குடந்தையில் காட்சி தரும் கொன்றைப் பூ லக்ஷ்மணன் | கும்பகோணம் | Sri APN Swami Writes | Thedi Thozhutha Thiruththalangal 01

Note : Scroll down to read the English translation of the article

அழகிய காவிரிக்கரையில் அமைந்துள்ள அத்புத நகரம் குடந்தை நகரம். கோவில் நகரம் கும்பகோணம் என்று இதற்குப் பெயருண்டு. சைவமும் வைணவமும் தழைத்தோங்கும் புண்யபூமி. சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை என்கிறார் நம்மாழ்வார். அதாவது, காவிரித்தாயின் கருணையினால் செழித்து வளர்ந்த நெற்பயிர்கள், பெருமாளுக்கு சாமரம் வீசுகின்றதாம். சோழவளநாட்டின் செழுமை மகத்தானது.

கோவில் நகரமான குடந்தையில், திரும்பிய பக்கமெல்லாம் திருக்கோவில்களைக் காணலாம். ஒருமாதம் முழுதும் இந்நகரத்தில் தங்கியிருந்தாலும், மொத்த கோவில்களையும் முழுதாக தரிசித்துவிட முடியாது. இறையுணர்வு, கலையுணர்வு என இரண்டையும் நமக்களிக்கும் பொக்கிஷங்கள் இக்கோவில்கள்.

அன்னிய படையெடுப்புகள், அணை மீறிய வெள்ளங்கள் என பல ஏற்பட்டாலும்,  காலத்தால் அழியாதவையாக, கம்பீரமான தெய்வத்தின் சன்னிதானங்கள், குடந்தையில் நிறைந்துள்ளன. இந்த வாரம் நாம் தரிசிக்கவிருப்பது, கும்பகோணம் தோப்புத் தெரு கோபாலன். கோபாலன் என்றாலேயே கொள்ளையழகு என்பதற்கேற்ப, தோப்பின் நடுவில், தெய்வீக அருள்புரிகிறான் கோபாலன்.

தோப்புத்தெரு

கும்பகோணத்தில் எவரைக் கேட்டாலும், தோப்புத் தெருவிற்கு எளிதாக வழிகூறுவர். ஒரு காலத்தில் அடர்ந்த தென்னை மரங்கள் இங்கு அதிகமாக நிறைந்திருந்தன. பெரிய பெரிய தென்னந்தோப்புகள் நடுவே, பெருமாளுக்குத் தனியாக ஆலயம் அமைக்கப்பட்டது. கண்ணன் என்பவன் காட்டில் வாழும் தெய்வம்தானே!

ப்ருந்தாவனத்திலும் கோகுலத்திலும் வசித்தபோதுகூட கண்ணன் பெரும்பாலான நேரத்தை காட்டிலேயே செலவிட்டான். இதனை சுவாமி வேதாந்த தேசிகன் ரசமாக வர்ணிக்கிறார் – ஆரண்யம் என்றால், காடு என்றும்  வேதம் என்றும் பொருள். வேதத்தின் தலைவன் கண்ணன், ஆரண்யத்தில் – காட்டில் வசித்திட விரும்புகிறானாம்“. அதனால்தான் இங்கும் தோப்பின் நடுவே குடியிருக்கிறான்.

ப்ருந்தாவனத்தில் யமுனா நதி. இங்கு அரிசிலாறு. இவ்வாற்றின் கரையில்தான் அழகிய ஆலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் எப்போதும் வேதவொலியும், விழாவொலியும் நிறைந்திருக்குமாம். வாஜபேயம், பௌண்டரீகம் முதலிய பெரிய யாகங்களை மஹான்கள் இத்தலத்தில் செய்துவந்துள்ளனர்.

கோகுலத்தின் அருகில் அந்தணர்கள் நிறைந்த ஒரு அழகிய அக்ரஹாரம் இருந்ததாம். அங்கு பெரியோர்கள் எப்போதும் யாகம் செய்து வந்தனராம். கண்ணனும் அவனது தோழர்களும் வனத்தில் திரிந்து, களைத்து, பசித்திருந்தால், அவர்கள் யாகம் செய்யும் இடத்திற்கு வந்து, அங்குள்ள பெண்கள் அளிக்கும் ஆகாரத்தை உண்டு பசியாறிடுவார்களாம்.

அதேபோன்றுதான், அரிசிலாற்றின் கரையில் தோப்புத் தெருவில் கோபாலன் சன்னிதிக்கு நேர் எதிராக அழகிய அக்ரஹாரம் ஒன்றுள்ளது. தனது பழம் பெருமையை அது இழந்திருந்தாலும், பெரியோர்கள் பல யாகங்களைச் செய்து வந்ததின் சக்தியை நாம் இன்றும் உணருகிறோம்.

கோபாலனின் கோவில்

தெருவினில் நுழைந்தவுடனேயே நம்மை ஆட்கொண்ட தெய்வீக உணர்வுடன் திருக்கோவிலுக்குள்ளே நுழைகிறோம். கோவில் சிறியதுதான். ஆனால் இறைவனின் கீர்த்தியோ மிகமிகப் பெரியது.  இக்கோவிலில் ஒரு வித்யாசமான சிறப்புண்டு. அதாவது மூலவர் ராமர் நின்ற திருக்கோலத்துடன்; உற்சவர் கோபாலன். ஆனாலும்,  இக்கோவில், தோப்புத்தெரு கோபாலன் சன்னிதி என்றே வழங்கப்படுகிறது.

