Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |உடலால் தனித்திரு ; உள்ளத்தால் இணைந்திரு | Separated by Body, United by Mind

Please note that this article has the tamil version written by Sri APN Swami and the English translation done by his sishyas

உடலால் தனித்திருஉள்ளத்தால் இணைந்திரு

இன்றைய பொழுதில் உலகெங்கும் ஒலிக்கும் உபதேசம் இதுவாகும். கொடிய நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஊரடங்கு அமுலில் உள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகநாடுகளில் பெரும்பான்மையின் நிலைமை இதுதான். மண்பரப்பு முழுவதும் மரணஓலம் நிறையத் தொடங்கியுள்ளது. அரசு இயந்திரங்கள் முழு வீச்சில் செயல்பட்டாலும் இதற்குரிய சௌக்யம் முற்றிலுமாக ஏற்படவில்லை.

பல நாடுகளிலும், மாநிலங்களிலும் சிறைக்கைதிகளையும் விடுவிக்கத் தொடங்கிவிட்டனர்.  அவர்களுக்கு நோய் தொற்று  அதிகமானால் அதன் வீரியத்தைத் தாங்கமுடியாது; எனும் பயம் முக்கிய காரணமாகிறது. உண்மையிலேயே செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்த்து, யாரும் எதையும் செய்வதற்கில்லை.

காவல்துறை, தூய்மை பணியாளர், மருத்துவக்குழுவினர், முக்கிய பொறுப்பிலுள்ள அதிகாரிகள் பலர் என அனைவரின் பாடு   திண்டாட்டமாயுள்ளது. இருப்பினும் இவர்களின் அசராத சேவை போற்றுதலுக்குரியது. நெருக்கடியான இந்த காலகட்டத்திலும் பிறவியின் பெருமை உணராது பழுதாய் பொழுது போக்குவர்களே ஏராளம். நாளைய உதயத்தில் நாட்டின் நிலைமையும், நம் நிலைமையும் என்ன”? என்று அறியாமலேயே விதண்டாவாதங்களைத் தொடருகிறோம். இந்நிலை முழுவதும் மாறிட எம்பெருமானை பிரா ர்த்தனை செய்வதுடன், நம்மாலான சிறு சிறு உதவிகளையும் நாட்டிற்கும், சுற்றத்தவர்க்கும் செய்திடுவோம். குறிப்பாக ஆதரவற்றவர், பசு, பட்சி விலங்கினங்களுக்கும் இயன்றதைச் செய்து வாழ்வளித்திடுவோம்.

இக்கட்டான சூழ்நிலையில் இக் கட்டுடலைத் தனிமைப்படுத்த (கூட்டம் தவிர்த்து) ஆரோக்யம் பேணுவதை அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஆரோக்கியத்தின் காரணம் ஒருபுறமிருக்க, இதிலுள்ளஆன்மிகத்தகவலைக்  காணலாம்  இப்போது.

பகவத் ராமானுஜரின் கொள்கைகளுக்கு விசிஷ்ட அத்வைதம் என்பது பெயர். அதாவது சித்– எனப்படும் அறிவுள்ளஜீவனை அறிய வேண்டும். மேலும் அசித் – எனப்படும் அறிவற்ற இந்த ஸம்ஸாரத்தை அறிய வேண்டும்.

அதாவது அறிவுடையவன் ஆத்மா – (நாம் என்று புரிந்து கொள்ளுங்கள்). அறிவற்றது இந்த உலகம் ( நமது உடல் உட்பட) என்பதை புரிந்து கொள்ளுங்கள். இப்படி உடல், ஆத்மா இவை இரண்டை விட வேறுபட்டவன் பரமாத்மா எனும் ஈஸ்வரன். அவனே ஸ்ரீமத் நாராயணன்.

சரி, இனி அவனுக்கும், ஜீவனாகிய நமக்கும், அறிவற்ற அசேதனம் எனும் உடலுக்கும் என்ன தொடர்பு என்று பார்க்கலாம். அறிவற்ற இந்த உடலுக்கு ஆதாரமானவன் அறிவுடைய ஜீவன். மேலும் அறிவற்ற ( அசேதனமான ) இந்த உடல்போக்யம் எனப்படுகிறது. அதாவது அனுபவிப்பவன் ஜீவன். அனுபவிக்கப்படுவது தேகம் என்று பொருள்.

