அரங்கன் உரைத்த அந்தரங்கம் & அரங்கம் ஏறிய அந்தரங்கம் | Secrets Uttered by Lord Ranganathan & Secrets that got up the stage | Sri APN Swami Writes

Scroll down to read the english translation of this article.

This article is an extract from the series called Ramanuja Vaibhavam written by Sri APN Swami.

அரங்கன் உரைத்த அந்தரங்கம்

திருவரங்கம் – பூலோக வைகுண்டம் எனும் பெருமை வாய்ந்தது.  108 வைணவ திருத்தலங்களுக்குத் தலைமை அலுவலகம்.  ஆழ்வார்கள் மட்டுமின்றி நாதமுனிகள், ஆளவந்தார் தொடங்கி இதோ  இன்று ராமானுஜர் வரையில் ஆசார்ய வள்ளல்கள் வாழ்ந்து வைணவம் வளர்க்கின்றனர்.  அவர்களுக்கு அரங்கனே கதி.   அழகிய மணவாளனே மணாளன்.

ஆராத காதலில் ஆழ்வார்களும், ஆசார்யர்களும் அரங்கனை ஆட்கொண்டனரா!  அல்லது அழகிய மணவாளன் இவர்களை ஆட்கொண்டானா!  என்பது தனிப்பட்ட முறையில் விவாதத்துக்குரிய ரசமான தலைப்பு.

 தற்போது பகவத் ராமானுஜர் தலைமைப் பொறுப்பினை ஏற்று தன்னலமற்ற தொண்டாற்றி வருகின்றார்.  சுமார் எண்ணாயிரம் சந்யாசிகள் அவருடன் இருந்தனராம்.  அது தவிர இல்லறத்தில் இருந்து கொண்டே எம்பெருமான் தவிர ஏனையவற்றில் ஈடுபாடற்ற பரமைகாந்திகள் கணக்கற்றவர் வசித்து வருகின்றனர்.  கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், கிடாம்பியாச்சான், மிளகாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் என எதிராஜரின் சீர்மிகு சீடர்கள் அரங்கத்தின் வைணவத்துக்கு அரண்களாக உள்ளனர்.

ஶ்ரீரங்கநாதனும் ஶ்ரீரங்கநாயகியும் நித்யோத்ஸவம், பக்ஷோத்ஸவம், மாஸோத்ஸவம் என்று, தினமும் திருவிழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பொலிக, பொலிக, பொலிக என ஆழ்வார் பாடியது இன்று அரங்கத்தில் திருவாகத் திகழ்கிறது.  எதிராஜராம் ராமானுஜரின் அருள் மொழிகளைக் கேட்டு லட்சக் கணக்கில் மக்கள் நல்வாழ்வு அடைகின்றனர்.  ராமானுஜன் சொல்வன்மைக்கு யாது காரணம்?” என திருக்குறுங்குடி நம்பி சந்தேகம் கொண்டு பின்னர் சிஷ்யனாகி அதனை அறிந்தமையை முன்னமேயே கண்டோமன்றோ!  இதோ.. இத்திருவரங்கத்தில் அதன் பெருமை தொடர்கின்றது.

பொன்னரங்கமென்னில் மயலே பெருகும் இராமானுசன் என்கிறார் திருவரங்கத்து அமுதனார்.  ரங்கநாதன் மீது மையல் கொண்டவர் ராமானுஜர்.  அவர் மூலமாகத்தானே தன் உபதேசங்களை ரங்கநாதன் உலகறியச் செய்கிறான்.

முக்கியமாக, சரணாகதி சாஸ்த்ரம் (அடைக்கலமே ஆன்மாவைக் காப்பாற்றும்) உலகில் செழித்து,  எல்லோரையும் வைகுண்டத்தை அடைவிக்க வேண்டும் என்பதில் ரங்கநாதன் உறுதியாக இருந்தான்.  ராமானுஜனாக (பலராமன் தம்பியாக) தான் உரைத்த கீதையின் பொருளை- குறிப்பாக சரம ச்லோகத்தின் பெருமையை – இந்த ராமானுஜரைக் கொண்டு பிரசாரம் செய்ய தீர்மானித்தான்.

அவதாரங்களில் உயர்ந்தது அர்ச்சாவதாரம்.  அதாவது  தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் என்பதாக நாம் எப்படியெல்லாம் விரும்புகிறோமோ அப்படியெல்லாம் அலங்காரங்கள், உத்ஸவங்கள் செய்து பெருமாளை ரசிக்கலாம்.

