வேண்டிய வரம் தரும் வேங்கடநாதபுரம் | Sri APN Swami writes | Thedi Thozhutha Thiruththalangal 03

Note : Scroll down to read the English translation of the article

ஸ்ரீ:

தென்பாண்டிய நாட்டின் ஜீவநதி தாமிரபர்ணி. தென்பாண்டி மட்டுமின்றி தமிழகத்திற்கே இந்நதி ஜீவன் என்றால் மிகையில்லை. தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் சங்கமிக்கும் நதி இதுவே. இதன் இருகரைகளிலும் அடர்ந்த சோலைகளும், அழகிய குன்றுகளும், அத்புதமான ஆலயங்களும் அமைந்துள்ளன.

வைணவத் திருத்தலங்களும், சைவத் திருத்தலங்களும், புண்ணியமான பல படித்துறைகளும் இந்நதியின் பெருமைக்கு மேலும் மெருகு சேர்க்கின்றன. நம்மாழ்வார் அவதரித்த திருத்தலமாகிய ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட நவ திருப்பதிகளும் தாமிரபரணியின் கரையில்தான் உள்ளன. 

தென்பாண்டிச் சீமையின் முக்ய நகரமான திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிற்றூர் திருவேங்கடநாதபுரம். இது திருநெல்வேலிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

ஆற்றோரம் அமைந்துள்ள இந்த அழகிய கிராமத்தில் ஒரு ஆலயமும், அதன் நாற்புறமும் அந்தணர்கள் வசிக்கும் அக்ரகாரமும் மிக ரம்மியமான சூழ்நிலையினால் நம் உள்ளத்தில் ஆனந்த அதிர்வுகளை உண்டாக்குகிறது. ஒரு சிறு பாறை குன்றின் மீது திருவேங்கடமுடையானின் சன்னிதி அமைந்துள்ளது. ச்வேத மலை அதாவது வெண் மலை என்று இக்குன்றிற்குப் பெயர்.

கலியில் கண்கண்ட தெய்வம் ஸ்ரீநிவாசன் எனும் திருமலையப்பன். ஏழுமலைகளின் மீதேறிச் சென்றால், அவனது தெய்வீக தரிசனம் பெறலாம். அவனது மலையின் பெயர் அஞ்சனகிரி. அதாவது கருமை நிறம் கொண்ட மலை. அது வடவேங்கடம். அதே பெருமாள், இங்கு தமிழகத்தின் தென்கோடியில் ஒரு சிறிய மலையின் மீது சேவை சாதிக்கிறார் என்றால் எப்பெருமானின் கருணையை என்னவென்பது! அழகிய இவ்வாலயத்திற்குள் நுழைந்து,  பெருமாளை சேவித்து, திவ்யமான தல வரலாற்றினையும் அறியலாம்.

வேதவ்யாசர் 

மகாபாரதம் தொகுத்த முனிவர் வேதவ்யாசர். பாரதம் மட்டுமின்றி பதினெட்டு புராணங்களையும், மிக முக்யமாக வேத, வேதாங்கங்களையும் தொகுத்தார். க்ருஷ்ணத்வைபாயனர் எனும் இயற்பெயர் பெற்ற இந்த ரிஷி, வேதங்களை நெறிப்படுத்தியதாலேயே வேத வ்யாசர் என்று புகழப்படலானார். மகாபாரதத்தைக் கூட ஐந்தாவது வேதம் என்பர் பெரியோர்.

வ்யாச பகவானின் தந்தையார் பராசர மாமுனிவர். இவர்தான் ஸ்ரீ விஷ்ணு புராணத்தை எழுதியவர். இதற்கு புராண ரத்னம் என்பது பெயர். தனது சிஷ்யன் மைத்ரேயனுக்கு இப்புராணத்தை உபதேசிக்கும் போது வ்யாசரின் பெருமைகளைக் கூறுகிறார்.

