Sri APN Swami’s Shishya Writes | அநத்யயனமா? அத்யயனமா? Is it Anadhyayana Kalam/Time or Adhyayana Kalam/Time ?

Scroll down to read the English Translation of this article.

நாளை (19-11-21) முதல் தினம்தோறும் அத்யயனம்.

கார்த்திகை கார்த்திகை முதல் தை ஹஸ்தத்தத்திற்கு முதல் நாள் வரையிலான காலம் ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய ப்ரபந்த அநத்யயன காலமாகும். இந்த வருடம் அநத்யயன காலம் 19-11-21 முதல் 23.01.22 வரையாகும். அதாவது திருமாளிகைளில் இந்த காலத்தில் ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய ப்ரபந்த பாசுரங்களை ஸேவிக்கும் வழக்கம் இல்லை.

நம்பெருமாளின் நியமனப்படி, திருமங்கையாழ்வார் காலத்தில், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்னவர்கள், கார்த்திகை கார்த்திகையன்று ஆழ்வார் திருநகரிக்கு சென்று, நம்மாழ்வாரை எழுந்தருளப்பண்ணிக் கொண்டு ஸ்ரீரங்கம் வந்து, வைகுண்ட ஏகாதசி சமயத்தில் அத்யயன உத்சவத்தை ஸ்ரீரங்கத்தில் நடத்தினர்.

ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் முன்னிலையில், நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை எம்பெருமான் திருச்செவி சாய்த்து இன்புறுவதே அத்யயன உத்சவமாகும். பின்னர் நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளப்பண்ணி விட்டு ஸ்ரீவைஷ்னவர்கள் ஸ்ரீரங்கம் திரும்பி வருவதற்கு தை ஹஸ்தம் ஆகிவிடும்.

ஆகையால் தான் திருமங்கைஆழ்வார் திருநக்ஷத்திரமான கார்த்திகை கார்த்திகை முதல் தை ஹஸ்தத்தத்திற்கு முதல் நாள் வரை காலம் நாலாயிர திவ்ய ப்ரபந்த அநத்யயன காலமாக கருதப்பட்டு திருமாளிகைகளில் நாலாயிர திவ்ய ப்ரபந்தம் ஸேவிக்காமல் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கூரத்தாழ்வான் திருநக்ஷத்திரமான தை ஹஸ்தம் முதல் மீண்டும் நாலாயிர திவ்ய ப்ரபந்த அத்யயன தொடக்கமாகும்.

பின்னர், கலியின் கொடுமையால் நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள் கலியன் காலத்திற்கு பிறகு இவ்வுற்சவம் சில காலம் மறைந்து, வழக்கத்தில் இல்லாத சூழ்நிலை இருந்தது. அப்பொழுது அத்யயன உத்சவமும் நடைபெறவில்லை. நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களை நம்மாழ்வாரிடமிருந்து அதிகரித்த நாதமுனிகள், திருமங்கை ஆழ்வார் நடத்திய அத்யயன உத்சவத்தை மீண்டும் கோலாகலமாக கொண்டாடினார்.

மீண்டும் சுவாமி தேசிகன் காலத்தில் அத்யயன உத்சவம் நடைபெற சில தடங்கல்கள் உண்டாகின. அப்பொழுது அத்யயன உத்சவத்தை தடையில்லாமல் நடத்திய பெருமை சுவாமி தேசிகனையே சேரும்.

மார்கழி மாதம் மட்டும் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை ஸேவிக்கும் வழக்கம் திருமாளிகைகளில் உண்டு.

சுவாமி தேசிகன் அவதாரத்திற்கு பின்னர் அநத்யயன காலம் தேசிக ப்ரபந்த அத்யயன காலம் என்று கொண்டாடப்படுகிறது.

சுவாமி தேசிகனின் ப்ரபந்த ஸாரம் என்னும் ப்ரபந்தம் நாலாயிர திவ்ய ப்ரபந்த்தின் பலனை அளிக்கும் பாசுரங்கள் ஆகும். இதனையே சுவாமி தேசிகன் “நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வு” என்று கொண்டாடியுள்ளனர்.

