Sri #APNSwami #Writes #Slokam| on Athi Varadar & Puri Jagannathan | Vikari 2019

கோடிக்கணக்கானபக்தர்களின் இதயத்தை கட்டிப்போட்ட இரண்டு தாருக்கள் [மரங்கள்] பூரி ஜகநாதன் மற்றும் காஞ்சிபுரம் அத்தி வரதர்
இவர்களைப் பற்றிய சிறப்பு ச்லோகங்கள்.

இயற்றிவர்: ஸ்ரீ ஏபின் ஸ்வாமி

ச்லோகம்1
एको हि देव: द्विविधा विभाति नीलाद्रिमध्ये द्विरद्वेन्द्रशैले |
दारुस्वरूप: पुरुषोत्तमोऽसौ देवाधिराज: जगतां पतिस्स: ||

ஏகோஹி தேவ: த்விவிதாவிபாதிநீலாத்ரிமத்யேத்விரதேந்த்ரசைலே|
தாருஸ்வரூப: புருஷோத்தமோSஸௌதேவாதிராஜ: ஜகதாம்பதிஸ்ஸ: ||

பொருள் : புருஷோத்தமனாகிய எம்பெருமான் தாருவாக (மரமாக) நீலாத்ரி எனும் பூரியிலும், யானைமலை எனும் காஞ்சியிலும் ஜகந்நாதன், தேவாதிராஜன் என இரண்டு ரூபங்களாக சேவை சாதிக்கிறான்

ச்லோகம்2
न निंबफलमिच्छन्ति औदुंबरं निषिध्यते |
नीलाद्रौ वारणाद्रौ च जना भुञ्जन्ति संप्रति||

ந நிம்பபலமிச்சந்திஔதும்பரம்நிஷித்யதே|
நீலாத்ரௌவாரணாத்ரௌ ச ஜனாபுஞ்ஜந்திஸம்ப்ரதி||

பொருள் : வேப்பம்பழத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள். அத்திப்பழமோ!
சாஸ்திரத்தினால் விலக்கப்பட்டது. ஆனால் தற்போது நீலாத்ரி எனும் பூரியிலும், வாரணாத்ரி எனும் காஞ்சியிலும் மக்கள் வேம்பில் பழுத்த பலனையும் அத்தியில் விளைந்த பலனையும் விரும்பியுண்கின்றனரே!
பூரி ஜகன்நாதன் – வேப்ப மரம்
காஞ்சிஅத்திவரதர் – அத்தி மரம்
பழம் – பெருமாளின் மூலமாக பலன்கள்.

ச்லோகம் 3

औदुंबर फलं लोके भोक्तुं तावत् निषिध्यते |

रदादुंबर वृक्षस्य चित्रं तत्फलमश्नुते ||

ஔதும்பர பலம் லோகே போக்தும் தாவத் நிஷித்யதே |

வரதாதும்பர வ்ருக்ஷஸ்ய சித்ரம் தத்பலமச்னுதே ||  

பொருள் : அத்திப்பழம் சாப்பிடக் கூடாது என சாஸ்த்ரம் தடுக்கிறது. ஆனால் வரதன் எனும் அத்திமரத்தின் பலனை (பழத்தை), இவ்வுலகம் விரும்பி உண்கிறதே!! இதென்ன விந்தை?!!