Sri APN Swami #Writes #Slokam | ச்ரத்தாஞ்ஜலி: | Shraddhanjali | श्रद्धाञ्जली:

ச்ரத்தாஞ்ஜலி:

பிபின் ராவத் ஸுவிக்யாத: ஸேநாநீ ஜயதே ஸதா |
வ்யூஹே தந்த்ரே த்ருதி: தக்ஷ: காஷ்டா ரக்ஷண ஸுவ்ரத: || 1

(நமது முப்படைத் தளபதி பிபின் ராவத் என்று ப்ரஸித்தி பெற்ற வீரர் எப்போதும் ஜயத்துடன் விளங்குகிறார். சேனைகளை அணிவகுப்பதிலும், அதை வழிநடத்துவதிலும் உறுதியும், திறமையும் வாய்ந்த அவர் நமது தேசத்தின் எல்லைகளைக் காப்பதையே விரதமாகக் கொண்டவர்.

ஜயமாதா ப்ரிய: புத்ர: சூர: சத்ரு நிபர்ஹண: |
சத்ரோ: ப்ரக்யாத வீர்யச்ச ரஞ்ஜநீய: ரணாதிப: || 2

(போரில் வல்லவர். பாரதத்தாயின் ப்ரியமான புதல்வர். எதிரிகளை நடுங்க வைப்பதில் சூரர். அந்த எதிரிகளும் இவரது வல்லமை கண்டு வியந்து போற்றுவர். அதே சமயம் பழகுதற்கு மிகவும் இனியவர்.)

தேசபக்தோ விவேக: அஸௌ குடாகேச: கிரீடிவத் |
ஜாகரூக: நவீநஜ்ஞ: பாரதஸ்ய அக்ரணீ: மஹாந் || 3

(தேசத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவரான இந்த மஹான் அர்ஜுனன் போன்று வீரத்துடன் சோம்பல் இல்லாமல் உழைப்பவர். எப்போதும் விழிப்புடன் இருந்து தேச நலனுக்காக புதிய, புதிய ராணுவ உத்திகளைக் கையாள்பவர்.)

விதேச பதிபி: மாந்ய: நிபுண: ஸமராங்கணே |
சைநாதிக்ய ப்ருஹத்பேத்தா ப்ரஜாரக்ஷண தீக்ஷித: || 4

(நம் தேசத்து மக்களைக் காப்பதில் உறுதியானவரும், வெளிநாட்டு அதிபர்களும் ‘இவரைப் போன்ற திறமை மிகுந்த தேசபக்தர் நமக்கு இல்லையே’ என ஏங்கி பாராட்டும்படியாக இருப்பவரும், புதிய, புதிய உத்திகளை போரில் புகுத்தி எதிரிகளை தடுத்தவரும், குறிப்பாக எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுத்தவர் இவரேயன்றோ!)

கீதானுகாரீ தத்தீர: ப்ராப்தவாந் த்ரிதிவம்சுப: |
யசோமூர்த்யா வஸந்சித்தே பாஸதே ஜய பாரதம் || 5

(யுத்தம் உனது தர்மம். அதில் பின்வாங்காதே. உன்னை நம்பியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு உனது. யுத்தத்தில் மரணம் உனக்கு அழியாத சுவர்கத்தை அளிக்கும் எனும் கீதையின் பொருள்படி நடப்பவர் இன்று வீரசுவர்கம் அடைந்தார். ஆனால் புகழுடம்புடன் நமது இதயத்தில் வஸிக்கிறார்.

ஜய் ஹிந்த் ஜய் ஹிந்த் !

Sri #APNSwami #Writes #Trending Slokam | ஒரு தேசபக்தனுக்கும், கொரானாவுக்கும் நடைபெறும் உரையாடல்| Patriot & Corona Converse | India Fights Corona | #COVID-19

ஒரு தேசபக்தனுக்கும், கொரானாவுக்கும் நடைபெறும் உரையாடல்

Slokam by Sri APN Swami 

க்ரூர த்வம் கொரொநே ! கிமர்தம் இஹ தே
ஸஞ்சரணாந்வேஷணம்
போ! போ! பாரத! பீடநார்த்தமிஹ வோ
சீநாத் ஜடித்யாகத: |
அத்ரது அத்புத விக்ரம: நரபதி: ந: பாதி
த்வம் சாதுநா
சீக்ரம் கச்ச க்ருமே! த்வதீய நகரம்
ப்ராணம் ச ஸம்ரக்ஷய ||

தேசபக்தனொருவன் கொரொனா வைரஸை வழியில் பார்த்தான், “அடேய்! க்ரூரமான குணம் படைத்த கொரொனாவே! எங்கள் பாரதத்தில் என்ன தேடிக்கொண்டு நீ சுற்றித்திரிகிறாய்?” என்று கேட்டான்.

