Reels life & Real life | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 004

श्रीः

शोभकृत् चैत्र – 23

06/05/23

Reels life & Real life

(உகப்பும் கசப்பும்)

சாந்தர் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். வம்பர் சத்தம் போடாமல் வந்து பின்புறத்திலிருந்து எட்டிப்பார்த்து “என்ன புத்தகம் படிக்கிறீர் ஓய்?”

சாந்தர்: (திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து) ஓ நீர் தானா?

வம்பர்: இவ்வளவு சுவாதீனமாக யார் வருவார்? என்னைத் தவிர! TV பாக்கலயா? நீர் தான் எப்போதும் trending-ல இருப்பீரே… News பாக்கலயா?

சாந்தர்: என்ன! சார்லஸ் பட்டாபிஷேகம் ஓடிண்டிருக்கு. அத தான சொல்றே!

வம்பர்: சுவாமிஜி சான்ஸே இல்ல. ஒவ்வொரு தடவையும் உம்மகிட்ட நான் பல்ப் வாங்கிண்டேயிருக்கேன். But அதுவும் I like it.

சாந்தர்: என்னை praise பண்ணது போறும். நீ வந்த விஷயத்த சொல்லு.

வம்பர்: வேறென்ன ஓய். After 70 years, British கோலாஹலம் பார்த்தீரா!

சாந்தர்: ம் (மௌனம்)

வம்பர்: என்ன ஓய் துளிகூட interest காண்பிக்க மாட்டேங்கிறீர்? என்ன ப்ரம்மாண்டம், என்ன arrangements… அப்பப்பா. SuperO Super. அதுவும் அவா follow பண்ற traditional protocols இருக்கே…. சான்ஸே இல்ல moment.

சாந்தர்: எ..ன்…ன? என்ன சொன்ன?

வம்பர்: (தனக்குள்) என்னடா! நாமளா ஏதாவது வாயை கொடுத்து மாட்டிண்டோமா? எல்லாத்தயும் correct ஆகத்தானே சொன்னோம். இந்த மனுஷன் எத வச்சு மடக்கறார்-னு தெரியலயே!

சாந்தர்: என்னப்பா யோசன? நீ சொன்னது மறந்து போச்சா?

வம்பர்: (விழித்தபடி) என்ன.. என்ன… சொன்னேன்?

சாந்தர்: என்னமோ tradition-னு சொன்னயே! அத கேட்டேன்.

வம்பர்: ஆமா! Tradition தான். ஒரு perfect royal ceremony. ரொம்பவே impressive ஆக இருந்தது.

சாந்தர்: Correct. எனக்கும் ரொம்ப புடிச்சிருந்தது.

வம்பர்: அப்புறம் என்ன ப்ரச்சன? அத accept பண்ண என்ன தயக்கம்?

சாந்தர்: அத Accept பண்ண தயக்கம் இல்ல. But நம்ப situation நெனச்சாதான் கஷ்டமா இருக்கு

வம்பர்: (தலையில் கை வைத்தபடி) போச்சுடா! இதிலயும் ப்ரச்சனயா!

சாந்தர்: இங்கிலாந்து இளவரசர் முடிசூட்டு விழா பாரம்பரிய முறைப்படி நடந்ததுன்னா ரசிக்கற நாம நம்ப வீட்டு கல்யாணங்கள எப்படி நடத்தறோம்?

வம்பர்: (என்ன சொல்ல வறார் என்பது புரியாமல் பார்க்கிறார்)

சாந்தர்: வரவர நம்ப கல்யாணங்கள்ல வைதிக ச்ரத்தையே போய்டுத்து. Nobody cares about traditional customs.

வம்பர்: (மௌனம்)

சாந்தர்: ஒரே பாட்டு, கூத்து, கேலி, சத்தம் இப்படித்தான் போயிண்ட்ருக்கு. DJ, மெஹந்தின்ற பேர்ல சகிக்க முடியாத கூத்து நடக்கறது.