ஒரு சமயம் பங்குனி உத்திரத் திருநன்னாள்.  வைணவ திருகோயில்களுக்கு இந்நாள் மிகவும் முக்கிமானது.  ஏனெனில் அன்றுதான் பிராட்டியின் திருவவதாரம்.  ஆம்! ராமனாக, கிருஷ்ணனாக, நரஸிம்ஹனாக அவதரித்த பெருமாள் அந்தந்த அவதாரங்களில் ஜயந்தி (பிறந்த நாள்) கொண்டாடுகிறான்.  ஆனால் சீதையோ, ருக்மிணியோ என்று பிறந்தார்கள் என்பது தெரியுமா?  அவர்களின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோமா?

அதாவது பெருமானுக்குக்கூட அவதாரங்களில் கர்ப்பவாஸம் உண்டு.  ஆனால், பிராட்டி என்றுமே அயோநிஜை.  தானாக ஆவிர்பவிப்பவள்.  அதில் குறிப்பாக, துர்வாஸ முனிவரின் சாபத்தினால் மூவுலகிலும் மஹாலக்ஷ்மி மறைந்தாள்.  பின்னர் தேவர்களும் அசுரர்களும் அமுதத்துக்காகப் பாற்கடலைக் கடைந்தனர்.  அமுதில் வரும் பெண்ணமுதமாக மஹாலக்ஷ்மி அதில் ஆவிர்பவித்தாள்.  கடற்கரையிலேயே அவளின் திருமணம் அன்றைய தினத்திலேயே நடந்தேறியது.

இப்படி அவள் அவதரித்து அழகிய மணவாளனாம் எம்பெருமானை மணம் புரிந்த திருநன்னாள் பங்குனி மாதம் உத்திர நக்ஷத்திர திருநாள்.  அதனால்தான் எல்லா விஷ்ணு கோயில்களிலும் விமரிசையாக பெருமாள், தாயார் கல்யாண உத்ஸவம் அன்று நடைபெறும்.  சேர்த்தி உத்வஸம் என்று ஒரே ஆஸனத்தில் பெருமாளையும், தாயாரையும் எழுந்தருளப் பண்ண வைத்து பக்தர்கள் சேவித்து மகிழ்வார்கள்.

எல்லாக் கோயில்களிலும் இது விமரிசையாக நடந்தாலும் திருவரங்கத்துக்குப் பெருமை சேர்க்கத்தான் ராமானுஜர் இருக்கிறாரே!  ரங்கநாதனும் அதற்காகத்தானே அவரை எங்கும் செல்ல விடாமல், ஒருவேளை சென்றாலும், உடனேயே திரும்பி வரும்படியாகச் செய்து விடுகிறானே.

இந்த சமயம் பங்குனி உத்திர நன்னாள்.  ஶ்ரீரங்கன் ரங்கநாயகியின் சன்னிதிக்கு எழுந்தருளி அங்கே சேர்த்தி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருநாளன்று ரங்கநாயகி மண்டபத்தில் ஜே! ஜே என்று கூட்டம் அலைமோதுகிறது.  ஒரே சமயத்தில் தன் குழந்தைகள் அனைவரையும் உடன் சேர்த்து தாய், தந்தையர் களிப்பது போன்று ரங்கனும், அவன் நாயகியும் மகிழ்ந்துறைகின்றனர்.

சிஷ்யர்கள், பக்தர்கள் புடைசூழ ராமானுஜர் அவ்விடத்துக்கு பெருமாளைச் சேவிக்க வருகிறார்.  மக்கள் வெள்ளத்தினூடே அவரின் வருகையை திவ்ய தம்பதிகள் மகிழ்வுடன் பார்க்கின்றனர்.  இதுவரை இருந்த சலசலப்பு ஒரே நொடியில் அமைதியாகிவிட்டது.  மக்கள் ராமானுஜர் மீது கொண்ட மதிப்பு அத்தகையது.  எங்கும் நிசப்தம்.  எல்லோருடைய கவனமும் ராமானுஜர் மீதே நிலைத்து நின்றன.  தங்களை சேவிக்க மறந்து ராமானுஜரையே வைத்த கண் வாங்காமல் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை திவ்ய தம்பதிகளும் ரசித்தனர்.

மெதுவாக மண்டபத்தின் படிக்கட்டுகளில் ஏறி பெருமாளையும், தாயாரையும் சேவித்தார் ராமானுஜர்.  இவன் அழகிய மணவாளன்.  அவனழகைச் சேவிக்க இரண்டு கண்கள் போதாது.  ஆனால், ராமானுஜரால் அத்தனை அழகையும் அள்ளிப் பருக முடிந்தது.  ஏனெனில் அவர்தான் ஆதிசேஷன் அவதாரமாயிற்றே.  இமையோர் தலைவனை இமைக்க மறந்து சேவித்தார்.  ராமானுஜரின் உள்ளத்தில் பக்தி வெள்ளம்.  இரண்டும் எதிரெதிரே பொங்கிப் பிரவகிக்கின்றது.

நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறது எதிரே உள்ள கூட்டம்.  திருவடி முதல் திருமுடி வரையிலும் நிதானமாக சேவிக்கிறார் எதிராஜர்.  காதல் கணவனை அன்பு ததும்ப ஆசை மனைவி அனுபவிக்கும் நிலையிது என்று, நாம் புரிந்து கொள்ள, பெரியோர்கள் உதாரணம் காட்டுகின்றனர்.

ஒருபுறம் அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளம்.  மறுபுறம் அரங்கநாயகன்.  நடுவினில் தனிப்பெரும் தலைவனாகிய ராமானுஜர்.  அரங்கனின் அழகிய முகத்தில் மெலியதான புன்னகை தவழ்ந்தது.  என்றுமே அவன் திருமுகம் மந்தகாசத்துடன் கூடியது என்றாலும், இன்றைய புன்னகையில் ஏதோ திருவுள்ளம் உறைந்துள்ளது போலும்.  அருகிலிருந்த அன்னையான ரங்கநாயகியும் ஆமோதிப்பது போன்று மெதுவாகத் தலையசைத்தாள்.

எம்பெருமான் திருவுள்ளத்தில் என்ன உள்ளது என்பதை அறியும் வன்மை யாருக்கு உள்ளது?  அவன் அடியார்களே அதை அறிபவர்கள்.  இன்று அரங்கனின் அந்தரங்கத்தை ராமானுஜர் நன்கு உணர்ந்தார்.  அந்த ரங்கன் அவரிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்லியுள்ளான் போலும்.  கிடைத்த வாய்ப்பை வீணாக்காதவன்தானே செயல்வீரன்.

முன்பொரு நாள் குருக்ஷேத்ர யுத்தத்தில் சோகத்தினால் கலங்கிய அர்ஜூனனின் கலக்கம் தெளிய கீதை எனும் பெரும் தத்துவத்தை உபதேசித்தவன் இதே ரங்கன்.  அரங்கம் என்றால் மேடை என்பது தானே பொருள்.  அன்று யுத்தரங்கத்தில் இவனின் பிரசங்கத்தை கேட்பவருமில்லை.  போற்றினவரும் இல்லை.  அர்ஜூனன் ஒருவனே கிடைத்தான்.  ஒரு வழியாக மனது இசைந்து யுத்தம் செய்தான்.  இருப்பினும் உயரிய அக்கீதையின் உட்பொருளை உலகம் உணர வேண்டாமா?  அதே அரங்கன் இன்று அரங்கத்தில் குழுமியுள்ள மக்கள் திரளைக் கண்டான்.  ராமானுஜரின் அந்தரங்கத்தில் புகுந்து பேச வைத்தான்.  கணீரென்று அவர் அக்கூட்டத்தில் பேசியது, அரங்கத்தின் திருமதிள்களில் இன்றும் எதிரொலிக்கிறது.

அரங்கம் ஏறிய அந்தரங்கம்

எதிரே பெரும் ஶ்ரீவைஷ்ணவத் திரள்.  எல்லோரும் ரங்கா!  ரங்கா!  என்று இதுவரையிலும் ஓலமிட்டவர்கள், இப்போது ராமானுஜா!  ராமானுஜா!  என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.  அரங்கனும்,  அழகிய  நாச்சியாரும் மகிழ்ந்து இதனை ரசிக்கின்றனர்.  சரி…. ராமானுஜனாக (பலராமன் தம்பியாக), தான் சாதிக்க முடியாததை, தற்போது ராமானுஜராக (ஆசார்யராக) சாதிக்கலாம் எனும் எண்ணம் அரங்கனின் அந்தரங்க திருவுள்ளம்.

எல்லோரும் குழுமியிருந்த இடத்தில் யாருமே கேட்காமலிருந்தாலும் அர்ஜுனனுக்கு கீதையைக் கூறியவன்;  இப்போது எதிராஜர் என்ன சொன்னாலும் கேட்பதற்குத் தயாராக உள்ள இக்கூட்டத்தைக் கண்டு வாளா இருப்பானா என்ன!  எனவே அவன் தன் அந்தரங்கக் கட்டளையை, அந்த ரங்கனின் கட்டளையை,  ராமானுஜருக்களித்தான். 

