Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

This article has both the Tamil version written by Sri APN Swami and its English translation done by his students.

நரேந்த்ரன் செய்த நன்மை

The Good Acts of Narendran

மனிதனின் மனோபாவம் நல்லவைகளை பாராட்டக் காட்டும் தயக்கமேயாகும். பாராட்டாதது மட்டுமின்றி குறைகளைப் பெரிதாக்கி அதில் குளிர்காய்வது உலகியல்பு.  நாம் எத்தனையோ நற்காரியங்கள் செய்திருந்தாலும் அதையெல்லாம் காணாமல் அல்லது கண்டும், காணாமல் உதாசீனம் செய்தும், அவர்கள் பார்வையில் உள்ள தோஷத்தினாலும், அறிவின்மையாலும், அடுத்தவரைக் குறை கூறுவதில் வரும் அல்ப சந்தோஷத்தினாலும் தங்களை பெருமை பெற்றவராகச் சிலர் நினைப்பர். இத்தகையவரின் மனோநிலையை ஸ்வாமி தேசிகன் ஸங்கல்ப ஸூர்யோதய நாடகத்தில் விவரிக்கிறார்.

இத்தகையவர்களின் தலைமகன் யார் என்றால் ராவணன், துர்யோதனன் முதலியவர்களேயாவர்.

“நான் இதை ஏற்கமுடியாது கண்டிக்கிறேன்” என்று சொல்வதால் அவர்கள் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்தவராகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை ஒரு அரசு செயல்படுத்தும் போதும் எதிரணியினர் “எதிர்ப்பதே இயல்பு” என செயல்படுவது கண்கூடு.

ராம, ராவண யுத்தம் நடைபெறுகிறது. அப்போது ராமபிரானின் பராக்ரமம் [வீரம்] கண்டு வியப்பெய்யாதவர்களே இல்லை. ஆனாலும் ராவணனுக்கு அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவனது மனம் மற்றவரைத்தான் பாராட்டாதே! ஆனாலும் தொடர்ந்து ராமனின் நடவடிக்கைகள் ராவணனுக்கு தோல்வியை அளித்தன. தனது இறுமாப்பு வென்றுவிடும் என நினைத்தவனுக்கு ராமனின் பண்புமிக்க வீரம் வியப்பளித்தது.

அப்போது வேறுவழியே இல்லாமல் ராவணன் ராமபிரானை புகழ்கிறான். அவனையறியாமல் ராமனின் பெருமைக்குத்தலை வணங்கினான். நளினமான தனது நடவடிக்கைகளினால் ராமபிரான் எதிரிகளாலும் புகழப்படுகிறான் என்கிறார் வால்மீகி.

நாராயணனாகிய ராமன் வீரராகவன் என்கிறான் ராவணன்.

லோகஷேமத்திற்காகச் செய்யும் காரியங்களைப்புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பவர்கள், நிகழ்வுகளின் வலிமை கண்டு தங்களின் தவறையுணர்ந்து, தாங்களும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதைக் காண்கிறோமல்லவா!

“எவனோவொருவன் செய்யும் தீய செயல் உலகில் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது” என்பர் பெரியோர். அதே போன்று மஹாத்மா ஒருவனின் நற்செயல் இவ்வுலகை வாழ்விக்கிறது என்றும் சொல்வர். தீயவர்கள் கூட தங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தங்களின் நன்மைக்காகத்தான் என்று ராவணனைப்போன்று (ஏதோவொரு காலத்திலாவது) உணர்ந்தார்களானால் அது தேசத்தின் அபிவ்ருத்தியன்றோ! தேசத்தின் நலனில் விருப்பமுடையவர்கள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

நரேந்திரன் செயல்களைக்கண்டு சத்ருக்களும் வியக்கின்றனர் என்றால் சாதுக்கள் சும்மாவாகவா இருப்பர். அவர்கள் தானே அதிக மகிழ்ச்சியுறுகின்றனர்.

இப்படி நரேந்திரன் செய்த நன்மையை இன்று உலகமே கொண்டாடுகிறதென்றால் நமக்கும் அது பெருமைதானே.

– ஸ்ரீஏபிஎன் சுவாமி

23/03/2020

English

The Good Acts of Narendran

The human mind always hesitates to appreciate the good things but takes a lot of pleasure in pointing out the mistakes instantaneously. This is the law of nature. Despite doing many acts of goodness, they are not appreciated because people tend to overlook or ignore these acts and will only examine the mistakes with greater scrutiny. This emanates from their innate need to point out the mistakes in others, lack of knowledge and understanding, to gain a fiendish pleasure, and possibly even to prove that they are one notch higher than others. Swami Desikan has explained the mindset of such people in Sankalpa Suryodhayam.

The heads of such groups are none other than Ravanan and Duryodhanan. They attract the attention of the world by saying that they deplore or don’t accept these good actions and thoughts. Many times we have seen that when a government or ruler does things that are beneficial for the country as a whole, the opposition (those who oppose) condemn it.

In the battle between Rama and Ravana, everyone who watched it was astounded by Rama’s strength and valor. The only person who could not praise or accept Rama’s greatness was Ravana simply because his mind can never accept that anyone is better than him! Still, Rama’s actions brought a string of defeats and setbacks for Ravana. These were big blows to not just Ravana’s army but also to his egoistic behavior as he increasingly saw the humble valor of Rama.
After a point, Ravana could resist no more, so he praised Rama. Even without his knowledge, Ravana acknowledged the power and greatness of Rama. In this sense, Rama won over His enemies with his smooth and humble ways, explained Valmiki.

Ravanan calls Rama as Veeraraghavan. When the enemies or those who oppose the good acts done for the welfare of the world, see the results of these acts and its huge positive impact, they tend to subconsciously clap their hands for the efforts. We have seen this many times now!

Elders often say that the bad act of a single person brings a lot of negative impact to the world. At the same time, they also say that the good acts of a Mahatma (great person) helps the world to live a better life. When the enemies and opposers like Ravana realize that the small punishments or inconveniences that they have to bear are for their own good, it is progress for the nation, right? Such good acts will never go unappreciated by those who care for the nation.
When even enemies are astounded by Narendran’s actions, will sadhus (people with good intent) keep quiet? Won’t they be the ones who will feel extremely happy?

Today such an act by Narendran is being praised by the entire world. Isn’t it a moment of pride and happiness for us?

-Translation by Sri APN Swami Sishyas

Sri #APNSwami #Writes #Trending |#Parasaran’s #victory |#பராசர #விஜயம்

                    Parasaran’s victory

                      பராசர விஜயம்

(By Sri APNSwami)

This article has both the original Tamil version written by Sri APN Swami and the English translation by his students. Scroll down to read the English version.

WhatsApp Image 2019-11-09 at 11.33.53 AM

மஹரிஷி வசிஷ்டரின் பிள்ளையின் பிள்ளை (பேரன்) பராசரமஹரிஷி. இவரே வேத வ்யாஸ்ரின் தந்தை. புராணங்களில் ரத்னமான ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை இயற்றிய மகாத்மா இவரேயாவர். சுவாமி ஆளவந்தார் இயற்றிய ஸ்தோத்ர ரத்நம் எனும் நூலில் புராண ரத்னம் இயற்றிய மகரிஷி ரத்நமான பராசரரைப் புகழ்கிறார்.

தெளிந்த தத்வ அறிவை உடையவராம் பராசரர். ம்ருதுவாகவும், சாந்தமாகவும் பேசும் இவர், அதே சமயம் தனது வலிமையான கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்து எதிரணியினரை வாயடைக்கச் செய்து விடுவாராம்.

  “பரா: – என்றால் எதிரணியினர் என்று பொருள். சர: – அம்பு மழை பொழிவது போன்று வாதங்களை முன்வைத்து அவர்களை அடக்கும் வெற்றி வீரர பராசரர் என்பது பொருள்” எங்கிறார் சுவாமி தேசிகன்.
முதிர்ந்த ஞானியான இவரின் வாதங்கள் பரப்ரம்மமாகிய பகவானின் பெருமையை உலகறியச் செய்கிறதாம்.

அதே போன்று கூரத்தாழ்வான் திருக்குமாரர் பராசர பட்டரும் இந்த சம்ப்ரதாயத்தின் தீபமாகத் திகழ்ந்தார்.