ராமனை, காட்டில் திரியும் அழகன் (வந சுந்தரன்) என்கிறார் வால்மீகி முனிவர். அதாவது, தண்டகாரண்யம், பஞ்சவடி முதலிய காடுகளில் அலைந்து திரிந்தபோது, காட்டிலிருந்த மஹரிஷிகள் அவனின் அழகைக் கண்டு மனம் மயங்கினார்களாம். ராமாவதாரம், க்ருஷ்ணாவதாரம் எனும் இரண்டு அவதாரங்களிலுமே காட்டில் திரிந்தபடியால், இங்கு தோப்புத் தெருவில், மூலவர் ராமனும் உற்சவர் கோபாலனும் காட்சியளிக்கின்றனர் போலும்.

வாயிற்படிக்கு நேராகவமைந்த கருவரையில் ஒரே பீடத்தில் ராமனும், சீதையும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். ஒரே பீடத்தில் தம்பதிகள் நிற்பது திருமண கோலத்தில்தானே! உலகைக் காப்பாற்றும் இந்தத் திவ்யதம்பதிகள், மணக்கோலத்தில் சேவை தந்து, மக்களுக்கு மனக்குறையையும், திருமணத்தடங்கல்களையும் தீர்க்கின்றனர். ஒரே பீடத்தில் நின்று சேவை சாதிக்கும் ராமனையும், சீதையையும் சேவிப்பவர்கள், திருமணத்தடைகள் நீங்கப் பெறுகின்றனர்.

லக்ஷ்மணனின் லக்ஷணம்

வலதுபுறம் சீதையென்றால், ராமனின் இடதுபுறம் லக்ஷ்மணன்தானே! இவர்களுக்கு, எக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் உடனிருந்து கைங்கர்யம் செய்யும் பாக்யம் பெற்றவன் லக்ஷ்மணன். சீதையைப் பிரிந்ததைவிட லக்ஷ்மணனைப் பிரிந்த ராமன் அதிகம் துயரமுற்றாராம். வேறெந்த திருக்கோவிலிலும் சேவிக்க முடியாத அற்புத உருவ அமைப்பில், இங்கு லக்ஷ்மணன் அருகில் நிற்கிறார். அதை அறியும்போதே நமக்கு மெய் சிலிர்க்கிறது!

ராமன் சாக்ஷாத் மகாவிஷ்ணுவின் அவதாரம். சீதையோ மஹாலக்ஷ்மீ. ராம நாமத்தின் பெருமையை நன்குணர்ந்தவர் சாக்ஷாத் அந்த பரமேச்வரனே ஆவார். எனவேதான் இறக்கும் தருவாயிலுள்ள ஜீவன்களின் வலது காதில், ராம நாமத்தை,  காசியில் பரமேச்வரன் உபதேசம் செய்கிறார் என்கிறார் ஆதிசங்கரர். அத்தகைய பரமசிவனிடம், பார்வதிதேவி, ஸ்ரீராமபிரானின் பெருமைகளைக் கேட்கிறாள்.

அப்போது ஸ்ரீராமசந்த்ரமூர்த்தியின் பெருமைகளை விளக்கும் பரமசிவன், லக்ஷ்மணன் போன்று தானும் ராமபிரானுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அது எப்படி முடியும்?” என பார்வதி கேட்கிறாள். கண்ணை மூடி ராமபிரானையும் சீதாதேவியையும் ப்ரார்த்தனை செய்து, கண்ணைத் திறந்து பார்  என்கிறார் பரமசிவன்.

என்ன ஆச்சர்யம்!! சீதா ராமர்கள் அருகிலிருக்கும் லக்ஷ்மணன், சடைமுடியுடனும், பிறை சந்த்ரனுடனும், தலையில் கொன்றைப்பூவுடனும் காட்சியளித்தார். ஒருகணம் பார்வதியின் உடல் சிலிர்த்தது. உதடுகள் அவளையறியாமல், ராம! ராம! என்று உச்சரித்தன. கண்ணைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தபோது, சீதா-ராம-லக்ஷ்மணர்களே சேவை தந்தனர்; சடை, கொன்றைப்பூ, பிறைசந்த்ரன் என ஏதும் தெரியவில்லை.

வேறெங்குமே தரிசிக்க முடியாத, பார்வதி தரிசித்த, இந்த அதிசய கோலத்தை இன்றும் இங்குள்ள லக்ஷ்மணன் திருமேனியில் சேவிக்கலாம். ஒருமுறை நமக்கும் சிலிர்ப்பு உண்டாகிறது. ராமபிரானின் பெருமைதான் என்னே!!! தஞ்சை சரபோஜி மன்னரின் அனுபவம் இது – என்பர் பெரியோர்.

உற்சவர் கோபாலன்

இப்படி மூலவரை தரிசித்த பின்னர், உற்சவர் கோபாலனை தரிசிக்கலாம். மதிளழகுமிக்க மன்னார்குடி ராஜகோபாலனின் வடிவழகு என்னவோ, அது அனைத்தையும் குடந்தை கோபாலனிடம் சேவிக்கலாம். ருக்மிணி, ஸத்யபாமை எனும் இருதேவிகள் இருபுறமும் திகழ, ஒய்யாரமாக, மாடு மேய்க்கும் கண்ணனாக கையில் சாட்டையுடன், நின்ற திருக்கோலத்தில் கொள்ளை அழகுடன் காட்சி கொடுக்கிறான். எங்கள் கண் த்ருஷ்டி உன்மீது படக்கூடாது கண்ணா என்று வேண்டிக்கொண்டே, கண்ணை மூடாமல் கோபாலனை தரிசிக்கிறோம். மூல ஸ்தானத்திலேயே சந்தான க்ருஷ்ணனும் சேவையாகிறார். புத்திரபாக்யம் இல்லாதவர்கள் இவரை சேவித்து மக்கட்பேறு அடைகின்றனர்.