வம்பர்: (ஏதோ சொல்ல வாயெடுக்கிறார்)

சாந்தர்: இதெல்லாம் சொன்னா எங்கள நீங்க பிற்போக்குவாதின்னு கேலி பண்ணுவேள். But this is reality. We are not against celebrations. But celebration-ன்ற பேர்ல கூத்தடிக்கிறது தான் un-ஸகிக்கபிள். Ok உங்க sideலயே பேசறேன் – பாட்டு, dance-னு கூத்தடிச்சுட்டு அப்புறம் கல்யாணத்தயாவது ஒழுங்கா பண்ணிக்கலாமே? அதுவும் இல்ல.

வம்பர்: (மௌனம்)

சாந்தர்: ஒரு பெரிய ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டப்படும் நிகழ்வில் எங்காவது உற்சாகம் என்னும் பெயரில் வரம்புமீறுதல் அல்லது மரபு மீறுதல் இருக்கா? அத ரசிக்கற நாம complete-ஆ நம்ப மரபுகள மீறுகிறோம்னு என்னிக்காவது நினச்சுப் பாத்ததுண்டா?

வம்பர்: சும்மா வேடிக்கதானே சுவாமி!

சாந்தர்: அத தான் நானும் சொல்றேன். இந்த pre-wedding shoot, reelsன்ற பேர்ல கணவன் மனைவியின் அந்தரங்கம் பகிரங்கமாகிறதே. இப்ப recent-ஆ ஒரு reels பார்த்தேன்.

வம்பர்: (ஆவலுடன்) என்ன அது?

சாந்தர்: ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்குப் போறத்துக்கு முன்னாடி தன்னோட அப்பாவ கட்டிப்பிடிச்சுண்டு அழறா!

வம்பர்: சகஜம் தானே!

சாந்தர்: ஆமாம் தான். ஆனா அங்க தான் ஒரு twist வெச்சா அந்தப் பொண்ணு.

வம்பர்: Twist-ஆ?

சாந்தர்: ஐயோ பாவம் பொண்ணு அழறாளேன்னு அவ அம்மா, கிட்டவந்தா, ஆறுதல் சொல்றதுக்கு. ஆனா அந்தப் பொண்ணு என்ன பண்ணா தெரியுமா?

வம்பர்: என்ன… என்ன பண்ணா?

சாந்தர்: அவ அம்மாவ பாத்து “அம்மா! நீ குறுக்க வறாத reels போய்ண்ட்ருக்கு” அப்படின்னா!

வம்பர்: அடிப்பாவி!

சாந்தர்: பாத்தியா… உனக்கே கடுப்பா இல்ல? இப்ப நடக்கற சம்பவங்கள் நிஜமான திருமணமா இல்ல reels திருமணமான்னு சந்தேகம் வற்து. அந்த வீடியோ ரீலா அல்லது ரியலா என்று கூட தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் நாள் தொலைவில் இல்லை என்பது தான் உண்மை நிலை.

மேல் நாட்டு நாகரீக மோகத்துல மூழ்கின நமக்கு அந்த மேல் நாட்டவர்கள் தங்களின் பாரம்பர்யத்தை மறக்கலேங்கற்து கண்ல பட மாட்டேங்குது.

Like mind திருமணமா! likeஸ்க்கு மயங்கும் திருமணமா?

Reels life திருமணமா real lifeக்காக திருமணமா?

இன்னமும் என்னென்ன கூத்துகள் அரங்கேறப் போறதோ தெரியல. நூறு Kerala Stories திரைப்படங்கள் வந்தாலும் ஹிந்து ஸமுதாயம் விழித்துக்கொள்ளுமா தெரியவில்லை.

வம்பர்: (ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வாயடைத்து நிற்கிறார்)

Link to video – https://www.facebook.com/reel/249072574303453?s=chYV2B&fs=e&mibextid=6AJuK9

शोभकृत् चैत्र – 23

06/05/23

YouTube University | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 003

சாந்தர் ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார்.