மூன்றாம் பராசரன்:-
இன்று 9.11.2019 (ஐப்பசி.23) நமது தேசத்தின் காவல் தெய்வமான ஸ்ரீராமபிரானின் பெருமைதனை “தோலாத தனிவீரன்” உலகறியச் செய்தார் வழக்கறிஞர் திரு.பராசரன் அவர்கள். மகாத்மா பராசர மகரிஷி போன்றே பழுத்த பகவத் அநுபவம், அநுக்ரகம் பெற்ற இவரின் ராமபிரான் விஷயமான தொண்டு மகத்தானது.
வாதங்களாகிய மழையினால் ப்ரதி வாதிகளை வியக்கும்படி செய்து தர்ம ஸம்ஸ்தாபனம் செய்த திரு “கேசவ பராசரனுக்கு” பல்லாண்டு பாடுவோம்.
“ஸநாதந ரத்னமான” இவரின் ராம கைங்கர்யம், ராமாயணத்தின் புகழ், ராமபிரானின் புகழ் உள்ளளவும் நிலைக்கும் என்பது திண்ணம். ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் இவருக்கு மாபெரும் பாராட்டு விழா நடத்தி, அடுத்த தலைமுறையினருக்கு இவரின் தொண்டினை அறிமுகப்படுத்த வேண்டுமென்று பேராவலுடன் எதிர் பார்க்கிறேன்.

– தாஸன் ஸ்ரீஏபிஎன் சுவாமி.

                                     Parasaran’s victory

Sage Parasara is the grand son of sage Vasishta and the father of Sri Veda vyasa. This eminent sage composed “Sri vishnupuranam” which is considered to be the gem of puranas. Swami Alavandar in his stotra ratnam hails him as the gem among sages who authored the gem among puraanas.

Sage parasara has in depth knowledge on the sanatana dharma with unprecedented clarity. He is said to be soft spoken with great equanimity of mind who on the other hand when arguing against the enemies would strongly emphasise and irrevocably establish the right facts and opponents dumbstruck.

The word “para” means enemies and “sara” means arrows. Thus swami Vedanta desika quotes that the name “parasara” by itself indicates that his arguments would fall like rain of arrows aimed at the opponents and defeat them.

With ripened knowledge and enormous wisdom, this sage’s arguments reveal to the world the greatness of “parabramham”.

In the same manner, swami koorathazhwan’s son parasara bhattar, is also a jewel of our Sri Vaishnava sampradhaya.

The third Parasaran-

Today 09/11/2019 (ipassi 23), the glory of our nation’s protector lord Sri rama has been brought to light by the “one man army”, veteran advocate Sri Parasaran ji. Just like sage parasara, with astute wit and abundant blessings from the lord, this humongous service rendered by him to Ram Lalla is immeasurable.

To this illustrious personality who made his opponents awestruck by his unshakable arguments, we bow down humbly with respect and pay our obeisance.

It is not an exhaggeration to laud him as the gem of sanathana dharma. His yeoman service to lord Sri rama and the holy book srimadh ramayana will always be etched in our hearts and minds.

We eagerly look forward at the acharyas and other learned scholars of our sampradhaya to celebrate and honour advocate Sri parasaran’s triumph and show to the next generation the significance of his services to sanathana dharma.

(English Translation by students of Sri APN Swami.)

Sri #APNSwami # Writes #Trending |Budget by Sitaram | சீதாராமன் பட்ஜெட்

Note: Scroll down to read the article in Tamil & translation in English.

சீதாராமன் பட்ஜெட்

By – ஸ்ரீ ஏ.பி.என் சுவாமி

      பட்ஜெட், பட்ஜெட், பட்ஜெட் என எங்கு பார்த்தாலும் ஒரே பேச்சுதான்… பட்ஜெட் மீதான விமர்சனங்கள், விவாதங்கள், ஆட்சேபங்கள், சமாதானங்கள் என மக்கள் தொடர்ந்து பரபரப்பாக உள்ளனர்.  இச்சமயத்தில் நாமும் பட்ஜெட் குறித்த ஒரு விவாதத்தில் பங்கு கொள்ளலாம்.  இதிலும் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லை. இதனை தாக்கல் செய்பவர் அப்பழுக்கற்ற தூய குணம் படைத்த நிர்மல சீதாராமன்.

ராமபிரான் சித்ரகூடத்தில் இருக்கும்போது, பரதன் அவனைக் காண ஓடோடி வருகிறான்.  ராமனைத் தவிர்த்து வேறு ஒன்றையும் அறியாதவனாக, அழுத கண்ணீருடன் ஓடி வந்தவனைக் கட்டியணைத்து தனது மடிமீது அமர்த்திக் கொண்டு, உச்சிமோந்து சில விஷயங்களைப் பேசுகிறான்.  அவைகள் எக்காலத்திற்கும் பொருந்தும் வார்த்தைகள்!!  ராஜநீதியின் முத்துக்கள்!! வரவு செலவு கணக்குகளை, அரசன் எவ்விதம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கையாள வேண்டும் என்றும் தெரிவிக்கிறான்.

  1. முதலில் பொருளாதார (Economic) வல்லுனர் யார்? அவன் செயல்பாடு என்ன? என்று சொல்வதைக் கேளுங்கள்.

பொருளாதார நிபுணனாகிய ஒரு அமைச்சன், தன் திறமையினால், மன்னனையும், மக்களையும் நன்கறிந்து, அவர்களை மகிழ்விக்கும் காரியங்களைச் செய்வான். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அவனின் செயல்பாடு இன்றியமையாததாக இருக்கும். இது நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்.

“ஏகோபி அமாத்ய: மேதாவீ சூரோ தக்ஷோ விசக்ஷண: |

 ராஜாநம் ராஜமாத்ரம் வா ப்ராபயேத் மஹதீம் ச்ரியம் ||

                                                                                  (அயோத்யா காண்டம் 100-24)

  1. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும், பெண்கள் முதலான போகங்களில் ஈடுபட்டு ரகசியங்களை வெளியிடுபவர்களையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.

 (அயோத்யா காண்டம் 100-26)

  1. இது மிகவும் முக்யமானது. குழந்தாய் பரத! கண்டபடி வரி(Tax) வசூலிக்கும் அரசனை மக்கள் மிகவும் வெறுப்பார்கள். அதனால் மக்கள் மகிழ்வதாகவும், அதேசமயம் அரசுக்கு பாதுகாப்பானதுமான வரி வசூலை செய்ய வேண்டும்.

(அயோத்யா காண்டம் 100-26)

  1. அடுத்தது ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ராமன் விவரிக்கிறான்.

“கச்சித் பலஸ்ய பக்தம் ச வேதநம் ச யதோசிதம் |

 ஸம்ப்ராப்த காலம் தாதவ்யம் ததாமி ந விலம்பஸே ||”

                                                                          (அயோத்யா காண்டம் 100-32)

பரத! நாட்டின் பாதுகாப்பிற்கு, சேனை வீரர்களின் பங்கு மகத்தானது. அந்தந்த காலங்களில் அவர்களுக்கு உரிய சம்பளத்தை அளிக்க வேண்டும். சரியான திட்டமிடல் மூலம், நிதி ஒதுக்கீடு செய்து ராணுவத்தை பலப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் நாட்டைக் காப்பர்.

  1. நம்பிக்கையான தூதுவர்களைக் கொண்டு அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும். அதேசமயம் தாய்நாட்டின் மீது தணியாத தேசப்பற்று உடையவனாக அந்த தூதன் திகழ வேண்டும். அரசன் ஆணைப்படி வெளியுறவுக் கொள்கையில் சூட்சுமமாக நடந்து, காரியத்தை சாதிக்கும் தூதர்களை எப்போதும் கொண்டிரு.

 (அயோத்யா காண்டம் 100-35)

  1. தொழில் தொடங்குவோர்க்கும் தொழிலதிபர்களுக்கும் தக்க வசதிகளைச் செய்து தர வேண்டும். எவ்வித இடையூறுமின்றி அவர்களின் தொழில், வாணிபம் சிறக்க வகை செய்ய வேண்டும். ஒரு நாட்டில் தொழில்துறை எவ்வித இடையூறுமின்றி வளர்ந்தது என்றால், அந்நாடு சரியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

  (அயோத்யா காண்டம் – 100-48)

  1. காடுகள் நன்கு வளர்க்கப்பட்டு யானைகளின் வாழ்வாதாரங்களும் வழித்தடங்களும் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும். பெண் யானைகளை அதிகமாக வளர்த்து, இன வ்ருத்தி செய்ய வேண்டும். இப்படி காடுகளும், யானைகளும் அரசனால் நன்கு கவனித்து அபிவ்ருத்தி செய்யப்பட வேண்டியவை

                                                                        (அயோத்யா காண்டம் – 100-50)

  1. வரவுக்குத் தகுந்த செலவு செய்கிறாயா? நல்ல அரசன் வரவு குறைச்சலாகவும், செலவு அதிகமாகவும், பற்றாக்குறையான அறிக்கையை சமர்ப்பிக்கலாகாது. ஒருவேளை பற்றாக்குறை ஏற்பட்டாலும், நிபுணர்களுடன் ஆராய்ந்து பொருளாதார அபிவ்ருத்திக்கான செயல் திட்டங்களை வகுத்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

                                                                        (அயோத்யா காண்டம் – 100-54)

ஆகையால் பரதனே, தெய்வ வழிபாடு, மத நம்பிக்கை, ராணுவ வீரர்கள் இவர்களுக்கு உரிய மரியாதையளிக்க வேண்டும். நாஸ்திகம் பேசுபவனை உபசாரத்திற்குக் கூட ஆதரிக்கலாகாது. தங்களை விவேகிகள் என நினைத்து, நாஸ்திகர்கள் பேசும் பேச்சு, ராஜ்யத்திற்கு நாசம் விளைவிக்கும்.  எனவே கவனமுடன் இருக்க வேண்டும்“.

