Sri APNSwami #Writes #Article| Karthigai Pooradam | HH43rd Devanarvilagam Srimadh Azhagiyasingar Thirunakshatram

இன்று (29/11/2019) கார்த்திகை பூராடம் HH 43 தேவனார்விளாகம் அழகியசிங்கர் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவீரராகவசடகோப யதீந்த்ர மஹாதேசிகன் திருநக்ஷத்திரத்தை முன்னிட்டு அவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் சிறிய தொகுப்பு.

#கார்த்திகை #பூராடம் |#HH 43 | #தேவனார்விளாகம்  #அழகியசிங்கர்|#திருநக்ஷத்திரம்

Scroll down to read the English version.

Scroll down to see rare pictures. Picture courtesy – Sri Nrusimha Priya

            HH43rd pattam Azhagiyasingar

WhatsApp Image 2019-11-29 at 1.32.53 PM

                    தொடர்வதா? விலகுவதா?

தேவனார்விளாகம் ஸ்ரீமதழகியசிங்கர் பம்பாயிலிருந்து புஷ்கர், குருக்ஷேத்ரம், ஹரித்வார், பதரிகாச்ரமம் எழுந்தருள நிச்சயித்திருந்த சமயம் மிகவும் கடுமையான ஸஞ்சாரம். பெரும்பரிவாரத்துடன் பல மைல்கள் நடைப்பயணம் செய்ய வேண்டும். யானை, குதிரை, மாடுகள் என்று ஸ்ரீந்ருஸிம்ஹனின் ஸமஸ்த பரிவாரங்களுடன் பயணத்தை மேற்கொள்வது மிகுந்த ச்ரமத்தை அளிக்கும் என்று பலரும் எண்ணினர்.

கைங்கர்யபரர்கள் (ஸ்ரீசன்னிதியில் கைங்கர்யம் செய்பவர்கள்) உட்பட ஒருவித அச்சம் எல்லோரையும் ஆட்கொண்டிருந்தது நேரிடை யாகவும், ஜாடைமாடையாகவும் அழகிய சிங்கரிடம் இதனை ஒரு சிலர் விண்ணப்பித்திருந்தனர். சில சமயம் ஸ்ரீமதழகிய சிங்கரே மூன்று வேளை திருவாராதனங்களையும் செய்ய வேண்டிய நிர்பந்தமும் உண்டு. இதனால் தேஹத்திற்கு அசௌகர்யம்’ என்றும் சிஷ்யர்கள் கவலையுற்றனர்.

ஸ்ரீமதழகியசிங்கரோ! புன்முறுவலுடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டாயிற்று. இவ்வளவு கடுமையான ஸஞ்சாரம் இருந்த போதிலும் சிஷ்யர்களுக்கு காலக்ஷேபம் சாதிக்கவும், ஸ்ரீமத் ராமாயணம் சேவிக்கவும் ஒருநாள், ஒருவேளை கூட நிறுத்தியதில்லை. புதுக்கோட்டை ஸ்வாமி என்று ப்ரஸித்தரான சேஷாத்ரியாசார்யார் ஸ்வாமி நெஞ்சுருகி கண்பனிப்ப இந்த அனுபவங்களை அவ்வப்பொழுது இருகரம் கூப்பியபடி தெரிவித்தாகும். வடதேசயாத்ரையில் இரண்டு முறை ஸ்ரீபாஷ்யம், இரண்டு முறை ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், ஒரு முறை ஸ்ரீகீதாபாஷ்யம், ஒரு முறை ஸ்ரீபகவத் வவிஷயம் (ஆறாயிரப்படி) என்று அழகியசிங்கர் பூர்த்திசெய்துள்ளார். செயற்கரியதொரு சாதனையிது என்றால் மிகையில்லை.

இப்போது பதரிகாச்ரமம் வரையிலும் செல்லாமல் திரும்பிவிடலாம்’ எனும் விசாரம் வந்தபோது, அன்றைய தினத்தில் கீதாபாஷ்ய காலக்ஷேபத்தில் சாதித்த விஷயங்கள் என்றென்றும் நினைவு கூறத்தக்கவை.

பகவத்கீதையில் இரண்டாமத்யாயம். பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் அர்ஜுனின் வருத்தத்தைப் போக்கும் உபதேசம் செய்கிறான். வலுவில் வந்த யுத்ததிதைச் செய்வதால் அர்ஜுனனுக்கு ஏற்படும் நன்மையையுரைத்தவன்; செய்யாமல் போனால் ஏற்படும் தீமைகளையும் விவரிக்கிறான். இதில் 32,33,34 ச்லோகங்கள் மிகவும் முக்யமானவை.

‘அர்ஜுனா! க்ஷத்ரியனுக்கு யுத்தம் என்பது மேலானதர்மம். அத்தகையதர்மத்தை விடுவதால் மேலான சுகத்தையும், புகழையும் இழந்து விடுவாய்’ என்கிறான் கண்ணன். அதனாலென்ன? எனக்கொன்றும் கவலையில்லையே’ என்று அர்ஜுனன் கூறுவதாகக் கொண்டு மேலும் பதில் கூறுகிறான் கண்ணன்.

‘அர்ஜுனா! சுகம், புகழை நீ விரும்பவில்லை என்றாலும் தர்மத்தை மீறிய பாபத்தை அடைவாயே’ மேலையார்கள் வழியான அதனைச் செய்யாதது பெரும் பாபமாயிற்றே. தர்மானுஷ்டானத்தில் ஊற்றமுடையவர்கள் பாபத்தைக் கண்டு பயப்படுவரே’ என்கிறான். மேலும் இவ்விதம் நீ கருணையினால் பின் வாங்குவதைக் கண்ட பொறாமைக்காரர்கள் அதாவது துரியோதனன் முதலானவர்கள் நீ கருணையினால் யுத்தத்தை நிறுத்தியதாக நினைக்க மாட்டார்கள். எதிரிகளைக் கண்டு பயத்தினால் பின்வாங்கினாய்’ என்று நினைப்பார்கள். வீரனுக்கு இதைவிட வேறென்ன அவமானம் வேண்டும்’ என்றான் கண்ணன்.