! மைத்ரேயா! எனது பிள்ளை எனும் பாசத்தால் நான் கூறவில்லை. க்ருஷ்ணத்வைபாயனன் எனும் வேத வ்யாசரை, சாக்ஷாத் நாராயணனின் அவதாரமாக அறிவாயாக. ஏனெனில் நாராயணால் மட்டுமே நான்கு வேதங்களையும், மஹாபாரதத்தையும் தொகுத்தளிக்க முடியும் என்று.

அந்த வேத வ்யாசருக்கு நான்கு சீடர்கள். பைலர், சுமந்து, ஜைமிநி, வைசம்பாயனர் என அவர்களும் தவத்திலும் சீலத்திலும் ஞானத்திலும் சிறந்து விளங்கினர். தன் சீடர்கள் நால்வரிடத்திலும் ஒவ்வொரு வேதத்தைக் கொடுத்து அதை நன்கு ப்ரசாரம் செய்துவரும்படி வ்யாசர் பணித்தார். பைலர் ரிக் வேதத்தையும், வைசம்பாயனர் யஜுர் வேதத்தையும், ஜைமிநி மஹரிஷி சாம வேதத்தையும், சுமந்து அதர்வண வேதத்தையும் கற்றனர். ஆசாரியர் அனுமதி பெற்று அவர்கள் தனித்தனியே திவ்யதேச யாத்திரை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

பல புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி ஜபம், தவம் செய்தும், அங்குள்ள பெருமான்களை வழிபட்டும், ஆங்காங்கு வசிக்கும் மக்களுக்கு நல்ல உபதேசங்களைச் செய்தும் அவர்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர்.

பைலர் பெற்ற பேறு

பைலர் இங்கு தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். அச்சமயம் இங்கு மூங்கில்காடுகள் நிறைந்திருந்தன. மானும் மயில்களும் மகிழ்ச்சியுடன் இக்காட்டில் சுற்றித் திரிந்தன. சலசலத்து ஓடும் தாமிரபரணியின் தெளிந்த தீர்த்தம், மகரிஷியின் மனது போன்று நிர்மலமாக இருந்தது.

நிற்கின்றதெல்லாம் நெடுமால் என்று இயற்கையில் இறைவனைக் காண்பதுதானே மகான்களின் மேன்மை! மூங்கில் மரங்களின் துளைகளில் காற்று புகுந்து வெளியேறும்போது, கண்ணனின் வேணுகானத்தை உணர்ந்தார். தோகை விரித்து, மயில் ஆடும் போது, கண்ணனின் கருமை நிறத்தையும், தலையில் சூடிய மயில்பீலியையும் தரிசித்தார். தாமிரபரணியின் தண்ணீர் பெருக்கில் கண்ணனின் கருணையை உணர்ந்தார்.

பல திருத்தலங்களில் தீர்த்த யாத்திரை செய்திருந்தும், இங்கு உண்டான மன அமைதி, தனக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பதினை நன்குணர்ந்தார் பைலர். நதிக்கரையில் சில நிமிடங்கள் கண்களை மூடி பகவானை த்யானம் செய்தார். அவர் மனக்கண்ணில், மயில் தோகையுடன் மாயக்கண்ணன் காட்சியளித்தான். ஒரு நொடியின் அரை பங்கில் அந்த காட்சி மறைந்தது.

திடீரென்று தோன்றி மறைந்த மின்னல் போன்று, அத்திவ்ய சேவையை இழந்த பைலர் துடித்தார். மீண்டும் மீண்டும் கண்களை மூடியும், காட்சி கிடைக்கவில்லை. கண்ணா! கண்ணா!” எனக் கதறினார். ஒன்றும் தோன்றவில்லை. சிறிது நேரத்தில், தன்னை நன்கு ஆச்வாசம் செய்து கொண்டார். ஏதோ ஒரு தீர்மானம் அவருள்ளத்தில் எழுந்தது போலும்.