அதற்கு அந்த கொரொனா வைரஸ் பதில் சொன்னது – “நான் பாரதர்களான உங்கள் அனைவர்களையும் பிடித்து துன்புறுத்துவதற்காக சீனாவிலிருந்து வந்திருக்கிறேன் ” என்றது.

அப்பொழுது அந்த தேசபக்தன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் , “அடேய்! கொடிய கொரொனாவே! நரேந்திரன் என்னும் திறமையான அரசன் எங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். ஆகையால் உன்னுடைய எண்ணம் இங்கே பலிக்காது. ஆகையால் உடனடியாக நீ புறப்பட்ட இடத்திற்கே சென்று ஓடி ஒழிந்துக்கொள். வெளியே தலை காட்டாதே, உன் உயிரை காப்பாற்றிக்கொள். ஏனென்றால் எங்கள் அரசன் பார்த்தால் உன்னை நசுக்கி கொன்றுவிடுவான் என்று சொன்னான்.

Once a patriot asked Corona, “Hey cruel Corona! What are you searching for in my country (India)?”
Corona said, “Hey Indian! I’ve come all the way from China to torment all you Indians.”
Hearing this, the patriot laughed and said, “Hey deadly Corona! A powerful and capable king called Narendran is protecting all of us here, so you can’t fulfill your desires here. He will annihilate you! So, to save your life, go on a self-quarantine back to your place.”

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

This article has both the Tamil version written by Sri APN Swami and its English translation done by his students.

நரேந்த்ரன் செய்த நன்மை

The Good Acts of Narendran

மனிதனின் மனோபாவம் நல்லவைகளை பாராட்டக் காட்டும் தயக்கமேயாகும். பாராட்டாதது மட்டுமின்றி குறைகளைப் பெரிதாக்கி அதில் குளிர்காய்வது உலகியல்பு.  நாம் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருந்தாலும் அதையெல்லாம் காணாமல் அல்லது கண்டும், காணாமல் உதாசீனம் செய்தும், அவர்கள் பார்வையில் உள்ள தோஷத்தினாலும், அறிவின்மையாலும், அடுத்தவரைக் குறை கூறுவதில் வரும் அல்ப சந்தோஷத்தினாலும் தங்களை பெருமை பெற்றவராகச் சிலர் நினைப்பர். இத்தகையவரின் மனோநிலையை ஸ்வாமி தேசிகன் ஸங்கல்ப ஸூர்யோதய நாடகத்தில் விவரிக்கிறார்.

இத்தகையவர்களின் தலைமகன் யார் என்றால் ராவணன், துர்யோதனன் முதலியவர்களேயாவர்.

“நான் இதை ஏற்கமுடியாது கண்டிக்கிறேன்” என்று சொல்வதால் அவர்கள் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்தவராகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை ஒரு அரசு செயல்படுத்தும் போதும் எதிரணியினர் “எதிர்ப்பதே இயல்பு” என செயல்படுவது கண்கூடு.

ராம, ராவண யுத்தம் நடைபெறுகிறது. அப்போது ராமபிரானின் பராக்ரமம் [வீரம்] கண்டு வியப்பெய்யாதவர்களே இல்லை. ஆனாலும் ராவணனுக்கு அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவனது மனம் மற்றவரைத்தான் பாராட்டாதே! ஆனாலும் தொடர்ந்து ராமனின் நடவடிக்கைகள் ராவணனுக்கு தோல்வியை அளித்தன. தனது இறுமாப்பு வென்றுவிடும் என நினைத்தவனுக்கு ராமனின் பண்புமிக்க வீரம் வியப்பளித்தது.

அப்போது வேறுவழியே இல்லாமல் ராவணன் ராமபிரானை புகழ்கிறான். அவனையறியாமல் ராமனின் பெருமைக்குத்தலை வணங்கினான். நளினமான தனது நடவடிக்கைகளினால் ராமபிரான் எதிரிகளாலும் புகழப்படுகிறான் என்கிறார் வால்மீகி.

