக நினைப்பவர் இவ்வுலகில் நிச்சயம் சிறுமையடைவர். ஆழமான சிந்தனையால் அனைத்தையும் ஆராய்ந்து பார்ப்பவரே ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெற்றிடுவர்.

     கலைகளில், கேள்விகளில் வல்லமை பெறுவதற்குக் கலைமகளின் அருள் வேண்டும்.  அவள் அருளைப் பெற்றவர் அமைதியாக சிந்திப்பர்.  ஆனால் இன்று, கலைமகளே கலக்கத்தில் உள்ளாள்.  கணவனைப் பிரிந்த காரணம் அற்பமானது என்றாலும், தன்னை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை இவர். ஒருவேளை, கல்வியினால் கர்வம் தலை தூக்கும் எனும் மூதுரை இங்கிருந்துதான் தொடங்கியதோ! அன்பினால் அயனை வசப்படுத்தியிருக்கலாம்.  அதை விடுத்து அதிகாரம் செலுத்த நினைத்தது அவளின் அகங்காரம்.  பெண்களின் வாழ்க்கை, பயனற்றதாகப் போவதற்கு இந்தப் பிடிவாதமும் ஒரு காரணமன்றோ!

     மகரிஷி வேடத்தில் வந்த அசுரர்களை வரவேற்றவள், காரணத்தை வினவினாள்.  வாக்தேவியின் அருளில்லாமையால் தெளிவின்றி பேசும் தானவர்கள் கூட, இப்போது தைரியமாகப் பேசினர் தாயே! தங்களை விடுத்துச் செய்யும் யாகத்தில் பங்கு கொள்ள எங்களின் மனம் இடம் தரவில்லை.  வாக்தேவதை இல்லாத யாகத்தில் வேதமந்திரங்கள் எவ்விதம் பயன் தரும்?”

     “அன்னையே! தங்களை விட்டுக்கொடுத்த அயனை விட்டு, நாங்கள் வந்து விட்டோம். சத்யலோகத்தில் சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை.  யாகத்திலாவது தங்களை மதித்துத்  தாமரையோன் காத்திருப்பார் என நினைத்தோம். ஆனால், எனக்கென்ன பெண்களா இல்லை! காரியத்தை சாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு என்று உங்களை உதாசீனம் செய்து, சாவித்ரி முதலியவருடன் யாகத்தை ஆரம்பித்து விட்டார் என்றனர்.

     தன்னைப் பிரிந்து தன் கணவர் தவித்திடுவார் என, தான் நினைத்தது தவறு எனப் புரிந்தது சரஸ்வதிக்கு… வாய்ப்புகள் வரும்போது அதை வீணடித்தால் வாழ்க்கையின் தரம் எவ்விதம் உயரும்?  உலகத்திலுள்ள பெண்களுக்கு இவ்வுண்மை புரிந்தது என்றால் ஒவ்வொரு குடும்பமும் குதூகலிக்கும். கணவனைப் பழி வாங்குவதாகத் தான் நினைத்துப் பிரிந்தது, தன் தன்மானத்தையே வேரறுத்து விட்டது என நினைத்தாள்.

     இந்நிலையிலும் அவளின் இயற்கை கர்வம் மாறவில்லை. என்ன? என்னை விடுத்து இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து யாகமா?”.   தன்னைத் தேடி வராமல் தாமரையோன் தவிர்த்ததை அவளால் ஏற்க முடியவில்லை.  வேதத்தின் கட்டளையை ஏற்காமல், விவேகத்தை இழந்தாள். வைஷ்ணவ யாகத்தின் வன்மையை எண்ணி, இனியாவது விரைந்து தான் அதில் கலந்திருக்க எண்ணியிருக்க வேண்டும்.  கோபத்தின் வசப்பட்டவர்கள் எதைத்தான் இழப்பதில்லை??