ரங்கன் ஒரு பித்தன்.  தன் பக்தர்கள் எவ்வாறேனும் தன்னை வந்து அடையமாட்டார்களா!” என்று ஏங்குபவன்.  மிகவும் கடினமான பக்தி முதலான வழிமுறைகளைச் சொன்னால், எங்கே இவர்கள் பயந்து தன்னிடம் வராமலேயே இருந்து விடுவரோ எனத் தயங்குபவன்.  பத்துடை அடியவர்க்கு எளியவனன்றோ!  ஆகையால் எல்லோரும் வாழ்ந்து போகும்படியான ஒரு வழிமுறையை உலகிற்குணர்த்த அத்திவ்ய தம்பதிகள் தீர்மானித்தனர்.

முதலில் உபாயத்தின் மேன்மை அறியலாம்.  பின்னர் வாய் திறந்த அரங்கனின் வைபவத்தை அறியலாம்.  எல்லாம் ராமானுஜர் அநுக்ரகம். 

பரமபதமாகிய மோட்சத்தை அடைய இரண்டே வழிகள் தான் உள்ளன.  இது தவிர வேறெந்த உபாயத்தினாலும் மோட்சத்தை அடைய முடியாது.  அது தவிர மோட்சத்தை அருளுபவன் எம்பெருமான் ஒருவனே.  அவன் தவிர வேறு எவர்க்கும் மோட்சம் அளிக்கும் தகுதி இல்லை.  எனவே,  தேறும் கால் தேவன் ஒருவனே என்று அறுதியிடுகின்றனர் ஆழ்வார்கள்.  இதுவே வேதமுரைத்தது.

இரண்டு வழிகளுள் ஒன்று பக்தியோகம்.  மற்றொன்று ப்ரபத்தி யோகம்.  அதாவது ஒருவன் வேதம் கற்கக்கூடிய குலத்தில் பிறந்து (அதுவும் ஆண் மகனாக), வேதத்தை நன்கு கற்க வேண்டும்.  அந்த வேதத்திற்கு ஆறு பிரிவுகள் உண்டு.  அதையும் அறிய வேண்டும்.  இவ்விதம் அறிபவன் வேதத்தில் கூறப்பட்டுள்ளபடியே தனக்குரிய ஒரு உபாஸனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 

தற்காலத்திலுள்ள நரசிம்ம உபாஸனை,  ஹனுமத் உபாஸனை,  தேவீ  உபாஸனை போன்றதல்ல இது.  இதற்கு வித்யா என்பது பெயர்.  அந்த உபாஸனையை அவன் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்க வேண்டும்.  அது தவிர மேலும் பல பிறவிகளும் அவனுக்கு உண்டாகும்.  அத்தகு  பிறவிகளிலும் இதையைல்லாம் விடாது (ஒருக்கணமும் விடாது) உபாஸனை செய்ய வேண்டும்.  இதையெல்லாம் அதிகம் விவரித்தால் கதையிலுள்ள சுவாரசியம் போய்விடும்.  மொத்தத்தில் நம்மால் முடியாது.

 சரி. இவ்விதம் சொன்னால், பின் எப்படி சாமான்யர்கள் மோட்சம் அடைவது. நாமெல்லாம் நற்கதி அடைய வழியே இல்லையா! எனும் கேள்வி எழுகிறதே.  இதற்குத்தான் பரம தயாமூர்த்தியான பெருமாள்,  ராமானுஜர் மூலமாக விடை தருகிறார்.

நான் அனைவர்க்கும் பொதுவானவன்.  எல்லோருமே எனக்கு வேன்டியவர்களே என்கிறான் கீதையில் கண்ணன்.  இப்படிச் சொன்னவன் யாரோ ஒரு சிலர் மட்டும் தன்னை வந்தடையட்டும் என எண்ணுவானா? அங்கு கீதையில் சொன்ன ஒரு அர்த்தத்தை இன்று இங்கு அரங்கத்திலும் சொல்லுகிறான்.  ஹே அர்ஜுனா!  எத்தனையோ புண்ணிய பிறவிகள் கழிந்து தான் நாராயணனாகிய நானே அனைத்தும் எனும் நினைவுடன் ஒரு பக்தன் என்னை வந்தடைகிறான்.  ஆனால், இத்தகையதொரு நிலையுடன் என்னை அணுகும் அந்த மஹாத்மா கிடைப்பது மிக, மிக துர்லபமாயுள்ளது என்கிறான்.

இதனால்,”என்னிடம் பக்தர்கள் அதிகம் வர வேண்டும்.  நான் அவர்களுக்கு மோட்சமளித்து அளவில்லா ஆனந்த வாழ்க்கை தர காத்திருக்கிறேன் எனும் திருவுள்ளம் நன்கு தெரிகின்றதன்றோ! அதற்குரிய வழிமுறைகளையும் இப்போது தெளியலாம்.