நாராயணனாகிய ராமன் வீரராகவன் என்கிறான் ராவணன்.

லோகஷேமத்திற்காகச் செய்யும் காரியங்களைப்புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்கள், நிகழ்வுகளின் வலிமை கண்டு தங்களின் தவறையுணர்ந்து, தாங்களும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைக் காண்கிறோமல்லவா!

“எவனோவொருவன் செய்யும் தீய செயல் உலகில் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது” என்பர் பெரியோர். அதே போன்று மஹாத்மா ஒருவனின் நற்செயல் இவ்வுலகை வாழ்விக்கிறது என்றும் சொல்வர். தீயவர்கள் கூட தங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தங்களின் நன்மைக்காகத்தான் என்று ராவணனைப்போன்று (ஏதோவொரு காலத்திலாவது) உணர்ந்தார்களானால் அது தேசத்தின் அபிவ்ருத்தியன்றோ! தேசத்தின் நலனில் விருப்பமுடையவர்கள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

நரேந்திரன் செயல்களைக்கண்டு சத்ருக்களும் வியக்கின்றனர் என்றால் சாதுக்கள் சும்மாவாகவா இருப்பர். அவர்கள் தானே அதிக மகிழ்ச்சியுறுகின்றனர்.

இப்படி நரேந்திரன் செய்த நன்மையை இன்று உலகமே கொண்டாடுகிறதென்றால் நமக்கும் அது பெருமைதானே.

– ஸ்ரீஏபிஎன் சுவாமி

23/03/2020

English

The Good Acts of Narendran

The human mind always hesitates to appreciate the good things but takes a lot of pleasure in pointing out the mistakes instantaneously. This is the law of nature. Despite doing many acts of goodness, they are not appreciated because people tend to overlook or ignore these acts and will only examine the mistakes with greater scrutiny. This emanates from their innate need to point out the mistakes in others, lack of knowledge and understanding, to gain a fiendish pleasure, and possibly even to prove that they are one notch higher than others. Swami Desikan has explained the mindset of such people in Sankalpa Suryodhayam.

The heads of such groups are none other than Ravanan and Duryodhanan. They attract the attention of the world by saying that they deplore or don’t accept these good actions and thoughts. Many times we have seen that when a government or ruler does things that are beneficial for the country as a whole, the opposition (those who oppose) condemn it.

In the battle between Rama and Ravana, everyone who watched it was astounded by Rama’s strength and valor. The only person who could not praise or accept Rama’s greatness was Ravana simply because his mind can never accept that anyone is better than him! Still, Rama’s actions brought a string of defeats and setbacks for Ravana. These were big blows to not just Ravana’s army but also to his egoistic behavior as he increasingly saw the humble valor of Rama.
After a point, Ravana could resist no more, so he praised Rama. Even without his knowledge, Ravana acknowledged the power and greatness of Rama. In this sense, Rama won over His enemies with his smooth and humble ways, explained Valmiki.

Ravanan calls Rama as Veeraraghavan. When the enemies or those who oppose the good acts done for the welfare of the world, see the results of these acts and its huge positive impact, they tend to subconsciously clap their hands for the efforts. We have seen this many times now!

Elders often say that the bad act of a single person brings a lot of negative impact to the world. At the same time, they also say that the good acts of a Mahatma (great person) helps the world to live a better life. When the enemies and opposers like Ravana realize that the small punishments or inconveniences that they have to bear are for their own good, it is progress for the nation, right? Such good acts will never go unappreciated by those who care for the nation.
When even enemies are astounded by Narendran’s actions, will sadhus (people with good intent) keep quiet? Won’t they be the ones who will feel extremely happy?

Today such an act by Narendran is being praised by the entire world. Isn’t it a moment of pride and happiness for us?

-Translation by Sri APN Swami Sishyas

Sri APNSwami’s Shishya Writes | Flag Poles that Protect our Mother Land India | பாரத நாட்டை ரக்ஷிக்கும் பகவானின் கொடி மரங்கள்

Flag Poles that Protect our Mother Land India

15Aug eng

The emergence of AthiVaradar at Kanchipuram after 40 years has brought many initiatives from His ardent devotees and one such initiative is a write-up series called “Marai Uriakkum Maram” in tamil written by Sri APN Swami Sishyas based on the kalakshepam and learnings imparted by Sri APN Swami. This series talks about the importance of different trees in our Sanatana Dharmam as in our scriptures and how the Supreme Paramathma is blessings his devotees in the form of various trees in many holy shrines.