     வந்திருப்பவர்கள் அசுரர்கள் என்பதை அறியாமலேயே ஆத்திரப்பட்டாள். தனது தனித்தன்மையை நிலைநாட்டத் தலைப்பட்டாள்.  அகங்காரம் இன்னமும் அவளை ஆட்கொண்டதே தவிர, துளியும் குறையவில்லை.  தன் நதியான சரஸ்வதியினின்று கோபவதியாகப் புறப்பட்டவள் விரைந்து தொண்டை மண்டலத்தை வந்து அடைந்தாள்.  மாநகரின் அழகும், மனம் கவரும் தெய்வீகமும் அவருக்கு ஆனந்தத்தை அளிக்கவில்லை.  இந்நகரை தன் வலிமையால் அழித்தே தீருவது என உறுதி பூண்டாள்.  அதற்குள் யாகம் தொடங்கி விட்டது.  வாக்தேவி, விருப்பத்தின் பேரில் வரவில்லை என்பதை அறிந்த பிரமன், யாக தீட்சையை கருத்தில் கொண்டு வாளாவிருந்தார். இதனால் வெகுண்ட கோபவதி, சரஸ்வதி – வேகவதி எனும் நதியாகக் கரைபுரண்டாள். 

இவளின் வெள்ளத்தைக் காஞ்சி எதிர்கொள்ளுமா?

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

English Audio Book of Sri APNSwami’s Varam Tharum Maram

Audio by Smt. Lavanya part 8

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-08-uncontrolled-anger

 

Part 8 – Uncontrolled anger

     The asuras began to implement their idea.  They disguised themselves as sages and went to meet Saraswathi Devi to further instigate her anger.  They believed that this disguise would conceal their true identity and intent and project them as good-natured people.  This goes to show that even in our Puranas, there are examples of those disguising as sages to prove that they are good-natured!

     Even Ravanan disguised himself as a sadhu to abduct Sita Devi.  The Asura Maricha had also disguised himself as a deer, but then this deer ate meat instead of grass. putting on a disguise alone does not conceal the true nature of people and here too, the asuras struggled to maintain their disguise.

     Are they real sadhus? Have they disguised themselves as good-natured people?  Well, Saraswathi was not in a frame of mind to analyze these questions.  It is said that the learned think and analyze all angles before arriving at a solution to any problem.  This is what differentiates them from others.  People who take irrational decisions offer suffer its consequences whereas those who are calm and make the right decisions are the ones who eventually reach the top.

    Saraswathi’s blessings are absolutely essential for anyone to become proficient in their skills and to get the knowledge they need.  In fact, those who have her blessings are the ones who are calm and can think through in any situation.  But today, Saraswathi herself was not in a position to think or understand what was going on.  She believed that Brahma humiliated her by starting the yagam without her presence and this made her extremely angry.  Maybe this belief is the precursor for the arrogance that’s present in the learned ones even today!  She could have very easily drawn her husband towards her with love and affection but instead she chose to control him through her arrogance. By doing so, she showed the world that stubbornness leads to nothing and thereby, set the wrong example for the world!

     With such thoughts, she welcomed the asuras who were disguised as sadhus and enquired the reason for their visit.  Her very presence gave the asuras enough strength and word prowess to say, “O Mother! How can the Vedas give the desired benefits in a yagam that’s done without Saraswathi Devi? This is why we don’t have the heart to participate in that yagam!”

They went on. “We left brahma because he left you. we did not get a fair answer in Sathyalokam, but we thought we could get the right answers in your presence at the Ashwamedha yagam.  But Brahma humiliated you by choosing his other wives to assist him in the yagam”, they said.

     Saraswathi hoped that her husband would come and beg her to join him for the yagam.  But hearing these words, she realized that she missed a big opportunity and worse, she had paved the way for this other wives to get to an elevated position.  This lesson, unfortunately, is applicable to all women even today.  When they take charge of their rightful position, their family will reap the benefits. 

     Despite such a big blow to her self-dignity, Saraswathi’s arrogant attitude was more visible than before.  “What?!  How can he leave me and continue the yagam with another lady?”  By this time, her anger knew no bounds.  Though she could have still chosen to go and participate in such a divine yagam, her ego refused to accept the happenings. 

     She did not realize that the disguised sadhus were asuras and she lost her individuality and self-control.  Seething with fury, she reached Thondaimandalam. Neither the beauty of the place nor the divinity of the yagam calmed her.  All she wanted was to destroy the yagam and the entire city of kanchi with her fury. 

This anger turned Saraswathi into Kopavathi or Vegavathi and she came with all her fury to destroy the yagam.

Will the yagam survive her fury? 

