ஜிதக்ரோதன் | Sri APN Swami’s Shishya Writes

Note: Sri APN Swami has been delivering Sankalpa Suryodayam Upanyasams every thu & fri at 3.30PM on FreeConferenceCall meeting id SriAPNSwami. The upanyasam is also available in his YouTube Channel for Members. JOIN as a member of Sri APN Swami’s YouTube Channel and enjoy *Member only videos.* and catch up on the missed episodes of Sankalpa Suryodayam. Sankalpa Suryodayam Playlist – https://www.youtube.com/playlist?list=PLqY3vCkKAmZbvFBJ63S9kbRKpXeBi0ENk

ஒருவர் காமத்தை வென்றிட முடியும் ஆனால் க்ரோத்தை வெல்ல முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. ஏன் என்று பார்க்கலாம்.

மிக விவேகத்துடன் புலனடக்கம் பெற்ற மகான்கூட தனக்கு எற்படும் ஒரு சிறிய அவமதிப்பை தாங்கமுடியாமல், பொறுமையை இழந்து பிறறை தூஷணம் செய்வது நாம் அனைவரும் அறிந்ததே.

ஸ்வாமி வேதாந்த தேசிகன் அருளிய ஸங்கல்ப ஸூர்யோதயம் நாடகத்தில் 4 ஆவது அங்கத்தில், காமனை கூட வென்றவன் கோப வசப்படுவதை அழகாக விளக்குகிறார்.

ஓருவன் அனைத்து இந்திரியங்களை தன் கட்டுப்பாட்டுடன் வைத்து இருந்தாலும், தனக்கு ஏற்பட்ட அவமானம், குற்றச்சாட்டைப் பொறுத்துக்கொள்ளாமல், கோபம் கொள்வான். காமம், க்ரோதம் (அ) கோபம் என இரண்டும் பிணைந்திடுப்பவை. அதில் காமனை வென்றவன் கோபப்பட்டால் மறுபடியும் காமவசம் ஆகிவிடுவான் என்பது கருத்து.

காமத்தால் ஒருவன் பாபச்செயல் செய்தால் அதிலிருந்து அவன் மீள முடியும். கோபத்தால் ஒருவன் பாகவதாபசாரம் செய்ய வாய்ப்பு இருப்பத்னால், அந்த பாபத்திலிருந்து மீள இயலாது. அது அவனுடைய வாழ்க்கையின் சீர்மைக்குத் தடையாகும். ஆனால் கோபத்தை எப்படி அடக்குவது?

இராமாயணத்தில் மஹரிஷி வால்மீகி; பகவான் நாரதரிடம் கோபத்தை வென்றவனைப் பற்றி கூறுங்கள். “ஜிதக்ரோத: க:” என்கிறார். அதற்கு நாரதர் “இராமன்” என்று பதில் சொல்கிறார். இருப்பினும் பின்பொரு சமயம் இராமன் கோபவசப்பட்டு இராவணனைக் கொன்றான் என்கிறார். இது முன்பின்  முரணாக உள்ளதே?  என்றால் தேவையானபோது கோபம் வேண்டும். அதையே தேவையற்ற போது அடக்கத் தெரியவும் வேண்டும்.

மஹாபாரத்தில் கண்ணன் பாண்டவர் தூதுவனாக சென்றபோது, தனக்கு எற்பட்ட அவமானத்தை பொருட்படுத்தாமல், சிரித்தமுகமாக தொடர்ந்து பல அவமானங்களை சகித்துக்கொண்டு தூது சென்றான். பின்னர் பெரும் வெற்றியும் பெற்றான்.

ப்ருகு முனிவர்; கோபவசத்தால் பெருமாள் திருமார்பில் உதைத்தார். நாராயணனோ அதை பொருட்படுத்தாமல் மிகவும் சாந்தமாக ப்ருகு முனிவரின் தேவைகளை கேட்டு அவரை ஆராதித்தான்.