இவ்விதம் பல அரிய உபதேசங்களை ஸ்ரீராமபிரான் பரதனுக்கு உபதேசித்தான்.

நாமும் அவன் வழி நடந்து நாட்டையும், நம்மையும் நலம்பெறச் செய்வோம்.

ஜய் சீதாராம்

Sitaram’s Budget by Sri #APNSwami

#NirmalaSitaraman

 

Budget by Nirmala SitaRaman 

It’s this time of the year when everyone is talking about the annual budget. Everywhere you turn, all that you can hear about is the budget, its opinions, criticisms and praise. Let us also join this “budget” chorus and talk about another budget that is sure to kindle the same level of excitement because after all this is also presented by Nirmala Seetharaman.

When Rama was in exile at Chitrakootam, Bharatha goes running to him.  There is nothing else in Bharatha’s mind except the thought that he has to meet his brother and convince Him to come back to Ayodhya.  With such a single-minded devotion, he goes rushing towards Rama.  Seeing Bharatha, Rama also hugs him and showers him with love and affection. After consoling Bharathan,  He explains him few things.

These advices holds good for any period of time.  They are the political pearls of wisdom! Rama explains about income and expenses and how to balance them, what is the King’s role in managing finances and how he should ensure the welfare of his people using his funds wisely.

Who is an expert in economics and what is his role?  Here is Rama’s explanation.
An expert in economics will use his knowledge to thoroughly understand the king and subjects and will perform those actions that will delight them.  His contributions to his country’s progress will be highly invaluable and it will bring about a big economic change for the country.

EkOpi Amathya: medhaveesurOthaksho vichakshana:|
Rajanam rajamathram va praapayeth mahatheem sriyam ||

   (Ayodhya kandam 100-24)

People who take bribe and those who reveal secrets for transient pleasures like women should be punished severely.                      (Ayodhya Kandam 100-26)

This is the most important advice. “O Bharatha! People will hate a king who collects huge amounts of tax.  So, you’ll have to balance people’s interests as well as the kingdom’s needs while deciding on the right amount of money to levy as tax.”

(Ayodhya Kandam 100-26)

Next, Rama explains about allocating money for the army.

      Kachchith palasya paktham cha vedhanam cha yathOchitham |
             Sampraaptha kaalam thaathavyam thathaami na vilampase ||

 (Ayodhya jandam 100-32)

The contribution of soldiers is of utmost importance for the security of your country. You have to strengthen the army and at the same time, make the necessary payments to soldiers on time.  This will keep them happy and they will work towards protecting the country.

Select the right people to build diplomacy and good relationships with other countries. At the same time, the chosen diplomat should have an overwhelming sense of patriotism towards his home country.  It is your responsibility to identify such people who will use their intelligence to maintain good relationships with other countries, based on your orders.                                                                                       (Ayodhya kandam 100-35)

Provide the right environment for entrepreneurs and startups and ensure that everything is conducive for their operations and eventual success.  This is important because when businesses thrive in a country, it naturally leads to economic development.                                                                       (Ayodhya kandam 100-48)

Forests have to flourish and for that you have to ensure that elephants have access to their natural migratory path.  Pay special attention to female elephants as they play an important role in creating progenies and keeping their species alive.  You should always keep in mind both these aspects.                                   (Ayodhya kandam 100-50)

Are you spending within your limits and lesser than your income? A good King should never submit a budget that has excess spending over income.  Consult with the experts and implement the right fiscal measures for a prosperous country.

 (Ayodhya Kandam 100-54)

“My dear Bharatha! Believe in God, have faith in your religion, respect your soldiers, and eliminate atheists from your country because they may believe they are intelligent, but their words will eventually bring ruin to a country.  So, watch out for these atheists and remove them at the earliest!”

Rama gave many such pieces of advice to Bharatha.  Let us all follow His words to put ourselves and our country on the path of progress and prosperity.

Jai Sitaram.

-Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

Sri #APNSwami #Writes #Trending | #ஜெய் #ஸ்ரீராம் – #மமதாவின் மதியீனம் | #JaiShriram – Downfall of #Mamata (Arrogance)

This article has both the original Tamil version written by Sri APN Swami and the English translation by his students. Scroll down to read the English version.

           ஜெய் ஸ்ரீராம் – மமதாவின் மதியீனம்

நான், எனது என்று சொல்வது நமக்கு நாமே எமனை அழைப்பது போன்றதாகும் என்பர் பெரியோர்.   அதாவது, ஸம்ஸ்க்ருதத்தில், ‘அஹம்’, ‘மம’ என்பது இரண்டெழுத்துள்ள சொற்கள்.   நான் என்றும், எனது என்றும் இது அகங்காரத்தைக் காட்டும்.   அகங்காரத்தை விட மதியீனம் வேறொன்றும் இல்லையாம்.   ‘எல்லாம் நான்; எனதே அனைத்தும்’ எனும் கர்வம் உண்டாகும். இது மற்றவர்களுக்கு மதிப்பளிக்காது;   மற்றவரின் பெருமையை பொறுக்காது; குறிப்பாக,  நல்லுபதேசங்களும் நல்ல விஷயங்களும் காதில் ஏறாது; இவையனைத்தையும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அதன் பெயர் மமதா!

மமதா – கர்வம், அகங்காரம், ஆணவம், அலட்சியம் எனப் பல அர்த்தங்கள் இந்த சொல்லுக்கு விளக்கமாயுள்ளன.   எவரையும் மதிக்காமல், ஆணவமாக, இறைவனின் திருநாமம் கேட்டால், அது கூட பொறுக்க முடியாததாக இருக்கும் தன்மைக்குத்தான், “மமதா” என்பது பெயர்.

இந்த மமதையால் மதியிழந்து மாண்டவர்கள் அனேகம் பேர்கள் உள்ளனர். அவர்களைக் கணக்கெடுக்க நமது ஒரு ஆயுள் போதாது.   மமதையால் மாண்டவர்களில் இருவரைக் காணலாம்.

ஒருவன் துர்யோதனன்.   அகங்காரமே வடிவு கொண்டு வந்தவன். மற்றொருவன் ராவணன்.   இவர்கள் இருவருமே மமதையின் மொத்த வடிவங்கள்.   “எங்களை இரண்டாகப் பிளந்து வெட்டினால் கூட, எவருக்கும் தலை வணங்க மாட்டோம்” என்று ஆணவத்துடன் அலைந்தவர்கள். வணங்காமுடியாக இருப்பது பெருமை என நினைத்து ஆணவத்தால் (மமதையால்) அழிந்தவர்கள்.

இவர்களில் ராவணன் நிலை மிக மிக மோசமானது.   காமம், க்ரோதம், லோபம், மதம் என அனைத்தும் அவனிடம் நிலை கொண்டிருந்தன.   வங்கக் கடலான இந்து சமுத்ரத்தைக் கடந்து,  நரேந்த்ரனாகிய ராமனின் தூதுவனாகிய அனுமான், “ஜய் ஸ்ரீராம்” என்று லங்கையினுள் நுழைந்தான்.

த்ரிகூட மலையிலிருந்து லங்கையைக் கண்டு, அதனுள் புகுந்து ஒவ்வொரு அடிவைப்பிலும் ஜய் ஸ்ரீராம் என முழங்கி வெற்றி பெற்றான்.

மமதை கொண்ட ராவணன், நரேந்த்ரதாசன் அனுமன் வாலில் வைத்த நெருப்பு, லங்கையைச் சுட்டது.   கண்ணெதிரே தனது கோட்டை தகர்ந்தது பொறுக்காமல் மேலும் கோபாவேசமானான் மமதன் ராவணன்.

அவனது அமைச்சரவையில் இருந்த அவன் தம்பி மற்றும் நான்கு அமைச்சர்களும் “ஜய் ஸ்ரீராம்” என்று கூறி, நரேந்த்ரன் ராமனின் திருவடித் தாமரைகளில் அடைக்கலம் புகுந்தனர்.   “அங்கதன் முதலானோரும் “அகந்தை கொள்ளாதே” என்று மமதா உருக்கொண்ட ராவணனுக்கு உபதேசித்தனர்”.   இது எதுவும் பயனளிக்கவில்லை.   தன் ராஜ்ஜியத்தில் எவராவது ராமன் பேரைச் சொன்னால், அவர்களுக்குக் கடும் தண்டனையும் அளித்தான்.

தனக்கிருந்த இருபது காதுகளில் ஒரு காதில் கூட “ஜய் ஸ்ரீராம்” என்னும் ராமநாமம் விழக்கூடாது எனும் மமதையில் இருந்த ராவணன் முடிவு, இறுதியில் என்னவானது என்பதை  நாமறிவோமல்லவா! ராமனின் பெருமைக்கு முன்பாக, ராவணின் மமதை த்ருணமூலம்!!

அதிகார வர்க்கமும், ஆணவமும், ஐச்வர்ய மமதையும் கொண்டுள்ள ராவணின் த்ரிணமூலமான(புல்லுக்குச் சமமான) அமைச்சரவையிலிருந்து, விபீஷணன், நான்கு அமைச்சர்களுடன் வெளிநடப்பு செய்தான். அதாவது, ஜய் ஸ்ரீராம் என்று கூறியபடி,  நரேந்த்ரனாகிய ராமபிரான் திருவடித் தாமரைகளில், பாதுகாப்பு வேண்டி, அடைக்கலம் புகுந்தான்!

எனவே நரேந்த்ரன் ராமனின் தாமரைப் பாதங்களைத் தஞ்சமாக அடைந்து மமதையை ஒழித்து மகிழ்ந்திடலாம்.

                                  ஜய் ஸ்ரீராம் 🙏

இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

#JaiShriram….Downfall of #Mamata (arrogance)

When we use words like “me” or “mine”, it denotes selfishness and our elders say it is akin to digging our own grave. In Sanskrit, there are two words – “Aham” and “Mama” that denote selfishness and through it arrogance and foolishness.  When you think that you’re everything and the world revolves around you, it leads to arrogance. In turn, this will make you do many negative things like not giving respect to elders, failing to acknowledge the achievements of others, and refusing to accept the wise words of the learned. If you have to give a single word to all these negativity, it is called “Mamata!”

There are many meanings to this word Mamata and some of them are arrogance, haughtiness, and indifference.  When a person doesn’t respect others and even refuses to hear the name of God due to arrogance, that quality is known as “Mamata.”

Many people with this “Mamata” have perished. In fact, we can come up with so many different names both from our lives as well as from our history and puranas. Probably, the two most prominent people among them are Duryodhana and Ravana. Both of them are epitomes of “Mamata.”

They were very arrogant and refused to bow down even at the time of their death. They believed in their greatness and this is what eventually lead to their downfall as well. Out of the two, Ravana is the worst as he was full of conceit, lust, arrogance, and more.

Once, Hanuman, the greatest devotee of Narendra alias Rama, crossed the great ocean and reached the gates of Lanka by chanting the words “Jai Shriram.” He surveyed the city from Trikuta hill and every step he took from there brought him victory because he kept chanting the words “Jai Shriram.”

The arrogant Ravana decided to punish Hanuman and to this end, he lighted a fire on Hanuman’s tail. But the result was something that he didn’t expect. He saw his fort go up in flames right before his own eyes and this angered him further and made him do many unthinkable acts.

Vibhishana was Ravana’s brother and one of his trusted ministers. Seeing this foolishness of Ravana, Vibhishana and four other ministers left Lanka and took refuge at Narendra (Rama’s) holy feet. Before leaving, they advised Ravana to give up his “Mamatha” and take the path of righteousness. But Ravana never budged. In fact, he even said that whoever uttered the name of Rama will be prosecuted in his kingdom.

He didn’t even want to hear the words “Jai Shriram” because he was too arrogant for it. We all know what happened in the end. Ravana’s Mamata was annihilated while Narendra’s glory reached new heights.

Just like how Vibhishana left the arrogant Ravana and took refuge in the holy feet of Narendra, let us also give up our Mamata and pray to Lord Rama to take us into His fold.

Jai Shriram

Please note: This article has nothing to do with politics

Translation done by the students of Sri APN Swami.

Sri #APNSwami #Writes #Trending | சின்னதம்பி கும்கியா? | Save Chinnathambi

Note: Scroll down to read the article in Tamil and in English.

                   #சின்னதம்பி கும்கியா?

     அதுவொரு அழகான காடு.   அதற்கு பத்மவனம் என்பது பெயர்.   நல் பூந்தோட்டங்கள் நிறைந்தும், சுவையான தண்ணீர் வசதிகளுடனும் கூடிய அந்தக் காட்டில், கூட்டமாக பல யானைகள் வசித்து வந்தன.   செழுமையான கரும்புகள், இளம் மூங்கில் குருத்துக்கள் என தங்களின் விருப்பமான உணவுகளை உண்டு களித்திருந்தன.   அந்தக் காட்டில் அவைகளை கட்டுப்படுத்துபவர்களே இல்லை.   ஆனந்தமான ஆகாரத்துடன், ஆரோக்யமான சூழலில்,  அமைதியான வாழ்க்கையில் திளைத்துக் கொண்டிருந்த அவைகளுக்கு, சமீபகாலமாக பல சோதனைகள் உண்டாயின.

    மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டி காடுகளை அழிக்கத் தொடங்கிவிட்டனர்.  அரசாங்கமும் இயற்கையின் இந்தப் பேரழிவைக் கண்டு தடுக்க முயல்வதாகக் காணோம்.   இதைத் தேடிச் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் ஆக்ரமிக்கப்பட்டன.   உணவும், குடிநீரும் இல்லாமல் யானைகள் பெரும் துயரத்தில் தள்ளப்பட்டன.   கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை எழில் கொஞ்சும் காட்டின் பரப்பளவு சுருங்க ஆரம்பித்தது.   நீர் ஆதாரத்திற்கான வழிகள் அடைபட்டன.   இவற்றினிடையே மீண்டுமொரு பெரும் விபரீதம் விளைந்தது.

     ஒருநாள் நகரத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் பெரும் கயிறு, மிகப்பெரிய யந்திரங்கள், கோடரி, வில், கடப்பாறை முதலிய ஆயுதங்களுடன் காட்டிற்கு வந்தனர்.   யானைக் கூட்டம் பயந்தது. தங்களுக்கு நேர உள்ள பெரும் ஆபத்தினை உணர்ந்தன யானைகள்.

     சில வயது முதிர்ந்த யானைகள் உடனடியாக ஒரு கூட்டத்தை கூட்டின.   எம் இன மக்களே! இஃதொரு இன மான எழுச்சிப் போராட்டம்! நம் வாழ்வாதாரத்தை அழித்த கயவர் கூட்டம் இப்போது மொத்தமாக நம் இனத்தையே அழிக்க வந்துள்ளனர்.   ஆண்டாண்டு காலமாக இவர்களின் அடக்குமுறையில் நாம் ஒடுக்கப்பட்டு வந்துள்ளோம்.   இதோ! பெரும் கயிறுகள், நெருப்பு, யந்த்ரம், வாள், வேல் என அனைத்தையும் கொண்டு நம்மை அடக்க முயல்கின்றனர்.   வீரம் விளைந்த மண்ணில் பிறந்த நாம் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம்.   ஆனால் நம்பிக்கை த்ரோகத்தைத்தான் தாங்க முடியாது.”

    இவ்விதம் துதிக்கையை உயரத் தூக்கி வீர முழக்கமிட்ட யானைகள், மேலும் கூறின:  இங்கே பாருங்கள்! நம்மைப் பிடிக்க நம் இனத்தவர்களே உதவி செய்கின்றனர்! பெரும் பலசாலிகளாக இருந்தும், மக்களால் பிடிக்கப்பட்டு, பழக்கப்பட்டு, அவர்களின் கட்டளைப்படி நடக்கும் இந்த பழகிய (கும்கி) யானைகள்தான் ஆபத்து மிகுந்தவை.   இவைகள், நம்மைப் பிடிக்கும் வழிமுறைகளை மனிதருக்குக் காண்பித்துக் கொடுக்கின்றன.   இந்தப் பழகிய (கும்கி) யானைகளின் துணையில்லையென்றால் மனிதர்களால் நம்மை நெருங்கவே முடியாது.   இந்த உலகில் பங்காளிகள்தான் பெரும் பகையாளிகள் என்று வெகு அழகாக உபதேசித்தன.

     அதனால்தான் பங்காளிகளை (உறவுகளை) நம்பலாகாது.   “ஏ விபீஷணா!! நீயும் அதுபோன்றவன்தான்.   என்னைப் பிடிப்பதற்காக ராமனுக்கு உதவி செய்கிறாய் என்று ராவணன் விபீஷணனைப் பார்த்து வசை பாடினான்.   இந்த அழகான கும்கி யானை கதையைச் சொன்னவன் இலங்கேச்வரனாகிய ராவணன் (யுத்த காண்டம் – 16ம் ஸர்கம்).   ராவணனுடைய இரண்டு தம்பிகளில் பெரிய தம்பி கும்பகர்ணன்;   சின்ன தம்பி விபீஷணன்.   தன் சின்ன தம்பியை,  ராமன் பழக்கிய கும்கி யானையாக ராவணன் வர்ணித்தான். இதனால் மனம் நொந்த சின்ன தம்பி விபீஷணன், ராமனிடம் அடைக்கலமானான்.   ராமனும் கடற்கரையில் Save சின்னதம்பி  #SaveChinnathambhi விபீஷணனைக் காப்பாற்றுவேன் என்றான்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Save Chinnathambi

This is an English translation of the article சின்னதம்பி கும்கியா? written by Sri APN Swami in Tamil. The translation was done by his sishyas. Click here to read the original Tamil article.

It was a beautiful forest called Padmavanam with lots of vegetation and copious water sources. A group of elephants lived there. They spent their time eating their favorite foods such as juicy sugarcane and tender bamboo shoots, as there was no one to control them. So, these elephants were living a peaceful life in a good environment.

But in the recent past, they had to face some difficulties.

People started destroying forests to make way for human habitation. Even the government did not seem to stop this destruction.

All the paths of the elephant were confiscated by humans, and this made them suffer from lack of food and water. Little by little, the acreage of forests began to shrink. Water canals and the overall flow was also restricted. In the midst of all this, the elephants faced yet another huge blow.

One day, a group of men came to the forest. They were carrying axes, crowbar and other weapons. They even brought large machines with them. Elephants understood what was coming and they shivered in fright.

The older elephants in the group called for a quick meeting. “My dear elephants. This is a fight for our survival. Earlier, men cleared our homes and now, they have come to wipe us off once for all. For many generations, we have been curbed by their supremacy. Now, they have come with machines and weapons to control us. As residents of this Mother Earth, we can’t take this atrocity, especially this violation of trust.”

Hearing this, all elephants lifted their trunk and trumpeted loudly. A few wise elephants said, “See our own species is being used to control us. The biggest danger is from elephants that have been captured and trained (Kumkis) to control us. These Kumkis(trained elephants) are showing humans how to fight and win over us. Without the help of these Kumkis, humans cannot even come near us. In this world, our relatives are our biggest enemies.”

This is why we should never trust our relatives completely. “Hey Vibishana! You’re also like this Kumki because you’re helping Rama to capture me”, said Ravana.

    The person who said this story of Kumki elephant is none other than the Lord of Lanka, Ravana (Yuddha Kandam – 16th sargam).

Ravana had two brothers – the elder one is Kumbakarna and the younger one is Vibhishana. Ravana described Vibishana as Rama’s trained Kumki elephant. Hearing this, the dejected Vibishana left Ravana and surrendered to Rama.

In turn, Rama also took an oath to “Save this younger brother (chinnathambi).” –  #SaveChinnathambhi

–Translation by Sri APN Swami’s Shishyas based on the original Tamil article by Sri #APNSwami

#SaveChinnathambhi

Sri .APN Swami

Sri #APNSwami #Writes #Article | அனுமானுக்கு வடை மாலை / வெற்றிலை மாலை ஏன்?

அனுமானுக்கு வடை மாலை  /  வெற்றிலை மாலை ஏன்?

     இது குறித்து பலரும் என்னிடம் கேள்விகள் கேட்பதுண்டு.   சில சமயம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் பதில் சொன்னாலும், இது குறித்து முக்யமான தகவலை இங்கு பரிமாறிக் கொள்கிறேன்.   ஸ்ரீமத் வால்மீகி ராமாயண மாகாத்மியம், ஸ்காந்த உப புராணத்தில் சொல்லப்படுகிறது.

    ஒவ்வொரு விதமான பலன்களை விரும்புபவர்க்கு, ராமாயணத்தின் ஒவ்வொருவிதமான பாராயண முறைகள் சொல்லப்படுகின்றன ஜோதிட சாத்திரத்தின்படியும் தசாபுத்திகளுக்கு இந்நூலில் பாராயணமுறை காண்பிக்கப்படுகிறது.   இதற்குரிய அட்டவணையும் தரப்படுகிறது.   ஒரு மாத பாராயணம், இருபத்தியேழு நாட்களில் பாராயணம், ஒரு வாரத்தில் பாராயணம் என பலவிதமான பாராயண முறைகள் இந்நூலில் உள்ளன.

Note : How to do Ramayana Paarayanam refer “Srimadh Ramayana Paarayana Kramam” supplement published in SriNrusimhaPriya by Sri APN Swami. 

    அதுதவிர, ஒவ்வொரு கட்டம் (நிகழ்வு) படிக்கப்படும்போதும், என்னென்ன நிவேதனம் செய்ய வேண்டும் என்பது குறித்துக் குறிப்புகளும் உண்டு. அதில்தான் வடை, வெற்றிலை குறித்து விளக்கங்கள் உள்ளன.

     கிஷ்கிந்தா காண்டத்தில் மூன்றாவது ஸர்கம் பம்பா நதிக்கரையில் அனுமான் ராமபிரானைக் காண்கிறார்.   இதொரு ஆச்சர்யமான ஸர்கம். அனுமன் ராமனைப் போற்றுவதும், ராமன் அனுமனைப் போற்றுவதையும் இங்கு காணலாம். இந்த ஸர்கம் பாராயணம் செய்தால் நெய்யில் பொரித்த அறுபத்திநான்கு வடைகளை நிவேதனம் செய்ய வேண்டுமாம்.

பம்பாதீரே ஹநூமதா ராகவஸ்ய ஸமாகமே |

மாஷா பூபாந் க்ருதே பக்வாந் சது:ஶஷ்டிம் நிவேதயேத் ||

     அதேபோன்று, சுந்தரகாண்டத்தில், அனுமான் சீதையைக் காணும் சமயம் (15ம் ஸர்கம்), புளியோதரையுடன் தாம்பூலத்தை நிவேதனம் செய்து சம்ர்ப்பிக்க வேண்டும்.

ஹநூமஸ்து ஜாநக்யா தர்சநே ஸோபதம்சகம் |

ஆன்னம் அம்ல ரஸோபேதம் தாம்பூலம் ச நிவேதயேத் ||

என்றுள்ளது.  ஸ்ரீராமசந்த்ரமூர்த்திக்கு இவைகளை நிவேதனம் செய்யச் சொன்னாலும், ப்ரதான நாயகனாகிய அனுமானுக்கு ஸமர்ப்பிப்பது வழக்கத்தில் வந்துள்ளதாகத் தெரிகிறது.

      இதுதவிர ப்ரமாணங்களின் அடிப்படையில் வேறு கதைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்.

     “சீதை வெற்றிலைக் கொடியிலிருந்து வெற்றிலை பறித்து அனுமானுக்கு மாலையிட்டாள்” என்பதை சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.  ஏனெனில் வ்யாபாரிகளைத் தவிர மற்றவர்கள் கொடியிலிருந்து நேரடியாக வெற்றிலை பறித்தால் தோஷம் என்பது சாஸ்திரம்.   தனக்கும், அனுமனுக்கும் தோஷம் விளைவிக்கும் இச்செயலை சாஸ்திரமறிந்த சீதை செய்திருக்க முடியாது.

     இதிலும் பெரியோர்கள் இசைந்த ப்ரமாணம் இருப்பின் தெரிவித்திட வேண்டுகிறேன்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri APN Swami.

Sri #APNSwami #Writes #Trending | சீதை விடுத்த சவால் #10YearsChallenge

சீதை விடுத்த சவால்

Ram’s #10YearsChallenge

ஸ்ரீமத்ராமாயணத்தில் ராமன் காட்டிற்கு கிளம்பும் பொழுது, தானும் உடன் வருவேன் என்று சீதாதேவி பலபடியாக நிர்பந்தம் செய்கின்றாள். ராமன், காட்டில் உள்ள கஷ்டங்களை எடுத்துக் கூறியும், சீதை பிடிவாதமாக தான் உடன் வருவேன் என்று நிர்பந்தித்து ராமபிரானிடத்தில் ஒரு விஷயத்தை கூறுகிறாள்.

“ஹே ராமா! உன் தந்தையார் அழைத்தபோது, நீ சென்று அவரை பார்த்து விட்டு வந்தாய் அல்லவா?  இது ஒரு முகூர்த்த காலம். அதாவது,  மிகக் குறைந்த ஒரு கால அவகாசம். இந்த சமயத்தில் கூட உன்னுடைய பிரிவை பொறுக்க முடியாமல் தவிக்கும் நான்,  எவ்விதம் உன்னை பிரிந்து பத்து ஆண்டுகளும், மூன்று ஆண்டுகளும், ஒரு ஆண்டும் மொத்தம் பதினான்கு ஆண்டுகள் வசிக்க முடியும்” என்கிறாள்?

இங்கே ராமனிடத்தில் சீதை சொல்லும் இந்த பதினான்கு ஆண்டுகளின் கணக்கு மிக விசித்திரமாய் அமைந்திருக்கிறது. “ஒட்டு மொத்தமாக பதினான்கு ஆண்டுகள் உன்னை பிரிந்து, எப்படி இருப்பேன்?” என்று கேட்கவேண்டி இருக்க,  பத்து ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், ஒரு ஆண்டு என்று தனித்தனியாக அவள் குறிப்பிடுகிறாள். அப்படியானால் இதன் பின்னனியில், சீதை ராமனிடத்தில் எதையோ சொல்ல வருகிறாள். அதாவது இங்கே எதையோ ராமனுக்கு மட்டும் புரியும் படி சீதை சொல்லுகிறாள் என்பதை நாம் உணரலாம்.

இனி நாம் ஆரண்ய காண்டத்திற்கு வரலாம்.

ஆரண்ய காண்டத்தில் முதன் முதலில் ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் உள்ளே நுழைகிறார்கள். அப்பொழுது, பல மஹரிஷிகள் வந்து, பெருமானிடத்தில் சரணாகதி செய்கிறார்கள். “ஹே ராமா! காட்டில் இருந்தாலும் ராஜ்ஜியத்தில் இருந்தாலும், நீயன்றோ என்றுமே எங்கள் தலைவன்.” என்பதை அந்த மஹரிஷிகள் தெரிவிக்கின்றார்கள். இப்படி மஹரிஷிகள் ராமபிரானிடத்தில் சரணாகதி செய்கிறார்கள்.

அதன் பின்னர் ‘விராத வதம்’. அதாவது விராதன் சீதையை கவர்ந்து செல்கிறான்.  பின்னர் ராம லக்ஷ்மணர்களை தூக்கிச் செல்கிறான். அந்த ராம லட்சுமணர்கள் விராதனை வதம் செய்கிறார்கள். சாபத்தினாலே கோரமான உருவம் கொண்ட விராதன், ராமபிரானால் தன் நிலையுணர்ந்து அதாவது தனக்கு சாப விமோசனம் ஏற்பட்டு,  பெருமாளை ஸ்தோத்திரம்  செய்கிறான்.

அதற்குப் பிறகு, சரபங்கருடைய ஆசிரமத்திற்கு செல்கிறார்கள். ராமனை சேவித்துவிட்டு சரபங்கர் தன் தேகத் தியாகம் செய்கிறார். அவர் சொர்க்கத்திற்க்குச் செல்வதை ராம லட்சுமணர் சீதை பார்க்கிறார்கள். இது முடிந்து, மறுபடியும் ஆறாவது சர்க்க த்தில் அனைத்து மஹரிஷிகளும் வந்து – தண்டகாரண்யம், பஞ்சவடி, சித்திரக்கூடம் போன்ற இடங்களில் உள்ளதான அனைத்து மஹரிஷிகளும்  ஒன்று திரண்டு வந்து ராமனிடத்தில் மீண்டும் சரணாகதி செய்கின்றார்கள். அப்பொழுது ராமபிரான் அவர்களை தான் காப்பதாக அபயப் பிரதானம் செய்கிறார். ராக்ஷஸர்களை வதம் செய்து, மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் அங்கே ப்ரதிஞை செய்தான்.

அதன் பின்னர் அவர்கள் மூவரும் சுதீக்ஷணருடைய ஆசிரமத்திற்கு செல்கின்றார்கள். அங்கே அழகியதான அந்த ஆசிரமத்தில், அவர்கள் சில காலம் ஆனந்தமாக வசிக்கின்றார்கள்.  பின்னர் சுதீக்ஷணர் இடத்தில் விடைபெற்றுக்கொண்டு ராமன் கிளம்புகிறான். அப்பொழுது சீதாதேவி ராம லக்ஷ்மணர்களுக்கு வில் மற்றும் கூர்மையான அம்புகள் இவற்றை எடுத்து கொடுக்கிறாள். அழகியதான வில்லை கையில் ஏந்தியவர்களான இவர்கள் இருவரும், சீதையுடன் கிளம்பினார்கள் என்று வால்மீகி அங்கே வர்ணிக்கிறார்.

பின்னர், ஒன்பதாவது சர்க்கத்தில், ப்ரயாணத்தில்  அவர்கள் தனியாக இருக்கும் பொழுது ஏறத்தாழ ராமனும் சீதையும் தனிமையில் இருக்கக்கூடிய சந்தர்ப்பம் என்பதாக நாம் வைத்துக் கொள்ளலாம். சீதை ராமனிடத்தில் மெதுவாக பேச ஆரம்பிக்கிறாள்.

“ஹே ராமா!  நீ காட்டிற்கு வரும்பொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த காட்டில் அமைதியான ஒரு வாழ்க்கை நமக்கு  கிடைக்கப்போகின்றது  எனும் ஆனந்தத்தில் உன்னுடன் வந்தேன்.  ஆனால், தற்போது வில்லையும் அம்பையும் கையில் ஏந்தியிருப்பதை பார்க்கும்போது என் மனம் வேதனைப்படுகிறது.  நல்ல மஹரிஷிகளும் தபோதனத்தனர்களும் மஹான்களும் நிறைந்திருக்கக்கூடிய காடு இது. இந்தக் காட்டில் நாம் பரம சுகமாக வசித்து வருகிறோம்.  நீ மஹரிஷிகளுக்கு அபய ப்ரதானம் செய்ததை நான் பார்த்தேன். ராமா நான் சிறு வயதிலேயே உன்னை மணந்து கொண்டு உன்னுடன் வந்துவிட்டேன். உனக்கு தர்மத்தை நான் உறைக்கலாகாது,  இருந்தாலும் என் மனதில் பட்டதை சொல்கிறேன். நீயோ உயர்ந்தவன். ஒரு பொழுதும் பொய் பேச மாட்டாய். பிறர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாய். அது போன்றே ஜீவ காருண்யம் மிக்கவன் அல்லவா? அத்தகைய நீ, நமக்கு எவ்வித துன்பமும் விளைவிக்காத ராக்ஷஸர்களுக்கு, அதாவது நம்மை துன்புறுத்தாத ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று  ப்ரதிக்ஞை செய்துள்ளாய் அல்லவா? மஹரிஷிகளை காப்பாற்ற வேண்டியது தர்மம் என்றால் கூட, நமக்கு எந்த தீங்கும் இழைக்காத அந்த ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று, நீ சொல்லியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  ராமா! இந்த கூர்மையான வில், அம்பு கையில் வைத்திருந்தால் எவரையாவது அடிக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அமைதியான இந்த ஆரண்யத்தில் எதற்காக அதிரடியாக ஆயுதங்கள்?  ஹே நாதா! பெண்மையின் புத்தியினால் நான் உன்னிடத்தில் சில வார்த்தைகள் பேசி விட்டேன். உண்மையில் உனக்கு தர்மத்தை சொல்வதற்கு யார் சமர்த்தர்கள்?  ஒருவேளை நான் சொல்லும் வார்த்தையில் ஒப்புக்கொள்ளும்படியான விஷயங்கள் இருந்தது என்றால், எல்லா விதத்திலும் உனக்கு தகுந்தவனாக உள்ள இளையபெருமாளாம் லக்ஷ்மணனுடன் ஆலோசித்து நீ தீர்மானம் செய்வாயாக” என்று மெதுவாக ராமனிடத்தில் தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைத்தாள்.

இதன் மூலம்,  என்ன தெரிகிறது என்றால், மஹரிஷிகளை ரக்ஷிப்பதாக ராமன் செய்த சத்திய பிரதிஞை, ராக்ஷஸர்களை கொல்வதற்கு காரணமாகிறது என்னும் காரணத்தினால், அனாவசியமாக  அவர்களை கொல்வது தகாது என்று சீதை தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதை நாம் இங்கே அறியலாம்.

     உண்மையில் ராமனின் சரணாகத ரக்ஷகத்தின் உறுதியை சீதை சோதிக்கிறாள்.  Challenge!

அப்படி பொருள் பதிந்த வார்த்தைகளை சீதாதேவி தொடுத்து, ராமன் பதில் சொல்வதற்காக காத்திருந்தாள். அதற்கு அடுத்த சர்கத்தில், ராமன் பதிலுரைக்கிறான்.

“பெண்ணே! நீ என் மனதிற்கு இனியவளே! என்றுமே என் நன்மையில் நோக்குடையவள். என் மீது உனக்குள்ள ப்ரேமம் அலாதியானது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். ஆனால் மஹரிஷிகளை, கண்டாய் அல்லவா?  அவர்கள் ஒவ்வொருத்தரும், எவ்வளவு துன்பத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள் என்று பார்த்தாயா? ராக்ஷஸர்கள் பலம் வாய்ந்தவர்களாக, இந்த மஹரிஷிகளை எல்லாம் பெரும் துன்பத்தில் உட்படுத்தி வருகிறார்கள். அவயவங்களை இழந்தும், ஆச்ரமங்களை இழந்தும், மஹரிஷிகள் துன்பப்படுகிறார்கள். ஆனால், அதே சமயம் தபோதனர்களான அவர்கள், காமக்ரோதங்களுக்கு வசப்பட்டு அந்த ராக்ஷஸர்களை சபித்து விடவில்லை. ஏன் தெரியுமா?  தங்கள் தவ வலிமையை சேமித்து வைத்துக் கொண்டு, ப்ரஹ்மலோகத்தை அடைவதற்காக அவர்கள் காத்திருக்கின்றார்கள். அப்பொழுது என்னை போன்ற க்ஷத்ரியர்கள்,  தபோதனர்களை, சாதுக்களை ரக்ஷிக்க வேண்டாமா?  சீதை, என் உயிரை விட்டாலும் விடுவேன், என் உயிரினும் மேலான உன்னை விட்டாலும் விடுவேன், இதோ லக்ஷ்மணன், பரத, க்ஷத்ருக்குநர்களை விட்டாலும் விடுவேன், ஒரு பொழுதும் சாதுக்களை ரக்ஷிக்கிறேன் என்று சொன்ன என் வார்த்தையை, வாக்குறுதியை கை விடமாட்டேன்” என்று ராமபிரான் சூளுரைத்தான்.

அதன் பின்னர், சீதா தேவி எதுவும் பேசவில்லை. சீதை ராமனின் உறுதி கண்டு வியந்தாள்.

பின்னர் மீண்டும் வில்லுடன் கூடிய ராமன் அங்கிருந்து அகஸ்தியர் ஆச்ரமம் நோக்கி புறப்படுகிறான். இங்கு தான் ப்ரணவத்தின் அர்த்தமாக, அதாவது “அ, உ, ம”  என்பதை விளக்கும் வகையில், “அ” என்பதின்  பொருளாக  ராமனும், “உ” என்பதின்  பொருளாக சீதையும், “ம” என்பதின்  பொருளாக லக்ஷ்மணனும், அந்த காட்டில் நுழைந்ததை வால்மீகி வர்ணிக்கிறார். வால்மீகியால் சொல்லப்படும் அந்த அற்புதமான ச்லோகம்

அக்ரத: ப்ரயயௌ ராம: ஸீதா மத்யே ஸூமத்யமா

ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணி: லக்ஷ்மண: அனுஜகாம ஹ

ஸ்வாமி வேதாந்த தேசிகனின் மாமா அப்புள்ளார் ப்ரணவத்தின் பொருளாக நமக்கு இந்த ச்லோகத்தை விளக்கி அருளுகிறார். இப்படி வால்மீகி “ஹ!” என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு ராமன் முன்னேயும், அவரை தொடர்ந்து சீதை நடுவிலும், இலக்குவன் மூன்றாவதாக சென்றனர்.

     அகஸ்தியர் ஆச்ரமத்தில், மஹரிஷியின் விசேஷங்களை எல்லாம் கேள்விப்பட்டு ஆனந்தம் அடைகின்றார்கள். வாதாபி இல்வலன் என்னும் அசுரர்களை அகஸ்தியர் அழித்த ப்ரபாவத்தையும், விந்தியமலையின் கர்வத்தை அகஸ்தியர் அடக்கியதையும், சமுத்திரத்தின் தண்ணீரை அகஸ்தியர் ஆசமனம்  செய்த கதையையும் அறிந்து, இவர்கள் மிகுந்த ஆச்சர்யம் அடைகிறார்கள். அகஸ்தியர் இவர்களுக்கு கோதண்டம் என்னும் வில்லையும், தெய்வீக பாணங்களையும் அளிக்கிறார். பின்னர் அவர்கள் பஞ்சவடிக்கு செல்கிறார்கள்.

இந்த இடைப்பட்ட காலங்களில், பல மஹரிஷிகளின் ஆச்ரமங்களில் ராமா லக்ஷ்மண சீதை வசித்து வருகிறார்கள். இப்படியாக ஒரு பத்து வருடம் கழிந்து விடுகிறது. பின்னர் அவர்கள் பஞ்சவடிக்கு செல்கிறார்கள்.  அங்கே ஜடாயுவை முதலில் காண்கின்றனர். சில காலம் பஞ்சவடியில் வசிக்கும் பொழுது தான் சூர்ப்பனகை வருகிறாள். அந்த சூர்ப்பனகை, ராமனிடத்தில் தன் காதலை தெரிவிக்கின்றாள். லக்ஷ்மணனால் மான பங்கம் செய்யப்படுகிறாள். அதன் பின்னர் கர தூஷணர்கள் வருகிறார்கள். ராமபிரான் தான் தனி ஒருவனாகவே கர தூஷணர்களை எதிர்த்து வெற்றி பெறுகின்றான். இதுவரையிலும் நாம் இங்கே நிறுத்திக்கொள்ளலாம்.

இனி சீதை ராமனுடன் காட்டுக்கு வருவேன் என்று சொன்ன சமயத்தில் சொன்ன ச்லோகத்தின் பொருளை மறுபடியும் ஆராயலாம்.   ஒரு வேளை  இது தான் அந்த #10yearChallenge ஆக  இருக்குமோ?

அதாவது சீதை முதலில் சொன்ன வார்த்தை “தந்தையை பார்க்க சென்ற சமயத்தில் கூட உன்னுடைய பிரிவை பொறுக்க முடியாமல் தவிக்கும் நான்,  எவ்விதம் உன்னை பிரிந்து பத்து ஆண்டுகளும், மூன்று ஆண்டுகளும், ஒரு ஆண்டும் மொத்தம் பதினான்கு ஆண்டுகள் பிரிந்து இருக்க முடியம்?” என்பதாகும்.

ஸ்ரீராமபிரான் சரணாகத ஸம்ரக்ஷகன். சரணமாக அடைக்கலம் வந்தவர்களை காப்பாற்றுபவன். அவனுடைய அந்த விரதங்களில் பரிபூரணமான ஒத்துழைப்பு நல்கி, அனைவரும் பெருமாளை அணுகும் படி செய்பவள் மங்கள தேவதையான சீதா தேவி.

இவர்கள் இருவரும் வைகுண்டத்திலிருந்து பூலோகத்தில் அவதரிக்க கிளம்புவதற்கு முன்னதாக, பூலோகத்தில் ராமாவதாரத்தில் என்ன என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்து கொண்டார்கள். அதன் படி, சீதை ஜனகருக்கு பிறக்க வேண்டியது, ராமபிரான் வில்லை முறித்து அவளை மணம் முடிக்கவேண்டியது, பின்னர் பன்னிரெண்டு ஆண்டுகள் அயோத்தியில் இருவரும் சுகமாக வசிக்கவேண்டியது, கைகேயி கேட்ட வரம் என்னும் ஒரு காரணத்தினால் இருவரும் சேர்ந்து காட்டுக்குச்  செல்ல வேண்டியது, மஹரிஷிகள் செய்த தவத்தினால் காட்டில் அவர்களுடன் வசிக்க வேண்டியது, பின்னர் பஞ்சவடியில் மூன்று வருடம் வசிக்க வேண்டியது, பின்னர் ராமனும் சீதையும் பிரிந்து ஒரு வருடம் வசித்தால் தான், ராவணனை கொல்வது என்று ஏற்பாடு.

“இப்படி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூமியில் அவதரித்து, ராமா இப்பொழுது என்னை விட்டு நீ தனியாக சென்றால், இந்த பத்து, மூன்று, ஒன்று என்ற கணக்கின் படியாக எவ்விதம் உன்னால் ராவண வதம் செய்ய முடியும்” என்று சீதை கேட்டதை புரிந்து கொண்ட ராமன், அவளை காட்டிற்கு உடன் அழைத்து வந்தான். என்ன புரிகிறதா?

