Sri #APNSwami #Writes #Trending | எல்லைப் பாதுகாப்பு | Border Security

Please note that this article is available in both Tamil (written by Sri APN Swami) and English (translation by his sishyas).

China's Incursions In Ladakh Part Of Its 'Scare The Neighbours ...

எல்லைப் பாதுகாப்பு

தேசாபிமானிகள் எல்லோருமே தீர்மானித்துள்ள ஒரு விஷயம்; "இனியும் சைனா தேசத்தின் பொருட்களை உபயோகிக்கக்கூடாது" என்று. இது மிகவும் வரவேற்புக்குரியது. நல்லதொரு நட்பு பாராட்டி, நன்கு வரவேற்று, நமது அரசு செய்த நல் உபசரிப்புக்கு மாறாக சைனாவின் விரோத மனப்பான்மை நன்கு வெளிப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. எல்லையைக்  காக்க நமது தேச வீரர்கள் 20 பேர் இன்னுயிர் தியாகம் செய்ததை நினைக்கும் மனது வேதனையடைகிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய எம்பெருமானை  நெஞ்சுருகி ப்ரார்த்திக்கிறோம்.

"எல்லைப் பாதுகாப்பு" குறித்து நம் ஸ்வாமி தேசிகன் அருளியதை இனி அனுபவிக்கலாம். ஸ்ரீமத் ரஹஸ்யத்ரைய ஸாரம் எனும் நூல் உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவக் கருத்துக்களை விளக்குவதற்காக சுவாமி தேசிகனால் அருளிச் செய்யப்பட்டது. அக்காலத்திலேயே இருமொழி கல்வி திட்டத்தை சுவாமி தேசிகன் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூலின் முக்கிய கருத்தான சரணாகதியை நன்கு விளக்குகிறார். குறிப்பாக பகவானான நாராயணனுக்கே நாம் அடியவர்கள் எனும் ஸித்தாந்தம் வலியுறுத்தப்படுகிறது. இதில் "நமது பக்தி அதாவது பகவானுக்கே தாசர்கள் (ஆட்பட்டவர்கள்) என்பதின் அளவு‌ என்ன?" எனும் கேள்வி உண்டாகிறது. இதன் விளக்கத்தைச் சற்று கவனித்தால் கட்டுரைத் தலைப்பின் முக்கியத்துவம் புரியும்.

அதாவது நாம் பகவானுக்கு மட்டும் தாசர்களா? அல்லது நமது தாசத்வம் - அடியேனாகும் தன்மை மேலும் விரிவடைந்து மற்றைய எவருக்காவது தாசர்களாகிறோமா? எனும் கேள்வியை இங்கு எழுப்ப வேண்டும்.

இவ்விஷயத்தில் தீர்ப்பளிப்பவை சாஸ்திரங்கள்  தானே. பகவத் தாஸத்வம் - பகவத் பக்தருக்கு அடியவராகும் வரை எல்லையாயுள்ளது.

ஆம், நமது அடியேனாகும் எல்லை பாகவதர் வரையிலும் உள்ளது. "அடியார்க்கு என்னை ஆட்படுத்தும் விமலன்" - "பகவத் தாசனாகிய என்னை, அந்த பகவான் அவனது அடியார்க்கும் அடியேனாக்கினார்" என்கிறார் திருப்பாணாழ்வார். எனவே நமது தாசனாகும் எல்லை பாகவதர்களேயாவார்.

அதெல்லாம் முடியாது. நான் பகவானுக்கு மட்டுமே தாசன். அவன் அடியார்க்கு இல்லை" என்று முரண்டு பிடித்தால் என்னவாகும்? என்பதை தேசிகன் எல்லைப் பிரச்சனையை உதாரணமாக்கிக் காட்டுகிறார்.