(வம்பர் உள்ளே நுழைந்து எட்டிப்பார்த்து)

வம்பர் : “என்ன படித்துக்கொண்டிருக்கிறீர்?

சாந்தர்:- நம் புரிசை ஸ்வாமி அருளிய ஆசார்ய வைபவம் புஸ்தகம்.

வம்பர்:- ஆசார்ய வைபவமா? அப்படினா? ஓ….இ..ந்த ராமாநுஜர், தேசிகர் கதையெல்லாம்   சொல்லுவாளே ! அதானே! ஒரே bore ஆ இருக்கும். அத போய் எப்படி படிக்கிறீங்க. youtube ல் ரொம்ப சூப்பரா எவ்ளோபேர் beautiful அ இந்த கதய சொல்றா. அதபோய்  பாக்கலாம்ல. More over Zen கதயல்லாம் எவ்வளவு interesting ஆ இருக்கும் தெரியுமா?

சாந்தர்:- ( அமைதியாக, வியப்புடன்) Oh  youtube ல அவ்ளோ விஷயம் இருக்கா!

வம்பர்:- (உற்சாகமாக) பின்ன இல்லயா ! Technology எங்கயோ போய்ண்ட்ருக்கு சுவாமி.

நீங்க சொல்ற அந்த ஸம்ப்ரதாய விஷயத்த நாங்க easyயா  ChatGPTல கத்துப்போம் தெரியுமா?

என்ன பெரிசா குருபரம்பரய சொல்லப்போறீங்க. ராமாநுஜர் நிந்தார் ,  உக்காந்தார், கோவிலுக்குப் போனார்…இவ்வளவுதானே.

சாந்தர்:- (சிரிப்புடன்) ok இதெல்லாம்  youtubeல இருக்கறதால easyயா நமக்கு புரிஞ்சுடும் இல்லயா?

வம்பர்:- ஆமாம். No doubt

சாந்தர்:- Then no need of any Acharyan i.e. teacher. One question, இப்ப medical,CA,Engineering… விஷயங்கள் social media ல இருக்கு இல்லயா?

வம்பர்:- Why  not. Everything is available.

சாந்தர்:- YouTube  பாத்து medical treatment டாக்டராக முடியுமா?

வம்பர்:- Not possible , because proper channel இல்ல. Moreover ஒரு institution recognize பண்ணணுமே. Medical மட்டுமல்ல any type of education ஒரு proper recognition வேணும். That’s why நிறைய  institutionல இதுக்கு course வெச்சு certificate கொடுக்கறா.

 சாந்தர்:- That means எந்த academic விஷயமா இருந்தாலும் proper approach இருக்கணும். correct

வம்பர்:- (தோளைகுலுக்கி ) certainly…..

சாந்தர்:- ஆனா ஸம்ப்ரதாய விஷயம் தெரிஞ்சுக்க YouTube  பாத்தாபோதும்.   ஒன்னு ரெண்டு உபன்யாஸம் கேட்டாபோதும், authencityயே இல்லாம ஒரு புக்க படிச்சா போதும் . அதுவும் அந்த புக் இங்கிலீஷ்ல இருந்துட்டா  அதுதான் original இல்லயா!

வம்பர்:-   (மௌனம்)

சாந்தர்:-  எந்த educationக்கும் ஒரு proper expectபண்ற நாம, sampradayaம் மட்டும் just like that easyயா எடுத்துக்கறோம். அது தவிர ரொம்ப அலக்ஷியமா அதுபத்தி பேசறோம். அந்த knowledge  எவ்ளோ important ன்னு accept பண்ணவே மாட்டோம்.ஒரு சிறந்த ஆசார்யன் மூலமா விஷயம் தெரிஞ்சுண்டா மட்டும்தான் அது useful. Otherwise that knowledge is fake. இது நிச்சயமா உங்களை உகப்பிக்காது.