இப்பொழுது நாம் பார்க்கும் இந்த உலகம் ( தேகம் உட்பட) அனைத்திற்கும் காரணமானவன் பகவானாகிய  ஸ்ரீமந்நாராயணன்.  அவனே அனைத்தையும் படைக்கிறான் இந்த ப்ரபஞ்சம் (உலகம்) பகவானின் தேக மாகிறது. அதாவது எனது உடலுக்கு நான் ஆத்மாவாக (உடலை விட வேறுபட்டவனாக, அதே சமயம் உடலினால் உண்டாகும் அனுபவங்களைப் பெறுபவனாக) இருப்பது போன்று, பகவானும் இந்த பிரபஞ்சத்தை விட வேறுபட்டவனாகவும், ஆனால் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும் விளங்குகிறான்.

தலை சுற்றுகிறதா! இது சற்று கடினமான சாஸ்திரப்பொருள். பலமுறை பெரியோர்களிடம் அடிபணிந்து அறிந்தால் மட்டுமே புரியும். இருந்தும் முயற்சிக்கலாம். படியுங்கள்.

ஆத்மஞ்ஞானிகள் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். ” நான் செய்த புண்ய, பாபத்தின் பலனாக எனக்கு ஒரு உடலின் தொடர்புடன் பிறவி உண்டாகியுள்ளது.  போன பிறவியில் இந்த உடலின் தொடர்பு எனக்கில்லை. மேலும் நான் மரணமடைந்த பின்னரும் எனக்கு இதனுடனாகிய தொடர்பு தொடரப்போவதுமில்லை. அதுவும் தவிர ஆத்மாவாகிய எனக்கு என்றுமே அழிவு இல்லை. அனால் எனது இந்த தேகம் குறிப்பிட்ட காலத்தில் அழிவை சந்திக்கிறது” என்பதை அவர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.  அப்போது உடல் தனித்தது என்பதை உள்ளத்துள் உணர்பவர்களன்றோ அவர்கள்.

இதே வழியில், பிரபஞ்சத்தையும், ஜீவனையும் (என்னையும்) தாங்குபவன் இந்த பரமாத்மா! அவன் ப்ரபஞ்சத்தினுள்ளும் இருக்கிறான். எனக்குள்ளும் இருக்கிறான் என்பதை நன்குணர்ந்தால் பிறவி ரகசியம் புரியும்.

“நானும், இந்த பிரபஞ்சமும் பகவானின் உடல்கள். அப்படியாகில் பகவான் பிரபஞ்சம் எனும் உடலைக்காட்டிலும் தனித்திருப்பவன் ( வேறுபட்டவன்). அதே சமயம், என் உடலுக்குள் நான் இருப்பது போன்று, இந்தப் ப்ரபஞ்சத்திற்குள்ளும், எனக்குள்ளும் அவன் அந்தர்யாமியாக (உள்ளத்தால்) இணைந்திருக்கிறான். அவனை உள்ளத்துக்குள் உணர்வதே பேரின்பம்”.  இது தன் பகவத் ராமானுஜரின் விசிஷ்ட அத்வைத கொள்கை.

அன்பர்களே சாஸ்திரம் அறிந்த ஒரு நல்ல ஆசார்யன் இதிலுள்ள ரகசியங்களை நமக்கு நன்கு விளக்கிக்கூறிடுவார். எனவே அவரின் மூலமாக அறிவதே மேன்மையளிக்கும்.

தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அதிகமான ஆராய்ச்சிகள் செய்யாமல் எளிய முறையில் இக்கருத்தினை விளக்கியுள்ளேன். இதைப்புரிந்துக்கொண்டு நாமும் உடலால் தனித்திருப்போம்“- (தேகம் வேறு, ஆத்மா வேறு என அறிவோம். பிரபஞ்சம் வேறு, பரமாத்மா வேறு என உணருவோம்)

உள்ளத்தால் இணைந்திருப்போம் – (இந்த பிரபஞ்சம், மற்றும் , எனக்குள்ளும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை த்யானம் செய்திடுவோம்)

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

30/03/2020

 

English

Separated by Body, United by Mind

The title is the message that we hear everywhere around the world today and there is a lockdown in place to prevent the spread of this deadly disease. This is not just the case just in India but in a majority of places around the world. Though the government machinery is working in full swing, we are unable to achieve complete success and the death horns are heard everywhere.

