Sri APN Swami #Writes #Slokam | ச்ரத்தாஞ்ஜலி: | Shraddhanjali | श्रद्धाञ्जली:

ச்ரத்தாஞ்ஜலி:

பிபின் ராவத் ஸுவிக்யாத: ஸேநாநீ ஜயதே ஸதா |
வ்யூஹே தந்த்ரே த்ருதி: தக்ஷ: காஷ்டா ரக்ஷண ஸுவ்ரத: || 1

(நமது முப்படைத் தளபதி பிபின் ராவத் என்று ப்ரஸித்தி பெற்ற வீரர் எப்போதும் ஜயத்துடன் விளங்குகிறார். சேனைகளை அணிவகுப்பதிலும், அதை வழிநடத்துவதிலும் உறுதியும், திறமையும் வாய்ந்த அவர் நமது தேசத்தின் எல்லைகளைக் காப்பதையே விரதமாகக் கொண்டவர்.

ஜயமாதா ப்ரிய: புத்ர: சூர: சத்ரு நிபர்ஹண: |
சத்ரோ: ப்ரக்யாத வீர்யச்ச ரஞ்ஜநீய: ரணாதிப: || 2

(போரில் வல்லவர். பாரதத்தாயின் ப்ரியமான புதல்வர். எதிரிகளை நடுங்க வைப்பதில் சூரர். அந்த எதிரிகளும் இவரது வல்லமை கண்டு வியந்து போற்றுவர். அதே சமயம் பழகுதற்கு மிகவும் இனியவர்.)

தேசபக்தோ விவேக: அஸௌ குடாகேச: கிரீடிவத் |
ஜாகரூக: நவீநஜ்ஞ: பாரதஸ்ய அக்ரணீ: மஹாந் || 3

(தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவரான இந்த மஹான் அர்ஜுனன் போன்று வீரத்துடன் சோம்பல் இல்லாமல் உழைப்பவர். எப்போதும் விழிப்புடன் இருந்து தேச நலனுக்காக புதிய, புதிய ராணுவ உத்திகளைக் கையாள்பவர்.)

விதேச பதிபி: மாந்ய: நிபுண: ஸமராங்கணே |
சைநாதிக்ய ப்ருஹத்பேத்தா ப்ரஜாரக்ஷண தீக்ஷித: || 4

(நம் தேசத்து மக்களைக் காப்பதில் உறுதியானவரும், வெளிநாட்டு அதிபர்களும் ‘இவரைப் போன்ற திறமை மிகுந்த தேசபக்தர் நமக்கு இல்லையே’ என ஏங்கி பாராட்டும்படியாக இருப்பவரும், புதிய, புதிய உத்திகளை போரில் புகுத்தி எதிரிகளை தடுத்தவரும், குறிப்பாக எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்தவர் இவரேயன்றோ!)

கீதானுகாரீ தத்தீர: ப்ராப்தவாந் த்ரிதிவம்சுப: |
யசோமூர்த்யா வஸந்சித்தே பாஸதே ஜய பாரதம் || 5

(யுத்தம் உனது தர்மம். அதில் பின்வாங்காதே. உன்னை நம்பியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு உனது. யுத்தத்தில் மரணம் உனக்கு அழியாத சுவர்கத்தை அளிக்கும் எனும் கீதையின் பொருள்படி நடப்பவர் இன்று வீரசுவர்கம் அடைந்தார். ஆனால் புகழுடம்புடன் நமது இதயத்தில் வஸிக்கிறார்.

ஜய் ஹிந்த் ஜய் ஹிந்த் !