ஒரு கிராமத்தின் எல்லை நிலம் தரிசு பாய்ந்துள்ளது. தரிசு என்றால் கவனிப்பாரற்று, சமன்படுத்த படாமல், முள்ளும், கல்லு மாய் இருக்கிறது. இதனால் அத்தரிசு நிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு  பல ஆபத்துக்கள் உண்டாகும். அதாவது மழைநீர் வெள்ளம் பாயலாம், அல்லது கள்ளிச் செடிகள் உண்டாகி முக்ய பயிரை அழிக்கலாம், அல்லது தரிசுக்  காட்டில் புதர்கள் மண்டி விஷ,கொடிய ஜந்துக்கள் உண்டாகலாம், குற்றங்கள் நடக்கும் வாய்ப்புகளுண்டு. இவை எல்லாவற்றையும் விட முன், பின் கிராமங்களுக்கு இடையே எது எல்லை? என்பதில் பெறும் தகராறு உண்டாகும். ஆகையால் எல்லை நிலத்தை தரிசு-கரம்பு(waste land) நிலமாக அலட்சியப்படுத்தாமல், அதை நன்கு கவனித்து செப்பனிட்டு பாதுகாத்து வந்தால், உள் நிலமும் நன்னிலமாகத் திகழும். எனவே எல்லை பாதுகாப்பு இன்றியமையாதது. அதை waste land என்று தள்ளிவிட முடியாது.

அதுபோன்றே தற்போது பகவத் பக்தி மட்டும் செய்து வந்து, பாகவத பக்தி (பெரியோர்களை பூசிக்காமல்)  செய்யாமலிருந்தால் எல்லை நிலத்தை தரிசு பாய விடுவது போன்று ஆபத்தாகிவிடும் என்கிறார் சுவாமி தேசிகன். எல்லை கடப்பது எவ்வளவு தீயதோ! அஃதுபோன்று, எல்லையைக் காப்பதும் இன்றியமையாததன்றோ! இதை நன்கு கவனத்தில் கொண்டு நாமும் எல்லை பாதுகாப்பில் இணைந்திடுவோம். தேசிய பக்தியும், தேசிக பக்தியும் நமது உயிரன்றோ!

இக்கட்டுரையின் கருத்திற்கு வித்திட்ட ஸ்ரீ உ.வே. நாவல்பாக்கம் வாசுதேவாசாரிர்யார் சுவாமிக்கு ப்ரணாமங்கள்.

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

18/06/2020

Where Andal glorifies the bhAgavatha dasa - the devotee's devotee'.

To Glorify Bhagawan, Glorify His Devotee

English

Border Security

All the patriots have unanimously decided not to use Chinese products again. This is a welcome move. Our government praised a good friendship and extended a warm welcome to China, but such an outburst of antagonistic thoughts by China is shocking. This grief gets even compounded when we think of the 20 soldiers who have laid down their life fighting for our country. We pray fervently to Emperuman to give peace to their souls.
Now, let’s read what Swami Desikan has said about border security. Swami authored a book called Srimad Rahasya Traya Saram to enshrine the highest principles of Vishishtadvaita. Since this book contains a combination of Tamil and Sanskrit, it reflects the two-language system that had been in vogue then. This grantham lays a lot of emphasis on Saranagathi. In particular, it explains the master-follower relationship between Sriman Narayana and us. In this, what is our bhakti? In other words, what is the limit of our acceptance of Bhagavan’s mastery over us? (Clue: The answer to this question relates to the title of this article).
Are we followers of only Emperuman or does it extend to others as well? This is the question that we should raise here.
The verdict or the answer to this question lies in our sastrams. The limit of Bhagavad Dasavatham (followership of Bhagavan) extends to the followership of His devotees.
Yes, our Dasathvam extends to His devotees as well. In Amalanadhipiran, Thiruppan Azhwar says. “Adiyaarku ennai aat paduththa vimalan.” This means, He ensured that I was not only His follower but also the follower of His followers. So the limit of our Dasathvam will be His devotees/followers.
So, what happens if we argue that we are His followers only and not the followers of His devotees also? Swami Desikan sees this question as a border problem and answers it for us.
The border of a village extends up to a land that is not taken care of by anyone (waste land), so it is full of thorns and stones due to which, it can be dangerous for the lands that border it. Some possible hazards could be floods, growth of weeds that can affect the crops of the adjoining lands, presence of poisonous creatures, and the possibility for nefarious activities. More than all this, there will always be a question of which village has claims over this wasteland.
This is why we should ensure that the lands bordering a place should be well-maintained to avoid the above problems and hence border security becomes a crucial part of any administration. These areas can never be ignored as wastelands.