அன்புடன்

அனந்தன்

22-3-2023

Virat Parva | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 002

See these two videos before reading the article to get the context. ( Virat Kohli & Anushka Sharma Video link , Statue of Equality video link)

சாந்தர் அமைதியாக TV யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார். வம்பர் உள்ளே நுழைந்துக்கொண்டே.,

வம்பர்: அட! Cricket லாம் நீர் பார்ப்பீரா! உமக்கு interest உண்டா?

சாந்தர்: ஏன்? நான் Cricket பார்க்கக் கூடாதா?

வம்பர்: இல்ல! அது வந்து எப்ப பார்த்தாலும் பெருமாள பத்தியே பேசிண்டிருப்பீர், உமக்கெல்லாம் இதுல interest இருக்காதுன்னு நினைச்சேன்.

சாந்தர்: நீங்க நினைக்கிற so called வைதிகர்களான எங்களுக்கு worldwide knowledge உண்டு. But, எங்கள கலாய்க்க நினைக்கிற உங்களுக்குத்தான் ஸம்ப்ரதாய விஷய ஞானம் துளி கூட கிடையாது.

வம்பர்: சரி, சரி, நமக்குள்ள எதுக்கு வம்பு, match பார்க்கிறீரே! உமக்கு பிடிச்ச player யாரு?

சாந்தர்: பொதுவா எல்லாரையும் பிடிக்கும். இன்னிக்கி Virat Kohli யோட batting super.

வம்பர்: ஹை, பரவால்லயே நிறைய விஷயம் தெரிஞ்சுண்டிருக்கீர். சரி, உமக்கு ஒரு trending video (video link) காமிக்கட்டா?

சாந்தர்: ஓ பாக்கறேனே! Virat ம் அனுஷ்காவும் மஹா காளேஸ்வர் கோயில்ல பூஜ பண்ண video தானே காண்பிக்கப்போற.

வம்பர்: (திடுக்கிட்டபடி) எப்படி ஒய்? எல்லாத்திலேயும் top ஆ இருக்கீர்!

சாந்தர்: நான் தான் முதல்லயே சொன்னேனே, லௌகீகர்களான உங்களோட judgement வைதிகர் விஷயத்துல தப்புன்னு. Ok. Let it be. நீ விஷயத்துக்கு வா! இப்ப அந்த video ல என்ன விஷயம்?

வம்பர்: எ..ன்..ன.. விஷயமா! எங்க தல kohli பாத்தியா! எப்படி பய பக்தி யோட வழிபாடு பண்றான். கோவில்ல கும்பிட்டது action, மறுநாள் 180 அடிச்சது reaction …..super la.

சாந்தர்: மௌனமாக குறுகுறுன்னு பார்க்கிறார்

வம்பர்: என்ன ஒய் look, இதுக்கு என்ன சொல்றீர்?

சாந்தர்: நீ கோவிலுக்கு போவியா?

வம்பர்: Why not? Time கிடைக்கச்சே நானும் wife ம் போவோம். Sometimes, office லேந்து நேரா கோவிலுக்குப் போவேன். நான் என்ன நாஸ்திகனா? கோவில் போகாம இருக்க. 

சாந்தர்: office லேந்து நேரா போவேன்னா என்ன அர்த்தம்.

வம்பர்: ஆமா ஒய்! Time ஆயிடும்னு போவேன். அதுக்கு என்ன இப்ப?

சாந்தர்: That means pant, shirt அதானே.

வம்பர்: (எரிச்சலுடன்) இதான் ஒய் பிரச்சன. பக்தி மனசுல இருந்தா போறாதா!