ராமன் உண்டு என்றால், அனுமான் இல்லாமலா! வாயு குமாரனாகிய அனுமனை பரமசிவன் அம்சம் என்பர் பெரியோர். அழகிய குடுமியுடன், மார்பில் பூணூலுடன் திகழும் அனுமனும்,  கையில் கொன்றைப் பூவினை ஏந்தி நிற்பது, அனுபவித்து சேவிக்கத் தக்கது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள், கோபாலனையும் ரகுவீரனான ராமனையும் பாடிய வேதாந்த தேசிகர் முதலானோரும் இக்கோவிலில் காட்சியளிக்கின்றனர்.

குடந்தை நகரினுள்ளேயே அமைந்துள்ள தோப்புத்தெரு கோபாலன் சன்னிதிக்கு ஒருமுறை சென்று சேவித்து வாருங்கள். உங்களின் உள்ளத்தில் நல்ல தெளிவு உண்டாகும்.

நகரத்தின் எங்கிருந்தும் ஆட்டோ முதலிய வசதிகள் உண்டு. 

தொடர்புக்கு சுதர்சன பட்டர்99406 55506.

Lakshman with Cassia Flowers in Kudanthai

As the name “Temple city” suggests, one will come across a temple almost everywhere throughout this city.  In fact, one cannot complete visiting all the temples, even if you spend a full month here.  These temples are the treasures that bestow on us the Godliness and Artistic sense.   Though the foreign invasionsThe wonderful town of Kudanthai is situated on the banks of the beautiful river Cauvery.   It’s also known as the “Temple city Kumbakonam” as both Saivism and Vaishnavism flourished together in this sacred place.  Namazhvar says சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர் திருக்குடந்தை”, which means that with the blessings of mother Cauvery, the paddy crops here grow well and fan Perumal.  This speaks of the prosperity of the Chola Kingdom. and the rampant floods have caused many to perish, the prevalence of time tested temples that stand majestically in Kudanthai is an ancient testimony of our Sanatana Dharmam.

This week, we are going to visit Kumbakonam’s Thoppu Theru Gopalan temple.   The very word “Gopalan” means mystic beauty.  Lord Gopalan blesses all of us from the middle of the thoppu (grove) here.

Thoppu Theru:

Ask anybody in Kumbakonam, they will easily show you the way to Thoppu street.  Once, there existed an extensive coconut grove with magnificent coconut trees and the temple was built exclusively for Perumal in the middle of the grove.  After all, Lord Krishna always spent his time in the forest.

Even during His days in Brindavan and Gokulam, Kannan spent most of His time in the forest only.  Swami Sri Vedanta Desikan very beautifully describes “Aranyam” as “Forest” as well as “Veda”. The head of Vedas, Kannan, loves to spend His time in the forest. That’s the reason He stays here too, in the middle of the grove (thoppu).

Just like River Yamuna in Brindavan, here it is the Harisal River. On the banks of this Harisal river, this wonderful temple is built. This place always enjoys the sound of Vedas and the many festivals that adorn it.  In the past, great scholars performed many Yagams such as Vajapeyam and Poundareekam in their homes around this temple.

Near Gokulam, there used to be a beautiful Agraharam with lots of brahmins. There, the elders always performed the Yaagams.  Lord Krishna along with his friends used to roam in the forest.  Whenever they got tired and hungry, they would visit this place where Yagams were performed.  The women from these homes would feed Sri Krishna and his friends sumptuously.

Just like that, here on the banks of the Harisal river, opposite to the Gopalan temple, there was a beautiful Agraharam. Though it has lost the ancient pride of elders performing the Yagams and  Yagnams, one can feel its power even now.  

Gopalan Temple:

As we enter the thoppu street, with the blissful feeling engrossing us, we enter the Gopalan Temple.  The temple is small, yet Perumal’s glory is infinite.  The speciality of this temple is that the presiding deity is Sri Raman in standing posture while the utsavar is Sri Gopalan.  However, this temple is addressed as Thoppu Theru Gopalan Sannadhi.

Sage Valmiki calls Lord Rama as “Vana Sundaran”, which means the “Handsome one roaming in the woods”. Especially, while Lord Rama was roaming in the forests like Dhandakaranyam and Panchvati, the Rishis around were smitten by the beauty of Rama and fell in love with him.  As HE roamed the forests in both Ramavatharam & Krishnaavataham, here in this temple, HE gives us the darshan as Raman – the presiding deity and Gopalan – the Utsavar.

Straight from the entrance, we get to see the Sanctum Sanctorum in which Rama and Sita are in a standing posture on a single pedestal as bride and groom. The very darshan of this Divya Dampathi alleviates all the problems of the people as well as the hurdles that impede their marriage.

Lakshmana’s attribute:

On the right side of Lord Rama is Sita and to His left stands Lakshmana, who is destined to be in their service at all times. This is very unique aspect to this temple, where the amazing  Lakshmana stands close to Rama and gives darshan to us.  The very thought of this creates goosebumps in us.

Lord Sri Rama is Sri Mahavishnu’s avatar and Sita is Mahalakshmi.  Lord Paramasivan is the one who has completely understood the greatness of “Rama Nama”.  That is the reason, Lord Shiva chants Rama Nama in the right ear of all the Jeevathma’s, at their death bed in Kashi – says Adi Shankara.   

Parvathi once requested Shiva to explain the greatness of Lord Rama.  At that time, Shiva, while explaining the greatness of Sri Ramachandramoorthi, expresses his desire to serve Lord Rama like Lakshmana.  How is it possible? asks Parvathi.  Shiva says, ‘Close your eyes and bring in your vison on both Lord Rama & Sita. Worship them and open your eyes and see’.