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 07|அயன் ஆரம்பித்த அயமேதம்| Brahma’s Ashwamedha yagam| Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 07 of the Audio Book :  https://soundcloud.com/apnswami/vtm-07-ayan-aarambitha-ayamedham

 

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி – 7 அயன் ஆரம்பித்த அயமேதம்

     இனியும் தாமதிப்பதில் பலனில்லை.  தனது கோபத்தைப் பிரமனும் கட்டுப்படுத்திக் கொண்டான்.  தெய்வீக யாகம் நடைபெறும்போது தேவையில்லாத மனோவிகாரங்களை தவிர்க்க வேண்டுமெனத் தீர்மானித்தான்.  வசிஷ்டரின் ஆலோசனையை செயல்படுத்தினான். மனைவிக்கு முக்யத்துவம் அளிப்பதுதான் நமது வேததர்மம்.  ஆனால் வைதிகத்திற்கு ஒத்துழைப்பு நல்காத இல்லாள், உடனிருந்தும், இல்லாதவளாகிறாள்.  அக்னிதேவனின் அந்தர்யாமியான பகவானை ஆராதிக்க, அக்னி சாட்சியாக மணமுடித்தவள் உடனிருக்க வேண்டும்.

     இந்த வைதிக நெறியை மறந்த சரஸ்வதியை விடுத்து, மற்றொரு மனைவியான சாவித்ரியை துணையாகக் கொண்டு யாகத்தைத் தொடங்க வேண்டும்.  இதுவே வசிஷ்டரின் வைதிக உபதேசம்.  சரஸ்வதி இல்லையென்றால் சாவித்ரி. சரியான சமயத்தில் யாகத்தைத் தொடங்கலாம். இனியும் தாமதிக்கக் கூடாது என மொழிந்தான் தனயன்.

    வைஷ்ணவமான அந்த மகாயாகம் தொடங்கியது.  பல தேசங்களிலிருந்தும் பாகவதர்கள் குழுமினர் ப்ரஜாபதியே செய்யும் யாகம் என்பதால், இதன் பலன் ஆயிரம் மடங்கு என உணர்ந்த தேவர்கள், தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்தனர்.  யாகத்தில் தங்களின் பங்கினையும் பெறுவதற்கு முயன்றனர்.

    அத்தி மரத்தாலாகிய அழகிய யூபஸ்தம்பங்கள் நாட்டப்பட்டன.  அழகிய யாகமேடை அத்திகிரியின் மீது அமைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, அரசன் ஆரோகணிக்க ஆனையின் முதுகில் உள்ள அம்பாரி போன்றிருந்தது. ஹஸ்தி என்றால் யானை என்பது பெயர். ஒரு காலத்தில் அஷ்ட திக் கஜங்களும் இங்கு வந்து பெருமாளை ஆராதித்தனவாம்.   ஆனைகள் அமர்ந்த மலை ஆனையின் உருவமாகவே தோன்றியது.  ஆனையின் துயரம் தீர்க்க அவதரித்தவனன்றோ எம்பெருமான்!  இன்று அதே ஆனை மலையில், அயமேத வேள்வியில் ஆவிர்பவிக்கக் காத்திருக்கிறான்.

     ஒருபுறம் ப்ரஹ்மவித்துக்களான மகரிஷிகளும், தேவர்களும் குழுமியுள்ளனர். மற்றொருபுறம் அசுரர்களும் வந்துள்ளனர் அனைவருக்கும் ஆனந்தம்.  இனி அனுஜ்ஞையுடன் (மகான்களின் அனுமதியுடன்) தொடங்க வேண்டும்.  அங்கும் ஒரு குழப்பம் நிலவியது.

     எல்லோரையும் த்ருப்திப்படுத்த வசிஷ்டர் தலைமையில் முக்கிய பொறுப்பேற்றுள்ள மகரிஷிகள், முனைப்புடன்தான் இருந்தனர்.  நடுவே புகுந்த அசுரர்களால் சிறு சலசலப்பு உண்டானது.  கோஷ்டியில் அனைவரும் அமர்ந்திருக்க, முதலில் தேவர்களையும், பின்னர் மகரிஷிகளையும் கௌரவித்தார் வசிஷ்டர்.  இது முழுதும் சாஸ்த்ர சம்மதமானது.  தேவர்கள் எப்போதும் பூசனைக்கு உரியவர்கள் மகரிஷிகளோ மகாத்மாக்கள்!! அவர்களை கௌரவிப்பதுதானே முறை!  அந்த வழியில் வசிஷ்டர் நடந்தார். பின்னர் அசுரர்கள் கவனிக்கப்பட்டனர்.