நதிக்கரையில் ஒரு ஆசிரமம் அமைத்தார். இந்தத் தெய்வீக சூழலில், தனக்கு நிச்சயம் தெளிவு பிறக்கும் என உணர்ந்தார். தாமிரபரணியில் நீராடி சிறந்தத் தவமியற்றத் தொடங்கினார். பன்னிரெண்டு எழுத்துக்கள் உடைய வாசுதேவ மகா மந்திரத்தை இடைவிடாமல் ஜபம் செய்தார். 

இவரின் தவத்திற்குத் தன்னால் இடையூறு கூடாது என்று தாமிரபரணியும் தனது ப்ரவாக வேகத்தின் ஒலியை குறைத்துக் கொண்டாள். பைலரின் ஆசார்யர் வேதவ்யாசரின் தவத்திற்கு, சரஸ்வதி நதியின் சப்தம் இடையூறாக இருந்ததாம். இதனால் வெகுண்ட வ்யாசர் அந்நதிக்கு சாபமளித்தாராம். எனவே பதரிகாச்ரமத்தில் வ்யாசர் தவம் புரிந்த குகை அருகே சரஸ்வதி நதி பூமிக்குள் மறைகிறாள். இந்த அற்புதத்தை இன்றும் காணலாம். அதுபோன்றுதான் சிஷ்யரின் தவத்தைக் கெடுக்க தாமிரபரணியும் பயந்தாள் போலும்.

கோவிந்தன் கருணை

கருணையுள்ளம் கொண்ட கோவிந்தன் பைலரின் தவம் கண்டு மகிழ்ந்தான். தன்னைக் காணத் தவிக்கும் தபோதனருக்கு காட்சியளித்தான். சங்கம், சக்ரம் கதை, வில், என ஆயுதங்கள் ஏந்தி அபயமளிப்பவனாக, இருபுறமும் ஸ்ரீதேவி, பூமிதேவி திகழ, திவ்யமான காட்சியளித்தான். மயிர்கூச்சலுடன் பைலர் மகரிஷி, பலமுறை விழுந்து எழுந்து, பெருமானை சேவித்து ஆனந்தமடைந்தார். ப்ரபோ! கருணைக் கடலே! கார்முகில் வண்ணனே!” என்று போற்றினார். மகரிஷியே! நீர் தவம் செய்த இந்தப் பாறை என்னுடைய சுயம்பு மூர்த்தியாகும். இதையே கொண்டு எனக்கு ஒரு ஆலயத்தை ஏற்படுத்துவாயாக என்று எம்பெருமான் கட்டளையிட்டான்.

என்ன ஆச்சர்யம்!! பெருமான் மறைந்தவுடன், அந்த கற்கள் மறைந்து அதில் அழகிய வடிவுடன் ஸ்ரீநிவாஸன் தோன்றினார். உடனடியாக சுயம்பு ஸ்ரீநிவாசனுக்கு ஒரு அழகிய ஆலயத்தை பைலர் நிர்மாணித்தார். சுவேதமலை எனும் சிறு குன்றின் மீது கறுத்தமலையாக பெருமானின் வடிவழகை இன்றும் சேவிக்கலாம். அன்று முதல், அவ்வனப்பகுதி,  வேங்கடநாதபுரம் எனும் அழகிய அக்ரகாரமாகியது. அடியார்கள் பலரும் அங்கு வாசம் செய்யலாயினர்.

வனதேவதை பெற்ற வரம்

ஆண்டுகள் பல உருண்டோடின. மீண்டும் ஒரு மகரிஷி இங்கு வந்தார். கடுந்தவம் புரிந்தார். அப்போது அங்கிருந்த ஒரு வனதேவதை அவரின் தவத்திற்கு இடையூறு புரிந்தது. இதனால் கோபமுற்ற மகரிஷி, நீ உருவமில்லாமல் போவாய்!” என சாபமிட்டார். சுவாமி எனது தவறை மன்னியுங்கள் என அத்தேவதை வேண்டியது. மனமிரங்கிய மகரிஷியும், கலியுக தெய்வமான வேங்கடவன் அருளால் உனது சாபம் நீங்கும் என அநுக்ரகம் செய்தார்.