What a surprise, Lakshmana standing near Lord Rama & Sita was seen transformed with tangled hair, crescent moon and cassia(kondrai)  flowers on his head.  For a moment, Parvathi experienced wonder.  Without her knowledge her lips started murmuring Rama… Rama….  As she looked back again, the Sita-Rama-Lakshmana gave darshan as before; the tangled hair, crescent moon and cassia(kondrai) flowers were gone.

This miracle experienced by Parvathi can be felt by us even today on Lakshman’s statue.  This gives a feeling of wonder to us too.  Such is the greatness of Lord Rama. Elders say, this is also the experience of Tanjore King Saraboji.

Utsavar Gopalan:

After worshiping the presiding deity, we move to the darshan of Utsavar Gopalan.  We will experience the entire beauty of Mannargudi Rajagopalan in Kudanthai Gopalan.  Kannan gives us His wonderful darshan in standing posture flanked by Rukmini and Satyabhama on both sides, and holding a whip in His hand, as if, He was managing the grazing cows.  Though we pray that our drishti (evil eye) should not affect Him, we continue to gaze at Him.  Santhana Krishnan also gives His darshan from the Sanctum sanctorum.  By worshipping Santhana Krishnan, those who do not have children are sure to be blessed with Putra bhagyam (to bear Children).

Where Lord Rama is, there is Hanuman too.  The elders say Vayu Putra Hanuman is the incarnation of Paramasivan.  Here, Hanuman gives darshan with a beautiful tuft, a sacred thread in the chest, holding a cassia(kondrai) flower in hand, and is a feast to watch and worship.  Acharyas including Sri Vendantha Desikan who has composed hymns on both Rama and Krishna and Choodi Kodutha sudarkodi Aandal also give darshan in this temple.

Please visit Thoppu Theru Gopalan Sannadhi, which is well within the city of Kudanthai and worship this Perumal.   You are sure to get great clarity in your mind.

Autos and other facilities are available from anywhere in the city.

Contact Sudarshana Bhattar – 99406 55506

மாசி மகம் கொண்டாடும் மகா விஷ்ணு |மாசிக்கடலாடி மகிழ்ந்து வரும் மகா விஷ்ணு | Sri APN Swami Writes | Thedi Thozhutha Thiruththalangal 05

Note : Scroll down to read the English translation of the article

மகாத்மா போற்றிய மாசிமகம் | Masi Magam Special |

      த்ரிபுராசுரர்கள் எனும் மூவர் இவ்வுலகிற்கு பெரும் துன்பங்களை அளித்து வந்தனர். அவர்கள் செய்த அடாத செயல்களினால் மூவுலகும் அஞ்சி நடுங்கியது. மிகவும் பயந்த தேவர்கள், சிவபெருமானை சரணடைந்தனர். உலகினைக் காப்பதற்காக ஏற்கனவே ஒருமுறை ஆலகால விஷமருந்தினார் பரமசிவன். அதேபோன்று, தற்போது மறுபடியும் ஆபத்து சூழ்ந்துள்ளது என்பதால், மீண்டும் தேவர்கள் அவரிடம் முறையிட்டனர்.

      ஆலகால விஷத்தைத், தான் உண்டதற்கு ஆதிநாயகன் விஷ்ணுவே காரணம் என்பதை தேவர்களுக்கு அறிவித்த பரமசிவனும், நாராயணன் துணையிருந்தால் நிச்சயம் நமக்கு ஜயம் என்று அறிவித்தார். அதன்படி ப்ரம்மா, விஷ்ணு இவர்களின் துணை வேண்டியிருந்தார். பரமசிவனுக்குத் தான் தேரோட்டுவதாக ப்ரம்மா இசைந்தார்.

      வர பலத்தினால் செருக்குற்ற த்ரிபுராசுரர்களை, சாதாரண ஆயுதத்தால் கொல்ல முடியாது. நாராயண அஸ்த்ரத்தினால் மட்டுமே அவர்களை மாய்க்க முடியும் என்பதால், நாராயணனை சரணடைந்தனர். த்ரிபுராசுர வதத்தில் கூர்மையான அம்பின் நுனியில், தானே அமர்வதாக நாராயணன் அபயம் அளித்தார். அதன்படி, அவரின் துணையுடன், பரமசிவன் அசுரர்களைக் கொன்று உலகினைக் காத்தார்.

      பின்னர் சற்று காலம் ஓய்வெடுக்க நாராயணன் சோலைகள் சூழ்ந்த ரம்மியமான இடத்தைத் தேடினார். ப்ரம்ம தேவனின் ப்ரார்த்தனையால் ஒரு அழகிய க்ஷேத்திரத்தில் வந்து அமர்ந்தார். தனது அந்தரங்க பணியாளர்களான கருடன் மற்றும் அனந்தனிடம் (ஆதிசேஷனிடம்) தாகமாக உள்ளது. தண்ணீர் வேண்டும் என்றார் நாராயணன்.

      அவ்வளவுதான்; வாயுவேகம், மனோவேகம், கருடவேகம் என்பார்களே அதுபோன்று வேகமெடுத்த கருடன், அருகிலிருந்த மலையில் ஒரு முனிவரைக் கண்டு தண்ணீர் கேட்டான் தவத்தில் ஆழ்ந்திருந்த அம்முனிவர் கருடனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சினந்த கருடன் அவரது கமண்டலுவைத் தட்டிவிட்டன். அது ஒரு நதியாக ப்ரவகிக்கத் தொடங்கியது.

