Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |யாரைத் தான் குற்றம் சொல்வது? | Whom to Blame?

Please note that this article has both the Tamil version (written by Sri APN Swami) and the English version (translation done by his sishyas)    

          யாரைத் தான் குற்றம் சொல்வது?

 

இது விகாரி வருட பங்குனி மாதம். ஆங்கில தேதி ஏப்ரல் (2-20) அன்று ஸ்ரீ ராம நவமி. அதன் முன்னதாக பங்குனி உத்திர உத்ஸவங்கள் ஆங்காங்கு கோயில்களில் நடைபெற்று வர வேண்டும். ஸ்ரீ ராம நவமி முடிந்து பங்குனி உத்திரம் வருகிறது. அனால் ஒரே இரவிற்குள் உலகில் அனைத்தும் தலை கீழாக மாறியது போன்று சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன. அனைத்து ஆலயங்களும் பொதுமக்கள் தரிசனத்துக்காக அடைக்கப்பட்டுவிட்டன. அன்றாட பூஜைகள் மட்டும் நடைபெற்றது.  ஆனால் உத்சவங்கள் முழுதுமாகத் தடைபட்டுவிட்டன.

சென்னையின் மிகப்பெரிய விழாவான கபாலி கோயிலின் அறுபத்தி மூவர் வரலாற்றின் முதன் முறையாகத் தடைப்பட்டதாகச் சொல்கின்றனர். ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் பங்குனி உத்திரச் சேர்த்தி, மதுராந்தகம் ராமனின் ஸ்ரீராமநவமி, மன்னை ராஜகோபாலன் பங்குனி உத்திரம் உத்சவம், காஞ்சி வரதனின் ஐந்து தாயார் சேர்த்தி, ஏகாம்பரேச்வரர் etc etc  என நீள்கிறது.  மொத்தத்தில் மௌனமாக உள்ளுக்குள் புழுங்குவது தவிர்த்து வேறென்ன செய்து விடமுடியும் நம்மால்.

க்ருமி கண்ட சோழன் காலத்தில் ரங்கநாதன் சேவையை ஸ்ரீ வைஷ்ணவர்கள் இழந்தனர் -எனும் கதை கேட்டுள்ளோம்.  அன்னியப்படையெடுப்பில் நாற்பதாண்டுகள் கருவறை பூட்டப்பட்டிருந்ததைப் படித்துள்ளோம். ஒளரங்கசிப்  காலத்தில் வரதன் உடையார் பாளையம் எழுந்தருளின போது ஆலயக்கதவுகள் அடைபட்டிருந்ததாக அறிகிறோம்.  இவையெல்லாம் ஆங்காங்கு ஒரு சமயம் நேர்ந்த ஆபத்து காலத்தில் அந்தந்த ஆலயங்கள் மூடியிருந்தன.

ஆனால் இன்று கனவிலும் நினைத்துப்பார்க்கமுடியாதபடி ஒட்டு மொத்தமாக அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டுள்ளன.  நித்யம் நடைபெறும் பூஜைகள் மட்டும் சம்ப்ரதாயமாக  நடந்து வருவதில் ஒரு ஆறுதல் அவ்வளவே. ஊரடங்கு உத்தரவு நமது நன்மைக்காகவே என்றாலும் “என் கண்ணினைகள் என்று கொலோ களிக்கும்  நாளே ” என்பதாக எம்பெருமான் சேவையை இழந்த பக்தர்கள் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கின்றனர்.

“காஞ்சி அரசன் தனது சிஷ்யனை நாடு கடத்தின காரணத்தால் நானும் போகிறேன். எம்பெருமானே என்னுடன் நீயும் வா” என்றாராம் திருமழிசை ஆழ்வார்.

    “ஆழ்வார்  இல்லாத ஊரில் தனக்கென்ன வேலை?” என பெருமான் அவருடன் கிளம்பினாராம். “பெருமாள் இல்லாத ஊரில் தங்களுக்கு என்ன வேலை?” என மற்ற தெய்வங்களும் பெருமாளைப் பின் தொடர்ந்தனவாம். “இப்படி தெய்வங்கள் வெளியேறியதால் தெய்வீகக் களையிழந்தது காஞ்சி” என்று திருமிழசையாழ்வார் சரித்ரம் கூறுகிறது.

இன்று தெய்வங்கள் சாந்நித்யத்துடன் இருந்தும் தெய்வீகத்தை உணர முடியாமல் நகரமும், நகரத்தில் உள்ள இயக்கமும் சூன்யமாகக் காட்சியளிப்பது வேதனை.

இந்நிலைக்கு யார் காரணம்? நீயா? நானா? என்று நாடுகளுக்குள் ஒருத்தரையொருத்தர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். விதிகள் மீறலா? சாஸ்திரங்களை அறியவில்லையா? பெருமாளிடம் பக்தியில்லையா? என்றெல்லாம் மற்றொருபுறம் விவாதங்களும், விதண்டாவாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  ஆனால் எல்லோருக்கும் ஒரே பிரார்த்தனைதான். இந்நிலை விரைவில் மாறவேண்டும் என்பதே அது.

ராமனுக்கு பாட்டாபிஷேகம் என தசரதன் தீர்மானித்தவுடன் அயோத்தி மக்கள் மிகவும் மகிழ்ந்தனர். உடனடியாக தங்களுக்குத்தெரிந்த தெய்வங்களை எல்லாம் வேண்ட ஆரம்பித்தனர். ராம பட்டாபிஷேகம் நன்கு நடைபெற அவரவர்களுக்குத் தக்க முறையில் தெய்வ பிரார்த்தனை செய்தது போன்று இன்று நாம் அனைவரும் வேண்டிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தவிர்த்து ஒரே நோக்கத்துக்காக ஒன்றிணைவோம்.   அது தானே உத்தம ஸ்ரீவைஷ்ணவ  லக்ஷணம்.

பாவமே செய்யாமல் பாவியானவன் பரதன்.  அதாவது பரதன் அறியாமல் அவன் மீது மூன்று பழிகள் சுமத்தப்பட்டன. தந்தையின் மரணம்,தாயின் பேராசை, தமையனின் கானக வாழ்க்கை என இம்மூன்றும் பரதன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள்.

தந்தையும் இறந்து, தமையனும் வனம்  சென்றதால் தலைவன் இல்லாத நாட்டினுள், தம்பி சத்ருக்னனுடன் பரதன் உள்ளே நுழைகிறான். இதுவரை காணாத மயான அமைதியில் அயோத்தி ஊரடங்கியுள்ளது. உள்ளத்தால் பயந்துக்கொண்டே அரண்மனைக்குச் சென்றவனுக்கு அடுத்த அடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. துயரம் தாங்க முடியாமல் கதறிக்கதறி அழுகிறான் தூயவன் பரதன்.

ஒரு வழியாக மனம் தெளிந்து விசாரணை ஆரம்பமாகிறது. ஆம், “ராமன் காட்டுக்குப் போனதுக்கு யார் காரணம்?” என்று கேட்டதுதான் தாமதம். உடனே அங்கே கூச்சலும் குழப்பமும் நிலவியது.

“பாதகி கைகேயி தான் (உனது தாய்) காரணம்” என்றார் சிலர். வேறு சிலரோ! “கைகேயி நல்லவள் தான்.  அவளின் மனத்தைக் கெடுத்தவள் அரக்கி கூனி” என்றனர். இன்னும் சிலர் “இல்லையில்லை மன்னன் தசரதன் மனைவி பேச்சைக்கேட்டது தான் காரணம்” என்றனர்.  வேறு சிலர் “பரதா ! மக்களின் பாவம் மன்னனைச் சேரும். எங்களின் பாவத்தால் தான் ராமன் வனம் ஏறினார்”  என்று வருந்தினர்.

அனைவரையும் அமைதிப்படுத்தினான் பரதன். “என் தாய் கைகேயி, மந்தரை, மன்னன் தசரதன், மக்களான நீங்கள் என எவருமே இக்கொடுமை நிகழ்வுக்குக் காரணமில்ல. பின் யார் தான்?  என்கிறீர்களா? என ஒரு கணம் நிறுத்தி அமைதியாகக் கூட்டத்தைப் பார்த்தான். இமைக்க மறந்து அனைவரும் அவனையே கண்டனர்.

“இதோ இந்த பாழாய்ப்போன பரதனின் பாவமன்றோ ராமபிரான் காடேறக் காரணமாயிற்று. இம்மாபாதகத்தின் காரணகர்தா நானேதானாயிடுக” என்று நெஞ்சம் வெடித்திட அழுது ஆர்பரித்தான் அண்ணலின் இளவல்.

“உலகில் எங்கு தீங்கு நடந்தாலும்,   அபசாரம் ஏற்பட்டாலும்” “நானேதானாயிடுக ”  (ஆம், இது எனது பாபத்தின் பலன்) என எண்ணுவது தானே உத்தம ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம். பிறரைக் குறை கூறுவதை விடுத்து நாம் நமது பாவத்தால்தான் இந்த ஆபத்து நேர்ந்தது என இப்போது நினைந்திடுவோம். இதற்கென்ன பரிகாரம்? வேறென்ன! ப்ரார்த்தனைத் தான். பெருமாளை சேவிக்க முடியாமலும், அவனின் உத்ஸவங்களை அனுபவிக்க முடியாமலும் தடுப்பது நமது பாவங்கள் தானே.

ஆகையால் ராம பட்டாபிஷேகம் போன்று தடைகள் அனைத்தும் நன்கு நீங்கி நாட்டில் செழிப்பும், ஆரோக்யமும், ஆஸ்திக்யமும் வளர்ந்திட ப்ரார்தனை செய்வோம். “நானேதானாயிடுக” எனும் நற்பண்பினை நமக்கருளவும் அவனையே வேண்டுவோம்.   இதிலேதும்  குற்றம்  இருப்பின்  “நானேதானாயிடுக “.

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

31/03/2020

 

English

Whom to Blame?

In this Vikari year, we are celebrating Ram Navami on 2/4/2020. Prior to this day, we should have had celebrations across all temples as Panguni Uthiram is going to happen right after Ram Navami. Unfortunately, all temples this year are shut for the public and it is almost like the world turned upside down overnight. Though everyday rituals are happening, none of the festivals are taking place. 

It is being said that for the first time in history, the Muppathu Moovar utsavam in Chennai’s famed Kapaleeswarar temple has stopped. In fact, the list of temples where festivities have stopped is endless and includes Srirangam Periya Perumal’s Serthi Utsavam, Sri Ram Navami celebrations at Madurantakam Ramar temple, panguni uthiram utsavam at Mannai Rajagopalaswamy temple, the five thayar serthi utsavam at Kanchi Varadan temple, ekambareswarar temple, and more. Most of us miss these events, but is there anything that we can do other than feel sorry for it in our hearts?

We all know how during the chola period, Sri vaishnavas didn’t have the privilege of praying to Srirangam perumal. Likewise, we know how the sanctum sanctorum was under a lockdown for 40 years because of invasions. We are also familiar with how the sanctum sanctorum of Varadaraja Perumal was closed during the invasion of Aurangazeb as Varadan was taken to udayarpalayam. But these were specific events that led to the closure of a few temples.

But today, all the temples are closed and this was beyond our imagination even a few days ago. Probably a small consolation is that all the rituals are happening according to the prescribed sastras. Though this lockdown and curfew is for our safety, all devotees are surely feeling miserable about missing their temples and Gods.

Thirumazhisai Azhwar once told Perumal to come with him since the king had banished him from the kingdom. Perumal also felt that He had no business in a place where Azhwar wasn’t allowed and so left with him. The other Gods felt that they had no business in a place where Perumal wasn’t there and so they followed Him. Due to this, kanchi lost its divinity and culture, says the Charitram of Thirumazhisai Azhwar. 

Today, it feels empty to live in a place where we cannot feel the divinity radiating from the temples. 

So, who is responsible for this state? Countries are trading blames on each other on one side and on the other, there are debates going on about non-adherence to the lockdown laws, fallacy of our sastrams, lack of faith in Perumal, and more. Still, the single prayer that unites us all is that this situation should change soon.

When Dasarathan announced Rama’s coronation, the entire city of Ayodhya was upbeat and the people immediately started praying to all their favorite Gods. Just like how they prayed for the successful completion of Rama’s coronation, we’re also praying today for this situation to change. Instead of trading blames, let’s all unite together for this wish to become a reality. After all, isn’t this the trait of SriVaishnavas?

Bharathan became a sinner without committing any sin! He was blamed for three sins in which he had no role and these sins are – his father’s death, his mother’s greed, and his brother’s forest life. 

Bharathan, along with his brother Shatrughan, entered the city of Ayodhya after his father’s demise and brother’s exile and experienced a deathly silence that he had never seen before. With a foreboding, he entered the place and there was a lot of bad news awaiting him. Unable to bear this grief, this pure soul cried uncontrollably. 

After everything settled, a questioning began as to who was responsible for Rama’s exile. Immediately, there was a commotion and some people said that the reason was kaikeyi while a few others said that Kaikeyi was a good person and it was the witch kooni who spoiled her mind. Others said that king Dasarathan was the reason as he was the one who listened to his wife. Many of them felt that since the people’s sins affect the king, it was their own sins that sent Rama to exile.

Bharathan got up and calmed the crowd. He said that the reason was not King Dasarathan, Queen kaikeyi, or the people of Ayodhya. Then who is it? Everyone wondered and they looked at him with bated breath. Bharathan looked at them and said calmly that it was the sin of the wretched Bharathan that made Rama go to exile. Saying this, Bharathan started crying inconsolably as if his heart would break. 

Yes, it is the exalted SriVaishnava trait to think that any bad event that impacts them is due to their own sins. Let us stop blaming each other and accept that this situation is the result of our sins. What is the remedy for this? What else, other than prayers! Our inability to conduct His utsavams and pray to Him are due to our sins, right?

So, let us pray together for this nation to become stronger, wealthier, and prosperous. So, let us accept our mistakes and pray to Him.

-translation by Sri APN Swami Sishyas

Links to Articles in this Series

11. யாரைத் தான் குற்றம் சொல்வது?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |யாரைத் தான் குற்றம் சொல்வது? | Whom to Blame?

10.உடலால் தனித்திரு ; உள்ளத்தால் இணைந்திரு

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |உடலால் தனித்திரு ; உள்ளத்தால் இணைந்திரு | Separated by Body, United by Mind

9.Foreign போன பெரியோர்கள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |உடலால் தனித்திரு ; உள்ளத்தால் இணைந்திரு | Separated by Body, United by Mind

Please note that this article has the tamil version written by Sri APN Swami and the English translation done by his sishyas

உடலால் தனித்திருஉள்ளத்தால் இணைந்திரு

இன்றைய பொழுதில் உலகெங்கும் ஒலிக்கும் உபதேசம் இதுவாகும். கொடிய நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஊரடங்கு அமுலில் உள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகநாடுகளில் பெரும்பான்மையின் நிலைமை இதுதான். மண்பரப்பு முழுவதும் மரணஓலம் நிறையத் தொடங்கியுள்ளது. அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் செயல்பட்டாலும் இதற்குரிய சௌக்யம் முற்றிலுமாக ஏற்படவில்லை.

