Ram Charan worships Ram | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 001

உகப்பும் கசப்பும்

அடியேன் ஆசார்யன் ஶ்ரீ உ வே புரிசை ஸ்வாமி ஐம்பதாண்டுகள் ஶ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவின்  ஸம்பாதகராக (ஆசிரியராக) இருந்ததை அனைவரும் நன்கறிவர். அடியேன் அந்தேவாஸியாக ஸ்வாமியிடம் காலக்ஷேபத்திற்காக சேர்ந்தவுடன் பல ஸ்வாரஸ்யமான அனுபவங்கள் உண்டாயின. குறிப்பாக அடியேன் கேட்கும் சில ஏடாகூடமான கேள்விகளுக்குக் கூட ஸ்வாமி சிரித்துக்கொண்டே பதில் கூறுவார்.

இவ்விதம் அடிக்கடி நடந்த சமயம்; ஸ்வாமி எங்கள் இருவரின் உரையாடலை உள்ளடக்கி “உகப்பும் – கசப்பும்” எனும் தலைப்பில் “நற்போதுபோக்கு” வ்யாஸங்களை எழுத ஆரம்பித்தார்.

ஒரு மஹான் பரம சாந்தர். வைதிக விஷயங்கள் மட்டுமின்றி உலகியல்புகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர். “வைதிகர்களுக்கு ஒன்றும் தெரியாது” என எண்ணும் லெளகிகர் ஒருவர். இந்த லெளகிகரின் கேள்விகள் பெரும்பாலும் sarcasm பாணியில்தான் இருக்கும். தனக்கு எல்லாம் தெரியும். வைதிகருக்கு எதுவும் தெரியாது எனும் நோக்கிலேயே அவரது வாதங்கள் இருக்கும்.

ஆனால் வைதிகரோ இதற்கெல்லாம் அசரமாட்டார். அமைதியாக அதேசமயம் ஆணித்தரமாக தனது வாதங்களை முன்வைத்து அந்த லெளகிகருக்கு பதில் அளிப்பார். இக்கால ரீதியில் சொல்லவேண்டுமானால் லெளகிகர் bulb வாங்குவார்.

எனவே எங்கள் ஸ்வாமி வைதிகரான அந்தப் பெரியவருக்கு “சாந்தர்” என்று பெயர் வைத்தார். “எல்லாம் தெரியும்” என்றும் இருமாப்புடன் கூடிய லெளகிகருக்கு “வம்பர்” என்று பெயர் வைத்தார். இந்தத் தலைப்பில் உயர்வான பல ஸம்ப்ரதாய விஷயங்கள் கட்டுரைகளாக வெளிவந்தன.

இன்றைய காலகட்டத்தில் அதே போன்று எழுதுவது, எத்தனை பலனளிக்கும் என்பது தெரியவில்லை. நவீன சாதனங்கள் நாளுக்கு நாள் பெருகும் சமயத்தில் படித்து விஷயங்களை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ஏறத்தாழ காணாமல் போய்க்கொண்டிருக்கிறது எனலாம். மக்கள் பெரும்பாலும் WhatsApp, Twitter, Insta, FB என இவைகளிலேயே போது போக்குகின்றனர். இதில் “நற்போதுபோக்கு” எப்படி முடியும்?

இருப்பினும் வெகுஜனங்களின் அன்றாடத் தேடல்களிலும், அவர்கள் ரசிக்கும் நிகழ்வுகளிலும் நமக்குப் புலப்படும் உகப்பு – கசப்பினை இனி பார்க்கலாம்.

இதற்கும் Traditional Trending article seriesற்கும் என்ன வித்யாஸம்? என கேட்பது புரிகிறது.

Traditional Trending வெறும் கட்டுரைகள் வாசிப்பதற்கு மட்டும். “உகப்பும் – கசப்பும்” என்பது ரசிப்பத்துடன் நின்றுவிடாமல் சற்றே நம்மை சிந்திக்க வைத்தும், ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்க்கையில் கடைபிடிக்கவும் உதவும் இது உகந்தால் உகப்பு. இல்லையெனில் எப்போதும் போன்று கசப்பு.

