Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|தூய்மை பணியாளர்களுக்கு ஒரு Royal Salute| Royal Salute to Cleanliness Workers

This article is available in both Tamil (written by Sri APN Swami) and English (translation done by his sishyas).

தூய்மை பணியாளர்களுக்கு ஒரு Royal Salute

 

“சுத்தம் சோறு போடும்” என்பது முதுமொழி. சுத்தம், சுகாதாரம் இதை வலியுறுத்தியே அரசாங்கமும் பல திட்டங்களை முன்னெடுக்கிறது. “தூய்மை இந்தியா “ எனும் மாபெரும் சிந்தனையின் செயல்பாடுகளையும் நாம் பார்த்து வருகிறோம். ஆரோக்யமான வாழ்க்கைக்கு “சுத்தம்” அதாவது “ஆசாரம் “ மிகவும் இன்றியமையாததாகிறது.

ஊரடங்கு சட்டம் முழுமையாக அமுலில் உள்ள நிலையிலும் மருத்துவம், காவல், தூய்மை பணியாளர்கள் அயராது பாடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளையும் ஊடகங்களில் காண்கிறோம். தன்னலமற்ற தொண்டாற்றும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்பது மிகையல்ல.

தூய்மைப் பணியாளர்களை பாராட்டி மலர்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், பாத பூஜை செய்தும், மக்கள் கொண்டாடி வருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போன்று நாம் அனுதினமும், ஏன் ஒவ்வொரு கணமும் மாலையிட்டு, மலர்தூவி, பாதபூஜை செய்து கொண்டாட வேண்டிய தூய்மைப் பணியாளர்களின் பெருமையைக் காணலாம்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் பெரிய கோட்பாடான “சரணாகதி” என்பதை விளக்கி சுவாமி வேதாந்த தேசிகன் “ரகசியத்ரயசாரம்” எனும் ஒரு நூல் இயற்றியுள்ளார். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் நற்கதி அடையலாம் என்பதே இதன் தத்துவம். இந்த நூலின் முகவுரையில் “தூய்மை பணியாளர்களைப் போற்றி பின்னர் நூலினை எழுதத் தொடங்குகிறார். அவர்கள் யார்? என்ன செய்கின்றனர்?” என்று பார்க்கலாம்.

தூய்மைப் பணியாளர்களின் காரியம் என்ன? நகரத்தையும் சாலைகளையும் துப்புரவாக வைப்பது. அதாவது குப்பைகள், கற்கள், முட்கள், படுகுழிகள் என பல வகையான இடையூறுகள் பயணிக்கும் பாதையில் இருந்தது என்றால் அதனை சீர் செய்வது. அதாவது குப்பைகளை ஒதுக்கி அப்புறப்படுத்துவது. அதே போன்று சாலைகளையும் செப்பனிடுவது.

அப்போது தானே பயணம் எளிதாகவும், சுகமாகவும் செய்ய முடியும். இதிலிருந்தே புரிகிறதே தூய்மைப்பணி மகத்தானது மட்டுமல்ல சவாலானது. ஏனெனில் ஒரு புறம் தூய்மைப்படுத்தப்படும்போது, மற்றொரு புறம் எவராது அதன் தூய்மையைக் கெடுக்கலாம் அல்லவா!  இவ்வாறு நிகழாவண்ணம் வேலிபோட்டு, அனைத்தையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு, திறமையாகத் தூய்மைப்பணி செய்பவர்கள் நம் ஆசார்யர்கள் .

போச்சுடா! மறுபடியும் ஆரம்பித்து விட்டாயா? என அலுத்துக்கொள்ளலாம். ஆனாலும் மேலே படியுங்கள். எம்பெருமான் வேதம் எனும் ராஜ மார்கத்தில் (Express Highway) பயணம் செய்கிறான். ஆம். அதுதான் அவனது ராஜவீதி. “அதாவது வேதத்தில் உறைபவன் இறைவன்” என்பது பொருள். அப்போது சில வீணர்கள் (வீணர்கள் என்றால் விதண்டா வாதம் செய்பவர்கள். தேவையான விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது தேவையற்ற பதிவுகளை இடையே நுழைத்து கர்வப்படுபவர்கள். குறிப்பாக எதுவும் தெரியாமல், புரியாமலேயே எல்லாம் தெரிந்ததாகத் தங்களை நினைத்துக் கொண்டு இறுமாப்புடன் திரிபவர்கள். மொத்தத்தில் பயனற்ற காரியங்களைச் செய்வதையே தங்களின் பிறவிப் பயனாக எண்ணுபவர்கள்) வேதத்தின் உண்மை நிலை அறியாமல் எதிர்வாதம் செய்திடுவர். அது மட்டுமல்ல, வேதத்தின் உள்ளம் அறியாமல் நேர் எதிராக, தவறாக, விபரீதமாகப் பொருள் கூறுவர்.

சுத்தமாக வைத்திருக்கும் தெருவில் வேண்டுமென்றே குப்பைகளைக்கொட்டுவது, பள்ளம் தோண்டுவது, கல்லும், முள்ளும் கொண்டு கொட்டி பாழ்படுத்துவது என அதர்மமான கார்யங்களைச் செய்பவர்கள் உண்டல்லவா! அதேபோன்று வேத மார்கத்தையும் சிதைகின்றனர் சிற்றறிவாளர்கள். அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குமவர்கள் நமது ஆசார்யர்கள். அதாவது “வைதீக தர்மத்துக்கு கேடு விளைப்பவர்களை களையெடுப்பவர்கள்”.  “ஆரணநூல் வழிச் செவ்வை அழிப்பவர்” என்கிறார் சுவாமி தேசிகன்.

அழகிய வழிதனை ஆபாஸம் செய்பவர்கள் என்று பொருள். இப்படி இவர்களை அடக்கி, வேதத்தின் தூய்மையை நிலைநாட்டுமவர்களே “ஸ்ரீமத் வேதமார்க ப்ரதிஷ்டாபனாசார்யர்” என அழைக்கப் படுகின்றனர்.

 பெருமாளுக்கு உத்ஸவம் என்றால் முதல்நாள் சேனை முதலியார் எழுந்தருளி நகர சோதனை செய்வதுண்டே, நம் ஆசார்யர்களும் நகரத்தை (வேத மார்கத்தை) சுத்தம் செய்யும் தூய்மைப்பணியாளர்கள். தேவாதிராஜனாம் வரதனின் ராஜவீதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து காக்குமவர்கள்.

அத்தகைய மஹாத்மாக்களை போற்றியுகந்து, மலர்தூவி, மாலை அணிவித்து, பாதபூஜை செய்து வழிபடுவது என்றுமே நமது கடமையாகும்.

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

07/04/2020

Royal Salute to Cleanliness Workers

Cleanliness is Godliness” is a phrase that we all know and our government has also rightly come up with many schemes that promote health, hygiene, and sanitation, with Clean India being its flagship scheme. All this reiterates the fact that cleanliness and Acharam are an integral part of our lives. 

Even in this state of complete lockdown, medical, police, and sanitation workers are working in full swing and they are being appreciated by all sections of the society. Undoubtedly, no amount of appreciation is enough for their selfless service. 

It is heartening to see that the entire world appreciates their services by showering them with flowers, garlanding them, and by worshipping their feet. Let’s now see some reasons why we should appreciate them every day.

Swami Desikan has written a work called Srimad Rahasya Traya Saram that is based on the SriVaishnava Sampradayam’s fundamental philosophy of Saranagathi. It expounds the fact that everyone, regardless of race, religion, or gender, can attain a good state. In the foreword, Swami Desikan has specifically praised the cleanliness workers. Let’s see who they are and what they do.

What’s the work of a cleanliness worker? To keep the roads and city clean, right? In other words, they remove the stone, garbage, thorns, and other unwanted things from the roads to make it easy for people to travel through it. They remove the garbage and make the roads easy to commute.

Their work ensures that our travel is smooth and easy. This clearly brings out the fact that keeping the roads cleans is not only important, but also challenging. And that’s because when they clean on one side, there is always a possibility for someone to pollute it at the other end. To prevent this, a fence is erected and everything is kept under control to prevent this constant polluting. And our acharyas execute this perfectly.

Though this may sound familiar to you, please read on.

Perumal travels on this express highway called Vedas. Yes, that’s his Raja Veedhi (Royal Street) and it means He is the hidden meaning of Vedas. While traveling, there are a few dissenters, that is those who argue against the tenets established in the Vedas and those who intervene in an important discussion with unwanted and unrelated arguments just to gain attention. This specifically includes those who are highly ignorant, yet they argue as if they know everything. In all, they are people who constantly engage in unwanted activities. Without understanding the essence of Vedas, they argue incessantly and worse, they interpret its meaning wrongly and propagate the same to the world. 

Just like how people engage in wrong activities like polluting a clean street with garbage, digging pits in it, and covering it with stones and thorns, there are many who pollute and misinterpret Vedas also. Fortunately, our acharyas deal with them using their iron fist. That is, they eradicate the wrong notions/interpretations of Vedas with their profound knowledge. Swami Desikan says, “Arananool vazhi chevvai azhippavar.” It means those who pollute a beautiful path. Those who control them and re-establish the right Vedic path are called “Srimad Vedamarga Pratishtaapanaachariar”

Before Perumal’s festival begins, Senai Mudaliar goes on an inspection around the place. Like that, our acharyas are also cleanliness workers who clean the Vedic path and they stay in control of the Raja Veedhi of Varadan at all times. 

Let us praise such great acharyas by showering them with flowers, garlanding them, and by praying at their holy feet. 

-Translation by Sri APN Swami Sishyas

 

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

Please note that this article is available in both Tamil (written by Sri APN Swami) and English (translated by his sishyas)

Foreign போன பெரியோர்கள்

பர்த்ருஹரி எனும் மஹாகவி இருந்தார். அவரின் மூன்று நூல்கள் மிகவும் ப்ரசித்தமானவை. சுபாஷிதம் எனும் நீதிநூல், அடுத்தது ச்ருங்காரம் – அதாவது காதல் இன்ப நுகர்ச்சி, மற்றொன்று வைராக்யம் (உலகியல் வெறுப்பு) எனும் மூன்று நூல்களை மொத்தம் முந்நூறு ச்லோகங்களாக்கினார் மஹாகவி.

அதில் நன்னூல் (நீதி சாஸ்த்ரம்) ஆரம்பிக்கும் போதே ஒரு அத்புதமான உலகியல் தத்வத்தைக் கூறுகிறார். “ எதற்காக இப்போது இதனை எழுதுகிறாய்? எங்களுக்குத் தெரியாதது உனக்குத் தெரியுமா? இதென்ன வெட்டித்தனமான காரியம்? நீ என்ன மேதாவியா? உனக்கு மட்டும் தான் எழுதத்தெரியுமா?” என்றெல்லாம் பலர் கேள்வி கேட்பதாக வைத்துக்கொண்டு பதில் உரைக்கிறார்.

மெத்தப்படித்த ஜ்ஞானவான்கள் பெரும்பாலும் பொறாமையிலேயே காலம் கழிப்பர். (தன்னைவிட விஷயம் தெரிந்தவன் எவனுமில்லை. ஒருவேளை மற்றொருவனுக்கு புகழுண்டானால் அதில் காழ்ப்புணர்ச்சி அதிகமாகும்) “சரி அவர்களை விடுவோம். அரசர்களிடம் நல்வார்த்தைகளை எடுத்துச் செல்லலாமே!” என்றால்; “தங்களிடம் யாசகம் பெறும் பண்டிதர்கள் இவர்கள். இவர்களென்ன நமக்கு உபதேசம் செய்வது?” எனும் கர்வத்தால் பாராமுகம் காட்டுவர். அது போகட்டும். எதுவும் அறியாதவர்களுக்காக ஏதாவது நல்லது சொல்லலாமே! என்றால்; இவர்கள் இருவரையும் விட அறிவிலிகளின் நிலை மிகவும் மோசம்.

தங்களுக்கு ஜ்ஞானமே இல்லை, என்பதினை சிறிதும் அறியாமலேயே, அனைத்தையும் அறிந்தவர்கள் போன்று ஆர்பாட்டமாக வீண் ஜம்பத்துடன் பொழுது போக்கிடுவர். ஆதலால் இவர்களை நம்மால் நெருங்கவே முடியாது.

அப்படியானால் எதற்காக இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து எழுதுகிறாய்? இதனால் யாருக்கு என்ன பயன்? என்று கேட்பவருக்கு ச்லோகத்தின் முடிவில் அத்புதமான பதில் தருகிறார். “உங்களின் கேள்வி ந்யாயமானதுதான். நான் பல பெரியோர்களைப் பணிந்து நல்விஷயங்களைப் பயின்றேன். அதனை அசைபோடும் போது நல்ல எண்ணங்கள் தோன்றின. எனக்குள்ளேயே அதை சீரணித்துக் கொண்டேன். ஏனெனில் எவரும் ஏற்பவரில்லையே. இருந்தாலும் தான் சுவைத்த பதார்தத்தின் சுவையை, கேட்டாலும், கேட்காவிட்டாலும் மற்றவர்க்கு எடுத்துச் சொல்வது போன்று இந்த சுபாஷிதம் இயற்றுகிறேன். “எனது ஆனந்த அனுபவ வெள்ளத்துக்கு வடிகாலாய் இந்நூலை இயற்றுகிறேன். இது எனக்காக நானே இயற்றினேன் என்றும் கொள்க” என்கிறார்.

இப்படி மஹான்களே பார்த்து பயந்த உலகத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது பேராபத்துதான். என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒருவகையில் இவ்வுலகில் சிலருக்கு இது பயன்தரும் எனும் எண்ணத்தில் எழுதுகிறோம். பல தேசங்களுக்குச் சென்று வந்தவர்கள்மூலம் தொற்றுநோய் பரவுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பல தேசத்தில் உள்ளவர்களுடன் உறவுகள் தொடர்ந்திட இதுவும் ஒரு வழியாகிறது.

ஏனெனில் நமது பெரும்பாலான உறவுகள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். கண்டம் விட்டு கண்டம் அவர்கள் பரவியுள்ளனர். மிகவும் ஆபத்தான இந்த சூழ்நிலையில் அவர்களின் நிலை குறித்த கவலைவாட்டுகிறது. வெளிநாட்டில் வாழ முடியாத சூழலில் தாய்நாட்டிற்கு திரும்புபவர்களை வீட்டிற்குள்ளாக அனுமதிக்கக் கூடவியலாத நிலைமை. யோசிக்க, யோசிக்க பெரும் பயங்கரமான ஆபத்தில் சிக்கியுள்ளோம் என்றுபுரிகிறது. ஆனால் இந்த நிதர்சனத்தை நம்மனம் ஏற்க மறுக்கின்றது. தனிமையில் சுயபரிசோதனையாக தீய எண்ணங்களைத் தவிர்த்து நல்ல விஷயங்களை நினைக்க முடியாமல் தடுமாறுகிறோம்.

அது சரி இதற்கொரு தீர்வுதான் என்ன? என்னும்போது நமது வெளிநாட்டுப் பெரியோர்களின் வழியை பின்பற்றவேண்டும்.

இதென்ன புதுக்கதை. “ ஒரு வரைமுறை இல்லாமல் மனம் போனபடி பிதற்ற ஆரம்பித்து விட்டாய். குற்றவுணர்ச்சி சிறிதும் இன்றி மேன், மேலும் சாஸ்த்ரவழியை மீறுகிறாய்” என்று தோன்றும். ஆனாலும் வழக்கம் போல் தொடர்ந்து படித்திடுங்கள்.

பாரதப்பண்பாட்டின்படி நடக்கும் பெரியோர் – நமது ஆசார்யர்கள், ஆசார அனுஷ்டானங்கள் மிக்கவர்கள். “ எங்கே தங்களையறியாமல் காம, க்ரோத வசப்படுவோமோ?” என பயந்து எப்போதும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருக்குமவர்கள், மேலும் வெளியில் வந்தால் தங்களுக்கு ஆசாரக்குறைவு ஏற்பட்டுவிடுமோ? என்று அஞ்சி எதிலுமே எல்லையை மீறாமலிருப்பவர்கள்.

“ஸம்ப்ரதாய ப்ரவசனம் தவிர்த்து அதிகமான ஸஞ்சாரம் ஆத்மலாபத்திற்கு விரோதி” என உணர்ந்து ஒடுங்கியிருப்பவர்கள். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நாவல்பாக்கம் ஸ்வாமி போன்ற மஹான்களை இங்கு நினைக்க வேண்டும்.

மேலும் வெளிதேசம் செல்வது சாஸ்த்ர சம்மதம் அன்று எனும் கொள்கையில் நிலைத்தவர். (இன்றைய காலகட்டத்தில்; வெளிதேசத்தில் வசித்தும் நமது தர்மத்தை வளர்க்கும் ஆஸ்தீகர்களைக் காணும்போது ஆனந்தமுண்டாகிறது.) இருப்பினும் ஆசார, அனுஷ்டானங்களின் நிலைத்த மஹான்கள் இன்றுவரை வெளிதேசம் செல்வதைத் தவிர்ப்பது கண்கூடு.

இவ்விதமிருக்க ” foreign போன பெரியோர்கள்” என்று எப்படிச் சொல்லலாம் என்பது தானே கேள்வி. ஸ்வாமி தேசிகன் அளிக்கும் விடை கேன்மின்.

“ நம் ஸம்ப்ரதாய மஹான்களின் பெருமையை வேதமே கொண்டாடுகிறது. பெருமாள், பிராட்டியின் கருணை எனும் கங்கை நதியில் நம்மை குளிப்பாட்டி பரிசுத்தர்களாக்குகின்றனர் பெரியோர். அவர்களின் பெருமைக்குணம் தான் என்ன? என்றால்; “தாம் மெத்தப்படித்தோம் எனும் கர்வம், இதனால் மற்றவர்களை அவமானப்படுத்த முனைவது, முன்னோர்களின் வழியறியாமல் தான் தோன்றித்தனமாகத்திரிவது, பொறாமை, வஞ்சனையுடன் என்றும் நேரம் கழிப்பது.” இது முதலான தீய நடத்தைகளுக்கு (எண்ணங்களுக்கு) வெகு தொலைவில் இருப்பவர்கள் என்கிறார்.

அதாவது “வெளிதேசத்தில் (தூரதேசத்தில்) வசிப்பவர்களின் நடை, உடை, பாவனையில் நாகரிகம் உண்டு” என்பதல்லவா நமது எண்ணம். குறிப்பாக மேல்நாட்டு நாகரீக மோகத்தில்தானே நாம் அலைகிறோம். அந்த தூரதேசத்திலிருந்து (foreign) வந்தவர்களை வாய்பிளந்து அதிசயமாக காண்கிறோம். அவர்களின் வசிப்பிடத்தின் பெருமைகளை, அவர்கள் விவரிக்க, விவரிக்க விழிகள் விரியக் கேட்கிறோம். அவர்களைப் போன்ற நாகரிகம் ( நடை, உடை, பாவனை) நமக்கும் உண்டானால் உலகில் மதிப்பு உண்டாகும் என முயற்சிக்கிறோம் அல்லவா!

அப்படியானால் நாம் யாரை பின்பற்ற (follow) வேண்டும்? நமக்குத் தேவை foreigners கலாசாரம்தானே. அப்படியாகில் விதேசிகள் (foreigners) நமது ஆசார்யர்கள். அவர்களை பின்தொடரவேண்டும்.

ஆம், பொறாமை, கயமை, பொய்மை, மடமை, முதலிய துர்குணங்கள் உள்ள இடங்களிலிருந்து தூரதேசத்தில் (விதேசத்தில் – foreign) இருப்பவர்கள். அதாவது விலகி (social distance) இருப்பவர்கள் நமது ஆசார்யர்கள். அவர்களே வெளிதேசத்தில் வாழ்பவர்கள் (foreigners). இவர்களின் வழியைத்தொடர்ந்தால் நாம் நினைத்த நன்மதிப்பை உலகில் பெறலாம்.

எல்லா தேசங்களிலும் ஒரே ப்ரார்த்தனை ஒலித்திடும். இந்த சமயத்தில் உள்ளத்தூய்மையுடன் பெரியோர்களைப் போற்றுவோம். அவர்களின் தொல்வழியில் நடப்பதே நமக்கு நல்வழி என்றுணர்வோம்.

-ஸ்ரீஏபிஎன் சுவாமி

29/03/2020

English

The Elders who went to Foreign Lands

Once there lived a great poet called Bhartṛhari. All his three works were very famous and they were Subhashitham (a work on laws and justice), Sringaram (a work on love), and Vairagyam (hatred towards material pleasures). From these works, he had composed about 200 slokas.

Out of these, the book of law opens with a worldly philosophy. He assumes that people ask him questions such as, “Why are you writing this work?Do you think you know more than us?Why this waste of time?Are you so great? Do you think you’re the only person who knows to write?”, and he answers them right at the outset.

A lot of arrogant learned people tend to spend a considerable part of their time being jealous of others. (No one is better than them and when someone gets praised, their rancour towards them increases).  But even if you decide to leave them aside and strive to earn a good name from the kings, you’re likely to get mocked as the kings may think that pandits are those who get payment from him and hence, have no right to give advice. Finally, if you decide to teach someone who doesn’t know anything, it gets even worse!

They won’t even realize that they don’t know anything and will spend all their time in vanity and false pride. That’s why we can never reach them.

If that’s the case, why are you constantly writing about such things? Who gets to benefit from these?He answers those questions at the end with a beautiful sloka. |There is merit in your question. I have had the privileges to learn from scholars and while I think about them at my leisure, I get good thoughts and ideas. I imbibed and want to share this sweetness with the world, even if there is no one to listen to them. That’s the reason behind Subhashitham. This work is a flow of my blissful experience and I’m penning it down just for me”, he said.

Undoubtedly, this is not a good trend for scholars to write as the world is scared to see them or accept their work. Still, they persist in the hope that it will benefit someone someday! This is also a way to connect with people around the world, especially at a time when we hear that COVID19 spreads from people who travel around the world. 

Many of our family members live in  other countries spread across other continents. During these trying times, their state of affairs worries us. Even people who return home from foreign countries have to be in self isolation. The more we think about it, the imminent danger that we are stuck in becomes apparent. But our minds refuse to accept this harsh situation. We are staggering due to our inability to stay positive during these difficult times.

When you think of the solution to this problem, it becomes apparent that we have to follow the ways of our elders in foreign countries. 

What’s this new story now? “You have started rambling and are furthering the deterioration of our sastrams by taking this route!” If you’re thinking like this, read on as usual to know the reason.

Our acharyas follow the path laid down by our Sastras and live their lives according to the culture of our land. “Can lust and anger even creep in without your knowledge?” Driven by these thoughts, they always isolated themselves from unwanted things. Moreover, fearing that their way of life will be affected when they travel too much, they lived within their limits.

They were of the firm belief that besides traveling to propagate our way of life, any other travel was not good for their atma. Here we have to think of great people like Navalpakkam swami who lived towards the end of the 20th century.

He lived in the belief that traveling abroad is against our sastrams (In today’s world, it is happy and heartening to see that all those who are living abroad are playing a big role in propagating our Sanatana Dharma). At the same time, we can see that those who are steeped in acharams refuse to travel abroad.

Now, you might wonder why is this article titled “The Elders who went to Foreign Lands“? Read the answer given by Swami Desikan.

Even Vedas celebrate the greatness of our learned people. Our elders dip us in the Ganga river (the compassion of Perumal and Piratti) to purify us. If you’re wondering what is their greatness, they are the ones who are far away from bad and negative qualities such as arrogance, false pride and shaming others through it, not following the path shown by our elders, jealousy, and hatred. 

Today, we believe that people living in foreign lands are more cultured than us. In fact, we are mesmerized by the Western culture. We gape at foreigners with a wide open mouth and we are completely captivated by all that they say about life in those lands. Hearing this, we also strive to follow the same culture in the belief that our status will also be elevated when we live like that.

In that case, whom should we follow? Since we want to follow foreigners, we should follow our acharyas because they are the real foreigners.

Yes, they are the ones who stay in foreign lands, away from qualities such as jealousy, anger, hatred, and falsehood. They maintain social distance with these qualities. When we follow their footsteps, we can earn the good status and life that we want.

At a time when the same prayer is ringing in the hearts of people around the world, let us cleanse ourselves by talking about the glories of our elders. Let us understand that following their footsteps is the best path for us. 

– Translation by Sri APN Swami’s Sishyas

Links to Articles in this Series

9.Foreign போன பெரியோர்கள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine

 

Sri APNSwami’s Shishya Writes | Teacher’s Day in our Sampradayam

NOTE:  This is a small write-up by Sri APN Swami’s Sishyas based on Swami’s experience with his  Acharyan and the all-important role that every Acharyan plays in our day-to-day lives.

Our sampradayam is unique in many ways, and one of them is the unbreakable line of guru paramparai. Starting from Perumal to our current Acharyan, this guru paramparai continues without any break in the lineage.

In general, relationships are fragile because they can be broken at any time. Many times, we tend to stay away from people whom we don’t like or with whom we are not comfortable with. This could include even close relationships like husband-wife or father-son. In fact if you do certain rituals, you can permanently sever the relationship and have no connection whatsoever with the other person, so much that no “thetu” is even applicable when any untoward incident happens to the other person.

But one relationship that you can never break or sever is your relationship with Perumal. Andal rightly says, “Undan odu uravel namakku ingu ozhikka ozhiyaathu” (pasuram 28 of thiruppavai). This means we can never break our relationship with Perumal. And why is that? Because of our association with our acharyan. This is the greatness of an acharya-sishya relationship. Even blood relationships can break but your relationship with your acharyan can never break, regardless of anything.

What exactly is this acharyan-sishya relationship?

On the face of it, most of us think that giving sambhavanai, doing namaskaram to him, learning the meanings of different granthams, and taking his guidance on sampradayic and day-to-day activities alone define this relationship.

But in reality, this relationship is far deeper than this. An acharyan is not only a guide on the philosophical side, but also plays an important role in making you strong on the emotional, mental, and psychological side as well. In this sense, he teaches us not only the path to get moksham, but also to live a healthy life on earth. In fact, he can even help us in the most trickiest situations of our life.

Just like how Perumal protects us at all times, like that our Acharya also protects us always.

This can bring up an important question in our minds? Why don’t all people get the same level of acharyan anugraham? Why is it that some people seem to have more anugraham than others?

Let’s understand this with a simple example. Let us say in a class there are 50 students. Do all of them get the first rank? No. And why? Because their ability to grasp what the teacher is saying varies. In other words, some children are able to better understand what the teacher is saying when compared to others and this is why such students tend to get higher marks. Likewise, all of us understand and follow our Acharyan’s words in varying degrees and this is why the level of his anugraham also varies. If we follow our acharyan’s words perfectly and follow him obediently, there is no reason why we will not get his complete anugraham.

We can understand this better with Madurakavi Azhwar’s Kanninum Siruthambu . In one of the pasurams, he says, “Thirithandaakilum deva piraan udai kariya kola thiruvuru kaanban naan…” (pasuram 3). We all know that Madurakavi Azhwar is an ardent student and follower of Nammazhwar, then why did he talk about Perumal? Madurakavi Azhwar says that when he talks about Perumal, it makes his acharyan happy and this is why he praises Perumal. Such is his acharyan bhakti. He set the right example for all of us to follow.

So, when should we follow our acharyas obediently and imbibe their words? Everyday.

Though September 5th is celebrated as Teacher’s Day, in reality, every day is teacher’s day in our sampradayam because our acharyas give us their anugraham each and every minute. Let us all strive to make our Acharyas happy by following their wishes/commands in the best way possible to make them happy and to establish a deep bonding with them.

Acharyan Thiruvadigale Charanam

Sri APNSwami’s Shishya Writes | Acharya Vaibhavam | Sriman Nathamunigal

As today being Aani Anusham Sriman Nathamunigal thirunakshatram , we are publishing the English version of Sriman Nathamunigal Vaibhavam based on Acharya Vaibhavam book written by Sri. U.Ve. Purisai Nadadur Krishnamachariar Swami.  

                      Acharya Vaibhavam

                    Sriman Nathamunigal

WhatsApp Image 2019-07-13 at 9.11.19 PM

Sriman Nathamunigal

JyesthtOnooraddha sambhootham veeranarayanE pure |

Gajavaktraamsham Acharyamaaddhyam naadhamunim bhaje ||

     Once there lived a pious person called Ishvaramuni in a place called Veeranarayanapuram (near present KattumannarKoil).  He belonged to the Sottai clan and was born in Sadamarshana gothram. In Kaliyugam year 3985 and the Tamil year of Sobakruth Aani Anuradha Star, Ishvaramuni was blessed with a boy.  He was named Nathar.

     Ishvaramuni and his wife performed all the rituals like Jaadhakarmam and upanayanam at the right ages and Nathar began to learn Vedas and other scriptures through his formative years. He mastered the different scriptures quickly because of his devout nature and he soon became popular for his knowledge. 

    SriNathar married a lady called Aravindhapaavai (daughter of Vangeepurathaachi) and they continued to live in Veeranarayanapuram.  SriNathar continued his kainkaryam to the presiding deity of this place, Mannar, and at the same time began to practice in Yogic shastram. Soon, they were blessed with a baby boy and he was named Ishvaramuni.  SriNathar and his wife performed the different rituals for their son at the right age and Nathar also imparted his yoga knowledge to his son.  They all lived happily in Veeranarayanapuram.

     After a few years, Nathar wished to go on a pilgrimage with his family to the divyadesams in North India.  He prayed to SriMannar and went to different places like Mathura, Salagramam and Ayodhya and prayed to the presiding deity of all these places. He also had a dip in holy rivers like Ganga, Yamuna and Sarayu and from there, went to Govardhan. SriNathar was so happy seeing Yamunai Thuraivar there and mesmerized by His beauty, the entire family began to live there.

     Many years later, SriNathar had a dream one night. In his dream, SriMannar asked him to come back to Veeranarayanapuram at the earliest.  After taking the permission of Yamunai Thuraivar,  SriNathar and his family began the journey back. On the way, they visited many holy places such as Kasi, Puri, Simhadri, Ahobilam, Tirupathi, Kadikasalam, Kanchipuram, Thiruvaheendrapuram,  Thirukovilur and Srirangam. Finally they reached Veeranarayanapuram  and SriNathar rushed to see his beloved Mannar. Perumal too was eagerly waiting for Nathar and He showered his happiness and blessings as if a mother was welcoming a son who had gone abroad.  Nathar continued his kainkaryam to Mannar and lived happily.

     Once, a few SriVaishnavas had come from a place called Thirunagari and they sang a few hymns on Aravamudha Perumal.  Their hymans portrayed the divine qualities of Perumal and it was a divine experience to hear them sing.  They sang only 10 hymns, but at the end of the 10th one, they sang that this is the 10 of 1000 hymns written by Kurugoor Sadagopan.  Nathar was completely involved and could feel a divine connect with Him through these songs, so he wanted to know more about the remaining 990 hymns.  Nathar gave them the prasadam of Mannar and  requested the group to teach him all the 1000 songs called Thiruvaaimozhi. 

     But the SriVaishnava group said that they know only these 10 songs.  They further explained that though Thirunagari was their birth place, they have been traveling to different divya desams for many years.  Once when they went to a place called Thirukudanthai, they prayed to Aravamudhan Perumal there.  While praying, they heard another group singing these songs about Aravamudha Perumal and this is how they learned it.

    The group soon left, but Nathar’s yearning to learn all the 1000 songs kept increasing by the day.  One day, Nathar decided to go to Thirukudanthai and pray to Aravamudha Perumal there.  After singing these 10 hymns in front of Him, Nathar felt happy and he began asking the elders there to teach him all the 1000 songs.  But they didn’t know either.

    Not satisfied, Nathar went to Azhwarthirunagari.  After praying to perumal there, he approached the elders to teach him Thiruvaaimozhi.  They also said that they have only heard of it, but don’t know the songs.  But they said they know a hymn called “Kanninum Siruthaambu” which praises about Nammazhwar.  They further said that they have learned it in the Sampradaic way and they have heard that when anyone recites it 12,000 times, Nammazhwar will appear before that person.

    Immediately Nathar learned these hymns and recited it 12,000 sites near the Tamarind tree where Nammazhwar sat for many years.  Perumal and Thayar asked Nammazhwar to appear before Nathar and teach him the complete divyaprabandham.  As per their orders, Nammazhwar appeared with Madurakavi Azhwar and taught all the prabandhams to Nathar.  In addition, they also taught him divine stotras such as Thirumandiram,  Vyasa soothram and other secret granthams with their respective meanings.  After learning all this, Nathar prostrated Azhwar and Perumal many times and returned home beaming with happiness and contentment.  On the way, he spread the word about these Prabandhams and in one such place, a group of elders told him a story related to it.

     Thirumangai Azhwar with the blessings of Periya Perumal brought Nammazhwar idol to Thiruvarangam and starting from Sukla Paksha Ekadasi for 10 days Thiruvaimozhi was recited along with Vedas, named this as Thiruadhyayana Utsavam. This was followed for years. As years passed bringing Azhwar idol was stopped and DivyaPrabandham was lost. This was the story communicated by the group of elders to Nathar.  

     Hearing this, Nathar felt that Perumal had completed one task through him and he hoped that he will get the opportunity to complete the next one too. He went to the temple and with the permission of the temple authorities, he brought the idol of Nammazhwar from Thirunagari to Srirangam.

    By doing so, he revived the lost practice that was once followed and reinstated the utsavam called Thiruadhyayana Utsavam. During this utsavam, Nathar sang the first 2000 hymns from divya prabandham for 10 days starting from Sukla Pradhamai and the 1000 hymns of thiruvaaymozhi for 10 days starting from Ekadasi. He sang the remaining 1000 hymns on the next day, thereby making the 21-day Thiruadhyayana utsavam a grand success. 

    Later, he went to Thirukudanthai, prayed to Aravamudham and consecrated an idol of Nammazhwar there. He also started the practice of conducting Thiruadhyayana utsavam in Thirukudandhai.  Since Nathar took so much effort in establishing the principles of Vishishtadvaitham, he came to be called Vishishtadvaitha Siddhantha Pravarthakar Sri Aravamudhazhvan and even Aravamudhazhvan was happy to see this glory being bestowed on Nathar.

    Nathar continued to live in Veeranarayanapuram under the command of SriMannar. At that time, he had many disciples such as Keezhaiagathazhvan and Melaiagathazhvan to whom he taught divya prabandham. After they completed this learning, he sent them to varied places such as Srirangam to spread these hymns.

    Just like how Vyasa played an important role in dividing Vedas into four parts, Nathar also played an important role in creating a tune (Devagaanam) for each of these hymns. 

    Once, there were two ladies who went to the Chola kingdom. Out of the two, one of them sang divya prabandham in devagaanam while the other sang it in manushagaanam.  The king, out of his inability to understand devagaanam, honored the lady who recited the hymns in manushagaanam.  This offended the lady and she went to Nathar for justice.

     Nathar is never the kind of person who likes to visit kings and courts.  But since this involved divya prabandham, he was requested by many people to intervene.  Giving into the request of so many people, he went to the king.  To prove that devagaanam is better, he kept a pair of jalra (cymbals) on a pillar and clapped it 74 times while singing the prabandham.  As he kept clapping, the pillar began to melt and the jalra was caught into the melting liquid.  When he stopped, the melted liquid solidified and the jalra was caught in it.  Then, Nathar asked the lady to sing in manushagaanam and bring the jalra out.  But she couldn’t do it. Next, he asked the other lady to sing in devagaanam and hearing this, the jalra loosened and they were able to take it out of the pillar.  By doing so, Nathar proved that devagaanam is indeed superior and the king honored both the lady who sang in devagaanam as well as Nathar for his timely intervention in helping the king understand the true importance of this gaanam.

     As Nathar had no attachment to worldly pleasures, he didn’t accept any of the gifts given by the king and he continued to live a life of simplicity and devotion.

     SrimanNathamunigal composed  two important grantas Nyayathatvam and Yogarahasyam 

NaathEna Munina thEna BhavEyam naathavaanaham |

Yasya naigamikam thathvam hasthaamalakathAm gatham ||

-English Translation by Sri APN Swami’s Shishyas

 

Sri #APNSwami #Writes #Article| அத்தி வரதர்‌ | Athi Varadar| #Editorial | #SriNrusimhapriya

This post is available in both English and Tamil. The original Tamil article is written by Sri APN Swami and the English translation is done by his shishyas.

                                        அத்திவரதர்‌

அத்தி வரதரை பற்றிய அரிய தகவல்‌

WhatsApp Image 2019-06-17 at 12.58.23 PM (1)
Enter a caption

ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா(தமிழ்) விகாரி ஆனி (June 2019) மாத இதழில்‌ Editorial by ஸ்ரீAPN சுவாமியின்‌ சம்பாதகர்‌ குறிப்பிலிருந்து

ப்ரஹ்மாண்ட புராணத்தின்படி, ஒவ்வொரு யுகத்திலும்‌ ஒவ்வொருவரால்‌ ஆராதிக்கப்படும்‌ வரதன்,‌ கலியில்‌ அனந்தாழ்வானால்‌ ஆராதிக்கப்படுகிறான்‌. தற்போது ஊரெங்கும்‌ அத்திவரதர்‌ குளத்திலிருந்து எழுந்தருள்வது குறித்து பரபரப்பாகப்‌ பேசப்படுகிறது.  மக்கள்‌ மத்தியில்‌ பெரும்‌ எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது உண்மை.

ஆதி அத்திவரதர்‌ திருக்குளத்தினுள்‌ எழுந்தருளப்‌ பண்ணப்பட்டது குறித்து பலவகையான ஊகங்கள்‌ நிலவுகின்றன.  ஒரு சில சிதைந்த கல்வெட்டு ஆதாரங்களும்‌ இதுகுறித்த செய்திகளைத்‌ தெரிவிக்கின்றன.

ஒரு காலத்தில்‌ வரதன்‌ சந்நிதியில்‌ நடைபெற்ற பாலாலயத்திற்காக (தாரு) மரத்தில்‌ செய்யப்பட்ட பாலாலயப்‌ பெருமாள்‌ இவர்‌.  சம்ப்ரோக்ஷணம்‌ முடிந்த பிறகு இப்பெருமாளைக்‌ குளத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணினர்‌ என்பது ஒரு கருத்து.

    ப்ரஹ்மதேவர்‌ யாக வேள்வியில்‌ உத்சவர்‌ அவதரித்த பின்பு, இங்கு மண்டப ப்ராகார கோபுரங்களை நிர்மாணித்து, யாகத்தின்‌ யூபஸ்தம்பம்‌ (யாகத்தில்‌ நடப்படும்‌ மரத்தூண்‌) அத்தி மரத்தினைக்‌ கொண்டு ப்ரஹ்மா மூலவரை ப்ரதிஷ்டை செய்தார்‌.   இவரே ஆழ்வார்‌ ஆசார்யர்களால்‌ மங்களாசாசனம்‌ செய்யப்பட்டவர்.  யுகங்கள்‌ பல கடந்ததால்‌ அந்தத்‌ திருமேனி சற்றே பின்னப்பட்டதால் (சேதமடைந்ததால்)‌ தற்போதுள்ள மூலவரை (சிலா ரூபமாக) ப்ரதிஷ்டை செய்து, ப்ராசீன அத்தி வரதரைக்‌ குளத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணினர்‌ என்று ஒரு கருத்து.

    கி.பி.1687 முதல்‌ 1711 வரை ப்ரபவ ஆண்டு தொடங்கி இருபத்தியிரண்டு ஆண்டுகள்,‌ வரதர்‌ உத்சவர்‌ காஞ்சியை விடுத்து வெளியே செஞ்சி, உடையார்‌பாளையம்‌, அணைக்கரை முதலிய இடங்களில்‌ வாசம்‌ செய்தார்‌. ஒளரங்கசீப்பின்‌ படையெடுப்பால்‌ தென்னிந்தியாவில்‌ பெரும்‌ பதற்றம்‌ நிலவியது.

இப்படி ஆலயங்களுக்கு ஆபத்து நேரிட்டபோது பெருமாளைக்‌ காப்பாற்ற பாதுகாப்பான இடங்களுக்குக்‌ கொண்டு சென்றனர்.  ஆனால்‌ அதே சமயம்‌, மூலவிக்ரஹங்களின்‌ பீடத்தில்‌ தங்கம்‌, வைரம்‌, வைடூரியம்‌ புதைக்கப்பட்டுள்ளதாக மொகலாயர்கள்‌ நம்பியதால்,‌ அதைக்‌ கொள்ளையடிக்க முயன்று மூல விக்ரஹங்களையும்‌ சேதப்படுத்தினர். இதனால்‌ ஆழ்வார்‌ ஆசார்யர்கள்‌ வழிபட்ட மூலமூர்த்தியின்‌ திருமேனியைப்‌ பாதுகாக்கக், குளத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணினார்கள்‌.  கலவரங்கள்‌ நீங்கி தேசத்தில்‌ அமைதி நிலவிய பின்னர்‌ உத்சவர்‌ உடையார்‌பாளையத்தினின்றும்‌ திரும்பி எழுந்தருளினார்.

இதன்‌ நடுவில்‌ மூலவிக்ரஹத்தைப்‌ பாதுகாத்த பெரியோர்கள்‌, அதை வெளியே சொல்லாத காரணத்தாலும்‌, அவர்கள் மறைந்ததாலும்,‌ பின்வந்தவர்கள்‌ புதிய மூலவரை சிலா ரூபத்தில்‌ எழுந்தருளப்‌ பண்ணினர். பின்னர்‌ சுமார்‌ நாற்பதாண்டுகள்‌ கழித்து எதிர்பாராமல்‌ குளம்‌ வற்றியபோதோ, அல்லது தூர்வாரியபோதோ அதில்‌ அத்திவரதரைக்‌ கண்டு ஆனந்தித்து, பின்னர்‌ அதுவே சம்ப்ரதாயமாக, “நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை” என வெளியே எடுத்து சேவிக்கின்றனர்‌ என்பது மேலும்‌ ஒரு கருத்து. இருபத்தியிரண்டு வருடங்களுக்குப்‌ பின்பு உத்சவர்‌ மீண்டும்‌ காஞ்சி எழுந்தருளினார்‌.  வருடந்தோறும்‌ பங்குனி உத்திரட்டாதியில்‌ உடையார்பாளையம்‌ உத்சவத்தை தற்போதும்‌ வரதன்‌ கண்டருளுகிறான்‌.

இது குறித்து விவரங்களை நாம்‌ எழுதியுள்ள நமது சரித்திர நாவலாகிய “யமுனைத்துறைவர்‌ திருமுற்றம்” எனும்‌ நூலில்‌ காணலாம்‌.  எது எவ்வாறாயினும்‌, அத்தி வரதரை மறுபடியும்‌ ஒருமுறை சேவிக்க அனைவருமே ஆவலாக உள்ளோம்‌.

நன்றி ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா

 

                                  Athi Varadar 

(Interesting information about Athi Varadar)

Want to know about Athi Varadar? Here is a snippet from Sri Nirusimhapriya’s (Tamil) July edition where Sri APN Swami, the editor, writes about it in detail.

Brahmanda puranam says different people take care of doing puja and kainkaryam (Service) to Varadan in each yugam. In Kali Yugam, Ananthazhwan does this Aradhanai for Varadan.

Currently, there is a buzz around Athi Varadar and there is a palpable excitement about seeing Him again after 40 years. At the same time, there are also many questions about why He is kept submerged in the tank and brought out only once in every 40 years. A dilapidated stone carving throws some light into this practice.