அநத்யயன காலத்தில் தினம்தோறும் நம் இல்லங்களில்
1) நாலாயிர திவ்ய ப்ரபந்த தனியன்களையும்,
2) சுவாமி தேசிகன் அருளிய தேசிக ப்ரபந்தங்களையும்,
3) சுவாமி தேசிகனை போற்றும் பிள்ளையந்தாதியையும்
ஸேவித்து நாம் ஆசார்ய அநுக்ரஹ பாத்ரர்களாக வேண்டும்.

ஆம், அநத்யயன காலம் தேசிக ப்ரபந்த அத்யயன காலமாகும்.

ஸ்ரீ APN சுவாமி காலக்ஷேபத்தில் அருளியதின் தொகுப்பு.
இப்படிக்கு,
ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்
18-11-2021

Is it Anadhyayana Kalam/Time or Adhyayana Kalam/Time ?

Anadhyayana kaalam is the period from “Kaarthigayil Kaarthigai (ThiruMangai Alwar ThiruNakshatram)” till a day before “Thai Hastam” (Swami KoorathAzhvan ThiruNakshathiram). During this period, as a practise, at an individual’s home, Azhwar’s 4000 Divya Prabhandam are not chanted.

This year the Anadhyayana kalam is from 19-11-2021 to 23-01-2022.

As per NamPerumal’s order, and during the times of Thirumangai Azhwar, the Sri Vaishnavaas of Srirangam, would start their travel from Srirangam to Azhwar Thirunagari, on the day of Kaarthigayil Kaarthigai; they would go to Azhwar Thirunagari to bring Swami Namazhwar from there to Srirangam, so during Vaikunta Ekadasi they can celebrate “Adhyayana Utsavam” in Srirangam.

Swami Nammazhwar from Azhwar Thirunagari will arrive in Srirangam. Namperumal will listen to the recitation of the 4000 Divya Prabhandan by the Sri Vaishnavas during Anaadhyayana utsavam in the august presence of all Azhwars.

Once the Adhayayana utsavam celebration finishes, they would travel back to Azhwar Thirunagari to leave Swami Nammazhwar in his home town. This travel back to Azhwar Thirunagari and return back at Srirangam, will usually take a duration that will be close to Thai Hastam.

Since the Sri Vaishnavaas will be busy in the travel and the celebration, they did not chant Azhwar’s 4000 Divya Prabhandam at their homes. That became a practice – and so at individual’s home they did not recite Azhwar’s Divya Prabhandam between Karthigayil Karthigai and just a day before Thai Hastham. The Divya Prabhandam recitation at homes would restart from Thai Hastam (Swami KoorathAzhvan ThiruNakshathiram).

Though it’s in the Anadhyayana period, during Marghazhi masam, as a practice, the Sri Vaishnavas recited Thirupalliyezhuchi & Thiruppavai at home. The Thaniyans of all the Azhwars who wrote the 4000 Divya prabhandams are also chanted during this time.

After the days of Sri Thirumangai Azhwar, this Utsavam slowly stopped. It was Sri Nathamunigal who restarted this practice.

Few more challenges surfaced during the times of Swami Desikan as well. Swami Desikan ensured that those were resolved for good and restarted the Adhyayana Utsavam in Srirangam. Today, We are celebrating Adhyayana Utsavam only because of Swami Desikan.

Also, from the times of Swami Desikan, the 4000 Divya Prabhandha “Anadhyayana” kalam is observed as “Desika Prabhandha Adhyayana Kalam. Swami Desikan has also summarised the 4000 Divya Prabhandams in his “Prabhanda Saram”. Reciting Desikan’s Prabhanda Saram gives all the benefit of reciting 4000 Divya Prabhandam.