முன்னம் நாம் பார்த்த பக்தி கடினமானது.  எப்போது பலனளிக்கும் என்பது தெரியாது. நாம் அதைச் செய்யும் வல்லமையற்றவர்கள்.  ஆனால், மோட்சத்தில் விருப்பமுடையவர்கள்.  இதனால் நாம் அவனை அடையும் வழி சுலபமானதாகவிருந்தால் மேலானது.  அத்தகையதொரு வழிமுறைதான் சரணாகதி என்பது.

 நான், என்னைச் சேர்ந்த அறிவுடைய அறிவற்ற என அனைத்தையும், ஹே ப்ரபோ! தேவதேவ! நீ உன் கைங்கர்யத்துக்காக ஏற்றுக்கொள் என அனைத்தையும் அவன் திருவடியில் சமர்ப்பிப்பதற்குத்தான் சரணாகதி என்பது பெயர்.  இதனை யாரும் செய்யலாம்.  எக்காலத்திலும் செய்யலாம்.  எவ்விடத்திலும் செய்யலாம்.  எவ்வித நியம நிஷ்டைகளும் கிடையாது.  ஒன்றே ஒன்றைத் தவிர.  அது மஹாவிச்வாஸம்“.  எல்லாம் நாராயணனே;  அவனே நம்மை ரட்சிப்பவன்;  அவனை அடைவது தவிர இப்பிறவிக்கு பயன் ஏதுமில்லை எனும் உறுதியிருந்தால் போதுமானது.

மகானாகிய ஆசார்யருடைய சம்பந்தத்தை அடைந்து, இந்த ஆத்மாவை மேற்கூறியபடி பகவானின் திவ்யமான திருவடித் தாமரைகளில் சமர்ப்பித்தால்,  இனி நமக்கு பிறவி எனும் பயம் என்றுமே கிடையாது.  ஒரே ஒருமுறை விரைவாக செய்து முடிக்கக்கூடிய கார்யம் இது.  இந்த மாபெரும் அமுத வெள்ளத்தை அகில உலகமும் அடைந்து, அழியாத ஆனந்தமான பேரின்பத்தைப் பெற வேண்டும் என நினைத்த அரங்கன் ராமானுஜரைப் பேச வைத்தான்.  தானும் பேசினான்.

இந்த சரணாகதி மந்த்ரத்துக்கு த்வய மந்த்ரம் என்பது பெயர்.  திருவுடன் சேர்ந்த பகவானுடைய திருவடித் தாமரைகளை அடைக்கலமாக அடைகிறேன்.  திருவுடன் கூடிய திருமாலுக்கு (நாராயணனுக்கு) கைங்கர்யம் செய்கிறேன் என்பது அந்த மந்திரத்தின் பொருள்.  அத்தகைய உயரிய மந்திரத்தைக் கூறி என்னையே அடைக்கலமாக அடைவாயாக!”; நான் உன்னை அனைத்து வினைகளிலிருந்தும் காப்பாற்றுகிறேன் என்று கீதையின் சரம ச்லோகத்தில் கண்ணன் உபதேசித்தான்.  கவலைப்படாதே எனும் அவன் வாக்கியத்தின் பொருளை இன்று உலகம் உணர்கின்றது.

பரம பவித்ரமான பங்குனி உத்திரத் திருநன்னாளில், அரங்கனின் ஆணைப்படி, உலகறிய, ராமானுஜர் சரணாகதி செய்தார் !  ராமானுஜர் எவ்வழியோ,  உலகம் அவ்வழி ! என்பதற்கேற்ப, தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் ரங்கநாதன் திருவடிகளில் சமர்ப்பணம் செய்தார்.

அந்தச் சமயம் ராமானுஜரால் அருளிச் செய்யப் பட்ட அமுத மொழிகளுக்கு கத்ய த்ரயம் என்பது பெயர்.  அரங்கன் திருவடிகளில் அடைக்கலம் அடைய சரணாகதி கத்யம்‘;  ஶ்ரீவைகுண்டத்தின் பெருமையை வர்ணிக்கும் வைகுண்ட கத்யம்‘; பூலோக வைகுண்டமான ஶ்ரீரங்கத்தின் அழகை வர்ணிக்கும் ஶ்ரீரங்க கத்யம் என மூன்றும் ஆசார்யரால் அருளப்பட்டன.

