Sri APN Swami’s #Shishya Writes #Trending | ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் | Trending Article

Azadi ka Amrit Mahotsav – ஸ்வதந்திர தின அம்ருதோற்சவம் – आजादी का अमृत महोत्सव – 75th Indian Independence Day Special Article –  ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின் படி எழுதியது.

கச்யப ப்ரஜாபதிக்கு கத்ரு, விநதை என்று இரண்டு மனைவியர் இருந்தனர். அதில் கத்ருவுக்கு பாம்புகள் பிள்ளைகளாகப்  பிறந்தனர். விநதைக்கு ஊனமுற்று பிறந்த பிள்ளையான அருணன், பிறந்தவுடனேயே சூரியனுக்கு ஸாரதியாகச் சென்று விட்டான்.

கத்ரு விநதைக்குள்ளே அடிக்கடி சர்ச்சைகள் உண்டாகும். ஒரு சமயம், இந்திரனுடைய குதிரையான உச்சைச் சிரவஸின் நிறம் குறித்து இவர்களுக்குளே விவாதம் மூண்டது.   உச்சைச் சிரவஸ் முழுவதும் வெண்மை என்று விநதை கூறினாள். உச்சைச் சிரவஸ் உடலில் கருமை நிறமும் உள்ளது என்று கத்ரு வாதித்தாள். மறுநாள் குதிரையை முழுவதுமாகப் பார்த்த பின் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். பந்தயத்தில் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு ஆயுள் முழுவதும் அடிமையாக இருக்க வேண்டும் என்று பந்தயமும் வைத்துக்கொண்டனர்.

கத்ரு தன் பாம்பு பிள்ளைகளில் ஒருவனான கருத்த கார்கோடகனை அழைத்து, உச்சைச் சிரவஸ் வால் பகுதியில் சுற்றிக்கொள்ளும் படி சொன்னாள்.

மறுநாள் விநதையும் கத்ருவும் தூரத்திலிருந்து பார்த்த போது, குதிரையின் வால் பகுதி கருமை நிறமாக தோற்றமளித்தது. கொடிய குணம் கொண்டவளான கத்ரு, வஞ்சனையினால் வென்றாள்.  ஒப்பந்தப்படி தோற்ற விநதை, கத்ருவிற்கும் அவள் பிள்ளைகளுக்கும் அடிமையானாள்.

காலம் கனிந்தது. விநதைக்குப் பிறந்தவனான வைநதேயன்(கருடன்), தன் தாயை அடிமை தன்மையிலிருந்து மீட்க விரும்பினான். அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற என்ன செய்ய வேண்டும் என்று கத்ருவிடம் கருடன் வினவினான்.

பேராசை கொண்ட கத்ருவும் அவள் பிள்ளைகளான பாம்புகளும் தேவலோகத்து அம்ருதத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் விடுதலை தரலாம் என்றனர்.

தாயின் ஆசி பெற்று, தேவலோகம் சென்ற கருடன் தடைகளைத் தகர்ந்து எரிந்து அம்ருத கலசத்தை தேவர்களிடமிருந்து கை பற்றினான்.

கருடனிடம் தோல்வியுற்ற தேவர்கள், கொடிய பாம்புகள் அம்ருதத்தை உண்டு சாகா வரம் பெற்றதென்றால், மனித குலத்திற்கு ஆபத்து நேரிடும் என்பதை கருடனுக்குப் புரியவைத்தனர். அவர்கள் ஆலோசனை படி  ஒரு நாழிகை மட்டும் அம்ருத கலசத்தை பூலோகத்தில் வைத்துக்கொள்ள கருடன் ஸம்மதித்தான்.

கருடனால் கொண்டுவரப்பட்டு குளத்தின் கரையில் வைக்கைப்பட்ட அம்ருத கலசத்தை கண்டவுடன், பாம்புகள் அக மகிழ்ந்து, குளத்தில் குளித்து விட்டு உண்ண தலைப்பட்டன. ஒப்பந்தப்படி அம்ருத கலசம் கொண்டு வந்ததினால் கருடனும் விநதையும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டனர்.

பாம்புகள் குளித்துவிட்டு வருவதற்குள் ஒரு நாழிகை ஆன காரணத்தால், அம்ருத கலசம் மறைந்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று பாம்புகள் வருத்தம் அடைந்தன.