நாங்க pant, shirt போட்டுண்டு போனா பெருமாள் அநுக்ரகம் பண்ண மாட்டாரா! போட்ற dressல என்ன இருக்கு? Moreover, shirt கழட்டிட்டு நிக்கறது ஒரு மாதிரி uneasyயா இருக்கு. பேண்டோ, சுடிதாரோ! எங்களுக்கு எது comfort ஓ அத follow பண்றோம். சும்மா restrict பண்ணாதியும்..

சாந்தர்: (சிரித்தபடி) Super, செம argument. But, நீ காம்ச்ச videoல…உங்க தல அதான் Kohli அழகா கச்சத்தோட, மேல் சட்டை இல்லாம, மனைவியும் புடவையோட எவ்வளவு orthodox traditionalலா worship பண்ணா!

Virat Kohli மாதிரி tatoo பண்ணிக்கணும், Hair coloring பண்ணனும்னு ஆசபட்றவா,  கோயிலுக்குப் போச்சே அதே மாதிரி traditionalஆ போகணும்ன்னு ஏன் நினைக்கறதில்லை.

Kohli யோட worship actionனுக்கு 180 reactionன்னு சொல்றோமே! நம்ம lifeலயும் அது வர வேண்டாமா?

Hyderabad Statue of Equality programல் நம் PM மோடி & மத்த delegates super ra traditional ல, நெத்திக்கு இட்டுண்டு dresscode ல வந்தா.. நீ கூட உன் whatsapp DPயா வெச்சியே ! ஆனா practiceல கொண்டு வர effort எடுத்தியா?

இது சொன்னா உகப்பா இருக்காது, கசப்புதான்.    

வம்பர்: !!!

(Background music அ readers, நீங்களே set பண்ணிக்கோங்க)

அன்புடன்

அனந்தன்

17 / 03 / 2023

Ram Charan worships Ram | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 001

உகப்பும் கசப்பும்

அடியேன் ஆசார்யன் ஶ்ரீ உ வே புரிசை ஸ்வாமி ஐம்பதாண்டுகள் ஶ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவின்  ஸம்பாதகராக (ஆசிரியராக) இருந்ததை அனைவரும் நன்கறிவர். அடியேன் அந்தேவாஸியாக ஸ்வாமியிடம் காலக்ஷேபத்திற்காக சேர்ந்தவுடன் பல ஸ்வாரஸ்யமான அனுபவங்கள் உண்டாயின. குறிப்பாக அடியேன் கேட்கும் சில ஏடாகூடமான கேள்விகளுக்குக் கூட ஸ்வாமி சிரித்துக்கொண்டே பதில் கூறுவார்.

இவ்விதம் அடிக்கடி நடந்த சமயம்; ஸ்வாமி எங்கள் இருவரின் உரையாடலை உள்ளடக்கி “உகப்பும் – கசப்பும்” எனும் தலைப்பில் “நற்போதுபோக்கு” வ்யாஸங்களை எழுத ஆரம்பித்தார்.

ஒரு மஹான் பரம சாந்தர். வைதிக விஷயங்கள் மட்டுமின்றி உலகியல்புகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர். “வைதிகர்களுக்கு ஒன்றும் தெரியாது” என எண்ணும் லெளகிகர் ஒருவர். இந்த லெளகிகரின் கேள்விகள் பெரும்பாலும் sarcasm பாணியில்தான் இருக்கும். தனக்கு எல்லாம் தெரியும். வைதிகருக்கு எதுவும் தெரியாது எனும் நோக்கிலேயே அவரது வாதங்கள் இருக்கும்.

ஆனால் வைதிகரோ இதற்கெல்லாம் அசரமாட்டார். அமைதியாக அதேசமயம் ஆணித்தரமாக தனது வாதங்களை முன்வைத்து அந்த லெளகிகருக்கு பதில் அளிப்பார். இக்கால ரீதியில் சொல்லவேண்டுமானால் லெளகிகர் bulb வாங்குவார்.