பல நாடுகளிலும், மாநிலங்களிலும் சிறைக்கைதிகளையும் விடுவிக்கத் தொடங்கிவிட்டனர்.  அவர்களுக்கு நோய் தொற்று  அதிகமானால் அதன் வீரியத்தைத் தாங்கமுடியாது; எனும் பயம் முக்கிய காரணமாகிறது. உண்மையிலேயே செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, யாரும் எதையும் செய்வதற்கில்லை.

காவல்துறை, தூய்மை பணியாளர், மருத்துவக்குழுவினர், முக்கிய பொறுப்பிலுள்ள அதிகாரிகள் பலர் என அனைவரின் பாடு   திண்டாட்டமாயுள்ளது. இருப்பினும் இவர்களின் அசராத சேவை போற்றுதலுக்குரியது. நெருக்கடியான இந்த காலகட்டத்திலும் பிறவியின் பெருமை உணராது பழுதாய் பொழுது போக்குவர்களே ஏராளம். நாளைய உதயத்தில் நாட்டின் நிலைமையும், நம் நிலைமையும் என்ன”? என்று அறியாமலேயே விதண்டாவாதங்களைத் தொடருகிறோம். இந்நிலை முழுவதும் மாறிட எம்பெருமானை பிரா ர்த்தனை செய்வதுடன், நம்மாலான சிறு சிறு உதவிகளையும் நாட்டிற்கும், சுற்றத்தவர்க்கும் செய்திடுவோம். குறிப்பாக ஆதரவற்றவர், பசு, பட்சி விலங்கினங்களுக்கும் இயன்றதைச் செய்து வாழ்வளித்திடுவோம்.

இக்கட்டான சூழ்நிலையில் இக் கட்டுடலைத் தனிமைப்படுத்த (கூட்டம் தவிர்த்து) ஆரோக்யம் பேணுவதை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆரோக்கியத்தின் காரணம் ஒருபுறமிருக்க, இதிலுள்ளஆன்மிகத்தகவலைக்  காணலாம்  இப்போது.

பகவத் ராமானுஜரின் கொள்கைகளுக்கு விசிஷ்ட அத்வைதம் என்பது பெயர். அதாவது சித்– எனப்படும் அறிவுள்ளஜீவனை அறிய வேண்டும். மேலும் அசித் – எனப்படும் அறிவற்ற இந்த ஸம்ஸாரத்தை அறிய வேண்டும்.

அதாவது அறிவுடையவன் ஆத்மா – (நாம் என்று புரிந்து கொள்ளுங்கள்). அறிவற்றது இந்த உலகம் ( நமது உடல் உட்பட) என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படி உடல், ஆத்மா இவை இரண்டை விட வேறுபட்டவன் பரமாத்மா எனும் ஈஸ்வரன். அவனே ஸ்ரீமத் நாராயணன்.

சரி, இனி அவனுக்கும், ஜீவனாகிய நமக்கும், அறிவற்ற அசேதனம் எனும் உடலுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாம். அறிவற்ற இந்த உடலுக்கு ஆதாரமானவன் அறிவுடைய ஜீவன். மேலும் அறிவற்ற ( அசேதனமான ) இந்த உடல்போக்யம் எனப்படுகிறது. அதாவது அனுபவிப்பவன் ஜீவன். அனுபவிக்கப்படுவது தேகம் என்று பொருள்.

இப்பொழுது நாம் பார்க்கும் இந்த உலகம் ( தேகம் உட்பட) அனைத்திற்கும் காரணமானவன் பகவானாகிய  ஸ்ரீமந்நாராயணன்.  அவனே அனைத்தையும் படைக்கிறான் இந்த ப்ரபஞ்சம் (உலகம்) பகவானின் தேக மாகிறது. அதாவது எனது உடலுக்கு நான் ஆத்மாவாக (உடலை விட வேறுபட்டவனாக, அதே சமயம் உடலினால் உண்டாகும் அனுபவங்களைப் பெறுபவனாக) இருப்பது போன்று, பகவானும் இந்த பிரபஞ்சத்தை விட வேறுபட்டவனாகவும், ஆனால் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும் விளங்குகிறான்.

தலை சுற்றுகிறதா! இது சற்று கடினமான சாஸ்திரப்பொருள். பலமுறை பெரியோர்களிடம் அடிபணிந்து அறிந்தால் மட்டுமே புரியும். இருந்தும் முயற்சிக்கலாம். படியுங்கள்.

ஆத்மஞ்ஞானிகள் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். ” நான் செய்த புண்ய, பாபத்தின் பலனாக எனக்கு ஒரு உடலின் தொடர்புடன் பிறவி உண்டாகியுள்ளது.  போன பிறவியில் இந்த உடலின் தொடர்பு எனக்கில்லை. மேலும் நான் மரணமடைந்த பின்னரும் எனக்கு இதனுடனாகிய தொடர்பு தொடரப்போவதுமில்லை. அதுவும் தவிர ஆத்மாவாகிய எனக்கு என்றுமே அழிவு இல்லை. அனால் எனது இந்த தேகம் குறிப்பிட்ட காலத்தில் அழிவை சந்திக்கிறது” என்பதை அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.  அப்போது உடல் தனித்தது என்பதை உள்ளத்துள் உணர்பவர்களன்றோ அவர்கள்.

இதே வழியில், பிரபஞ்சத்தையும், ஜீவனையும் (என்னையும்) தாங்குபவன் இந்த பரமாத்மா! அவன் ப்ரபஞ்சத்தினுள்ளும் இருக்கிறான். எனக்குள்ளும் இருக்கிறான் என்பதை நன்குணர்ந்தால் பிறவி ரகசியம் புரியும்.

“நானும், இந்த பிரபஞ்சமும் பகவானின் உடல்கள். அப்படியாகில் பகவான் பிரபஞ்சம் எனும் உடலைக்காட்டிலும் தனித்திருப்பவன் ( வேறுபட்டவன்). அதே சமயம், என் உடலுக்குள் நான் இருப்பது போன்று, இந்தப் ப்ரபஞ்சத்திற்குள்ளும், எனக்குள்ளும் அவன் அந்தர்யாமியாக (உள்ளத்தால்) இணைந்திருக்கிறான். அவனை உள்ளத்துக்குள் உணர்வதே பேரின்பம்”.  இது தன் பகவத் ராமானுஜரின் விசிஷ்ட அத்வைத கொள்கை.

அன்பர்களே சாஸ்திரம் அறிந்த ஒரு நல்ல ஆசார்யன் இதிலுள்ள ரகசியங்களை நமக்கு நன்கு விளக்கிக்கூறிடுவார். எனவே அவரின் மூலமாக அறிவதே மேன்மையளிக்கும்.

தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அதிகமான ஆராய்ச்சிகள் செய்யாமல் எளிய முறையில் இக்கருத்தினை விளக்கியுள்ளேன். இதைப்புரிந்துக்கொண்டு நாமும் உடலால் தனித்திருப்போம்“- (தேகம் வேறு, ஆத்மா வேறு என அறிவோம். பிரபஞ்சம் வேறு, பரமாத்மா வேறு என உணருவோம்)

உள்ளத்தால் இணைந்திருப்போம் – (இந்த பிரபஞ்சம், மற்றும் , எனக்குள்ளும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை த்யானம் செய்திடுவோம்)

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

30/03/2020

 

English

Separated by Body, United by Mind

The title is the message that we hear everywhere around the world today and there is a lockdown in place to prevent the spread of this deadly disease. This is not just the case just in India but in a majority of places around the world. Though the government machinery is working in full swing, we are unable to achieve complete success and the death horns are heard everywhere.

Many states have started releasing prisoners from jails to avoid the disease’s spread among jail inmates. In fact, no one knows what to do and hence, there’s nothing much happening on the ground.

Many people working in the essential services sector such as the police, medical professionals, sanitary workers, and important officials are undoubtedly in a difficult position. Still, their extraordinary service deserves heaps of praise and appreciation. But the vast majority are those who waste their time without understanding the purpose of their birth. Without knowing what will happen to us or our nation tomorrow, we’re wasting time in unnecessary arguments. Let us all pray to Emperuman to resolve this problem quickly and in the meantime, let us also do our bit to our nation and neighborhood. Specifically, let’s learn to co-exist with the neglected, cows, animals, and birds.

In these difficult times, the government is continuing to emphasize the benefits of social distancing for the health of every community. With health on one side, let’s explore the philosophy hidden in this practice.

The doctrine propagated by Swami Ramanuja is called Vishishtadvaitam. Its basic tenet is that we have to understand what is Chith (Jeevans who have knowledge) and Achith (the samsaram that doesn’t have knowledge).

In other words, Atma is the one with knowledge (people like us) while the world (including our body) doesn’t have knowledge. Other than these two groups, there is a third person and he is Paramatma, who is none other than Sriman Narayanan.

Let’s now see the relationship between Him, us, and the world. The owner of this unknowledgeable body is Atma. Moreover, the body is bOgam. That is, the person enjoying it is Jeevan and the one that is being enjoyed in the body.

The person responsible for this entire world, including our body, is Sriman Narayanan. Since He is the creator, everything in the world becomes His body. I am the Atma for my body (Atma is different from the body and at the same time, enjoys the benefits that come from the body). Similarly, Perumal is different from the world and at the same time, He is the Atma of the world.

Confusing? Well, this is a difficult philosophy to understand. One must learn from elders to understand its meaning. Still, let’s try to get some clarity on this. Read on.

Atma Jnanis (those who understand everything about the Atma) know that the body that they have got in this birth is due to the results of their past karmas. I did not have any association with this body in my previous birth and after my death, I won’t be having any further association with this body. Moreover, the Atma has no death or destruction, but the body associated with dies at some point in time. When you understand this concept, you’ll know that the Atma and body are two separate entities.

Likewise, Paramatma is someone who holds both the Heevatmas and the world. When you understand that He is inside the world and inside each of us, you’ll realize the purpose of your birth.

“The world and I are Bhagavan’s body and He is a separate entity with respect to the world. Just like how I live inside my body, He also lives inside this world and inside me as an Antaryami. Realizing Him inside each of us is the highest state of bliss. This is the crux of Swami’s Ramanuja’s Vishishtadvaitam. 

Friends, a good acharyan who understands these concepts can explain its intricacies in detail, so you must only learn through such an acharyan.

In the given circumstances, Sri APN Swami has explained this concept as lucidly as possible. For now, let us understand that we are separated by the body, that is, Atma is different from the body and Perumal is different from the world.

At the same time, we’re United by the mind, that is we pray to the Perumal who lives within each of us and the world.

-translation by Sri APN Swami Sishyas

Links to Articles in this Series

9.Foreign போன பெரியோர்கள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

Please note that this article is available in both Tamil (written by Sri APN Swami) and English (translated by his sishyas)

Foreign போன பெரியோர்கள்

பர்த்ருஹரி எனும் மஹாகவி இருந்தார். அவரின் மூன்று நூல்கள் மிகவும் ப்ரசித்தமானவை. சுபாஷிதம் எனும் நீதிநூல், அடுத்தது ச்ருங்காரம் – அதாவது காதல் இன்ப நுகர்ச்சி, மற்றொன்று வைராக்யம் (உலகியல் வெறுப்பு) எனும் மூன்று நூல்களை மொத்தம் முந்நூறு ச்லோகங்களாக்கினார் மஹாகவி.

அதில் நன்னூல் (நீதி சாஸ்த்ரம்) ஆரம்பிக்கும் போதே ஒரு அத்புதமான உலகியல் தத்வத்தைக் கூறுகிறார். “ எதற்காக இப்போது இதனை எழுதுகிறாய்? எங்களுக்குத் தெரியாதது உனக்குத் தெரியுமா? இதென்ன வெட்டித்தனமான காரியம்? நீ என்ன மேதாவியா? உனக்கு மட்டும் தான் எழுதத்தெரியுமா?” என்றெல்லாம் பலர் கேள்வி கேட்பதாக வைத்துக்கொண்டு பதில் உரைக்கிறார்.

மெத்தப்படித்த ஜ்ஞானவான்கள் பெரும்பாலும் பொறாமையிலேயே காலம் கழிப்பர். (தன்னைவிட விஷயம் தெரிந்தவன் எவனுமில்லை. ஒருவேளை மற்றொருவனுக்கு புகழுண்டானால் அதில் காழ்ப்புணர்ச்சி அதிகமாகும்) “சரி அவர்களை விடுவோம். அரசர்களிடம் நல்வார்த்தைகளை எடுத்துச் செல்லலாமே!” என்றால்; “தங்களிடம் யாசகம் பெறும் பண்டிதர்கள் இவர்கள். இவர்களென்ன நமக்கு உபதேசம் செய்வது?” எனும் கர்வத்தால் பாராமுகம் காட்டுவர். அது போகட்டும். எதுவும் அறியாதவர்களுக்காக ஏதாவது நல்லது சொல்லலாமே! என்றால்; இவர்கள் இருவரையும் விட அறிவிலிகளின் நிலை மிகவும் மோசம்.

தங்களுக்கு ஜ்ஞானமே இல்லை, என்பதினை சிறிதும் அறியாமலேயே, அனைத்தையும் அறிந்தவர்கள் போன்று ஆர்பாட்டமாக வீண் ஜம்பத்துடன் பொழுது போக்கிடுவர். ஆதலால் இவர்களை நம்மால் நெருங்கவே முடியாது.

அப்படியானால் எதற்காக இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து எழுதுகிறாய்? இதனால் யாருக்கு என்ன பயன்? என்று கேட்பவருக்கு ச்லோகத்தின் முடிவில் அத்புதமான பதில் தருகிறார். “உங்களின் கேள்வி ந்யாயமானதுதான். நான் பல பெரியோர்களைப் பணிந்து நல்விஷயங்களைப் பயின்றேன். அதனை அசைபோடும் போது நல்ல எண்ணங்கள் தோன்றின. எனக்குள்ளேயே அதை சீரணித்துக் கொண்டேன். ஏனெனில் எவரும் ஏற்பவரில்லையே. இருந்தாலும் தான் சுவைத்த பதார்தத்தின் சுவையை, கேட்டாலும், கேட்காவிட்டாலும் மற்றவர்க்கு எடுத்துச் சொல்வது போன்று இந்த சுபாஷிதம் இயற்றுகிறேன். “எனது ஆனந்த அனுபவ வெள்ளத்துக்கு வடிகாலாய் இந்நூலை இயற்றுகிறேன். இது எனக்காக நானே இயற்றினேன் என்றும் கொள்க” என்கிறார்.

இப்படி மஹான்களே பார்த்து பயந்த உலகத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது பேராபத்துதான். என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒருவகையில் இவ்வுலகில் சிலருக்கு இது பயன்தரும் எனும் எண்ணத்தில் எழுதுகிறோம். பல தேசங்களுக்குச் சென்று வந்தவர்கள்மூலம் தொற்றுநோய் பரவுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பல தேசத்தில் உள்ளவர்களுடன் உறவுகள் தொடர்ந்திட இதுவும் ஒரு வழியாகிறது.