அன்புடன் அனந்தன்


உகப்பும் கசப்பும் – 1 Ram Charan Worships Ram

Click the link below to see the related video before reading this article. https://www.youtube.com/watch?v=hjfcyTq1XmE&t=28sRam Charan and his wife doing Puja to Ram Vigraham during travel

2023 மார்ச் 12ம் தேதி RRR திரைப்படத்திற்கும், The Elephant Whisperersயானை வளர்ப்பு பற்றிய குறும்படத்திற்கும் Oscar விருது கிடைத்ததை குதூகலமாக அனைவரும் கொண்டாடி வருகிறோம் அல்லவா. அதுகுறித்த RRR எனும் TT Video https://youtu.be/RkReMKfeS40 (#RRR #Oscar Spl #Trending – Sri APN Swami Speaks 188 – From Archives) ஏற்கனவே வெளியாகியுள்ளது. இப்போது அதில் மற்றொரு சுவாரஸ்யத்தை பார்க்கலாம்.

வம்பர் – (உள்ளே வந்தபடியே) நமோ நம: என்ன சாந்தரே! உலகில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் சாந்தமாக அமர்ந்துள்ளீரே!

சாந்தர் – அப்படியா! என்ன நடக்கிறது?

வம்பர் – நமது தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளதே

சாந்தர் – ஓ அப்படியா! நானும் பார்த்தேன்.

வம்பர் – என்ன ஓய்! இப்படி சுவாரஸ்யம் இல்லாமல் பேசுகிறீர்? உமக்கு தேசபக்தியே இல்ல ஓய்.

சாந்தர் – எனது தேசபக்தி கிடக்கட்டும். அந்த விருதினால் உனக்கென்ன பெருமை?

வம்பர் – நானும் ஒரு பாரத ப்ரஜை தானே? இது நம் ஒவ்வொருவருக்கும் Pride moment தானே. நான் என் group எல்லாத்திலேயும் share பண்ணிட்டேன். என் FB page-ல இது தான் DP. ஒரே likes comments. இன்னிக்கு full trending இதான் தெரியுமா!

சாந்தர் – சிரித்து.. இந்த share, like, comment இதான் உனக்கு ப்ரயோஜனமா?

வம்பர் – (கடுப்புடன்) உங்களுக்கெல்லாம் ரஸனையே இல்ல ஓய். நீங்கள்ளாம் இன்னமும் பழைய பஞ்சாங்கம் தான். சரி! இந்த video பாரும். இத பத்தி என்ன சொல்றீர்?

சாந்தர் – (Just பார்த்துவிட்டு) ஓ இதுவா RRR நாயகன் ராம்சரண் video தானே!

வம்பர் – (வித்யாசமாகப் பார்த்தபடி) இ…து….வு..ம். உமக்கு தெரியுமா?

சாந்தர் – சிரித்தபடியே சரி.. உன் பாணியிலேயே சொல்கிறேன். இப்ப இந்த video பார்த்து excite ஆனயோல்லியோ அந்த அளவுக்கு excite ஆக அதில் என்ன இருக்கு?

வம்பர் – என்..ன.. இ..ரு..க்கா…..

ஓய் எவ்வளவு பெரிய hero. தான் எங்க போனாலும் even foreign போனாலும் ஒரு room-ல குட்டியா விக்ரகம் வெச்சு wifeவோட சேர்ந்து பூஜை பண்ணுவேன்னு போட்டிருக்கே #ProudHindu

இன்னிக்கு இது தான் super trending தெரியுமா? என்ன ஓய்! ஒரு actor daily பூஜை பண்றேன்னு சொல்றது நம்ம Hinduism-க்கு proud இல்லயா?

சாந்தர் – உண்மைதான். I fully agree with you. இப்ப ஒரு Hero, mass காட்டினா அவனோட style follow பண்றீங்க இல்லயா? Hairstyle, dress, shoes இப்படி body language எல்லாம் hero பாணி தானே.