இந்த யாத்திரை விஷயத்தில் ஏற்பட்ட சலசலப்புக்கு அழகியசிங்கர் இந்த காலக்ஷேப விஷயத்தினால் சமாதானம் அருளியாயிற்று. 40,41, 42 என்று மூன்று அழகியசிங்கர்களின் விசேஷ கடாக்ஷம் பெற்றோம். இரண்டாவது உலகப் போர் காரணமாக இஞ்சிமேடு ஸ்ரீமதழகியசிங்கரால் ஸஞ்சாரம் செய்ய முடியவில்லை . அவரின் அநுக்ரஹத்துடன் வந்துள்ளதால் இதற்கு யாதொரு விக்னமும் நேரிடாது. ந்ருஸிம்ஹன் சன்னிதியில் சங்கல்பித்துக்கொண்டு பின் வாங்கினால் ஏனையவர்கள் இளக்காரமாகப் பார்க்கமாட்டார்களா!’ ந்ருஸிம்ஹன் எங்கும் ஸஞ்சாரம் (பயணம்) செய்து ஆஸ்தீகர்களை அநுக்ரஹம் செய்வதற்காகத்தானே அவதரித்தான். அவனை ஆராதிக்கும் நமக்கும் ஸஞ்சாரம் தானே ஸ்வதர்மம். அதை விடலாமா! ஆகையால் நிர்பயமாக இந்த யாத்ரையைத் தொடரவேண்டும்’ என்று அருளியாயிற்று.

   அன்றைய தினம் நடந்த இந்த கீதாபாஷ்ய காலக்ஷேபம் அனைவர் மனதிலும் ஒரு தெளிவை உண்டாக்கியது என்பது வரலாறு.

நவம்பர் 2017 ஸ்ரீ ந்ருஸிம்மப்ரியாவில் வெளிவந்த தொகுப்பு.

1953_153_HH43 Pattam1953_154_HH43 pattabhishekam1953_155_Hh43 sancharam1953_392_HH431953_450_HH431956_11 HH43 in Purisai

                    Go on or Quit?

On the occasion of the Thirunkashatram of HH43rd Azhagiyasingar, here is a small incident that brings out the greatness of this Acharya.

   Once Devanarvilagam Azhagiyasingar had embarked on a difficult sancharam starting from Mumbai to places such as Pushkar, Kurukshetram, Haridwar and Badrikashramam. People knew that this was going to be a difficult journey as they had to walk for many miles each day, not to mention the maintenance of Sri Nrisimhan’s entire retinue which included elephants, horses, and cows.
The kainkaryaparars (those doing service in the mutt) were concerned about this sancharam and some of them brought this up with Azhagiyasingar directly and indirectly. They were concerned that sometimes he may have to do Thiruvaradhanam all three times in a day by himself and this could put a big strain on his health.

   Azhagiyasingar listened to all their concerns with a slight smile. Despite this strenuous schedule, he continued giving kalakshepam to his sishyas and he continue reading Srimad Ramayanam every day, according to the insider account of Seshadrichariar, popularly known as Pudukottai swami. In fact, during this sancharam he had completed Sribashyam kalakshepam twice, Srimad Rahasyatrayasaram twice, and Gita Bhashyam and Bhagavad Vishayam once each respectively – no mean feat by any standard!

   Once, there was a discussion of returning back without going to Badrikashramam and this is what Azhagiyasingar explained in Gita Bhashyam kalakshepam on that day.

   In the second chapter of Bhagavad Gita, Lord Krishna gives advice to a worried and dejected Arjuna. In this chapter, Krishna explains the good consequences of doing one’s karma and the bad repercussions of not adhering to one’s dharma. Out of these, slokas 32,33, and 34 are most important.

   Lord Krishna said, “Arjuna, war is an important and an exalted Dharma for every Kshatriyan. By not adhering to it, you will lose the fame and happiness that come with it.”

   Arjuna said, “So what Krishna? Fame and happiness don’t matter much to me.”
Krishna said, “Even if you don’t crave for happiness and fame, remember that this is your dharmam. If you fail to do it, you will incur sin. Those who believe in Sastrams and anushtanams should feel scared of incurring sins. Moreover, when you withdraw, people who are jealous of you like Duryodhana will not see your compassion. They will only think that you have withdrawn due to your fear of them. Can there be a greater disgrace for a warrior?”

    Azhagiyasingar used this conversation to put to rest all the doubts and concerns that came up during this sancharam. He said,” We have the special grace of the 40th, 41st, and 42nd pattam azhagiyasingars. Due to the second world war, Injimedu Azhagiyasingar could not do his sancharam, but he is always with us in this sancharam, so no harm will befall us. Won’t others look at us with disdain if we quit now and go back after taking an oath at SriNrisimhan’s sannidhi? As we all know, Nrisimhan took avataram to travel everywhere and to bless all His devotees across the length and breadth of Bharatham. Isn’t it our dharamam to fulfill His wish? How can we quit? So, let us proceed on this journey and He will take care of us.”
This kalakshepam session was an eye-opener in many ways and created an indelible memory in the minds of all those who were present that day.

   Undoubtedly, this article brings out our responsibility to adhere to our dharmam with steadfastness and determination. Can we also take a first step in following our dharma as a mark of respect to the esteemed HH43rd pattam Azhagiyasingar?

(English Translation by Shishyas of Sri APN Swami.)