அம்ருத கலசம் சுத்தமாக வைக்கப்பட்டிருந்த தர்பை புல்லின் மீது அமுதத் துளிகள் சிந்தியிருக்குமோ என்று நினைத்த பாம்புகள்,  அங்கிருந்த தர்பை புல்லை தங்கள் நாவினால் நக்கின. அந்த தர்பை புல் பாம்புகளின் நாக்குகளை இரு பிளவாகியது. இதனால் தான், பாம்புகளுக்கு இரண்டு நாக்குகள் என்று புராணங்கள் கூறுகின்றன. 

ஏமார்ந்து போன ஸர்ப்பங்கள், சீரிய படி சென்றன. மேலே, கருடனின் வைபவம் அத்யாச்சர்யமாக வர்ணிக்கப்படுகிறது.

அன்னையை அடிமைதளத்திலிருந்து கருடன் மீட்ட இந்தக் கதையை “அம்ருதோற்சவம்” என்று ஸ்வாமி தேசிகன்  கருட பஞ்சாசத் என்னும் ஸ்தோத்திர நூலில் கொண்டாடுகிறார்.

இதே போல் நம் பாரதத்தாயை அடிமைத்தனத்திலிருந்து அவளின் தவப்புதல்வர்கள் மீட்டனர். பாம்புகளைப் போன்ற   கொடிய எண்ணம் படைத்தவர்கள், பாரத அன்னையை விடுவிக்க  பல விதமான எதிர்பார்ப்புகளைத் தெரிவித்தார்கள்.  ஆனால் கருடன் போன்ற பராக்ரமம் கொண்ட நமது விடுதலை வீரர்கள், எவரும் நினைத்துப் பார்க்கமுடியாத பல செயற்கரியச் செயல்களைச் செய்து ஸ்வதந்திர அம்ருதத்தை நமக்களித்து பாரத அன்னையை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். எதிர்த்தவர்கள் பாம்பு நாக்கு போல் பிளவுபட்டது கண்கூடு.

இன்று (15-ஆகஸ்ட்-2022) நம் பாரத நாட்டின்  75வது ஸ்வதந்திர தினத்தை அம்ருதோற்சவமாகும் கொண்டாடுகிறோம்.

நம் நாட்டில் ஸகல ஸம்பத்து  பெறுகவும், துஷ்டர்கள் விலகவும்,  அம்ருதம் எடுத்து வந்து, அன்னைக்கு ஸ்வதந்திரம் பெற்றுத் தந்த கருடனை, ஸ்வதந்திர அம்ருதோற்சவ நன்னாளில் வணங்குவோம். தியாகிகளையும் நினைவுகூருவோம்.

குறிப்பு : இந்த வ்யாஸம் ஸ்ரீ APN ஸ்வாமியின்  கருட வைபவம்  மற்றும் சுதந்திர தின  உபந்யாசத்தின்படி எழுதியது. 

இப்படிக்கு
அடியேன்

ஸ்ரீ APN ஸ்வாமியின் காலக்ஷேப சிஷ்யை & SARAN Sevak 

ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

#HarGharTiranga #HarGharTirangaCampaign #AzadiKaAmritMahotsav #HappyIndependanceday #Indiaat75 Sri#APNSwami

Click here to watch SARAN – Traditional Trending Independence Day Upanyasam by Sri APN Swami

To learn Sampradayam in an interesting manner and for more such interesting trending videos/articles do regularly watch Sri APN Swami’s YouTube Channel and his blog website.

Sri #APNSwami #Writes #Trending |களவு போன கோவிந்தன் கிரீடம் | The Stolen Crown of Govindan

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

                   களவு போன கோவிந்தன் கிரீடம்

     வைகுந்தத்தில் ஒரே களேபரம்!!! நித்யசூரிகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்! எதையோ தேடிக்கொண்டிருக்கின்றனர்!! ஸ்ரீதேவி, பூமிதேவிகள் ஆதிசேஷனாகிய படுக்கையை இப்படியும், அப்படியுமாகப் புரட்டிப்போட்டு உதறிக் கொண்டிருக்கின்றனர்.   வருடக்கணக்கில் தேங்கியிருந்த தும்புகள், தூசிகள் அதனால் பறந்து, ஸத்வமயமான வைகுண்டம் ரஜோ(தூசி) மயமானது.

