ஸ்ரீமத் ஆதிவண்சடகோப யதீந்த்ர மஹாதேசிக வைபவசந்த்ரிகா|கருத்துரை- ஸ்ரீ உ.வே. APN ஸ்வாமி | Sri #APNSwami #Writes #Book

॥श्रीः॥

श्रीमते श्रीलक्ष्मीनृसिंहपरब्रह्मणे नमः॥
श्रीमदादिवण्शठकोपयतीन्द्र महादेशिकाय नमः॥
श्रीवीरराघवशठकोपयतीन्द्रमहादेशिकाय नमः।।
श्रीमते श्रीवण्शठकोप श्रीरङ्गनाथ यतीन्द्र महादेशिकाय नमः।।

ஸ்ரீ வீரராகவ யதீந்த்ர மஹாதேசிகரால் அனுக்ரஹிக்கப்பட்ட
ஸ்ரீமதாதிவண்சடகோப யதீந்த்ர மஹாதேசிக வைபவசந்த்ரிகா

(கருத்துரை- ஸ்ரீ உ.வே. APN ஸ்வாமி )

இன்று (சார்வரி- வைகாசி- 28) முதல் புரட்டாசி கேட்டை வரை தினந்தோறும் அனுபவிக்கலாம்

ச்லோகம் 1
श्रीमन्नृसिंहकारुण्य – सुधाब्धिमथितामृतम्।
आदिवण्शठकोपाख्य – योगिवैभवमास्वदे॥ १ ||
ஸ்ரீமந்ந்ருஸிம்மகாருண்ய ஸுதாப்திமதிதாம்ருதம்|
ஆதிவண்ஷடகோபாக்ய யோகிவைபவமாஸ்வதெ|| 1

லக்ஷ்மீ ந்ருஸிம்மனுடைய கருணை எனும் அமுதக் கடலைக் கடைந்ததினால் உண்டானது ஓர் அமுதம். அது ஸ்ரீமதஹோபிலமடத்தின் மூலபுருஷரான “ஆதிவண்சடகோப ஸ்வாமி” எனும் மகானின் வைபவம் என்கிற அமுதம். அத்தகய திவ்ய அமுதத்தை(வைபவத்தை) நாம் தினந்தோறும் பருகலாம்.

First Pattam Srimadh Azhagaiya Singar

ச்லோகம் 2
कल्यब्दे पादभावे बुधजनविदिते ख्यातसिद्धार्थिवर्षे
कन्याराशिं गतेऽर्के सितशरतिथियुग्ज्येष्ठ ऋक्षे धनुर्भे।
आत्रेयात् केशवार्यादजनि बहुगुणः श्रीनिवासप्रसादात्
कश्चित् श्रीवाससूरिर्निगमशिखरसत्सम्प्रदायाभिवृद्ध्यै॥ २ ||
கல்யப்தே பாதபாவே புதஜனவிதிதே க்யாதஸித்தார்திவர்ஷே
கன்யாராசிம் கதேர்கே ஸிதசரதிதியுக்ய்யேஷ்ட ருக்ஷே தனுர்பே|
ஆத்ரேயாத் கேசவார்யாதஜனி பஹுகுண: ஸ்ரீநிவாஸப்ரஸாதாத்
கச்சித் ஸ்ரீவாஸஸூரி: நிகம சிகரஸத் ஸம்ப்ரதாயாபி வ்ருத்த்யை|| 2

ஆத்ரேய கேசவாசார்யார் எனும் மகான் எழுந்தருளியிருந்தார். திருமலையப்பனான ஶ்ரீநிவாஸனின் அநுக்ரஹத்தில் ஒரு குழந்தை பிறந்தது. கலியுக ஆரம்பத்தில் ஸித்தார்த்தி வருடம், புரட்டாசி மாதம், சுக்லபஞ்சமி, கேட்டை நக்ஷத்ரம், தனுர் ராசியில், ஶ்ரீவேதாந்த தேசிகனின் ஸத்ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்காகவே ஸ்ரீநிவாஸன் எனும் அக்குழந்தை பிறந்தது.

Birth of Srinivasan

ச்லோகம் 3
सोऽयं पित्रा क्रमेणाऽक्षरपरिचयकृत्पञ्चसंस्कारयुक्तः
प्राधीताम्नाययुग्मः कणचरणकथामुख्यशास्त्रेषु दक्षः।
श्रीमद्वेदान्तसूरेरपरजनिमिवाऽऽख्यातुमाम्नायचूडा-
युग्मत्रय्यर्थसारादिषु निशितमतिर्विंशतौ वत्सरेषु॥ ३ ||
ஸோயம் பித்ரா க்ரமேணாக்ஷரபரிசயக்ருத்பஞ்சஸம்ஸ்காரயுக்த:
ப்ராதீதாம்னாயயுக்ம: கணசரணகதாமுக்யசாஸ்த்ரேஷு தக்ஷ:|
ஸ்ரீமத்வேதாந்தஸூரேரபரஜனிமிவாக்யாதுமாம்நாயசூடா
யுக்மத்ர்ய்யர்தஸாராதிஷு நிசித மதி: விம்சதௌ வத்ஸரேஷு|| 3

அந்த ஸ்ரீநிவாஸன் தன் தந்தையான கேசவாசார்யார் மூலமாக அக்ஷராப்யாஸத்தை தொடங்கினார். அவர் தந்தையார் பஞ்சஸம்ஸ்காரம் என்னும் ஸமாச்ரயணம் செய்து, வேதம், திவ்யபரபந்தம், ந்யாயம், வைசேஷிகம், முதலியவற்றை கசடறக் கற்பித்தார். “இவரென்ன ஸாக்ஷாத் வேதாந்த தேசிகரின் மறு அவதாரமோ!” என்று பார்ப்போர் ப்ரமிக்கும்படி, இருபது வயதிற்குள், அனைத்தும் அறிந்து சிறந்து விளங்கினார்.

ச்லோகம் – 4
वात्स्यान्नाडीशताख्यादथ वरदगुरोर्लब्धवेदान्तयुग्मे
तत्वोपायार्थनिष्ठे प्रथितगुणगणे पञ्चकालैकदक्षे।
भक्ते स्वप्ने कदाचिन्नयनपथगतोऽहोबिलेशो नृसिंहो
’नन्तुं मामेहि मेऽहोबिलमिह यतिराण्मां यजस्वे’ त्यवोचत्॥ ४ ||
வாத்ஸ்யான்னாடீசதாக்யாதத வரதகுரோர்லப்தவேதாந்தயுக்மே
தத்வோபாயார்தநிஷ்டே ப்ரதிதகுணகணே பஞ்சகாலைகதக்ஷே|
பக்தே ஸ்வப்னே கதாசித் நயனபதகதோஹோபிலேசோ ந்ருஸிம்ஹோ
’நன்தும் மாமேஹி மேஹோபிலமிஹ யதிராண்மாம் யஜஸ்வே’ த்யவோசத்|| 4

அக்காலத்தில், காஞ்சிபுரத்தில், மிகவும் ப்ரசித்தியுடன் விளங்கிய வாத்ஸ்ய வரதகுரு எனும் கடிகாசதம் அம்மாள் எனும் ஆசார்யரை ஸ்ரீநிவாஸன் அடைந்தார். அவரிடம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய க்ரந்தங்கள் அனைத்தையும் பயின்றார். உத்தம ஸ்ரீவைஷ்ணவனுக்கு உரிய லக்ஷணங்களுடன் திகழ்ந்த ஸ்ரீநிவாஸனின் கனவில், ஒரு நாள் ஸ்ரீஅஹோபில ந்ருஸிம்மன் ஸேவை சாதித்து “ஸ்ரீநிவாஸா, நீ அஹோபிலம் வந்து, ஸந்யாஸம் ஏற்று, என்னை ஆராதிப்பாயாக” என கட்டளையிட்டான்.

Srinivasan seeking Sri Gadikasathammal
Nrusimhan orders in the dream

ச்லோகம் – 5
धन्योऽस्मीत्यादधानश्शिरसि नियमनं श्रीहरेः सम्प्रबुद्ध्य
स्वाचार्ये स्वप्नवृत्तं वदति स च तथा कुर्विति प्रान्वगृह्णात्।
प्रस्थायाऽऽचार्यशिष्टः प्रथितमधिगतोऽहोबिलं जन्मनाशि-
न्याख्ये तीर्थेऽभिषिक्तश्चरितसुचरितः स्वप्नवृत्तं जहर्ष॥ ५ ||
தந்யோஸ்மி இதி ஆததான: சிரஸி நியமனம் ஶ்ரீஹரே: ஸம்ப்ரபுத்ய
ஸ்வாசார்யே ஸ்வப்ந வ்ருத்தம் வததி ஸ ச ததா குர்விதி ப்ரான்வக்ருஹ்ணாத்|
ப்ரஸ்தாய ஆசார்ய சிஷ்ட: ப்ரதிதமதிகதோ அஹோபிலம் ஜந்மநாசினீ-
ஆக்யே தீர்தே அபிஷிக்த: சரித ஸுசரித: ஸ்வப்நவ்ருத்தம் ஜஹர்ஷ|| 5

“ஆஹா! என்னே என் பாக்யம்!” என்று ஆனந்தமடைந்து, நரசிம்மனின் கட்டளையை சிரமேற்க்கொண்டார். துயிலெழுந்தவுடன், தனது ஆசார்யர் கடிகாசதம் அம்மாளிடம் நடந்தவைகளை தெரிவித்தார். ஆச்சர்யமடைந்த ஆசார்யரின் அனுமதி பெற்று, அஹோபிலத்தை வெகுவிரைவில் வந்தடைந்தார். அங்கு பவநாசினீ எனும் புண்ய நதியில் நீராடினார். தான் கண்ட கனவை எண்ணி எண்ணி பூரிப்படைந்தார்.

Srinivasan on his way to Ahobilam

ச்லோகம் – 6
एतस्मिन्नन्तरेऽहोबिलगतनृहरिर्योगिरूपोऽभ्युपेत्य
प्रेषं मन्त्रं प्रदाय प्रथितयतिमताचारमाचार्य चैनम्।
तत्राऽऽसन्नं त्रिदण्डादि च यतिनृपतेर्धारयित्वाऽस्य दास्यं
नाम प्रादाच्छठारिर्यतिरिति करगे शङ्कचक्रे च दीप्रे || ६ |
ஏதஸ்மிந் அந்தரே அஹோபிலகத ந்ருஹரி: யோகிரோப:அப்யுபேத்ய
ப்ரேஷம் மந்த்ரம் ப்ரதாய ப்ரதியதி மதாசாரம் ஆசார்ய ச ஏநம்|
த்த்ராஸந்நம் த்ரிதண்டாதி ச யதிந்ருபதே: தாரயித்வா அஸ்ய தாஸ்யம்
நாம ப்ராதாத் சடாரி: பதிரிதி கரகே சங்கசக்ரே ச தீப்தே|| 6

ஶ்ரீநிவாஸன் பவநாசினியில் நீராடிய பிறகு, அவரை அங்கு வரவழைத்த அஹோபில பெருமாள், ஒரு வயதான ஸந்யாஸி உருவம் கொண்டு அவரிடம் வந்தார். ஸ்ந்யாஸ தீக்ஷைக்கு உரிய மந்திரமான ப்ரேஷ மந்திரத்தை ஸ்ரீநிவாஸனுக்கு உபதேசித்து, அங்கிருந்த ராமானுஜர் சன்னிதியிலிருந்து த்ரிதண்டம், மற்றும் காஷாய(காவி) வஸ்திரத்தையும் அளித்தார். ஸந்யாஸ தீக்ஷையின்படி, “சடகோப யதி:” எனும் பெயரையும் சூடினார். மேலும் சுதர்ஸந, பாஞ்சஜ்ன்யங்களையும் கொடுத்து, மற்றவர்களைத் திருத்திப் பணிக்கொள்ளும்படியும் உபதேசம் செய்தார்.

Nrusimhan as an old Sanyasi doing upadesam to Srinivasan

ச்லோகம் – 7
लोकस्योज्जीवनाय प्रतिजनपदपूर्ग्राममाराध्य योगिं
चक्राङ्काध्यैः शठजिध्यतिपतिनिगमान्तार्यसिद्धान्तवृद्धिम्
मह्यां कुर्वित्यनुज्ञां शिरसि दधदयं श्रीनृसिंहं यतीन्द्रं
मूर्तेष्वेतासु कान्ते यजनविधिकृते सङ्ग्रहिष्येऽहमत्र॥ ७ ||
லோகஸ்யோஜ்ஜீவனாய ப்ரதிஜந பத பூ: க்ராமம் ஆராத்ய யோகிம்
சக்ராங்காத்யை: சடஜித்யதிபதி நிகமாந்தார்ய ஸித்தாந்த வ்ருத்திம்|
மஹ்யம் குரு இதி அனுஜ்ஞாம் சிரஸி தததயம் ஸ்ரீந்ருஸிம்ஹம் யதீந்த்ரம்
மூர்தேஷு ஏதாஸு காந்தே யஜனவிதிக்ருதே ஸங்க்ரஹிஷ்யே அஹம் அத்ர|| 7

“இனி இந்த உலகத்தின் நன்மையின் பொருட்டு, க்ராமம் க்ராமமாக என்னை (ந்ருஸிம்மனை) எழுந்தருள்ப் பண்ணிக்கொண்டு ஆராதனை செய்யும்” என்றார். “மேலும் ஆங்காங்கு மக்களுக்கு சங்கு சக்ரங்களினால் முத்ராதாரணம் செய்து அவர்களை திருத்திப் பணி கொள்ளும். நம்மாழ்வார், ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் முதலியவர்கள் வழி நடந்து, ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை நன்கு வளர்த்து ப்ரவச் செய்யும்” என்றார் பெருமாள். சடகோப ஜீயரும், பெருமாளின் நியமனத்தை தலைமேற்கொண்டார். ஆனால், ஒன்பது மூர்திகளான ஸ்ரீநரஸிம்மர்களில், யாரை ஆராதித்து தன்னுடன் எழுந்தருளப் பண்ணிக்கொள்வது என திகைத்தார்.

ச்லோகம் – 8
यात्रायां छत्रवाध्याध्युपकरणगजाश्वादि सिद्धेरुपायः
कोऽसावित्यादिपृष्टो नरहरिरवदद्धे शठारे यजस्व।
इज्यान्ते मत्प्रणामे तव सपदि भवेन्निर्णयोऽत्रत्यवर्गे
कञ्चिद्भागं प्रकल्प्य प्रतिजनपदपूर्ग्राममाराधयेन्माम्॥ ८ ||
யாத்ராயாம் சத்ரவாத்யாதி உபகரண கஜ அச்வாதி ஸித்தேருபாய:
கோSஸௌ இத்யாதி ப்ருஷ்ட: நரஹரி: அவதத் ஹே சடாரே யஜஸ்வ |
இஜ்யாந்தே மத்ப்ரணாமே தவ ஸபதி பவேத் நிர்ணய: அத்ரத்ய வர்கே
கஞ்சித்பாகம் ப்ரகல்ப்ய ப்ரதிஜனபதபூ: க்ராமம் ஆராதயேன்மாம்|| 8

“ஸந்யாஸியாகிய தான், பிக்ஷை எடுத்து கொண்டு தனியே சஞ்சாரம் செய்வது சுலபம். ஆனால் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு க்ராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் பவனி வருவது சுலபமல்லவே! அதற்குறிய பல்லக்கு, குடை, சாமரம், வாத்யம், கைங்கர்யம் செய்வோர், யானை, குதிரை என அனைத்தும் வேண்டுமே?” என்ன செய்வது என ஸ்வாமி திகைத்து நின்றார். அதற்கும் ஸ்ரீந்ருஸிம்மனே பதிலுரைத்தான்.
யோகிராஜரே! நீர் திகைக்க வேண்டாம். இன்றய தினம், அஹோபில நவமூர்திகளையும் ஒன்றுசேர்த்து ஆராதனை செய்யும் போது, எந்தபெருமாள் உம்முடன் வருகிறார் என்பது தெரியும்” என்றார்.
மேலும், இத்திருக்கோவிலுள்ள கைங்கர்யம் செய்யும் குழுவினிலிருந்து ஒரு சிறு குழுவைப் பிரித்து, பெருமாள் கைங்கர்யத்திற்கு உடன் அழைத்துச் செல்லலாம்” என்றார்.

ச்லோகம் – 9
प्रश्नान्यस्य चैवं शठरिपुसदसि श्रीमदाम्नायचूडा-
सूरिर्दध्यात्समाधिरिति मुनिमभिधायायमन्तर्हितोऽभूत्।
योगी मध्याह्नकृत्यं विधिवदथ सरस्युद्भवच्छिध्युपान्ते
क्वाप्यास्थाने नृसिंहास्तनुनवकयुतान् स्थापयन्नारराध॥ ९ ||
ப்ரச்நஸ்ய அந்யஸ்ய சைவம் சடரிபுஸதஸி ஸ்ரீமதாம்நாயசூடா-
ஸூரி: தத்யாத் ஸமாதி: இதி முநிமபிதாய அயம் அந்தர்ஹித: அபூத்|
யோகீ மத்யாஹ்ன க்ருத்யம் விதிவத் அத ஸரஸி உத்பவ: சித்யுபாந்தே
க்வாப்யாஸ்தாநே ந்ருஸிம்ஹா: தநு நவகயுதான் ஸ்தாபயந் ஆரராத|| 9

“இவைகள் தவிர ஸம்ப்ரதாய விஷயமான சில ஸந்தேகங்களுக்கு ஆழ்வார்திருநகரியில், நம்மாழ்வார் முன்னிலையில் ஸ்ரீமத் வேதாந்த தேசிகன் பதிலுரைப்பார்” என்றும் சொல்லியபின்பு, சந்யாஸி வடிவினில் வந்த நரசிம்மன் மறைந்தார்.
சடகோப ஜீயரும், மாத்யாஹ்னிகம் முதலிய ஸத்கர்மாக்களைச் செய்து முடித்து, பவநாசினீ கரையில் ஜ்வாலா, அஹோபில, மாலோல, க்ரோட, காரஞ்ச, பார்கவ, யோகானந்த, சத்ரவட, பாவந எனும் ஒன்பது மூர்திகளையும் ஒருசேர ஆராதித்தார்.

Jwala Ahobila Malola Kroda Karanja Bhargava
Yogananda Kshatravata Pavana – Nava Narasimha Murthy

ச்லோகம் – 10
इज्यान्ते प्रार्थ्य तिष्ठत्यखिलगुरुरथाष्टाङ्गुलो योगिवर्ये
श्लिष्टो वामाङ्कलक्ष्म्या लसदभयकरः शङ्कचक्राञ्चितान्यः।
तार्क्ष्योदूढांघ्रियुग्मः फणिनृपतिफणामण्डलच्छत्रितोर्ध्वा
मालोलः श्रीनृसिंहः सपदि यतिपतेर्हस्तयोरुपपात॥ १० ||
இஜ்யாந்தே ப்ரார்த்ய திஷ்டத்யகில குருரதாஷ்டாங்குலோ யோகிவர்யே
ச்லிஷ்டோ வாமாங்க லக்ஷ்ம்யா லஸதபயகர: சங்கசக்ராஞ்சிதாந்ய:|
தார்க்ஷ்யோதூடாங்க்ரியுக்ம: பணிந்ருபதி மண்டலச் சத்ரிதோர்வோ
மாலோல: ஸ்ரீந்ருஸிம்ஹ: ஸபதி யதிபதே: ஹஸ்தயோ: உத்பபாத|| 10

இவ்விதம், ஒன்பது நரசிம்மர்களையும் ஒருசேர ஆராதித்தார் ஸ்வாமி. அது சமயம், சிறிய மூர்தியானவரும், ஆனால் ப்ரபாவத்தில் மிகப்பெரியவரும், தன் இடதுகையால் மஹாலக்ஷ்மியை ஆலிங்கனம் செய்துகொண்டும், மேலிரண்டு கைகளில் சங்கம், சக்ரம் தரித்தும், அபயஹஸ்த்த்துடன் கூடியவரும், ஆதிசேஷன் குடைபிடிக்க, கருடன் மீது ஆரோகணித்தவருமான ஸ்ரீமாலோல லக்ஷ்மீந்ருஸிம்ஹன் யதிராஜன் திருக்கையில் தானே வந்து அமர்ந்தார்.

Srimadh Adi Van Satakopa Jeeyar

ச்லோகம் – 11
योगी चानन्दरूपामृतजलधिनिमग्नाखिलाङ्गो नृसिंहं
वक्षस्याधाय सार्धं निखिलपरिजनैर्भाष्यकारालये तम्।
आस्थाप्याराध्य तिष्ठत्यखिलबुधजना योगिवर्ये नृसिंहः
किं वाकार्षीदहो इत्यनुकलमतुलं विस्मयं प्राप्य नेमुः॥ ११ ||
யோகீ சானந்தரூபம்ருத ஜலதி நிமக்நாகிலாங்க்: ந்ருஸிம் ஹம்
வக்ஷஸ்யாதாய ஸார்தம் நிகில பரிஜனை: பாஷ்யகாராலயே தம்|
ஆஸ்தாப்யாராத்ய திஷ்டத்யகில புதஜநா: யோகிவர்ய ந்ருஸிம் ஹ:
கிம்வாகார்ஷீதஹோ இத்யநுகலம் அதுலம் விஸ்மயம் ப்ராப்ய நேமு: || 11

சடகோப ஸ்வாமியும் மிகுந்த ஆனந்தமாகிய அமுதக்கடலில்மூழ்கியவராய், தன் மார்புடன் அப்பெருமாளை அணைத்துக் கேட்டார். மேல் அஹோபிலத்தில், ஸ்ரீராமானுஜன் ஸந்நிதியில் அப்பெருமாளை எழுந்தருளப்பண்ணி ஆராதித்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள், “இதென்ன ஆச்சர்யம்! எம்பெருமான் இவரிடம் கொண்ட ப்ரேமை தான் என்ன!” என்று ஆச்சர்யமடைந்தனர்.