எனவே எங்கள் ஸ்வாமி வைதிகரான அந்தப் பெரியவருக்கு “சாந்தர்” என்று பெயர் வைத்தார். “எல்லாம் தெரியும்” என்றும் இருமாப்புடன் கூடிய லெளகிகருக்கு “வம்பர்” என்று பெயர் வைத்தார். இந்தத் தலைப்பில் உயர்வான பல ஸம்ப்ரதாய விஷயங்கள் கட்டுரைகளாக வெளிவந்தன.

இன்றைய காலகட்டத்தில் அதே போன்று எழுதுவது, எத்தனை பலனளிக்கும் என்பது தெரியவில்லை. நவீன சாதனங்கள் நாளுக்கு நாள் பெருகும் சமயத்தில் படித்து விஷயங்களை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ஏறத்தாழ காணாமல் போய்க்கொண்டிருக்கிறது எனலாம். மக்கள் பெரும்பாலும் WhatsApp, Twitter, Insta, FB என இவைகளிலேயே போது போக்குகின்றனர். இதில் “நற்போதுபோக்கு” எப்படி முடியும்?

இருப்பினும் வெகுஜனங்களின் அன்றாடத் தேடல்களிலும், அவர்கள் ரசிக்கும் நிகழ்வுகளிலும் நமக்குப் புலப்படும் உகப்பு – கசப்பினை இனி பார்க்கலாம்.

இதற்கும் Traditional Trending article seriesற்கும் என்ன வித்யாஸம்? என கேட்பது புரிகிறது.

Traditional Trending வெறும் கட்டுரைகள் வாசிப்பதற்கு மட்டும். “உகப்பும் – கசப்பும்” என்பது ரசிப்பத்துடன் நின்றுவிடாமல் சற்றே நம்மை சிந்திக்க வைத்தும், ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்க்கையில் கடைபிடிக்கவும் உதவும் இது உகந்தால் உகப்பு. இல்லையெனில் எப்போதும் போன்று கசப்பு.

அன்புடன் அனந்தன்


உகப்பும் கசப்பும் – 1 Ram Charan Worships Ram

Click the link below to see the related video before reading this article. https://www.youtube.com/watch?v=hjfcyTq1XmE&t=28sRam Charan and his wife doing Puja to Ram Vigraham during travel

2023 மார்ச் 12ம் தேதி RRR திரைப்படத்திற்கும், The Elephant Whisperersயானை வளர்ப்பு பற்றிய குறும்படத்திற்கும் Oscar விருது கிடைத்ததை குதூகலமாக அனைவரும் கொண்டாடி வருகிறோம் அல்லவா. அதுகுறித்த RRR எனும் TT Video https://youtu.be/RkReMKfeS40 (#RRR #Oscar Spl #Trending – Sri APN Swami Speaks 188 – From Archives) ஏற்கனவே வெளியாகியுள்ளது. இப்போது அதில் மற்றொரு சுவாரஸ்யத்தை பார்க்கலாம்.

வம்பர் – (உள்ளே வந்தபடியே) நமோ நம: என்ன சாந்தரே! உலகில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் சாந்தமாக அமர்ந்துள்ளீரே!

சாந்தர் – அப்படியா! என்ன நடக்கிறது?

வம்பர் – நமது தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளதே

சாந்தர் – ஓ அப்படியா! நானும் பார்த்தேன்.

வம்பர் – என்ன ஓய்! இப்படி சுவாரஸ்யம் இல்லாமல் பேசுகிறீர்? உமக்கு தேசபக்தியே இல்ல ஓய்.

சாந்தர் – எனது தேசபக்தி கிடக்கட்டும். அந்த விருதினால் உனக்கென்ன பெருமை?

வம்பர் – நானும் ஒரு பாரத ப்ரஜை தானே? இது நம் ஒவ்வொருவருக்கும் Pride moment தானே. நான் என் group எல்லாத்திலேயும் share பண்ணிட்டேன். என் FB page-ல இது தான் DP. ஒரே likes comments. இன்னிக்கு full trending இதான் தெரியுமா!