      ஆனால் அசுரர்கள் இதை ஒரு பெரிய அவமானமாகக் கருதினர்.  எப்போதும் பலம் வாய்ந்த எங்களுக்கு, மரியாதை குறைவா?  என வெகுண்டனர் எப்படியும் இதற்குப் பழிதீர்க்க வேண்டுமென்றும் உறுதி பூண்டனர் அவர்களுள் ஒரு அசுரன் பெயர் விரோசனன்.  வீரம் மிக்கவன்.  அதேசமயம் விவேகமுடையவன். மெதுவாக தனது நிலைப்பாட்டை நண்பர்களிடையே பகிர்ந்து கொண்டான்.

    “நண்பர்களே! உங்களின் கொந்தளிப்பு ந்யாயமானதுதான்.  நம் குலத்திற்கிழைக்கப்பட்ட அவமானத்தால் நானும் பெரிதும் மன வருத்தத்திலுள்ளேன்.  இதற்கு நாம் நிச்சயம் பதிலடி கொடுத்தே தீர வேண்டும். ஆனால் விவேகமில்லாமல் வெறும் வீரத்தை நம்பிக் களமிறங்கினால், விளைவுகள் விபரீதங்களாகி விடும்“.

     விரோசனன் பேசுவதை உன்னிப்பாக கவனித்தனர் அசுரர்கள்.  அவர்களின் அந்த கவனம் உற்சாகமளிக்க, மேலும் பேசினான் அசுர வேந்தன்.   இங்கு நாம் இப்போது தேவர்களை எதிர்த்து சண்டையிட முடியாது.  இதன் காரணம், நமக்கு பலமில்லை என்பதில்லை… இந்த க்ஷேத்ரத்தின் மகிமை அத்தகையது!!! ப்ரம்மாவே யாகம் செய்யப் போகிறார்.  விஷ்ணுவை ஆராதிக்கும் பெரிய யாகம் இது.  எம்பெருமானின் சாந்நித்யம் பெற்ற இந்த இடத்தில், நாம் தேவர்களுடன் சண்டையிட்டால் கட்டாயம் தோற்று விடுவோம்.  ஆகையால் இதற்கொரு மாற்று வழியை யோசிக்க வேண்டும் எனத் தெளிவாக, த்ரிகால யோசனையுடன் பேசினான்.

    வயதான அசுரர்கள் மட்டுமின்றி இளைஞர்களான அசுரர்களும் விரோசனன் கருத்தை ஆமோதித்தனர்.  மாற்றுவழி என்ன?  தேவர்களை மாய்க்கும் வழி என்ன எல்லோர்க்கும் வழி காட்டும் சத்யவ்ரத க்ஷேத்ரம், அசுரர்களுக்கும் வழி காட்டியது.  சத்யவ்ரதத்திலிருந்து அசுரர்கள் நாடிச் சென்றது சரஸ்வதி தேவியை!!!.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

English Audio Book of Sri APNSwami’s Varam Tharum Maram

Audio by Smt. Lavanya part 7

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-07-brahmas-ashwamedha-yagam

Part 7 – Brahma’s Ashwamedha yagam 

    Brahma realized there is no point in waiting for Saraswathi any more.  Though he was furious with Saraswathi for her refusal, he controlled his anger and decided to begin the Ashwamedha yagam at the earliest.  But without his wife by his side?  He decided to follow the solution given by Vasishtar to resolve this crisis. 

   Our Vedas clearly state the importance that should be given to one’s wife while performing such great yagams.  But if the wife refuses to cooperate, she is straying away from the path of dharma.

     In this case, Saraswathi refused to cooperate, so Brahma decided to start the yagam with another wife called Savithri by his side.  This was the solution given by Vasishtar because starting the yagam at the most auspicious time is absolutely important and Brahma accepted it too, as it was within the prescribed sastras. 

     This exalted yagam began with all pomp and festivity.   Devotees from different parts of Bharatham rushed here because the benefits of such a yagam increases manifold simply because the doer is none than Brihaspathi himself. 

     Columns made of Athi (fig) tree were erected and the entire yagasalai that was built on Athigiri hill  looked like a mahout who was sitting on an elephant.  Hasthi means elephant and it is believed that once, this place was filled with elephants that came and prayed to Emperuman.  The hill where elephants sat and roamed started to look like the elephants too.