இதை ஸ்வாமி வேதாந்த தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் அபராதபரிஹாராதிகாரத்தில் விளக்குகிறார்.

“ஹே பக்தனே! உன்னை நிந்திக்கும் பாகவதரிடம் கோபம் கொள்ளாதே. என்னை உதைத்த ப்ருகுவை நான் பொறுதது போன்று நீயும் அதை பொறுத்துக்கொள்” எங்கிறான் பகவான்.

மற்றுமொறு ஐதிஹ்யத்தையும் காணலாம். ஸ்வாமி கூரத்தாழ்வானின் சீடர் பிள்ளை பிள்ளை ஆழ்வான் மிகவும் க்ரோதக்கார். ஒரு சமயம் க்ரஹண புண்ய காலத்தில் தானம் செய்வது உத்தமம் என்றதால், கூரத்தாழ்வான் தனது சீடரிடம் அவரது கோபத்தை தானமாக யாசித்தார். அதாவது “இனி எப்போதும், யாரிடமும் கோபப்படமாட்டேன்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டார்.

ஆசார்யர் நியமன்ம்படி, பிள்ளை பிள்ளை ஆழ்வான் தனது கோபத்தை தானமாக கொடுத்து, “இனி கோபம் கொள்ளுவதில்லை” என்று கூறினார். அனைவரும் மிக வியந்தனர். குருவுக்கு வாக்கு அளித்தபடி பிள்ளை பிள்ளை ஆழ்வான் மிக சாந்தமாக மாறிவிட்டார்.

ஒரு நாள், பிள்ளை பிள்ளை ஆழ்வான் காலக்ஷேபத்திருக்கு வரவில்லை. கவலை அடைந்த கூரத்தாழ்வான், பிள்ளை பிள்ளை ஆழ்வானை தேடி வந்தார். பிள்ளை பிள்ளை ஆழ்வானோ மிகவும் துயரத்துடன், கண்ணீர்மல்க தனது குருவிடம் அவரை க்ஷமிக்கும்படி விண்ணப்பித்தார். காரணம் கேட்டபொழுது, அவர் தனது கோபத்தை கட்டுபடுத்த முடியாமல் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை ஏசிவிட்டார். குருவின் வார்த்தையை மீறியதால் என்ன செய்வது எனத்தெரியாமல் காலக்ஷேபத்திருக்கு வருவதை நிறுத்திவிட்டார்.

தனது சீடரின் தெளிவை கண்டு ப்ரியத்தில், கூரத்தாழ்வான் அவரை ஆறுதல்படுத்தி, பிள்ளை பிள்ளை ஆழ்வானை மீண்டும் காலக்ஷேபத்தை தொடரும்படி நியமித்தார்.

ஆகவே எவன் ஒருவன் கோபத்தை ஜயித்து செயல்புரிகிறானோ, அவனே ஜிதக்ரோதன். இதற்கு கோபத்தை அடியோட விடவேண்டும் என்று பொருளில்லை ஆனால் இராமனைபோலே தேவையான சமயத்தில் வெளிப்படுத்த வேண்டும். தேவையற்றபோது அடக்கவேண்டும். பாகவதர் திறத்தில் (அ) பாகவதர்களிடத்தில் அடியோடு கோபப்படக்கூடாது.

இந்த விஷயம் 9 நவம்பர் 2023 அன்று ஸ்ரீ  APN ஸ்வாமி ஸங்கல்ப ஸூர்யோதயம் உபந்யாஸத்தில் அடியேன் அனுபவித்தது.