இதற்கு பிறகு சீதை ராமபிரானை மீண்டும், பரிசை செய்கிறாள். மஹரிஷிகள் தங்களை காக்கும் படி ராமபிரானிடத்தில் சரணாகதி செய்தார்கள். ராக்ஷஸர்களை கொன்று, அவர்களை ரக்ஷிக்கிறேன் என்றான் ராமன். அதை சீதை ஆக்ஷேபம் செய்தாள். “நமக்கு எவ்வித தீங்கும் செய்யாத ராக்ஷஸர்களை கொல்கிறேன் என்று ராமா நீ சொன்னது எவ்விதத்தில் ஏற்புடையது?” என்பது சீதையின் ஆக்ஷேபம் அல்லவா?

உண்மையில் சீதைக்கு உரிய பதிலை ராமபிரான் சொல்லவில்லை. மஹரிஷிகளை காப்பாற்றுவதாக, தான் கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று தான் ராமன் பதில் சொன்னானே தவிர்த்து, நமக்கு தீங்கு செய்யாத ராக்ஷஸர்களை நீ கொல்வது எவ்விதம் தகும் என்றதற்கு ராமபிரான் அங்கு நேரடியாக பதில் சொல்லவில்லை. ஏனென்றால் சீதை கேட்டது முழுக்க முழுக்க சரியான ஒரு கேள்வி. தன்னிடத்தில் உள்ள நற்பண்புகளை பட்டியலிடும் சீதை, முதலில் பொய் உரைக்காதவன் ராமன், பின்னர் பிறர் மனை நோக்காதவன் ராமன், அது போன்றே ஜீவ ஹிம்சை  செய்யாதவன் ராமன் என்று மூன்றாவது காரணத்தை சொல்லி ராக்ஷஸர்களை ஏன் கொல்ல வேண்டும் என்பதாக கேள்வி எழுப்பினாள் அல்லவா? இந்த நுட்பத்தை நன்கு புரிந்து கொண்டவனான ராமன், பத்து  வருடங்கள் பொறுமையாக காத்து இருந்தான்.   சீதையின் கேள்விக்கு பதிலளிக்க ராமன் மேற்கொண்டது #10YearsChallenge .

சரபங்கர், சுதீக்ஷணர், அகஸ்தியர் இது முதலானோர் ஆச்ரமங்களில் ராமபிரான் பத்து ஆண்டுகள் வசித்து வந்தான். இந்த பத்து ஆண்டுகள் எங்குமே ராக்ஷஸ வதம்  சொல்லப்படவில்லை. ஒரு ராக்ஷஸனை கூட ராமபிரான் கொன்றதாக சொல்லப்படவில்லை. பத்து ஆண்டுகள் உருண்டு ஓடின.  ராமபிரான் சத்தியத்தை காப்பாற்ற வேண்டும். அதே சமயம் சீதையின் வார்த்தைக்கும் மதிப்பு அளிக்க வேண்டும். அப்படியானால் எப்படித் தான் ராமன் அதை சமாளித்தான்.

இது உண்மையிலேயே ராமபிரானுக்கு சீதை விடுத்த சவால். ஒரு புறம் உயிரைவிட்டாவது சத்தியத்தை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறான் ராமபிரான். மற்றோரு புறம் சீதை கேட்ட நியாயமான கேள்வி. தனக்கு மிகவும் பிரியமானவளும், தன் உயிரைவிட மேலானவளுமான சீதையின் கேள்விக்கும் மதிப்பளிக்க வேண்டும். இது தான் தர்ம சங்கடம் என்பார்கள் அல்லவா?

ஸ்ரீராமபிரான் நடுவில் அந்த பத்து ஆண்டுகள் பொறுமையாக காத்து இருந்தான். ஏன் ? மஹரிஷிகளின் ஆச்ரமங்களில் ராமபிரான் நல்லதொரு பாடம் பயின்றான் என்று சொன்னாலும் அது மிகையில்லை. பத்து ஆண்டுகள் உருண்டோடின. அகஸ்தியர் ஆச்ரமத்துக்கு சென்றபோது அகஸ்தியர் செய்த சரணாகத ஸம்ரக்ஷணம்,  அவர் தம் சரித்திரத்தின் வாயிலாக பிராட்டிக்கு எடுத்துரைக்கப்பட்டது. வாதாபி இல்வலனர்களை கொன்றது,  விந்திய மலையின் கர்வத்தை அடக்கியது, சமுத்திரத்தை வற்றச்செய்தது அனைத்தும் லோக க்ஷேமத்திற்காக அகஸ்தியர் செய்தது. இதனால் மஹரிஷிகளை சாதுக்களை காப்பாற்றுவதற்கு ராமனின் முயற்சி நியாயப்படுத்தப்பட்டதாகிறது. ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளை சாதுக்கள் நடத்தியுள்ளதை சீதைக்கு எடுத்துரைக்க, ராமன் அகஸ்தியர் ஆச்ரமம் சென்றான் போலும்.

பத்து ஆண்டுகளாக ராக்ஷஸர்களை கொல்லாத  காரணத்தினால், மஹரிஷிகளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை ராமனுக்கு நினைவுறுத்தும் படியும், அடுத்து வரும் யுத்ததிற்கு ராமனை தயார் செய்யும் விதமாக, அகஸ்தியர், வில் மற்றும் அம்புகளையும் அம்பறாத்துணிகளையும் ராமனுக்கு கொடுத்தார்.

சீதையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவனான ராமன், பஞ்சவடிக்கு சென்று அங்கு காத்திருந்தான். முதலில் பத்து வருடங்கள் தண்டகாரண்யத்தில், அடுத்த மூன்று வருடங்கள் சீதை சொன்ன கணக்கின் படியாக, ராக்ஷஸர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் பர்ணசாலை அமைத்து தங்கினர்.

அவன் எதிர்பார்த்தது நடந்தது. சூர்ப்பனகையின் மூலமாக கர தூஷணர்கள் வந்தார்கள். ஒரே சமயத்தில் ஜனஸ்தானத்தில், பதினான்காயிரம் ராக்ஷஸர்கள் ஒன்று கூடினார்கள். அப்பொழுது ராமபிரான் சீதையினிடத்தில் சொல்லாமல் சொன்னான். ஆம், அங்கே சொல்லழகைக் காட்டாமல், ராமன் தன்  செயலழகை காட்டினான்.

“இதோ சீதை, பதினான்காயிரம் ராக்ஷஸர்கள் ஒன்று திரண்டு நம்மை எதிர்க்க வந்திருக்கிறார்கள், பதினான்கு ஆண்டுகள் நாம் காட்டில் வாசிப்பதற்காக கிடைத்த வாய்ப்பு இது. நமக்கு எந்த தீங்கும் செய்யாத ராக்ஷஸர்களை உன் சொற்படி எதுவும் செய்யவில்லை, ஆனால் இப்பொழுது அவர்களாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். நம்மை கொல்ல துணிந்து ஆயுதத்துடன் எதிர் நிற்கிறார்கள். உயர்ந்த க்ஷத்திரியன் தன்  பராக்கிரமத்தை இது போன்ற நேரத்தில் செயல் படுத்த வேண்டுமல்லவா?” என்று தன்  புன்னகையினாலேயே சீதைக்கு புரிய வைத்தான் ராமன்.

பின்னர், தனி ஒருவனாக தான் ஒருவன் மட்டுமே சென்றான். ஏனென்றால் இது அவன் ஒருவனுக்கு மட்டும் விடுக்கப்பட்ட சவால் தானே. அதனால் லக்ஷமணன் இல்லாமல் தான் ஒருவன் மட்டும் சென்று ஜனஸ்தானத்தில் இருந்த பதினான்காயிரம் ராக்ஷஸர்களை வென்று கொன்றான். இதை கண்டதும் ஆனந்தத்தில் திளைத்த சீதாதேவி க்ஷத்ருக்களை ஜயித்தவனுமான , மஹரிஷிகளுக்கு சுகத்தை அளிப்பவனுமான விஜயராகவனாக விளங்கும் ஸ்ரீராமபிரானுக்கு,  பத்து  ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த சவாலை ராமன் ஜயித்ததினாலே, ஓடி வந்து ஆரத்தழுவிக்கொண்டு,  தன் திருமேனியால் ஆரத்தி வழித்தாள். சீதை அந்த ஆனந்த தழுவலை வெற்றி வீரனான ராமனுக்கு பரிசாக அளித்தாள்.

இப்படி #10Yearschallenge ல் வெற்றி பெற்ற ராமன், விஜயராகவன் தானே!

     இப்படி சீதை விடுத்த #10Yearschallenge ல் வெற்றி பெற்ற  விஜயராகவனை சேவித்தால் நாமும் நம் சவால்களில் வெற்றி பெறலாம்.

இப்படிக்கு,

அன்புடன்

ஏபிஎன்

Sri #APNSwami

19-Jan-2019