Sri APNSwami #Writes #Slokam | Sri U.Ve. K.S Narayanacharyar Swami – MangalaMaalikaa by Sri APN Swami

Click here for PDF version

ஸ்ரீ:

Srimath Ahobila Mutt Asthana Vidhwan

Sri U.Ve. K.S Narayanacharyar Swami – MangalaMaalikaa

By

Mukundagiri Sri U.Ve. AnanthaPadmanabachariar ( Editor, Sri Nrusimha Priya)

Plava, Vruchchika Sukla, Panchami, Shravanam

 ஸ்ரீமத் அஹோபில மடம் ஆஸ்தான வித்வான்

ஸ்ரீ உ.வே K.S. நாராயணாசார்யார் ஸ்வாமி மங்களமாலிகா

ப்லவ வ்ருச்சிக சுக்ல பஞ்சமி ச்ரவணம்

8-December-2021

मङ्गलमालिका –   மங்களமாலிகா

ஸ்ரீமத் அஹோபில மடம் ஆஸ்தான வித்வான்

ஸ்ரீ உ.வே K.S. நாராயணாசார்யார் ஸ்வாமியைப் பற்றி

முகுந்தகிரி ஸ்ரீ உ.வே. அநந்தபத்மநாபாசார்யர் இயற்றியது

श्रीमन्नारायनार्य:  गुरुवरमनघ: सर्वशास्त्रार्थवेत्ता

ख्यातश्श्रीरङ्गकारीट् प्रभवयतिपते: प्राप्तमुद्राञ्च  विष्णो: |

वेदान्ताचार्यनाम्ना  यतिपतिचरणे न्यस्त सर्वात्मभार:

जीयात् रामायणार्य:   बहुजनकमलोद्भास मार्ताण्डतेज: ||

ஸ்ரீமந்நாராயணார்ய: குருவரமனக:

ஸர்வஶாஸ்த்ரார்த வேத்தா

க்யாதஶ்ஶ்ரீரங்ககாரீட் ப்ரபவ யதிபதே:

ப்ராப்தமுத்ராஞ்ச விஷ்ணோ: |

வேதாந்தாசார்யநாம்னா யதிபதிசரணே

ந்யஸ்த ஸர்வாத்மபார:

ஜீயாத் ராமாயணார்ய: பஹுஜனகமலோத்பாஸ

மார்தாண்ட தேஜ: ||

          [மிகச் சிறந்த குருவான ஸ்ரீமந்நாராயணாசார்யர், ஸர்வ சாஸ்திரங்களையும் நன்கு அறிந்தவர். மிகவும் பெருமை வாய்ந்த ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகனிடம் ஸமாச்ரயணம் பெற்றவர். ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகனின் திருவடியில் தன்னுடைய ஆத்ம ரக்ஷாபரத்தை  ஸமர்பித்தவர். “ராமாயணாசார்யர்” என்று போற்றப்படும்   இவர், மக்களாகிய தாமரைகளை மலரச் செய்யும் சூரியனாக விளங்குகிறார்.]

          [Sriman Narayanacharyar, the best Guru, is well versed in all the scriptures. He underwent Samashrayanam under Sri Lakshminrusimha Divyapaduka Sevaka Srivan sadagopa Sri Sriranga Sadagopa Yatindra Mahadesikan. He performed complete surrender i.e Bharanyasam under SrivanSatakopa Sri Vedanta Desika Yatindra Mahadesikan. He is revered as “Ramayanacharyar” and he is to the people like how the sun is to the lotus flower.]

श्रीरङ्गशठजित् योगि दयया प्राप्तसत्पथं |

वाधूलान्वय सञ्जातम् श्रये नारायणं गुरुम् ||  1

ஸ்ரீ ரங்கசடஜித் யோகி தயயா ப்ராப்த ஸத்பதம்|

வாதூலாந்வய ஸஞ்ஜாதம் ஶ்ரயே நாராயணம் குரும் ||          1

          [ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீ ஸ்ரீரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகனிடம் ஸமாச்ரயணம் பெற்றவரும், வாதூல குலத்துதித்த நாராயணகுருவை சரணடைகிறேன்.]

          I surrender to Narayanaguru who was born in Vadula Kulam and who had samashreyanam under Sri LakshmiNrusimha DivyaPaduka Sevaka SrivanSatakopa Sri Sriranga Satakopa Yatindra Mahadesikan.

वीरराघव योगीन्द्र शठारातिमहर्निशम् |

हृदये चिन्तयन्तम् तं श्रये  नारायणं गुरुम् ||  2

வீரராகவ யோகீந்த்ர சடாராதிம் அஹர்நிஶம் |

ஹ்ருதயே சிந்தயந்தம் தம் ஶ்ரயே நாராயணம் குரும் ||   2

          [ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகனை எப்போதும் ஹ்ருதயத்தில் த்யானித்துக் கொண்டிருக்கும் நாராயணார்யரை சரணடைகிறேன்.]