    Once Perumal rushed to help an elephant who was in a life-threatening crisis.  And today, the same Perumal is waiting to emerge from a hill that resembles an elephant!

     Devas and rishis were sitting on one side of the yagam while asuras were sitting on the other side.  Everyone looked happy. When the yagam was about to begin with the consent of everyone present there, another confusion cropped up.

     The rishis, under their leader Vasishtar, had made all arrangements for the yagam. The sudden entry of Asuras threw them off a bit.  As mentioned in the Vedas, the Devas were given the first honours followed by Rishis.  After all, both of them deserve it because of their powers and knowledge.  After honouring both of them, the Ausras were welcomed and honoured.

     But the Asuras did not take it lightly.  They were upset that they were honoured at the end because they believed they were stronger and mightier than the Devas.  Since they felt insulted, they decided to take revenge for it.  Amongst them was an asuran called Virochanan who was not only mighty but also intelligent.  He devised a plan for revenge and shared it with the other asuras who were present there.

     He said, “Friends! This is a big shame for our clan and we have to definitely take revenge for this humiliation.  But strength alone is not enough.  We have to combine it with our intelligence to ensure that the impact is lasting.”

     Hearing these words, the ausras felt elated and they were ready to listen to his devious plan.  Virochanan continued, “We can’t fight against the Devas here because this place will favor them, regardless of how strong we are. Brahma is doing the yagam and Vishnu is going to emerge from it.  His divinity is sure to be present in this place already, so if we start any fight here, we’re sure to end up on the losing side.  So, we have to come up with a clever plan that is a good alternative to fighting.”

    All the asuras, regardless of their age, agreed to Virochanan’s words. But what is the alternate solution?

    Well, the Sathyavratam that guides the Devas and righteous people, guided the asuras too and they went in search of Saraswathi Devi.

Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5

Sri #APNSwami #Writes #Book |வரம் தரும் மரம்| Varam Tharum Maram – 06|வர மறுத்த வாக்தேவி|Saraswathi’s refusal| Athi Varadar Vaibhavam

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

Varam Tharum Maram : Tamil Audio Book in Sri APNSwmami’s SoundCloud To Listen to Part 06 of the Audio Book : https://soundcloud.com/apnswami/vtm-06-vara-marutha-vaakdevi-1

https://soundcloud.com/apnswami/vtm-06-vara-marutha-vaakdevi-1

ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்

                   “வரம் தரும் மரம்”

                                                   (அத்தி வரதர் வைபவம்)

பகுதி 6வர மறுத்த வாக்தேவி

     “நாமகள் இல்லாமல் நம்மால் யாகம் தொடங்க இயலாது என நினைத்த நான்முகன், நல்லது! வசிஷ்டனே! விரைந்து சென்று இந்த வைஷ்ணவ யாகத்தின் பெருமைதனை எடுத்துரைத்து, சரஸ்வதியை இங்கு அழைத்து வா என்றான்.

    “பெண்கள் சில சமயம் பொறுமையிழந்தாலும், கணவனுக்குப் பெருமை என்றால் தங்களை அதில் இணைத்துக் கொள்வார்கள்.  ஆகையால் நிச்சயம் சரஸ்வதி மகிழ்ந்து இங்கு வருவாள் என்ற பிரமனின் ஆணையால், சரஸ்வதியை அடைந்தான் மகரிஷி.

    தனயனைக் கண்டதும் தாய்பாசம் பொங்கிட உள்ளம் மகிழ்ந்து வரவேற்றாள் நாமகள்.  வந்த காரணத்தை அறிந்ததும், குளிர்ந்த நீர் கொதியாய் கொதித்தது. மனம் வெதும்பிய சரஸ்வதி தன் மகனிடம் காண்பித்த கோபத்தீயால், குளுமையாக இருந்த அந்நதி, வெந்நீரானது!!. 

    “பிள்ளாய்! உனது தந்தைக்கு என்னிடம் துளியும் பாசமில்லை.  பிற பெண்களைப் போற்றுவதை எந்த பெண்டாட்டியும் பொறுத்துக் கொள்ள மாட்டாள்.  திருமகள் உயர்ந்தவள்தான். ஆனால் என்னைப் பெருமையாக எங்காவது உன் தந்தை பேசியது உண்டா?”