கொடிமரத்தில் குடி கொண்ட மாடன்

பின்னர் மேலும் பல நூற்றாண்டுகள் கழித்து வேங்கடப்ப நாயகர் எனும் மன்னரின் காலத்தில் பெருமாளுக்குக் கொடிமரம் ஒன்று புதியதாக நிர்மாணிக்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்!! முனிவரின் சாபத்தால் வனதேவதை, அரூபமாக, மாடனாக (மாடசாமி எனும் பெயர்) இருந்த மரத்தை, பெருமாளின் கொடிமரத்திற்காக வெட்டி எடுத்து வந்தனர். அங்கிருந்த ஒரு பக்தரின் மேல் ஆவேசித்த மாடன் தனது சாபத்தைக் கூறி பெருமாளின் நிர்மால்ய ப்ரசாதம் தனக்களித்தால் சாபம் நீங்கும் என்று கூறினான். அந்த கொடிமரத்திலேயே குடிகொண்ட மாடனுக்கு, இன்றும், பெருமாளின் நிர்மால்ய ப்ரசாதங்கள் தினந்தோறும் அளிக்கப்படுகின்றன. மாடனிடம் ப்ரீதி கொண்ட மக்களும் கொடிமரத்தில் அவரை வணங்கி பூஜைகள் செய்கின்றனர்.

கலியுக வரதன் 

சமீபத்தில் இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவரின் மகனுக்கு, பிறவியிலிருந்தே பேச்சு வரவில்லை. எங்கெங்கோ திரிந்து பரிகாரம் செய்த அவர்கள், முடிவில் தங்களின் குலதைவமான இந்த பெருமாளுக்கு வெள்ளியில் நாக்கும், திருப்பாதகமலமும் செய்து வைத்தனர். என்ன ஆச்சர்யம்! மடை திறந்த வெள்ளம் போன்று அச்சிறுவன் பேச ஆரம்பித்தான்.

இப்பகுதியின் பெரும்பாலான க்ராமங்களுக்கு இந்த பெருமாள்தான் குலதெய்வம். புரட்டாசி சனிக்கிழமையன்று நடைபெறும் கருட சேவை விசேஷமானது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வழிபடுவார்கள். சிறந்த ப்ரார்த்தனை தலமான இப்பெருமானை, ஒருமுறை சென்று வழிபட்டு,  வாழ்வில் சகல வளங்களையும் பெற்றிடுங்கள்.

திருநெல்வேலி ஜங்க்ஷனிலிருந்து சுமார் நாற்பது நிமிட ப்ரயாணத்தில் இவ்விடத்தை அடையலாம். வேங்கடநாதபுரத்திற்கு பேருந்து, ஆட்டோ என அனைத்து வசதிகளும் உள்ளன. ஊரிலும் மிகச்சிறந்த தங்கும் விடுதிகள் உள்ளன.

த்யான ச்லோகம்

ஸ்ரீமந்தம் ஸ்ரீநிவாஸம் தம் பைல ஸேவ்யம் வரப்ரதம் |

நமோ வேங்கட நாதாக்யே வநே வம்சே நிவாஸிநம் ||

ஏ.பி.என் சுவாமி எழுதியது


(மஹாலட்சுமியுடன் கூடியவனும், பைலர் எனும் மகரிஷியால் சேவிக்கப்படுபவனும், வரங்களை அருளுபவனுமாகிய ஸ்ரீநிவாஸன், மூங்கில் காட்டின் நடுவே திருவேங்கடநாதபுரத்தில் வசிக்கிறான். அவனையே தஞ்சமடைகிறேன்.)

Wish Fulfilling Venkatanathapuram

Thamirabarani is the perennial river in southern Pandya Kingdom.  This river is indeed the Life for the enitre tamilnadu. The only river that originates in tamilnadu as well as ends into the seas of Tamilnadu is Thamarabarani.  On both banks of this river are dense gardens, beautiful hills and magnificent temples.