எம்பெருமானே !  உன் திருவடித் தாமரைகளில், வேறொன்றிலும் பற்றில்லாத எனது மனது லயிக்க வேண்டும்.  இதுவரையிலும் நான் செய்த தீவினைகளிலிருந்து நீ காக்க வேண்டும்.  அவற்றை இனியும் நான் செய்யாதபடி நீ தடுத்தாட்கொள்ள வேண்டும்.  கருணாநிதியே!  குணக்கடலே,  இனிமையானவனே உன்னையே சரணடைந்தேன்  என்று இதில் பகவத் ப்ரார்த்தனையைச் செய்கிறார்.  பிராட்டியாம் ரங்கநாயகித் தாயாரை முன்னிட்டு, ராமானுஜரால் ரங்கநாதனிடம் சரணாகதி செய்யப்பட்டது.

இங்கிருக்கும் காலம்வரை அடியேன் தேவரீர் உகந்த கைங்கர்யத்தை – ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்  என்று ப்ரார்த்தனை செய்தார்.  உடனே, பேசும் தெய்வம் அரங்கன்,  அப்படியே ஆகுக.  உன் விருப்பங்கள் அனைத்தும் ஈடேறும்.  இந்நிலவுலகில் இருக்கும் வரை முன் சொன்ன த்வய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டேயிரு.  இந்தத் திருவரங்கத்திலேயே பரம சுகமாக வசிக்கக் கடவாய்  என்று திருவாய் மலர்ந்தருளினான்.  இந்த அதிசயத்தை உலகமே கண்டு போற்றியது.

எளிமையான இந்த உபாயம் எல்லோருக்கும்தானே.”தன்னடியார்கள் இதைச் செய்தால் அவர்கள் திறத்தில் இரங்கும் அரங்கன் பித்தன் என்கிறார் ஆழ்வார்.  அன்பர்களே! இனியும் என்ன குறை; என்ன  கவலை! உய்ய ஒரே வழியான உடையவர் திருவடியை அடைந்துய்யலாம்.  அரங்கத்தில் நிகழ்ந்த அந்தரங்கம் இந்த உலகிற்கோர் அற்புதம்.

அன்புடன்

அனந்தன்


Aranganuraithaandharangam(Secrets uttered by Lord Ranganathan)

Thiruvarangam has the distinction of being called “BhoolokaVaikuntam” or the Vaikuntam on earth. This is the Head Quarters of all the 108 divyadesams. This is the place where azhwars and eminent acharyas starting from Naathamunigal and Alavandhar to Swami Ramanuja, have lived for the propagation of Vaishnavam. For them, Aranganar (presiding Lord of SriRangam) is the only refuge. Azhagiyamanavalan himself is their only love.

Did Azhwars and acharyas embraced Him with their unflinching devotion, or did Aranganar embrace them? That separate subject for interesting debate at another time.

Now, Swami Ramanuja took the responsibility of being the Chieftain and served selflessly. Around 8,000 sanyasis said to have been there with him at that time. Besides, countless number of householders who worshipped only Sriman Narayana (such people are called paramaikaanthis) were living there. Many distinctive disciples of Swami Ramanuja such as Koorathazhwan, Mudaliaandan, Embar, ArulaalaPerumalEmberumaanaar, KidambiAachan, Milagazhwan and Thirukurugaipiraanpillan, who were like the fort of Sri Vaishnavism, of Sri Rangam.

SriRanganaathar and SriRanganaayaki are enjoying Nithyothsavam, Pakshothsavam, maasothsavam and other utsavams (festivals) everyday.

Azhwar sang, “Poliga, Poliga, Poliga” then, which today is shining as the wealth of Sri Rangam.

Countless people have benefitted from Ethirajar (Ramanuja)’s words of wisdom for their welfare. Earlier, we saw how Lord Nambi, after having a doubt “what is the reason for Ramanuja’s oratory power”, became Ramanuja’sdisciple to experience his teachings. Lo! The same continues in Thiruvarangam too.

Thiruvarangaamudhanar once said, “PonarangamEnnil, mayalperugum Ramanuja.” (meaning: when I say shining Sri Rangam, Ramajuja gets into a trance) Ramanuja was mad (crazy) mad with love for Ranganathan.  Lord Ranganathan published his upadesam (preaching) to the world only through Ramanuja.

Specifically, Ranganathan was determined that saranagathi principle should prosper in the world and all should attain Sri Vaikuntam. He decided to preach, through Ramanjuja, the meaning of Bhagavad Gita, (particularly the greatness of Charama Slokam), which, He, as brother of Rama (younger brother of Balarama) gave out.