      எம்பெருமான் இருக்கும் பூஞ்சோலைக்கு ஓடோடி வந்தான் கருடன் அந்நதிப் பெருக்குடன். ஆனால், அதற்குள் ஆதிசேஷன் பாதாளம் வரையிலும் நுழைந்து சுவையான தண்ணீர் கொண்டதொரு கிணற்றை நிர்மாணித்து பெருமாளின் தாகத்தை தீர்த்தான். அகமகிழ்ந்த மகாவிஷ்ணுவும் இனி இந்த தீர்த்தமே தனக்கு நித்ய ஆராதனத்திற்குரியது என்றும், ஆதிசேஷன் விரைந்து செயல்பட்டதால் இத்தலம் அஹீந்திரபுரம் என்றழைக்கப்படும் என்றும் (அஹீ என்றால் பாம்பு அவன் வழிப்பட்ட தலமாதலால் அஹீந்திரபுரம்), தமிழில் திருஅயிந்தை என்றும் அழைக்கப்படும் என்றார்.

      அதேசமயம் கருடனின் பக்தியையும் மெச்சிய பகவான் தனக்கு தீர்த்தவாரி கருடநதியில் நடைபெறும் என்றும் வரமளித்தார்.

      நூற்றியெட்டு வைணவத் தலங்களில், நடுநாட்டுத் திருப்பதிகள் இரண்டு. ஒன்று திருக்கோவிலூர். மற்றொன்று திருவயிந்திரபுரம் எனும் இத்தலம். கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாகும்.

      தேவநாதன், தேவநாயகன், தேவதேவன் என்றெல்லாம் இப்பெருமாள் அழைக்கப்பட்டாலும் அவனும் அடியார்களும் விரும்பும் அழகிய திருநாமம் ஒன்றுண்டு. அது அடியவர்க்கு மெய்யன் என்பதாகும். அழகுத்தமிழில் பெருமாளின் இந்த திவ்யநாமத்தைச் சொல்லும் போதே நமது நாவினில் அமுதம் பெருகுவது போன்றதொரு ஆனந்தம் உண்டாகிறது.

      அடியவர் என்றால் பக்தர்கள். அவர்கள் இவனிடம் மெய்யான அன்பு பூண்டவர்கள் ஆதலால் அவர்களை காப்பதில் இவனும் மெய்யன்புடன் விரதம் கொண்டுள்ளானாம்.

மகரிஷிகளின் தபோவனம்

இப்பெருமாளின் மீது பேரன்பு கொண்டு அடியார்கள் ஆனந்தமடைகின்றனர். ப்ரம்மதேவரே தவம் செய்து சித்தியடைந்த இடம் இத்திருத்தலம். ஆதலால் ப்ருகு, மார்கண்டேயர் முதலிய மகரிஷிகளுக்கும் இது தபோவனமாயிற்று. ப்ருகு முனிவர் தவமியிற்றினதால் அவருக்கு ஒரு அழகிய பெண்மகவு வாய்த்தது. திருப்பாற்கடலில் அவதரித்த திருமகள் போன்ற அவருக்கு,  தரங்கமுக நந்தினீ எனப் பெயரிட்டார் முனிவர். தரங்கம் – என்றால் அலைகள் என்று பொருள். கடலினுள் பிறந்த மகாலக்ஷ்மீ எனும் பொருளில் பெயர் வைத்தார். அதுதான் உண்மை. அவள் சாட்சத் மகாலட்சுமியேதான்.

      தேவநாதன் கரம்பிடித்த ஹேமாம்புஜம் – பொற்றாமரையாள், இந்த தரங்கமுக நந்தினியாவாள். வரப்ரசாதியான இந்தத் தாயாரின் சன்னிதியில் நெய்யினால் மெழுகி, சர்க்கரையினால் கோலமிட்டால் நினைத்த காரியம் கைகூடுகிறது. ப்ருகு, மார்கண்டேயர் முதலிய பல மகரிஷிகள் தவம் செய்தது இத்தலத்தில்தான்; பின்னாளில் வேதாந்த தேசிகரும் இங்கே தான் தவம் செய்தார்.

தேசிக தபோவனம்

பகவத் ராமானுஜருக்குப் பின்பு இந்த வைணவத்தை வளர்த்த மகான் வேதாந்த தேசிகனாவார். அவரது அரும்பெருமைகள் நமது வார்த்தைகளில் அடங்காது. அத்தகைய மகான், இளவயதில் தனது மாமாவான அப்புள்ளார் எனும் பெரியவரிடம் கருடமந்திர உபதேசம் பெற்றார். ஐந்தெழுத்து கொண்ட அந்த மகாமந்திரத்தை இத்தலத்தில் ஔஷதகிரி எனும் மலை மீது அமர்ந்து ஜபம் செய்தார்.

      கருடநதி, லக்ஷ்மீ அவதரித்த திவ்ய புஷ்கரிணி, ஆதிசேஷ தீர்த்தம், தேவநாயகன் சன்னிதி என முழுவதுமான தெய்வீக சூழலில் அவர் செய்த தவம், விரைவில் பலித்தது. கருடன்  அவரின் முன்பாகத் தோன்றி ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து, ஒரு யோக ஹயக்ரீவ விக்ரகத்தையும் அருளினார்.

      பின்னர் மீண்டும் ஹயக்ரீவனைக் குறித்து வேதாந்த தேசிகன் தவமியற்றினார். அனைத்திற்கும் ஆதாரமாயுள்ள ஹயக்ரீவன் அவருக்குக் காட்சியளித்து, தனது தெய்வீகத்தன்மை அனைத்தையும் அவருக்கு வழங்கினார்.