ஏனெனில் நமது பெரும்பாலான உறவுகள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். கண்டம் விட்டு கண்டம் அவர்கள் பரவியுள்ளனர். மிகவும் ஆபத்தான இந்த சூழ்நிலையில் அவர்களின் நிலை குறித்த கவலைவாட்டுகிறது. வெளிநாட்டில் வாழ முடியாத சூழலில் தாய்நாட்டிற்கு திரும்புபவர்களை வீட்டிற்குள்ளாக அனுமதிக்கக் கூடவியலாத நிலைமை. யோசிக்க, யோசிக்க பெரும் பயங்கரமான ஆபத்தில் சிக்கியுள்ளோம் என்றுபுரிகிறது. ஆனால் இந்த நிதர்சனத்தை நம்மனம் ஏற்க மறுக்கின்றது. தனிமையில் சுயபரிசோதனையாக தீய எண்ணங்களைத் தவிர்த்து நல்ல விஷயங்களை நினைக்க முடியாமல் தடுமாறுகிறோம்.

அது சரி இதற்கொரு தீர்வுதான் என்ன? என்னும்போது நமது வெளிநாட்டுப் பெரியோர்களின் வழியை பின்பற்றவேண்டும்.

இதென்ன புதுக்கதை. “ ஒரு வரைமுறை இல்லாமல் மனம் போனபடி பிதற்ற ஆரம்பித்து விட்டாய். குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றி மேன், மேலும் சாஸ்த்ரவழியை மீறுகிறாய்” என்று தோன்றும். ஆனாலும் வழக்கம் போல் தொடர்ந்து படித்திடுங்கள்.

பாரதப்பண்பாட்டின்படி நடக்கும் பெரியோர் – நமது ஆசார்யர்கள், ஆசார அனுஷ்டானங்கள் மிக்கவர்கள். “ எங்கே தங்களையறியாமல் காம, க்ரோத வசப்படுவோமோ?” என பயந்து எப்போதும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருக்குமவர்கள், மேலும் வெளியில் வந்தால் தங்களுக்கு ஆசாரக்குறைவு ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சி எதிலுமே எல்லையை மீறாமலிருப்பவர்கள்.

“ஸம்ப்ரதாய ப்ரவசனம் தவிர்த்து அதிகமான ஸஞ்சாரம் ஆத்மலாபத்திற்கு விரோதி” என உணர்ந்து ஒடுங்கியிருப்பவர்கள். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நாவல்பாக்கம் ஸ்வாமி போன்ற மஹான்களை இங்கு நினைக்க வேண்டும்.

மேலும் வெளிதேசம் செல்வது சாஸ்த்ர சம்மதம் அன்று எனும் கொள்கையில் நிலைத்தவர். (இன்றைய காலகட்டத்தில்; வெளிதேசத்தில் வசித்தும் நமது தர்மத்தை வளர்க்கும் ஆஸ்தீகர்களைக் காணும்போது ஆனந்தமுண்டாகிறது.) இருப்பினும் ஆசார, அனுஷ்டானங்களின் நிலைத்த மஹான்கள் இன்றுவரை வெளிதேசம் செல்வதைத் தவிர்ப்பது கண்கூடு.

இவ்விதமிருக்க ” foreign போன பெரியோர்கள்” என்று எப்படிச் சொல்லலாம் என்பது தானே கேள்வி. ஸ்வாமி தேசிகன் அளிக்கும் விடை கேன்மின்.

“ நம் ஸம்ப்ரதாய மஹான்களின் பெருமையை வேதமே கொண்டாடுகிறது. பெருமாள், பிராட்டியின் கருணை எனும் கங்கை நதியில் நம்மை குளிப்பாட்டி பரிசுத்தர்களாக்குகின்றனர் பெரியோர். அவர்களின் பெருமைக்குணம் தான் என்ன? என்றால்; “தாம் மெத்தப்படித்தோம் எனும் கர்வம், இதனால் மற்றவர்களை அவமானப்படுத்த முனைவது, முன்னோர்களின் வழியறியாமல் தான் தோன்றித்தனமாகத்திரிவது, பொறாமை, வஞ்சனையுடன் என்றும் நேரம் கழிப்பது.” இது முதலான தீய நடத்தைகளுக்கு (எண்ணங்களுக்கு) வெகு தொலைவில் இருப்பவர்கள் என்கிறார்.

அதாவது “வெளிதேசத்தில் (தூரதேசத்தில்) வசிப்பவர்களின் நடை, உடை, பாவனையில் நாகரிகம் உண்டு” என்பதல்லவா நமது எண்ணம். குறிப்பாக மேல்நாட்டு நாகரீக மோகத்தில்தானே நாம் அலைகிறோம். அந்த தூரதேசத்திலிருந்து (foreign) வந்தவர்களை வாய்பிளந்து அதிசயமாக காண்கிறோம். அவர்களின் வசிப்பிடத்தின் பெருமைகளை, அவர்கள் விவரிக்க, விவரிக்க விழிகள் விரியக் கேட்கிறோம். அவர்களைப் போன்ற நாகரிகம் ( நடை, உடை, பாவனை) நமக்கும் உண்டானால் உலகில் மதிப்பு உண்டாகும் என முயற்சிக்கிறோம் அல்லவா!

அப்படியானால் நாம் யாரை பின்பற்ற (follow) வேண்டும்? நமக்குத் தேவை foreigners கலாசாரம்தானே. அப்படியாகில் விதேசிகள் (foreigners) நமது ஆசார்யர்கள். அவர்களை பின்தொடரவேண்டும்.

ஆம், பொறாமை, கயமை, பொய்மை, மடமை, முதலிய துர்குணங்கள் உள்ள இடங்களிலிருந்து தூரதேசத்தில் (விதேசத்தில் – foreign) இருப்பவர்கள். அதாவது விலகி (social distance) இருப்பவர்கள் நமது ஆசார்யர்கள். அவர்களே வெளிதேசத்தில் வாழ்பவர்கள் (foreigners). இவர்களின் வழியைத்தொடர்ந்தால் நாம் நினைத்த நன்மதிப்பை உலகில் பெறலாம்.

எல்லா தேசங்களிலும் ஒரே ப்ரார்த்தனை ஒலித்திடும். இந்த சமயத்தில் உள்ளத்தூய்மையுடன் பெரியோர்களைப் போற்றுவோம். அவர்களின் தொல்வழியில் நடப்பதே நமக்கு நல்வழி என்றுணர்வோம்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

29/03/2020

English

The Elders who went to Foreign Lands

Once there lived a great poet called Bhartṛhari. All his three works were very famous and they were Subhashitham (a work on laws and justice), Sringaram (a work on love), and Vairagyam (hatred towards material pleasures). From these works, he had composed about 200 slokas.

Out of these, the book of law opens with a worldly philosophy. He assumes that people ask him questions such as, “Why are you writing this work?Do you think you know more than us?Why this waste of time?Are you so great? Do you think you’re the only person who knows to write?”, and he answers them right at the outset.

A lot of arrogant learned people tend to spend a considerable part of their time being jealous of others. (No one is better than them and when someone gets praised, their rancour towards them increases).  But even if you decide to leave them aside and strive to earn a good name from the kings, you’re likely to get mocked as the kings may think that pandits are those who get payment from him and hence, have no right to give advice. Finally, if you decide to teach someone who doesn’t know anything, it gets even worse!

They won’t even realize that they don’t know anything and will spend all their time in vanity and false pride. That’s why we can never reach them.

If that’s the case, why are you constantly writing about such things? Who gets to benefit from these?He answers those questions at the end with a beautiful sloka. |There is merit in your question. I have had the privileges to learn from scholars and while I think about them at my leisure, I get good thoughts and ideas. I imbibed and want to share this sweetness with the world, even if there is no one to listen to them. That’s the reason behind Subhashitham. This work is a flow of my blissful experience and I’m penning it down just for me”, he said.

Undoubtedly, this is not a good trend for scholars to write as the world is scared to see them or accept their work. Still, they persist in the hope that it will benefit someone someday! This is also a way to connect with people around the world, especially at a time when we hear that COVID19 spreads from people who travel around the world. 

Many of our family members live in  other countries spread across other continents. During these trying times, their state of affairs worries us. Even people who return home from foreign countries have to be in self isolation. The more we think about it, the imminent danger that we are stuck in becomes apparent. But our minds refuse to accept this harsh situation. We are staggering due to our inability to stay positive during these difficult times.

When you think of the solution to this problem, it becomes apparent that we have to follow the ways of our elders in foreign countries. 

What’s this new story now? “You have started rambling and are furthering the deterioration of our sastrams by taking this route!” If you’re thinking like this, read on as usual to know the reason.

Our acharyas follow the path laid down by our Sastras and live their lives according to the culture of our land. “Can lust and anger even creep in without your knowledge?” Driven by these thoughts, they always isolated themselves from unwanted things. Moreover, fearing that their way of life will be affected when they travel too much, they lived within their limits.

They were of the firm belief that besides traveling to propagate our way of life, any other travel was not good for their atma. Here we have to think of great people like Navalpakkam swami who lived towards the end of the 20th century.

He lived in the belief that traveling abroad is against our sastrams (In today’s world, it is happy and heartening to see that all those who are living abroad are playing a big role in propagating our Sanatana Dharma). At the same time, we can see that those who are steeped in acharams refuse to travel abroad.

Now, you might wonder why is this article titled “The Elders who went to Foreign Lands“? Read the answer given by Swami Desikan.

Even Vedas celebrate the greatness of our learned people. Our elders dip us in the Ganga river (the compassion of Perumal and Piratti) to purify us. If you’re wondering what is their greatness, they are the ones who are far away from bad and negative qualities such as arrogance, false pride and shaming others through it, not following the path shown by our elders, jealousy, and hatred. 

Today, we believe that people living in foreign lands are more cultured than us. In fact, we are mesmerized by the Western culture. We gape at foreigners with a wide open mouth and we are completely captivated by all that they say about life in those lands. Hearing this, we also strive to follow the same culture in the belief that our status will also be elevated when we live like that.

In that case, whom should we follow? Since we want to follow foreigners, we should follow our acharyas because they are the real foreigners.

Yes, they are the ones who stay in foreign lands, away from qualities such as jealousy, anger, hatred, and falsehood. They maintain social distance with these qualities. When we follow their footsteps, we can earn the good status and life that we want.

At a time when the same prayer is ringing in the hearts of people around the world, let us cleanse ourselves by talking about the glories of our elders. Let us understand that following their footsteps is the best path for us. 

– Translation by Sri APN Swami’s Sishyas

Links to Articles in this Series

9.Foreign போன பெரியோர்கள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

கட்டையான கடவுள்

ஒரு நொடியில் உலகை அழித்திடுவோம் என்று அச்சுறுத்திய வல்லரசுகள் இன்று உறைந்து போயுள்ளன அச்சத்தில். அழிப்பதற்காக ஆயிரக்கணக்கில் ஆயுதங்களை தயார் செய்து தங்களை வல்லரசுகளாகக் காண்பித்துக் கொண்டவை இன்று மக்களை காக்கும் வழி தெரியாமல் திண்டாடுகின்றன. ஒரே மாதத்தில் இவ்வுலகின் மொத்த இயக்கமும் முற்றிலும் முடங்கி விட்டது எனலாம். அடுத்தடுத்து வரும் செய்திகள் ஒன்று கூட ஆரோக்கியமானதாக இல்லை. எவ்வளவு தான் மனதை திடப்படுத்திக் கொண்டாலும் ஒவ்வொரு நொடியும் “திக் திக்” என்று நகர்வதை தவிர்க்கமுடியவில்லை.

இதன் நடுவே “யார் குற்றவாளி? எவரால் இந்த பெரும் கேடு விளைந்தது?” என்பது குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுகள். மனம் போனபடி பேசுவது மனித இயல்பு தான் என்றாலும், மரணத்தின் நிழலில் வசிக்கும் போது வார்த்தைகள் இன்னமும் வலிமை பெறுகின்றன.

உலகமகா யுத்தத்தில் நேரெதிராக நடைபோட்ட நாடுகள் நேசக்கரம் நீட்டிக்கொண்டு துயரம் துடைக்க வேண்டுகின்றன. ஈச்வரனின்  இந்த விசித்திரமான லீலா வினோதங்களைக் கண்டு வியப்பதா? அல்லது வாழ்க்கையில் விரக்தியடைவதா? என்பதே தெரியவில்லை. எவ்வளவு கொடியது என்றாலும் ஸம்ஸாரத்தை வெறுக்கும் பக்குவம் ஏற்படவில்லை. நாளை நமது கதி என்ன? என்பது தெரியாத நிலையிலும் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் துறந்திட துணிவில்லை.  பிறரை வசை பாடியே பழகிய நாக்கு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு பொறுமை காத்திட நினைக்கவில்லை.

மௌனமாக இருப்பதை கோழைத்தனம் என்று எண்ணுபவர்கள் அதிகமுள்ள இவ்வுலகில், எதுதான் நிரந்தரம்?

“சுவாமி! எம்பெருமான் ஏன் இப்படி சோதிக்கிறான்! அவன் என்ன கல்லா?” என்று கேட்பவர்கள் ஏராளம். அவன் கல்லான காரணத்தை சிலர் கவிதையாகப் பாடியுள்ளனர். ஆனால் அவன் கட்டையான காரணத்தை கவிஞர் பாடியதை ஒரு சிலரே அறிந்திடுவர்.

“காவியம் எனும் ஸம்ஸாரத்தில் கவியே பிரமன்” என்பர் பெரியோர். அதனால் அவன் தனக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி பல புதுமைகளை மக்கள் ரசிக்கும் படி படைத்திடுவான்.  “கற்றோரை கற்றோரே காமுறுவர்!” என்பது இங்கு நினைக்கத்தக்கது. ரசனை இல்லை என்றால்  எல்லாமே தோஷமாகத் தான் தெரியும். காமாலை கண்ணுக்கு எல்லாம் மஞ்சள் தானே!

இறைவன் கட்டையான கதை வைகுந்தத்தில் இருந்து தொடங்குகிறது. மறுபடியும் பரமபதமா? என்றால் இதற்கும் பெரியோர்களே ப்ரமாணம்.

சுமார் இருபத்தைந்து  வருடங்களுக்கு முன்பு தி.நகர் வாணி மஹாலில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் சுவாமியின் உபந்யாசம் நடைபெற்ற சமயம், தினந்தோறும் பங்கேற்கும் பாக்கியம் பெற்றவன் அடியேன். அப்போது அடியேன் எந்த வசதியுமின்றி சொந்தமாகப் பத்திரிகையும் நடத்தி வந்தேன். என் மீது கொண்ட அபரிமித கருணையால் சுவாமியும் “பீஷ்ம ஸ்துதி” தொடர் விரிவுரையை பத்திரிகையில் எழுத இசைந்த சமயம் அது.

ஒரு நாள் உபந்யாசத்தில் புரி ஜகந்நாத எம்பெருமானை வர்ணித்த போது நகைச்சுவையாக ஒரு ச்லோகத்தைக் குறிப்பிட்டார். பகவத் விஷயத்தைக்கூட நகைச்சுவை பாணியில் கையாள்வது ப்ரமாண சரணர்களின் பொழுதுபோக்கு தானே. அதனால் வைகுந்தத்தில் நடந்த இந்த வினோதத்தை ரசிக்கலாம்.