The holy places of Vaishnava, Saiva and many sacred ghats add glory to this river.  Namazhvar’s birth place Azhwarthirunagari, including the Nine Thirupathis are spread across the banks of Thamarbharani river.

One of the most important towns of Tirunelveli district is Tiruvenkatanathapuram.  It is situated very near to Tirunelveli.  In this beautiful village, that is spread over the river bank, lies a wonderful temple which is surrounded by Brahmins’ Agraharam on its four sides.   This pleasant surrounding, create a vibration of joy and peace in our hearts.  On a small rocky hill lies the Tiruvenkatamudaiyan temple.   This hill is called as “Swetha Malai” meaning white hill. 

Lord Srinivasan is the presiding deity of Kaliyuga.  He is also called as Malaiappan – residing on Thirumala hills.  After we climb over the 7 hills, reaching Anjanagiri – the black hill, we will have HIS blissful Darshan. That place is called Vadavenkatam (Venkatam of North).  While here, in the southern tip of Tamil Nadu, the same Perumal gives us darshan from this small mound.   This shows HIS merciful compassion.  Let us enter this beautiful temple to worship the Perumal as well as get to know about its divine history.

Veda Vyasa:

The Sage Veda Vyasa compiled Mahabharatha, the 18 Puranas as well as the most important Vedas and Vedantas.  His birth name is Krishnadwaipayana.  As he compiled the 4 Vedas, he acquired the name Veda Vyasa.  Elders call Mahabharatha as the 5th Veda.

Vyasa is the father of the great sage Parasara.  Parasara is the author of Sri Vishnu Purana, which is called the Gem of Puranas. While explaining this great Purana to his disciple Maithreya, Sage Parasara talks about the glories of Veda Vyasa.

Hey Maithreya, don’t think I am talking about Vyasa because he is my son.  Please understand, that Krishnadwaipayana, who is also known as Veda Vyasa, is the absolute incarnate of Lord Narayana.  Except Lord Narayana, no one else can compile the 4 Vedas and Mahabharatha.

Veda Vyasa had 4 disciples namely Bailar, Sumanthu, Jaimini and Vaisampayanar. They were great in Penance, Knowledge and Qualities.   Vyasa distributed them with one Veda each and asked them to propagate.   Bailar was given Rig Veda, Vaisampayana was given Yajur, Jaimini was given Sama and Sumanthu was given Atharvana Veda. After thorough learning, taking the consent of their Guru, they started on a pilgrimage to holy places.

After bathing in several sacred waters, they performed penance, chanting and meditation. They worshiped the presiding deities of those holy lands they visited and continued their task of preaching good to the people.

Bailar’s Vision:

Sage Bailar reached the banks of Thamarabarani.  In those times, it was spread by vast bamboo forests. The Deer & the Peacocks roamed happily in the forest. The crystal clear water of the river Thamarabarani reflected the peaceful mind of the sage.

The intellectuals, always conceive Perumal in everything they see.  The sound that is produced when the wind pass through the bamboo holes, Bailar perceived as Sri Krishna’s Venu gaana (music from the flute). Through the Peacocks’ dance, he saw the dark complexion of Lord Krishna and His hair decorated with peacock’s feather.   He experienced Krishna’s compassion in the abundance of the Tamarabarani river.

Bailar never felt this kind of mental peace in any of those many holy places he visited.  He sat on the banks of the river and meditated for a few minutes on Bhagavan.   While in meditation, he got a vision of Lord Sri Krishna adorning the peacock’s feather, that lasted for a fraction of a second.    

This sacred vision of Sri Krishna, from nowhere like a flash of lightening, lasted no more.  This disturbed Bailar a lot.  He could not bear the loss of this enchanting vision.  He cried Kanna! Kanna! and sobbed, but nothing seen.   He closed his eyes many times but the vision was no more.  A little later, Bailar consoled himself as if he has decided on something. 

He built a hermitage on the banks of the river.  He thought that this mystic environment will calm his mind.   He bathed in the Tamarabarani river and started his unceasing penance.   He continued his meditation on the 12 lettered sacred Maha mantra of Vasudeva.