      இன்றும் மலை மீது தேசிகன் தவம் செய்த அந்த தபோமண்டபம் அமைந்துள்ளதைக் காணலாம். ஒரு ஐந்து நிமிடங்களாவது அங்கு அமர்ந்து, ஹயக்ரீவ ஸ்தோத்ரமோ அல்லது கோவிந்த நாமமோ சொல்லுபவர்களுக்கு மன அமைதி மட்டுமின்றி எண்ணியது ஈடேறி வருவது கண்கூடு.

      அதனால்தான் வேதாந்த தேசிகரை வழிபடுவதால், நாம் ஹயக்ரீவனின் பரிபூரண அனுக்ரகத்தைப் பெறலாம் என்பர் நமது முன்னோர். ஹயக்ரீவனே வேதாந்த தேசிகனாக அவதரித்தார் என்பதையும் ப்ரமாணங்கள் கூறுகின்றன.

      பல ஆண்டுகள் இத்தலத்தில் வேதாந்த தேசிகனார் எழுந்தருளியிருந்து பல நூல்களையும், துதி பாடல்களையும் தேவநாதன் விஷயமாகப் பாடியுள்ளார். மேலும் அவரின் திருக்கையால் கட்டியுள்ள வற்றாத நீர் சுரக்கும் கிணற்றையும், அவராலேயே வடிவமைக்கப்பட்ட அவரின் தெய்வீக திருஉருவ விக்ரகத்தையும் இங்கு சேவிக்கலாம்.

மாசிமகத்தின் மகிமை

      இக்கோவிலில் வருடந்தோறும் பல உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் வேதாந்த தேசிகருக்கே முன்னுரிமை அளிக்கபப்டுகிறது. தெய்வமே ஒரு மகானைக் கொண்டாடுகிறது என்றால் அவரின் மகிமையை நாம் தனியாகக் கூற வேண்டுமா என்ன?!!

      இந்த உற்சவங்களில் மாசி மக உற்சவம் மிக மிக ஏற்றம் பெற்றது. ஏனென்றால், தேவநாதப் பெருமாள் திருவயிந்திரபுரத்திலிருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினத்திற்கு சமுத்திர ஸ்நானத்திற்கு வருகிறார். இதுவொரு பெரிய உற்சவம்.

      பொதுவாகவே மாசி மகத்தன்று சைவ, விஷ்ணு ஆலயங்களில் புறப்பாடுகள் நடைபெறும். கடற்கரை கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். மாசிமாதம் பௌர்ணமியன்று மகம் எனும் நட்சத்திரம் கூடி வருவதினால் அதற்கு மாசி மகம் என்பது பெயர்.

      மகத்தில் தீர்த்தாமாடுபவர்கள் ஜகத்தில் பெருமை பெறுவர் என்று மூதுரையும் உண்டு. ஏனென்றால், ஒரு வருடத்தில் நாம் செய்யும் பாபங்களுக்குப் பரிகாரமாக மாசி மகத்தன்று கடலில் நீராடுவது சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தெய்வங்களின் சன்னிதியில் நாம் நீராடுவது கோடி ஜன்ம தேஷங்களைப் போக்குமாம்.

      ஸ்ரீரங்கம் முதலிய திருத்தலங்களில், பெருமாள், நதிக்கு எழுந்தருளுவார். கும்பகோணத்தில் மாமாங்க குளத்தில் தெய்வங்கள் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். திருவயிந்திரபுரத்தில் தேவநாதன் நேரிடையாக சமுத்ரத்திற்கே வந்து அலைகளில் குதித்து எழுந்தருவதைக் காண கண் கோடி வேண்டும்.

மாசிக்கடலாடி மகிழ்ந்து வருவான்

பாற்கடலின் மகள் மகாலட்சுமியான தரங்கமுக நந்தினிதானே! எனவே கடலரசன் தேவநாதனின் மாமனாரன்றோ! ப்ரியமான மருமகனை வரவேற்கக், கடலரசன் தனது அலைகளாகிற கைகளை ஆட்டி ஆட்டி ஆர்ப்பரிக்கிறான்.

      மாமனாரின் வரவேற்பை மகிழ்ந்து ஏற்கும் அடியவர்க்கு மெய்யன், ஒய்யாரமான பல்லாக்குடன் அசைந்து, அசைந்து ஆடிக்களித்து ஆனந்தமடைகிறான்.

      இந்த உத்ஸவத்தை சேவித்த வேதாந்த தேசிகர் “மாசிக் கடலாடி மகிழ்ந்து வருவான்” என்று மங்களாசாஸனம் செய்கிறார் (துதிக்கிறார்). எழுநூறு வருடங்களுக்கு முன்பு அந்த மகான் பாடியபடியே இன்றும் இது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது,.

பிச்சுவா பெறும் பாக்கியம்

      தேவர்களுக்கெல்லாம் மேலான தெய்வமான பெருமாளை பல அரசர்கள் அடிபணிந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் இவ்வூர் பாளையக்கார மரபில் வந்த ஒரு அரசன்.  சிறந்த பக்திமான். பல கைங்கர்யங்களைப் பெருமாளுக்குச் செய்துள்ளார். பெருமாள் புறப்பாடு கண்டருளும் சமயங்களிலெல்லாம், அவருக்கு உறுதுணையாக, பாதுகாப்பாக, இவ்வரசன்  கையில் கத்தியுடன் வருவாராம்.

