Sri #APNSwami #Writes #Trending | வாயுநந்தனுக்கு தசரதநந்தன் கூறிய அபிநந்தன் | India’s first Surgical Strike

India first surgical Strike.jpeg🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ஸ்ரீ:
“வாயுகுமாரன் பெற்ற வாழ்த்து”
(Based on Sri APN Swami – Upanyasam)

தொகுத்தவர்:- ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

ஸ்ரீமத்ராமாயணத்தில் ராமன், சீதை மற்றும் லக்ஷ்மணர்கள் சித்திரகூடத்தில் இருந்த போது பரதன் மற்றும் நாட்டில் வசிப்போர் அடிக்கடி வந்திட நேரும் என்று அஞ்சினர். அதனால், அவர்கள் மஹரிஷிகளுடன் காட்டில் வாழ முடிவெடுத்து , அடர்ந்த காட்டுப்பகுதியான “தண்டகாரண்யத்திற்கு” சென்றனர். அங்கிருந்த மஹரிஷிகளின் நிலையை பார்த்த ராமன், மிகுந்த வருத்தம் அடைந்தான். “தீவிரவாதத்தை மேற்கொண்ட அரக்கர்களின்” துன்புறுத்தலால் மஹரிஷிகள் துன்ப நிலையில் இருந்தனர். அனைத்து மஹரிஷிகளும் ஒன்று திரண்டு வந்து ராமனிடத்தில் சரணாகதி செய்தனர். அப்பொழுது ராமபிரான் அவர்களை தான் காப்பதாக அபயப் பிரதானம் செய்கிறார். ராக்ஷஸர்களை வதம் செய்து, மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் ப்ரதிஞை செய்தான்.
அரண்யத்தில் ராவணனின் ஆணையின் படி, “வேத பண்டிதர்கள்(Pandits) வாழ்ந்த இடத்தை தீய ராக்ஷஸர்கள் ஆக்ரமித்திருந்தனர்”. அவர்களை வதம் செய்ய தக்க தருணத்தை நோக்கி, அதன் அருகில் “பர்ணசாலை (camp)” அமைத்து ராமன், சீதை, லக்ஷ்மணர்கள் தங்கினர். அப்பொழுது கர தூஷணர்கள் சண்டையிட வந்தார்கள். ஜனஸ்தானத்தில் ரிஷிகள் இடத்தை ஆக்ரமித்த பதினான்காயிர ராக்ஷஸர்களை ராமபிரான் தான் ஒருவனாக வதம் செய்தான். ராமபிரான் “பண்டிதர்கள் வாழ்ந்த இடத்தை காப்பாற்றி”, தீவிரவாத சக்திகளை தன்னந்தனியாக Mass Encounter செய்து ரிஷிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினார்.

இவ்வண்ணம் மஹரிஷிகளுக்கு தீய செயல்களையே செய்த இராவணன், பெரும் தவறாக சீதையை தூக்கிச் சென்றான். ராமன் சீதையை தேடும் பொருட்டு ஹனுமனை அனுப்பினான். ஹனுமனும் கடலை ராமனின் அனுகிரஹத்தால் கடந்து, சீதை கண்டுபிடித்து, ராமனின் மோதிரத்தை கொடுத்து, சீதையிடமிருந்து சூடாமணியை பெற்றார்.

திரும்ப செல்லும் முன்னர் ராக்ஷஸர்களிடம் ஹனுமான் தானாகவே பிடி பட்டார். பிடி பட்ட போது தன்னிடம் இருந்த “ஆவணங்களை (சீதையின் சூடாமணியை) யாரும் பார்க்கா வண்ணம் மறைத்தார்”. இந்திரஜித் வலிமை வாய்ந்த அஸ்திரமான ப்ரஹ்மாஸ்திரத்தை ப்ரயோகம் செய்த போது, அந்த அஸ்திரம் ஹனுமனை ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் ஹனுமன் கட்டுப்பட்டது போல் இருந்தார். மேலும் தான் “ராம தூதன்” என்றும் வேண்டிய தகவலை மட்டுமே அளித்தான்.

ப்ரஹ்மாஸ்திரம் ஹனுமனை ஒன்றும் செய்யவில்லை என்றறிந்த இராவணன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான். “வலிமை வாய்ந்த ப்ரஹ்மாஸ்திரமே வேலை செய்யாததால் என்ன செய்வது என்று திகைத்தான் இராவணன்”. மேலும், அருமை பெருமை அறியாமல் உயர்ந்த அஸ்திரமான ப்ரஹ்மாஸ்திரத்தை அவசரப்பட்டு உபயோகப்படுத்தியதால் அந்த அஸ்திரத்தை அளித்த ப்ரஹ்மதேவனுக்கு தங்கள் மேல் கோபம் ஏற்படும் என்று அறிந்தான். மறுபடியும் ப்ரஹ்மாஸ்திரம் வேண்டி தவமிருந்தால் கூட ப்ரஹ்மா அளிப்பாரா என்பதும் கேள்விக்குறியானது. இந்த தோல்வியானது, ஏனைய நாட்டு அரசர்களும், தேவர்களும் சுலபமாக ராவணனுக்கு நெருக்கடி அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

அந்த சமயம் “தன் வீரத்துக்கு இழுக்கும், லங்கைக்கு ஆபத்தும் வந்துவிடக்கூடாது” என்பதே இராவணனின் ஒரே நோக்காக இருந்தது. இதனால் “விபீஷணன் கூறிய அறிவுரையை வேறு வழியின்றி” ஏற்று, ஹனுமனை விடுதலை செய்ய ஆணையிட்டான் இராவணன்.

ஹனுமன் கிளம்பும் பொழுது, அங்கிருந்த நல்லவர்களான(civilians) அப்சரஸ் ஸ்த்ரிகள் மற்றும் அசோக வனத்திற்கும் ஆபத்து நேராவண்ணமும், “தீயவர்களை மட்டும் பாதிக்கும் வண்ணம் இலங்கையை கொளுத்தினான்“.
சீதையை கண்டுபிடித்து, வலிமை வாய்ந்த ப்ரஹ்மாஸ்திரத்தை வென்று, எதிரிகளிடமிருந்து திரும்பி வந்த “வாயுநந்தனை“, மிகவும் சந்தோஷமடைந்த ராமன் “அபிநந்தன்” / “வாழ்த்துக்கள்” என்று இறுக தழுவிக்கொண்டார்.

இதுவே “வாயுநந்தனுக்கு தசரதநந்தன் கூறிய அபிநந்தன் / வாழ்த்துக்கள்.”

#MassEncounter #Surgicalstrike #Civilian #Brahmasthiram #Hanuman #Ravanan #CrossBorderAttack #Terrorist  #Abhinandan
Sri #APNSwami #TheedhilaNallorThiral
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