Sri #APNSwami #Writes #Trending |#COVID-19|சமய #Sanjivi

Please note that this article is available in both Tamil (written by Sri APN Swami) and English (translation by his sishyas).

     சமய சஞ்ஜீவி!

 

சில விஷயங்களுக்கு ஒப்புமை சொல்ல இயலாது.  உதாரணமாக ஆகாயத்திற்கு எதை ஒப்புமையாக்குவது. அதே போன்று சமுத்ரத்திற்கு வேறெதெயும் ஈடாகக் கூறமுடியாது.  ராமனுக்கும், ராவணனுக்கும் நடைபெற்ற யுத்தம் எவ்வாறு இருந்தது எனில் “ராம, ராவண யுத்தம் போன்று இருந்தது” என்பர் பெரியோர்.  அதே போன்று தான் தற்போது, நம்முடைய வாழ்க்கைப் போராட்டமும் இதுவரை அனுபவித்திராததாகவும் , வேறெதையும் ஒப்புமையிட்டுச் சொல்ல முடியாததாகவும் பயங்கரமாகவுள்ளது. உலகில் ஒலிக்கும் ஒட்டு மொத்த செய்தித் தொகுப்பில் ஒன்று கூட நல்ல செய்தி இல்லை என்னலாம்.  இன்னமும் எத்தனை நாட்கள் நீடிக்குமோ? எனும் அச்சம் அகலவில்லை.  ஒவ்வொரு வினாடியும் பிரார்த்தனை செய்வதும், எளியோர்க்கு நம்மாலியன்ற உதவிகளைச் செய்வதுமே; தற்போதுள்ள நிலையில் இயலும்.

இதன் நடுவே, சில மருந்துகள் ஓரளவு குணமடைய வழிவகுக்கின்றன எனும் ஆறுதலான செய்தியும் காதில் விழுகிறது.  “அமெரிக்காவைப்பார், ஜப்பானைப்பார் , சீனாவைப்பார், சிங்கப்பூரைப்பார்” என்று பிறந்த நாட்டின் (பாரதத்தின்) பெருமை உணராமல் பேசியவர்கள் கூட வாயடைத்துப் போகும்படியான பல முன்னேற்றங்களை நம் தாய்நாடு கண்டுவருகிறது. இக்கட்டான இந்த சூழலில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவது நம்பிக்கையளிக்கிறது.

குறிப்பாக, “சில நாடுகளுக்கு நம் நாட்டிலிருந்து அவசரகால மருந்துகள் ஏற்றுமதியாகியுள்ளன” என்பதே தற்போதைய Talk of the earth. அதிலும் ப்ரேசில் அதிபரின் வேண்டுகோள் வித்யாசமானது.

ராமாயணம், பாரதம் போன்று தலை சிறந்த இதிகாசங்களையும் அதன் பாத்திரங்களையும் கேலி செய்து, கற்பனை பொய்கள் என்று கொந்தளித்தவர்கள் கூட “தங்கள் காதுகளை நம்ப முடியாமல் நடப்பது நனவா கனவா” என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

“அனுமன் சஞ்சீவி மருந்தைக் கொண்டு வந்து தந்தது போன்று, இந்தியாவிலிருந்து மருந்துகளை அனுப்புங்கள்” என்ற ப்ரேசில் அதிபரின் கருத்தே தற்போது உலக அளவில் Trending.

மருந்துகளை அனுப்புவது பெரிய விஷயமில்லை.  “சமய சஞ்ஜீவியாக” என்றதே ஆச்சரியம்.  நேற்று (08/04/2020) அனுமத் ஜயந்தியாக வட தேசத்தில் கொண்டாடப்படும் நாளில், அனுமானின் சாகசத்தை நினைவுறுத்தி, ராமாயணத்தை மேற்கோள் காட்டி, ப்ரேசில் அதிபர் பேசியது தான் ஆச்சர்யத்தின் உச்சக்கட்டம்.

இனி ராமாயணத்தில் அதன் மகத்துவத்தைக் காணலாம். ராம லக்ஷ்மணர்கள் ப்ரம்மாஸ்திரத்தினால் அடியுண்டு வீழ்கின்றனர். ராவணன் , ராம, லக்ஷ்மணர் இறந்ததாக எண்ணி வெற்றி கொண்டாட்டத்தைத் தொடங்கினார். அப்போது ஜாம்பவான் ஆஞ்சநேயனை அழைத்து சஞ்ஜீவி மூலிகைகளைக் கொண்டுவரச் சொல்கிறார்.