Jeeyar with Malola Nrusimhan
Malola Nrusimhan

ச்லோகம் – 12
ते चैनं श्रीनृसिंहं नियमनवदिहाराधयोज्जीवनाय
इत्यध्यैच्छन् श्रीशठारिर्यतिरपि सफलस्तत्समाराधनोत्कः।
तत्रत्यास्थानपालैः सविनयविनतैः सद्म शंकादिसर्वं
सन्न्यस्यास्मान् यथोक्ते हरिपरिचरणे सन्दिशत्यर्थितोऽभूत्॥ १२ ||
தே சைநம் ஸ்ரீந்ருஸிம்ஹம் நியமனவதிஹாராதயோஜ்ஜீவனாய
இத்யத்யைச்சன் ஸ்ரீசடாரிர்யதிரபி ஸபலஸ்தத்ஸமாராதநோத்க:|
தத்ரத்யாஸ்தாநபாலை: ஸவிநயவிநதை: ஸத்ம ஸங்காதிஸர்வம்
ஸன்யஸ்யாஸ்மாந் யதோக்தே ஹரிபரிசரணே ஸந்திசத்யர்திதோSபூத்|| 12

இவ்விதம் நடைபெற்ற ஆச்சர்யத்தைக் கண்ணுற்ற பக்தர்கள் “ஸ்வாமிந்! பெருமாளின் ‘நியமனப்படியே இங்கிருந்து எங்களை வாழ்வித்தருள வேண்டும்” என்று ப்ரார்த்தித்தனர். ஜீயரும், “ஸ்ரீந்ருஸிம்ஹாராதனம் தன்னுடைய பாக்யம்’ என்று இசைந்தார். அதேசமயம், அஹோபிலம் திருக்கோவில் நிர்வாகர்களும், பெருமாள் ஸந்நிதியின் திறவுகோலை ஸ்வாமியிடம் ஸமர்பித்து, “எங்களைத் தகுந்த கைங்கர்யத்தில் நியமித்து அநுக்ரஹிக்க வேண்டும்” என்று ப்ரார்தித்தனர்.

ச்லோகம் – 13
योगीशस्तत्रलक्ष्मीनृहरिनियमनं निर्णयस्तत्र कञ्चित्
कालं भोज्यादिभोगैर्नरहरिमजयत् स्वार्जितद्रव्यसिद्धैः।
तस्य स्वप्ने कदाचिच्छठजिदुपगतो मां प्रणन्तुं त्वमेही-
त्युक्त्वाऽगात्तञ्च वृत्तं नरहरिसविधे बोधयित्वा प्रतस्थे॥ १३ ||
யோகீசஸ்தத்ரலக்ஷ்மீந்ருஹரிநியமனம் நிர்ணயஸ்தத்ர கஞ்சித்
காலம் போஜ்யாதிபோகைர்நரஹர்மயஜத் ஸ்வார்ஜிதத்ரவ்யஸித்தை:
தஸ்ய ஸ்வப்நே கதாசித் சடஜித் உபகதோ மாம் ப்ரணந்தும் த்வமேஹீ-
த்யுக்த்வாSகாத்தஞ்ச வ்ருத்தம் ந்ருஹரிஸவிதே போதயித்வா ப்ரதஸ்தே|| 13

யோகிராஜரும் ஸ்ரீந்ருஸிம்மனுடைய நியமனத்தின் பேரில், தன் ஆச்ரமத்திற்குரிய தர்மங்களுடன் தன்னால் ஸம்பாதிக்கப்பட்ட திரவியங்களைக் கொண்டு பெருமாளை ஆராதித்தார். பின்பு ஒரு சமயம், ப்ரபன்னஜனஸந்தானகூடஸ்தரான ஆழ்வார், இவரின் கனவில் தோன்றி “ஆழ்வார் திருநகரிக்கு நம்மை சேவிக்க வாரும்” என நியமித்தார். தனக்கேற்பட்ட இக்கனவினை ஸ்வாமியும் நரஸிம்மனிடம் விண்ணப்பித்தார்.

Nammazhwar in Srimath Azhagiya Singar’s Dream

ச்லோகம் – 14
प्राक्सिद्धाज्ञानुसारान्निखिलपरिजने भागमेकं प्रगृह्य
प्रस्थाप्यान्दोळिकायान्नरहरिमखिलैर्वैष्णवैः श्रीनगर्यै।
गत्वाऽऽपूर्यस्थिताधीश्वरमभिविनमन्नादिनाथं शठारेः
सेवाऽलाभेन तप्तस्त्रिदिनमुपवसंस्तत्प्रबन्धेन दध्यौ॥ १४ ||
ப்ராக்ஸித்தாஜ்ஞாநுஸாராத் நிகிலபரிஜநே பாகமேகம் ப்ரக்ருஹ்ய
ப்ரஸ்தாப்யானந்தோளிகாயம் நரஹரிமகிலை: வைஷ்ணவை: ஸ்ரீநகர்யை|
கத்வா ஆபூர்யஸ்திதாதீஶ்வரமபி வினமன்னாதிநாதம் சடாரே:
ஸேவாலாபேன தப்த: த்ரிதினமுபவஸந் தத்ப்ரபந்தேன தத்யௌ|| 14

ஆழ்வாரின் நியமனப்படியே, ஸ்வாமியும், அஹோபில நரசிம்மனின் பரிஜனங்களில் (ஊழியர்களில்) ஒரு சிலரை அழைத்துக் கொண்டு, மாலோலனுடன் ஆழ்வார்திருநகரியை அடைந்தார். பொலிந்துநின்ற பிரானாம் “ஆதிப்பிரானை” நன்கு சேவித்தார். அதன் பின்னர், ஆழ்வாரை சேவிக்க விரும்பினார் ஜீயர். ஆனால் அங்கு ஆழ்வார் திவ்யமங்கள விக்ரஹம் இல்லை, “அய்யோ என்ன இது” என்று திகைத்து, மூன்று நாட்கள் ஆழ்வாரின் அவதார புளியமரத்தின் அடியிலேயே அமர்ந்து “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்ற ப்ரபந்தத்தை தொடர்ந்து ஜபம் செய்தார்.

Srimadh Adivan Satakopan at Thirunagari

ச்லோகம் – 15
ज्योतिरूपः कदाचिच्छठजिदपि यते स्वप्नदृष्टस्तमाह
प्राङ्मौनात्तिंत्रिणीस्थे मयि मधुरकविर्दूरतो वीक्ष्य तेजः।
आगत्यास्मत्प्रभावं व्यवृणुत हि तथाऽद्यापि मद्वैभवं तं
व्यङ्क्तुं प्राप्तोऽत्र देशाधिपतिरपि कुदृग्वश्यतामेति हन्त॥ १५ ||
ஜ்யோதிரூப: கதாசித் சடஜிதபி யதே ஸ்வப்நத்ருஷ்டஸ்தமாஹ
ப்ராங்மௌனாத்திந்த்ரிணீஸ்தே மயி மதுரகவி: தூரதோ வீக்ஷ்ய தேஜ: |
ஆகத்யாஸ்மத்ப்ரபாவம் வ்யவ்ருணுத ஹி ததாSத்யாபி மத்வைபவம் தம்
வ்யங்க்தும் ப்ராப்தோSத்ர தேசாதிபதிரபி குத்ருக்வச்யதாமேதி ஹந்த|| 15

“கண்ணிநுன் சிறுத்தாம்பு” எனும் திவ்யப்ரபந்தத்தை பன்முறை ஜபம் செய்து கொண்டிருக்கும்போது, ஒளிமயமான தேஜஸாக நம்மாழ்வார் அவரின் மனக்கண்ணீல் சேவையானார். “ஹே யோகீந்த்ர! எவ்விதம் என்னை தேஜோமயமாக தூரத்தில் கண்டு மதுரகவிகள் என்னிடம் வந்தாரோ! அவ்விதமே நீரும் வந்துள்ளீர். என் ப்ரபாவத்தை நீர் எங்கும் பரவச் செய்யவேண்டும். ஆனால் இந்த தேசத்தின் அரசன் வைஷ்ணவர்கள் அல்லாதவர்களால் மனது கலக்கப்பட்டிருக்கின்றான்.

King at Thirunagari meets Jeeyar

ச்லோகம் – 16
सोऽयं शैलाग्रखान्तेऽन्तरितमकृत मां तत्र लिङ्गप्रतिष्ठां
कृत्वा रुद्रस्य पूजां कुरुत इह ततस्तस्य तत्वं प्रदर्श्य।
प्राग्वान्मांस्थापयिष्यत्यहह खलु भवानित्यमुं ह्यन्वगृह्णात्
सध्यो हृष्टो यतीन्द्रः पुळकिततनुको स्वस्थवित्तो बभूव॥ १६ ||
ஸோSயம் சைலாக்ரகாந்தே அந்தரிதம் அக்ருதமாம் தத்ரலிங்கப்ரதிஷ்டாம்
க்ருத்வா ருத்ரஸ்ய பூஜாம் குருத இஹ தத: தஸ்ய தத்வம் ப்ரதர்ச்ய |
ப்ராக்வாந் மாம் ஸ்தாபயிஷ்யதி அஹஹ கலு பவாந் இத்யமும் ஹ்யந்வக்ருஹ்ணாத்
ஸத்யோ ஹ்ருஷ்ட: யதீந்த்ர: புளகித தநுக: ஸ்வஸ்த சித்தோ பபூவ || 16
“அந்த அரசன் மலையின் தாழ்வரையில் உள்ள மடுவில் என் விக்ரகத்தை எறிந்தான். பின்னர் என்னுடைய ஸந்நிதியில் சிவலிங்கங்களை ப்ரதிஷ்டை செய்து பூஜித்தும் வருகிறான். நீ அவ்வரசனை திருத்திப் பணிகொண்டு, மடுவிலிருந்து என்னை மீட்டெடுத்து, முன்போலவே மீண்டும் ஸந்நிதியில் என்னை ஸ்தாபிப்பீராக” என்றார் ஆழ்வார். இதைக் கண்டு சடகோப ஜீயரும் புளகாங்கிதம் அடைந்தவரானார்.

ச்லோகம் – 17
इत्थं चिन्तापरस्सन् यतिपतिरभितो ध्यायमानः शठारिं
कञ्चिद्देशाधिराजं नयनपथगतं ताम्रपर्णीतटस्थम्।
अद्राक्षीत्तेन योगी क इह रविमयोऽस्तीति विस्मित्य दृष्टः
सध्यो योगीश्वरेणाप्ययमपि नृपतिर्वीक्षितो वीतपापः॥ १७ ||
இத்தம் சிந்தாபரஸ்ஸந் யதிபதிரபிதோ த்யாயமாந: சடாரிம்
கஞ்சித்தேசாதிராஜம் நயநபதகதம் தாம்ரபர்ணீ தடஸ்தம் |
அத்ராக்ஷீத் தேந யோகீ க இஹ ரவிமயோ அஸ்தீதி விஸ்மித்ய த்ருஷ்ட:
ஸத்யோ யோகீச்வரேணாப்ய்யமபி ந்ருபதி: வீக்ஷிதோ வீதபாப: || 17

ஆழ்வார் தனக்குச் செய்த அனுக்ரஹத்தை எண்ணி எண்ணி ஆனந்தம் அடைந்தாலும், ஆழ்வாரை மடுவிலிருந்து எவ்விதம் மீட்டெடுப்பது? எனும் சிந்தையில் ஆழ்ந்திருந்தார் சடகோபஜீயர். அப்பொழுது நதிக்கரைக்கு வந்த அந்த தேசத்து அரசன், ஜீயரின் தேஜஸைக் கண்டு வியப்பெய்தினான். அதே சமயம் ஜீயரும் தனது திருக்கண்களினால் அவனை கடாக்ஷித்தார். அதனால் அந்த அரசனின் துர்குணங்களாகிர பாபம் அப்பொழுதே அவனை விட்டு நீங்கியது.

ச்லோகம் – 18
तत्ते जिज्ञासुरेनं सविनयविनतः शिष्यवृत्या प्रपन्नः
तस्मिन् कारुण्यवश्यः शठरिपुयतिरप्यात्मतत्वादिरीतम्।
संगृह्योक्त्वातिभक्तं सिनिशितधिषणं विष्णुतद्भक्तपूजा
सापेक्षञ्चाततानक्षपितकलुषधीः सोऽपि दास्यं ययाचे॥ १८ ||
தத்தே ஜிஜ்ஞாஸுரேநம் ஸவிநயவிநத: சிஷ்ய வ்ருத்யா ப்ரபந்ந:
தஸ்மிந் காருண்யவச்ய: சடரிபுயதிரபி ஆத்மத்தவாதி ரீதிம்|
ஸம்க்ருஹ்யோக்த்வாதி பக்தம் ஸுநிசித திஷணம் விஷ்ணு தத் பக்த பூஜா
ஸாபேக்ஷஞ்சாததாந க்ஷபித கலுஷதீ: ஸோபி தாஸ்யம் யயாசே|| 18

தன்னிடம் விஷயங்களை அறிவதில் ஆவல் கொண்டவனாகவும், விநயத்துடன் கூடியவனாயும், சிஷ்யனாக சரணடைந்தவனுமான அந்த அரசனிடம், யோகிராஜர் கருணை கொண்டார். பின்னர் ஆத்ம தத்வங்களையும், ஆதிப்பிரானின் மேன்மைகளையும், அவனன்றி வேறோர் தெய்வம் புகவில்லை என்பதனையும் உபதேசம் செய்தார். மஹாவிஷ்ணு, அவரின் பக்தர்களான ஆழ்வார்களின் பெருமைகள், பூஜிக்கும் விதம், இதையெலாம் ஸ்வாமியின் மூலமாக உபதேசம் பெற்ற அரசன், மனம் தெளிந்து ஸ்வாமிக்கு தாஸனாக விரும்பினான்.

King becoming a Shishyan

ச்லோகம் – 19
स्वाम्यप्येनं समीक्ष्य क्षितिपमिह पुरा मायिसंसर्गतस्त्वं
कूठस्थं श्रीशठारिं नगशिखरगताऽगाधखाते निपात्य।
तत्स्थाने रुद्रलिङ्गावसथमपि विधायात्र शैलाधिवासान्
चाकार्षीत्तत्वधीह प्रकुपितहृदयो विष्णुरास्ते नियन्ता॥ १९ ||
ஸ்வாம்யப்யேநம் ஸமீக்ஷ்ய க்ஷிதிபதிமிஹபுரா மாயிஸம்ஸர்கத: த்வம்
கூடஸ்தம் ஸ்ரீசடாரிம் நகசிகரகதாSகாதகாதே நிபாத்ய|
தத்ஸ்தாநே ருத்ர லிங்காவஸதமபி விதாயாத்ர சைலாதிவாஸாம் ச
அகார்ஷீத் தத்வதீஹ ப்ரகுபித ஹ்ருதய: விஷ்ணுராஸ்தே நியந்தா|| 19

தன்னை வந்து வணங்கியவனான அந்த அரசனைப் பார்த்து கருணை உள்ளம் கொண்ட ஜீயர் இவ்விதம் கூறினார். “ஹே ராஜன்! நீ மாயிகளான விஷ்ணு விரோதிகளுடன் சேர்ந்து, நம் ஆழ்வாரை மடுவில் எறிந்து விட்டாய். அது தவிரவும், ஆழ்வார் இருந்த இடத்தில் லிங்கங்களையும் நிறுவியுள்ளாய். அதனால், எல்லோருக்கும் மேம்பட்ட தலைவனான ஆதிப்பிரான் மிகுந்த கோபத்துடன் உள்ளார்”.

ச்லோகம் – 20
तस्मात्दुत्पाट्य लिङ्गं परतटमुपनीयादिनाथेन साकं
कूटस्थः स्थापयित्वा शठजिदिह यथापूर्वमाराध्यतां स्वैः।
तिन्त्रिण्यां मण्टपोद्धं प्रतिकृतमुपरि त्वस्मदीयां च कृत्वा
नीत्वा नित्योत्सवादीन् प्रमुदितहृदयं कुर्वतीहान्वशात्तम्॥ २० ||
தஸ்மாத் உத்பாட்ய லிங்கம் பரதடமுபநீய ஆதிநாதேன ஸாகம்
கூடஸ்த: ஸ்தாபயித்வா சடஜிதிஹ யதா பூர்வமாராத்யதாம் ஸ்வை:|
திந்த்ரிண்யம் மண்டபோத்தம் ப்ரக்ருதிமுபரி த்வஸ்மதீயாம் ச க்ருத்வா
நீத்வா நித்யோத்ஸவாதீன் ப்ரமுதித ஹ்ருதயம் குர்விதீஹான்வசாத்தம்|| 20

“ஆகையால் நீ அந்த சிவலிங்கங்களை அப்புறப்படுத்தி. ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தரான ஸ்வாமி நம்மாழ்வாரை முன்பு போலவே ஆதிநாதன் ஸந்நிதியில் ஸ்தாப்பிப்பாயாக. மேலும் திருப்புளியமரத்தினடியில், ஆழ்வாருக்காகத் தனியான ஒரு மண்டபம் கட்டி வைத்து, அதில் எம்முடைய ப்ரதிமையை வடிப்பாயாக. இனி பெருமான், ஆழ்வார்களுடைய உற்சவங்களை எவ்வித விக்னமும் இல்லாமல் குறைவற நடத்தி வருவாயாக” என்றார்.

ச்லோகம் – 21
द्रागुत्थायैष भूपो मम सकलमघं सैष विष्णुः सहिष्णुः
स्यादित्यस्यांघ्रिपद्मे प्रपदनमिह मेऽनुग्रहीतव्यमित्थम्।
स्वाम्यङ्घ्रच्योः प्रण्यपप्तत् स च तदभिमतं प्रासदद्भूपतिश्च
स्वामिन् धन्योऽस्मि शैलं पदकमलमलङ्कारयत्वित्ययाचत्॥२१ ||
த்ராகுத்தாயைஷ பூபோ மம ஸகலமகம் ஸைஷ விஷ்ணு: ஸஹிஷ்ணு:
ஸ்தாதித்யஸ்யாங்க்ரிபத்மே ப்ரபதநமிஹ மே அநுக்ரஹீதவ்யமித்தம்|
ஸ்வாம்யங்க்ர்யோ: ப்ரண்யபப்தத் ஸ ச ததபிமதம் ப்ராஸதத்பூபதிச்ச
ஸ்வாமின் தன்யோSஸ்மி சைலம் பதகமலமலங்காரயத்விதி அயாசத்|| 21

சடகோப ஜீயரின் திருவடிகளில் விழுந்து பணிந்த அரசன் அவரின் நியமனத்தை தலையால் ஏற்றான். மேலும் “எனது பாபங்களை எம்பெருமான் பொறுக்க வேண்டும் என்றால் இவரது திருவடிகளை பற்றுவது ஒன்றுதான் வழி” என்றுணர்ந்தான். “ஜீயரே, அடியேனை ஆட்கொண்டருளும்” என்று அவரை பணிந்து வைஷ்ணவ தீக்ஷை (ஸமாச்ரயனம்) பெற்று பரண்யாஸமும் (ஆத்மஸமர்பணம்) செய்து கொண்டான். இப்படி தனது பிறவியை பயனுடைத்தாக்கின அரசன், ஆழ்வாரைத் தேட மலையருகில் மடுவிற்குச் செல்ல ஜீயரை ப்ரார்த்தித்தான்.

Search is on to find Azhwar
Azhwar emerges from the water

ச்லோகம் – 22
स्वामी भूपं ससेनं नगतटमनयत्तत्र शैलाग्रपूरे
ध्यात्वा गाथाप्रबन्धं मधुरकविकृतं भक्तिभूम्ना ययाचे।
तावत् श्रीमान् प्रसन्नो वकुलसरधरो देवखाताप्लुतोऽभूत्
तीरस्थो बालवत्तं यतिरपि जगृहेऽऽश्लेषयञ्चोरसीमम्॥ २२ ||
ஸ்வாமீ பூபம் ஸ்ஸேநம் நகதடமநயத் தத்ர சைலாக்ரபூரே
த்யாய்வா காதா ப்ரபந்தம் மதுரக்வி க்ருதம் பக்தி பூம்நா யயாசே |
தாவத் ஸ்ரீமாந் ப்ரஸந்ந: வகுலஸரதர: தேவகாதாப்லுதோபூத்
தீரஸ்த: பாலவத்தம் யதிபதி ஜக்ருஹே ஆச்லேஷயச்சோரஸீமம் || 22

இவ்விதம் தன்னையடைந்து உத்தம வைஷ்ணவனாக திருந்தின அந்த அரசனுடன் கூடிய சடகோபயதி, விரைந்து மலையின் தாழ்வரையில் மடுவை அடைந்தார். அதன் கரையில் அமர்ந்து மதுரகவிகள் அருளிய கண்ணினுன்சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை ஜபம் செய்தார். பூரண ஜல ஸம்ருத்தி உடைய அம்மடுவின் ஆழத்தில் புதைந்து கிடந்த ஆழ்வாரின் விக்ரஹம் வெளிப்பட்டது. என்ன ஆச்சர்யம்; தந்தையை நோக்கி தவழும் குழந்தை போன்று ஆழ்வார் நம் ஜீயரை வந்தடைந்தார்.

Jeeyar receiving Nammazhwar

ச்லோகம் – 23
मूर्ध्न्यप्याघ्राय मोदात्कनकमयमहान्दोलिकायां निवेश्य
श्रुत्यन्तद्वन्दवपारायणमुखमनिशं हृध्यवादित्रघोषम्।
स्वावासं सन्निनाय क्षितिभृदपि निशि स्वप्नगाऽनेकसिंहैः
तद्देशाक्रान्तशैवान् बहुविधमृदितान् विद्रुतान्वीक्ष्य दृष्टः॥२३ ||
மூர்த்ந்யாக்ராய மோதாத் கநகமய மஹா ஆந்தோலிகாயாம் நிவேச்ய
ச்ருத்யந்த த்வந்த பாராயணமுகமநிசம் ஹ்ருத்ய வாதித்ர கோஷம் |
ஸ்வாவாஸம் ஸந்நிநாய க்ஷிதிப்ருதபி நிசி ஸ்வப்நகாநேகஸிம்ஹை:
தத்தேசாக்ராந்த சைவாந் பஹுவிதம்ருதிதாந் வித்ருதாந் வீக்ஷ்ய ஹ்ருஷ்ட: || 23

தன்னை வந்தடைந்த ஆழ்வாரை வாரியெய்ந்து உச்சிமுகர்ந்து களித்தார் ஜீயர். பொன்மயமான பல்லாக்கில் முன்னும் பின்னும் உபயவேதகோஷ்டிகளுடன் வாத்தியங்கோஷங்களுடன் ஆழ்வாரை கோவிலுக்குள் எழுந்தருளப் பண்ணி, முன்பு போன்றே மீண்டும் சன்னிதியை நிர்மாணித்தார்.
அத்தேசத்து அரசன் (ஜீயரின் சீடன்) மீது படையேடுத்து வந்த எதிரிகள் கனவில் அன்றிரவு பல சிம்மங்கள் தோன்றி அவர்களை விரட்டின. பயந்த அவர்கள் அரசன் மீது படையேடுக்காமல் ஓடிவிட்டனர். ஆசார்யரான ஜீயரின் அருளையும், பெருமைதனையும் எண்ணி அரசன் மகிழ்ச்சியடைந்தான்.

Nammazhwar

ச்லோகம் – 24
स्वामी चैतन्निशम्य प्रमुदितहृदयः श्रीशठारिं समर्प्य
श्रीशे तत्रादिनाथे विकसितवदनेनामुनेत्थं बभाषे।
हे योगिन् श्रीशठारिस्त्वयि मुदितमना यत्त्वयाऽऽस्माकसूरिः
प्रासूतः सैतदादिप्रथितबुधजनैः कथ्यतां तेन नाम्ना॥ २४
ஸ்வாமீ சைதந்நிசம்ய ப்ரமுதிதஹ்ருதய: ஸ்ரீசடாரிம் ஸமர்ப்ய
ஸ்ரீசே தத்ராதிநாதே விகஸிதவதநேநாமுநேத்தம் பபாஷே|
ஹே யோகின் ஸ்ரீசடாரிஸ்த்வயி முதிதமனா யத்த்வயாSSஸ்மாகஸூரி:
ப்ராஸூத: ஸைததாதிப்ரதிதபுதஜனை: கத்யதாம் தேந நாம்னா|| 24

இவ்விதம் நம்மாழ்வாரை (மடுவிலிருந்து ஆழ்வாரை மீட்டெடுத்தபோது “நம் ஆழ்வார், நம் ஆழ்வார்” என ஜீயர் அழைத்ததிலிருந்து ஆழ்வார் நம்மாழ்வாரானார் என்பர் பெரியோர்) மீண்டும் திருப்புளி அடியில் சன்னிதியில் எழுந்தருளப் பண்ணிவைத்ததைக் கண்டு ஆதிநாதனும் அகம் மகிழ்ந்தான். நம் சடகோப ஜீயருக்கு அருளப்பாடிட்டு ஶ்ரீசடாரி சாதித்தருளினான். தான் உகக்கும் கைங்கர்யம் செய்ததினால் “ஹே யோகிந்! இன்று முதல் நீர் வண் சடகோப ஜீயர் என அழைக்கப்படுவீர்” என்றான்.

ச்லோகம் – 25
किञ्चैतत्सूरिरूपं गतधनमिह ते दातुरौदार्यलक्ष्म
श्रीवण्पूर्व: शठारिर्मुनिरिति भवतो नाम चादान्मुदेति |
इत्थं श्रीवण्शठारि: सहरिबहुमत: पाञ्चरात्रक्रमेण
श्रीमत्सूरे: प्रतिष्ठां विदधदनुदिनाराधनादीन् वितेने || २५ ||
கிஞ்ச ஏதத் ஸூரிரூபம் கத தநம் இஹதே தாது: ஔதார்யலஷ்ம
ஸ்ரீவண் பூர்வ: ஶடரிபு முநி: இதி பவதோ நாம ச ஆதாந் முதேதி ।
இத்தம் ஸ்ரீவண் ஶடாரி: ஸஹரி பஹூமத: பாஞ்சராத்ர க்ரமேண
ஸ்ரீமத் ஸூரே: ப்ரதிஷ்டாம் விததத் அநுதிந ஆராதநாதீந் விதேநே ॥ 25

இவ்விதம் இழந்த செல்வமான ஆழ்வாரை மீட்டெடுத்த காரணத்தினால் “வண் ஶட கோப ஜீயர்” எனும் பிருதம் ஆதிநாதனாலே ஆனந்தத்துடன் அளிக்கப்பட்டது. இவ்விதம் எம்பெருமானால் பகுமானம் (கௌரவம்) பெற்ற ஜீயரும் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி நம்மாழ்வாரின் சந்நிதியை மீண்டும் நிர்மாணித்து, ப்ரதிஷ்டை செய்வித்து, நித்ய ஆராதனங்கள் குறைவற நடைபெற வழிவகுத்தார்.

ச்லோகம் – 26
पश्र्चात्सूरे: कदाचित्सदसि परिजनै: सेवमाने यतीन्द्रे
सूरि: साक्षादमुं वण्शठरिपुमवदन्मन्निवासे यथावत् |
तिष्ठत्येवान्यदैवं झटिति परिहरं स्थानलाभे यतेथा
इत्युक्तो वण्शठारि: सपदि नृपतिना लिङ्गमन्यत्र निन्ये || २६ ||
பஶ்சாத் ஸூரே: கதாசித் பரிஜநை: ஸேவமாநே யதீந்த்ரே
ஸூரி: ஸாஷாத் அமும் வண் ஶடரிபுமவதந் மந்நிவாஸே யதாவத்।
திஷ்டத்யேவாந்யதைவம் ஜடிதி பரிஹரம் ஸ்தாந லாபே யதேதா
இத்யுக்த: வண் ஶடாரி: ஸபதி ந்ருபதிநா லிங்கம் அந்யத்ரநிந்யே॥ 26

இப்படியாக திருவாராதனங்கள் குறைவற நடைபெற்றுக்கொண்டு வந்த சமயம் ஒரு நாள் “நம்மாழ்வார் ஜீயருக்கு மீண்டும் ஆணையிட்டார். அதாவது ஏற்கனவே ஆதிநாதன் சன்னிதியில் ஆக்ரமித்து வைக்கப்பட்டிருக்கும் லிங்கங்களை அப்புறப்படுத்தவேண்டும்” என்று. அதன்படி வண் சடகோப ஜீயரும் அரசன் மூலமாக அந்த லிங்கங்களை வேறிடத்தில் நிலை நிறுத்தினார். (அவற்றிற்குரிய கோவில்களில் வைத்தார் என்பது பொருள்.)

ச்லோகம் – 27
स्वस्थाने स्थापयित्वा शठरिपुमधिपो मण्टपं स्वाम्यभीष्टं
कृत्वा तत्रोपरीमं प्रतिकृतिमयमासादयञ्चैतदग्रे |
इत्थं जाते कदाचिच्छठरिपुमुनिरप्यादिनाथं शठारिं
नत्वाऽऽदिष्ठत्तदासाववददिदममुं वण्शठारिं वरेण्यम् || २७ ||
ஸ்வஸ்தாநே ஸ்தாபயித்வா சடரிபுமதிப:
மண்டபம் ஸ்வாம்யபீஷ்டம்
க்ருத்வா தத்ரோபரீமம் ப்ரதிக்ருதி மய
மாஸாதயச் சைததக்ரே|
இத்தம் ஜாதே கதாசித் சடரிபுமுநிரபி
ஆதிநாதம் சடாரிம்
நத்வா ஆதிஷ்டத்ததாஸாவவததித மமும்
வண் சடாரிம் வரேண்யம்|| 27
ஆழ்வார் சன்னிதியில் அழகியதொரு பெரிய மண்டபமொன்றை நிர்மானித்தான் அரசன். தனக்கு தர்மவழி காட்டியருளிய தனது ஆசார்யர் வண் சடகோப ஜீயரின் அழகிய திருவுருவத்தையும் அம்மண்டப தூணில் செதுக்கினான். ( இன்றும் ஆதிநாதன் சன்னிதி மண்டபத் தூணில் ஆதி வண் சடகோப ஸ்வாமியின் திருவுருவச்சிலையை சேவிக்கலாம். ) அதன் பின்னர் மீண்டும் ஆழ்வாரின் மிகப் பெரும் அநுக்ரகம் ஜீயருக்குக் கிடைத்தது. அதன் பெருமையை அடுத்த ஶ்லோகத்தின் அர்தத்தில் காணலாம்.

ச்லோகம் – 28
हे योगिन् मे यथावन्निलयकलनया लक्ष्मणार्येष्टकृत्वात्
सोऽयं ते पारितोषाध्युपहृतिरिति तेनाखिलं साधयेथा: |
इत्युक्त्वा स्वे कराग्रे विधृतसितगरुन्मुद्रिकां सम्प्रसाध्य
स्वस्थामाचार्यताञ्चाखिलविषयजुषां तेऽददामित्यवोचत् || २८ ||
ஹே யோகிந் மே யதாவத் நிலயகலநயா
லஷ்மணார்யேஷ்ட க்ருத்வாத்
ஸோயம் தே பாரிதோஷாத் உபஹ்ருதிரிதி
தேநாகிலம் ஸாதயேதா:|
இத்யுக்த்வா ஸ்வேகராக்ரே வித்ருத
ஸிதகருத் முத்ரிகாம் ஸம்ப்ரஸாத்ய
ஸ்வஸ்தாம் ஆசார்யதாஞ்சாகில விஷய
ஜூஷாம் தே அதாதித்யவோசத்|| 28
“வண் சடகோப ஜீயரே!” என ஆதரவுடன் அழைத்தார் ஆழ்வார். “எம்மை மீண்டும் திருப்புளியடியில் ஸ்தாபனம் செய்ததாலும், பகவத் ராமாநுஜரைப் போன்று கொண்டாடத் தக்கவராகிறீர்” என்று கூறின ஆழ்வார் மற்றுமொரு வெகுமதியும் ஜீயருக்கு அளித்தார். தனது கை நுனியில் (அதாவது சுண்டு விரலில் அணிந்திருந்த) தனது ஹம்ஸமுத்திரை மோதிரத்தை ஜீயருக்கு பரிசளித்தார். இன்றும் நம் ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கும் ஆதிவண் சடகோப ஸ்வாமியின் சுண்டு விரலில் ஹம்ஸமுத்திரை அமைந்துள்ளதைக் காணலாம். மேலும் நமது ஸ்ரீமதழகிய சிங்கர்கள் பட்டாபிஷேக தினத்தன்று சுண்டு விரலில் ஹம்ஸமுத்திரை மோதிரத்தைச் சாற்றிக் கொள்வதும் வழக்கம். “ஆழ்வார் தம் க்ருபையான ஹம்ஸமுத்திரை வாழியே” என ஜீயரின் வாழி திருநாமம் அமைந்துள்ளதைக் காண்க.

Hamsa Mudra
Srimadh Adivan Satakopa Jeeyar – First Pattam Srimadh Azhagiya Singar

किञ्च श्रीमान्नृसिह्मस्तव शठरिपुरित्याह नामादिनाथ:
कारुण्याद्वण्शठारिर्मुनिरिति विदधे नाम मह्यं त्वया तु |
अस्मत्सूरित्यभिख्याऽक्रियत तदिह तेऽप्यादिनाथस्य नाम्ना
युक्त्वादिर्वण्शठारिस्त्विति पदमददामेत्यतो वृद्धिकृत्यम् || २९ ||
கிஞ்ச ஸ்ரீமாந் ந்ருஸிம்ஹ: தவ சடரிபு: இத்யாஹ நாமாதிநாத:
காருண்யாத் வண்சடாரி: முநிரிதி விததே நாம மஹ்யம் த்வயாது ।
அஸ்மத் ஸூரி இத்யபிக்யா ஆக்ரியத ததிஹ தே‌‌‌‌‌Sவி ஆதிநாதஸ்ய நாம்நா
யுக்த்வாதி: வண்சடாரி: து இதி பரமதாத் ஏத்யதோ வ்ருத்தி க்ருத்யம் ॥
29

ஹே ஜீயரே! முதலில் ஸ்ரீந்ருஸிம்ஹன் உமக்கு “சடகோபஜீயர்” எனும் பிருதம் அளித்தான்.பின்னர் வண்சடகோபஜீயர் எனும் பிருதம் பெற்றீர். “நம் ஆழ்வார்” என்று நம்மைக் கொண்டாடியும், வண்சடகோபஜீயர் எனும் பிருதமும் பெற்ற நீர் ஆதிநாதனின் “ஆதி” எனும் பிருதமும் பெற்று இன்று முதல் “ஆதிவண் சடகோபஜீயர்” என அழைக்கப்பட்டு, ஸம்ப்ரதாயத்தை பிரசாரம் செய்வீர் என்றார் ஆழ்வார்.

सोऽयं वेदान्तसूरि: श्रुतिसुखसुवचोभूतगाथासहस्रं
व्याख्यातुं भावरत्नावळि-तदुपनिषत्सारसंज्ञौ निबन्धौ |
कृत्वासम्यङ्मदीयं व्यवृणुत हृदयं मामकं चार्यकञ्च
प्रख्याप्याधिक्षिपन् सन् परमतमखिलं दूषणाख्ये निबन्धे || ३० ||
ஸோsயம் வேதாந்த ஸூரி: ச்ருதி ஸுக
ஸுவசோ பூத காதா ஸஹஸ்ரம்
வ்யாக்யாதும் பாவ ரத்நாவளி ததுபநிஷத்
ஸார ஸம்ஞ்ஜெள நிபந்தெள।
க்ருத்வா ஸம்யக் மதீயம் வ்யவ்ருணுத
ஹ்ருதயம் மாமகம் சார்யகஞ்ச
ப்ரக்யாப்யாதிக்ஷிபந் ஸந் பரமதமகிலம்
தூஷணாக்யே நிபந்தே।। 30

[இனி வேதாந்த தேசிக வைபவத்தைக் கூறி அவருக்கு ஒரு சந்நிதி எழுப்பவேணுமென்று ஆழ்வாரின் நியமனம் காட்டப்படுகிறது.]

“ஆதிவண் சடகோப ஜீயரே!” ஸ்ரீமந் நிகமாந்த மஹாதேசிகன் நமது (ஆழ்வாரின்) திருவாய்மொழி வ்யாக்யானமாகிய “த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளீ, மற்றும் “த்ரமிடோபநிஷத் ஸாரம்” முதலியவற்றை இயற்றியும், “சததூஷணீ” எனும் க்ரந்தம் மூலமாக ஸித்தாந்தத்தை நன்கு நிலைநிறுத்திய வரன்றோ!

Swami Desikan

तत्तस्यार्चाप्रतिष्ठां सपदि वितनुतादस्तु नित्योत्सवादि:
सर्व: कार्योऽस्मदर्चासहितमिति नियम्यादृतो वण्शठारि: |
विस्मित्याहंदधोऽहं दध इति शिरसाऽऽज्ञां वहन् ताम्रपर्णीं
संशोष्यान्तस्थधातुप्रकरमयतया दिव्यमूर्तिं प्रचक्रे || ३१ ||
தத்தஸ்யார்சாப்ரதிஷ்டாம் ஸபதி
விதனுதாத் அஸ்து நித்யோத்ஸவாதி:
ஸர்வ: கார்ய: அஸ்மத் அர்சாஸஹிதம்
இதி நியம்யாத்ருதோ வண் சடாரி: ।
விஸ்மித்யாஹம் ததோஹம் தத இதி
சிரஸா ஆஜ்ஞாம் வஹந் தாம்ரபர்ணீம்
ஸம்சோஷ்யாந்தஸ்த தாது ப்ரகரமயதயா
திவ்ய மூர்திம் ப்ரசக்ரே ॥ 3
1

[சென்ற ஸ்லோகத்தின் தொடர் அர்தம்:]
“இவ்விதம் நமக்கு அபிதமான வேதாந்த தேசிகனின் அர்சாவிக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்து, நம்முடன் கூடவே நித்யோத்ஸவம் முதலிய அனைத்தையும் முறையாகச் செய்து வருவீர்” என்றார் ஆழ்வார். ஜீயரும் “நாயிந்தே” என மகிழ்ந்து தாம்ரபர்ணியிலுள்ள தாதுப் பொருட்களைக் கொண்டு வேதாந்த தேசிகனின் அழகிய அர்சாவிக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்தார்.

Picture Courtesy : Sri Nrusimha Priya (Art by Chari & Concept by APN Swami), Internet Websites

Watch this space for update of the rest of the slokam…………To be Continued………………