River Thamarabarani too decreased its noise, not to disturb the sage’s penance.  Once, Bailar’s guru Veda Vyasa did penance on the banks of River Saraswati.   He got terribly annoyed of the noise made by Saraswathi river’s flow.   He got angry and cursed the river.   Hence, in Badrikashramam, near the cave where Sage Vyasa did penance, the river Saraswathi hides herself and flows underground. This amazing phenomena can be sighted even today.  Looks like, the river Thamarabarani too, got scared of this disciple of Sage Vyasa.

Govindan’s Compassion:

Lord Govinda got very pleased of Bailar’s penance.  HE appeared before Sage Bailar, who was yearning for long.  Lord Govinda showed HIS enchanting darshan with all his mystic weapons such as Conch, Discus, Maze, Bow & arrow flanked by Sridevi & Bhoomidevi.   Sage Bailar was overwhelmed with this sight, enjoyed Lord’s captivating darshan by prostrating several times.   Bailar revered the Lord in admiration calling HIM, Hey Prabho! Hey the Merciful Ocean! Hey the Dark Complexioned!  “Hey Maharishi! The rock on which you penanced is MY self-manifestation. Create a temple out of this!”, commanded Lord Sri Krishna. 

What a surprise!! When the Lord disappeared, the stones too vanished and transformed into a beautiful form of Lord Sri Srinivasan.   Sage Bailar constructed a beautiful temple for the Self-Manifested Sri Srinivasan immediately.  Even today, the  dark  beauty of the Lord can be seen on the white hillock, Swethamalai.  Since then, the forest area got transformed into a beautiful Agraharam called Venkatanathapuram. Many devotees started to dwell there. 

The Boon of Vanadevatha:

Years passed, another Maharishi visited the place and did penance. A forest angel happened to disturb his penance. The Maharishi got angry and cursed the angel to become formless.  The forest angel pleaded with the Maharishi to forgive him.  The kind hearted Maharishi excused him and assured that with the blessings of the Kaliyuga’s presiding deity Venkatavan, he will be relieved of the curse. 

Maadan dwels in the flag mast:

After several centuries, during the King Vekatappa Naicker’s time, a new flag mast was installed at the temple. What a surprise! The forest angel Maadan (called as Madasamy) who was cursed to be formless by the maharishi, was dwelling in a Maada tree.  That particular Maada tree was chosen by the locals to craft the flag mast for the Perumal. The forest angel Maadan manifested on a devotee and spoke about his curse. He also said that his curse will be relieved upon Perumal’s Nirmalya Prasadam (the very first offerings of the day) is offered to him. Since then, Perumal’s Nirmalya Prasadam is being offered every day to Maadan residing on the Flag Mast.  Even the people of the land offer their prayers to Maadan residing in the flag-mast every day.

Kaliyuga Varadan:

Recently, one of the local devotee’s son, could not speak since his birth.  The devotee approached many to cure his son, he offered oblations to many demi-gods but no change, finally he prayed to this Perumal, who is also his Family-God.   He made a Silver replica of Tongue & Feet and offered to Perumal.  What a surprise! The boy began to speak like the flood gates are opened.

For most of the hamlets around this region, this Perumal is their Family-God. Every year they celebrate Garuda Sevai Utsavam on a Saturday, during the Tamil month Puratasi.   This festival is very famous and Lakhs of devotees gather to worship the Perumal on Garuda.   Please make a visit to this holy place and worship the compassionate Perumal.  You are sure to get all the prosperity in your life.

It takes about 40 minutes to reach this town from Tirunelveli Junction.  All facilities including Buses and Autos are available to reach Venkatnathapuram. The town has decent lodging facilities too!