Since the times of Swami Desikan, and during the Anadhyayana period, as a practise, daily at homes

  1. We should recite the Thaniyans of all the Azhwars who wrote the 4000 Divya prabhandams
  2. We should recite Swami Desikan’s “Prabhanda Saram”
  3. We should also recite “Pillai Andhadhi” written on Swami Desikan.

So the “4000 Prabhandha Anadhyayana” kalam/time is actually “Desika Prabhandha Adhyayana Kalam/time”.

Extract written based on the learnings in Sri APN Swami’s Kalakshepam.
adiyen
Sriranjani Jagannathan
18-11-21

Sri #APNSwami #Writes #Slokam | ஸத்யாகாலம் | Slokam on Sathyakalam by APN Swami

कदाहं कावेरी तटपरिसरे सत्य नगरे (समये)
विभान्तं योगीन्द्रं मम कुल धनं वेङ्कटपतिम् |
उपासीनैकान्त्या शठमथन, रामानुज, गुरो
शठारे ममार्येत्त्यनिशं अपनेष्यामि दिवसान् ||

கதாஹம் காவேரி தடபரிஸரே ஸத்ய நகரே (ஸமயே)
விபாந்தம் யோகீந்த்ரம் , மம குல தனம் வேங்கடபதிம் |
உபாஸீந: ஏகாந்த்யா சடமதந, ராமாநுஜ குரோ
சடாரே, மமார்யேதி அநிசம் அபநேஷ்யாமி திவஸாந் !!

என் மனது ஏங்குகிறது. காவேரியின் கரையில், ஸத்யாகாலத்தில் விளங்கும் எனது குல தனமான யோகிராஜனாம் தேசிகனை நினைத்து ஏங்குகிறேன். தனிமையில் அவரை த்யானித்துக் கொண்டு, ஹே! நம்மாழ்வாரே, ராமானுஜ, தேசிக, ஆதிவண்சடகோப, க்ருஷ்ணமார்யரே என்று த்யானித்துக் கொண்டு எனது நாட்களை எப்போது கழிப்பேனோ! என மனது ஏங்குகிறது. ஸத்யாகாலத்தின் வாசம் எனது ச்வாஸம்.

APN
प्लव तुला पूर्वप्रोष्टप्रदा
शुक्ल दशमी
14/11/21 – Sunday

Sri APNSwami #Writes #Articles | அசட்டு அரசனும், அறிவில்லா மந்த்ரிகளும்

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️
8-நவம்பர்-2021 | சென்னை
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

என்றோ எங்கேயோ படித்த ஒரு நீதி ச்லோகம். எப்பொழுதாவது உபன்யாசத்திற்கு உதவும் என்பதாக நான் இதனை பத்திரபடுத்தி வைத்திருந்தேன். இதை படித்துவிட்டு, இன்றைய நிலைமை குறித்து நீங்களாக ஏதாவது கற்பனை செய்து கொண்டால், அடியேன் அதற்கு பொறுப்பில்லை.
-APN
🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

அசட்டு அரசனும், அறிவில்லா மந்த்ரிகளும்:

நிர்வாகத்திறமையில்லா ஒருவனுக்கு எப்படியோ அரசுரிமை கிடைத்துவிட்டது. எந்த அனுபவமும்‌
இல்லாத அடிமுட்டாள்களை அரசன்‌ அந்தரங்க அமைச்சர்களாக்கிக்‌ கொண்டான்‌. அந்த ஆட்சியிலும்‌
மக்கள்‌ எப்படியோ வாழ்ந்து வந்தனர்‌. ஒரு சமயம்‌ அரண்மனையினுள்‌ எலி ஒன்று ஓடி ஒளிந்தது. அதை
விழுங்க முயன்ற கொடிய பாம்பு அரண்மணைக்குள்‌ புகுந்தது. எதிர்பாராதவிதமாக அரசியை பாம்பு
கடித்தது.