அடியேன்

முகுந்தகிரி ஸ்ரீ APN ஸ்வாமி காலக்ஷேப சிஷ்யன் & சரன் சேவக்

கிருஷ்ண வராஹன்

Geneva, Switzerland, 11-11-2023

Two Meaningful Theft (திருட்டு)  பொருளை தரும் பொருள் களவு | Sri APN Swami’s Shishya Writes | Karthigai Karthigal Special | Kaliyan Thirunakshathiram

Two Meaningful Theft (திருட்டு)  பொருளை தரும் பொருள் களவு

💫💫💫💫( ஸ்ரீ APN ஸ்வாமி யின் உபந்யாஸத்தில் ரசித்த சில துளிகள்)
💍💍💍💍💍💍💍💍💍💍💍
     திருடர்கள் பொருளை தேடி திருடுவர்.  களவுகளை செய்தவர்கள் எந்த பொருளை பெற்றனர் ?  இரண்டு கதை கொண்டு பார்க்கலாம் வாருங்கள்.

திருட்டு 1 – 💫💫💫💫

பாகவத ததீயாராதனம் செய்வதற்கு வழிபறி, திருட்டு செய்தவர் பரகாலன் என்னும் நீலன்.  எம்பெருமான் திருமணக்கோலத்தில், சிறந்த, உயர்ரக அணிகலன்களுடன் தானும் தன் மனையாளுமாக, இவர் வழிப்பறி செய்வதற்காகப் பதுங்கி இருக்கும் வழியாக வந்தான்.  பதுங்கியிருந்த நீலன்,  அவர்களை  வாளை வீசி அச்சுறுத்தி, வழிப்பறி  செய்தார்.  அப்போது, மணமகன் (எம்பெருமான்) காலில் இருந்த மோதிரம் கழற்ற முடியாமல் போக, நீலன் அதைக் கழற்றுவதற்காகத், தன் பல்லால் கடித்து வாங்க, மணமகனான எம்பெருமான் இவரைப் பார்த்து, “என்ன தைர்யம் உமக்கு!” என்று மெச்சும் (பாராட்டும்) வகையில், “மிடுக்கனோ நீர்!” என்ற அர்த்தத்தில் இவருக்குக் கலியன் என்று பெயரிட்டான். 

பெருமானிடம் வழிப்பறி செய்த பொருள்களை மூட்டையாகக் கட்டி, அதைத் தூக்க முயன்ற பொழுது, மூட்டையின் கனம் மிகவும் அதிகமாக இருந்ததால், அவரால் அதைத் தூக்க முடியாமல் போயிற்று.  இப்படி, மூட்டை, தூக்க முடியாமல் இருப்பதற்கு என்ன மந்திரம் செய்தாய்? என்று பரகாலன் மணமகனை மிரட்டிக்கேட்டு, தன்  கையிலிருந்த வாளை வீசி மிரட்டினார். மணமகனான எம்பெருமான் மந்திரத்தைக் கூறுவதாக இவரை அருகில் அழைத்து, திருமந்திரம்  என்னும்  அஷ்டாக்ஷர மந்திரத்தை, கலியனுக்கு உபதேசித்து அருளினான். பகவானிடமே உபதேசம் பெற்ற பரகாலன், அன்று முதல் பக்தனானான்.  தன் மனைவியின் பெயரான திருமங்கை என்னும் புனைபெயர் கொண்டு பாக்களைப் பாடி  திருமங்கையாழ்வார் என்ற திருநாமத்தைப்  பெற்றார்.   பரகாலன் என்னும் கலியன், நாயிகா பாவத்துடன் பரகாலநாயகியாக பாசுரங்களை அருளினார்.

ஸ்வாமி தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் –“ஸர்வேஸ்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம் செய்த திருமங்கையாழ்வார்”   என்று போற்றுகிறார்.

பரகாலன் சென்றதோ பொருள்(wealth) திருட.  ஆனால் பொருளை மட்டும் பெறவில்லை திருமந்திரத்தின் பொருளையும் பெருமாள் பிராட்டி அருளினால்  பெற்றார்.  போனதோ அர்த்தம்(belongings) க்ரஹணம்(grab) பண்ண, ஆனால் க்ரஹித்ததோ திருமந்திர அர்த்தம்(meaning). இந்தத் திருட்டு(அதாவது வேதத்தின் அர்த்தம் உபதேசம்) நடந்த இடம் வேதநாராயணபுரம் என்று வழங்கப்படுகிறது.