Archavatharam is the best of all avatharams (incarnations). “Whichever image you like, is My image” is what it is. Whatever way we wish, we can enjoy Him, by dressing Him, conduct celebrations etc

Once, it was the holy day of Panguniuthiram.This is an important day for Sri Vaishnava temples. That is the day of Thiruavatharam (Appearance day) of Piratti (consort of Lord). In general, we celebrate it as Jayanthi day, (the birthdays) of Perumalthose days when He incarnatedas Rama, Krishna or Nrsimha. But, do we know the birthdays of Sita or Rukmini? Do we celebrate Their birthdays?

Perumal has spent time in the womb of different mothers during His avatharas. Pirattis Ayonija – she has always emerged directly without going through the process of birth.    She appears on Her own. One time, Mahalakshmi disappeared from the face of all the three worlds due to a curse by Sage Durvasa. Later, when Devas and Asuras came together to churn the paarkadal (milky ocean) to get nectar, there emerged from it, like a lady-nectar, Mahalakshmi. On that very day, Her marriage happened on the shores of paarkadal.

Her advent and marriage to the BeautifulBride-groom, Perumal, took place on the uthiram star in the tamil month of Panguni. In commemoration of this event, a kalyanautsavam (divine marriage) is performed for Perumal and Piratti on that day every year, in all Sri Vaishnava temples. Called as “Serthiutsavam”, Perumal and Piratti are seated together and devotees happily pray them on this day.

Though this event happens in all temples, there is Sri Ramanujato add extra touch of specialty to Sri Rangam. This is also why Lord Ranganathar doesn’t let Ramanuja go away from Him, and even if he goes, He makes him come back soon.

Once it was panguniuthiram day, this day, whenLord Ranganathar comes to the shrine of Ranganayaki, then together They Bless the devotees, at RanganayakiMandpam there is a very large congregation of bustling devotees. Perumal and Piratti were overwhelmed by the joy, just like how parents would be very happy to be with all their children at one place.

Ramanuja, along with this retinue of devotees and disciples, came there to take the Blessings of Perumal and Thaayar. TheDivyadampathi (Perumal and Piratti) welcomed him joyously. Suddenly, the crowd became silent. That was the respect the people had for Swami Ramanuja. Everyone’s attention was focused only on Ramanuja.The Divya Dampathi were enjoying the pointed attention that Ramanuja was getting from the crowd which forgot to have darshan of Them.

Slowly Ramanuja climbed the steps of the mandapam and prayed Perumal and Thayar. The Lord is the beautiful Groom.It is impossible for normal people to behold His beauty all at once. But, Ramanuja was able to do so because he is none other than the incarnation of Adiseshan. He prayed the Lord of Devas, without batting an eye. Ramanuja’s heart brimmed with devotion. Both Lord’s beauty and Ramanuja’s devotion were overflowing there.

The crowd watched keenly at the unfolding of events. Ramanuja slowly savoured the beauty of Perumal from His Holy Feet to His Crown. To help us understand this depth of devotion, our elders have metaphorically explained this feeling as that of a “loving wife enjoying the love and affection of her beloved husband.”

With thronging crowds on one side and Lord Ranganathar on the other. Swami Ramanuja stood in between as the one and only leader. Lord Ranganathar wore a mesmerizing smile. He is always so, but today, there was also a slight ‘indication’ in His smile. Mother Ranganyakai also slightly nodded Her head, assenting to His thoughts.

Who has the skill to know what is in His mind? Only His devotees know His mind. Today, Ramanuja clearly understood the secret thoughts of the Lord. It seemed that the Lord Ranga had secretly told something to Ramanuja. One who makes the most of the given opportunity is a champion.

This is the same Ranganathar who preached at Kurukshethra war, the great concept of ‘Gita’ to Arjuna, who was disillusioned by sorrow. Arangam means stage. On that day, there was no one to listen to His preaching or appreciate the same. Only Arjuna was there. After listening to all that the Lord said, Arjunan relented and went for war. But should not everyone in the world understand the inner meaning of this exalted Bhagavad Gita? Same Arangan (Krishna) today saw the congregation in Arangam. He entered into Ramajua and made him speak. The booming voice in which Ramanuja spoke those words, resonate even now in the compound walls of Sri Rangam.

Andharam Eriya Andharangam(Secrets that got up the stage)

Swarms of Sri Vaishnava people who were shouting “Ranga! Ranga!” until now, started celebrating Ramanuja. Lord Ranganathar and Piratti were also proudly enjoying these scenes. Amidst these scenes, Ranganathar secretly decided to accomplish through Ramanuja, what he could not do in the battlefields of Kurukshetra.

Though everyone was gathered in the Kurukshetra battlefield, no one could listen to Him. Yet He preached Bhagavd Gita to Arjunan. Today, everyone is ready and willing to listen to Swami Ramanuja. Will He let go of such an opportunity! So, He gave His secret order (wish) to Ramanuja.