“எனக்கு இரண்டு மனைவியர். ஒருத்தி இயற்கையிலேயே எங்கும் வராதவள் – நகராதவள்(அசலா எனும்  பூமி) . மற்றொருத்தி  ஓரிடத்திலும் நிற்காமல்  ஊர் சுற்றிக்கொண்டேயிருக்கும் சஞ்சலபுத்தியாள்.  (செல்வம் நிரந்தரமற்றது. மஹாலக்ஷ்மி) அது சரி, மனைவிகள் தான் சரியில்லை என்றால் பிள்ளையாவது மனம் மகிழ்ச்சி தருவானா? என்றால் அவன்  பெயர் மன்மதன். சிவனிடம் பட்ட  அபசாரத்தினால் கண்ணுக்குத்  தெரியாதவனாகி விட்டான் ( தகப்பன் கண்ணிலேயே படாதபிள்ளை). படுக்கையான பாம்புக்கும், வாகனமான கருடனுக்கும், இயற்கையாகவே எப்போதும் பகைமை.  ( வைகுண்டத்தில்  நடைபெறும் சம்பவமாக கவி இதனை வர்ணித்திருப்பதை மனதில் கொள்க.) அதனால் அவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர்  சண்டையிடுகின்றனர். தங்குவதற்கும் தனியாக இடமின்றி மாமனார் வீடான பாற்கடல். இப்படி, திரும்பத்  திரும்ப தனது குடும்ப கஷ்டத்தை  எண்ணி எண்ணி பெருமாள் கட்டையானான்.

அத்புதமான ஹாஸ்ய ரசத்துடன்  முக்கூர் ஸ்வாமி  இக்கதையை விவரித்த போது அரசிகர்கள் ஒருவருமின்றி, ரசிகர்களே நிறைந்திருந்த அந்த சபை ஆர்பரித்துக் களித்தது.  இந்த அழகிய ஸம்ஸ்க்ருத ச்லோகத்தை அறிஞர் பெருமக்கள் பக்கலில் கேட்டறிந்து தெளிவு பெறுக. இதே போன்று பரமசிவனுக்கும் ச்லோகமுண்டு.

அன்றைய உபந்யாசத்தில் ரசித்து எழுதிக் கொண்ட குறிப்பை பலவிடங்களில் பயன்படுத்தும் பாக்யம்  பெற்றேன். ஏதோவொரு வகையில் முக்கூர் சுவாமிகளின் சம்பந்தம் பெற்றவர்களும் உணரும் படியன்றோ இஃதிருப்பது.  இதைத்தான் “காவியங்களிலும், சாஸ்திரங்களிலும் உள்ள சுவாரஸ்யங்களைக் கொண்டு ரசிகரான பெரியோர் நற்போது போக்குகின்றனர். பெரும் ஆபத்து சூழ்ந்துள்ள இவ்வேளையிலும் பிறர் தோஷங்களையே பார்த்து மகிழும் மூர்க்கர்கள் கலகப்பிரியராகப் போது போக்குகின்றனர்.” என்றான் மஹாகவி.

மஹாவித்வான் பெருக்காரணை சுவாமியின் சதாபிஷேக மஹோத்ஸவத்தில் இந்த ச்லோகத்தை உபந்யஸித்த போது மனம் மகிழ்ந்த பெருக்காரணை சுவாமியும் ‌”வைகுந்தத்தில் வந்த நான்முகனையும், ஆறுமுகனையும் ஒன்றாகக் கண்டு, “பத்து தலை ராவணன் இங்கும் வந்தானே!” என்று லக்ஷ்மீ பயந்த கதையை வெகு ஹாஸ்யமாக விவரித்தார்.

கவிகள் தங்களது கற்பனைத் திறனால் சாஸ்திரங்களையும் ஸாஹித்யமாக(literature) வெளியிடுவதின் மேன்மையை எடுத்துரைத்தார்.

இன்றுள்ள பயங்கர சூழலில் ஏதோ நற்போது போக்காக எப்போதும் எம்பெருமான் நினைவு வேண்டுவதைத் தவிர வேறு இல்லை. “ஸம்ஸார விஷ வ்ருக்ஷத்தில் அம்ருதமான பழங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று கேசவ பக்தி. மற்றொன்று அவனடியார் கோஷ்டி. இதுவே என்றும் நிலைத்திருக்க ப்ரார்த்தனை செய்வோம்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

28/03/2020

English

The Lord Who became a Log

Those countries that once claimed that they can destroy the world in a second are now grappling with worry and sorrow. These countries had accumulated many weapons to protect themselves from attacks, but today, they are struggling to save their people. Within just a month, it can be said that all man made creations have become muted. The news that is coming in is not healthy at all and hence we feel scared every minute, despite our best efforts to remain positive.

In the midst of all this, accusations are flying thick and fast as to who is responsible for this state of affairs. Though it is a human trait to exaggerate and talk beyond acceptable levels, this goes to a whole new level when faced with death, Countries that fought with each other earlier directly and indirectly are now seeking each other’s support. Should we feel overwhelmed with this unique leelai of Perumal? Don’t know really.

Regardless of how difficult it is, we still don’t have the maturity to hate this samsaram. What will be our state tomorrow? We don’t know, still we’re unable to transcend our anger, likes, and dislikes. Our tongues are so used to criticism that it is unable to isolate itself and remain patient. What is permanent in this world where people think silence is cowardice?

Many people ask, “Swami, why is Perumal testing us like this? Is he made of stone?” Somehave even written poems on how He became a stone! But only some know how He became a log.

Our elders often say, “In the poetry called samsaram, the poet is Brahma.” That’s why the poet uses his independence and creativity to create new things that can be enjoyed by people. Here, you can recollect this saying, “Kaṟṟōrē kaṟṟōraik kāmuṟuvar” (The learners who loved the learned). When one doesn’t have the ability to enjoy creativity, everything looks like blemishes. After all, everything looks yellow for a person suffering from jaundice. 

Now, the story of how Perumal became a log started in SriVaikuntam. Again, you may wonder! Well, the story described by our elders is the evidence of this. 

About 25 years ago, Sri APN Swami had the privilege to attend a upanyasam series by Mukkur Lakshmi narasimhachariar Swami in Vani Mahal. At that time, APN Swami was running a magazine with no financial support. That was also when Mukkur swami consented to write a series called “Bhishma Stuti” in this magazine.

During that upanyasam, Mukku swami came up with a hilarious sloka while describing Puri jagannath Perumal, After all, isn’t it our past time to enjoy Bhagavad Vishayam in a humorous form! In that sense, let us enjoy this unique incident.

“I have two wives. One of them never moves by nature (achala also called Bhoomi). The other wife is fickle-minded and never stays in one place. She always roams around (wealth is temporary. Mahalakshmi). Ok, even if your wives don’t make you happy, do your children give you happiness? The person who asked this is Manmadhan who became invisible due to a cirse from Lord Shiva (the son who can never be seen by the father). There is a natural enmity between Ananthan, His bed and Garudan, his vehicle. (Keep in mind here about the poet’s description of SriVaikuntam). That’s why they constantly fight with each other. Perumal doesn’t even have a place to stay and lives in His Father-in-law’s place – Paarkadal. Due to this continuous stream of problems, He turned into a log!

When mukkur swami gave this funny explanation, everyone present there enjoyed it without any controversial thoughts. Please understand and enjoy this Sanskrit sloka. Like this, lord Shiva also has a sloka.

Sri APN Swami had the privilege to use the notes he jotted down during this upanyasam at various places. These help everyone to have some form of association with Mukkur swami. This is also how our elders enjoyed the intricate aspects present in our literary and sastraic works. 

In comparison, even during these difficult times, fools spend their time criticizing others, says the great poet. 

During the Sadabhisheka Mahotsavam of Perukaranai swami, APN Swami did a upanyasam on this sloka. Feeling elated, Perukaranai swami elucidated the story of how Lakshmi felt scared seeing the four-headed Brahma and the six-headed Muruga, as She thought that Ravana had come. He further explained how poets explain sastram and literature in a funny way to express their creativity. 

In these trying times, there is no better time pass than thinking about Bhagavan. In the poisonous tree called Samsaram, there are only two fruits. One is Keshava Bhakti and the other is Avan adiyar goshti (being in the group of His servants).

 Let us pray for good times again.

– Translation by Sri APN Swami Sishyas

Links to Articles in this Series

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

Please note that this article has both Tamil (written by Sri APN Swami) and its English version (translation by his sishyas)

எதிர்மறையே ஏற்றமாகுமா?

இந்தியா முழுதும் ஊரடங்கு அமுலில் வந்து  இன்று ( நான் எழுதும்)  மூன்றாம் நாள். கொத்து கொத்தாக  அயல் நாடுகளில்  மக்களின் வீழ்ச்சி நெஞ்சத்தை கலங்கவடிக்கிறது. நமது அரசாங்கம் திறமையாகவும், தைரியமாகவும் செயல்பட்டு நிலைமையை சமாளிப்பது ஆறுதல் அளிப்பது மட்டுமின்றி, உலகளாவிய பாராட்டுதல்களையும் பெறுகிறது. இருப்பினும், இன்னமும் “இதன் தீவிரத்தை உணராதவர்கள் செய்யும் சிறு தவறுகள் நமக்கு பெரும் நஷ்டத்தை  விளைவித்திடுமோ” என பயப்படாமல் இருக்க முடியவில்லை. இந்த சமயத்தில் உளவியல் வல்லுனர்கள் எதிர்மறையான எண்ணங்களை விலக்கச்சொல்கின்றனர்.

அதாவது  நோய் தொற்றுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர், மரணமடைந்தனர் என்று சொல்வதைவிட குணமானவர்கள் குறித்து நல்ல தகவல்களை பரிமாறிக் கொள்வதே சிறந்தது  என்பது கருத்து.

ஆம், மக்களுக்கு பயமுண்டாக்குவதை  விட இதனை எதிர்த்து போராடி   வெற்றி பெறும்  சிந்தனையை வளர்ப்பதே காலத்தின் தேவை என்பதை நன்கு உணரவேண்டும். இத்தகு சிந்தனை; எதிர்மறையை (negativity) வலுவிழக்கச்செய்து, மனதில் தெம்பும் தைரியமும் வளர்க்கும்.

பொதுவாகவே,எங்கும், எதிலும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும் என்பதே நமது சாஸ்திரங்களின் கொள்கையாகும்.  Positive energy  இல்லாமல் negative energy or vibration  எந்த  காரியத்தையும்  சாதிக்கலாகாமையைத் தரும். உதாரணமாக இக்கொடிய ஸம்ஸாரத்தின் கண்டு நடுங்கும் நாம் அதை விடுத்து மேலான மோக்ஷத்தை அடைய எம்பெருமான் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்கு மஹாவிச்வாசம் என்று பெயர். தொடர்ந்து வாழ்க்கை குறித்த கவலையை விடுத்து, பகவானைக் குறித்து எண்ணங்களை மேம்படுத்திக் கொள்வதால் ஒரு நிம்மதி உண்டாகிறது. உளவியலாளர் கருத்து மட்டுமின்றி  நமது பெரியவர்களின் அனுபவத்தில் கண்ட உண்மையிது.

உதாரணத்திற்கு இரண்டு நிகழ்வுகளைக் காணலாம். கொடியவனான  இரண்யகசிபு, தனது மகனுக்குச் செய்த துன்பங்கள் ஏராளம். எப்படியாவது மகனான ப்ரகலாதனைக்  கொன்றே தீருவது என்று அல்லும்  பகலும் யோசித்து செயல்பட்டான். ஆனால், தீமைகளுக்கெல்லாம் அசராத  ப்ரகலாதன் பகவானையே த்யானம் செய்துவந்தான்.

பேராபத்தின் நடுவில் பெருமாளை நினைக்க முடியுமா? அனால் நமக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டினான் அசுரனின் மகன். அவன் நினைப்பின் படியே பகவானும் தோன்றி அருள் புரிந்தான்.

மற்றொன்று சீதையின் நிலையை ஸ்வாமி தேசிகன் எடுத்து காட்டுகிறார். “கொடூர குணம், தோற்றம் கொண்ட அரக்கியர் துன்புறுத்தினர். மற்றொருபுறம் அழகிய பூஞ்சோலைகள் நிறைந்த வனம் மனம்  கவர்ந்தது. இப்படி அசோக  வனத்தில் சுகம், துக்கம் எனும் இரண்டின் நடுவில் இருந்தாலும் சீதையின் மனது ராமனையே எண்ணியது. வேறொன்றிலும் செல்லவில்லை” என்று.

இது ஏதோ புராண  கதையாகச் சொல்வதாக எண்ணக் கூடாது. தொடர்ந்து துயரங்களையே நினைப்பதை விடுத்து, அதன் நடுவிலும் பகவத்சிந்தனம் செய்யவேண்டும். நம்மில் பலர், பிறர், தங்களுக்குச் செய்த தீமைகளையே   சதா சர்வ காலமும் எண்ணிக் கொண்டு உள்ளத்தில் கறுவிக் கொண்டிருப்பார்கள். பிடிக்காதவனைக் குறித்து எப்போதும்  எண்ணிக்  கொண்டிருப்பதை விடுத்து, பிடித்த நல்ல விஷயத்தில் மனதைச் செலுத்தலாமே!  என்றால் அது அவர்களுக்கு இயலாது. சற்றே அமைதியாக அமர்ந்து ஆராய்ந்து பார்த்தால்; எதிரியையே எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர் மறையான எண்ணத் தொடர்ச்சியினால் எப்போதும் சௌக்கியமில்லை.

இதில் சட்டென்று நம் மனக்கண்ணில் தோன்றும் தோற்றம் துரியோதனன் தானே. மற்றவரின் மேலான வாழ்வைக்கண்டு பொறாமை கொண்டு தனது வாழ்க்கையைத் தொலைக்கும் முட்டாள்களின் முழு முதற் தலைவன் துரியோதனன். ” மாமகா: பாண்டவா:” எனும் கீதையின் முதல் கேள்வியைக் கேட்ட துரியோதனன் தந்தை த்ருதராஷ்டிரனின் மனோ நிலையை ஆசார்யர்கள் படம் பிடித்துக் காட்டுகின்றனர். இப்படி தந்தையும் மகனும் தாங்கள் நல்ல படியாக வாழ்வதை குறித்து யோசனை செய்வதை விடுத்து, நல்ல வாழ்க்கை நடத்தும் பாண்டவர்களை அழிப்பதிலேயே காலத்தைக் கழித்தனர். இறுதியில் மிகவும் கோரமான அழிவைச் சந்தித்தனர். ஆகையால், எண்ணங்களை மேம்படுத்திக் கொள்வதே  வாழ்க்கையின் பயன் என்பதை உணர வேண்டும்.

சில சமயம் இதற்கு மாற்றாக நிகழ்வதுமுண்டு. ஆனால் அவற்றிற்குரிய காரண, கார்யங்களை நோக்கினால் அதிலுள்ள விதிவிலக்குகள் புரியவரும்.

தர்மபுத்ரனின் ராஜ சூய யாகத்தில் சிசுபாலன் தொடர்ந்து கண்ணனை வசைபாடினான். பிறந்தது முதல் கண்ணன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவன் சிசுபாலன். மேலும் “பழம் பகைவன்” என்கிறார் ஆழ்வார் . கடைசியில் கண்ணன் கையால் அவனுக்கு முக்தி கிடைத்தது.

அது கண்டு வியந்த தர்மனுக்கு, கம்சன், சிசுபாலன் முதலானவர்கள் பயந்தாலும், பொறாமை கொண்டாலும் கண்ணனையே நினைத்து முக்தி அடைந்தார்கள் என்கிறார். ( இதன் விவரமான வ்யாக்யான விசேஷங்கள் விகாரி மார்கழி இதழிலிருந்து தொடர்ந்து ந்ருஸிம்ம ப்ரியாவில் வெளிவருவதை பண்டிதர்கள் அறிவார்கள்)

ஆக, சிசுபாலன் முதலானவர்க்கு எதிர்மறையான எண்ணமும் ஏற்றமளித்தது. நம்மைப் போன்ற சாமான்யர்கள் இதே எண்ணத்துடன் எம்பெருமானையா நினைக்கிறோம் அல்லது சிசுபாலன் போன்று பிறவிக்கான பின்புலம் நமக்குண்டா? (வைகுண்ட த்வாரபாலனான  ஜயவிஜயன்  சாபம் பெற்று இரண்யகசிபு, ராவணன் , சிசுபாலனாய் பிறந்தது பாகவதத்தில் காண்க). பிடிக்காதவர்களையே சதா சர்வ காலமும் நினைத்திருப்பது எதற்காக?

இதிலொரு ரகசியமும் அடங்கியுள்ளது. நமது எதிர்மறை எண்ணங்கள், நாம் யாரை நினைக்கிறோமோ அவர்களுக்கு கார்ய சாதகமாக அதாவது positive ஆக மாறுவதை நாம் அறிவதில்லை.  துரியோதனன் தொடர்ந்து பாண்டவர்களை தொல்லை படுத்தியதால்தானே பாண்டவர்களுக்கு மக்களிடையே ப்ராபல்யம் உண்டானது.  நற்பெயரும்  நிலைத்தது.

அது போன்றே, நாம் விரும்பாத ஒன்றைக் (ஒருவரை) குறித்து தொடர்ந்து பேசி வருவதால் அது அவருக்கு நல்லதொரு விளம்பரமாக அமைந்து விடுகிறது. உதாசீனம் செய்ய வேண்டிய இடத்தில் உள்ளத்தில் க்ரோதத்தினால் நம்மையறியாமல் அவர்களுக்கு விளம்பரத்தை நாமே உண்டாக்கித்  தருகிறோம் .

ஒருவேளை நமக்கு வேண்டாதவர்கள் க்ருஷ்ணனை போன்று பகவானாக இருந்தால் அது மேன்மை அளிக்கும் . அங்கே எதிர்மறையே ஏற்றம் அளிக்கும். அதை விடுத்து துர்யோதனன் போன்ற நினைவு இருப்பதால் பாண்டவர்களுக்கே நற்பயன் என்பதை அறிய வேண்டும்.

இருக்கும் நாட்களில் எதிர்மறை எண்ணங்களை விடுத்து ஏற்றத்திற்கான சிந்தனைகளை வளர்த்துக்கொள்வோம்.

தொற்று நோய் குறித்த பய உணர்ச்சியைப் பெறாமல் எம்பெருமான் அருளால் எப்படியும் வென்று மீள்வோம் எனும் மஹா விச்வாஸத்தை வைத்துக்கொள்வோம். இது மன வலிமை, தேக வலிமை தந்திடும்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

28/03/2020

English

Can Negativity Be Positive?

During this lock-down, it is heart wrenching to see people dying in bunches in foreign countries.  It is assuring that our Government is handling the situation very efficiently and boldly and it also feels happy to see the high appreciation of our handling from other countries.  Still a fear lingers that there could be serious damages as some people are indulging in some avoidable mistakes without understanding the gravity of situation.  At the same time the psychologists are advising people to stay away from negative thoughts. The view is that it is better to inquire and exchange about the good information of the survivors and stories of recoveries rather than talk about the spread of virus and those succumbed. Yes, we have to realize that the need of the hour is to propagate positive thoughts among people for fighting and winning, rather than spreading fear.  Such thoughts will weaken the negativity and develop strength and courage in our minds.

Our scriptures say that one needs to avoid all negative thoughts everywhere. Positive energy alone (and not negative energy or vibration) can result in any achievement.  For instance, we should have high confidence (faith) on Perumal to achieve Moksham (salvation) from the cycle of repeated rebirth, rather than tremble at the dangers of life. This is called Mahaviswasam (high confidence or faith). Giving up unnecessary worries of life and enhancing the thoughts on our Lord results in Blissful Peace. This is the resultant truth out of the experience of our elders, besides that of psychologists. This can be seen in the following two examples.

The wicked Hiranakashipu inflicted innumerous hardships upon his son. One way or the other he wanted to eliminate his son Prahlada and was focussing on that day and night. However, not afraid of all these inflictions, Prahlada kept concentrating (Dhyana) on Lord Narayana alone. Is it possible to focus on the Lord amidst such grave dangers? Though a son of Asura, Prahlada set an example for all of us. As desired by him, the Lord appeared and bestowed His Goodwill on him.

Swami Desikan vividly showcases the status of Mother Sita. “On one side, cruel and frightful Demonesses troubled her; on the other side, enchanting flowery gardens attracted her mind. Thus, though Sita was in between cheer and despair, She was filling her thoughts only with Shri Rama and not on anything else”.

One should not dismiss these as just stories from our Puranas (mythology). We should also give up continuous thoughts on hardships and should concentrate on the thoughts of the Lord. Many among us used to continuously talk about the unpleasant afflictions committed by others. Instead, can we not focus on many subjects close to our hearts, rather than on these frustrations? – but that is not possible. When introspected it will become clear that the continuous negative thoughts on the enemies lead to poor health and depression in our minds. The character of Duryodhana flashes in our minds at these times. He is the leader of those fools who spoil their lives by entertaining jealousy on the happy lives of others. “ Mine and those of Pandu” being the first question of Dhridharashtra in Gita, depicts his mentality very clearly, point out our Acharyas. Thus father and son, instead of working towards their betterment, wasted their life thinking of the destruction of Pandavas. Finally, both of them met gory ends in life. Therefore, one should realize that enhanced positive thinking alone should be the goal of one’s life. At times contrary events may be happen,yet, one should analyse the reasons and results for the same to understand the exceptions.

Sisupala continuously denounced Lord Krishna in the Rajasuya Yaga of Dharmaputra. Right from birth, Sisupala was entertaining vengeance on Lord Krishna and this is why Azhwar calls him an “old enemy”. Finally, he got moksham at the hands of Lord Krishna. Seeing that, Dharmaputra was amazed and he explained that though Kamsa and Sisupala were jealous and afraid of Lord Krishna, they attained liberation through His thoughts. (Details of discussions of learned scholars can be found in the Shri Nrisimha Priya – December 2019 issue onwards). Hence, for those like Sisupala, even negative thoughts resulted in elation. Do we also focus on the Lord with such thoughts or do we have the background of birth like Sisupala ?. (As per Srimad Bhagavatham, he was the Gatekeeper at SriVaikuntam and due to a curse, he took birth as Hiranyakasipu, Ravana, and Sisupala).

Why entertain thoughts continuously on those who are disliked by us? There is another golden truth in this. We do not realize that our unjustified negative thoughts on good people turns out to be fulfilling positive accomplishments for them. Pandavas gained much popularity among people as Duryodhana was continuously inflicting hardships on them. Similarly, it becomes a very good publicity for that person on whom we keep on throwing negative thoughts and words. Instead of overlooking them, we unknowingly entertain negative feelings on them which ultimately result in good publicity for them.

Perhaps, if those whom we dislike are Divine Beings like Lord Krishna, then it may result in benevolence to us. In such instances, negativity may result in delight. We should realize that on the contrary, such negative thoughts of ours are like Duryodhana’s misdeed on Pandavas result in good effects on them. In the remaining days, let us forgo the negative thoughts and develop enhanced positive thinking. Let us strongly dedicate the faith on Him and believe that BY His Grace we shall surely overcome the effects of this dangerous virus and become victorious at the end. This will result in better health for the mind and body.

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

Please note that this article is available in both tamil (Written by Sri APN Swami) and in English (translated by his sishyas)

சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தின் ஏழாவது அதிகாரம் முமுக்ஷூத்வாதிகாரம்.  மோக்ஷத்தை விரும்புபவன் எப்படி இருக்கவேண்டும் என்று உபதேசிக்கிறார் தேசிகன்.  தற்போது நாட்டின் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு “கூட்டம் தவிர்” அதாவது மக்கள் கூடுவதைத் தவிருங்கள் என்று அரசாங்கம் வலியுறுத்துகிறது.

சிலவிடங்களில் ஐவர் (ஐந்துபேர்) மட்டுமே கூடலாம் என்னும் விதிவிலக்கும் உண்டு.  தங்களுக்கு கூட்டம் சேருவதை விரும்பாதவர் எவரும் உண்டா?  ஆனால் கூட்டம் சேர்க்காதே.  கூட்டத்தில் சேராதே என்கிறார் தேசிகன்.  அதாவது ஸத்ஸங்கம் தவிர்த்து, அஸத்ஸங்கம் வேண்டாம் என்று பொருள்.

மோக்ஷமடைய விரும்புபவன், தனித்திருப்பான், பரமாத்மா விஷயத்தில் விழித்திருப்பான், தனது தேகமெனும் வீட்டிற்குள்ளேயுள்ள ஆத்மாவின் ஆத்மாவான பரமாத்மாவை அனுபவிப்பான்.

“விலகியிரு, விழித்திரு, வீட்டிலிரு”  எனும் தத்வம் இங்கு நன்கு புலனாகிறதே.  மேலும் ஐவருடன் கூடுவதும் அவனது ஆன்ம பலத்தை வளர்க்கும்.  அதாவது “அர்தபஞ்சகம்” எனும் தத்வத்தை அறிந்திடவேண்டும்.

“பரப்ரம்மத்தின் ஸ்வரூபம், ஜீவன் ஸ்வரூபம், (ப்ரம்மத்தையும், தன்னையும் பற்றிய தெளிவு) அந்த பகவானை அடையும் வழி, அதனால் உண்டாகும் நன்மை.  இது வரையில் இயந்திர கதியில் இயங்கிய நமக்கு அவன் சிந்தனை ஏற்படாத தடங்கல் என்ன?”  எனும் இவையே ஐந்து விஷயங்கள்.

இந்த ஐவருடன் (ஐந்து விஷய சிந்தனையுடன்) “சங்கஜித்” – கூட்டத்தைத் தவிருபவன், ஸம்ஸாரமென்னும் கொடிய வியாதியின் பிடியிலிருந்து சுலபமாக தன்னை விடுவித்துக்கொள்வான்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

26/03/2020

English

Sangajith – One Who Wins Over a Crowd

The seventh Chapter of SRIMAD RAHASYA TRIYA SAARAM is MUMUKSHU ADHIKARAM.

Swami Desikan gives a code of conduct for a person who is aspiring to reach MOKSHAM. With the entire country (INDIA) being under an extra-ordinary (LOCKDOWN) situation, the Government has requested and instructed people to avoid crowding – that is to assemble in a group.

In certain exceptional cases ,a maximum of 5 people can assemble. Is there anyone who will not like a crowd to assemble? Swami Desikan is very clear in saying that- do not join or create a crowd. He means that it is good to have SATSANGAM. Do not have a group of gossip mongers.

A person who wants to attain MOKSHAM would always like to stay alone. He is involved in thinking and dwelling in the qualities of PARAMATHMA. He is always awake to this reality. He engrosses himself in the ATHMA that is housed in his body, and the PARAMATHMA who is lives in his ATHMA as an ANTHARYAMI – the ever-pervading.

STAY ALONE, AWAKE and AT HOME” is the theme that is very clearly visible and emphasized. The Crowd of FIVE (ARTHPANCHAKAM) people is very important for his inner (ATHMA) growth.

We are lost in this fast paced life of ours, and these are the reasons that did not allow us to think about the benefits of ARTHAPANCHAKAM.

ONE who stays and dwells (in the Crowd of 5 people) – “SANGAJIT” – one who avoids Crowds can easily get away from this WORLD (SAMSARAM)

– Translation by Sri APN Swami Sishyas

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

Please note that this article has the Tamil version written by Sri APN Swami and its English translation by his shishyas.

உள்ளே வெளியே

ஒரே ஒருநாள் வீட்டிற்குள் அடங்கிக்கிடப்பதற்குள் அலுப்பு தட்ட ஆரம்பித்துவிட்டது. குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இருபத்திநான்கு மணிநேரமும் ஒரே அறையில் முடங்கிக்கிடப்பது மிக, மிகக்கடினம்.  சோதனையான இந்த கால கட்டத்திலிருந்து எம்பெருமான் நம் அனைவரையும் வெகுவிரைவில் விடுவித்திட ப்ரார்த்தனை செய்வோம். உலக மக்கள் அனைவருமே இடரின்றி தங்கள் அலுவல்களில் ஈடுபட ப்ரார்த்திப்போம்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வெளியே போக நமது உடலும், உள்ளமும் துடியாகத்துடிக்கிறது. ஸ்வாமி தேசிகன் வழியில் இதற்கொரு பரிகாரம் காணலாம். இது மனத்திற்கான மருந்து.

ஸங்கல்ப ஸூர்யோதயத்தின் ஆறாம் அங்கம் அற்புதமான பாரத வர்ஷ வர்ணனை. அரசிகருக்கு இதன் அர்த்தங்கள் ஒருபோதும் ருசிக்காது. ஆனால் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்திடுவர். விவேகன் (அதாவது ஆராய்ந்து பார்த்து அறிந்திடும் திறன் பெற்றவன்.) காம, க்ரோதத்திலேயும், பிறர் தூஷணைகளிலும் காலத்தை கழிக்காதவன் என்பவன் ஒரு அரசன். அவன் மனோரதத்தில் ஏறி ஸத் தர்க்கன் எனும் ஸாரதி வழி நடத்த பாரத தேசத்தில் தபோவனத்தை தேடி பயணம் மேற்கொள்கிறான்.

அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டுபவனல்ல இந்த தேரோட்டி. மேலும் எவராவது ஒரு கருத்தை சொன்னால் உடனே வெகுண்டு அவரை வசைபாடுவதையும் வழக்கத்தில் உடையவன் அல்லன். சொன்ன விஷயத்தின் தன்மைகளை நன்கு ஆராய்ந்து, அதில் ஒளிந்துள்ள சாஸ்த்ரார்த்தங்களை நுட்பமாக பாகுபடுத்தி அரசனுக்கு ஹிதோபதேசம் செய்பவன் . எனவேதான் குதர்க்கம்; அதாவது எதற்கெடுத்தாலும் கோணல் புத்தியாகப் பார்க்காமல், ஸத் தர்க்கம் – அதாவது ந்யாயமான ஆராய்ச்சியில் ஈடுபடுபவன் என்று பெயர் பெற்றான்.

இந்த ரசத்தை மேலும் உணர வேண்டுபவர்கள் ஸங்கல்ப ஸூர்யோதயத்தை குறைந்தது பத்து தடவையாவது படித்தால்தான் தன்னிலை தெரியும். இப்படி ஸத்தர்க்கனும் விவேகனும் சேர்ந்தால் தான் ஜீவன் நற்கதி  அடைய முடியும்.

இந்த அகண்டமான பாரதம் முழுதும் பலவிடங்களில் அவர்கள் திரிகின்றனர். ஆம், தவம் செய்வதற்கு (மனஅமைதிக்காக) நல்லதொரு இடத்தைத் தேடி அவர்கள் திரிகின்றனர். மனோரதத்தின் வேகத்தில் விவேகனும், ஸத்தர்க்கனும் அந்தந்த இடத்தின் தன்மைகளை ஆராய்கின்றனர். (இதன் ஆழ்பொருளை நன்கு சிந்தித்த பின்னர் மேலே படியுங்கள்) “பத்தி முதலாமவற்றில் பதி எனக்கு கூடாமல் “ என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

பதி” என்றால் இடம் (திருப்பதி) என்பது பொருள். தவம் செய்வதற்கு உரிய இடம் கிடைக்கவில்லையாம். ஏனென்றால் எல்லா இடங்களிலும் அசுத்தம் (pollution) ஏதாவதொருவகையில் பரவியுள்ளது. (இங்கு வர்ணிக்கும் திவ்யக்ஷேத்ரங்களை நூலில் காண்க). எனவே மன ஊக்கத்துடன் தவம் செய்து மன அமைதி பெற காசி, காஞ்சி, அயோத்தி என எதுவும் லாயக்கில்லை. என்ன செய்வது? நல்ல மலை, ஆழமான  நதி, அழகிய பூங்கா, அமைந்த இடம் ஒன்றுமே இல்லையா? எனும் ஏக்கம் விவேக மஹாராஜனுக்கு (வீண் விதண்டாவாதங்களில் காலம் கழிக்காமல் ஸத்விஷயங்களில் நோக்குடைய ) உண்டாகிறது.

ஸத்தர்க்கனால் (ஸாரதியால்) நன்கு சுற்றி காண்பிக்கப்பட்டு இறுதியில் ஓர் அற்புதமான இடத்தை தேர்வு செய்கிறான். இந்த இடம் குருக்ஷேத்ரம், நைமிஷம், புஷ்கரம் காட்டிலும் மிகவும் சிறந்தது.

அழகான தபோவனம். உயரமான மலை உண்டு வற்றாத ஜீவநதி அங்கு ஓடுகிறது. யாராலும் இதற்கு இடையூறு செய்யமுடியாது என்கிறான் விவேகன். (அதாவது தெளிந்த சிந்தைனையுடையவன்). அது சரி அந்த இடம் எங்குள்ளது? என்னும் ஆவல் உண்டாகிறதே ….

புனிதமான ஆசாரங்களே தபோவனம். ( கை, கால், அலம்பச்சொல்லியும், ஒருவர்க்கொருவர் தொட்டுக்கொள்ளாமல் இருப்பதுமே – இல்லத்தில் இருப்பதே தபோவனம்இல்லம் என்பதை தேகம் என்றும் அறியலாம். நல்ல விஷயங்களைத் தொடர்ந்து எண்ணுவதே பெரிய மலை. மலைபோன்ற வீண் எண்ணங்கள் சுமையாகாமல், நல் எண்ணங்களாகுகை. திருமாலின் திருவடியை அடையமுயலும் வேட்கையே வற்றாத ஜீவநதி கங்கை. அதில் ஆழ்ந்திருப்பதே தீர்த்தாபிஷேகம். பிறரை பரிகாசம் செய்தும், கர்வப்பட்டும், நாமறியாத அர்த்தங்களை பெரியோர்கள் அறிந்திருப்பது கண்டு பொறாமை கொண்டும் வேண்டாத விசாரங்களை செய்யாமல், வேதாந்த விசாரம் செய்வதே தவமாகும்.

அதாவது வெளியே போய் எதையும் தேட வேண்டாதே, நமக்குள்ளே நல்லதை (எம்பெருமானை) நினைப்பதே மேலாகும். இது அவனிடத்தில் ஏகாந்தமாக உள்ளதால் மற்றவர்களால்  இதை கலக்க (pollute)முடியாது.  “காம க்ரோதங்கள் அற்றவனுக்கு இல்லறம் கூட தபோவனம் தான்” என்ற கொள்கையையும் இங்கு நினைப்பது.

இதையெல்லாம் விடுத்து வெளியேயுள்ள அழுக்குகளை தங்களுக்குள்ளே நுழையவிட்டு காமக் க்ரோதங்களாகிய தொற்று நோய் (ஆசாரமின்றி,மனோஜயமின்றி) அவிவேகிகளாக அனர்த்தமடைவரைக் குறித்து நாம் வருந்துவதால்  என்ன பயன்?

“விலகியிருப்போம் விழித்திருப்போம் வீட்டிலிருப்போம்,
 தேசத்தின் பேரிடர் நீங்கவும்,  தேகத்தின் பேரிடர் நீங்கவும், 
ப்ரார்த்திப்போம்.”

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

26/03/2020

English

Inside-Outside

Even a few days of staying at home feels frustrating right? It feels so difficult to have all the family members stuck inside the same house 24/7. During these difficult times, let us pray to Perumal to free us soon. We pray for people to go about their work without hindrances soon.

As our bodies and minds yearn to step out, let us follow Swami Desikan’s remedy that can soothe and calm our minds.

The sixth chapter of Sankalpa Suryodhayam beautifully describes Bharatha Varsham that can make for an enjoyable read. In this chapter, there was a king who was a Vivekan (someone who has the capacity to analyze everything to distinguish between good and bad). He refrained from greed, lust, and criticism of others and because of the good qualities that sat in his mind and acted as the charioteer, he decided to go in search of tapovans in Bharatham.

This charioteer is someone who neither pours out words in a hurry nor follows anyone who says anything without thinking for it himself! Rather, he is someone who understands what was said, analyzes it, brings out the Sastram-based meanings, and then explains it to the king. This is why the king was known for Sath tharkam (one who analyzes anything rationally and fairly) and not kudharkam (criticizing everything that is said).

Those who want to enjoy it more should read Sankalpa Suryodhayam at least ten times to understand it. A jivatma can reach a good state only when a Sath tharkan and a vivekan join together. 

Both of them wander around the large Bharatham to find a place where they can peacefully meditate. Both sath tharkan and Vivekan analyze each place’s characteristics (think about the hidden meaning of this sentence before reading further). Swami Desikan explains this as Paththi mudhalaam vatril pathi enakku koodamal.”

“Pathi” means a place (Tirupathi). Looks like they didn’t find the right place to meditate as there seemed to be pollution in every place. (Take a look at the divya desams mentioned in the book). Disappointed that none of the holy places like Kasi, Kanchi, and Ayodhya were ideal for meditation, they didn’t know what to do now? They wondered if there was ever a place with a tall mountain, deep river, beautiful garden, and a serene environment. Viveka maharaja (one who wants to focus on good things without wasting time on unwanted arguments) yearns for such a place.

After roaming everywhere and after seeing all the places shown by Sath tharkan, the charioteer, he decides on a place that was more exalted than Kurukshetram, Naimisaranyanm, and Pushkaram. 

This was a beautiful forest with a tall mountain and a perennial river. Vivekan says that no one (that is those with the right sense) can find fault with this place. 

Ok, but where is that place? Curiosity builds up….

The place where Acharams (rituals ordained by our sastrams) are followed is the holiest place. That is, a place where hands and legs are washed regularly and a place where people don’t touch each other often. In other words, we can say that the tapovanam is our home. (Here, our body can also be seen as a home). 

Constant thoughts on good and exalted things is the tall mountain while the uninterrupted yearning to reach His lotus feet is the perennial river. Being immersed in this water is the best theertham abhishekam (water anointment). The thavam (penance) is when we discuss aspects related to our vedantham without wasting time on unwanted arguments, criticism of others, ego, anger, and jealousy on those elders who know the things that we don’t.

In other words, instead of going out in search of other things, looking for the Perumal who is inside us, is the best action. Since the relationship between you and Him is pure, it can never be polluted by external things. Keep in mind that “Home is the best tapovan for those who are devoid of anger and lust.” 

Instead of enjoying this tapovan, why is there a yearning to go out and suffer from contagious diseases ( lack of cleanliness and good thoughts) due to pollutants like lust and greed? What is the use of feeling sorry for such people who don’t have this understanding?

Stay home. Be safe. Let’s pray for these difficult times to end

 

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

This article has both the Tamil version written by Sri APN Swami and its English translation done by his students.

ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

எம்பெருமானின் அரும்பெரும் குணங்களை அனுபவிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இவ்வுலகின்பால் ஈர்ப்பு என்பது இல்லாமல் போகும். தனிமையில் இனிமை காணலாம்” எனும் கட்டுரையில்; யோகியானவன் எவ்விதம் பகவத் த்யானத்தால் ஆத்மலாபம் பெறுகிறான் என்றும், அவிவேகிகளான சாமான்யர்கள்; தங்களையும் உணராமல், தங்களின் உள்ளே ஸர்வஸாக்ஷியான எம்பெருமானையும் உணராமல் பிறரின் கார்யத்தை குறை கூறுவதிலேயே ஆத்ம நிறைவு அடைவதையும் பார்த்தோம். தற்போது கிடைத்துள்ள இந்த தனிமையான காலம் அவனிடம் அதிகமான நெருக்கத்தை உண்டாக்குகிறது என்பதை நினைக்கும்போது ஓர் ஆநந்தானுபவம் ஏற்படுகிறது.

இது போன்ற அனுபவங்களால் தான்; தேவபெருமாளை சேவித்த சுவாமி தேசிகன்வைகுண்டமும் தனக்கு வேண்டாம்” என்றார் போலும். இங்கொரு முரண்பாடுண்டு. “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்பதற்கு மாறாக ஸம்ப்ரதாய ஸ்தாபகரான தேகிகனே வைகுண்டத்தை வெறுக்கிறாரே! ஐயையோ! இது சரியா? மேலும், “முக்தர்களின் அனுபவத்தை இங்கேயே (திருமலையிலேயே) பெறுகிறேன்” என்னும் போது ஸித்தாந்தத்துக்கு விரோதமான ஜீவன் முக்தியைச் சொல்கிறாரே! இதுவும் விரோதமில்லையா? என கேள்விகள் எழும்.

பகவத் விஷய அனுபவ ரசனைகளில் மட்டும் பொழுதுபோக்கும் விவேகிகளான ரசிகர்கள் இதன் ஆழ்பொருளை நன்கு சுவைத்திடுவர். பக்தியின் அனுபவ பரிவாஹத்தால் தனது ஆனந்தத்தை வெளியிடும் போது, மஹான்கள் இதுபோன்ற ஸ்வாநுபவங்களைத் தெரிவிக்கின்றனர். இது போன்று பலவிடங்ககளில் அனுபவ ரச ப்ரவாகத்தைக் காணலாம்.

      “பரமபதம் சென்றால் என்ன செய்வீர்?” என்று ஒருவர் பராசரபட்டரிடம் கேட்டாராம். அதற்கு பட்டர் “அங்குள்ள வாசுதேவன் நமது ரங்கநாதனைப் போன்று சேவை தரவில்லையென்றால், பரமபதத்தை முறித்துக் கொண்டு குதித்துவிடுவேன்” என்றாராம். மீண்டும் திரும்பி வருதல் இல்லாத நலமந்தமில் நல்நாட்டிற்குச் சென்றவர் இப்படியும் திரும்பிவருவரா? என ரசிகர்கள் கேள்வியா கேட்பர்? பட்டருக்கு ரங்கனிடம் உள்ள ஈடுபாட்டையன்றோ ரசித்திடுவர்.

“ஆங்கு ஆராவாரம் அது கேட்டு அழலுமிழும் பூங்கார் அரவணை” எனும் பாசுரத்தின் அர்த்தத்தை அனுபவித்தவரே அறிந்திடுவர்.

வைகுண்டத்தில் நித்யமுக்தர்கள் சாம கானம் செய்கின்றனராம். (பாற்கடல் என்றும் சொல்வர்) அந்த சப்தம் கேட்ட அரவரசன், இது ஏதோ அசுரர்களின் ஆரவாரம் என வெகுண்டு அக்னி ஜ்வாலையான தனது விஷாக்னியை வெளிப்படுத்துகிறானாம். திருமெய்யம் எனும் திவ்யதேசத்து எம்பெருமானை சேவிக்கும் போது பாம்பணையான் திருமேனியும், அங்கு படந்துள்ள விஷாக்னியும் நன்கு சேவையாகுமே.

(இங்கு த்ரிவிக்ரமாவதார கொண்டாட்டம், அல்லது பூலோகத்தில் அசுரர்களின் கூச்சல் என பலபடியாக மஹான்களின் வ்யாக்யானம் உள்ளது)

“இஃதென்ன பைத்தியகாரத்தனம். என்னவாயிற்று இந்த ஆதிசேஷனுக்கு? பரமபதத்தில் எப்படி சுவாமி அசுரர் புகுவர்?” என்று பட்டரிடம் கேள்வி கேட்டனர்? சந்தேகங்கள் ஏற்படின் தங்களுக்குத் தோன்றிய வகையில் பேசிக் கொண்டிராமல் பெரியோர்களிடம் தெளிவு பெறுவதன்றோ ஏற்றம்! அதனால் இக்கேள்வியை ஸ்ரீபராசரபட்டரிடம் கேட்டனர். அதற்கு பட்டர் – “நித்யஸூரிகளில் சேர்ந்த ஆதிசேஷனுக்கும் இத்தகைய ப்ரமம் வருவதற்கு “அஸ்தாநே பய ஸம்சயம்” – அதாவது அதிகமான பொங்கும் பரிவு காரணம்” என்றார்.

பெரியாழ்வார் பல்லாண்டு பாடியதும் இதுபோன்றதே. இதற்கு “ஸ்நேஹாத் அஸ்தாந ரக்ஷா வ்யஸநிபி: அபயம்” எனும் பட்டரின் ஸ்ரீசூக்தியையும் ப்ரமாணமாகக்காட்டிடுவர். இதை ரசிப்பதில் நாமெதற்கு அஸஹிஷ்ணுக்களாக வேண்டும். கருடனுக்கும், எம்பெருமானுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, ஆதிசேஷன் மீது சந்தேகம் கொண்டு எம்பெருமான் எதிரில் கருடன் நிற்பது இதுபோன்ற பல ரசனையான பரமபதத்துக் கதைகளை நாம் ஸ்தோத்ரமாகவும் பாடிவருகின்றோமே! சில க்ஷேத்ரமாஹாத்ம்யங்களில் அனந்தன், கருடனுக்கு ஏற்பட்ட அபிப்ராய பேதங்களுமுண்டல்லவா.