திருட்டு 2 – 💫💫💫💫

   இதே போல் திருடனான வால்மீகியும்,  நாரதரை வழிமறித்துத்  திருட  முயன்றார். அப்பொழுது  நாரதர் அவருக்கு அக்ஷர த்வயமான ராம நாமத்தை உபதேசம் செய்தார் என்பதை அறிவோம்.

பின்னாளில், வால்மீகி  நாரதரிடத்தில் பதினாறு குணங்களை பட்டியலிட்டு அந்த குணங்கள் அனைத்தையும் உடையவன் யார் என்று வினவுகிறார்.  நாரதரும் அனைத்து காலத்திலும், அனைத்து லோகத்திலும் பட்டியலிட்ட அனைத்து குணங்களையும் கொண்டவர் ஸ்ரீராமபிரான் ஒருவனே என விடையளித்து, ராமனின் திவ்ய சரித்திரத்தை வால்மீகிக்கு உபதேசம் செய்கிறார்.  நாரதர் வால்மீகிக்குச் செய்த இந்த உபதேசமே ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் முதல் ஸர்கத்தில் ராமாயணச் சுருக்கம் என வழங்கப்படுகிறது.

வால்மீகி  நாரதரிடம் ஸர்வார்த்தத்தையும் (all belongings) க்ரஹணம் செய்ய நினைத்தார்.  ஆனால் வேதத்தின் ஸாரமான ராமாயணத்தை அறிந்து, வேதத்தின் ஸர்வார்த்தத்தையும்(all meanings) க்ரஹணம் செய்தார்.

இதுவே இரண்டு தேவரிஷிகளிடம் இருந்து திருடர்கள் திருடிய two meaningful திருட்டு. வால்மீகிக்கு ராம நாமம் உபதேசம் செய்த நாரதர் தேவரிஷி. பரகாலனுக்கு திருமந்திரத்தை உபதேசம் செய்தவர்  தேவதேவனான நாராயண ரிஷி. ஆம், பத்ரிகாச்ரமத்தில் நரனுக்குத் திருமந்திரத்தை உபதேசம் செய்தவர் நாராயணன் என்னும் ரிஷியான பரமாத்மா அன்றோ!!

Aren’t these two meaningful thefts? 😊

நாமும் ஸர்வார்த்த க்ரஹணம் செய்ய, பெருமாள், பிராட்டி, நாரதர், வால்மீகி, திருமங்கையாழ்வார் மற்றும் ஸ்வாமி தேசிகனை ப்ரார்த்திப்போம்.

குறிப்பு: இந்த வ்யாஸம் ஸ்ரீ APN ஸ்வாமியிடம்  இராமாயணம், சில்லரை ரஹஸ்யம் மற்றும் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸார காலக்ஷேபத்தில் பயின்றவற்றின் ஸாரத்தை அடியொற்றியது. 

கார்த்திகை கார்த்திகை நன்னாளாம் இன்று நாமும் ஸர்வார்த்த க்ரஹணம் செய்ய, பெருமாள், பிராட்டி, நாரதர், வால்மீகி, திருமங்கை ஆழ்வார், ஸ்வாமி தேசிகனை ப்ரார்திப்போம்.

அடியேன்
ஸ்ரீரஞ்ஜனி ஜகந்நாதன்

Sri #APNSwami #Writes #Trending| #Save #Contractor #Nesamani ( #நேசமணி )

Save Contractor Nesamani ( நேசமணி )

This article has both the original Tamil version written by Sri APN Swami and the English translation by his students. Scroll down to read the English version.

இடம் வைகுண்டம் : 

      காப்பாற்றுங்கள் ப்ரபோ! காப்பாற்றுங்கள்..!!!” வைகுண்டத்திற்கு நாரத பகவான் கதறிக் கொண்டு ஓடி வந்தார்.