     “வேதத்தை ப்ரமாணமாகக் கொண்டவருக்கு அந்த வேதமே சரஸ்வதிதான் என்பது தெரியாதா?   இன்றுவரை நானிருக்கும் இடம் வந்து என்னை அழைத்துச் செல்ல அவர் முயன்றாரா இன்றும், உன்னை அனுப்பியதின் நோக்கம் என் மீது கொண்ட பாசம் காரணமல்லவே யாகத்தைச் செய்வதற்கு என்னுடைய சம்பந்தம் வேண்டும்!!  இவரின் வைதிகத்திற்கு நான் வேண்டுமென்றால் இவ்விடத்திற்கு அவரை வரச் சொல்“.

    “சரஸ்வதி நதிக்கரையில் சிறந்த யாகம் செய்திடட்டும்.    உடனிருந்து ஒத்துழைக்க நான் தயாராக உள்ளேன்.  பிள்ளாய்! என்னை உதாசீனம் செய்த உன் தகப்பனார் இருக்கும் இடம், நான் வரத் தயாராக இல்லை என ஆவேசமாக ஆர்ப்பரித்துப் பேசினாள்.

    “தாயே! தவறுகள் நேர்ந்திருக்கலாம்.  ஆனால் திசைமுகன் தவம் புரிய சத்யவ்ரதமே சிறந்த க்ஷேத்ரம்.  இது தெய்வத்தின் கட்டளை!! தாங்களும் வந்து கலந்து கொண்டால், தங்களின் மனதின் கலக்கமும் தெளியும்.  வாக்தேவியின் பெருமைதனை உலகமும் நன்கறியும்“.  வசிஷ்டனின் கனிவான பேச்சு, கலைகளின் கலக்கத்தைத் தெளிவிக்கவில்லை. 

    “பிள்ளாய்! உன் தந்தைக்காகப் பரிந்து பேசுகிறாய்….” – சரஸ்வதி.

     “இல்லை தாயே! தாங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று பேசுகிறேன் – வசிஷ்டர்.

சற்று நேரம் இருவரிடமும் மௌனம்.

     வசிஷ்டரே அதனைக் கலைத்தார்.  அன்னையே! தங்களின் அருமை தெரியாதவரல்ல அயன்.  ஆதலால்தான் அழைத்தார்.  இருப்பினும் பெண்ணின் குணம் போர்குணம்.  ஆண்கள் அடங்கும்போதும் அது விஷயத்தைத் திசை திருப்புகிறது எத்தனையோ தவறுகள் இருந்தாலும்,   தர்மத்தின் வழி நடக்கத் துணை நிற்பவள் துணைவி“.

     “சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித், தன் கணவனை சாடுபவள் சரஸ்வதியாக இருந்தாலும், சரியென்று சொல்வதற்கில்லை.  அன்னையே! அருளாளன் அருள் பெறும் நேரமிது.  தங்களின் கோபதாபங்களை விடுத்து, அச்வமேதத்திற்கு வாருங்கள்.  உங்களின் வரவுக்காகக் காத்திருக்கிறோம்“.

    தாயை வணங்கிப் புறப்பட்டார் வசிஷ்டர்.  அவரின் உள்ளக் குமுறல்களை அடக்கிக் கொள்ளப் பெரும் சிரமப்பட்டார் கலைமகளுக்கு ஏனிந்த கர்வம்?” பெண்களின் இயற்கை குணத்தை மாற்ற அந்த ஈஸ்வரனும் முயற்சிப்பதில்லையா?” எனப் பல எண்ணங்கள் உந்தித் தள்ள, விரைந்து காஞ்சியை அடைந்தார்.

    மனைவியைப் பிரிந்த மலரோன் (பிரமன்), மகன் மட்டும் தனித்து வருவதைக் கண்டு மனம் வருந்தினார்.  ஒருவேளை தவறுக்குத் தலைகுனிந்து, தனது வருகையை தாமதப் படுத்துகிறாளோ! என்றும் எண்ணினார்.  மகனின் நடை வேகமே அங்கு நடந்த சம்பவங்களை உணர்த்தியது.

    நெடியதொரு பெருமூச்சு பிரமனின் முகத்திலிருந்து உண்டானது.  தருமவழி நடக்கும் ஆண்களை தவறாக நினைப்பது பெண்ணினத்தின் பெருமை போலும்! தனது தன்மையை மறந்து தயவுடன் தான் இறங்கி வந்தாலும், சரஸ்வதி அதனை ஏற்க மறுத்தது கண்டு என்ன செய்வது என அறியாமல் திகைத்தார்.