அந்த மூலிகையின் பெருமை என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.  1. ம்ருத சஞ்ஜீவினீ – இறந்தவர்களையும் பிழைக்கவைக்கும் மூலிகை.  2. விசல்யகரணீ –  உயிர் வந்த பின்பு உலாவத் தேவையான சக்தி தரும்.  3. ஸந்தான கரணி –  இவ்விதம் வலிகளை நீக்கியும், உடைந்த அவயவங்களை ஒட்டிக் கொள்ளச் செய்தும், புண்களில் தோல் மூடச் செய்வதும்.  4. ஸாவர்ண்ய கரணீ – ஆறின புண்களின் மேல் வடு(தழும்பு)க்கள் மாறி, பழைய நிறத்தைப் பெற வைப்பது தற்போதுள்ள plastic surgery முறை இது தான்.

இத்தகைய அபூர்வ மூலிகை மலையை அனுமன் இருமுறை சுமந்து வருகிறான். யுத்த காண்டத்தில் இதன் விவரணம். இந்த அரிய மூலிகை வகைகளைத் தெரிந்த ஜாம்பவான் போன்ற மருத்துவர்கள் இப்போது யார் உள்ளாரோ தெரியவில்லை. ஆனால் உயிர்காத்திட தக்க சமயத்தில் இவைகள் அனுமனால் கொண்டு வரப்பட்டன என்பது பேருண்மை.

உயர்ந்த இதிகாசத்தின் உண்மைப்பெருமையை இன்று உலகம் உற்றுப்பார்த்து ஆனந்தமடைகிறது. “சரியான சமயத்தில் கிடைக்கும் இந்திய மருந்தால் தங்களின் மக்கள் உயிர் பிழைப்பர்” எனும் காரணத்தால் “சமய சஞ்ஜீவி” என்றார் ப்ரேசில் அதிபர்.

இதிகாச புராணங்களைப் பழித்து ஓயாமல் ஊளையிடுபவர்கள் நடுவே, உலக அரங்கில் உன்னதமாகத் திகழும் நம் தேசத்தின் ஆன்மீக பொக்கிஷங்கள் என்றுமே நமக்கு சமய சஞ்ஜீவி தான்.
ஜய் ஸ்ரீராம்.

-ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

10/04/2020.

English

Timely Medicine

It is hard to find comparisons for some things like the sky and the ocean. Similarly, the war between Rama and Ravana has no comparison and elders often use the phrase “like the Rama-Ravana war.” Our life is like that today. The miseries and suffering that we’re undergoing today have no equal and it is truly unprecedented. And we don’t even know how long this will continue! The only things we can do today are to pray every minute and to help others as much as we can. 

Amid this calamity, a silver lining is a piece of news that some medicines have the potency to cure this disease. Our country is making rapid strides in this war against the disease and has even stumped those who’ve always fancied countries like America, Japan, China, and Singapore, over their motherland. For the common man, the joint efforts by the state and central governments are truly consoling and give hope.

In particular, the Talk of the Earth is that many advanced countries are exporting some important medicines from India as an emergency measure. Even those who ridiculed our Ramayana and Mahabharata epics as fictitious folklore are astounded by these developments. 

The trending news is the request by the Brazilian President who requests India to send emergency medicines just like how Hanuman brought the Sanjeevi mountain as a cure

Sending medicines is not the big deal here, but the use of the word “Samaya Sanjivi” is significant. We celebrated Hanuman Jayanthi on the 8th of April this year in North India and on this day, the Brazilian President’s expression of Hanuman’s greatness by invoking Ramayana is truly the icing on the cake.

Now, let’s look at the greatness of Ramanyana. Rama and Lakshmana fell unconscious when Brahmastram hit them and Ravana began to celebrate thinking that Rama and Lakshmana were dead. At that time, Jambavan called Hanuman and asked to bring the Sanjivi herb. 

So, what’s so special about this herb?

  1. Mrutha sanjivini – It can bring the dead back to life.
  2. Visalyakarani – Gives energy to the body that has just been brought back to life.
  3. Santana Karani – Removes pain, heals the broken parts, and covers the wounds with new skin.
  4. Saavaranya Karani – Removes the wound marks and replaces it with skin. This is similar to the plastic surgery we have today.

Hanuman carried this mountain with such potent herbs twice. Yuddha kandam explains this in detail. Is there anyone today like Jambavan who understands the potency of our ancient herbs? That we don’t know but the fact remains that Hanuman brought this to save lives.

Today, the world understands the real meaning of our itihasas which are nothing but a depiction of the true incidents that happened many centuries ago. The Brazil President rightly calls this gesture “Samaya Sanjivi” because he believes that the timely medicines sent by India would help to save his people. 

The religious texts of our land that continue to guide us and showcase our true wealth to the world, despite the many criticisms heaped on it, are always the “Samaya Sanjivi” for us.

Jai Shriram.

-Translation by Sri APN Swami Sishyas