          I surrender to Narayanaguru who always meditates on SrivanSatakopa SriVeeraRaghava Satakopa Yatindra Mahadesikan.

वेदान्तार्य मुनीन्द्रस्य पदपङ्कजषट्पदं |

वेदान्तोभय संपन्नं श्रये  नारायणं गुरुम् ||  3

வேதாந்தார்ய முநீந்த்ரஸ்ய பதபங்கஜ ஷட்பதம் |

வேதாந்தோபய ஸம்பந்நம் ஶ்ரயே நாராயணம் குரும் ||  3

          [ ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகனின் திருவடித்தாமரைகளில் வண்டானவரும், உபயவேதாந்த ஸம்பந்நருமான நாராயணகுருவை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru, a well versed scholar in ubayavedanta and who is a beetle prostrating the lotus feet of SrivanSatakopa Sri Vedanta Desika Yatindra Mahadesikan.

नारायण यतीन्द्रस्य दयापात्रं गुणोज्वलं |

काव्यालङ्कार मर्मज्ञं श्रये नारायणं गुरुम् ||  4

நாராயண யதீந்த்ரஸ்ய தயாபாத்ரம் குணோஜ்வலம் |

காவ்யாலங்கார மர்மஜ்ஞம் ஶ்ரயே நாராயணம் குரும் || 4

          [ ஸ்ரீலஷ்மீந்ருஸிம்ஹ திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநாராயணயதீந்த்ர மஹாதேசிகனின் கருணைக்கு பாத்ரபூதரும், குணங்களால் உயர்ந்தவரும், காவ்யம், அலங்காரம் முதலிய சாஸ்த்ரங்களில் அதிநிபுணருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru who has the grace of SriLakshmiNrusimha DivyaPaduka Sevaka SriVanSatakopa SriNarayanaYatindra Mahadesikan and who excels with auspicious character and mastered the science of poetry and shastras.

श्रीरङ्गनाथ  यतीन्द्रेण दत्तास्थान बुधं पदं |

दत्त पीठाधिपै: मान्यं श्रये  नारायणं गुरुम् ||  5

ஸ்ரீரங்கநாத யதீந்த்ரேண தத்தாஸ்தாந புதம்பதம் |

தத்தபீடாதிபை: மாந்யம் ஶ்ரயே நாராயணம் குரும் || 5

          [ஸ்ரீவண்சடகோப ஸ்ரீரங்கநாதயதீந்த்ர மஹாதேசிகனால் ஆஸ்தான பண்டிதராக நியமிக்கப்பட்டவரும், தத்தபீடம் முதலிய பெரியோர்களால் பஹுமானிக்கப்பட்டவருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru who was appointed as Asthana Vidhwan of Ahobila Mutt by SriVanSatakopa SriRanganatha Yatindra Mahadesikan and who was honored by the elders of the Dattapitam etc.

सांस्कृतीभि: द्रामिडीभि: कन्नडाङ्गल भाषणै: |

जनताकर्षकं पूज्यं श्रये  नारायणं गुरुम् ||  6

ஸாம்ஸ்க்ருதீபி: த்ராமிடீபி: கந்நட ஆங்கல பாஷணை: |

ஜநதாகர்ஷகம் பூஜ்யம் ஶ்ரயே நாராயணம் குரும் || 6

          [ ஸம்ஸ்க்ருதம், த்ராவிடம், கன்னடம், ஆங்கிலம் என்று பல பாஷைகளால் மக்களை ஆகர்ஷணம் செய்த உயர்ந்தவரான நாராயணார்யரை சரணடைகிறேன்]

         I surrender to Narayanaguru, who draws attention of people across many languages, namely Sanskrit, Tamil, Kannada & English.