Here, we present the English Translation of Day 46 of the “Marai Uraikkum Maram” series.

📖📖 📣📣 🌳🌳
Marai Uraikkum Maram | Day 46 of AthiVaradar
Part 46 – Flag Poles that Protect our Mother Land India
📖📖 📣📣 🌳🌳

Today is Independence Day and a day where our Indian flag flies high everywhere. Like this, there is a flag pole in our holy Sanatana Dharmam too and this is called “Dwajasthambam” the flag pole in-front of all the temples of Lord Narayana.

The residents of Bharatha Desam are lucky as Paramathma is protecting us from all four sides. In the east, we have Him protecting as Jagannatha of Puri, in the west He is standing as Dwarakanathan of Dwaraka, in the south, He is present as Jagannathan of Thirupullani and in the north, He is Nara-Narayanan of Badrikashramam.

Out of these four places, in the west is Dwaraka which is famed for many reasons and it is particularly worshipped as one of the seven holy places that grant us Moksham (liberation). Do you know that the Dwajasthambam of Dwaraka is also special?

Two Dwajasthambams in Dwaraka are very important. When you say Dwarakapuri or Dwaraka, it refers to Gomathi Dwaraka and PEt Dwaraka. Lord Krishna is blessing us as Dwarakedeesan on a small hillock located on River Gomathi and this is why Gomathi Dwaraka is also called “Jagath Mandir.” The Dwajasthambam in this temple is the biggest in the world. Many people from all over India pray to this Dwajasthambam and even offer flag cloth for their wishes to get fulfilled.

The other Dwaraka called PEt dwaraka is located in the middle of the sea. It is also called SangOthaar. This is the place of the holy “Sanga theertham.” There is an interesting aspect here as well. The dwajasthambam of this temple is located right behind Lord Krishna’s sanctum sanctorum and not in the front, as we see it in other temples. It is believed that this was the location of Krishna’s palace where Sathyabama and Jambavathi lived with Him.

When you move towards East of India, you get to Niladri or Puri where the idols of Jaganathan, Balaraman and Subadra are made of Neem tree. A unique aspect about Puri Jagannath temple is that every day a new flag is hoisted on the Dwajasthambam and in the evening, it is lowered!

Let us hail Lord Athi Vardan today with holy name as follows
46. ध्वजस्तंभ रूपाय वरदाय नम:
46. Dwajasthambha Roopaya Varadaya Nama:

On this auspicious joyful Indian Independence Day when we hoist our National flag with pride, let us hail Paramathma’s flag posts (Dwajasthambams) which are protecting We Indians from all four directions.

Do continue to follow Sri APN Swami’s blogs and social media for much interesting information.

Writeup by
Sri APNSwami’s Shishyai – Smt Sriranjani Jagannathan
15-Aug-2019

#MaraiUraikkumMaram Sri #APNSwami #AthiVaradar46 #Kanchipuram
#AthiVaradarDay46
#Tree #RiseofAthiVaradar #Vedam #VedaReveals
#Puri #JagannathaMandir #Dwaraka #GomatiDwaraka #BetDwaraka #ByetDwaraka #IndiaFlag #Dwarakadeesh
#India #Independenceday #15August #TricolourFlag #Flagpole #Dwajasthambham #BharathMatakiJai #SanathanaDharma #Flaghoist

Note : Original Tamil Article as below

📖📖 📣📣 🌳🌳
மறை உரைக்கும் மரம் | Day46 of AthiVaradar
பகுதி 46 – பாரத நாட்டை ரக்ஷிக்கும் பகவானின் கொடி மரங்கள்
📖📖 📣📣 🌳🌳
Sri APNSwami காலக்ஷேபத்தில் அத்தி வரதர் வைபவத்துடன் தினம்தோறும், தாரு(மர) வடிவில் பல திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ள பெருமாளின் பெருமைகளை அருளிச்செய்துள்ளதின் தொகுப்பினை நாம் அனுபவிக்கலாம்.