     வைகுண்டப் பணியாளர்களை வரிசையாக நிற்கவைத்து விஷ்வக்சேனர் விசாரித்துக் கொண்டிருக்கிறார்.   தன் கையிலிருந்த திருப்பிரம்பை அசைத்து, அசைத்து, கண்களை உருட்டி அவர் விசாரணை செய்கிறார்.

    த்வாரபாலகர்கள், சாமர கைங்கர்யம் புரிபவர் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சந்தேகப்படும் நபர்கள் எவராவது வந்தனரா?!   இன்று வைகுண்டத்திற்கு வந்தவர்களின் வருகைக் குறிப்பேடு சரிபார்க்கப்பட்டதா?! ஆதிசேஷனின் ஆயிரம் கண்களும் நடந்த சம்பவத்தை கண்காணிக்கவில்லையா?!

    “ஒன்றிலும் பொறுப்பில்லை!! எப்போது பார்த்தாலும் தூங்க வேண்டியது!” என்று அவ்வப்போது பிராட்டி பெருமாளைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டேயிருந்தாள்.   பெருமாளோ, பாவமாக(!) ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்.

    இவ்வளவு பரபரப்பிற்குக் காரணம், இன்று நம் பெருமாளின் கிரீடம் காணாமல் போய்விட்டது. பாதுகாப்பு நிறைந்த வைகுண்டத்திலேயே வைரகிரீடம் காணாமல் போனால் மற்ற தெய்வங்களின் நிலை என்ன ஆவது? காணாமல் போன கோவிந்தனின் கிரீடத்தைத் தேடித்தான் இத்தனை களேபரமும்.!!

    “பக்தர்கள் மட்டுமே உள்ளே வரும் வைகுண்டத்தில், கிரீடம் களவு போக வாய்ப்பேயில்லையே?!”

    “பெருமாள் தூங்கும்போது ஆதிசேஷனின் உடல் மடிப்பில் எங்காவது இடுக்குகளில் விழுந்திருக்குமோ!” எனத் தேடுவதற்காகத்தான் ஆதிசேஷனை பிரித்து உதறினார் லக்ஷ்மியும், பூமியும்.

    தனது பெருத்த உடலை முக்கி, முனகி அசைத்து அசைத்து நெகிழ்த்தினார் ஆதிசேஷன்.

    இதுதான் சமயமென்று கருடனும் தனது கூரிய அலகினால் அனந்தனை அப்படியும் இப்படியும் புரட்டினார்.

    ம்ஹூம்….. எங்கு தேடியும் காணவில்லை.

    நடுநடுவே பிராட்டி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

    ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தன் கோவிந்தன், இப்போது சோகத்தில் ஆழ்ந்திருந்தான்.

    திடீரென்று கருடனுக்கு பொறி தட்டியது. இன்று மஹரிஷிகளைத் தவிர வேறு யார் இங்கு வந்தனர்?” என யோசித்தவன், ஆஹா! கரெக்ட், கரெக்ட்… அவனேதான்…. அவனேதான்…..” என்று கூவினான்.

    “பாற்கடலில் நழுவி உள்ளே விழுந்திருக்குமோ?” எனக் கருதி உள்ளே மூழ்கிய சில சூரிகள் கருடத்வனி கேட்டு அலைகளின் மேலே வந்தனர்.

எல்லோரும் கருடன் சொல்வதையே கவனித்தனர்.

    “தாயே! மஹாலட்சுமி! இன்று அசுர குல வேந்தன் விரோசனன் வந்தானல்லவா!! அவன் தான் கிரீடத்தை அபகரித்திருக்க வேண்டும் என்றான் சுபர்ணன்.

    “வைனதேயா! அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதே! விரோசனன் பக்தன். ப்ரஹ்லாத மஹாராஜா வழியில் வந்தவன்.   அவன் களவு கொண்டிருப்பதாகச் சொல்வது பாகவத அபசாரம் – மஹாலட்சுமி எச்சரித்தாள்.

    “தாயே! இந்தப் போலி பாகவதனைக் கண்டு எனக்கொன்றும் பயமில்லை. நிச்சயம் சொல்கிறேன்; விரோசனன்தான் பெருமாளின் கிரீடத்தை கொள்ளையடித்திருப்பான் கருடன்.