Dhyana Slokam

Srimantham Srinivasam tham Baila Sevyam varapradam I

Namo Venkata Nathakye Vane Vamse Nivasam II

Written by Sri APN Swami

(Lord Srinivasan, who is with Mahalaksmi, who is being worshiped by Sage Bailar, who always blesses and grants boons, lives amidst bamboo forest in Thiruvenkatanathapuram. I surrender only to HIM)

Reels life & Real life | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 004

श्रीः

शोभकृत् चैत्र – 23

06/05/23

Reels life & Real life

(உகப்பும் கசப்பும்)

சாந்தர் புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறார். வம்பர் சத்தம் போடாமல் வந்து பின்புறத்திலிருந்து எட்டிப்பார்த்து “என்ன புத்தகம் படிக்கிறீர் ஓய்?”

சாந்தர்: (திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து) ஓ நீர் தானா?

வம்பர்: இவ்வளவு சுவாதீனமாக யார் வருவார்? என்னைத் தவிர! TV பாக்கலயா? நீர் தான் எப்போதும் trending-ல இருப்பீரே… News பாக்கலயா?

சாந்தர்: என்ன! சார்லஸ் பட்டாபிஷேகம் ஓடிண்டிருக்கு. அத தான சொல்றே!

வம்பர்: சுவாமிஜி சான்ஸே இல்ல. ஒவ்வொரு தடவையும் உம்மகிட்ட நான் பல்ப் வாங்கிண்டேயிருக்கேன். But அதுவும் I like it.

சாந்தர்: என்னை praise பண்ணது போறும். நீ வந்த விஷயத்த சொல்லு.

வம்பர்: வேறென்ன ஓய். After 70 years, British கோலாஹலம் பார்த்தீரா!

சாந்தர்: ம் (மௌனம்)

வம்பர்: என்ன ஓய் துளிகூட interest காண்பிக்க மாட்டேங்கிறீர்? என்ன ப்ரம்மாண்டம், என்ன arrangements… அப்பப்பா. SuperO Super. அதுவும் அவா follow பண்ற traditional protocols இருக்கே…. சான்ஸே இல்ல moment.

சாந்தர்: எ..ன்…ன? என்ன சொன்ன?

வம்பர்: (தனக்குள்) என்னடா! நாமளா ஏதாவது வாயை கொடுத்து மாட்டிண்டோமா? எல்லாத்தயும் correct ஆகத்தானே சொன்னோம். இந்த மனுஷன் எத வச்சு மடக்கறார்-னு தெரியலயே!

சாந்தர்: என்னப்பா யோசன? நீ சொன்னது மறந்து போச்சா?

வம்பர்: (விழித்தபடி) என்ன.. என்ன… சொன்னேன்?

சாந்தர்: என்னமோ tradition-னு சொன்னயே! அத கேட்டேன்.

வம்பர்: ஆமா! Tradition தான். ஒரு perfect royal ceremony. ரொம்பவே impressive ஆக இருந்தது.

சாந்தர்: Correct. எனக்கும் ரொம்ப புடிச்சிருந்தது.

வம்பர்: அப்புறம் என்ன ப்ரச்சன? அத accept பண்ண என்ன தயக்கம்?

சாந்தர்: அத Accept பண்ண தயக்கம் இல்ல. But நம்ப situation நெனச்சாதான் கஷ்டமா இருக்கு

வம்பர்: (தலையில் கை வைத்தபடி) போச்சுடா! இதிலயும் ப்ரச்சனயா!

சாந்தர்: இங்கிலாந்து இளவரசர் முடிசூட்டு விழா பாரம்பரிய முறைப்படி நடந்ததுன்னா ரசிக்கற நாம நம்ப வீட்டு கல்யாணங்கள எப்படி நடத்தறோம்?

வம்பர்: (என்ன சொல்ல வறார் என்பது புரியாமல் பார்க்கிறார்)

சாந்தர்: வரவர நம்ப கல்யாணங்கள்ல வைதிக ச்ரத்தையே போய்டுத்து. Nobody cares about traditional customs.

வம்பர்: (மௌனம்)

சாந்தர்: ஒரே பாட்டு, கூத்து, கேலி, சத்தம் இப்படித்தான் போயிண்ட்ருக்கு. DJ, மெஹந்தின்ற பேர்ல சகிக்க முடியாத கூத்து நடக்கறது.