      ஸ்ரீரங்கத்தில் பிள்ளையுறங்காவில்லி தாசர் எனும் பக்தர், பெருமாளுக்கு முன்பாகக் கையில் கத்தியுடன் சென்றதாக ஒரு சரித்ரத்தை ராமானுஜர் வாழ்க்கையில் காணலாம். அதேபோன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி, கடற்கரையில் ஆராட்டு விழாவிற்குச் செல்லும்போது, இன்றும் அரச மரபில் வந்தவர்கள் கையில் கத்தியுடன் முன் செல்கின்றனர்.

      அதேபோன்று இந்தப் பாளையக்காரரும் பெருமாளுடன் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நாளடைவில் அவர் இறந்தார். அவரின் வழித்தோன்றல்கள் பெரும் பாக்யமான இக்கைங்கர்யத்தைச் செய்யவில்லை. இருந்தும் பெருமாள் அதை மறக்கவில்லை!!

      மாசிமகத்திற்குச் செல்லும் போதெல்லாம் முதலில் அந்த பாளையக்காரர் இருப்பிடத்திற்குச் சென்று, ஞாபகர்த்தமாக, அவரின் பிச்சுவா கத்திக்கு மாலையிட்டு மரியாதை  செய்கிறார். ப்ருந்தாவனத்தில், தான் ஒளிந்து கொண்ட ஒரு பானைக்குக், கண்ணன் முக்தியளித்தானாம். அது புராணம். ஆனால் இன்றும் மாசிமகத்தன்று பிச்சுவா பெறும் பாக்கியம் கண்கூடு. இப்பெருமானின் கருணைக்கு வேறென்ன சான்று!!

 மாசி மகம் அன்று அதிகாலை அலையரசன் தேவநாதனைத் தாலாட்டுவதை சேவிக்க, தேசிகனுடன் நாமும் கூடலாம் வாருங்கள்.

குறிப்பு

இதேபோன்று, திருக்கோவிலூர் ஆயனார், ஸ்ரீமுஷ்ணம் பூவராஹ பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மற்றும் மாமல்லை ஸ்தலசயனப் பெருமாள் ஆகியோரும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர்.

சொல்ல வேண்டிய ச்லோகம்

தரங்காத்: ஸமுத்தர்தும் தரங்கமுக நந்திநீ |

அந்தரங்க: பவாத் தேவ: தரங்கம் அபிகச்சதி ||

.பி.என் சுவாமி

(ஸம்ஸாரம் எனும் பெரும் அலைகளிலிருந்து நம்மைக் காப்பாற்ற, அலையரசன் மகளான மகாலட்சுமியின் நாயகனான தேவநாதன், அலைகளில் இறங்குகிறான்)

Note : This article was published in Kumudham Jothidam : வாரம் 5 : மாசி மகம் கொண்டாடும் மகா விஷ்ணு / மாசிக்கடலாடி மகிழ்ந்து வரும் மகா விஷ்ணு
ஸ்ரீ #APNSwamiயின் எழுத்தில் “தேடித் தொழுத திருத்தலங்கள்” #தேடித்தொழுததிருத்தலங்கள்
22-02-2019 #குமுதம்ஜோதிடம் இதழில் வெளியாகியுள்ளது.

#Thiruvahindrapuram #மாசி #மகம் #திருவஹிந்திரபுரம் #குமுதம்ஜோதிடம் #ஏபிஎன்சுவாமி #Kumudamjothidam #APNSwami

Masi Magam & MahaVishnu

Once upon a time THRIPURAASURAR (Three Asuraas) were creating havoc in all the three worlds. The people and Devas were harassed very badly. The Devas went to Lord Shiva and surrendered to him. Shiva had helped them in distress previously, by consuming HAALA HAALA poison on their request. With this in mind, the Devas went to Shiva to solve their problem. 

Shiva informed the Devas – Maha Vishnu (HEAD of the Universe) had helped him in the consumption of HAALA HAALA poison. He also said we can win only with Sriman Narayanan’s help. Sriman Narayana and Brahma were ready to help Shiva and Brahma  drove the chariot for Shiva. 

The Three Asuras (THRIUPURAASURAR) surrendered to Sriman Narayanan, as they had got a boon by which  NARAYANA ASTHRAM is the only weapon that can kill them. This  had made them very haughty. Finally Sriman Narayanan sat on the arrow shot by Shiva and killed them.

On Brahma’s request, after completing this, Sriman Narayana took rest in a serene place. Narayana requested water from his personal help Garuda and Anathan (Adhiseshan). Garuda flew at top speed (Garuda Vegam, Vayu Vegam, Mano Vegam, etc.,). Seeing a sage doing penance and deeply engrossed in it,  on top of a hill , he stopped and requested him for water. As the sage did not hear, Garuda got angry and toppled the pot containing water. This turned into a river (GARUDA NADHI), Garuda came rushing back to Sriman Narayana. Ananthan had already got water from a well that he constructed in PATHALA LOKAM. Maha Vishnu was very happy using this water,and ordered the use of this for his daily THIRU AARADHANAM. Because Ananthan acted very swiftly, this place was called AHINDIRAPURAM  by Narayanan. (AHI means Snake and he is worshipped here) 

As Sriman Narayana was pleased with Garuda’s bhakthi, he informed that his THEERTHAVAARI will be done in Garuda Nadhi. Of the 108 Dviya Desams,this place is one of two Divya Desams in NADU NATTU TIRUPATHI. The other is THIRUKOVALOOR. Thirumangai Alwar has sung in praise of this Kshetram. 

The presiding deity of this Kshetram is DEVANAYAKAN, DEVANATHAN, DEVADEVAN, etc. But, Perumal and his bhakthaas like the name – ADIYAVARUKKU MEIYAN in Tamil much more. The chanting of this name is like drinking nectar. ADIYAAR means Bhaktas. These bhaktas are truly devoted to him and so he takes more care of them.