“இளவரசு பட்டமேற்ற அரசகுமாரன் அந்தப்புரத்தில் யுவதிகளுடன் இருக்கும் காலம், தகப்பனார் ஸ்தானத்திலிருக்கும் ஒரு மூத்த மந்த்ரி அங்கு வந்தால் அவரிடம் எவ்வளவு பவ்யத்துடன் இளவரசன் நடப்பானோ! அது போன்று விஷ்வக்சேநரைக் காணும் எம்பெருமான் நிலை என்னும் இத்தகைய ரஸ ஆஹ்லாத விஷயத்தில் அருந்துதமாக அர்த்தம் கொள்வாரும் உண்டோ!

விரஜையின் காவல்காரனாக தனது ஆசார்யன் ஆதிவண் சடகோபஸ்வாமியைப் பாடிய அன்னமாசார்யாரின் கீர்த்தனை அகில உலகப் புகழ்  பெற்றதன்றோ! ஒரு சேதனன் ப்ரபத்தி செய்துக் கொள்ளாமல் “டிமிக்கி” கொடுத்து அர்சிராதி கதியில் சென்றாலும், விரஜையின் கரையில் அவனுக்கு சரணாகதி செய்து வைப்பவர் எமது ஆசார்யர் என நாற்பத்தைந்தாம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின்ஹ்லாதகரமான (டிமிக்கி என அழகிய சிங்கர் அழகுடன் ஸாதித்தாகும்) உபந்யாஸத்தை ஆனந்தமாக அனுபவித்தவர் “இது இப்படி உண்டா?” என்று சித்தம் தடுமாறுவாரோ ?

விரோசனன் வைரக்ரீடத்தை அபகரித்த கதையும், சுத்த ஸத்வத்தில் பெருமாளும், பிராட்டியும் (கார்ய வைகுண்டமாகக் கொண்டாலும்), சண்டையிட்டுக் கொண்டு பிரிந்த வேங்கடாசல மாஹாத்ம்யத்தையும் பாராயணம் செய்வதன்றோ நற்போது  போக்கு.

அர்ச்சாவதார அழகில் ஈடுபட்டு, வைகுண்டம் வேண்டாமென்ற கலியன் “ஏரார் முயல்விட்டு காக்கைப்பின் போவதே” (அத்யந்த போக்யமான முயல் மாமிசம் ருசிக்கக்கிடைக்க, காக்கை மாமிசத்தை ஆசைப்படுவதே) என்றாரே!  இதனை ஆபாசம் என்பவர்கள் உலகில் உண்டோ?

வராஹ ருதி ராபேண சந்தனேந” என்று பன்றியின் ரத்தம் போன்ற நிறத்தையுடைய சந்தனத்தை, வால்மீகி ராமன் திருமேனியில் வர்ணித்தபோது வையகம் கொண்டாடுகிறதே.

த்வம் மே அஹம்  மே” எனும் பட்டரின் ச்லோகத்தில் ஈரவாடையுடன் ரங்கநாதன் கற்பூரத்தை அணைத்து சத்யம் செய்யும் கற்பனையை, ஆத்ம விவேகத்திற்கான ப்ராமணமாகத்தானே பெரியோர் கைக்கொள்கிறார்.

பெருமாள் எடுத்த மோஹினி ரூபத்தை கண்டு தன்னையே புருஷனாக பாவித்து ஸர்வஜ்ஞையான பெரிய பிராட்டியும் மதிகலங்கினாள்” எனும் கடிகாசத அம்மாளின் கூற்றினை அறிஞர் பெருமக்கள் அறிந்து ஆனந்தம் அடைகின்றனர்.

கொடுமையான இக்காலத்திலும், இன்னும் சில தினங்களில் நமது வாழ்வு என்னவாகப் போகிறது (“மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்”) என்பதற்கேற்ப உள்ள சமயத்தில், இதையெல்லாம் நினைத்து தனிமையிலே இனிமை காண வைக்கும் தயவான் எம்பெருமானை இன்னமும் அனுபவிக்கலாம்.

இப்படி அனுபவ ரஸ பரிவாஹமான அர்தங்கள் பலவும் பரவிக்கிடக்கும் ஸத்ஸம்ப்ரதாயத்தை ஸதாஸர்வகாலமும் அனுபவித்திட எம்பெருமான் க்ருபை புரிந்துள்ளான். இந்த ஆனந்தார்ணவ நிர்மக்னர் களுக்குக்  கிடைத்த வாய்ப்பு, பரபுருஷ நிந்தனாபிநந்தனர்களுக்கும்  கிடைத்திட வேண்டுமென்றோ ப்ரார்த்ததனை. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலில் முடங்கிக் கிடக்கும் இக்கொடிய வேளையிலாவது, பிறந்த பயனைப்  பெற்றிட பெருமானையே நினைப்போம். அந்தர்யாமியை ஆராதிப்பதை விடுத்து அநர்த்தப்படுவது கூடுமோ?

இந்த சமயத்தில் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோருக்கு, நம்மால் இயன்ற உதவிகளை செய்திடுவோம். கடினமான இந்த இருபத்தோரு நாட்களை நல்லவிதமாகக் கழித்து, தேசத்தின் க்லேசத்தை எம்பெருமான் நீக்க வேணுமென்று ப்ரார்தனை செய்வோம்.

ஜய் ஹிந்த்

– ஸ்ரீஏபிஎன் சுவாமி

24/03/2020

Ananthaarnavam | Ocean of Bliss

What is Bliss? Understanding it through the experiences of the exalted

Those who are eager to enjoy the bliss of Perumal’s divine qualities will have no interest whatsoever in the material pleasures of the world.

In the earlier article titled “Benefits of Self-Quarantine” posted in our blog, we saw how Yogis gain strength by meditating on Perumal. But ordinary people who have limited knowledge neither understand themselves nor the Perumal inside them and spend their time finding fault in others. But when you use this available time to understand Him and to get closer to Him, you’re sure to enjoy a unique feeling of happiness/bliss. Swami Desikan felt this bliss while praying to Devarajan and this is why he exclaimed that he doesn’t even want SriVaikuntam!

Can you spot the irony here? It is always said that the ultimate goal of every Jivatma is to get moksham (salvation) and reach SriVaikuntam. But Swami Desikan seems to reject this notion here. Is this correct? Also, Swami Desikan says that he is able to feel the bliss of mukthas (Jivatmas who have attained moksham) at Thirumalai itself. Isn’t this also against the established path for Jivatmas?

In reality, those who spend their time in His thoughts will be able to relate to and understand the experience that Swami Desikan is talking about. Great people tend to use such expressions to explain their feeling of bliss to the world and we can see such expressions in many places and by many people.

Once, a person asked Parasara Bhattar what he will do after reaching Paramapadam. For that, Bhattar said that if the Para Vasudevan who resides there doesn’t give darshan like Ranganathar, he will jump back to earth! Is this possible? Will you question whether it is possible for someone who went to Srivaikuntam to jump back to earth? No. You would rather enjoy the devotion that Bhattar has on Ranganathar, right?

Those who immerse themselves in the biographies of great people will know countless such experiences. In fact, this bliss can be best enjoyed by those who understand the nuances of the pasuram AngAravAram adhu kEttu azhal umizhum pUngAraravaNai.”

This means, hearing the sama veda recitation of Nithyasuris in SriVaikuntam, Adiseshan mistakes it to be an attack by the asuras and spits out poison that resembles huge balls of fire. Even today, when you take the darshan of Perumal in the divya desam called ThirumEyam you can see the snake body of Adiseshan and the balls of poisonous fire surrounding it.

(Thrivikrama avataram is celebrated here. This is also explained by great scholars as the step-by-step annihilation of asuras on earth).

“What is this madness? What happened to this Adiseshan? How can Asuras enter SriVaikuntam?”, asked a few people to Bhattar. This is the right way to ask a question because instead of talking and criticizing it among themselves, they approached a revered teacher like Bhattar and asked him to clarify. Bhattar answered, “Even Nithyasuris like Adisheshan experience this bliss because of “AsthAne bhaya Samshayam” ( the boundless love they have for Perumal).”

Another example is the Pallandu pasuram sung by Periyazhwar and for this, our elders show Bhattar’s SriStuti called “SnEhaath asthana raksha vyasanipihi abhayam” as the proof. Why should we shy away from enjoying them?  The difference of opinion between Perumal and Garudan and the suspicion that Perumal had on Adiseshan as a result of which Garuda stands in front of Him are some enjoyable stories of Paramapadam that we sing as stotrams even today! One can find the difference of opinions of Garudan and Ananthan in some Kshetra puranas as well.

Perumal’s reaction to Vishwaksenar’s actions is similar to a recently-crowned prince fearing the entry of an elderly minister (in his father’s stature) into his private quarters when he is engaged in youthful activities. Can someone misinterpret this comparison?

Annamacharya, who sang the praise of his guru Adivan Sadagopan, the doorkeeper of Viraja river, is famous among his soul-stirring Kirtanas (songs). Once HH 45th pattam Srimad Azhagiyasingar said in his upanyasam that those who cheated and entered the Archiradhi margam are caught by Adivan Sadagopan and he does saranagathi to those Jivatmas to ensure that they can enter SriVaikuntam. Will anyone even question how this is possible?

We have heard stories about how Virochanan stole the diamond crown and how Perumal and Piraati fought and separated in the enjoyable Venkatachala Mahatmiyam.

We also know how Kaliyan (Thirumangai azhwar) compares the Archai form of Perumal as rabbit meat and SriVaikuntam as crow’s meat to emphasize the fact that Perumal’s Archai form is more beautiful than His form at SriVaikuntam. Will someone call this comparison vulgar?

The world celebrates the beautiful form of Rama when Valmiki describes that the sandalwood paste on Him resembles that of pig’s blood. (Varaha Ruchi RapEna sandaNEna).

“Thavam mEy Aham mEy” is a sloka written by Bhattar in which he imagines that Ranganathar with a wet dress promises by putting the camphor off. Our elders have interpreted this sloka to depict the wisdom of the atma.

When Gadikashatha Ammal elucidated that Piratti who is a Sarvagnyai (One who knows everything) wanted to take the form of a male seeing Perumal’s beautiful Mohini form, everyone listened and enjoyed it.

During these difficult times where big uncertainty looms over our lives (Minnin nilaiyil mannuyir AkkaigaL which means that our lives can come and go like a flash of lightning), let us enjoy this bliss and meditate on His form through such explanations and comparisons given by the Acharyas who are spread far and wide in our Sath sampradayam.

Perumal has given us an opportunity to enjoy this bliss and let us pray that everyone is able to have a similar blissful experience like our acharyas and elders. In these tough times, let us meditate on Him and pray to him to help us achieve the purpose of this birth.

Besides praying to the Perumal who is inside us as Antharyami, can there be anything more meaningful in these testing times?

Let’s help and support those whose livelihood has been affected. Let’s pray to Emperuman to help us  peacefully go through these 21 days of national lockdown and remove our Nation’s worry.

Jai Hind

– Translation by Sri APN Swami’s Shishyas

 

 

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

This article has both the Tamil version written by Sri APN Swami and its English translation done by his students.

நரேந்த்ரன் செய்த நன்மை

The Good Acts of Narendran

மனிதனின் மனோபாவம் நல்லவைகளை பாராட்டக் காட்டும் தயக்கமேயாகும். பாராட்டாதது மட்டுமின்றி குறைகளைப் பெரிதாக்கி அதில் குளிர்காய்வது உலகியல்பு.  நாம் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருந்தாலும் அதையெல்லாம் காணாமல் அல்லது கண்டும், காணாமல் உதாசீனம் செய்தும், அவர்கள் பார்வையில் உள்ள தோஷத்தினாலும், அறிவின்மையாலும், அடுத்தவரைக் குறை கூறுவதில் வரும் அல்ப சந்தோஷத்தினாலும் தங்களை பெருமை பெற்றவராகச் சிலர் நினைப்பர். இத்தகையவரின் மனோநிலையை ஸ்வாமி தேசிகன் ஸங்கல்ப ஸூர்யோதய நாடகத்தில் விவரிக்கிறார்.

இத்தகையவர்களின் தலைமகன் யார் என்றால் ராவணன், துர்யோதனன் முதலியவர்களேயாவர்.

“நான் இதை ஏற்கமுடியாது கண்டிக்கிறேன்” என்று சொல்வதால் அவர்கள் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்தவராகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை ஒரு அரசு செயல்படுத்தும் போதும் எதிரணியினர் “எதிர்ப்பதே இயல்பு” என செயல்படுவது கண்கூடு.

ராம, ராவண யுத்தம் நடைபெறுகிறது. அப்போது ராமபிரானின் பராக்ரமம் [வீரம்] கண்டு வியப்பெய்யாதவர்களே இல்லை. ஆனாலும் ராவணனுக்கு அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவனது மனம் மற்றவரைத்தான் பாராட்டாதே! ஆனாலும் தொடர்ந்து ராமனின் நடவடிக்கைகள் ராவணனுக்கு தோல்வியை அளித்தன. தனது இறுமாப்பு வென்றுவிடும் என நினைத்தவனுக்கு ராமனின் பண்புமிக்க வீரம் வியப்பளித்தது.

அப்போது வேறுவழியே இல்லாமல் ராவணன் ராமபிரானை புகழ்கிறான். அவனையறியாமல் ராமனின் பெருமைக்குத்தலை வணங்கினான். நளினமான தனது நடவடிக்கைகளினால் ராமபிரான் எதிரிகளாலும் புகழப்படுகிறான் என்கிறார் வால்மீகி.

நாராயணனாகிய ராமன் வீரராகவன் என்கிறான் ராவணன்.

லோகஷேமத்திற்காகச் செய்யும் காரியங்களைப்புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்கள், நிகழ்வுகளின் வலிமை கண்டு தங்களின் தவறையுணர்ந்து, தாங்களும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைக் காண்கிறோமல்லவா!

“எவனோவொருவன் செய்யும் தீய செயல் உலகில் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது” என்பர் பெரியோர். அதே போன்று மஹாத்மா ஒருவனின் நற்செயல் இவ்வுலகை வாழ்விக்கிறது என்றும் சொல்வர். தீயவர்கள் கூட தங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தங்களின் நன்மைக்காகத்தான் என்று ராவணனைப்போன்று (ஏதோவொரு காலத்திலாவது) உணர்ந்தார்களானால் அது தேசத்தின் அபிவ்ருத்தியன்றோ! தேசத்தின் நலனில் விருப்பமுடையவர்கள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

நரேந்திரன் செயல்களைக்கண்டு சத்ருக்களும் வியக்கின்றனர் என்றால் சாதுக்கள் சும்மாவாகவா இருப்பர். அவர்கள் தானே அதிக மகிழ்ச்சியுறுகின்றனர்.

இப்படி நரேந்திரன் செய்த நன்மையை இன்று உலகமே கொண்டாடுகிறதென்றால் நமக்கும் அது பெருமைதானே.

– ஸ்ரீஏபிஎன் சுவாமி

23/03/2020

English

The Good Acts of Narendran

The human mind always hesitates to appreciate the good things but takes a lot of pleasure in pointing out the mistakes instantaneously. This is the law of nature. Despite doing many acts of goodness, they are not appreciated because people tend to overlook or ignore these acts and will only examine the mistakes with greater scrutiny. This emanates from their innate need to point out the mistakes in others, lack of knowledge and understanding, to gain a fiendish pleasure, and possibly even to prove that they are one notch higher than others. Swami Desikan has explained the mindset of such people in Sankalpa Suryodhayam.