சாந்தர் – சிரித்து.. இந்த share, like, comment இதான் உனக்கு ப்ரயோஜனமா?

வம்பர் – (கடுப்புடன்) உங்களுக்கெல்லாம் ரஸனையே இல்ல ஓய். நீங்கள்ளாம் இன்னமும் பழைய பஞ்சாங்கம் தான். சரி! இந்த video பாரும். இத பத்தி என்ன சொல்றீர்?

சாந்தர் – (Just பார்த்துவிட்டு) ஓ இதுவா RRR நாயகன் ராம்சரண் video தானே!

வம்பர் – (வித்யாசமாகப் பார்த்தபடி) இ…து….வு..ம். உமக்கு தெரியுமா?

சாந்தர் – சிரித்தபடியே சரி.. உன் பாணியிலேயே சொல்கிறேன். இப்ப இந்த video பார்த்து excite ஆனயோல்லியோ அந்த அளவுக்கு excite ஆக அதில் என்ன இருக்கு?

வம்பர் – என்..ன.. இ..ரு..க்கா…..

ஓய் எவ்வளவு பெரிய hero. தான் எங்க போனாலும் even foreign போனாலும் ஒரு room-ல குட்டியா விக்ரகம் வெச்சு wifeவோட சேர்ந்து பூஜை பண்ணுவேன்னு போட்டிருக்கே #ProudHindu

இன்னிக்கு இது தான் super trending தெரியுமா? என்ன ஓய்! ஒரு actor daily பூஜை பண்றேன்னு சொல்றது நம்ம Hinduism-க்கு proud இல்லயா?

சாந்தர் – உண்மைதான். I fully agree with you. இப்ப ஒரு Hero, mass காட்டினா அவனோட style follow பண்றீங்க இல்லயா? Hairstyle, dress, shoes இப்படி body language எல்லாம் hero பாணி தானே.

வம்பர் – ஆமாம் (எரிச்சலுடன்) அதுக்கென்ன இப்போ

சாந்தர் இப்ப அந்த hero daily wifeவோட சேர்ந்து பூஜை பண்ணுவேன்னு சொல்றானே! அது உங்கள inspire பண்ணலயா? நாங்க daily திருவாராதனம் பண்ண சொன்னா உங்களுக்குப் பிடிக்கலயே! Ok நாங்க சொன்னா பிடிக்காது. But உங்க hero, world famous. அவர் கூட தனது பூஜையை miss பண்றதில்லைன்னு சொல்றாரே.

என்னிக்காவது நாம, ஆத்துப் பெருமாளை இப்படி கொண்டாடியிருப்போமா? Message-யும் video-வையும் forward பண்றதில இருக்கற ஆர்வம் practice பண்றதிலயும் இருக்கணும்பா! நான் ராம்சரணை மதிக்கறேன். ஆனா இத வெறும் message-ஆ பாக்கற ஆர்ப்பாட்டம் பண்ற கூட்டத்தை வெறுக்கறேன். இத சொன்னா நான் advice  பண்றேன்னு எம்பேர்ல கோபம் தான் வரும். Time இருந்தா யோசிச்சுப் பாரு.

ராம் சரண் தன் மனைவியுடன் பூஜை செய்ததை trendingஆக பார்க்கும் நமக்கு, ராமபிரான் தன் மனைவி சீதையுடன் ரங்கநாதனை ஆராதித்தான் என்று வால்மீகி ராமாயணம் விளக்கியதை Trending ஆக பார்க்கத் தெரியவில்லையே !

ஹும்……. இருக்கட்டும்…..

ராம் சரணமே (Charaname) சரணம் (Sharanam) !

(வம்பரின் background-ல் தில்வாலே புச்டேலியா song ஒலிக்கிறது)

அன்புடன் அனந்தன்

16-March-2023