Rangan is paranoid. He longs for His devotees to reach Him through some means. He was also skeptical about teaching the difficult path of Bhati yogam to people, as He feared that people would get scared and would never come to Him. He wanted to be accessible to all His devotees. So, He and Piratti decided to give everyone an easy option that they would be able to practice.

First of all, let us understand Upayam (the means), so we can understand the greatness of Lord Ranganathan with the blessings of Swami Ramanuja.

There are only two ways to reach Paramapadham (attain moksham). There is no other means to moksham. In addition, Lord Vishnu is the only one who can grant moksham and no one else has that privilege. This is why both Azhwars and vedas pronounce that “He is the everlasting refuge.”

Out of these two paths – one is Bhati yogam and the other is prapatti yogam. It means, a person who is a male and is born in a lineage that is eligible to learn veda, must learn it well. There are six branches in vedas and he should also know that. In addition, he should follow the rituals (upasana) as said in the vedas.

This upasana is not like the Nrsimha upasana, Devi upasana or Hanumath upasana that’s prevailing in modern days. This is called ‘vidya’ and one has to follow it all through his life. Also, he will have rebirths and during all those births, he should follow each of these rules strictly. If we keep elaborating on this, the essence of the story will be lost. Overall, this is something that we cannot follow.

This brought up the question – how can a common man get moksham? Does he not have any option to reach Him? The All-Compassionate Lord gave the answer to this question through Ramanuja.

“I am common to everyone. I want all of you.” – says Krishna in Bhagavad Gita.  Will a person who said this ever think that only a chosen few should reach Him? Today, he says a meaning, which is the same one that he uttered in Bhagavad Gita that day. Then, He said, “Hey Arjuna! Only after many births does a person have a birth in which he thinks that Narayanan is everything and reaches Me. But, it is very difficult to get a person like that”, he said.

From this, we can understand that He wishes, “More people should come to me. I’m waiting to give them moksham and a blissful life after that.” Now, we can also know the means for this.

The bhakti yogam that we saw earlier is difficult to practice. We don’t know when it will yield results. Also, we are incapable of following it. At the same time, we are interested in getting moksham. This is why, it is best if there is an easier path to reach Him. Such a means is “saranagathi.”

Saying, “O Lord, please take me and all the living and non-living things associated with me for your service” and submitting everything at His lotus feet is called saranagathi. Anyone can do this. We can do this at any time. It can be done anywhere. There are no rules related to it, except one called “Maha Vishwasam,” which is unflinching faith in Sriman Narayana. We should just understand and resolve to ourselves that He is everything, He will take care of us and we have no other goals in this life except to reach Him.

This saranagathi mantram is called “dwaya mantram.” The meaning of this mantram is, “I am taking refuge in the lotus feet of the Lord Who is always with Piratti. I am doing service to Perumal and Piratti.” In Bhagavad Gita’s charama slokam, He says, “Take refuge in Me! I will save you from all sins.” Today, the world understood the meaning of His word – “Don’t fear:”

On this divine day of Panguni uthiram, under the orders of Lord Ranaganthan, Swami Ramanuja did saranagathi. The world follows Ramanuja, and true to this, Ramanuja did saranagathi not just for himself, but also for all others associated with him.

The words that Ramanuja uttered during that time is compiled as “Gadya Trayam.” It comprises of “Saranagathi Gadyam” that teaches us to take refuge in Rangannathar’s lotus feet, “Vaikunta Gadyam” that describes the Lord at Sri Vaikuntam and “Sriranga Gadyam” that describes the beauty of Sri Rangam (Bhooloka Vaikuntam).

In this book, Swami Ramanuja prays to Ranganthar and says, “O Lord! I want my mind to meditate only on Your lotus feet without falling to any distractions. You have to protect me from all the sins I have committed so far. O compassionate One! Virtuous One! I take refuge only in You.” This way, Ramanuja did saranagathi to Lord Ranganathar in the presence of Ranganaayaki.

“As long as I am here, I want to serve you tirelessly,” prayed Swami Ramanuja. Imemdiately, Lord Ranganathar said, “So be it. All your wishes will be fulfilled. Keep chanting the dwaya mantram as long as you live here. You will continue to live comfortably in this Sri Rangam.” The entire world watched this event with awe.

This easy means is for everyone. Azhwar says, “When followers do this, unwanted thoughts will leave them.”

Friends! Why fear! Let us all reach the golden feet of Swami Ramanuja. The event that happened in Sri Rangam is a fantastic event for the entire world.

Translation by Shishyas of Sri APN Swami