    “ஆமாம்.. ஆமாம்…. கருடன் சொல்வது சரியாகத்தான் உள்ளது என ஏனைய சூரிகளும் தெரிவித்தனர்.

    உடனடியாக விரோசனனைத் தேடி பாதாள லோகத்திற்கு விரைந்தான் கருடன்.   அவன் எதிர்பார்த்தபடியே, விரோசனன் கோவிந்தனின் கிரீடத்தை கவர்ந்து வந்திருந்தான்.

    அவனை வீழ்த்தி பெருமாளின் கிரீடத்தை கருடன் கொண்டுவரும் வழியில்,  ப்ருந்தாவனத்தில் கண்ணனைக் கண்டான்.   இந்த கோவிந்தனுக்குக் கிரீடத்தை அர்ப்பிக்கலாமே என எண்ணி கண்ணனுக்கு அதை அணிவித்தான்.

    கண்ணன் அந்த வைர கிரீடத்தைத் தனது ஆராதனப் பெருமாளான ராமப்ரியருக்கு அணிவித்தான். அதுவே இன்றளவும் வைரமுடியாக பொலிகின்றது.

வைகுண்டத்தில் களவுபோன கோவிந்தனின் கிரீடமே வைரமுடியாகும்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

The Stolen Crown of Govindan

It was complete chaos in SriVaikuntam, as Nithyasuris were running here and there looking for something. Sridevi and Bhudevi were rummaging through the bed of Adiseshan. The dirt and dust accumulated over many years flew about and converted the Saatvik SriVaikumtam into a Rajas (dusty) one.

Vishwaksenar, with a stick in his hand, was interrogating all the workers of SriVaikuntam, as they stood in line and answered his questions.

Vishwaksenar also questioned the door-keepers and those who fan Him to check if there were any intruders. The list of people who came to SriVaikuntam was checked again. How come Adiseshan, who has 1000 eyes, did not see this?

“No responsibility at all. Your only job is to sleep all the time”, said Piratti looking at Perumal. She kept murmuring something looking at Him. Perumal, on the other hand, was seated in a corner with an innocent look.

What is the reason for so much agitation?

Our Perumal’s crown is missing. If a diamond-studded crown gets lost in the most secure place (SriVaikuntam), imagine the plight of other Perumals? Yes, this agitation is due to the loss of Govindan’s crown.

“Only devotees can enter SriVaikuntam. In that case, how can His crown get stolen? Maybe the crown could have slipped in the folds of Adiseshan”, thought Lakshmi and Bhoomi. This is why they rummaged through him earlier.

Adisheshan twisted and twirled his large body to help Lakshmi and Bhoomi in their search. Using this opportunity, garudan also tossed and turned Ananthan with his sharp beak. Between all this, Piratti was scolding Perumal.

Hmmmm…..but the crown could not be found even after such an intense search!

Suddently, a flash idea came to Garudan. He started thinking. “Who else came here today except Maharishis? Yes..yes..it’s him…it’s him…”, screamed Garudan.

Some devotees thought that the crown could have fallen in Paarkadal, so they had gone deep down in search of it. Hearing Garudan’s voice, they also came up.

Everyone watched Garudan with rapt attention.

“O mother! Mahalakshmi! The asura, Virochanan, came here today right? He should have stolen the crown”, he said.

“Vainatheya! Don’t drop words unnecessarily. He is a devotee, who came in the line of King Prahalad. It is Bhaagavatha apachaaram to say that he stole the crown”, said Mahalakshmi.

“Mother! I’m not scared of this pseudo devotee. I know for sure that Virochanan has stolen the crown.” – Garudan.

“Yes, what Garudan says seems to be true”, chimed other Nithyasuris.

Immediately, Garudan went to Paathalalokam in search of Virochanan.

As Garudan was bringing back the crown after defeating Virochanan, he saw Kannan in Brindavanam. “Let me give this crown to Kannan”, thought Garudan and gave it to Him.

In turn, Kannan put this crown on His presiding diety, Ramapriyan. This is what still continues to dazzle as Vairamudi.

The crown that got lost in Vaikuntam is Vairamudi.

-Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami