Sri #APNSwami #Writes #Trending | The Kashmir Files – Part 2 | நாடு புகழும் பரிசு! | The prize praised by the Nation

ஸ்ரீ:
காஷ்மீர் Files | The Kashmir Files
Sri #APNSwami #Writes #Trending

<<Scroll down to read the original Tamil article & the English Translation of the article>>

Traditional Trending – Sri APN Swami writes Srivaishnava Tradition based articles on the current Trending topic. Seeing our tradition in everything is Sri APN Swami’s unique style and this is shown in his 100+ Traditional Trending Videos, Audios and articles under this title series.
This is an article based on the movie title “The Kashmir Files” released on March, 11 2022. In the last 20 minutes of the movie, the boy speaks from his heart about “Kashmir Ka Sach” – Truth of Kashmir.

We are happy to share another, “Kashmir Ka Sach”The truth about Kashmir which happened 1000 years ago during Swami Ramanujacharya’s time period. Swami Ramanujacharya went all the way to Kashmir from Tamil Nadu to read about Vyasa’s Brahma Sutra so that he can write a commentary for the same. The source documents related to Brahma Sutram were in Kashmir’s Sharadha Peetam Library and he referred those documents to create his commentary called “Saareeraka Mimaamsa Bhashyam”. Lord Saraswathi herself acknowledged this work and hailed it as “Sri Bhashyam”. She also gave her worshipping idol “Lord Hayagriva” as a gift to Swami Ramanujar. This idol of Lord Hayagriva is worshipped even today by His Holiness Sri Parakala Mutt Jeeyar, Mysore. Sharadha Devi also gave a title “Sri Bhashyakaarar” to Swami Ramanujacharya.
We are happy to share this below article in Tamil & English which explains the incident called “The Kashmir Files” hailing the Pandits of Kashmir who maintained a Library @ Kashmir to document our Scriptures without which Swami Ramanujar could not have completed the Commentary for Vyasar’s Brahma Sutram.
Let’s hail the greatness of the Kashmir Pandits and also hail the treasure called “Sri Bhashyam” truly the prize which the nation hails.
-SARAN Sevaks / Shishyas of Sri APN Swami

Ruins of Sharaddha Peetam Library at Kashmir

Also, watch this Kashmir Sharadha Peetam Scene as in the Movie called Ghantavatharam on Swami Vedanta Desikan.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

நாடு புகழும் பரிசு! | The Kashmir Files

               ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தில் தலைமைப் பொறுப்பேற்று ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. ஸ்ரீவைஷ்ணவம் நன்கு விளங்கி வருகின்றது.  இருப்பினும் ராமானுஜரின் உள்ளத்தில் மட்டும் ஓர் ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அதாவது, தனது ஆசார்யரான யாமுனருக்கு (ஆளவந்தாருக்கு) தான் செய்து கொடுத்த சபதத்தை இன்னமும் நிறைவேற்றவில்லையே என்பதுதான் அது.
               ராமானுஜர் முதன்முதலில் ஆளவந்தாரை சேவிக்க பெரியநம்பிகளுடன் திருவரங்கத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அவர் சந்யாஸ தீட்சை பெறவில்லை. காஞ்சிபுரத்திலிருந்து வேகமாக ஸ்ரீரங்கம் விரைவதற்குள் விளைந்தது விபரீதம்.  அங்கே ஆசார்யர் ஆளவந்தார் பரமபதித்துவிட்ட (வைகுண்ட ப்ராப்தியடைந்த) அதிர்ச்சி செய்தியை ராமானுஜரால் ஜீரணிக்க இயலவில்லை.  இருப்பினும் அவரது திருமேனியையாவது சேவிக்க முடிந்ததே என்று ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
               ஆளவந்தாரை அருகில் சென்று சேவித்தபோது, ஆளவந்தாரின் திருக்கையில் மூன்று விரல்கள் மட்டும் மூடியிருந்தன.  இதைக் கண்டு, அருகில் இருந்தவர்களிடம், “எப்போதுமே இவ்விதம்தானா!” என ராமானுஜர் கேட்டதற்கு, “இல்லையில்லை; ஆளவந்தார் உள்ளத்தில் நிறைவேறாத ஆசைகள் மூன்று உண்டு.  அதைத்தான், மூடியிருக்கும் மூன்று விரல்கள் தெரிவிக்கின்றன” என்றனர்.
                “துரோணருக்கு ஏகலைவன் போன்று அடியேன் ஆளவந்தாரின் சீடன் என்பது உண்மையானால் மூடியிருக்கும் இம்மூன்று விரல்களும் திறக்கட்டும்.  ஆளவந்தாரின் திருவுள்ளத்தை (ஆசையை) அடியேன் நிறைவேற்றுகிறேன்” என்று உலகோர் முன் சபதம் செய்தார்.  என்ன ஆச்சர்யம்! யாமுனாசார்யரின் மூன்று விரல்களும் நிமிர்ந்தன.
               1. வியாஸரின் பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன விருத்தியின்படி (விரிவுரைப்படி) ஒரு பாஷ்யம் இயற்ற வேண்டும்.

               2. ஆழ்வாரின் திருவாய்மொழிக்கு ஒரு அரும்பதவுரை – விரிவுரை எழுத வேண்டும்

               3. பராசரர், வியாஸர் ஆகிய மஹரிஷிகளை எப்போதும் நினைவுகூறும் வகையில் பிள்ளைகளுக்கு பெயர் வைக்க வேண்டும்.
               இந்த மூன்றையும் தான் நிறைவேற்றுவதாக ராமானுஜர் சபதம் செய்து நாட்களாயிற்று. ‘இனி அதற்குரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும்’ என்று சிந்தனை வயப்பட்டவராக இருந்தார்.  ஆசார்யரின் உள்ளமறிந்து செயல்படும் ஸத்தான சிஷ்யர்கள் கிடைப்பது அரிது.  அந்த வகையில் ராமானுஜர் மிகவும் அதிர்ஷ்டசாலிதான். கூரத்தாழ்வான், முதலியாண்டான், கிடாம்பியாச்சான் முதலான சிஷ்யர்கள் எப்போதும் அவருடன் உள்ளனர்.  அவர்களுள் கூரத்தாழ்வான் ‘நடமாடும் பதஞ்சலி முனிவர்’ என்று புகழப்படுபவர்.  ஏனெனில், அவரின் மேதாவிலாஸம் ஈடு இணையற்றது.  அவரின் துணை கொண்டு வேதவியாஸ மஹரிஷியின் ப்ரஹ்ம சூத்ரங்களுக்கு விசிஷ்டாத்வைத மதக் கொள்கையின்படியாக பொருள் விளங்க ராமானுஜர் முனைந்தார்.

               ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியமன்று. ஏனெனில், போதாயன மஹரிஷி, பிரம்ம சூத்ரங்களுக்கு எழுதிய விரிவுரை மேலானது. அக்காலத்தில் அது காசி பிரதேசத்தில் ஸரஸ்வதீ நூலகத்தில் மட்டுமே இருந்தது. ஒரே ஒரு ஓலைச்சுவடியின் பிரதி கொண்டு இம்மாபெரும் காரியத்தை சாதிக்க வேண்டும். ராமானுஜர் வாழ்ந்த காலத்தில் அந்த நூலகம் தற்போதைய பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருந்ததாக வரலாற்று அறிஞர்கள்  குறிப்பிடுகின்றனர்.

நெடிய பயணம்.  அதிலும் வெற்றி கிட்டுமா?  அது கேள்விக் குறிதான்! இருப்பினும் ஆசார்யரின் அனுக்ரகத்துடன், தெய்வ பலத்துடன், கூரத்தாழ்வான் துணையுடன் ராமானுஜர் பயணம் செய்தார். அத்தேசத்து அரசன் ராமானுஜரை எதிர்கொண்டு அழைத்து உபசரித்தான்.  வந்த காரியத்தையும் வினவினான்.  நூலகத்திலுள்ள ஒரு சுவடியைத் தான் பெற்றுச் செல்ல வந்துள்ளதாக ராமானுஜர் தெரிவித்தார்.  ‘ஏதோ பெரும் யாசகத்துக்காக தன்னிடம் வந்திருக்கிறார்’ என நினைத்த அரசனுக்கு ஒரு சுவடியை மகான் வேண்டுவது வினோதமாயிருந்தது.

            “அப்படியே ஆகட்டும் ஸ்வாமி” என்று தனது நூல் நிலையத்திலிருந்து அச்சுவடியைக் கொண்டு வரச் செய்தான்.  அது சாரதா பீடம். அதாவது, கலைமகளான ஸரஸ்வதி கோயில்.  அவள் கல்விக் கடவுளாயிற்றே.  அந்த சன்னிதானத்திலிருந்து ஒரு சுவடியைப் பெறுவது பாக்கியமன்றோ!?
அரசனிடமிருந்து அந்தச் சுவடியை ராமானுஜர் பெற்றபோது அங்கிருந்த ஸரஸ்வதி தேவியின் விக்ரகம் (சிலை) புன்முறுவலுடன் மெதுவாகத் தலையசைத்ததை எவருமே கவனிக்கவில்லை.

               சுவடியை அடைந்ததும் சீடர்கள் புடைசூழ ஸ்வாமி மீளவும் திருவரங்கத்துக்கு பயணப்பட்டார். ‘ஆசார்யரின் திருவுள்ளத்தை நிறைவேற்றுகிறோமே!’ எனும் பூரிப்புடன், ‘உடனடியாக இந்நூலை எழுதி முடிக்க வேண்டும்’ எனும் பேரவாவுடன் விரைந்தார்.

               மகான்களின் வாழ்க்கையில் தான் சோதனைகள் அதிகம்.  அவதார புருஷர்களே சோதனைக்கு ஆட்பட்டால்தான் ஏனையவர்கள் விதியின் வலிமையை எண்ணி வரைமுறை மீறாமல் இருப்பார்கள்.  சுவடி சுலபமாகக் கிடைத்துவிட்டது.  ஆனால், அதன் மேன்மையை உலகம் அறிய வேண்டாமா?  சுவடியினுள் பொதிந்துள்ள சூத்திர வியாக்யானங்கள் இவ்வுலகைவிட மேலானவை. ஆம்!  இவ்வுலகம் முழுதையும் தராசின் ஒரு தட்டில் வைத்து, மறுபுறம்  சுவடியை வைத்தால், சுவடியின் உட்பொருள் பாரத்தால், தராசின் எடை தாழும்.  அவ்வளவு உயர்வானது அது.  இதை உலகறியச் செய்ய பெருமான் ஒரு லீலா விநோதம் நிகழ்த்தினார். இதனால் நூலின் ஏற்றம், ராமானுஜரின் பெருமை, கூரத்தாழ்வானின் மகிமை என பல விஷயங்களை உலகம் புரிந்து கொண்டது.

               வியாஸரின் பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன மஹரிஷி அருளிய விரிவுரையே இந்நூல்.   உண்மையில் வியாஸரின் எண்ணம் என்னவெனத் தெளிவாகக் காண்பிக்கும் கண்ணாடி இது. இதுவரை இந்நூல் வெளியில் பிரசாரத்தில் இல்லை. அதனால், ஒருசிலர், தங்களின் மனம் போனபடி வியாஸரின் சூத்திரங்களுக்கு பொருள் கூறி வரலாயினர்.   எதைச் சொன்னாலும் நம்பிவிடும் மக்கள்  கூட்டம் நிறைந்த இவ்வுலகில், அவர்களின் தவறான பொருளமைந்த பிரசாரங்களை கண்டிப்பவர் யாரும் இலர்.  இதனால் போதாயனரின் நூலைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே போய்விட்டது. மனம் போனபடி கொள்கைகளை வகுப்பவர்கள், நிறைந்த சந்தோஷத்தில் திளைத்தனர்.

               இதனிடையே, ராமானுஜர் மூலாதாரமான நூலை அடைந்து விட்டார் என்பதைக் கேள்வியுற்றதும் அவர்களின் பயம் அதிகமாகியது. ராமானுஜரின் மேதா விலாஸத்தை நன்கு அறிந்தவர்கள் ஆதலால், ‘இனி தங்களின் பொய்ப் பிரசாரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். ராமானுஜரின் நல்லுபதேசங்களால் தெளிந்த அறிவினைப் பெற்றிடுவர்’ என்றுணர்ந்தனர்.  எவ்விதமாவது  ராமானுஜர் வியாக்யானம் எழுதாமல் அதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணினர்.

            ‘அறிஞர்களை ஆதரிக்கும் அரசன் ராமானுஜரின் மாமேதைத் தன்மையை உணர்ந்தவன் ஆதலின், தங்களுக்கு உதவி புரிய மாட்டான்.  எனவே, தாங்களே இதற்கொரு தீர்வு காண வேண்டும்’ என்று நிச்சயித்த அவர்கள், அதற்கொரு திட்டம் தீட்டினர்.

               ஒருவரும் அறியாவண்ணம் பயணத்தில் ராமானுஜரைப் பின் தொடர்ந்த அவர்கள், சமயம் பார்த்து செல்வத்தினுள் பெருஞ்செல்வமாகிய  சுவடியை பறித்துச் சென்றனர்.  இது எவருமே எதிர்பாராதது. ராமானுஜர் உள்ளம் கலங்கினார். உடல் நடுங்கினார்.  ‘ஐயோ! பெருஞ்செல்வத்தைப் பெற்ற வறியவன் மீண்டும் அதை பறிகொடுத்தது போலாயிற்றே! என் ஆசானுக்கு நானளித்த நம்பிக்கை பொய்த்து விடும் போலுள்ளதே.  எம்பெருமானே இதென்ன சோதனை! இனி மறுபடியும் அரசனிடம் சென்று அதனைப் பெற இயலுமா? ஒருமுறை பறிகொடுத்தவனுக்கு மறுபடியும் தருவானோ! மேலும், மூல நூலும் வேறு பிரதிகள் இல்லாமையால் ஒன்றே ஒன்றுதானே இருந்தது’ என்றெல்லாம் கண் கலங்கினார்.

               இனி, இந்த சம்ப்ரதாயம் நிலைக்காதா! அவ்வளவு தானா! அருமையான சுவடி அபகரிக்கப்பட்டதால் எதுவும் செய்ய இயலாத ஒரு நிலை அது. ராமானுஜரை ஆறுதல்படுத்தும் வல்லமை அங்குள்ள எவருக்குமே இல்லை.  இரண்டொரு வார்த்தை இனிமையாகப் பேசிவிட்டால் மனம் ஆறுதலடைந்து விடுமா! என்ன?

               சூழ்நிலையின் தீவிரமறிந்து ஒருவரும் அருகே நெருங்கவில்லை.  ஆனால், கூரத்தாழ்வான் மட்டும் அமைதியாக இருந்தார்.  அது அவரின் மேலான மனோபலம். கண்ணன் கீதையில் உபதேசித்ததை கண் முன்னே அனுஷ்டிப்பவர் கூரத்தாழ்வான். எவ்வித சலனமும் இல்லாமல் ஆசாரியரை நெருங்கினார். மெதுவாக அழைத்தார். “ஆசார்யரே…!”

               இந்த ஒரு துயரத்திலும் எவ்வித சலனமும் இல்லாமல் கூரத்தாழ்வான் தன்னை அழைப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கக் கூடும் என்று தீர்மானித்தவராக மெதுவாக தலை உயர்த்தி அவரைக் கண்டார் ஸ்ரீராமானுஜர்.

            “அடியேனை க்ஷமித்தருள வேண்டும்” – ஆழ்வான்.

               ராமானுஜர் புரியாமல், “எதற்காக?”

            “ஆசார்யன் நியமனம் இல்லாமல் ஒரு கார்யம் செய்துவிட்டேன். அதற்காக.” 

               மனதினுள் பெரும் துயரம் அழுத்தும் இவ்வேளையில்தானா மன்னிப்புக் கேட்க வேண்டும்? ஆழ்வான் சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்துதான் கேட்கிறாரா? இல்லையா? எனும் சந்தேகம் அனைவர்க்கும்.

               மறுபடியும் ஆழ்வான், “ஆசார்யரின் நியமனம் இல்லாமல் அடியேன் ஒரு கார்யம் செய்துவிட்டேன்… அது…?” எனத் தயங்கினார்.
                “என்ன அது?” ராமானுஜர்.
               இப்படிக் கேட்ட ஆசார்யர்க்கு ஆழ்வான் அளித்த பதில், அமுதூற்று.  அவர்தம் உடலிலிருந்து ஆவி பிரிவதைப் போன்றதொரு பெரும் துயரத்தை ஒரு நொடியில் அழித்துவிட்ட ஆனந்தப் பிரவாஹம்.  ஆழ்வான் இப்படிக் கூறியதற்கு உலகமே அவர்க்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.  ராமானுஜரை மட்டுமா வாழ்வித்தது? வைணவத்தை வாழ்வித்த ஆழ்வானை வணங்குவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்…
 

கலைமகள் தந்த கௌரவம்!

               தன் முன்னே பணிந்து நிற்கும் கூரத்தாழ்வானைக் கண்டார் ராமானுஜர்.  ஆசார்யரின் அனுமதி இல்லாமல் அடியேன் ஒரு காரியம் செய்தேன் என்று அவர் சொன்னவுடன், என்ன அது?” என்றார்.
               “அடியேன் தினந்தோறும் ஸஞ்சாரத்தில் ஸஞ்சாரத்தில்…” என்று மெதுவாக மென்று முழுங்கினார்.  ஸஞ்சலமான மனநிலையில் தானுள்ள போது, ஆழ்வான் ஏதோ ஸஞ்சாரம் குறித்துப் பேசுகிறாரே!’ எனும் எண்ணம் ராமானுஜருக்கு. இருப்பினும், ஆழ்வானே பேசட்டும் என்று காத்திருந்தார்.

               “ஸஞ்சார காலத்தில் அடியேன் ஆசார்யரின் நியமனம் இல்லாமல் போதாயன வ்ருத்தி க்ரந்தம் முழுதையும் படித்து முடித்து விட்டேன். அதிலுள்ள ஒவ்வொரு எழுத்தும் அடியேன் உள்ளத்தில் உறைந்திருக்கிறது.  சுவடி தொலைந்ததே எனும் கவலை வேண்டாம்.  அனைத்தையும் அடியேன் எண்ணத்தில் வார்ப்பெடுத்துள்ளேன் என்று அவர் கூறி முடிப்பதற்குள் ராமானுஜர், ஆழ்வானே! கூரத்தாழ்வானே! நீவிர் இன்று நம்மை ஆண்டீரே!” என்று தழுவிக் கொண்டார்.  அன்று ஆழ்வான் மட்டும் இதை வெளிப்படுத்தியிராவிட்டால் ஞானம் வற்றியதால் இவ்வுலகம் என்றோ நிலை தடுமாறியிருக்கும்.

               ‘குருவின் கட்டளையை மீறுபவனுக்கு நற்கதியில்லை என்கின்றன சாஸ்த்ரங்கள். குருவின் நியமனம் இல்லாமல் கூரத்தாழ்வான் செய்த காரியத்துக்கு குருநாதர் மட்டுமின்றி, இந்த உலகமே நன்றிக் கடன் பட்டுள்ளது. இன்றளவும் ராமானுஜ பாஷ்யத்தின் மேன்மை தொடங்குவதற்கு ஆழ்வானின் இந்த அறிவுத்திறன்தானே காரணம்.

               உபதேசம் செய்தவுடனேயே கேட்பவர்கள் அதனை மறந்திடுவது உலகியல்பு. இன்றோ உபதேசிக்காததையே முழுதும் அறிந்திருந்து, அதனை ஒரு எழுத்து விடாமல் ஒப்புவித்தல் என்றால் இயலுமா? கூரத்தாழ்வானின் மகிமைதனை போற்றியுகத்தல் தவிர்த்து வேறென்ன செய்திட இயலும்!

               இனி, ப்ரம்ம சூத்திரத்தின் பொருள் எழுத வேண்டியதுதான். எம்பெருமான் ஸ்ரீநிவாஸனின் துதியுடன் ராமானுஜர் பாஷ்யம் இயற்றவாரம்பித்தார்.  போதாயன வ்ருத்தி க்ரந்தம் மிகவும் அரிது.  அதேசமயம், விரிவானது.  மாறி வரும் மக்களின் மனோநிலைக்கு ஏற்ப இதனை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே ராமானுஜரின் எண்ணம்.
               ராமானுஜருக்கு முன்பு பல பெரியோர்கள் விரிவுரை எழுதியுள்ளனர்.  இருப்பினும், மகான்கள் புரிந்து கொள்ளலாமே தவிர்த்து, சாமானியர்கள் சிரமப்படுவார்கள். ஆகையால், ராமானுஜர் முதலில் ஒரு ப்ரதிஜ்ஞை செய்தார். முன்னோர் மொழிந்த முறை தப்பாமல், அவர்கள் காட்டிய வழியிலேயே, போதாயனருடைய விரிவுரையை அடியொற்றி, வ்யாஸரின் ஒவ்வொரு சூத்திரத்துக்கும் விளக்கம் எழுதுகிறேன் என்று, மஹாமேதாவியான கூரத்தாழ்வானின் துணை கொண்டு நூலை எழுதும் சமயம்,  குருவுக்கும் சீடருக்கும் இடையில் பலவிதமான கருத்து வேற்றுமைகள் உண்டாகும். சிறந்த சொற்போர் ப்ரஹ்ம லக்ஷணத்தைக் குறித்து உண்டாகும்.  சில சமயம் சிஷ்யரான கூரத்தாழ்வானை ராமானுஜர் சீறி விடுவார்.  இதுவும் ஆசார்யரின் அனுக்ரகமேயென்று ஆழ்வார் அமைதியின் திருவுருவமாகத் திகழ்வார்.

               நான்கு அத்யாயங்களாக, நூற்றி ஐம்பத்தி ஆறு உட்பிரிவுகளாக, ஐநூற்றி நாற்பத்தைந்து(545) சூத்திரங்களுக்கு, ராமானுஜர் அற்புதமான விரிவுரை இயற்றினார்.  இதற்கு, ‘சாரீரக மீமாம்ஸா பாஷ்யம்’ அதாவது உலகுக்கும், பரப்ரம்மத்துக்கும் உள்ள உண்மைத் தொடர்பை விளக்கும் பாஷ்யம் என்று பெயரிட்டார். 

               “இதனை அரங்கேற்ற வேண்டுமே! சாமானியமாக இதன் வெளியீடு இருத்தல் கூடாது. வேதாந்தத்தின் மர்மம் அறிந்த பெரியோர்கள் திருமுன்புதான் இதன் அரங்கேற்றம் நிகழ வேண்டும்.  இதன் பெருமைதனை உணர்ந்தவர் யார்?” என்று ஆலோசித்தார்.  இந்த மாபெரும் நூலான போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை தான் அடையக் காரணமானவள் வேத மாதாவான ஸாக்ஷாத் ஸரஸ்வதி தேவியன்றோ! எனவே, அவள் முன்னிலையில் அரங்கேற்றம் செய்வதே சாலச் சிறந்தது என்று தீர்மானித்தார்.

               பொதுவாக, உலகில் ஒருவர் பரிசு பெற்றால் ஏனையவர்க்கு அதில் பொறாமை உண்டாகும். பரிசு பெற்றவர், அளித்தவர், அருகிருந்து அனுபவித்தவர் என அனைவரும் கொண்டாடத்தக்க வகையில் இருப்பதே நாடு புகழும் பரிசாகும்.  சீதை அனுமனுக்கு சிறந்த பரிசொன்றை அளித்ததாக ராமாயணத்தில் அறிகிறோம். ஆனாலும், அந்தப் பரிசு உலகிலுள்ளவர்க்கு பயனளிக்கவில்லை.  சீதை, அனுமனுக்கு அழகிய ஆபரணத்தை பரிசளித்தாள். அதை நாம் கொண்டாடினாலும் அந்தச் சங்கிலி ஏனையோர்க்கு உபயோகமாகுமா?

               இங்கு ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது.  உண்மையில் இதுதான் நாடு புகழும் பரிசு. அதையறிவதற்கு நாமும் காஷ்மீரத்துக்கு, சாரதா பீடத்துக்குச் செல்லலாம்.  அங்கு சாரதா தேவி ஆவலுடன் காத்திருக்கிறாள்.

                ‘சாரீரக மீமாம்ஸா பாஷ்ய’த்தின் அரங்கேற்றம் சாரதா பீடத்தில்.  அரசர் முதல், அகங்காரம் பிடித்த அனைத்துப் பண்டிதர்களும் அங்கு குழுமியுள்ளனர்.  வ்ருத்தி க்ரந்தத்தைத்தான் பறித்து விட்டோமே?  பின் எப்படி இந்தத் தென்னக ஸந்யாஸி ப்ரம்ம சூத்ரங்களுக்கு விரிவுரை எழுதியிருப்பார்?’ எனும் திகைப்பு அவர்களின் முகத்தில் குடிகொண்டிருந்தது.  சாரதா தேவியோ விழிகளில் கருணையுடன், பொங்கும் பரிவுடன் ராமானுஜரின் செஞ்சொல் அமுதங்களை அள்ளிப் பருகக் காத்திருந்தாள்.

               பரப்ரம்மம், திருமகள் கேள்வனாம் ஸ்ரீநிவாஸனின் துதி முடித்து, அடுத்து, சூத்திரத்தின் ஒவ்வொரு எழுத்தினையும் விவரித்திடுவேன் என்று நூன்முகத்தில் ராமானுஜர் கூறியது கேட்டு சரஸ்வதி தேவி, ‘சபாஷ்’ என்று கொண்டாடினாள்.  அவரின் வ்யாக்யானம் படிக்கப்பட, படிக்கப்பட சபையோர்கள் ஈர்த்தவாய் தெரியாமல் மெய் மறந்தனர்.

               ‘சொற்சுவை, பொருட்சுவை என இலக்கணம் மாறாமல், ப்ரம்ம தத்வத்தின் மேன்மையை இதுவரை எவருமே இவ்விதம் எடுத்துரைத்ததில்லை என்பதை உணர்ந்தனர்.  ஸரஸ்வதிக்கோ ஆனந்தம், பரமானந்தம்.  ஆஹா, ஆஹா!’ என்று கலைவாணி தலையசைத்து, இசைத்து மகிழ்ந்து கொண்டாடினாள்.  ஆச்சர்யமான அந்நூலை வாங்கி கலைமகள் தன் தலை மீது வைத்துக் கொண்டாடியதைக் கண்ட ஏனையவர்களின் தலை தானாகக் கவிழ்ந்தது.  தங்களின் தீய எண்ணம் தோற்றதே என்று வெட்கித் தலை குனிந்தனர்.

               ஸரஸ்வதிக்கோ அபரிமிதமான ஆனந்தம்.  வேதத்தின் வேதனை போக்கிய மஹாத்மாவை கொண்டாடினாள்.  இவருக்கு, தான் என்ன பரிசளிப்பது?’ என்று திகைத்தாள்.  தன் தலைமேல் சூடிய சுவடியின்  மேன்மையை என்றுமே உலகம் கொண்டாட வேண்டும் என்று தீர்மானித்தவள், பரப்ரம்மத்தின் பெருமை சூடிய இந்த பாஷ்யம் (வ்யாக்யானம்) இதுமுதற்கொண்டு ஸ்ரீபாஷ்யம் என்று விளங்கட்டும் என்றாள்.  இல்லையில்லை, இது போதாது. இன்னமும் பெருமைபடுத்த வேண்டும் என்று நினைத்தவள், இந்த மாபெரும் பாஷ்யத்தை இயற்றிய வள்ளல் பெருமகனாருக்கு ஸ்ரீபாஷ்யகாரர் என்று திருநாமம் அளித்தாள்.  மக்கள் வெள்ளம் ஜயது ஜயது ஸ்ரீபாஷ்யம், ஜயது ஜயது ஸ்ரீபாஷ்யகாரர் என்று குதூகலத்துடன் கோஷமிட்டனர். வர்ணிக்க முடியாத சந்தோஷத்திலிருந்த ஸரஸ்வதி, இதுவும் போதாது; இன்னமும் இவரை கௌரவிக்க வேண்டும் என்று நினைத்தாள்.

               உலகில் கல்விக் கடவுளாக ஸரஸ்வதியை வணங்குங்கள். அதே போன்று, ஞானமடைய தக்ஷிணா மூர்த்தியை வழிபடவும் என்கின்றன புராணங்கள். ஆனால், இவர்கள் இருவரின் பெருமைக்குக் காரணம் மூலக்கடவுளாகிய ஹயக்ரீவ பகவான்.  ஆதிபகவானாகிய மஹா விஷ்ணுவின் மூல அவதாரம் ஹயக்ரீவர்.  அவரை வழிபட்டே சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி, வ்யாஸர் முதலானோர் ஞானம் பெற்றனர் என்று ஆகமங்களில் தெளிவாக விளக்கப்படுகின்றது.  ஆகையால், தற்போது அவள் ஸ்ரீபாஷ்யகாரராகிய ராமானுஜரைக் கொண்டாட ஒரு மாபெரும் பரிசளித்தாள்.  தன் பூஜை விக்ரகமான (தான் தினந்தோறும் வழிபடும் தெய்வம்) பகவான் ஹயக்ரீவரின் தெய்வீக விக்ரகத்தை ராமானுஜராம் – ஸ்ரீபாஷ்யகாரருக்கு பரிசளித்தாள்.  நாடு புகழும் இந்த நல்ல பரிசை உலகம் கொண்டாடியது.

               முதலில் நூலுக்கு, ‘ஸ்ரீபாஷ்யம்’ என்று பெயர் வைத்தவள், பின்னர் அவரை ஸ்ரீபாஷ்யகாரர் என்றழைத்தாள்.  அதுவும் போதாமல், இப்போது தான் ஆராதிக்கும் பெருமானையே பரிசளித்தாள்.  அந்த ஹயக்ரீவரின் தெய்வீக விக்ரகம் ராமானுஜரின் வழித்தோன்றல்களான கிடாம்பியாச்சான் முதலானவர்களால் ஆராதிக்கப்பட்டு, ஸ்வாமி ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் சேர்ந்தது.  அதன் பின்னர் அவரின் முக்கிய சீடரான ப்ரம்மதந்த்ர பரகால ஸ்வாமியால் நிறுவப்பட்ட பரகால மடத்தில் இன்றளவும் வைத்து பூஜை செய்யப்பட்டு வருவதனைத் தரிசிக்கலாம்.  இப்படி கலைமகளின் பரிசு, நாடு புகழும் பரிசாகத் திகழ்வதை நாம் இன்றும் கொண்டாடி மகிழ்கிறோம்.

அன்புடன்
APN சுவாமி
💐💐💐💐💐💐💐💐💐

Naadu Pughazum Parisu – The prize praised by the nation – | The Kashmir Files

            It’s many years now since Swami Ramanuja assumed the helm of affairs at Sri Rangam. Sri Vaishnavism is also flourishing well. Despite this, there was a small longing in the mind of Swami Ramanuja. So far, he had not fulfilled the promise made to his guru, Yamunar (Alavandhar) and this was tugging his heart.

            Ramanuja, along with Periyanambi, went to SriRangam to take the blessings of Alavandhar for the first time. At that time, he had not taken the vow to be a sanyasi. Before he could rush from Kanchipuram to SriRangam, the untoward incident happened. Alavandhar had attained paramapadam (departed from earth ) and Ramanuja could not reconcile to this fact. But, he consoled himself thinking that he was able to at least see the body of Alavandhar.

            When Ramanuja went near Alavandhar’s body to pay his respects, he noticed that three fingers of Alavandhar were closed. Seeing this, he enquired with the people standing nearby, “Were his fingers always closed like this?” They said, “No, not at all. Alavandhar had three unfulfilled wishes. These three fingers signify that.”

            “Just like how Ekalavyan was a true disciple of Dronacharya, if it is true, that, I too am a disciple of Alavandhar, let his fingers open. I will fulfill these three wishes of Alavandar.” promised Ramanuja in front of the whole crowd.  What a wonder! Suddenly, Yaamunacharyar’s three fingers straightened.!

  1. A detailed commentary is to be written based on Sage Bodhayan’snotings of Brahma Sutra of Vyasa.
  2. A detailed explanation should be written for Thiruvaaymozhi
  3.  In memory of great sages like Parasarar and Vyasar, two children should be named after them.

            It’s been many days since Ramanuja made these promises. He was immersed in deep thoughts on the efforts to be taken to fulfill them. It is rare to find disciples who understand the mind& intents of their guru and act accordingly. In that sense, Ramanuja was very lucky. Disciples like Koorathazhwan, KidambiAchan, Mudaliandan were always there with him. Of them, Koorathazhwan was known as, ‘the walking patanjali sage’ because of his unparalleled and scholarly proficiency.  With the assistance ofKoorathazhwan, Ramanujabegan preparing to write a commentary on Brahma Sutra along the principles of Vishishtadvaitham.

            But that’s not such an easy task because the explanation written by Sage Bodhayana was superior. In those days, it was available only in Saraswathi libraries located in Kashmir region. Ramanuja had to complete this task with only a solitary palm-leaf manuscript as the base.   Historians believe that during the days of Ramanuja, that library was located in current Pakistan-occupied Kashmir.

            It was an arduous journey, and the accomplishment was uncertain. Yet, Ramanuja began his journey with the blessings of his acharya, Divine strength, besides Koorathazhwanbeing by his side. The king of that land welcomed Ramanuja and offered the best hospitality. He also enquired the purpose of Ramanuja’s visit. Ramanuja told him that he had come to take a palm-leaf manuscript from the library.  The king thought that Ramanuja had come all this way to beseech a big favour from him. He found it strange that Ramanuja took all these efforts for just a palm-leaf manuscript.

            “As you wish Swami”, said the king and ordered for the manuscript to be brought from his library. That was Sharada peedam, the temple of Sharadha/Saraswathi –  the Goddess of learning. Since She is the Goddess of Learing, it was a privilege to get a manuscript from Her temple. When Ramanuja received the manuscript from the king, nobody noticed the idol of Saraswathi Devi with a soft smile, nodding her head in assent.

            After getting the manuscript, Ramanuja started his journey back with devotees swirling around him. Ramanuja rushed back with the joy of fulfilling the wish of his Acharya, besides thinking that he should write this quickly.

            But there are many hurdles in the life of great people. When such incarnated great persons face hurdles, the people will understand the potency of rules and will refrain from overstepping them.

            The palm-leaf manuscript was obtained easily. But should the world not understand its significance? The tenets enshrined in this manuscript is greater than the world itself. Yes! If the entire world was kept on one scale of a balance and this manuscript on the other, the side with the manuscript will lower itself due to the weight of the meaning of the tenets. To help the world understand this importance, Perumal enacted a divine play. Due to this play, the world understood many things such as the greatness of this manuscript, the eminence of Ramanuja and the glory of Koorathazhwan.

            This manuscript is the explanatory notes scripted by Sage Bodhayana for Sage Vyasa’s Brahma Sutra. In fact, this is a mirror that clearly reflecting the deep thoughts of Sage Vyasa. Until then, this work was not publisised to the outside world. Hence, people started writing their own interpretations to Sage Vyasa’s Brahmasutram. Since this world is full of people who believe everything that is said, there was no one to criticise these wrong preaching. So, the awareness of Sage Bodhayana’s work was absent. Such people, who were prescribingthe scriptures the way they thought, were immensely happy.

            Now, learning that Ramanuja had got the main manuscript, these people felt further scared.  Since they were well aware of Ramanuja’s prowess, they realized that no one will accept theirsermons any more, as they will get the correct clarity from the rightpreaching of Ramanuja. They decided to do something to prevent Ramanuja from writing his commentaries.

            They knew that the king, being the one to support sholars, would not help them because he knows the proficiency of Ramanuja. So, feeling that they themselves should do something about it, they hatched a plan in this regard.

            They followed Ramanuja and at an opportune moment, they grabbed the manuscript and went away. None anticipated this. Ramanuja felt miserable and trembled.

            ‘Oh no! Just like how an impoverished person gifted with a great wealth, lost the same, I have also lost this. Appears that the assurance give to my guru would become a falsehood. O my Lord, what a challenge.! Can I go back to the king and ask for it again? Will the king give it to someone who lost the same once? Moreover, there are no copies and this being the only original available’, lamented Ramanuja.

            ‘Will this Sampradayam not last? Is that all.?  It is a state of helplessness, since the wonderful work has been stolen But, no one had the capacity to console Ramanuja.  Will just a few soothing words, provide solace?

            Understanding the seriousness of the situation, no one could approach him. But Koorathazhwan alone was peaceful. That was his high mental strength. He is the one apparently practicing the preachings of Krishna to Arjuna in Bhagavad Gita. Without any hesitation, he approached his acharyan and gently called out to him, “Acharya….”

            Ramanuja slightly lifted his head and looked at Koorathazhwan, with a thought that there should be something for him to be so peaceful even in such a turbulent situation.

            “Please forgive me, Swamy”, said Koorathazhwan.

            Perplexed, Ramanuja asked, “For what?”

            “Without the direction of Acharya, I did something. for that”, said Koorathazhwan.

            Is this the time to ask for forgiveness, especially when a deep sorrow is pressing hard on the mind? Did Koorathazhwan asked after understanding the seriousness of this situation or not? These were the doubts of onlookers.

            Again, Koorathazhwan said, “I did something without the direction of my acharyan. That is….”, hesitated Koorathazhwan.

            “What is it?” asked Ramanuja.

            The response given by Koorathazhwan tasted like nectar for Ramanuja. Within a second, he felt such a happiness like mitigating a great misery of life parting from the body.   In fact, the entire world is indebted to Koorathazhwan for what he said. It enlivened not just Ramanuja alone. What else can be done except to salute this Koorathazhwan, for enlivening Vashnavism….

Kalaimagal thandha gauravam – The honour given by Sarawathi

            When Koorthazhwan submitted, ” I did something without the permission of my Acharyan (guru)”, Swami Ramanuja looked at the subservient Koorathazhwan and asked, “What is that?”

            “Every day during the tour…. during the tour….”, Koorathazhwan stammered and was hesitant. Swami Ramanuja thought, why is Koorathazhwan talking about some tour, when I’m in such a disturbed state of mind. Still, he awaited Koorathazhwan to speak.

            Finally Koorthazhwan said, “During the tour, Acharya permission, I finished reading the Bodhayanaexplanatory notes. Every word in that is embellished in my mind. Please do not worry about the loss of thepalm-leaves. Entire words are etched in my memory.” Before Koorathazhwan could even complete the sentence, Ramanuja exclaimed, “Azhwane! Koorathazhwane! You have, today, enthralled me.  and hugged Koorathzwan. Had Koorathahwan not uttered those words then, the rich knowledge would have been lost (dried up) long back, stumbling the world.

            Sasthras clearly state the those who don’t follow the orders of their guru are doomed forever. But for this act of Koorathazhwan, though without the permission of his guru, not only his guru but also this entire world is forever indebted to him. Thus far, it is only due to the sharp memory of Koorathazhwan for the beginning of the greatness of Ramanuja’s Sri Bashyam.

            Generally, disciples forget guru’s teachings soon after they are taught. Is it possible to know entirely what is not taught by the Guru and also to recollect from memory every single word of it. What else can be done other than to praise the greatness of Koorathazhwan.!

            Now, it was time to start writing the commentary for Brahma Sutra. With the praising of Lord Srinivasan, Ramanuja began writing in right earnest. The only goal of Ramanujais that since, the Bodhayanagrantham is a rare yet a comprehensive piece of work, it has to be simplified to suit to the changing mindset of people.

            Many learned people have written a commentary for this earlier to Ramanuja. However only learned scholars could comprehend it fully and was difficult for common people to understand its inner meanings. This is why, while beginning to write, Ramanuja made a resolution that he would follow the footsteps of his forerunners and to write, as per their guidance, a detailed commentary on each and every sutram written by Veda Vyasa, on the lines of Bodhayana’s explanatory notes.

            While writing the commentary with the help of accomplished Koorathazhwan, there could occur many differences of opinion between the disciple and the master. War of words also would occur to correctly depict the characteristics of the Brahmam. Sometimes, Ramanujawill chide the disciple Koorathazhwan, but he will accept it as yet another blessing from his guru and maintain his calmness.

            The 545 Sutras are grouped into four chapters, with 156 sub-divisions and Ramanuja rendered a detailed and beautiful explanation for each of it. This was called “Saareeraka Mimaamsa Bhashyam” indicating that it explained the true relationship between the world and the Holy Brahmam.

            Ramajuja thought, “This needs to be published! The publishing should not be in an ordinary manner. This should be done only in the presence of great shcolars who have understood the true secrets of our religion. But who really has understood this meaning?” He decided that it is best to release this work in the very presence of Sarawathi Devi, as She being the mother of Vedas, was instrumental in giving to him this Bodhayana’s (viruthigrantham) explanatory notes.

            In general, when one gets an award, the others get jealous. The award is considered as deservingly the best, is the one when the giver, receiver and those who were present and enjoyed the event all hail that as the best.

We all know that Sita devi gave a precious prize to Hanuman, but that prize did not yield any benefit to the people in the world. Sita gave Hanuman a beautiful jewel. Even if we celebrate this, can that chain be useful to anyone?

            But today, there is a big prize awaiting. In fact, this is the one being hailed by everyone. To know more about this prize, let us move to Sharadha Peetam in Kashmir. Saraswathi Devi is waiting eagerly.

            The publication of “Saariraka Mimaamsaa Bhashyam” would be at Sharadha peetam. Everyone, from the king to the egoistic and conceit pandits, had gathered there. These pandits quizzically thought, ‘We took away the palm-leaf manuscript Then, how did the sanyasi from South, could have written a detailed explanation for it?”. Sharada Devi, on the other hand, with lot of compassion and affection, was waiting to immerse in the wonderful work of Swami Ramanuja.

            At that time, Swami Ramanuja proclaimed after his initial obeisance to Lord Srinivasan and His consort that he will go on to explain word by word of the entire Sutras. Hearing this, Saraswathi Devi hailed it as, “Excellent!” When Swami Ramanuja began reading the Sutras one after the other, everyone became so engrossed that they forgot themselves.

            Everyone there realized the greatness of this work as they felt that no one had earlier rendered such explanation in a lucid and flawless manner. Saraswathi was overwhelmed with great joy and nodded her head in approval and excitement. When Saraswathi took this astonishing work and placed it on Her head, the heads of those who tried to sabotage Ramanuja’s mission hung in shame.

            Saraswathi Devi’s happiness knew no bounds. She celebrated the man who made Vedas lot of pride. She also thought what could be the ideal award for him? She decided that the entire world should always celebrate the work that She had kept on Her head. She said, “Since this commentary (Bhashyam) talks about the greatness of Supreme Brahmam, let it be called ‘Sri Bhaashyam’ from now on.” She further felt that this is not at all enough and She has to honour Ramanuja more. This is why she conferred the title ” Sri Bhaashyakaarar” onthe most benevolent Swami Ramanuja for his efforts of authoring the commentary.

            Hearing this, the people there started shouting excitedly. they hailed, “Victory to Sri Bhaashyam. Victory to Sri Bhaashyakaarar.” Hearing this Sarawathi was in a state of indescribable happiness, yet she thought it be inadequate and that more needs to be done to honour Swami Ramanuja.

            People pray Goddess Sarawathi as he Goddess of Learning. Likewise, puranas also exhort that one should pray to Dakshinamurthy to gain knowledge.  But the actual reason for their popularity is Lord Hayagriva, being the foremost Avatar of Lord Mahavishnu. Our scriptures clearly state Sarawathi, Dakshinamurthy and Veda Vyasa gained their knowledge only by praying to Lord Hayagrivar. So now, Saraswathi, to honourRamanjuja further, gave another grand gift to Ramanuja. This gift was the Hayagriva idol that she prays to everyday. The entire world hailed this gift as best.

            So, Sarawathi first called the piece of literature as Sri Bhaashyam and then conferred the title Sri Bhaashyakaara. Still inadequate, she even presented the Hayagriva idol to Raamanuja. This Divine idol was taken care of and prayed to by Raamanuja and his followers like Kidambi Achaan. Later, the Lord came to Swami Vedanta Desikan.  Thereafter, even today we can worship the Lord, who is being prayed at Parakala Mutt, established by Desikan’s principal disciple, Sri Brahmatanthra Parakaala Swami. Thus, we are celebrating this gift from Sarawathi as a prize that is cherished by one and all.

Note: English Translation by Sri APN Swami’s Shishya Smt. Lavanya Ratnam

Lord Lakshmi Hayagreevar given to Swami Ramanujar by Sharadha Devi of Kashmir worshipped by His Holliness Sri Parakala Mutt Jeeyar.

Sri #APNSwami #Writes #Trending | The Kashmir Files – Part 1 | காஷ்மீர் குடியேற்றமும் காளிதாசனும் | Kashmir Immigration & Kalidasan

ஸ்ரீ:
காஷ்மீர் Files | The Kashmir Files
Sri #APNSwami #Writes #Trending

<<Scroll down to read the English Translation of the article>>

காஷ்மீர் குடியேற்றமும் காளிதாசனும் | Kashmir Immigration & Kalidasan

Traditional Trending – என்று நாட்டில் நிகழும் நிகழ்வுகளை, ஸ்ரீ APN சுவாமி அவ்வப்போது ஸம்ப்ரதாய விஷயங்களுடன் சுவைபட விளக்குவார். இது நிகழ் காலத்தில் பரபரபாயுள்ள விஷயத்தை நாம் நமது ஸம்ப்ரதாயக் கோணத்தில் எப்படி அணுவது? என்பதை அழகாகக் விளக்கும். குறிப்பாக Trending Treat என்று இளைஞர்கள், பெரியோர்கள் என அனைவரும் இதனைக் கொண்டாடுகின்றனர். Video,Audio ம்ற்றும் article என்று இது வரை நூற்றுக்கும் மேலான Traditional Trending விஷயங்கள் நமது சிந்தனைக்கும், ரசனைக்கும் விருந்தளிக்கின்றன.

மார்ச் 11 2022 வெள்ளியன்று வெளியான The Kashmir Files திரைப்படத்தை முன்னிட்டு இக்கட்டுரை Traditional Trending ஆக மலர்கிறது.
-SARAN SEVAK
12/3/22
💐💐💐💐💐💐💐💐💐

ஸ்ரீராமபிரான் ராவணன் வதம் செய்து விஜயராகவனாக, வெற்றி வீரனாக அயோத்திக்குப் புறப்படுகிறார். புஷ்பகவிமானம் ஆகாயத்தில் பறக்கிறது. ராமனின் அருகே ஜன்னலோரம் சீதையும் அமர்ந்திருந்து, இயற்கை காட்சிகளைக் கண்டு ரசிக்கிறாள். அழகிய மேகக்கூட்டங்கள் நடுவில், ஆகாய வெளியில், ஆருயிர் காதலன் அருகில் இருக்க, அனைத்து துன்பங்களும் தீர்ந்து ஆனந்தம் பொங்க சீதை மகிழ்ச்சியுடன் பயணம் செய்கிறாள்.