விஷயமறிந்த அரசன்‌ நிலைமை அறிய சம்பவ இடத்திற்கு முதலில்‌ அமைச்சர்களை அனுப்பினான்‌.
அவர்கள்‌ செய்வதறியாது திகைத்தபோது அரசனும்‌ அங்கு வந்து சேர்ந்தான்‌. மருத்துவக்குழு
வருவதற்கு தாமதமாகிறது. ராணிக்கோ விஷமேறுகிறது. “தலைக்கு விஷமேறாது எப்படி தடுப்பது?
அமைச்சர்களுடன்‌ அவசர ஆலோசனைக்கூட்டம்‌ நடைபெறுகிறது.

“முதலில்‌ தலையை வெட்டினால்‌ தலைக்கு விஷமேறாது. பின்னர்‌ மருத்துவ சிகிச்சையால்‌
தலையைப்‌ பிணைக்கலாம்‌” என்பது அமைச்சர்களின்‌ அருமையான யோசனை. அது நடந்தது.
பாம்பைத்‌ தேடினார்கள்‌. அதைக்‌ காணவில்லை. “சரி அரண்மனையைக்‌ கொளுத்தினால்‌ பாம்பு
எரிந்துவிடும்‌. இனி எவரையும்‌ கடிக்காது எனும்‌ அமைச்சரவைத்‌ தீர்மானம்‌”. அதன்படி நடந்தது.
அரண்மனை கொளுத்தப்பட்டதால்‌ நகரமும்‌ சேர்ந்து எரிந்தது.

மறுபடியும்‌ அமைச்சரவைக்‌ கூட்டம்‌. காரசாரமான விவாதம்‌. இம்முறை மும்முரமான யோசனையின்‌.
முடிவில்‌ “நகரத்தின்‌ தண்ணீர்‌ தேவையை பூர்த்தி செய்யும்‌ ஏரியை வெட்டிவிட்டால்‌ அந்நீரால்‌ நெருப்பு அணையுமே!” எனும்‌ அருமையான யோசனையைச்‌ செயல்படுத்தினர்‌. திடீரென்று ஏரிவெள்ளம்‌
பாய்ந்தால்‌ நகரத்தின்‌ நிலை என்ன? நரகம்‌ தானே.

ஒரு வழியாக வெள்ளம்‌ வடிந்தது. உயிரையும்‌, உடைமைகளையும்‌ பறி கொடுத்தபின்‌ எஞ்சியவர்‌.
ஒரு சிலரே. அவர்கள்‌ தங்களின்‌ பயிர்கள்‌ தண்ணீரில்‌ அழுகின என சிலரும்‌, வெயிலில்‌ வாடுகின்றன
என வேறு சிலரும்‌ தெரிவித்து அரசனிடம்‌ நிவாரண உதவி கோருகின்றனர்‌. விடுவார்களா அமைச்சர்கள்‌
இம்முறையும்‌ ஆலோசனைகளை வாரிவழங்கி அரசனை செயல்பட வைத்தனர்‌.

வாடிவதங்கும்‌ பயிர்களைக்‌ காக்க நிழல்‌ தரும்‌ மரங்களை வெட்டி, அம்மரத்தின் கிளைகளை வயல்களில்‌ பந்தலமைத்து அதன்‌ மீது பரப்பினான்‌ மன்னன்‌. அந்த நகர (நரக)த்தில் வசித்த ஒரு கவி எழுதியது என்றோ படித்தது. இன்று நினைவில் வந்ததால் எழுதினேன். வேறொன்றுமில்லை.

மூர்கே ராஜநி துர்நயாத்‌ புரவராத்‌ ஆகும்‌ நிஹந்தும்‌ கத:
ஸர்ப: தந்மஹீஷீம்‌ ததம்ச சசிவ: தஸ்யா: சிரோ: அச்சிநத்‌ |
த்ருஷ்டும்‌ ஸர்பவரம்‌ நிஹத்ய பவநம்‌ தக்த்வாபுரிம்‌ ஸர்வத:
சாந்த்யை தோயதடம்‌ விபஜ்ய கலமச்சாயாம்‌ கரோதி த்ருமை: ॥

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️☔☔☔☔☔☔☔☔🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️