இன்று தேசிய கொடி ஏற்றிக் கொண்டாடும் இந்தியாவின் சுதந்திர தினமான நன்னாளில் நமது சனாதன தர்மத்தின் சில கொடி மரங்களை ( Dwajasthambam/ Flag Pole) பற்றி அறியலாம்.

நம் பாரத தேசத்தில் உள்ளோரை கிழக்கில் நீலாத்ரி என்னும் பூரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதனாகவும், மேற்கில் துவாரகையில் துவாரகாநாதனாகவும் , தெற்கில் திருப்புல்லாணியில ஜகந்நாதனாகவும் , வடக்கில் பதரிகாச்ரமத்தில் நர-நாராயணர்களாகவும் நான்கு புறமும் வீற்றிருந்து பகவான் ரக்ஷிக்கிறான்.

மேற்கில், முக்தி தரும் ஏழு ஸ்தலங்களில் ஒன்றான துவாரகையில், இரண்டு கொடி மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். துவாரகாபுரி / துவாரகை என்றால் கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் குறிக்கும்.

கோமதி ஆற்றங்கரையில் ஒரு சிறிய குன்றின் மீதுள்ளதால் கோமதி துவாரகையில் கண்ணன் துவாரகாதீசனாக வாசம் செய்கிறான். “ஜகத் மந்திர்” என்னும் துவாரகை கோயிலின் துவஜஸ்தம்பம் (கொடிமரம்) உலகின் மிகப் பெரிய கொடி மரமாகும். பக்தர்கள் ப்ரார்த்தனை செய்து இந்த கொடி மரத்தின் கொடிக்கு வஸ்திரம் சமர்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடலுக்கு நடுவில், ஒரு தீவில் ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயம் அமைந்துள்ள இடம் பேட் துவாரகா / சங்கோதார் என்று வழங்கப்படுகிறது. “சங்க தீர்த்தம்” என்னும் மிகப் புகழ்பெற்ற தீர்த்தம் இங்கு உண்டு. பேட் துவாரகையில் ஒரு விசேஷம். எல்லா கோவில்களிலும் பெருமாள் சந்நிதானத்திற்கு முன்தான் கொடி மரமான துவஜஸ்தம்பம் இருக்கும், ஆனால் பேட் துவாரகையில் மட்டும் பெருமாள் சந்நிதியின் நேர் பின்புறம் துவஜஸ்தம்பம் இருக்கிறது. இந்த திருத்தலத்தில் துவாரகாநாத்ஜியாக சங்கு சக்கரங்களுடன் கிருஷ்ண பரமாத்மா அருள்பாலிக்கிறான். இங்கு கிருஷ்ணரின் மாளிகை இருந்ததாகவும், அதில் சத்தியபாமா மற்றும் ஜாம்பவதி வசித்தனர் என்றும் கூறப்படுகிறது.

கிழக்கில், நீலாத்ரி என்னும் பூரி க்ஷேத்திரத்தில் எம்பெருமான் ஜகந்நாதன் பலராமனுடனும் சுபத்ராவுடனும் சேவை தருகிறான்.  அம்ருதத்தை வருஷிக்கும் வேப்பமரத்தினால் ஆன இந்த மூர்த்திகளின் பெருமையை நாம் பகுதி 29ல் அறிந்தோம். பூரி க்ஷேத்திரத்தில் உள்ள துவஜஸ்தம்பத்தில்(கொடிமரத்தில்) தினம்தோறும் காலையில் புதிய கொடியை ஏற்றி மாலையில் அந்த கொடியை இறக்கும் வழக்கம் உள்ளது.

இப்படி நாற்புறமும் கோயில் கொண்டு நம்மை காக்கும் எம்பெருமானின் கொடி மரங்களை இந்திய சுதந்திர தினமான இன்று போற்றுவோம்.

📖📖 📣📣 🌳🌳
46. ध्वजस्तंभ रूपाय वरदाय नम:
46. துவஜஸ்தம்ப ரூபாய வரதாய நம:
என இன்று நாம் அத்தி வரதரை இந்த திருநாமம் கொண்டு அர்ச்சிக்கலாம்.
📖📖 📣📣 🌳🌳
அடுத்த மரத்தின் நிழலில் விரைவில் இளைப்பாறலாம்……

அடியேன்
ஸ்ரீரஞ்ஜனி ஜகன்னாதன்
15-ஆகஸ்ட்-2019

(Please visit Sri APN Swami’s Facebook Page to read the entire series.)