The heads of such groups are none other than Ravanan and Duryodhanan. They attract the attention of the world by saying that they deplore or don’t accept these good actions and thoughts. Many times we have seen that when a government or ruler does things that are beneficial for the country as a whole, the opposition (those who oppose) condemn it.

In the battle between Rama and Ravana, everyone who watched it was astounded by Rama’s strength and valor. The only person who could not praise or accept Rama’s greatness was Ravana simply because his mind can never accept that anyone is better than him! Still, Rama’s actions brought a string of defeats and setbacks for Ravana. These were big blows to not just Ravana’s army but also to his egoistic behavior as he increasingly saw the humble valor of Rama.
After a point, Ravana could resist no more, so he praised Rama. Even without his knowledge, Ravana acknowledged the power and greatness of Rama. In this sense, Rama won over His enemies with his smooth and humble ways, explained Valmiki.

Ravanan calls Rama as Veeraraghavan. When the enemies or those who oppose the good acts done for the welfare of the world, see the results of these acts and its huge positive impact, they tend to subconsciously clap their hands for the efforts. We have seen this many times now!

Elders often say that the bad act of a single person brings a lot of negative impact to the world. At the same time, they also say that the good acts of a Mahatma (great person) helps the world to live a better life. When the enemies and opposers like Ravana realize that the small punishments or inconveniences that they have to bear are for their own good, it is progress for the nation, right? Such good acts will never go unappreciated by those who care for the nation.
When even enemies are astounded by Narendran’s actions, will sadhus (people with good intent) keep quiet? Won’t they be the ones who will feel extremely happy?

Today such an act by Narendran is being praised by the entire world. Isn’t it a moment of pride and happiness for us?

-Translation by Sri APN Swami Sishyas

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

This article has both the Tamil version written by Sri APN Swami and the English translation done by his sishyas.

Pandemic in பரமபதம் 

Pandemic In Srivaikuntam Sri APN Swami.jpeg

Picture by Sri Keshav

              பரமபதம் அல்லோகல்லோகபட்டுக் கொண்டிருந்தது. நித்யர்கள், முக்தர்கள் என அனைவரும் கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர். எல்லோரும் முகபாவனையும் மிகவும் சீரியஸாக இருந்தது. அத்திரளின் நடுவில் நடுநாயகமாக கஜாநநன் என்பவர் தென்பட்டார். அவர்தான் ஏதோ செய்தியினைச் சொல்லியுள்ளார் போலும். அதனால் அனைவரும் அவரைச்சுத்தியே இருந்தனர்.

மெதுவாக விஷயம் புரியவாரம்பித்தது. விஷ்வக்ஸேநர் பரமபதத்திற்கு ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார். கஜாநநர் அதுகுறித்து விளக்குவதற்காகத்தான் இங்கு அனைவரும் கூடியுள்ளனர். அதாவது பூலோகத்தில் ஒரு கொடிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  அது விரைவாக பரவுகிறது. Pandemic – அதிவிரைவாக தொற்றிக்கொள்ளும் தீவிரத்தன்மையுள்ளது. அதனால் வைகுண்டத்திற்கு அதிவிரைவில் அது பரவலாம் என்பதால் நித்தியர்கள் பூலோகத்தில் அவதரிக்க பதினைந்து நாட்கள் தடையுத்தரவு. அதைத்தவிர “அர்சிராதி மார்கம் அனைத்தும் பதினைந்து நாட்கள் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் “நித்யர்கள், முக்தர்கள் கைங்கரியத்திற்காக புதிய தேகங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது”. தற்போது அர்சிராதி மார்கத்தின் வழியாக வந்தவர்களை விரஜைநதி கரையிலேயே தங்கவைத்து,  தனிமைப்படுத்தி, பதினைந்து நாட்கள் தீவிர கண்காணிப்பின் பின்னரே பரமபதத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

மேலும் அர்ச்சிராதி மார்க்கத்தில் இருந்த ஆதிவாஹிக கணங்கள் இவர்களை கைபிடித்தும், சந்தன மாலைகள் பூசியும், சாற்றியும் அழைத்து வந்ததால் ஆதிவாஹிகர்களும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். மருத்துவக்குழு டீம் தந்வந்த்ரி தலைமையில் விரைவான நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அர்சிராதி மார்க்கத்தை மூடுவதா? இது ஸாத்யமா? இதென்ன விசித்ரமான சுற்றரிக்கை” என்று தான் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.

அதே சமயம் ஆதிசேஷனும், வைநதேயனும் வருத்தம் தோய்ந்த முகத்துடன் அங்குவந்தனர். ஒரு நித்யசூரி அவர்களை அணுகி,  “அரவரசனும், பறவையரசனும் ஏனிப்படி வருத்தத்துடன் உள்ளீர்கள்? என்றார்.

ஆதிசேஷன் –  “ஐயா! பாம்புகளால் தான் இந்நோய் பரவியதாம்.  அதனால் உடனடியாக வைகுண்டத்தை விட்டு நான் வெளியேற வேண்டுமாம். இல்லையெனில் முகக்கவசம் அணிய வேண்டுமாம் ஆயிரம் முகக்கவசம் எப்படி அணிவது? ஒன்றும் புரியவில்லை.

வைநதேயன்– பறவை காய்ச்சல் பீதியும் அதிகமாகிக் கொண்டிருக்கிறதாம். அதனால் நானும் வெளியேற வேண்டுமென விஷ்வக்ஸேநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ன செய்வது?

[ஒரு கனத்த மௌனம் நிலவியது. சேனைத்தலைவரான விஷ்வக்ஸேநரிடம்  எடுத்துச் சொல்ல எவருக்கும் துணிவில்லை என்ன செய்வது என யோசித்தவர்கள் எம்பெருமானையே சரணடைவது என தீர்மானித்தனர்.]

[அனைவரும் வந்த காரணத்தை அறிந்த பெருமாள் விஷ்வக்ஸேநரை அழைத்தார் ]

பெருமாள்–  சேனை முதலியாரரே! எதற்கிந்த அவசரச்சட்டம்?

விஷ்வக்ஸேநர் – அடியேன்! பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொண்டு இவ்வறிவிப்பை வெளியிட்டேன்.

பெருமாள் –  வைகுண்டத்திற்கு எந்த ஆபத்தும் வராது ஓய்! சரி, சரி நாங்கள் சொன்னால் நீர் ஏற்கமாட்டீர்! ஓய் வேங்கடநாதா! [என தேசிகனை அழைத்து கண்ணாலேயே விஷ்வக்ஸேநருக்கு  விளக்கும்படி சொல்கிறார்.]

தேசிகன் – ஸ்வாமி, தங்களுக்கு எம்பெருமான்பால் உள்ள பரிவு புலனாகிறது. நித்ய, முக்தர்களிடம் தங்களுக்குள்ள கௌரவமும் தெரியும் இரு..ந்…..தாலும் [என இழுக்கிறார்]

விஷ்வக்ஸேநர் – தேசிகரே! தங்களின் கருத்து என்ன? தயங்காமல் கூறும்.

தேசிகன் – எதனால் இந்த தடை?

விஷ்வக்ஸேநர் – அனைத்துலகங்களும் அபாயமான வைரஸால் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் தான்.

தேசிகன் – ஸ்வாமி பாரதத்திலிருந்து அமெரிக்கா! இத்தாலி சென்று வருவது போன்று பத்த ஜீவர்கள் சுவர்கம், நரகம், ப்ரம்மலோகம் போய்வருகின்றனர். உண்மைதானே!

விஷ்வக்ஸேநர்  : ஆம்

தேசிகன் :  அதே போன்று இங்கு அர்சிராதி மார்க்கத்தால்  வைகுந்தம்  வருபவர்க்கு புநராவத்தி ( அதாவது மீண்டும் பிறப்பிற்கு திரும்புதல் ) உண்டா!

விஷ்வக்ஸேநர்  : அதில்லை. ஆனால் தேகத்தின் வழியாகத்தானே கொரோனோ பரவுகிறது.  ப்ரபன்னன் அர்சிராதி மார்கத்தில் பயணிப்பது சூட்சம  தேகத்துடன் தானே! அப்படியாகில் அதற்கு நோய் தொற்று உண்டல்லவா! (இங்குள்ள சாஸ்த்ரார்த்தத்தை பெரியோர்களிடம் கேட்டுத் தெளிக.)

தேசிகன் :  (சிரித்து) அடியேன் கர்மாவினால் உண்டான தேகம் வேறு. அர்சிராதி  வழியில் உபசாரங்களைப் பெறுகைக்கு ப்ரபத்தி மகிமையால் பெறும் சூட்சம தேகம் வேறு. அது அர்சிராதி  அனுபவத்திற்காக மட்டுமே. வேறு ப்ராரப்தம் (பலனளிக்கும் கர்மா ) ஏதுமில்லை.

விஷ்வக்ஸேநர்  : அது வ…ந்…து …

தேசிகன் :  அடியேன் சுவாமி. மற்றோன்றும் கூறுகிறேன். ஸகல கர்ம ( கிருமி) நாசினியான விரஜையில் ஸ்நாநம் செய்து ஜீவன் பரமபதம் வருகிறான் அன்றோ!  இங்கு அவனின் தர்மபூதஜ்ஞானம்  Pandemic (எங்கும் பரவுகிறது). ஆனால் சுத்த ஸத்வமான (ரஜஸ், தமஸ் இல்லாததான) பரமபதத்தில் கர்மாவே இல்லாத போது கொரோனா எப்படி வரும்? ( நித்ய, முக்தர்கள் தேசிகனின் வாதம் கேட்டு கை தட்டி மகிழ்கின்றனர்)

(விஷ்வக்ஸேநர்  தேசிகனை கட்டித் தழுவி)

வேங்கடநாதனே அழகிய உமது வாதத்திறமைகளையும், ஸித்தாந்த தெளிவுகளையும் உலகறியச் செய்ய பெருமாளின் ஸங்கல்பமிது. அனந்தனும், கருடனும் உற்சாகமாகப் பங்கு கொண்டனர். கர்மபூமியான பாரதத்தில், கர்மாக்கள் அழிந்திட ஆசார்ய சம்பந்தம் எனும் கவசம் பூண்டவனுக்கு கர்மாவினாலும் பயமில்லை, க்ருமிகளாலும் பயமில்லை. ஆனால் ஸ்வர்க நரகம் செல்பவனுக்கு கர்ம வினைபயமுண்டு.

(எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்)

– ஸ்ரீஏபிஎன் சுவாமி

17/03/2020

Pandemic in Paramapadham

Paramapadham was in chaos. Nithyatmas and Muktatmas were congregating in groups and were talking to each other everywhere with a serious look on their faces. In the midst of all these, one could see Gajananan. In fact, it seemed as if he had just conveyed an important piece of information as everyone were standing around him.

Slowly, everyone began to understand the reason for this commotion. Vishwaksenar had sent an important piece of information and Gajanan was explaining it to everyone. It was about a virus that had become a pandemic on earth and Vishwaksenar had sent an order that nithyatmas should not incarnate on earth for the next 15 days to prevent its spread to Paramapadham and should not take on new body forms for kainkaryam (Service to the Divine Couple). The order further stated that Archiradi Margam (the path through which Jeevans travel to attain moksham) will also be closed for 15 days and those who had traveled through it should be kept on the other side of the Viraja river as a quarantine measure. They could enter paramapadham only after they are carefully watched for symptoms for 15 days.

Further, Aadhivahika Kanangal (Travel assistance/guide for a Jeevan during Archiradhi Margam) should not touch the Jeevans who have come through Archiradi Margam and should put no sandalwood or garlands on them. Anyone who fails to follow these instructions will also be quarantined, the order said. Already, a medical team under the leadership of Dhanvantari have started taking actions to mitigate this pandemic, warned the note. 

The Jeevatmas living there were asking each other, “What? How can one close the Archiradi Margam? Is it even possible?” This was the crux of the many discussions that were happening at paramapadham.

At that time, Adiseshan and Vynatheyan came there with a crestfallen face. One Nithyasuri came and asked them, “Why are both of you so worried?”

Adiseshan – “Looks like this pandemic broke out from a snake and I have to leave SriVaikuntam because of it! The other option is that I should wear a mask. Where can I find a 1000 masks? I don’t know what to do!”

Vynatheyan – “Looks like the bird flu is also spreading rapidly. That’s why Vishwaksenar has ordered me also to leave. Don’t know what to do!”

[There was silence everywhere. Nobody had the guts to talk to Vishwaksenar, so they decided to surrender directly to Perumal].

When everyone went to Perumal, He called for Vishwaksenar as He understood the reason for their worry.

Perumal – “O commander in chief! Why this emergency order?”

Vishwaksenar– “Adiyen! These instructions were sent for the safety of everyone here. “

Perumal – “No harm will befall SriVaikuntam! Still, you’re not going to listen to us. O Venkatanatha! “

Perumal signalled with his eyes to Swami Desikan and asked him to explain it to Vishwaksenar.

Swami Desikan – “Swami, this clearly shows the love and concern you have towards Perumal. We also know the dignity you have with nithyatmas and muktatmas, still…….”

Vishwaksenar– “O Desika! Give your opinion without any hesitation.”

Swami Desikan – “Why these restrictions?”

Vishwaksenar-  – “These restrictions are to counter the effect of a dangerous virus that is spreading really fast everywhere.”

Swami Desikan -“That’s true. It is necessary given that Baddhatmas travel to hell, heaven and Brahmaloka just like how earthlings travel from India to America and Italy!

Vishwaksenar – “Yes!”

Swami Desikan – “Do atmas that come through Archiradi Margam have to go back to earth? That is, do they have to take a rebirth on earth again?”

Vishwaksenar – “No, they don’t have to go back. Still, coronavirus spread rapidly through the body, right?And Prapannans (Those who are waiting for moksham) travel through Archiradi Margam through their sukshmaroopam, right? So, there is a possibility for this body to get infected too. (Learn the inner meanings through sastrams from elders in the proper manner).

Swami Desikan (smiling) – “Adiyen! The body that is created as a result of karmas is different from the sukshma body that is created due to the power of prapatti as the latter is for accepting all the courtesies that are given during the travel via Archiradi Margam. “

Vishwaksenar– “Yes, but….”

Swami Desikan – “Adiyen swami. Adding to it, When a person takes a dip in Viraja river, he loses all his germs (karmas). When Mukthan enters SriVaikuntam, his Dharma bhuta jnanam (attributive consciousness) spreads everywhere like a pandemic. But, SriVaikuntam is a Sudhasatvam (devoid of rajas and tamas), so karmas have no place here. In that case, how can corona spread here?|”

(Hearing Swami Desikan’s arguments, Nithyatmas and Muktatmas clapped in glee and Vishwaksenar hugged him with happiness.)

Venkatanatha! Perumal wished to showcase your knowledge of Sastras and clarity of thoughts to the world. Ananthan and Garudan also participated in this drama enthusiastically. 

Those who have association with an Acharya as their protection, don’t have to worry about any karmas or germs in India. This fear is only for those who travel to heaven or hell!

(Everyone was happy again). 

– English translation by Sri APN Swami Sishyas