Some people say that many years ago, the Kanchi temple underwent renovation. During such temple renovations, Baalaalayam is a practice prescribed by the sastras. For this Baalaalayam, a statue of Varadan was carved out of a fig (Athi) tree. Once the temple renovation was done, this Athi Varadan was submerged into the temple tank.

Another opinion is that Brahma was conducting a yagam from which the Utsavar emerged. For this yagam, fig trees were implanted and it is believed that Brahma consecrated the Moolavar using these trees. Many Azhwars and Acharyas had prayed to this Athi Varadan. But due to the wear and tear of many centuries, the temple authorities consecrated a stone idol of Moolavar and retired this Moolavar to the temple tank.

History gives us a different answer. Between 1687 and 1711, the southern part of India saw Mughal invasion under Aurangazeb. The Mughals believed that gold, diamond, precious stones and treasures were buried in temples, right below the Moolavar. To get their hands on these riches, they began to destroy many temples, Fearing that the same would happen to Varadaraja Perumal, His devotees took the utsavar to places like Udayar Palayam Senji, and Anaikarai to avoid any damage by the Mughals. So, Varadan lived away from Kanchipuram for 22 years!

The Mughals who came looking for riches damaged the Moolavar of many temples. In order to protect the Moolavar of Varadaraja Perumal temple, the elders of that time decided to keep Him under the temple tank as they wanted to preserve the deity on whom Azhwars and Acharyas had sung many songs.

After the riots were over and peace prevailed, utsavar was brought back to Kanchipuram and in honour of this, Varadan visits Udayar Palayam every year on Uththiratadhi star of Panguni month every year.  Also, a stone idol of Varadaraja Perumal was consecrated.

So, why is Athi Varadar brought out only once in every 40 years?  The people who decided to take Varadan to the temple tank wanted to preserve this secret for fear of attack by Mughals. Over a period of time, these elders passed away and information about Athi Varadar was lost to the world. About 40 years after the consecration of the new Varadan, there was a severe drought and the tank dried up. Some say, it was not drought, but a renovation work took place in the temple tank. Either way, this was when Athi Varadar was discovered. In commemoration of this finding, bringing out Athi Varadar once every 40 years became a custom and this is what is being done this year too.

More details about this interesting incident can be found in a historic novel called “Yamunai Thuraivar Thirumuttram” written by Sri APN Swami.

Sri APNSwami’s Shishya Writes | Acharya & Shishya

ஸ்ரீ:

ஆசார்யனும் சிஷ்யனும்

ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் பகவானை விட பாகவதனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  பாகவதர்களில் ஆசார்யனாக நம் நன்மை விரும்புபவரின் பெருமையை விளக்குவது எளிதல்ல.

இன்றைய  காலகட்டத்தில் கல்விகள் எல்லாம் சுமையான கல்விகளாகவே இருக்கின்றன. ஆனால் நம், ஆசார்யர்கள் நம் நன்மை மட்டுமே வேண்டி, ஆத்மாவை பற்றியும், நாம் எவ்வாறு என்றும் நிலைக்கும் இன்பமான மோக்ஷத்தை பெற முடியும் என்னும் உயர்ந்த கல்வியையும் கற்றுத் தருகின்றனர்.

பசுவானது கன்றுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாலை அளிப்பது போல், நம் ஆசார்யர்கள்  ஸத்சிஷ்யனுக்கு புகழ், பொருள், புண்ணியம் என எதையும் எதிர்பார்க்காமல், ஸத்விஷயங்களை அதாவது ரஹஸ்யங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள் என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

அப்படிப்பட்ட ஆசார்யனுக்கு சிஷ்யன் கைம்மாறு செய்வது என்பது எளிதான விஷயமில்லை.  இருப்பினும் கீழ் உள்ளவற்றை சிஷ்யன் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்பது பெரியோர் வாக்கு.

  1. ஆசார்யனை ஸேவித்தல்
  2. ஆசார்யன் தனியனை அனுஸந்தானம் செய்தல்
  3. ஆசார்யன் விரும்பும் கைங்கர்யத்தை செய்தல்
  4. ஆசார்யன் பெருமைகளை மற்றவர் அறிந்திடும் வகையில் பேசுதல்/எடுத்துரைத்தல்

அடியேனின் ஆசார்யன் ஸ்ரீ APN ஸ்வாமி,  ஒரு சிஷ்யன் செய்ய வேண்டிய கடமையினை எவ்விதம் தன் வாழ்க்கை நெறியாக கொண்டுள்ளார் என்பதை அடியேன் அறிந்தவரை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

  1. ஆசார்யனை ஸேவித்தல்:

நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தும் அதில் வெற்றி பெற எல்லோராலும் முடிவதில்லை.  இதற்கு காரணம் நாம் செய்த பாபங்களே ஆகும். நல்ல செயலில் ஈடுபட விடாமல் நம்மை நம் பாப விஷயங்களே தடுக்கின்றன. இதற்கு வழி தான் என்ன?

பெரியோர்களை ஸேவிப்பதால் அவர்களின் அனுகிரஹம் நமக்குக் கிடைக்கும், மேலும்  நம்முடைய  பாப கர்மாவையும் தீர்க்கலாம்.

ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஸ்வீகரித்த லக்ஷ்மணாச்சார்யாருக்கு பாபம் தீர்ந்து  உடம்பில் இருந்த உபாதைகள் தீர்ந்தன.  மஹாபாபியான க்ஷத்ரபந்து ஆசார்ய அனுகிரஹத்தினால் மோக்ஷம் அடைந்தான், புண்யவான் புண்டரீகனுக்கு ஆசார்ய ஸம்பந்தம் இல்லாத காரணத்தால் மோக்ஷம் தாமதமாயிற்று.

ஸ்ரீ, APN ஸ்வாமி ஆசார்ய அனுகிரஹத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி விவரித்ததை இங்கு அனுபவிக்கலாம்.

APN ஸ்வாமி அவர்கள் ஸம்ப்ரதாய ஞானம் பெற்றதற்கு, தன் ஆசார்யன் ஸ்ரீ புரிசை ஸ்வாமியின் கடாக்ஷமே காரணமாம். விளையாட்டாக கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருந்தவர்,  ஸம்ப்ரதாய ஈடுபாடு பெற்றதற்கு ஆசார்யனை நித்யம் ஸேவித்ததே காரணம் என்றார்.

“தினமும் ஸ்வாமியிடம் வாசித்தீரா?” என்றால் அதற்கு “சிலநாட்கள் வாசிக்கவில்லை, சில க்ரந்தங்கள் ஸ்வாமியிடம் கற்க முடியவில்லை” என்பது APN ஸ்வாமியின் பதில்.

ஆனால் “தினமும் புரிசை ஸ்வாமியை ஸேவித்தீரா? ” என்றால்  அதற்கு “ஆம், தினம்தோறும் ஸ்வாமியை ஸேவித்தேன்.”  என்று உறுதியாக பெருமையுடன் பதில் கூறுகிறார். சென்னையில்  இருந்த நாட்களில் புரிசை ஸ்வாமியை APN ஸ்வாமி  ஸேவிக்காத நாள் என்பதே கிடையாதாம்.