भेजावर् स्वामि पादै: हि तद्वदन्य मठाधिपै: |

सादरं सत्कृतं श्रेष्टं श्रये  नारायणं गुरुम् ||  7

பேஜாவர் ஸ்வாமி பாதை: ஹி தத்வத் அந்ய மடாதிபை: |

ஸாதரம் ஸத்க்ருதம் ஶ்ரேஷ்டம் ஶ்ரயே நாராயணம் குரும் || 7

          [பேஜாவர் ஸ்வாமி, அஃதே போன்று யதிராஜ ஜீயர் போன்ற பல மடாதிபதிகளால் ஆதரவுடன் ஸத்கரிக்கப்பட்டவரான நாராயணார்யரை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru, who is honored by many Mutt heads like Pejawar Swami & Yathiraja Jeeyar.

परकाल मुनीन्द्रस्य सुह्रुदामग्रगामिनम् |

रङ्गप्रिया दयामग्नं श्रये नारायणं गुरुम् ||  8

பரகால முநீந்த்ரஸ்ய ஸுஹ்ருதாமக்ரகாமிநம் |

ரங்கப்ரியா தயாமக்நம் ஶ்ரயே நாராயணம் குரும் || 8

          [ப்ரக்ருதம் பரகால ஸ்வாமியின் ஆப்தர்களில் முதன்மையானவர். ரங்கப்ரியா ஸ்வாமியின் கருணையில் மூழ்கியவரான நாராயணார்யரை சரணடைகிறேன்]

         I surrender to Narayanaguru, who is dear most to Prakrutham Parakala Mutt Swami and has the grace of Rangapriya Swami.

रामायणे जये चैव कृत भूरि परिश्रमं |

गीता प्रवचने दक्षं श्रये  नारायणं गुरुम् ||  9

ராமாயணே ஜயே சைவ க்ருதபூரி பரிஶ்ரமம் |

கீதாப்ரவசநே தக்ஷம் ஶ்ரயே நாராயணம் குரும் || 9

          [ ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றில் ஆழ்ந்தபுலமை பெற்றவரும், கீதை ப்ரவசனத்தில் நிபுணருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]
          I surrender to Narayanaguru, who mastered Ramayana, Mahabharata and excels in his Gita discourses.

वादूल श्रीनिवासाय नायक्याम् रङ्गपूर्विकाम्  |

संभूतं सर्वशास्त्रज्ञं श्रये  नारायणं गुरुम् ||  10

வாதுல ஸ்ரீநிவாஸாய நாயக்யாம் ரங்கபூர்விகாம் |

ஸம்பூதம்  ஸர்வஶாஸ்த்ரஜ்ஞம் ஶ்ரயே நாராயணம் குரும் || 10

          [ வாதூல ஸ்ரீநிவாஸாசார்யருக்கும், ரங்கநாயகி அம்மாளுக்கும் பிறந்த ஸத்புத்ரரான நாராயணார்யரை சரணடைகிறேன்]

                    I surrender to Narayanaguru, who was born to Vadula Srinivasacharyar and Ranganayaki Ammal.

तुलामासे च रेवत्यां संभूतं अङ्गिरस् समे |

अतुल: कीर्तिमन्तं तं श्रये नारायणं गुरुम् ||  11

துலாமாஸே ச ரேவத்யாம் ஸம்புதம் அங்கிரஸ்ஸமே |

அதுல: கீர்திமந்தம் தம் ஶ்ரயே நாராயணம் குரும் || 11

          [அங்கிரஸ் வருஷத்தில், துலா ரேவதியில் அவதரித்த அதுலர்- அதாவது தனக்குநிகரற்ற  கீர்தியுள்ள  நாராயணார்யரை சரணடைகிறேன்]

                    I surrender to Narayanaguru, who was born in the Angirasa Year, Thula month, Revathy Star and had unparalleled reputation.