கடலின் மீது தான் கட்டிய பாலம், சமுத்ரராஜனுக்கு அபயம் அளித்த இடம், விபீஷணனுக்கு அடைக்கலம் அளித்தது என பல நிகழ்விடங்களையும் ராமன் ஆனந்தமாக காண்பித்துக் கொண்டிருக்கிறான்.

பல இடங்களைக் கடந்து பறக்கிறது விமானம். அப்பொழுது ஜனஸ்தானம் (பண்டிதர்களான ஸாத்வீகர்கள் வசிக்கும் இடம்) எனும் குடியிருப்பினை சீதைக்குக் காண்பிக்கிறான். இந்த இடம் இதற்கு முன்பு இருந்த நிலையும், இப்பொழுதுள்ள நிலைமையையும் காளிதாஸ மஹாகவி நன்கு வர்ணிக்கிறார்.

அதாவது இதற்கு முன்பு, இந்த அமைதியான இடத்தில் அரக்கர்கள் புகுந்து அட்டகாசம் செய்தனர். சாத்வீகர்களான பண்டிதர்கள் (மகரிஷிகள்) புகலிடம் தேடி வேறெங்கோ குடி பெயர்ந்தனர். வேதவொலி ஒலித்தும், ஓமப்புகைகள் சூழ்ந்து இருந்த ஆச்ரமங்களில் அரக்கர்களின் கூத்தும், கும்மாளமும், குடியும், மாமிசமும் தாண்டவமாடியது.

ஆனால் தர்மம் வெல்லும் அல்லவா! நரேந்த்ரனாகிய ராமபிரான் தர்மத்தை நிலைநிறுத்த அவதரித்தவன் அன்றோ. அரக்கர் கூட்டத்தை வேரோடு அழித்தான். மகரிஷிகளுக்கு (பண்டிட்களுக்கு) அபயம் அளித்தான்.

ஜனஸ்தானத்தில் அமைதி திரும்பியது. ராமராஜ்யத்தை விட்டு தன்னாட்சியதிகாரம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட அந்த இடம் ராமராஜ்யத்தின் ஆளுமைக்கு உட்பட்டதேயாகும் என பகிரங்கமாக உலகம் உணர்ந்தது. நரேந்திரனின் இந்த அதிரடியால் விபீஷணன் முதலிய நல்ல அரக்கர் தவிர்ந்து, பொல்லா அரக்கன் அனைவரும் அழிந்தனர்.

மனம் நிம்மதியடைந்த மஹரிஷிகள் மீண்டும் தங்களின் ஆச்ரமத்திற்குத் திரும்பினர். பல ஆண்டுகளுக்குப் பின்பு தங்களது குடியிருப்புகளை செப்பனிட ஆரம்பித்தனர். ஆம். அரக்கர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்த அந்த குடியிருப்புகள் மீண்டும் பண்டிதர்கள் வசமாயின. பழைய பொலிவினை அடைந்தன. தர்மம் தழைத்தது. வேதமும், விழாவும் சிறந்தது.

இப்படி மகரிஷிகள்(பண்டிதர்கள்) திரும்பவும் குடியேறும் அக்காட்சியை ராமபிரான் சீதைக்குக் காட்டியதை காளிதாஸ மஹாகவி நமக்கு ஒரு திரைக்காட்சியாக விவரிக்கிறார்.

அமீ ஜநஸ்தாநம் அபோட விக்நம்
மத்வா ஸமாரப்த நவோடஜாநி |
அத்யாஸதே சீர ப்ருதோ யதாஸ்வம்
சிரோஜ்ஜிதாநி ஆச்ரம மண்டலாநி || ( ரகுவம்சம் – 13-22)

அன்புடன்
APN சுவாமி
12-March-2022
💐💐💐💐💐💐💐💐💐

Kashmir Immigration & Kalidas

Note :

Traditional Trending – Sri APN Swami writes Srivaishnava Tradition based articles on the current Trending topic. Seeing our tradition in everything is Sri APN Swami’s unique style and this is shown in his 100+ Traditional Trending Videos, Audios and articles.
This is an article based on the movie title The Kashmir Files released on March, 11 2022.
-SARAN Sevak

💐💐💐💐💐💐💐💐💐

Sri Rama was named as Vijayaraghavan after defeating Ravanan and started HIS journey towards Ayodha.  As the Pusphaka vimanam started to soar towards the skies, Sita was sitting on the window seat next to Ram enjoying the nature. With nature’s beauty for her eyes and her inner beauty’s strength sitting next to her, her joy had no leaps and bounds.

HE showed to her how they built the bridge over the sea, providing saranagathi to Samudra Rajan, providing refuge to Vibhishena and other places that HE walked across in search of her. As the vimanam was flying over various places, HE shows her the Janasthanam (where the Pundits used to reside). The place has been described very poetically by Mahakavi Kalidas in terms of before and after the asuras.

The place used to symbolise peace and serenity before the asuras took over and ransacked the whole place making it impossible for the janasthanam to live. This had forced the Pandits who were living in Janasthanam to seek refugee in distant far lands in fear of their lives. This place was filled with the sound of vedas, holy smoke arising from homams alas now it is a party place for the asuras with dance, alcohol and meats flying everywhere.

However, Dharma (righteousness) always triumphs at the end. Rama who is the Narendra (Lord amongst humans ) took his avatar in this earth to uphold the dharma, isn’t it? He decimated the asuras and protected the Maharishis (Pandits).

Janasthanam returned to its original state of tranquillity. It announced vehemently to the world that it was a grave error to consider itself as a separate leader and ignoring its leadership under Rama. It united back to Rama’s leadership. Narendra spared the good asuras like Vibhishana and rest all the asuras with evil intentions were destroyed forever by this action.

Maharishis were very pleased by this great work and started to return to their original homeland. It was a dream come true for them to return to their land and they mended their original household that got destroyed during these years by the asuras. The land was filled with the sound of vedas and festivities once again.

The return of Maharishis (Pandits) back to their own land as mentioned by Rama to Sita was narrated by Mahakavi Kalidas.

अमी जनस्थानमपोढविघ्नम्

मत्वा समारब्धनवोटजानि ।

अध्यासते चीरभृतो यथास्वम्

चिरोज्झितान्याश्रममण्डलानि ॥                               रघुवंश (13 – 22)

amI nanasthAnam apoDha vighnam

matvA samArabdha nava uTajani  ।

adhyAste chIrabrutho yathAsvam

chirojjitAni Ashrama mandalAni   ॥                Raghuvamsa (13 – 22)

Note: English Translation by Sri APN Swami’s Shishyan Sri Krishna Varahan.