என்ன?? என்னவாயிற்று நாரதா?!! ஏன் இந்தப் பதட்டம்….” நாரதரின் பதட்டம் கண்டு, ஸ்ரீதேவி பூதேவியர் அவரை ஆச்வாசம் செய்து வினவினர்.

தாயே!….. தாயே!…….” என்று, மேலே பேச முடியாமல் மூச்சிறைத்தது நாரதருக்கு.

எங்கே பெருமாள்?…. எங்கே பெருமாள்?…” நாரதர் தேடினார்.

ஒரு அவதார லீலைக்காக அவசரமாக பூலோகம் சென்றுள்ளார் பெருமாள் என்றார் பூதேவி.

பூலோகமா!!!….. ஆஹா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது நாரதர்.

என்ன நாரதா! விஷயத்தைச் சொல்லாமலேயே விவரிக்கிறாயே! பூதேவி.

தாயே! பூலோகத்தில், நேசமணிக்கு ஆபத்து! சுத்தியல் தலையில் விழுந்ததில், கபாலம் பிளந்தது!! அவரைக் காக்கவேண்டித்தான் பெருமாளிடம் ஓடி வந்தேன் மூச்சிரைக்க, நாரதர் சொல்லி முடித்தார்.

நேசமணியா?! யார் அந்த நேசமணி? என்னவாயிற்று அவருக்கு? அவர் தலையில் சுத்தியல் போட்டது யார்?” என தேவிகள் இருவரும் கேட்க…..

நாரதர், தேவிகளே! அதையெல்லாம் விளக்க தற்போது நேரமில்லை. நான் உடனே சென்று பெருமாளைக் கண்டுபிடித்து, நேசமணியைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லியபடியே பூலோகத்திற்கு விரைந்தார்.

இடம் பூலோகத்தில் சென்னை

நாரதர் பெருமாளைக் கண்டுபிடித்துவிட்டார்.

நாரதர் ப்ரபோ! ப்ரபோ! அபயம்…… அபயம்…… நேசமணிக்கு ஆபத்து!!! Save நேசமணி……

பெருமாள் நாரதா! இதென்ன புது Hashtag….. விவரத்தைச் சொல்“.

நாரதர் பரந்தாமா! பெரும் ஆபத்து வந்து விட்டது. தாங்கள் அறியீர்களோ! முழுமையாக விபரீதம் விளையுமுன்பு தடுத்து நிறுத்துங்கள்!”.

பெருமாள் ஒன்றும் புரியவில்லையே!”

நாரதர் (மனதிற்குள்) ம்க்கும்…. இவர் கோவாலுவானதிலிருந்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்….” (வெளியில்) கிருட்டின மூர்த்தியே! இன்று உலகில் Trending தெரியுமா?”

பெருமாள் சொல் நாரதா! என் ஆவலைத் தூண்டாதே….

நாரதர் பெருமாளே….. உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆபரணம் எது?… சொல்லுங்கள் பார்க்கலாம்….”

பெருமாள் கௌஸ்துப ரத்னம்…… அதுவே எனக்கு மிகவும் பிடித்தமானது“.

நாரதர் ரத்னத்தை தமிழில் எப்படிச் சொல்வீர்கள்?”

பெருமாள் ம்ம்ம்…… (யோசிக்கிறார்).. ……ஆங்…… ரத்னத்தை மணி என்னலாம்……”

நாரதர் அதாவது……. கௌஸ்துப மணி என்பதுதானே?”

பெருமாள் ஆமாம்“.

நாரதர் சரி…… கௌஸ்துப மணி எதனால் உங்களுக்குப் பிடிக்கும்?”