श्रीनृसिंहे सदा सक्तं कमलागृहमेधिनम्  |

शिष्यवर्यै: सदा वन्द्यं श्रये नारायणं गुरुम् ||  12

ஸ்ரீ ந்ருஸிம்ஹே ஸதாஸக்தம் கமலாக்ருஹமேதிநம் |

ஶிஷ்யவர்யை: ஸதாவந்த்யம் ஶ்ரயே நாராயணம் குரும் ||  12

          [ஸ்ரீ ந்ருஸிம்ஹனிடம் எப்போதும் மனதுவைத்தவரும், கமலையுடன் இல்லறம் பூண்டவரும், சிஷ்ய களால் சேவிக்கப்படுபவராகிய நாராயணார்யரை சரணடைகிறேன்]

          I surrender to Narayanaguru, who has always been devoted to Sri Nrusimhan; who is married to Kamala; who is served by his disciples.

सच्छिष्य वर्ग भृङ्गानाम्  कमलं कमलापतिम् |

कोमलाङ्गम् कृपापूर्णं श्रये  नारायणं गुरुम् ||  13

ஸச்சிஷ்யவர்க ப்ருங்காநாம் கமலம் கமலாபதிம் |

கோமளாங்கம் க்ருபாபூர்ணம் ஶ்ரயே நாராயணம் குரும் ||  13

          [ஸச்சிஷ்யர்களான வண்டுகளுக்குத் தாமரையானவரும், கமலையின் கணவரும், அழகிய திருமேனியுடையவரும், கருணையுடையவருமான நாராயணார்யரை சரணடைகிறேன்]

         I surrender to Narayanaguru, who is like a beetle to his Shishyas; who is married to Kamala; who is the embodiment of good looks (i.e. with beautiful Thirumeni); who is full of compassion.

नारायण गुरो: पूर्ण पीयूष गुणसागरात् |

उद्धृतं मौक्तिकं स्तोत्रं अर्पितं तत् पदांबुजे  ||

अनन्तपद्मनाभेन दासेन शुभदायकं || 14

நாராயண குரோ: பூர்ண பீயுஷ குணஸாகராத்|

உத்ருதம் மௌக்திகம் ஸ்தோத்ரம் அர்பிதம் தத் பதாம்புஜே ||

அநந்தபத்மநாபேந தாஸேந ஶுபதாயகம் || 14

         நாராயண குருவின் அம்ருத குணஸாகரத்தினின்று எடுத்த முத்தான, மங்களம் அளிக்கும் இந்த ஸ்தோத்ரம், அநந்தபத்மநாப தாஸனாலே அவருடைய திருவடித்தாமரைகளில் ஸமர்பிக்கப்படுகிறது.  (14)

         This glorious hymn is a pearl taken from the divine ocean of Narayana Guru’s attributes and is presented at His lotus feet by Ananthapadmanabha Dasan.

@ Bengaluru, during First Public Screening of the movie
Sri Vedanta Desika’s Ghantavatharam on 31-Dec-2019

Sri #APNSwami #Writes #Slokam | ஸத்யாகாலம் | Slokam on Sathyakalam by APN Swami

कदाहं कावेरी तटपरिसरे सत्य नगरे (समये)
विभान्तं योगीन्द्रं मम कुल धनं वेङ्कटपतिम् |
उपासीनैकान्त्या शठमथन, रामानुज, गुरो
शठारे ममार्येत्त्यनिशं अपनेष्यामि दिवसान् ||

கதாஹம் காவேரி தடபரிஸரே ஸத்ய நகரே (ஸமயே)
விபாந்தம் யோகீந்த்ரம் , மம குல தனம் வேங்கடபதிம் |
உபாஸீந: ஏகாந்த்யா சடமதந, ராமாநுஜ குரோ
சடாரே, மமார்யேதி அநிசம் அபநேஷ்யாமி திவஸாந் !!

என் மனது ஏங்குகிறது. காவேரியின் கரையில், ஸத்யாகாலத்தில் விளங்கும் எனது குல தனமான யோகிராஜனாம் தேசிகனை நினைத்து ஏங்குகிறேன். தனிமையில் அவரை த்யானித்துக் கொண்டு, ஹே! நம்மாழ்வாரே, ராமானுஜ, தேசிக, ஆதிவண்சடகோப, க்ருஷ்ணமார்யரே என்று த்யானித்துக் கொண்டு எனது நாட்களை எப்போது கழிப்பேனோ! என மனது ஏங்குகிறது. ஸத்யாகாலத்தின் வாசம் எனது ச்வாஸம்.