ஆசார்யன் மனம் கோணாமல், உகந்த கைங்கர்யம் செய்வது, அவர் சொல்படி நடப்பது போன்ற குணங்களை APN ஸ்வாமி  பெற்றதற்கு ஆசார்ய கடாக்ஷமே காரணமாம். ஆசார்யனை சென்று ஸேவிப்பது என்பது நித்யானுஷ்டானமானதினால், நாளடைவில் அனைத்து நல்ல மாற்றங்களும் வந்ததாக உருக்கமாக கூறினார். “ஆசார்ய அனுகிரஹம் என்னதான் செய்யாது? அனைத்தையும் செய்யவல்லது.” என்று அறுதியிட்டு கூறுபவர் APN ஸ்வாமி.

  1. ஆசார்யன் தனியனை அனுஸந்தானம் செய்தல்

சிஷ்யன் செய்ய வேண்டிய இரண்டாவது செயல் ஆசார்யனின் தனியனை அனுசந்தானம் செய்தல்.

காலக்ஷேப காலங்களில் புரிசை ஸ்வாமியின் ப்ராசீன தனியனை  ஸேவிப்பதை  வழக்கத்தில் கொண்டுள்ளார்  APN ஸ்வாமி. மேலும் புரிசை ஸ்வாமி பற்றிய கீழ் உள்ள ஸ்லோகம் APN ஸ்வாமியினால்  ஆவணி ஹயக்ரீவ ஜெயந்தி அன்று  எழுதப்பட்டது.  புரிசை ஸ்வாமி உகந்து ஏற்றுக்கொண்டு உபன்யாச காலத்தில் அநுஸந்திக்கும்படி அனுக்ரஹம் செய்துள்ளார்.

ஸ்ரீ புரிசை ஸ்வாமி பற்றி ஸ்ரீ APN ஸ்வாமி ஸமர்ப்பித்த தனியன்

ஸ்ரீ  கிருஷ்ணமார்யம்  கருணாலயந்தம்

வேதாந்த யுக்மம் சமதீத வந்தம் |

வத்ஸாபி ஜாதம் விதுஷாம் வரேண்யம்

ஸ்ரீ பாஷ்ய ஸிம்ஹம் ப்ரணமாமி நித்யம் ||

 

ஸ்ரீமதே வாத்ஸ்ய ஸ்ரீ க்ருஷ்ணமார்ய மஹா தேஶிகாய நம:

 விளக்கம்:  ஸ்ரீ க்ருஷ்ணமாச்சார்ய மஹா தேசிகன், கருணைக்கே உறைவிடமானவர்,  உபய வேதாந்தி, கசடற உபய வேதாந்தத்தையும்  கற்றவர், ஸ்ரீ வத்ஸ குலத்தில் அவதாரம் செய்தவர், வித்வான்களில் சிறந்தவர், ச்ரேஷ்டர், ப்ரதமர், ஸ்ரீபாஷ்யசிம்ஹம் என்னும் குலப்பெருமை  உடையவர், பரம்பரை பரம்பரையாக தனக்குக் கிடைத்த பிருதத்துக்கு  ஏற்று விளங்குபவர். அத்தகைய வாத்ஸ்யஸ்ரீ க்ருஷ்ணமாச்சார்ய மஹாதேசிகனை எப்பொழுதும் ஸேவிக்கிறேன்.

இப்படி ஆசார்யன் தனியனை நித்யம் அனுஸந்தானம் செய்பவர் APN ஸ்வாமி.

  1. ஆசார்யன் விரும்பும் கைங்கர்யத்தை செய்தல்

ஸ்வாமி தேசிகன் பாதுகா ஸஹஸ்ரத்தில்,  பரத்வாஜர், ஆதிகவியான வால்மீகியின்  அந்தேவாசி என்று போற்றுகிறார்.  அதாவது  ஆசார்யனுடன் எப்பொழுதும் இருந்துக் கொண்டு, அவர் உகக்கும் கைங்கர்யங்களை செய்வதே ஒரு அந்தேவாசியின் கடமை.  புரிசை ஸ்வாமிக்கு  எட்டு ஆண்டுகள் அந்தேவாசியாக கைங்கர்யம் செய்ததை தன் வாழ்க்கையின் அரும்பெரும் பலனாக கருதுபவர் APN ஸ்வாமி. புரிசை ஸ்வாமியின் அந்தேவாசி என்று  தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை நாம் APN ஸ்வாமியின்  புத்தகங்களிலும் பார்க்கலாம்.

வால்மீகி ப்ருகு வம்சத்தை சேர்ந்தவராகையால் ஸ்ரீவத்ஸ கோத்ரம்.  இவரது அந்தேவாசி பரத்வாஜர் பாரத்வாஜ கோத்ரம். அந்த ஆசார்யன் சிஷ்யன் போலவே, புரிசை  ஸ்வாமி  ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் பிறந்தவர்.  இவரது அந்தேவாசி APN ஸ்வாமி, பாரத்வாஜ கோத்ரத்தில்  பிறந்தவர்.  ஆசார்ய சிஷ்ய ஸம்பந்தம் பகவத் ஸங்கல்பம் அன்றோ!!.

அந்தேவாசி  என்னும் இந்த சொல்லே சிஷ்யனின் ஆசார்ய கைங்கர்யத்தைப் பற்றி பறைசாற்றுகிறது.

  1. ஆசார்யன் பெருமைகளை மற்றவர் அறிந்திடும் வகையில் பேசுதல்/எடுத்துரைத்தல்

APN ஸ்வாமி, தன் ஆசார்யனை பற்றிப் போற்றிப் பேசாத நாளில்லை என்றே கூறலாம்.  புரிசை ஸ்வாமியிடம் தான் கற்றுக்கொண்டதை, அவரின்  ஆசைபடியே  எளிய முறையில் ஸம்ப்ரதாய புத்தகங்களாக  எழுதி வருகிறார் APN ஸ்வாமி.  புரிசை ஸ்வாமிக்கும் தனக்கும்  நடந்த உரையாடல்களை  “ஸ்ரீ ரங்க சடஜித் க்ருபா” மாத இதழில் கட்டுரையாக  வெளியிட்டுள்ளார் APN ஸ்வாமி.  “ஆசார்ய பஞ்சகம்” என்னும் புரிசை ஸ்வாமி பற்றிய ஸ்லோகத்தை ஸ்ரீ APN ஸ்வாமி இயற்றி,  ஸ்ரீரங்க க்ஷேத்திர மஹாத்மியம் புத்தகத்தில்  வெளியிட்டுள்ளார்.

மேலும்,  ஸ்ரீ புரிசை ஸ்வாமி பரமபதித்த ஸமயம், அவரின்  பெருமைகளை உலகோர் அறியும் வண்ணம்  பத்து சுலோகங்களாக  இயற்றியுள்ளார்.  இந்த சுலோகங்களை “ஸ்வாமி  ஜீவித்திருக்கும் பொழுதே ஸமர்ப்பித்திருந்தால் விசேஷமாக இருந்திருக்கும்” என்று, என்றும் ஏக்கத்துடன் கண்களில் கண்ணீர் மல்க தெரிவிப்பார் APN ஸ்வாமி.

 ஸ்ரீ APN ஸ்வாமியின் திருநட்சத்திரமான வைகாசி மிருகஷீரிஷமாம் இன்று   (4-ஜூன்-2019), ஆசார்யன் உகந்த சிஷ்யனின் பெருமையைப் பற்றி அடியேன் அறிந்த வரையில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.  பிழைகள் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்.

IMG-20161022-WA0005

ப்ராசார்யன் மற்றும் ஆசார்யனின் ஆசி வேண்டி,

அடியேன்

ஸ்ரீரஞ்ஜனி  ஜகந்நாதன்