பெருமாள் இந்த உலகிலுள்ள ஜீவாத்மாக்களே கௌஸ்துப மணியாகத் திகழ்கின்றனர். எனக்கு ஜீவர்கள் அனைவரும் மிக மிக பிடித்தமானவர்கள். அவர்கள் எல்லோருமே மோக்ஷமடைய ஆசைப்படுகிறேன். ஆகையால் ஜீவர்களைக் குறிக்கும் கௌஸ்துப மணியை மிகவும் ஆசையுடன், திருமகள் அமர்ந்துறையும் எனது திருமார்பில் அணிந்துள்ளேன். ஏன் நாரதா? இது உனக்குத் தெரியாதா?”

நாரதர் நன்றாகத் தெரியும் சுவாமி.. இருப்பினும் இவ்வுலகத்திற்கு விளக்கம் தேவை“.

பெருமாள் சரி கேள்..”

நாரதர் ஜீவமணி, அதாவது கௌஸ்துப மணி, தங்களுக்கு மிக மிக ப்ரியமானது, விருப்பமானது என்பதை எப்படிச் சொல்வீர்கள்?”

பெருமாள் ம்…… ம்……(யோசிக்கிறார்) எப்படிச் சொல்வது.…… ப்ரியம்.…… பாசம்…… ம்….ம்…. ஆம்!… நேசம்…. அந்த ரத்னம், ‘நேசமணி.. நேசமணி…’.

நாரதர் கரெக்ட். அதைத்தான் நானும் சொன்னேன்.”

பெருமாள் நாரதா! நீ ஒரு ஆசார்யன். சொல்வதைத் தெளிவாகக் கூறினால்தானே எனக்குப் புரியும்……”

நாரதர் பெருமாளே! இந்த தேகம் என்பதை ஒரு பங்களாவாகத்தானே சொல்கிறோம்?”

பெருமாள் ஆம்! அதிலென்ன சந்தேகம்?”

நாரதர் இந்த பங்களாவின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்பவர் அதாவது தேகத்தைப் பாதுகாப்பவர், ஜீவாத்மா. சரிதானே?”

பெருமாள் ஆம்.……”

நாரதர் அப்படியானால், தேகத்தின் பராமரிப்பாளர், குறிப்பிட்ட காலம் வரையில் அதைக் காப்பாற்றுகிறார். நாம் அவரை, Contractor அதாவது கர்மவினைகளாகிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒப்பந்ததாரர் தேகத்தின் மூலமாகப் பலனைப் பெறுபவர் என்கிறோம். இல்லையா?… எனவே, தேகம் எனும் பங்களாவை பராமரிக்கும் ஒப்பந்ததாரர் Contractor நேசமணி ஜீவாத்மா…… இதுதான் எனது விளக்கம்“.

பெருமாள் சரி…… அவருக்கென்ன ஆயிற்று இப்போது?”

நாரதர் பூலோகத்தில், பாபிகள் அதிகமாகி விட்டனர். ஜீவர்கள் பெரும் கஷ்டப்படுகின்றனர். சம்சாரம் எனும் சுத்தியலில் அடிபடும் அவர்கள், ஆபத்துக்குள்ளாகின்றனர். ஆகையால்,  தங்களுக்கு ப்ரியமான ஜீவரத்னத்தை நேசமணியை காப்பாற்றுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்“.

பெருமாள் (சிரித்து…) நாரதா! நீ ஒரு சிறந்த ஆசார்யன் என்பதை prove செய்து விட்டாய்.. Ok. நானும் விரைந்து செயல்பட்டு, ஜீவர்களை.. இல்லையில்லை…… என் நேசமணியை காப்பாற்றுகிறேன்“.

Long Live நேசமணி என்றபடியே பெருமாள் விரைகிறார்

அன்புடன்

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Save Contractor Nesamani

Place – SriVaikuntam

“Help! Help!”
Shouting at the top of his voice, Sage Narada came to Sri Vaikuntam looking for Perumal.
“What happened Narada? Why are you shouting? What is the problem?”, asked both Sridevi and Bhudevi in unison.

They were taken aback by Narada’s sense of urgency.