Likewise, if we are devotees only to Bhagavan and not to His followers, we open the possibility of our borders to become wastelands, explains Swami Desikan. Just like how transgressing a border is dangerous, like that ignoring the borders is also equally dangerous. Let’s keep this in mind and become a part of the border security force. After all, Desha Bhakti and Desika Bhakti are our two eyes!
Salutations to Navalpakkam Vasudevachariar Swami for seeding these thoughts.

-Translation by Sri APN Swami Sishyas

Sri #APNSwami #Writes #Trending | வாயுநந்தனுக்கு தசரதநந்தன் கூறிய அபிநந்தன் | India’s first Surgical Strike

India first surgical Strike.jpeg🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ஸ்ரீ:
“வாயுகுமாரன் பெற்ற வாழ்த்து”
(Based on Sri APN Swami – Upanyasam)

தொகுத்தவர்:- ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

ஸ்ரீமத்ராமாயணத்தில் ராமன், சீதை மற்றும் லக்ஷ்மணர்கள் சித்திரகூடத்தில் இருந்த போது பரதன் மற்றும் நாட்டில் வசிப்போர் அடிக்கடி வந்திட நேரும் என்று அஞ்சினர். அதனால், அவர்கள் மஹரிஷிகளுடன் காட்டில் வாழ முடிவெடுத்து , அடர்ந்த காட்டுப்பகுதியான “தண்டகாரண்யத்திற்கு” சென்றனர். அங்கிருந்த மஹரிஷிகளின் நிலையை பார்த்த ராமன், மிகுந்த வருத்தம் அடைந்தான். “தீவிரவாதத்தை மேற்கொண்ட அரக்கர்களின்” துன்புறுத்தலால் மஹரிஷிகள் துன்ப நிலையில் இருந்தனர். அனைத்து மஹரிஷிகளும் ஒன்று திரண்டு வந்து ராமனிடத்தில் சரணாகதி செய்தனர். அப்பொழுது ராமபிரான் அவர்களை தான் காப்பதாக அபயப் பிரதானம் செய்கிறார். ராக்ஷஸர்களை வதம் செய்து, மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் ப்ரதிஞை செய்தான்.
அரண்யத்தில் ராவணனின் ஆணையின் படி, “வேத பண்டிதர்கள்(Pandits) வாழ்ந்த இடத்தை தீய ராக்ஷஸர்கள் ஆக்ரமித்திருந்தனர்”. அவர்களை வதம் செய்ய தக்க தருணத்தை நோக்கி, அதன் அருகில் “பர்ணசாலை (camp)” அமைத்து ராமன், சீதை, லக்ஷ்மணர்கள் தங்கினர். அப்பொழுது கர தூஷணர்கள் சண்டையிட வந்தார்கள். ஜனஸ்தானத்தில் ரிஷிகள் இடத்தை ஆக்ரமித்த பதினான்காயிர ராக்ஷஸர்களை ராமபிரான் தான் ஒருவனாக வதம் செய்தான். ராமபிரான் “பண்டிதர்கள் வாழ்ந்த இடத்தை காப்பாற்றி”, தீவிரவாத சக்திகளை தன்னந்தனியாக Mass Encounter செய்து ரிஷிகளுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றினார்.

இவ்வண்ணம் மஹரிஷிகளுக்கு தீய செயல்களையே செய்த இராவணன், பெரும் தவறாக சீதையை தூக்கிச் சென்றான். ராமன் சீதையை தேடும் பொருட்டு ஹனுமனை அனுப்பினான். ஹனுமனும் கடலை ராமனின் அனுகிரஹத்தால் கடந்து, சீதை கண்டுபிடித்து, ராமனின் மோதிரத்தை கொடுத்து, சீதையிடமிருந்து சூடாமணியை பெற்றார்.

திரும்ப செல்லும் முன்னர் ராக்ஷஸர்களிடம் ஹனுமான் தானாகவே பிடி பட்டார். பிடி பட்ட போது தன்னிடம் இருந்த “ஆவணங்களை (சீதையின் சூடாமணியை) யாரும் பார்க்கா வண்ணம் மறைத்தார்”. இந்திரஜித் வலிமை வாய்ந்த அஸ்திரமான ப்ரஹ்மாஸ்திரத்தை ப்ரயோகம் செய்த போது, அந்த அஸ்திரம் ஹனுமனை ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் ஹனுமன் கட்டுப்பட்டது போல் இருந்தார். மேலும் தான் “ராம தூதன்” என்றும் வேண்டிய தகவலை மட்டுமே அளித்தான்.

ப்ரஹ்மாஸ்திரம் ஹனுமனை ஒன்றும் செய்யவில்லை என்றறிந்த இராவணன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான். “வலிமை வாய்ந்த ப்ரஹ்மாஸ்திரமே வேலை செய்யாததால் என்ன செய்வது என்று திகைத்தான் இராவணன்”. மேலும், அருமை பெருமை அறியாமல் உயர்ந்த அஸ்திரமான ப்ரஹ்மாஸ்திரத்தை அவசரப்பட்டு உபயோகப்படுத்தியதால் அந்த அஸ்திரத்தை அளித்த ப்ரஹ்மதேவனுக்கு தங்கள் மேல் கோபம் ஏற்படும் என்று அறிந்தான். மறுபடியும் ப்ரஹ்மாஸ்திரம் வேண்டி தவமிருந்தால் கூட ப்ரஹ்மா அளிப்பாரா என்பதும் கேள்விக்குறியானது. இந்த தோல்வியானது, ஏனைய நாட்டு அரசர்களும், தேவர்களும் சுலபமாக ராவணனுக்கு நெருக்கடி அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

அந்த சமயம் “தன் வீரத்துக்கு இழுக்கும், லங்கைக்கு ஆபத்தும் வந்துவிடக்கூடாது” என்பதே இராவணனின் ஒரே நோக்காக இருந்தது. இதனால் “விபீஷணன் கூறிய அறிவுரையை வேறு வழியின்றி” ஏற்று, ஹனுமனை விடுதலை செய்ய ஆணையிட்டான் இராவணன்.

ஹனுமன் கிளம்பும் பொழுது, அங்கிருந்த நல்லவர்களான(civilians) அப்சரஸ் ஸ்த்ரிகள் மற்றும் அசோக வனத்திற்கும் ஆபத்து நேராவண்ணமும், “தீயவர்களை மட்டும் பாதிக்கும் வண்ணம் இலங்கையை கொளுத்தினான்“.
சீதையை கண்டுபிடித்து, வலிமை வாய்ந்த ப்ரஹ்மாஸ்திரத்தை வென்று, எதிரிகளிடமிருந்து திரும்பி வந்த “வாயுநந்தனை“, மிகவும் சந்தோஷமடைந்த ராமன் “அபிநந்தன்” / “வாழ்த்துக்கள்” என்று இறுக தழுவிக்கொண்டார்.

இதுவே “வாயுநந்தனுக்கு தசரதநந்தன் கூறிய அபிநந்தன் / வாழ்த்துக்கள்.”

#MassEncounter #Surgicalstrike #Civilian #Brahmasthiram #Hanuman #Ravanan #CrossBorderAttack #Terrorist  #Abhinandan
Sri #APNSwami #TheedhilaNallorThiral
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