     சர்வ சாஸ்த்ரங்களிலும் கரை கண்ட தனயனிடமே இதற்கொரு வழி கேட்டார். மனைவியின்றி யாகம் தொடங்கினால் அதன் மகத்துவம் எப்படி உண்டாகும்? தவப் புதல்வன் சொன்ன வழி நல்சாஸ்திர வழி.   கணவனின் கருத்தினை மதிக்காத மனைவியர்க்கு இஃதொரு பேரிடி.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

                                Varam Tharum Maram

(Athi Varadar Vaibhavam)

English Audio Book of Sri APNSwami’s Varam Tharum Maram

Audio by Smt. Lavanya part 6

https://soundcloud.com/apnswami/varam-tharum-maram-english-06-saraswathis-refusal

Part 6 – Saraswathi’s refusal

    Brahma understood that he can’t start the yagam without Saraswathi by his side. So, he asked Vasishtar to go and request Saraswathi to join him in the yagam. He knew that women may lose control over their senses at times, but they always sacrifice anything for their husband’s sake.  Hence, he was confident that Saraswathi would give up her penance and join him to complete the yagam.

    Seeing Vasishtar, Saraswathi’s joy knew no bounds and she heartily welcomed her son. When she heard the message, Saraswathi became furious and the cool waters of Saraswathi river began to boil with her fury. 

    She said, “My son! Your father doesn’t like me at all and no wife will tolerate when her husband praises another woman. I agree that ThirumagaL is better than me, but can you think of one instance when your father has praised me in front of others?   Your father always makes decisions based on the Vedas, yet he doesn’t know that the Vedas are none other than me. He did not even care about me all these years.  He didn’t even come once through these years to pacify me or see me, but now when he wants to complete a yagam, he wants me to come! No way! If he wants me to join him, ask him to come here. let him do his yagam on the banks of Saraswathi river and I will cooperate in every possible way.  But I will come to the abode of a man who has not respected me.”

     When Saraswathi finished, Vasishtar felt as if he was standing in the middle of torrential rains! Finally, Vasishtar looked at her one last time and she screamed, “I’m not ready to come! You can go and give him this message!”

    Vasishtar stood there calmly and tried to convince his mother.  He said, “O mother! Mistakes are never permanent, so please don’t mind what he did. Moreover, Satyavratham is the best place for this yagam, so it may not be possible for him to come here to do the yagam.  Above everything, this is a divine order.  If you also come and join this yagam, everyone will be happy and you’ll get a soothing peace in your mind. The world will also respect you for this act. ” But Vasishtar’s calm words had no effect whatsoever on Saraswathi. 

    “My son, you’re supporting your father.”, said Sarawathi.

    “No, no mother. I said all this to help you to understand the truth and reality” – Vasishtar.

    Then, there was a momentary silence.  Finally, Vasishtar broke that silence and said, “Mother, please listen to me. Father completely understands your greatness and this is why he has sent me to bring you.  Despite all the mistakes, women tend to be highly tolerant and they will always follow the established tenets of Dharma.”

    “Saraswathi is known for her prowess and for her ability to take on her husband’s arguments at the right time, but that may not always be right.  This is a divine command and it is now the time to get His blessings.  So, please give up your anger and come to Ashwamedha yagam. We are all waiting for you.”

    Realizing that Sarawathi is not going to come, Vasishtar bowed to her with a heavy heart and left the place.  While going back, he kept thinking about the conversation and wondered why his mother is so adamant and why Perumal is not taking any steps to bring her to the yagam.  Pondering over such questions,  he quickly reached Kanchi.

    Brahma saw his son coming alone and this made his heart ache.  just a mere look at Vasishtar’s body language was enough for Brahma to guess what might have happened there.  Brahma gave out a deep sigh as if to wonder why his wife is preventing him from pursuing the path of dharma.  Also, he felt confused because he didn’t know how to do the yagam without his wife by his side.

    He asked Vasishtar to give a solution to this predicament.  Though Brahma knew all the sastras well, he was too confused and couldn’t think properly.  So, Vasishtar took over the decision-making process and gave Brahma the right solution that would allow Brahma and others to reap the benefits of the yagam even without his wife!

    How is this possible? What is this solution? Stay tuned.

-Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

VTM Poster5