“O Mother…O Mother…..”, Narada was breathless and couldn’t even complete the sentence.
He barely managed to ask, “Where is Perumal?”
He has gone to the Earth for an avataram (incarnation)“, said Bhudevi.
“Oh my God! Why did He go to earth?”, lamented Narada.
“What happened? Are you going to tell us the reason or not?”, asked Bhudevi as She didn’t know what to make out of the whole event.
O Mother! Nesamani is in trouble. A hammer fell on his head and grievously injured him. I came here to request Perumal to Save Contractor Nesamani“, said Narada barely catching his breath.

Both the Devis got curious now. They bombarded Narada with many questions – “Who is Nesamani? What happened to him? Who threw a hammer on his head?”
Narada ran out of Sri Vaikuntam saying, “There is no time for this explanation. I have to find Perumal NOW.”
Place – Bhuloka Chennai
After looking hither and thither, Narada finally found Perumal.
Narada ran to Him and said, “O Lord, danger…danger.,,Nesamani is in danger. Save Nesamani.”
Perumal replied calmly – “Narada, what is this new hashtag? Please explain.”
Narada – “Lord, are you not aware of the grave danger befalling earth. Only You can save. I beg you to save earth from this catastrophe.”
Perumal – “What is all this? I can’t understand anything.”
Narada (in his mind) – “He has forgotten everything.” Sighing, Narada said, “O Krishna, don’t you know what’s trending today?”

Perumal – “Tell me Narada. I’m curious, don’t make me wait.”
Narada – “O Lord, which is your favorite jewel?”
Perumal – “Of course, it is Kausthuba Rathnam. That’s my favorite.”
Narada – “Can you give me another word for Rathnam (in Tamil)?”
Perumal thought for a moment and said, “Rathnam can also be called Mani (gem).”
Narada – “So, it is Kausthuba Mani, right?”
Perumal – “Yes, that’s right.”
Narada – “So, why do you like this Kausthuba Mani?”
Perumal – “The jivatmas who live on earth are an embodiment of Kausthuba mani. I love all the jivatmas and want all of them to attain moksham (liberation and union with Me). Since, I love Jivatmas so much, I regard them as My Kausthuba mani and keep them close to My heart where Thirumagal resides. Don’t you know all this Narada? Why are you asking me again?”
Narada – “I know swami. Just wanted to reiterate it to the world. Now, can you give me another word for the affection you have for Kausthuba mani?”
Perumal went into a deep thought again and finally said, “Another word for affection in Tamil is ‘Piriyam’, ‘Paasam’ and………’Nesam’.. Yes, you can also call  Kausthuba mani as Nesamani.
Narada – “Exactly swami. That’s what I was also talking about.”
Perumal – “Narada.. you’re an Acharyan (Guru). You should explain things in the right way for Me to understand….”
Narada – “O Lord, don’t we see this body as a palatial bungalow?”
Perumal – “Yes, of course!”
Narada – “The person who is taking care of the bungalow is the Jivatma, right?”
Perumal – “Yes…..”
Narada – “That means, the person who is taking care of the bungalow does so for a limited period of time based on the laws of Karma. Such a person who is assigned the responsibility of taking care of a place for a limited time within a set of stipulated conditions is a contractor. So the Jivatma who is taking care of the body is Contractor Nesamani, right?”
Perumal – “Accepted…but what happened to them now?”
Narada – “The sinners are increasing by the day in Bhuloka. As a result, the Jivatmas are getting hit by the hammer called Samsaram, and they are undergoing a lot of suffering. This is why I’m requesting you to do everything to Save Contractor Nesamani (your favorite Jivatamas) from this suffering.”
Perumal (with a big smile) – “Narada, you have once again proved that you’re a great Acharyan. I’m also rushing now to SAVE CONTRACTOR NESAMANI.
Perumal rushed thinking, Long Live Nesamani.

 

(English Translation by students of Sri APN Swami.)