வம்பர் – ஆமாம் (எரிச்சலுடன்) அதுக்கென்ன இப்போ

சாந்தர் இப்ப அந்த hero daily wifeவோட சேர்ந்து பூஜை பண்ணுவேன்னு சொல்றானே! அது உங்கள inspire பண்ணலயா? நாங்க daily திருவாராதனம் பண்ண சொன்னா உங்களுக்குப் பிடிக்கலயே! Ok நாங்க சொன்னா பிடிக்காது. But உங்க hero, world famous. அவர் கூட தனது பூஜையை miss பண்றதில்லைன்னு சொல்றாரே.

என்னிக்காவது நாம, ஆத்துப் பெருமாளை இப்படி கொண்டாடியிருப்போமா? Message-யும் video-வையும் forward பண்றதில இருக்கற ஆர்வம் practice பண்றதிலயும் இருக்கணும்பா! நான் ராம்சரணை மதிக்கறேன். ஆனா இத வெறும் message-ஆ பாக்கற ஆர்ப்பாட்டம் பண்ற கூட்டத்தை வெறுக்கறேன். இத சொன்னா நான் advice  பண்றேன்னு எம்பேர்ல கோபம் தான் வரும். Time இருந்தா யோசிச்சுப் பாரு.

ராம் சரண் தன் மனைவியுடன் பூஜை செய்ததை trendingஆக பார்க்கும் நமக்கு, ராமபிரான் தன் மனைவி சீதையுடன் ரங்கநாதனை ஆராதித்தான் என்று வால்மீகி ராமாயணம் விளக்கியதை Trending ஆக பார்க்கத் தெரியவில்லையே !

ஹும்……. இருக்கட்டும்…..

ராம் சரணமே (Charaname) சரணம் (Sharanam) !

(வம்பரின் background-ல் தில்வாலே புச்டேலியா song ஒலிக்கிறது)

அன்புடன் அனந்தன்

16-March-2023

4 thoughts on “Ram Charan worships Ram | Sri APN Swami Writes உகப்பும் கசப்பும் – 001

  1. Venkatesh Sarangan March 16, 2023 / 5:27 pm

    A very nicely written article, giving the reality that is prevalent in our country. We have lost our roots and culture, don’t follow what is to be followed. But take great pride, if some one else does.

    God only should help us to get out of this situation, praying for the situations to change for the better 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    Like

  2. Suganya March 16, 2023 / 7:14 pm

    Well taken adiyen. Thankyou for highlighting the need to change for good in every article.

    Like

  3. Ayindai Amudan March 17, 2023 / 3:12 pm

    Wonderful initiative.. really needed.. Such self-proclaimed MedhAvis like “Vambar” here deserves much more than this from “Shantar”

    Like

  4. shanthy11 March 22, 2023 / 5:23 pm

    அன்புள்ள சுவாமிஜி அவர்களுக்கு,
    வணக்கம். நான் தற்போது திருப்பதி சானலில் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் தங்களது
    பகவத் கீதை உபன்யாசத்தை தொடர்ந்து கேட்கும் மகா பேறு பெற்றவள் .
    அற்புதமான பகவத்கீதை சாராம்சத்தை என்னைப் போல் எளியோறும் புரிந்து கொள்ளும் வகையில் தெள்ளத் தெளிவாகவும் அதன்படி வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் எடுத்து கூறுகிறீர்கள் தாங்கள்.
    இதுவரை டீ.வி யில் பக்தி சானலில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் பார்த்திராத எனக்கு கடவுளின் அருளால் ஏதேச்சையாக முதல் நாள் உபன்யாசத்திலிருந்து பார்க்கும் பாக்கியம் பெற்றுள்ளேன்! இப்படிப்பட்ட அற்புதமான நிகழ்ச்சியை வழங்கும் உங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள். வணங்குகிறேன் ஸ்வாமி🙏🙏🙏
    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🙏🙏🙏

    Like

Leave a comment