வம்பர்: (ஏதோ சொல்ல வாயெடுக்கிறார்)

சாந்தர்: இதெல்லாம் சொன்னா எங்கள நீங்க பிற்போக்குவாதின்னு கேலி பண்ணுவேள். But this is reality. We are not against celebrations. But celebration-ன்ற பேர்ல கூத்தடிக்கிறது தான் un-ஸகிக்கபிள். Ok உங்க sideலயே பேசறேன் – பாட்டு, dance-னு கூத்தடிச்சுட்டு அப்புறம் கல்யாணத்தயாவது ஒழுங்கா பண்ணிக்கலாமே? அதுவும் இல்ல.

வம்பர்: (மௌனம்)

சாந்தர்: ஒரு பெரிய ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டப்படும் நிகழ்வில் எங்காவது உற்சாகம் என்னும் பெயரில் வரம்புமீறுதல் அல்லது மரபு மீறுதல் இருக்கா? அத ரசிக்கற நாம complete-ஆ நம்ப மரபுகள மீறுகிறோம்னு என்னிக்காவது நினச்சுப் பாத்ததுண்டா?

வம்பர்: சும்மா வேடிக்கதானே சுவாமி!

சாந்தர்: அத தான் நானும் சொல்றேன். இந்த pre-wedding shoot, reelsன்ற பேர்ல கணவன் மனைவியின் அந்தரங்கம் பகிரங்கமாகிறதே. இப்ப recent-ஆ ஒரு reels பார்த்தேன்.

வம்பர்: (ஆவலுடன்) என்ன அது?

சாந்தர்: ஒரு பொண்ணு கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்குப் போறத்துக்கு முன்னாடி தன்னோட அப்பாவ கட்டிப்பிடிச்சுண்டு அழறா!

வம்பர்: சகஜம் தானே!

சாந்தர்: ஆமாம் தான். ஆனா அங்க தான் ஒரு twist வெச்சா அந்தப் பொண்ணு.

வம்பர்: Twist-ஆ?

சாந்தர்: ஐயோ பாவம் பொண்ணு அழறாளேன்னு அவ அம்மா, கிட்டவந்தா, ஆறுதல் சொல்றதுக்கு. ஆனா அந்தப் பொண்ணு என்ன பண்ணா தெரியுமா?

வம்பர்: என்ன… என்ன பண்ணா?

சாந்தர்: அவ அம்மாவ பாத்து “அம்மா! நீ குறுக்க வறாத reels போய்ண்ட்ருக்கு” அப்படின்னா!

வம்பர்: அடிப்பாவி!

சாந்தர்: பாத்தியா… உனக்கே கடுப்பா இல்ல? இப்ப நடக்கற சம்பவங்கள் நிஜமான திருமணமா இல்ல reels திருமணமான்னு சந்தேகம் வற்து. அந்த வீடியோ ரீலா அல்லது ரியலா என்று கூட தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் நாள் தொலைவில் இல்லை என்பது தான் உண்மை நிலை.

மேல் நாட்டு நாகரீக மோகத்துல மூழ்கின நமக்கு அந்த மேல் நாட்டவர்கள் தங்களின் பாரம்பர்யத்தை மறக்கலேங்கற்து கண்ல பட மாட்டேங்குது.

Like mind திருமணமா! likeஸ்க்கு மயங்கும் திருமணமா?

Reels life திருமணமா real lifeக்காக திருமணமா?

இன்னமும் என்னென்ன கூத்துகள் அரங்கேறப் போறதோ தெரியல. நூறு Kerala Stories திரைப்படங்கள் வந்தாலும் ஹிந்து ஸமுதாயம் விழித்துக்கொள்ளுமா தெரியவில்லை.

வம்பர்: (ஒன்றும் சொல்லத் தோன்றாமல் வாயடைத்து நிற்கிறார்)

Link to video – https://www.facebook.com/reel/249072574303453?s=chYV2B&fs=e&mibextid=6AJuK9

शोभकृत् चैत्र – 23

06/05/23