APN
प्लव तुला पूर्वप्रोष्टप्रदा
शुक्ल दशमी
14/11/21 – Sunday

Sri #APNSwami #Writes #Slokam | Ramayanam Bala Kandam | Vikhari Rama Navami | 2-Apr-2019

Slokam by Sri APN Swami on Ramayanam Bala Kandam | Rama Navami

பால காண்டம் சுலோகம் : இயற்றிவர்: ஸ்ரீ ஏபின் ஸ்வாமி
அமரை: வந்த்யமாநேச மஹதாவிர்பவேந ச |
ந்ருபாத்மஜாவதாரை: ச விச்வாமித்ரேண தீமதா ||
தாடகாநிதநே சைவ யஜ்ஞஸம்ரக்ஷணேபிச |
அஹல்யா சாப நிர்மோக்ஷே தநுர்பங்கே ச மைதிலே ||
ஸீதா விவாஹ ஸந்தர்பே பார்கவஸ்ய தபோஜயே |
ஸுஸ்பஷ்டம் ராகவ: ஸ்ரீமந் வேதவேத்ய: ஜகத்பதி: ||

தேவர்கள் வந்து சரணாகதி செய்ததினாலேயும், பெருமாள் பாயசத்தினால் ஆவிர்பாவம் செய்ததினாலேயும், ந்ருபாத்மஜா அதாவது பிராட்டியின் அவதாரத்தினாலேயும், பெருமாளின் அவதாரத்தினாலேயும், விஸ்வாமித்ரார் “அஹம் வேதி மகாத்மா” என்று சொன்னதினாலேயும், தாடகை கொன்று யாக ஸம்ரக்ஷணம் செய்ததினாலேயும், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தினாலேயும், சிவனின் தனுர் பங்கம் செய்ததினாலேயும், சீதையை விவாஹம் செய்ததினாலேயும், மேலும் பரசுராமரின் தபோ வலிமையை ஜயித்ததினாலேயும் தெளிவாக (ஸ்பஷ்டமாக) தெரிவது என்னவென்றால் ராகவானான ராமனே வேத வேத்யனான பரமாத்மா என்று தெரிகிறது.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri #APNSwami #Writes #Slokam| on Athi Varadar & Puri Jagannathan | Vikari 2019

கோடிக்கணக்கானபக்தர்களின் இதயத்தை கட்டிப்போட்ட இரண்டு தாருக்கள் [மரங்கள்] பூரி ஜகநாதன் மற்றும் காஞ்சிபுரம் அத்தி வரதர்
இவர்களைப் பற்றிய சிறப்பு ச்லோகங்கள்.

இயற்றிவர்: ஸ்ரீ ஏபின் ஸ்வாமி

ச்லோகம்1
एको हि देव: द्विविधा विभाति नीलाद्रिमध्ये द्विरद्वेन्द्रशैले |
दारुस्वरूप: पुरुषोत्तमोऽसौ देवाधिराज: जगतां पतिस्स: ||

ஏகோஹி தேவ: த்விவிதாவிபாதிநீலாத்ரிமத்யேத்விரதேந்த்ரசைலே|
தாருஸ்வரூப: புருஷோத்தமோSஸௌதேவாதிராஜ: ஜகதாம்பதிஸ்ஸ: ||

பொருள் : புருஷோத்தமனாகிய எம்பெருமான் தாருவாக (மரமாக) நீலாத்ரி எனும் பூரியிலும், யானைமலை எனும் காஞ்சியிலும் ஜகந்நாதன், தேவாதிராஜன் என இரண்டு ரூபங்களாக சேவை சாதிக்கிறான்

ச்லோகம்2
न निंबफलमिच्छन्ति औदुंबरं निषिध्यते |
नीलाद्रौ वारणाद्रौ च जना भुञ्जन्ति संप्रति||

ந நிம்பபலமிச்சந்திஔதும்பரம்நிஷித்யதே|
நீலாத்ரௌவாரணாத்ரௌ ச ஜனாபுஞ்ஜந்திஸம்ப்ரதி||

பொருள் : வேப்பம்பழத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள். அத்திப்பழமோ!
சாஸ்திரத்தினால் விலக்கப்பட்டது. ஆனால் தற்போது நீலாத்ரி எனும் பூரியிலும், வாரணாத்ரி எனும் காஞ்சியிலும் மக்கள் வேம்பில் பழுத்த பலனையும் அத்தியில் விளைந்த பலனையும் விரும்பியுண்கின்றனரே!
பூரி ஜகன்நாதன் – வேப்ப மரம்
காஞ்சிஅத்திவரதர் – அத்தி மரம்
பழம் – பெருமாளின் மூலமாக பலன்கள்.