Many states have started releasing prisoners from jails to avoid the disease’s spread among jail inmates. In fact, no one knows what to do and hence, there’s nothing much happening on the ground.

Many people working in the essential services sector such as the police, medical professionals, sanitary workers, and important officials are undoubtedly in a difficult position. Still, their extraordinary service deserves heaps of praise and appreciation. But the vast majority are those who waste their time without understanding the purpose of their birth. Without knowing what will happen to us or our nation tomorrow, we’re wasting time in unnecessary arguments. Let us all pray to Emperuman to resolve this problem quickly and in the meantime, let us also do our bit to our nation and neighborhood. Specifically, let’s learn to co-exist with the neglected, cows, animals, and birds.

In these difficult times, the government is continuing to emphasize the benefits of social distancing for the health of every community. With health on one side, let’s explore the philosophy hidden in this practice.

The doctrine propagated by Swami Ramanuja is called Vishishtadvaitam. Its basic tenet is that we have to understand what is Chith (Jeevans who have knowledge) and Achith (the samsaram that doesn’t have knowledge).

In other words, Atma is the one with knowledge (people like us) while the world (including our body) doesn’t have knowledge. Other than these two groups, there is a third person and he is Paramatma, who is none other than Sriman Narayanan.

Let’s now see the relationship between Him, us, and the world. The owner of this unknowledgeable body is Atma. Moreover, the body is bOgam. That is, the person enjoying it is Jeevan and the one that is being enjoyed in the body.

The person responsible for this entire world, including our body, is Sriman Narayanan. Since He is the creator, everything in the world becomes His body. I am the Atma for my body (Atma is different from the body and at the same time, enjoys the benefits that come from the body). Similarly, Perumal is different from the world and at the same time, He is the Atma of the world.

Confusing? Well, this is a difficult philosophy to understand. One must learn from elders to understand its meaning. Still, let’s try to get some clarity on this. Read on.

Atma Jnanis (those who understand everything about the Atma) know that the body that they have got in this birth is due to the results of their past karmas. I did not have any association with this body in my previous birth and after my death, I won’t be having any further association with this body. Moreover, the Atma has no death or destruction, but the body associated with dies at some point in time. When you understand this concept, you’ll know that the Atma and body are two separate entities.

Likewise, Paramatma is someone who holds both the Heevatmas and the world. When you understand that He is inside the world and inside each of us, you’ll realize the purpose of your birth.

“The world and I are Bhagavan’s body and He is a separate entity with respect to the world. Just like how I live inside my body, He also lives inside this world and inside me as an Antaryami. Realizing Him inside each of us is the highest state of bliss. This is the crux of Swami’s Ramanuja’s Vishishtadvaitam. 

Friends, a good acharyan who understands these concepts can explain its intricacies in detail, so you must only learn through such an acharyan.

In the given circumstances, Sri APN Swami has explained this concept as lucidly as possible. For now, let us understand that we are separated by the body, that is, Atma is different from the body and Perumal is different from the world.

At the same time, we’re United by the mind, that is we pray to the Perumal who lives within each of us and the world.

-translation by Sri APN Swami Sishyas

Links to Articles in this Series

9.Foreign போன பெரியோர்கள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | Foreign போன பெரியோர்கள் | Elders who went Abroad

8. கட்டையான கடவுள்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | கட்டையான கடவுள்

7. எதிர்மறையே ஏற்றமாகுமா?

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | எதிர்மறையே ஏற்றமாகுமா?

6. சங்கஜித் –  கூட்டத்தை வென்றவன்

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | சங்கஜித் – கூட்டத்தை வென்றவன்

5. உள்ளே வெளியே |Inside-Outside

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | உள்ளே வெளியே | Inside-Outside

4. ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 | ஆநந்தார்ணவம் | Ocean of Bliss

3. நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

Sri #APNSwami #Writes #Trending |#COVID-19 | நரேந்த்ரன் செய்த நன்மை | The Good Acts of Narendran

2. Pandemic in பரமபதம் ( Paramapadam)

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19|Pandemic in பரமபதம் ( Paramapadam)

1. COVID-19 ( Corona logical – Chronological) | Benefits of Self-Quarantine

Sri #APNSwami #Writes #Trending | #COVID-19 |தனிமையில் இனிமை காணலாம் | Corona logical – Chronological| Benefits of Self-Quarantine