MAHARISHI’S TAPOVANAM 

Brahma found this place to be very enchanting and did long penance and got SIDDHI. Many Rishis like Brighu, Markandeya, etc. have also done penance here. Sage Brighu, after his penance, had a daughter. She was named as THARANGAMUKHA NANDHINI. THARANGAM means waves. His daughter resembled Sri Mahalakshmi very much ,who resides in THIRUPAARKKADAL, and this is the truth also.

The presiding deity Devanathan married Tharangamukha Nandhini, who is also called HEMAMBUJAM. She is very auspicious, giver of all wealth and she relieves everyone of their burden. It is a tradition here – one who applies Ghee and draws a KOLAM  with sugar on this Thayar’s sannidhi has his prayers  answered.   Swami Vedanta Desikan also did his penance here.

DESIKA TAPOVANAM

It was Vedanta Desikan who reaffirmed and established the greatness of Sri Vaishnavism after Swami Ramanuja. It is not easy to surmise the qualities of Desikan by us. He was initiated to the Garuda Mantra by his maternal uncle Sri Appular. He did Japam of this 5 lettered Garuda Mantra here at OUSHADAGIRI a small hillock. With Garuda Nadhi, the pushkarani, where Sri Lakshmi was found, Adhisesha Theetham and Sri Devanathan’s temple surrounding this place, Desikan’s Japam achieved the results. Garuda came down to Desikan and initiated him into Sri Hayagreeva Mantra and also handed over an idol of Sri Yoga Hayagreeva. 

Desikan started to do penance to Sri Hayagreeva. Pleased with this, Sri Hayagreeva descended and gave all his auspicious qualities to Desikan. 

This auspicious place is seen even today. If one sits and chants Sri Hayagreeva Stotram or chants GOVINDA NAMA here, he can feel mental peace and his noble thoughts bear fruit. That is why our elders always tell us that if we pray to Vedanta Desikan it is like praying to Sri Hayagreevan. There are records to show that Sri Hayagreeva was born as Vedanta Desikan. 

Vedanta Desikan stayed here for many years, wrote many scriptures and sang in praise of Sri Devanathan. A holy well built by Swami Desikan here has perennial water and never gets dry and an idol sculptured by Desikan of his own image which has all auspicious qualities is here even today. 

MASI MAGAM

There are many festivals conducted in this temple every year. In all these, Swami Desikan is given the first priority. This speaks about the greatness of Desikan as even  Sri Devanathan, the presiding deity, gives up his first right to Swami Desikan. 

MASI MAGAM is very famous and one of the most prominent festivals here. On this occasion, Sri Devanatha Perumal goes to the sea at Devanapattinam which around 12 kms from the temple. 

This is celebrated in a very big way, and thousands of people from all over  come and 

participate 

Generally, during Masi Magam, the deities of temples go to the nearby sea or river as the case maybe for THEERTHAVARI. This happens on a POORNIMA combined with the star ,Magam, during the month of Masi. 

Those who take a holy bath on this MASI MAGAM are greatly appreciated. The sins committed during the year are cleared on this occasion. If one takes the holy bath on Masi Magam with Sri Devanathan, then he is cleansed of sins committed over eons. 

In Sri Rangam, Perumal goes to the Kaveri.In Kumbakonam, Perumal goes to Maha Magam Tank. 

MASI KADALADI MAZHIVARE

Tharangamukha Nandini, daughter of THIRUPAARKADAL.  Is considered to be  Mahalalakshmi .When Sri Devanathan then, comes to the sea, for theerthavari, – SAMUDRA RAJA ((his Father–in–law) is very happy seeing his favourite son-in-law: the waves are very happy and this can be seen every time this happens. We can personally see this and experience this.

Perumal is also happy on receiving the special reception from his father-in-law – SAMUDRARAJA. 

Vedanta Desikan witnessing this utsavam says ‘MAASI KADALADI MAGZHINDU VARUVAAN’ in his prabhandam about 700 years ago. This utsavam is held even today with very great enthusiasm and fanfare by the people.

THE SWORD GETS A REWARD 

Narayanan, who is the Supreme leader of all Devas, has many followers and this includes many kings. One of them is a King from the PALAYAKARA tribe from this place. He was a great devotee of Perumal and has done many kainkayams(service). This king would always carry a Sword in his hand as a weapon to protect Sri Devanathan, from attack during his VEEDHI PURRAPADU.(procession)

Pillai Urangavillidasar used to carry a Sword whenever Sri Rangannathan came out in Sri Rangam. In Thiruvannathapuram, even to this day, a member of the royal family would carry a Sword and walk in front of Sri Annathapadmanabha Swami every time he goes to sea for ARRATU Utsavam. 

After the passing away of PALAYAKARA king, this kainkaryam was stopped by his people. Sri Devanathan has not forgotten this kainkaryam. Every year during Maasi Magam Utsavam, Sri Devanthan goes to the place where this king lived and garlands the Sword used by the King. This is continuing even today. In Vrindavan, Sri Krishna gave Mukthi to the POT in which he hid. This shows the KARUNA roopam of Sriman Narayana.

PLEASE NOTE:

Sri Ayyanar of Thirukoviloor, Sri Bhuvarahan of Sri mooshnam, Sri Parthasarathy of Triplicane and Sri Stahalasayana perumal of Mamallapuram go to sea during MAASI MAGAM utsavam for THEERTHAVAARI.

SLOKAM  

THARANGAATH NAH SAMUDHARTHUM THANRANGAMUKHA NANDHINI !

ANDHARANGA: BAVAATH DEVA: THARANGAM ABHIGACHATHI !! 

Note : English Translation by Shishyas of Sri APN Swami