ச்லோகம் 3

औदुंबर फलं लोके भोक्तुं तावत् निषिध्यते |

रदादुंबर वृक्षस्य चित्रं तत्फलमश्नुते ||

ஔதும்பர பலம் லோகே போக்தும் தாவத் நிஷித்யதே |

வரதாதும்பர வ்ருக்ஷஸ்ய சித்ரம் தத்பலமச்னுதே ||  

பொருள் : அத்திப்பழம் சாப்பிடக் கூடாது என சாஸ்த்ரம் தடுக்கிறது. ஆனால் வரதன் எனும் அத்திமரத்தின் பலனை (பழத்தை), இவ்வுலகம் விரும்பி உண்கிறதே!! இதென்ன விந்தை?!!

Sri #APNSwami #Writes #Slokam | on Varadan’s Mohini Alankaram |Kanchi Brahmothsavam – Vikari Varusham_2019

Slokams by Sri APN Swami on Varadan’s Mohini Alankara Anubhavam

 (Kanchi Brahmothsavam – Vikari Varusham_21/05/2019)

We are very happy & blessed to share the 101st Blog post of Sri APN Swami’s blog page which happens to be slokams written by Sri APN Swami mesmerized by the beauty of Kanchi Varadan in Mohini Alankaram.

 

  1. यं दृष्ट्वा मोहिनी रूपे सर्वे शर्वोऽपि मोहिता: |

लक्ष्मी पुंभावमापन्ना वन्देहं विश्व मोहिनीम् || (मातरं)

மோகினீ ரூபத்தில் (அலங்காரத்தில்) உலகிலுள்ள அனைவரையும், பரமசிவனையும் உட்பட மயக்கியவனும், எவனைக் கண்டு பிராட்டியும் தன்னை ஆண்மகனாக நினைத்தாளோ! (உலகின் தாயான) அந்த ஜகன்மோகினியான வரதனை வணங்குகிறேன்.

2. आकारत्रय संपन्ना परं विस्मयमागता |

दृष्ट्वा तत् मोहिनी रूपं सपत्नी भावशंकिता ||

திரு, பூ, நீளை எனும் மூன்று வடிவு கொண்ட பிராட்டி எந்த மோகினியைக் கண்டு, தனக்கு சக்களத்தி வந்தாளோ! என பயந்தாளோ! அந்த சக்களத்தியான ஜகன்மோகினியை வணங்குகிறேன்.

Varadhan MOhini Alakaram

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri #APNSwami #Writes #Slokam| இந்து எழுச்சி பாடல்

இந்து நண்பனே உனக்கு மனதில் உறுதி இல்லையா!

எண்ணியெண்ணி பாரடா இன்னும் எதற்கு பயமடா

காலம், காலமாக நaம்மை கலக்கி வந்த கூட்டத்தை

கலங்கடிக்க வாய்புமுண்டு கனிந்தகாலம் இதுவென்று

போர்களத்தின் வாளின் வலிமை கொண்ட உனது விரல்களால்

தோற்கடிப்போம் தீமை தன்னை தோளை தட்டி எழுந்துவா!

இந்து தர்மம் என்றும் எங்கும் வெல்கவென்று முழங்கிடு

உன்தன் மதத்தின் மேன்மைக்கண்டு உள்ளம் உருகி செயல்படு

தீயசக்தி சிதறியோட தேசபக்தி கொண்ட நீ

விரலின் வலிமை காட்டிடு வீணர்களை விரட்டிடு

– APN Swami

7th April 2019

hindu.jpg